நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும். காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது. உப்பு தண்ணீரின் மகிமை சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.
அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.
செப்பு காசின் மகிமை குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.
செங்கல்லின் மகிமை குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
தண்ணீருக்கும் சக்தி யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.
பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
திருஷ்டியை போக்கும் “மை” சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.
தோஷங்களை நீக்கும் பரிகாரம் பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.
எண்ணை தானம் உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.
குழந்தைகளை தாக்கும் தோஷம் ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.
அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.
பசுவின் பாத மண்ணுக்கு சக்தி வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டு“ என்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில் இருக்கிறது. வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது. அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.
திருஷ்டிபட்டு கட்டைவிரல் கருப்பானது பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும் – பொருளையும் கொட்டுவார்கள்” என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது. இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஸ்படிகத்தின் மகிமை சூரியனின் வெப்பம் பனியை உருக வைப்பதுபோல, தோஷங்களை அகற்றும் ஆற்றல் ஸ்படிக மணிக்கு இருக்கிறது. உடல் மெலிந்து முகத்தில் பொலிவு இழந்து இருப்பவர்கள் ஸ்படிக மணியை அணிந்தால் உடலில் நல்ல முன்னெற்றம் இருக்கும். உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணத்தையும் ஸ்படிக மணி கட்டுபடுத்தி சற்று குளிர்ச்சியாகவும் மாற்றும்.
ஒரு கைபிடி உணவு நன்றாக சாப்பிட்டு கொண்டு இருப்பவர் சில நாட்களாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் சாப்பிடமுடியாமல் அவதிபடுவார்கள். இதற்கு காரணம், “என்னமா சாப்பிடுகிறான்.” என்று யாராவது சொன்னாலோ அல்லது நான் இன்று நன்றாக சாப்பிட்டேன் என்று, தனக்கு தானே சொல்லிக்கொள்வதாலும் கண்திருஷ்டியாக மாறும். இதனால்தான் பெரியோர்கள் சொல்வார்கள், “மண்ணை தின்றாலும் மறைவாக தின்னவேண்டும்” என்று. திருஷ்டிபட்டால் சாப்பாட்டில் பிடிப்பு இல்லாமலோ அல்லது சாப்பிடமுடியாத சூழ்நிலையோ ஏற்படும். இதற்கு பரிகாரம், ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லேண்ணையை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் நல்லேண்ணையில், வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷடி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். அதை தொடர்ந்து ஆறு ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும். அத்தடன் சாப்பிடும் முன் உங்கள் கைகளால் சாப்பிடும் உணவை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட்டால் தோஷங்கள் நீங்கும்.