jaga flash news

Saturday, 19 August 2017

ஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று

!!**ஸ்ரீ கிருஷ்ணர்**!!
"என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு?” திரும்பி நின்ற கண்ணன்!!!
உடுப்பியில் பாலகிருஷ்ணனாய், நித்ய இளைஞனாய், நாம் எப்படி பார்க்கிறோமோ, அப்படியெல்லாம் காட்சியளிக்கும் ஸ்ரீகிருஷ்ணனை தரிசனம் செய்யலாம்.
உருவத்தை பார்ப்பவன் மனிதன். ஆனால் உள்ளத்தைப் பார்ப்பவன் இறைவன். அதனால்தான் ஆண்டவன் முன் அரசனும் ஆண்டியும் சமம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏழை பணக்காரன் என்கிற பேதமெல்லாம் பார்ப்பது மனிதன் தானே தவிர இறைவன் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்திய நிகழ்வு இது.
மற்ற கோவிலில் நேரே கர்ப்பகிரஹம் தெரிவது போல இங்கே தெரியாது. பிறைகளால் ஆன ஜன்னல் வழியே தான் கிருஷ்ணனைக் காணமுடியும்.
காரணம்: அங்கு மிகவும் பக்திமானான செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் இருக்கிறான். அவன் தினமும் வேளை தவறாமல் கிருஷ்ணனைச் சேவிப்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன். ஆனால் ஆசார சீலர்களோ செருப்பு தைக்கும் தொழிலாளி கோவிலுக்குள் வரக்கூடாது, கண்ணனை தரிசிக்கக் கூடாது என்று தடைவிதித்து விட்டனர். அவன் சற்று தொலைவில் நின்றபடியே கோவிலைப் பார்த்து அழுது கொண்டிருந்தானாம். ஒரு நாள் இரவு எல்லாரும் தரிசனம் தருகிற வாசல் இறுக்கமாக மூடப்பட -செருப்பு தைக்கும் தொழிலாளி நிற்கும் பக்கமாய் திரும்பி நின்ற கண்ணன் தன்னைச் சுற்றி சாளரத்தை அடைத்துக் கொண்டானாம்.
அதாவது “என் பக்தனுக்கு இல்லாத தரிசனம் உங்களுக்கும் கிடையாது. அவனைப் போலவே நீங்களும் ஜன்னல் வழியாய் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதைப் போல.
இன்றைக்கும் கூட அர்ச்சகர், ஆராதனை செய்பவர் மட்டுமே உள்ளே போய்வர வழி இருக்கிறது. மற்றவர்கள் எல்லாரும் வெளியில் இருந்துதான் தரிசனம் செய்யவேண்டும்.
இந்தச் செருப்பு தைக்கும் பக்தனுக்கு அவன் தரிசனம் செய்த இடத்திலேயே சிலை நிறுவியிருக்கிறார்கள்.
விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மூலஸ்தானத்தின் கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜைசெய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர். கிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை “நவக்கிரக துவாரம்’ என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று.
இங்கே அணையாத அடுப்பு உண்டு. எப்பொழுதும் குறையாத அன்னம் உண்டு.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

நீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் நீ என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம் , தற்புகழ்ச்சி என்பது தற்கொலைசமம்

!! **ஹரே கிருஷ்ணா**!!
பாரதப் போரில் கர்ணனை கொல்வேன் என்று சபதம் பூண்ட அர்ருச்சுனன் கர்ணனை கொல்லாமல் பாசறைக்குத் திரும்பினான்.
உண்மை அறிந்ததும் அருச்சுனனைக் கோபமாகத் திட்டினார் தருமர். இவனை நம்பி போரை இழுத்துக் கொண்டோமே என்று நொந்து அருச்சுனன் வில்லைப் பழித்துக் கேலி பேசினார்.
"தன்வில்லை யார்பழித்தாலும் கொல்லுவேன்"
என்று சபதம் செய்திருந்த அருச்சுனன் வில்லை எடுத்துக் கொண்டு தருமரைக் கொலை செய்யத் துணிந்தான். ஆனால் பாசம் தடுத்தது.
"கண்ணா என் சபதப்படி தரும்ரைக் கொல்ல வேண்டும். ஆனால் அண்ணனைக் கொல்ல மனம் வரவில்லையே கொல்லவும் வேண்டும், ஆனால் தருமர் சாகவும் கூடாது. என்ன செய்வது என்று அருச்சுனன் கவலையுற்றான்.
அதற்கு மாயக் கண்ணன் கொல்லாமல் கொல்லலாம். சாகமல் சாகலாம் தெரியுமா? என்றான்.
தருமர் உன்னைவிடப்பெரியவர். பன்மையில், நீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் நீ என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம் , என்றான் கண்ணன்.
நீங்கள் என்று பன்மையில் அழைக்க வேண்டிய தருமரை நீ என்று ஒருமையில் அழைத்துக் கொல்லாமல் கொன்ற அருச்சுனன், பெரியோரை அவமதித்த நான் இனி எப்படி உயிர்வாழ முடியும். எனவே தற்கொலை செய்து கொள்வேன் என்று வாளை உருவித் தற்கொலை செய்து கொள்ளப் போனான். நில் என்று தடுத்த கண்ணன், எப்படிதருமரைக் கொல்லாமல் கொன்றாயோ அப்படி உன்னைச் சாகாமல் சாகடித்துக் கொள் என்று சிரித்தான். எப்படி என்றான் அருச்சுனன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்குச் சமம். நீயே உன்னைப் புகழ்ந்து கொள்.
தற்புகழ்ச்சி தற்கொலையாகி விடும் என்றான்.
பெரியவர்களை அவமதிப்பது ஒருமையில் பேசுவது கொலை.
தற்புகழ்ச்சி என்பது தற்கொலை.

Tuesday, 15 August 2017

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ !

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ !
எம்.மரிய பெல்சின்
முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! அதன் மகிமை அறிந்த ஒருவர் கவிதையாக வடித்துள்ளார்.
‘அவென்யூ அழகுபெறட்டுமே என்று
பூச்செடிகள் வளர்க்க...
அதில் தப்பி வளர்ந்தது முருங்கை ஒன்று!
அதை வெட்டவேண்டும் என
சொன்னபோது பூச்சொரிந்து நின்றது.
முருங்கைப்பூ பால்கூட்டும்
முளைத்த பிஞ்சுக்குழம்பும் ருசியோ ருசி!
பிரசவித்த அக்காவுக்கு
மருந்தாகக் கொடுக்கையில்
நானும் ருசித்து ரசித்தேன்!'
சிலாகித்து எழுதும் அளவுக்கு முருங்கைப்பூவில் அத்தனை சத்துகள் நிறைந்திருக்கின்றன.
முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது முருங்கை!
வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவ குணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். முருங்கைப்பூக்களின் பயன் அறிந்து இனிமேலாவது அவற்றைச் சமைத்து ருசிப்போமா?
முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி, “இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த முருங்கைப்பூ. இதை `இயற்கையின் வயாகரா' என்று சொல்வார்கள்.
தாம்பத்யம்
இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. .
அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப்பூ பால்
முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும்.
முருங்கைப்பூக்களை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் சிறக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூ சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வரலாம்.
முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.
இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, மேக நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். மேலும், மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி எனப் பல்வேறுவிதமான மனம், உடல் அவதிகளுக்கு ஆளாவார்கள். அப்போது முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மனம் அமைதி பெறும். உடல் கோளாறுகளும் நீங்கும்.
பள்ளி, கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருந்தால்தான் அவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். ஆகவே குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும் முதியோருக்கு வரக்கூடிய மறதி நோயைத் தடுக்கவும், வந்த நோயை விரட்டவும் இது நல்ல மருந்தாகிறது. கைப்பிடி அளவு முருங்கைப்பூவை அரைத்து அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் எல்லோருமே கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு 40 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கண்ணாடி அணியாமல் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் பேப்பர்கூட படிக்க முடியாது.
அன்னமேரிவீடுகளில் இருப்பவர்கள் தொலைக்காட்சியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கும் விரைவில் கண்கள் வறண்டுபோதல், கண்ணிமைகளைச் சிமிட்டும் தன்மை குறைந்துபோவது, கண்களின்முன் மின்மினிப்பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம் ஏற்படுதல், தலைவலி, பார்வை மங்கல் எனக் கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிப்பதோடு கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறி கண் கோளாறுகள் சரியாகும். பூக்களுடன் பசும்பால் சேர்த்துக் காய்ச்சி அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து பிரச்னைகள் நீங்கும்.
முருங்கைப்பூ பால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முருங்கைப்பூ பால் அருந்தி வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும். இரண்டு கைப்பிடி முருங்கைப்பூவை 100 மி.லி பாலில் கொட்டி நன்றாக வெந்ததும் மசித்து, மூன்று ஏலக்காய், நான்கு பாதாம்பருப்பு பொடித்துப்போட்டு மேலும் 200 மி.லி பாலைச் சேர்த்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். முதலில் பச்சை வாசனை வீசும், குடித்துப் பழகினால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.
முருங்கைப்பூ சூப்
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத்தாளிக்க வேண்டும். அத்துடன் ஒன்றாகச் சேர்த்து அரைத்த தனியா, சீரகம், மிளகு மற்றும் சுக்கு, பூண்டு,வெங்காய கலவைகளைப் போட்டு லேசாக வதக்க வேண்டும். பிறகு அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பச்சை வாசனை போகுமளவு கொதிக்க விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களைச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பூ நன்றாக வெந்ததும் இறக்கினால் சூடான சுவையான முருங்கைப்பூ சூப் தயார். விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி இதைச் செய்து குடித்து வந்தால் சளித்தொல்லைகள் நெருங்காது.
முருங்கைப்பூ சாதம்
பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் சேர்த்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையே இட்லித்தட்டில் முருங்கைப்பூக்களை வைத்து அரை வேக்காடாக வேக வைக்கவும். அதன்பிறகு சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாதம், முருங்கைப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். அத்துடன் சிறிது சிறிதாக நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் சுவையான முருங்கைப்பூ சாதம் தயார். இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும்கூட!
முட்டைப் பொரியல்
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சீரகம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதைத்தொடர்ந்து நறுக்கிய பச்சை மிளகாய், கிள்ளிய கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் காம்பு நீக்கி தண்ணீரில் அலசிய முருங்கைப்பூக்களைப் போட்டுக் கிளற வேண்டும். நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். வெந்ததும் கிளறிவிட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறினால் முருங்கைப்பூ முட்டைப் பொரியல் தயார். சாப்பிடச் சுவையாக இருக்கும்.
ஆண்மை அதிகரிக்கும்
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்து நறுக்கி, எண்ணெயிட்டு வதக்கி வறுத்த வேர்க்கடலையைப் பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். தாம்பத்யம் சிறக்கும். இதை வேக வைத்துக் கடைந்து குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.” என்றார்.
இது மட்டுமல்ல... முருங்கைப்பூவின் மகிமையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்.....?!

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்.....?!
மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளமன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் என்ன தேதி (தினத்தில்)... சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதுவரை அது பற்றி யோசித்திராத மவுண்ட்பேட்டனின் மனதில் உடனடியாக வந்த தேதி ஆகஸ்ட் 15.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சேர்ந்த 1,50,000 வீரர்கள் கிழ்க்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் 1945 ஆகஸ்ட் 15இல் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) சரண்டைந்தனர். எனவே ஆகஸ்ட் 15 அவர் வாழ்நாளில் மறக்க முடியாது தேதி, அதனால் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிற்க்கும் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தார்.
இவர் இதனை அறிவித்தவுடன் இந்தியாவிலுள்ள நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர்.
ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர்.
ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.

அரசமரத்தின் சிறப்பு.....

ஆன்மிகமும் அறிவியலே....
அரசமரத்தின் சிறப்பு.....
அரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.
பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு
மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு. சித்திரை, வைகாசி போன்ற
மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட
நோய்கள் வராது. இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.
மருத்துவக் குணங்கள்:
அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.
நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.
அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்......
ராஜவிருட்சம்
அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியா வில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
போதிமரம்
அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
விஞ்ஞான உண்மை
அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
கருப்பை கோளாறு
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
பிராணவாயு
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

*வேப்பிலையின் பலன்கள்*

*வேப்பிலையின் பலன்கள்*
அழகை அதிகரிக்கும் வேப்பிலை
*குறிப்பு 1*
1.வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைக்கவும்.
2. அதிலிருந்து நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
*குறிப்பு 2*
1. சருமத்தை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும்.
2. அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
*குறிப்பு 3*
1. வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்கவும்
2. பின்பு, அதை அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும்.
இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
*வேப்பிலையின் பலன்கள்*
1. மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும்.
2. நம் ஒவ்வொருவர் வயிற்றிலும் எப்போதும் வயிறு தொடர்பான தொற்று நோய் இருந்துகொண்டே இருக்கும். இது நோயாக வெளிப்படாவிட்டாலும் உடலில் சக்தியை, தெம்பை குறைத்துக்கொண்டே வரும். தொற்றுநோய் வயிற்றில் இருக்கிறதென்றால், அதற்குக் காரணமான பாக்டீரியா கிருமிகளும் வயிற்றில் இருக்கும். இந்த கிருமிகளே உடலில் உள்ள சக்தியை இழுத்துக்கொண்டுவிடுகின்றன. விடியற்காலையில் சாப்பிடப்படும் வேப்பங்கொழுந்து உருண்டையும், மஞ்சள் உருண்டையும் இந்த கிருமிகளை அழித்துவிடுகின்றன.
3. சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இதை அனைத்திற்கும் எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும். அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் இல்லாமல் போய்விடும். இதை ஒவ்வொருவரும் அன்றாடம் வாழ்நாள் முழுவதும் செய்யலாம்.
4. கொழுந்து இலைகளில்தான் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதற்கும் மீறி கசந்தால் தேனில் நனைத்து நாவில் படாமல் நேரடியாக தொண்டையில் போட்டு விழுங்கிவிடுங்கள். இதன் நன்மை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் அதிக சக்தி, புத்துணர்ச்சி மூலம் உங்களுக்குப் புரிந்துவிடும்! வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன. உலகில் எந்த ஒரு தாவரத்துக்கும் இத்தனை மருத்துவ குணங்கள் இல்லை. வேப்ப இலைகளின் மருத்துவக் குணம் இப்போது உங்களுக்கும் புரிந்துவிட்டது இல்லையா? இனி தயக்கமென்ன? தினமும் காலையில் வேப்பங்கொழுந்தினை அரைத்துச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ்வோம்!

** ஸ்வஸ்திக் **

** ஸ்வஸ்திக் **
வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும்.விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர்.வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.
"ஸ்வஸ்திக்" என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள்.இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும்.8திசைகளிலும் நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பரியம்.
வெற்றிக்கு எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.
ஸ்வஸ்திக் கோலம் போடக்காரணம்
ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா.வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது.
ஸ்வஸ்திக் நமக்கு எடுத்துக்காட்டுவது என்ன?
நான்கு வேதம் -----ரிக் ,யசுர் ,சாம ,அதர்வண
நான்கு திசை ----கிழக்கு,மேற்கு ,வடக்கு,தெற்கு
நான்கு யுகங்கள் ---சத்ய ,த்ரேதா ,துலாபார ,கலியுக
நான்கு ஜாதிகள் ---பிராமண,ஷத்ரிய ,வைஷ்ய ,சூத்திர
நான்கு யோகங்கள்---ஞான ,பக்தி,கர்ம ,ராஜ
நான்கு மூலங்கள் ---ஆகாயம்,வாயு,நீர்,நிலம்
வாழ்க்கையின் நான்கு பருவங்கள் ---குழந்தை,பிரம்மச்சரியம்,கிரஹஸ்தர்,சந்நியாசி
ஸ்வஸ்திக்,ஓம்,திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ,வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும்.இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும்.
நன்மை தரக்கூடிய கோலங்களை பூஜையறையில் போட்டு பலன் பெறவேண்டும்.
உங்கள் மனதை சந்தோஷமாக வைத்து ,பிறரையும் சந்தோஷப்படுத்தி வாழ்வில் எல்லா வளங்களையும் பெற நான் இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் கருத்தை தெரிவித்தால் எனக்கு இன்னும் எழுத தூண்டுகோலாக அமையும்.

*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும்*

*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும்*
**************************************
தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது , இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது!
திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினமும் வந்தபடி இருக்கின்றனர். சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர். காரணம்… இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!
உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!
பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.
இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.
‘அடடா… இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்? நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்? அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத்திருப்பது?!’ என யோசித்தாள்.
எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.
இதோ… இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள். இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!
வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்தான்! ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடைபெறுகிறது. நவராத்திரியில்… விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி – பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க… குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!
மகா பெரியவா, ‘’இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!’’ என அருளினாராம்!

** கமலக்கண்ணனின் லிலைகள்**

** கமலக்கண்ணனின் லிலைகள்**
அடுத்தவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது சிலருக்கு கைவந்த கலை. மகாபாரதத்தில் இந்திரப்பிரஸ்த மாளிகையில் துரியோதனன் அவமானப்பட்டபோது.... திரவுபதி சிரித்தாள். விளைவு குருக்ஷேத்திர யுத்தம். அடுத்தது....
ஒருவருக்கு ஏதாவது அவமானம் ஏற்பட்டால், அவமானப்படுத்தியவர்களை விட்டு விடுவார். பார்த்துச் சிரித்தவர்களை விட மாட்டார். பழிக்குப்பழி வாங்க சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். அவமானப்படுத்தியவருடன் மோதுவதற்குத் தைரியம் இருக்காது. இதற்கெல்லாம் விளக்கம் தருகிறது இந்த கதை.
கால யவனன்! எப்போது பார்த்தாலும், யது குலத்தினரோடு போரிட்டு அவர்களுக்குப் பிரச்னை செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ணனே முன்நின்று தீர்த்தார். எப்படி?
ஒரு சமயம்.....
கார்க்கியன் என்பவனை சாலுவன், ""போடா பேடி!'' என்று சொல்லி இழிவுபடுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்க வில்லை.
""என்னைப் பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,'' என்று தவத்தில் மூழ்கினான்.
அவமானப்படுத்திய சாலுவனை விட்டு, அதைப் பார்த்துச் சிரித்தவர்களிடம் கோபப்படுவது என்ன நியாயம்?
அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம். தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான கண்ணன் மீது பகை கொண்டு வடமதுரையை அழிக்க வந்தான். கண்ணனோ, கடலில் ஒரு நகரத்தை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்து விட்டு, அதன்பின், தன்னந்தனியனாக காலயவனனின் பார்வையில் படும்படி போய் நின்றார்.
காலயவனன் கண்ணனை நெருங்கினான். கண்ணனோ, அவனுக்குப் பயந்தோடுவதைப் போல ஓடிப் போய் ஒரு குகைக்குள் மறைந்தார்.
பின்தொடர்ந்து ஓடிய காலயவனனின் பார்வையில், அங்கே யாரோ படுத்திருப்பது போல தெரிந்தது. படுத்திருப்பவர் கண்ணன் என நினைத்துக் கொண்டு, ""ஹா.... அகப்பட்டுக் கொண்டாயா?'' என்றபடி ஓர் அடி அடித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துப் பார்த்தார். அவர் பார்வையில் பட்ட காலயவனன் எரிந்து போனான். அவர் தான்...
முசுகுந்த சக்கரவர்த்தி. தேவர்களுக்கு உதவியதன் காரணமாகக் களைத்து, ஓய்வெடுக்க நினைத்த அவர், ""என்னை உறக்கத்தில் இருந்து எழுப்புபவன் சாம்பலாகப் போக வேண்டும்,'' என்ற வரம் பெற்றிருந்தவர்.
இதை அறிந்திருந்த மாயக்கண்ணன், காலயவனனை குகைக்கு வரும்படி செய்து, முசுகுந்த சக்கரவர்த்தியின் பார்வையாலேயே அழியும்படி செய்தார்.
பார்த்தீர்களா! ஒருவனுடைய குணத்தை உருவாக்குவதில் அவனது பெற்றோர்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை! அது மட்டுமல்ல! எந்த நிலையிலும் கண்ணன் தன்னை நம்பிய அடியார்களைக் காப்பாற்றத் தவறுவதில்லை என்பதையும் விளக்கும் சம்பவம் இது.

**ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்**

**ஹரே கிருஷ்ணா**
**ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்**
கண்ணன் என்றவுடனேயே நமக்கு கோகுலமும் பிருந்தாவனமும் ஞாபகத்திற்கு வந்துவிடும் .தான் ,கண்ணன் பிறந்த இடம் ஒன்று ,வளர்ந்த இடம் ஒன்று ,பிருந்தாவனத்தில் கண்ணனை ராதையுடன் காணலாம் .
வடநாட்டில் ருக்மிணியைவிட ராதைக்குத்தான் அதிக செல்வாக்கு . தெருவில்
ரிக்க்ஷாகாரனும் வழிவிட மணி அடிப்பதில்லை வாய் நிறைய ' ராதே கிருஷணா'
என்று தான் சத்தமாக சொல்கிறான் . கோகுலத்தில் பலராமர் கோயில்
உள்ளது அங்குக்குழந்தைக்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு . பல குழந்தைகளை
அங்கு அமர வைத்து பிரசாதம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்கள்.
பலராமர் போல் பலத்துடன் வீர்யத்துடன் குழந்தைகள் வளருவார்கள் என்ற நம்பிக்கையால் இதுபோல் செய்கின்றனர் .
கோகுலத்தில் கண்ணன் வெண்ணெய் திருடித்தின்ற இடங்களையும் நாம்
பார்க்க முடிகிறது இங்கே பசுக்களுக்குப் ப்ஞ்சமில்லை நாம் நிற்கும்போதே நம்மேல் உரசிய வண்ணம் போகிறது .ஆனால் முட்டுவதில்லை ,
நல்ல ருசியான பாலும் லஸ்ஸியும் {மோரும்} எப்போதும் கிடைக்கிறது .
பிருந்தாவனத்தில் கூட்டம் அலை மோதுகிறது பொறுமையாக கியூவில் நகர கண்ணன் அருகில் வந்தாலும் திருப்பதி போல் உடனேயே நகர்த்திவிடுகிறார்கள்.
ஒரு நிமிடம் தான் கண்ணனைப்பார்க்க அனுமதி . ஏன் என்றால் கண்ணன்
அழகில் பிரமித்து நிற்க திருஷ்டி விழுந்துவிடுமாம் .
கண்ணனை இங்கே 'பாங்கே பிஹாரி 'என்று மக்கள் அழைக்கின்றனர்
கண்ணன் கை புல்லாங்குழலை ராதையாகவே கருதுகிறார்கள்

"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது"

"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது"
என்பது முது மொழி. நிறைய கதைகள் செவி வழியாய் அடுத்தடுத்த தலை முறைக்கு அனுப்ப படுகின்றன. அப்படி என்னை வந்தடைந்த கதை இங்கே.
அந்த நாளில் பாண்டவர் அனைவரும் கானகத்தில் உள்ளனர். அது பாண்டவர்களின் தந்தை பாண்டுவின் இறுதி கணங்கள். பாண்டுவுக்கு தான் மறைந்த பின் இந்த உலகில் தன் மைந்தர்கள் எப்படி வாழ போகிறார்கள் என்கிற கவலை. அவரது மனம் தீர யோசித்தது. தன் புதல்வர்களை அருகே அழைத்த அவர், தன் மறைவுக்கு பின் அவரது உடலை உண்டுவிடுமாறு பணித்தார். அப்படி செய்தால் அவர்கட்கு உலகில் எந்த தீங்கும் உருவாகாது என்பது அவர் கணிப்பு.
பாண்டுவும் மறைந்தார். அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணன், பாண்டவர்களை தடுத்து நர மாமிசம் புசிப்பது மனிதர்களின் இயல்பு அல்ல என விளக்கினார். பின்பு பாண்டுவின் உடலை எரித்திட பாண்டவர்களை திசைகொருவராய் அனுப்பி விறகு முதலான பொருட்களை திரட்ட பணித்தார்.
பாண்டவர்களும் கண்ணனும் விறகு எடுத்து வர சென்றனர். ஆனால் சகாதேவனுக்கு ஒரு கேள்வி குழவியாய் குடைந்தது. அவனுக்கு கால காலமாய் மனிதனை தொடரும் முதுமொழி நினைவுக்கு வந்தது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை அல்லவா என்பது அவன் எண்ணம். அதை அறிய தந்தையின் உடல் அருகே சென்றான். முதலில் தென்பட்டது தந்தையின் பெருவிரல். ஒரே கடியில் பெருவிரல் வாய்க்குள் அகப்பட்டது. பெருவிரல் உண்டபின், சகாதேவனுக்கு முக்காலமும் அறிகிற அறிய ஞானம் வந்தது.
அவனால் அனைத்து காலமும் அறிய இயலும். ஏறக்குறைய கடவுளால் மட்டுமே முடித்த விஷயம் மனிதனுக்கு வாய்த்த நிமிடம் அது.
அதே தருணத்தில் கண்ணனும் அவ்விடம் நிறைய கோபமாய் தோன்றினார். தோன்றிய கண்ணன் என்ன காரியம் செய்தாய் என திட்டியபடி நீ தெரிந்தவற்றை மற்றவர்க்கு சொன்னால், உன் தலை சிதறிவிடும் என சபித்தான். பதிலுக்கு சகாதேவன் எங்கள் ஐந்து பேரையும் காக்க தவறினால் உன் தலை சிதறி விடும் என சபித்தான்.
இருவரின் எண்ணமும் நிலை கொள்கின்றன. பின் நாட்களில் கண்ணனே ஐவரையும் போரில் காக்கிறான். முதுமையில் முதலில் உலகை விடுபவனும் அவனே. சாஸ்திரத்தில் கெட்டிக்காரன் சகாதேவன் எனும் முதுமொழி முகிழ்த்து வந்தது இதன் தொடர்ச்சி தானோ?

*கலியின் ஆரம்பம்*

**ஒரு மகாபாரத பதிவு**
*கலியின் ஆரம்பம்*
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.
குதிரையின் உரிமையாளரோ,
"ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.
குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!
ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.
இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.
சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.
குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.
துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.
நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.
"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?
பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.
பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.
அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.
அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.
"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.
தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்.....
"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறினார்.
"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.
அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைக்த்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

வீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!

1. புத்தாடைகளில் மஞ்சள் தடவுதல் : புத்தாடை அணியும் போது அதன் ஓரங்களில் மஞ்சள் தடவி அணிய வேண்டும். ஏனென்றால் நீங்கள் கடையில் துணியை வாங்கும் முன்னர் வேறு யாராவது அதனை வாங்குவதற்காக போட்டு பார்த்து இருப்பார்கள். அல்லது இந்த ஆடையை நம்மால் வாங்க முடியவில்லையே என்று கூட நினைத்து வருத்தப்பட்டிருப்பார்கள். மஞ்சள் தடவி அணிவதால், தோஷம் நீங்கும். அதுமட்டுமின்றி, புத்தாடையில் மஞ்சள் தடவி அணிந்தால், துணிகள் பெருகும். உங்களுக்கு ஆடை பஞ்சம் வராது.

2. கொடி மரத்தின் தெய்வ சக்தி கோவில்களில் காணப்படும் கொடி மரத்திற்கு அதீத தெய்வ சக்தி உள்ளது. நாம் சில நிமிடங்களாவது அந்த கொடி மரத்தின் அருகில் நின்று பிராத்தனை செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கோபுர தரிசனமும், கொடிமர தரிசனமும் மிகவும் அவசியம். கொடிமரத்தை புதுப்பிக்கும் போது அதில் நமது பங்கும் சிறியதாவது இருக்க வேண்டும். வானுலகில் உலவும் கிரகங்களின் ஆற்றல்களை தனக்குள் கிரகித்து வைத்திருக்கிறது இந்த கொடி மரம். கொடிமர தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி இறைவனுடைய அருளாசியை பரிபூரணமாக பெறலாம்!

3. தென்திசையை பார்த்து உட்காரலாமா? தென்திசையை பார்த்தபடி அதிக நேரம் உட்காரகூடாது. அத்திசை யமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும. சுபநிகழ்ச்சி நடக்கும் போதும் தெய்வீக யாகங்கள் செய்யும்போதும் தென்திசையை நோக்கி உட்காரக்கூடாது. எமனின் பார்வை அந்த திசையில் விழுவதால், தெற்கு நோக்கி அமர்ந்தால் உடலில் வசீகரம் இல்லாமல் போகும். ஆனால் தூங்கும் போது கிழக்கு, அல்லது தெற்கு திசையில் தலைவைத்து உறங்கலாம்.

4. தங்கம் சேர..! அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்கநகை வாங்கினாலும் கூட தங்க நகை அதிகம் வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் இந்த நட்சத்திரமும் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் நகை வாங்கினால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை

5. நெல்லிக்காயை தேய்த்து குளித்தல்! ராஜயோகம் வேண்டும் என்றால் நெல்லிக்கனியை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். நெல்லிமரம், ஸ்ரீமகாலஷ்மியின் உள்ளங்கையில் உருவானது. அதனால் நெல்லிவாசம் இருக்கும் இடத்தில் லஷ்மி வாசம் செய்வாள். பெருமாளுக்கு உகந்த தினமான ஏகாதசி அன்று நெல்லிகாயை தேய்து குளித்தால் இராஜயோகம் உங்களை தேடி வரும்.

6. தங்கத்தை உப்பில் வைத்தல்! புதிதாக நீங்கள் தங்கம் வாங்கியதும் அதனை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் இட்டு கட்டி, உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்து விடுங்கள். இதனால் தங்கத்தின் மீது உள்ள தோஷங்கள் அத்தனையும் நீங்கும்.

Sunday, 13 August 2017

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு* * வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே*

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*
* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*
அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்
பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.
முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.
வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.
இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.
பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.
இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.
இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.
இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.
அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.
தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.
புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.
சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.
பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது
இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.
இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....
Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.டேட்டா இல்லை கமியா டேட்டா இருக்குனுட்டு பகிராமல் இருந்துவிடாதீர்கள்.

**கண் திருஷ்டி அகல**

**கண் திருஷ்டி அகல**
கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி.
கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு.
ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை அதன்மீது பட்டது.
ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழுந்தன.
அதே நேரத்தில் தோப்பிற்குள் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள்.
கல்லால் அடித்து இருந்தால் இரண்டு, மூன்று மாங்காய்கள்தான் சேதமடைந்து இருக்கும். ஆனால் கண்ணடி பட்டதால் முழு மரத்துக்கும் சேதாரமாகி விட்டது.
ஆரத்தி, திலகம்:
விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது.
ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
வாழை மரம்:
விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்:
வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம்.
கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.
ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
உப்புக்குளியல்:
வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
எலுமிச்சம்பழம்:
வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம்.
இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
கடல் நீர்:
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
திதிகள்:
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
திருஷ்டி உள்ளதை எப்படி உணருவது?
நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை,
சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

*கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?*அறிவியல் பூர்வமான விளக்கம்.

*கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?*அறிவியல் பூர்வமான விளக்கம்.
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.
அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*வாழ்க வளமுடன்*
*ஓம் நமசிவாய*

இலை விபூதியின் மகிமை !!!

இலை விபூதியின் மகிமை !!!
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"
பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

!!**ஆதி சங்கரர்**!!

!!**ஆதி சங்கரர்**!!
காசிக்கருகில் ஒருநாள், கங்கை நதியில் குளித்துவிட்டு சங்கரர் தன் சிஷ்யர்களுடன் பாதையில் போய்க்கொண்டிருந்தார். எதிரே, அந்தக்கால வருணாசிரம முறைப்படி கீழ்ஜாதிக்காரனான ஒருவன் வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு அருவெருப்பு தரும் உருவம். கையில் பிடித்திருந்த கயிறுகளில் நான்கு நாய்களைக்கட்டி இழுத்துக்கொண்டு வந்தான். அவனிடமிருந்து துர்வாசம் வீசிற்று. மிக அருகில் அவன் வருவதாகத் தோன்றவே, ஆதிசங்கரர் அவனை `சற்று விலகிப் போ!` என்றார். அவனோ விலகவில்லை. நின்றான். ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டான்: “எது விலக வேண்டும்? உடம்பா? ஆன்மாவா? ஆன்மாவென்றால் அது எங்கும் நிறைந்திருப்பது . எல்லாவுமானது. அதிலிருந்து அதுவே விலகமுடியுமா? உடம்புதான் என்றால், அது ரத்தம், சதை, எலும்புகளாலானது. நிச்சயம் ஒரு நாள் அழியப்போவது. அழியப்போகும் உடம்புகளில் ஒன்று, இன்னொரு உடம்பை விலகிப் போ எனச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?“
சங்கரர் லேசாக அதிர்ந்தார். அவன் தொடர்ந்தான்: “கங்கையின் பரப்பில் பிரதிபலித்து மின்னும் சூரியன், சேரியிலிருக்கும் குட்டையில் பிரதிபலிக்கும் சூரியனிடமிருந்து வேறுபட்டதா? “
எதிர் நின்றவனைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருந்த சங்கரரின் மனதில் ஆன்மஒளி பிரகாசித்தது. “தாங்கள் இவ்வளவு விஷயஞானம் உடையவர் எனத் தெரியாது. ஏதோ தவறாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. தங்களை நமஸ்கரிக்கிறேன்“ என்று கைகூப்பி, தலைதாழ்த்தினார் ஆதிசங்கரர். இந்தக் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அவர் அப்போது 5 ஸ்லோகங்களை (பாடல்களை) இயற்றி, எதிர் நின்றவன் முன் பாடினார். அதற்குப் பெயர் `மனிஷா பஞ்சகம்`. `மனிஷா` என்றால் உறுதிப்படுத்திக்கொள்ளல்(conviction) அல்லது திட நம்பிக்கை எனப் பொருள். பஞ்சகம் என்பது ஐந்து ஸ்லோகங்கள் அல்லது பாடல்கள். ஒருவன் ஆன்மதரிசனம் அடைந்தபின், அதாவது தன்னை முழுமையாக உணர்ந்தபின், அவன் மேல்ஜாதி, கீழ் ஜாதி, உயர்குலம், தாழ்ந்த குலம் போன்ற சமூக வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவனாகிறான் என்கிற ஆன்மீகக் கருத்தை முன்வைக்கிறது மனிஷா பஞ்சகம்.
அத்வைத சித்தாந்தத்தைத் தன் குருவிடமிருந்து சங்கரர் ஏற்கனவே கற்றிருப்பினும், இந்த நிகழ்வில்தான் அதன் உண்மையான சாரம் அவரால் ஆழமாக உணரப்பட்டது என்பர். விஸ்வனாதராகக் காசியில் வீற்றிருக்கும் சிவபெருமானே ஆதிசங்கரரை சோதிக்க, இப்படிப் புலையனாக எதிர்வந்தார் என்றும், அவனுடைய கையில் பிடித்திருந்த நான்கு நாய்கள், உண்மையில் நான்கு வேதங்களைக் குறிக்கும் என்றும் கூறுவர் சமயச்சான்றோர்.

ஆடி 18 புராணக்கதை...!

ஆடி 18 புராணக்கதை...!
புராணங்களில் கூறப்படும் ஆடி 18 என்பது மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் இறுதி நாளான 18வது நாளை குறிக்கிறது. இந்த போரில் அநீதி அழிக்கப்பட்டு நீதி வென்றதின் நினைவாக ஆடி18 கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைத்து கோவில்களில் உள்ள இறைவனின் ஆயுதங்களையும் ஆற்றில் கழுவி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
குருச்சேத்திரப் போரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டனர்.
பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது.
பீஷ்மர் தனது படைகளைக் கருட வடிவத்தில் வியூகம் அமைத்தார். பாண்டவர்கள் பிறைச்சந்திர வடிவத்தில் தங்கள் படைகளை வியு கம் அமைத்தனர். அபிமன்யுவும் சாத்தியகியும் சேர்ந்து, சகுனியின் காந்தார நாட்டுப்படைகளைத் தாக்கி வென்றனர். பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணன் ஆலோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான். இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர்.
16 ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினான். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஓட விரட்டி அடித்தான். பின் அர்ஜூனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.
கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அர்ஜூனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.
ஒரு நேரத்தில், அர்ஜூனனை கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அர்ஜூனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அர்ஜூனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜூனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.
குருச்சேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.
கௌரவர்கள் அழிக்கப்பட்டு, போர் முடிவுற்று, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளாகும்.