jaga flash news

Friday, 26 July 2024

பலாப்பழம் சாப்பிடக் கூடாத 5 பேர் யார் என்று தெரியுமா?


பலாப்பழம் சாப்பிடக் கூடாத 5 பேர் யார் என்று தெரியுமா?

முக்கனிகளில் ஒன்று பாலாப்பழம். பலாப்பழத்தை யாரும் வேண்டாம் என்று கூற மாட்டார்கள். பலாப்பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ‘இந்தப் பழத்தை எல்லோரும் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், கூடாது என்றுதான் கூற வேண்டும். சில வகையான உடல்நலப் பிரச்னைகள் உள்ள 5 பேர் இந்தப் பலாப் பழத்தை சாப்பிடவே கூடாது.

‘யார் யார் அந்த 5 நபர்கள்? அந்தப் பட்டியலில் நாம் இருக்கிறோமா’ என்றுதானே  யோசிக்கிறீர்கள். யார் யார் பலாப்பழம் சாப்பிடக்கூடாது என்பதைக் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.

1. சரும அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்றி பலாப்பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பலாப்பழம் அழற்சி பிரச்னையை அதிகப்படுத்தும்.

2. இரத்தம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவர்கள் பாலாப்பழம் சாப்பிடுவதால் இவர்களின் இரத்தப் பிரச்னை இன்னும் அதிகரிக்கலாம்.

3. அறுவை சிகிச்சை செய்தவர்கள் பலாப்பழத்தை தொடவே கூடாது. அறுவை சிகிச்சை முடிந்து வந்தவுடன் பலாப்பழம் சாப்பிட்டால் காயம் அதிகமாகி விடும். காயம் குணமாகிய பின்னர் எடுத்துக் கொள்ளலாம்.


4. கர்ப்பமாக இருப்பவர்கள் மறந்தும் கூட பலாப்பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் வளர்ச்சியில் அது சில வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தலாம்

Wednesday, 24 July 2024

ராகு காலம், எமகண்டத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாதா?

மழையில் நனைந்தால் சளி பிடிக்கும். மழையில் நனையும் எல்லோருக்கும் சளி பிடிக்கிறதா என்ன? நம்மைவிட பல மடங்கு ஞானம் உள்ளவர்கள் சிலவற்றை விதியாக அமைத்து நம் நல்வாழ்வுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதைப்பின்பற்றுவதும் பின்பற்றாததும் நம்முடைய விருப்பம். நம் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்குச் செல்ல, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை வைத்திருப்பார்கள்.ஆனால், நம்முடைய மக்கள் அதைப்பற்றிக் கவலைப் படாமல் ரயில்வே டிராக்கிலேயே கடந்து போவார்கள். ஒன்றும் ஆகாது. ஆனால், ஏன் கடக்கக் கூடாது? எதற்கு மேம்பாலமும் சுரங்கப்பாதையும் கட்டி வைத்திருக்கிறார்கள்? அந்த விதியை எடுத்துவிடலாமே? தேவையில்லாமல் கோடியில் செலவு செய்து இவ்வளவு கட்ட வேண்டாமே. காரணம், ரயில்வே டிராக்கை கடப் பதில் ஆபத்து அதிகம் உண்டு என்பதால்தானே கட்டி வைத்திருக்கிறார்கள். அதேதான் ராகு காலத்திலும் எமகண்டத்திலும்

எந்தெந்த வயதில் எந்தெந்த கர்மாக்களை செய்து கொள்ளலாம்

பொதுவாக உலகியல் ரீதியான காரியங்களை அவரவர்கள் இல்லத்தில் செய்து கொள்வதுதான் விசேஷம். கோயில் போன்ற பொது இடங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளை நடத்துவது பெரியோர்கள் காட்டிய வழி அல்ல. நன்கு விவரம் தெரிந்த பெரியவர்கள் பெரும்பாலும், தங்கள் இல்லங்களில் நடத்திக்கொள்வதையே ஆதரிப்பார்கள். வீட்டில் முறையாக நடத்தப்படும் வேள்வி களாலும் மந்திரங்களாலும் வழி பாடுகளாலும் திருமகள் அருள் நிலைத்திருக்கும். இனி எந்தெந்த வயதில் எந்தெந்த கர்மாக்களை செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
1. 55-வது வயது ஆரம்பம் – பீம சாந்தி.
2. 60-வது வயது ஆரம்பம் – உக்ர ரத சாந்தி.
3. 61-வது வயது ஆரம்பம் – சஷ்டி அப்த பூர்த்தி.
4. 70-வது வயது ஆரம்பம் – பீம ரத சாந்தி.
5. 72-வது வயது ஆரம்பம் – ரத சாந்தி.
6. 78-வது வயது ஆரம்பம் – விஜயசாந்தி.
7. 80-வருஷம் 8 மாதம் முடிந்து, உத்திராயண சுக்ல பட்சம் நல்ல நாள் – சதாபிஷேகம்.
8. பிரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்தரனுக்கு புத்திரன் பிறந்தால், அதாவது கொள்ளுப் பேரன் பிறந்தால் செய்து கொள்ள வேண்டியது.
9. 85-வயது முதல் 90-க்குள் – மிருத்யஞ்சய சாந்தி.
10. நூறாவது வயதில் சுபதினத்தில் – பூர்ணாபிஷேகம்.இவையெல்லாம் இறையருள் பெற பல்வேறு மங்களகரமான மந்திரங்களை ஜெபித்து இயற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள் ஆகும். இதில் பல்வேறு தேவதைகளுக்கான மந்திரங்கள் உள்ளன. மனித வாழ்வில் வரும் இது போன்ற நல்வாய்ப்புகளை விரிவான வழிபாட்டிற்கும், இறையடியார் சேர்க்கைக்கும், தான தர்மங்கள் செய்வதற்கும், உரிய ஒரு வாய்ப்பாக கருத வேண்டுமே தவிர, நம் செல்வம், வசதி, பதவி, ஆடம்பரம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி விடக்கூடாது

ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?

ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?
 வீடு கட்டலாம், கிரகப்பிரவேசம் செய்யலாம், அன்னதானம் செய்யலாம், அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல், வாங்குதல் செய்யலாம், பத்திரம் பதிவு செய்யலாம், ஹோமங்கள் செய்யலாம், புதிய பதவியோ புதிய வேலையோ ஏற்கலாம்.

எந்தெந்த வயதில் என்னென்ன சாந்தி (சஷ்டியப்த பூர்த்தி) செய்து கொள்வது?

எந்தெந்த வயதில் என்னென்ன சாந்தி (சஷ்டியப்த பூர்த்தி) செய்து கொள்வது?
 இந்த கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். இது கோயிலில்தான் செய்து கொள்ள வேண்டுமா என்றும் கேட்கிறார்கள். பொதுவாக உலகியல் ரீதியான காரியங்களை அவரவர்கள் இல்லத்தில் செய்து கொள்வதுதான் விசேஷம். கோயில் போன்ற பொது இடங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளை நடத்துவது பெரியோர்கள் காட்டிய வழி அல்ல. நன்கு விவரம் தெரிந்த பெரியவர்கள் பெரும்பாலும், தங்கள் இல்லங்களில் நடத்திக்கொள்வதையே ஆதரிப்பார்கள். வீட்டில் முறையாக நடத்தப்படும் வேள்வி களாலும் மந்திரங்களாலும் வழி பாடுகளாலும் திருமகள் அருள் நிலைத்திருக்கும். இனி எந்தெந்த வயதில் எந்தெந்த கர்மாக்களை செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.1. 55-வது வயது ஆரம்பம் – பீம சாந்தி.
2. 60-வது வயது ஆரம்பம் – உக்ர ரத சாந்தி.
3. 61-வது வயது ஆரம்பம் – சஷ்டி அப்த பூர்த்தி.
4. 70-வது வயது ஆரம்பம் – பீம ரத சாந்தி.
5. 72-வது வயது ஆரம்பம் – ரத சாந்தி.
6. 78-வது வயது ஆரம்பம் – விஜயசாந்தி.
7. 80-வருஷம் 8 மாதம் முடிந்து, உத்திராயண சுக்ல பட்சம் நல்ல நாள் – சதாபிஷேகம்.
8. பிரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்தரனுக்கு புத்திரன் பிறந்தால், அதாவது கொள்ளுப் பேரன் பிறந்தால் செய்து கொள்ள வேண்டியது.
9. 85-வயது முதல் 90-க்குள் – மிருத்யஞ்சய சாந்தி.
10. நூறாவது வயதில் சுபதினத்தில் – பூர்ணாபிஷேகம்.இவையெல்லாம் இறையருள் பெற பல்வேறு மங்களகரமான மந்திரங்களை ஜெபித்து இயற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள் ஆகும். இதில் பல்வேறு தேவதைகளுக்கான மந்திரங்கள் உள்ளன. மனித வாழ்வில் வரும் இது போன்ற நல்வாய்ப்புகளை விரிவான வழிபாட்டிற்கும், இறையடியார் சேர்க்கைக்கும், தான தர்மங்கள் செய்வதற்கும், உரிய ஒரு வாய்ப்பாக கருத வேண்டுமே தவிர, நம் செல்வம், வசதி, பதவி, ஆடம்பரம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி விடக்கூடாது.?

ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?

வீடு கட்டலாம், கிரகப்பிரவேசம் செய்யலாம், அன்னதானம் செய்யலாம், அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல், வாங்குதல் செய்யலாம், பத்திரம் பதிவு செய்யலாம், ஹோமங்கள் செய்யலாம், புதிய பதவியோ புதிய வேலையோ ஏற்கலாம்.? ராகு காலம், எமகண்டத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள். சிலர் செய்யவும் செய்கிறார்கள். ஒரு கெடுதலும் வருவதில்லையே?

  மழையில் நனைந்தால் சளி பிடிக்கும். மழையில் நனையும் எல்லோருக்கும் சளி பிடிக்கிறதா என்ன? நம்மைவிட பல மடங்கு ஞானம் உள்ளவர்கள் சிலவற்றை விதியாக அமைத்து நம் நல்வாழ்வுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதைப்பின்பற்றுவதும் பின்பற்றாததும் நம்முடைய விருப்பம். நம் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்குச் செல்ல, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை வைத்திருப்பார்கள்.ஆனால், நம்முடைய மக்கள் அதைப்பற்றிக் கவலைப் படாமல் ரயில்வே டிராக்கிலேயே கடந்து போவார்கள். ஒன்றும் ஆகாது. ஆனால், ஏன் கடக்கக் கூடாது? எதற்கு மேம்பாலமும் சுரங்கப்பாதையும் கட்டி வைத்திருக்கிறார்கள்? அந்த விதியை எடுத்துவிடலாமே? தேவையில்லாமல் கோடியில் செலவு செய்து இவ்வளவு கட்ட வேண்டாமே. காரணம், ரயில்வே டிராக்கை கடப் பதில் ஆபத்து அதிகம் உண்டு என்பதால்தானே கட்டி வைத்திருக்கிறார்கள். அதேதான் ராகு காலத்திலும் எமகண்டத்திலும்.? மனிதர்களுக்கான பிரச்னையை ஆன்மிகம் தீர்த்து வைக்குமா?
  மகாத்மா காந்தி சொன்னதை அப்படியே கொடுக்கிறேன். ஆன்மிகம் மட்டுமே மனிதர்களுக்கு எழும் அத்தனை பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும். பிரச்னைகள் ஏழாமலும் செய்யும். இன்றைக்கு உள்ள சிக்கல்கள் ஆன்மிகத்தால் வந்த சிக்கல்கள் அல்ல. ஆன்மிகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் வந்த சிக்கல்கள். மனித குலம் உண்டிக்கும் உடைக்கும் அலையாமல் இருக்க ஒரே வழி ஆன்மிகம் செழிக்க வேண்டும். இல்லையெனில் இந்த லோகாயத அறிவு, எப்படி அடுத்தவரைக் கெடுக்கலாம்? எப்படி வெற்றிகரமான வணிகம் ஆக்கலாம்? எப்படி மேலும்மேலும் பணம் சம்பாதிக்கலாம் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மனிதன் படைக்கப்பட்ட போதே அவனுக்கான உணவும் படைக்கப்பட்டது. அந்த உணவைப் பெறுவது அவனுக்குள்ள உரிமை. ஆனால், அவர்கள் வாழ்வைச் சொர்க்கமாக உருமாற்றுவதற்கு ஞானிகள் தேவை. அதற்கு வழி காட்டுபவர்கள் தேவை. அதற்கு ஆன்மிகம் தேவை.? ஞானம் பெறுவதற்கு சாஸ்திரங்கள் தேவையா?
 ஒரு விஷயம் பயன்படுமா பயன்படாதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு அவசியம். சாத்திரங்களை மட்டும் படித்தறிவதால் ஞானம் பெறமுடியாது என்பது உண்மைதான். ஆயினும் ஞானம் பெறும் வழியை உணர்த்துவதில் சாஸ்திரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே ஞானத்தைத் தேடுபவர்களுக்கு சாஸ்திரங்களும் அவசியம்.? வெற்றிகரமான வாழ்க்கையா? திருப்திகரமான வாழ்க்கையா?
 வெற்றிகரமான வாழ்க்கையைவிட, திருப்திகரமான வாழ்க்கையே உயர்ந்தது. வெற்றி, பிறரால் தீர்மானிக்கப்படுகிறது. திருப்தி தன்னால் தீர்மானிக்கப்படுகிறது.? தர்மம் எப்போது போய்விடும்?
இதற்கு விதுரநீதியில் பலன் இருக்கிறது. பொறாமை வந்தால் தர்மம் போய்விடும் என்கிறார். எப்படி? நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரையில் நாம் தர்மமார்க்கத்தில் இருப்போம். எப்போது பொறாமை வருகிறதோ, உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்குவழிகளை உபயோகிப்போம். எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்துவிடும். அதனால்தான் பொறா (ஆமை) புகுந்த வீடு (மனம்) உருப்படாது என்றார்கள்.? `அரசமரத்தைச் சுற்றி வா..’ என்கிறார்களே. அது என்ன அரசமரத்திற்கு அத்தனை சிறப்பு?
 `மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ (ஸர்வ வ்ருக்ஷாணாம் அஸ்வத்த) என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார். ஒரு அரசமரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்கலோகப் பதவி கிட்டும் என்று, விருஷ ஆயுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரசமரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரசமரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதில் மருத்துவக் காரணங்கள் உள்ளன. அரசமரத்தின் அதிக பிராண வாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது, மேலும் புத்திதெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. புத்தருக்கு ஞானம் அளித்த போதிமரம் என்பது ஒரு அரசமரமே.? சொர்க்கம் நரகம் உண்மையில் இருக்கிறதா?
 புராணங்களில் சொர்க்கம் நரகம் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையோ கற்பனையோ, அது ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையான நரகமும் சொர்க்கமும் நமக்குள்தான் இருக்கிறது. மனமது செம்மையானால் சொர்க்கம்தான். மனம் சரியாக இருந்தால், நரகத்தைக் கூட சொர்க்கமாக்கும். அதே மனம் சரியில்லை என்று சொன்னால் சொர்க்கமே நரகமாகிவிடும். அது நாம் எதை அனுபவிக்கிறோம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை பொறுத்தது. ஒரு பாசுரம் பாருங்கள்.`பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே’ஸ்ரீரங்கம்தான் எனக்கு சுவர்க்கம். நீங்கள் சொல்கிற சுவர்க்கம் எனக்கு வேண்டாம் என்கிறார்.இதை இன்னும் எளிமையாக உலகியலாகச் சொல்லுகின்றேன். குடும்பத்தில் வசதி இல்லை. ஆனால், குடும்பத்தில் உள்ளவர்கள் காலையில் தேநீர் பருகும்போதும் உணவு உட்கொள்ளும் போதும், நன்கு சிரித்துப் பேசி, கலகலப்பாக அரட்டை அடித்து மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கின்றார்கள். வீட்டில் வசதி இல்லாத போதும் வீடு சொர்க்கமாகிறது.இன்னொரு வீடு. அலங்காரம். பெரிய பெரிய சோபாக்கள். விலைமதிப்பு மிக்க தரை விரிப்புகள். ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. எப்பொழுதும் முகத்தில் இறுக்கம். சிரிப்பே இல்லை. இப்பொழுது வீடு சொர்க்கம் போல தோற்றத்தில் இருந்தாலும், நரகம் தானே. எனவே சொர்க்கமும் நரகமும் நம் மனதில், நாம் வாழும் வாழ்க்கை முறையில் உள்ளது.? எப்படி இருந்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும்?
– வேல்முருகன், காவேரிப்பட்டினம்.பதில்: கவியரசு கண்ணதாசன் நான்கு வரிகளில் ஒரு கவிதை பாடி இருக்கிறார் (திரைப்படப் பாடல் அல்ல, கவிதை) அது இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும்.`காதலில் உறவினில் கலைகளில் உணவினில்
ஈதலில் புரத்தலில் இயற்கையை ரசித்தலில்
வாழ்தலில் பற்று வை; வாழ்க்கையைக் கற்று வை
போவதோர் நாள்வரும், போன பின்னால் இவண்
ஆவதோர் பொருளில்லை அறிவை நீ சத்தியம்
அழுவதேன் துடிப்பதேன் ஐயமேன் அச்சமேன்
எழுவதும் விழுவதும் இயற்கை என்றாறுதல் கொள்
இன்று நீ நாளை நீ என்றும் நீ என்றிரு
நன்று செய் நன்று சொல் நடத்து உன் வாழ்வினை
வாழ்வதே முடிவென வாழ்வினைத்
தொடங்கினால்
நெஞ்சமும் சன்னதி நித்தமும் நிம்மதி’? தமிழுக்கெனக் கோயில்களில் விழா நடந்திருக்கிறதா?
 நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. திருமங்கையாழ்வார் காலத்தில் நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு என்று திருவரங்கத்தில் ஒரு விழா நடந்தது. திருமங்கையாழ்வாரே நடத்திவைத்தார். அதற்கு திருவாய்மொழித் திருநாள் என்று பெயர். பெருமாள் தினம் இரவு 100 பாசுரங்கள் வீதம் கேட்பார்.இதற்காக திரு குருகூரிலிருந்து (பாண்டிய நாட்டில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆழ்வார் திருநகரி) ஆழ்வார் திருவுருவம் பல்லக்கில் எழுதருளப்பட்டு ஸ்ரீரங்கம் வரும். இது பின்னால் மற்ற ஆழ்வார்கள் பாசுரங்களுக்குமாக விரிவு பெற்றது. விரிவு செய்தவர் ஸ்ரீமன் நாதமுனிகள்.மற்ற ஆழ்வார்கள் பாசுரங்களை பிற்பகலில் பெருமாள் கேட்பார். இதற்கு திருமொழித் திருநாள் என்று பெயர். ஆழ்வார்கள் பாடிய தமிழ் பாசுரங்களை ஒரு மண்டபத்தில் பெருமாள் அடியார்களுடன் அமர்ந்து கேட்க வேண்டும்

Sunday, 14 July 2024

எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலைகளை அணியலாம்


எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலையை அணியலாம்? யார் அணியக் கூடாது தெரியுமா?
எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலைகளை அணியலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை ஃபேஷனாக அணிவது தவறு. அது போல் போலியான கருங்காலி மாலைகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் எந்த கல்லை போட்டால் யோகம் வரும். எந்த மாலையை அணிந்தால் கடன் தொல்லை விலகும் என்ற ரேஞ்சுக்கு மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். பழங்கால நடைமுறைகளை பின்பற்றுகிறோம் என்றாலும் இதிலும் ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன.


spirtuality karungali

போலியான கருங்காலி மாலைகள், ருத்ராட்ச மாலைளை மக்கள் வாங்கி அணிந்து கொண்டு அவதிப்படுகிறார்கள். பொதுவாக கருங்காலி இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி அதிகமாகவே இருக்கும். எனவே பணம், செல்வம் பெருக கருங்காலி மாலையை அணியலாம். அல்லது கருங்காலி குச்சிகளை பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

இதன் மூலம் குலத்தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த மரங்களில் ஒன்று தான் கருங்காலி. மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் மரம் கருங்காலி மரம்.

கருங்காலி மரம்​முருகனுக்கு உகந்த மரமாகும். அதாவது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. உறுதியான, வலுவான அனைத்து பொருள்களுக்கும் காரகர் நமது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றை குறிக்கும்.



கருங்காலி மாலை அணிவதால் குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சொத்து பிரச்சினை, சகோதரர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது.


இந்த கருங்காலி மாலையை மேஷம், விருச்சிகம், மிதுன ராசிகளில் உள்ள சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணியலாம். மிருகசீரிஷம், திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் இந்த கருங்காலி மாலையை அணிவது நன்மை தரும் என கூறப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செங்கருங்காலி மாலை அணிவது கூடுதல் நன்மை தரும். கருங்காலி மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை, 9, 18, 27-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மிகவும் உகந்தது.

கருங்காலி மாலையை யார் அணியலாம் என்பதை பார்த்தோம். அதை எப்படி போலியா உண்மையா என கண்டுபிடிப்பது என்பதையும் பார்ப்போம். கருங்காலி மாலையை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அந்த தண்ணீர் பழுப்பு நிறமாக மாறி, கருங்காலி மரத்தில் உள்ள சாறுகள் தண்ணீரின் மேல் எண்ணெய் படலம் போல் உருவாக வேண்டும். அப்படி ஆகாவிட்டால் அது போலி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிலர் கருங்காலி மாலையில் உள்ள ஒரு உருளையை பிளந்து காட்டுவர். அதை வைத்தும் போலியா உண்மையானதா என்பதை அணிந்து கொள்ளலாம். இந்த மாலையை அணிந்தால் மன அமைதி கிடைக்கும். கடவுளின் ஆசியும் கடைக்கண் பார்வையும் நம் மீது கிடைக்கும்.


எந்தெந்த ராசிக்காரர்கள் ரொமாண்டிக்! யார் யார் ஊர் சுற்றுவதை விரும்பமாட்டார்கள்? 
எந்தெந்த ராசிக்காரர்கள் ரொமாண்டிக்! யார் யார் ஊர் சுற்றுவதை விரும்பமாட்டார்கள்?
 

 
இந்த 3 ராசிக்காரர்களை தவிர வேறு யாரும் காலில் கருப்பு நிற கயிறை கட்டக் கூடாது தெரியுமா? 
இந்த 3 ராசிக்காரர்களை தவிர வேறு யாரும் காலில் கருப்பு நிற கயிறை கட்டக் கூடாது தெரியுமா?
 

Thursday, 11 July 2024

நீர்முள்ளி விதை....

நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.


நீர் முள்ளி... தமிழர் வாழ்க்கையோடு பிணைந்த ஒரு மூலிகைச்செடி. முண்டகம், நிதகம், இக்குரம், காகண்டம், தூரகத மூலம் என்ற பெயர்களில் இலக்கியங்களில் போற்றிப் பாடப்படும் இந்தச் செடியின் தாவரவியல் பெயர் Asteracantha Longifolia. குறுகலான ஈட்டி வடிவத்தில் இலைகளையும் நீலக் கருஞ்சிவப்பு நிறத்தில் மலர்களையும் கணுக்களில் அணில் பற்களைப் போன்ற வெள்ளை நிற முட்களையும் கொண்டது. 60 செ.மீ வரை வளரும். சதுரமான இதன் தண்டுப்பகுதியில் சிறு முடிகள் காணப்படும். பூ ஒரு செ.மீ நீளம் இருக்கும்.விதைகள் கறுமையான காணப்படும்.

குத்துச் செடியான இது நீர் நிறைந்த பகுதியில் தானாக வளரக்கூடியது. செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்கும். தமிழகம் எங்கும் காணப்படும் இந்தச் செடி முழுவதும் மருத்துவப் பயனுள்ளது. முக்கியமாக சிறுநீரைப் பெருக்கி வியர்வையை அதிகப்படுத்தி உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது. வெண்புள்ளி, மேகநீர், சொறி சிரங்கு, சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சல், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்வதோடு ஆண்மைப் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நீர் முள்ளியின் சமூலத்தை (முழுச் செடி) கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்கள் இந்தக் கஷாயத்தை காலை மாலை என அருந்தி வந்தால் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி விடும். நீர் முள்ளியுடன் திரிபலாச் சூரணம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வாயுக்களின் சீற்றத்தாலும் செரிமானக் கோளாறுகளாலும் ஏற்படக்கூடிய வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்த இதன் இலைகளைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களும் வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்களும் நீர் முள்ளிக் கஷாயத்தைக் குடித்து வந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகி தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.

இதன் விதையைப் பொடியாக்கி ஒரு வேளைக்கு அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு, நீர் கோத்தல், இரைப்பிருமல், மேக நோய் போன்றவற்றைக் குணப்படுத்துவதுடன் ரத்தத்தைச் சுத்திகரித்து ஆண்களுக்கு உயிரணு ஊறச் செய்யும். 40 கிராம் நீர் முள்ளி விதை, 20 கிராம் நெருஞ்சில் விதை, 10 கிராம் வெள்ளரி விதை சேர்த்துச் சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 200 மி.லி அளவாகக் காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து ஒரு வாரம் தொடர்ந்து காலை மாலை என குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் அனைத்தும் வெளியேறிவிடும். அத்துடன் நீர் எரிச்சல், மேக நீர், வாத நீர் நீங்கி உடலில் உள்ள தாதுக்கள் வலுப்பெற்று உடல் பலம் பெறும்.

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம் பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் காய்ச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் தாது பலப்படும். அத்துடன் தாம்பத்யத்தில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். நீர் முள்ளிச் சமூலம் 200 கிராம் எடுத்து நன்றாகக் கழுவி சிதைத்து அதனுடன் பெருஞ்சீரகம், நெருஞ்சில் விதை, தனியா தலா 50 கிராம் சேர்த்து இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராகும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். அதில் 125 மி.லி வீதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்து வந்தால் பருத்த உடல் வாகு கொண்டவர்கள் உடல் மெலியத் துவங்குவர். அத்துடன் வாத வீக்கம், கீல் வாதம், அழற்சி போன்றவை மூன்று நாள்களில் சரியாகும்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும்.

நீர் முள்ளி விதையை ஐந்து விரலால் அள்ளும் அளவு எடுத்து இரவில் ஒரு செவ்வாழைப் பழத்தின் உள்ளே வைத்து விட வேண்டும். அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். இப்படி 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாது பலப்பட்டு தாம்பத்யம் சிறக்க உதவும். இதேபோல் அமுக்கராங் கிழங்கு, ஓரிதழ் தாமரை, பூனைக்காலி விதை, ஜாதிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் நீர் முள்ளி விதை அனைத்தையும் சம அளவு 

Friday, 5 July 2024

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் படத்தை வீட்டில் வைப்பதால் ஏற்படும் பலன்கள்

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் படத்தை வீட்டில் வைப்பதால் ஏற்படும் பலன்கள்.. ! பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி என்று நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம்.. இந்த பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் விளக்கத்தை ராமாயணத்தில் காண்கிறோம். ராமர் ராவணன் போரின் போது, ​​ராவணன் பாதாள உலகத்தை ஆண்ட மஹிராவணனின் உதவியை நாடுகிறான். ஆஞ்சநேயரால் அமைக்கப்பட்ட வால சயனமந்திரத்திலிருந்து (வால் கட்டப்பட்ட) ராம லக்ஷ்மணரை விபீஷணன் வடிவில் மஹிராவணன் கடத்திச் செல்கிறான். இதையறிந்த ஆஞ்சநேயர், ஸ்ரீராம லக்ஷ்மணனைத் தேடி பாதாளத்திற்குச் செல்கிறார். நடராஜர் சிலையை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது தெரியுமா? அப்போது பாதாள லோகத்தில் ஒரே நேரத்தில் ஐந்து விளக்குகளை வெவ்வேறு திசைகளில் உடைக்கிறார் ஆஞ்சநேயர். அதனால் மஹிராவணன் இறந்துவிடுவார். இதை அறிந்தவர் பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமியின் வடிவத்தை எடுக்கிறார். ஆஞ்சநேயரின் முகங்களில் ஒன்று காகா, கருடன், வராஹா, ஹயக்ரீவர் மற்றும் நரசிம்மர். ஐந்து முக அவதாரத்தை உருவாக்கி, அந்த விளக்குகளை ஒரேயடியாக அழித்து (ஆர்பி) ஸ்ரீ ராமர் லட்சுமணனைக் காப்பாற்றுகிறார். 6 July 2024 AAJ KA RASHIFAL| इन राशि वालों को मिलेगी खुशखबरी | Daily Astrology | Boldsky எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள் புரிபவன் அஞ்சனை மைந்தன் அனுமன். அனுமனை பஞ்சமுக ஆஞ்சனேயராக வழிபாடு செய்ய சொல் வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகுதல் என அனைத்து நலன்களும் உண்டாகும். நமது சமய மரபில் ஐந்து என்கிற எண் மிகவும் விசேஷமானது. பஞ்சபூதங்கள், பஞ்சாட்சர நாமம், பஞ்ச வேள்விகள், பஞ்ச இந்திரியங்கள் என பல சிறப்புகள் ஐந்து என்கிற எண்ணுக்கு உண்டு. ஹனுமன் முகம், நரசிம்ம முகம்,கருட முகம், வராக முகம், ஹயக்ரீவ முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முக வடிவில் ஒருங்கிணைந்து உள்ளதே பஞ்சமுக ஆஞ்சனேயர் என அழைக்கப்படுகிறார். டீனேஜ் வயதினருக்கான சில ட்ரெண்டியான ஃபேஷன் டிப்ஸ்...! பஞ்சமுக ஆஞ்சனேயர் மந்த்ராலய மகானான ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் உபாசனை தெய்வமாக திகழ்கிறார். அவர் பஞ்சமுக ஆஞ்சனேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என அழைக்கப்படுகிறது. அங்கு பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கும்பகோணத்திலும் பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூருக்கு அருகில் உள்ள பெரிய குப்பம் கிராமத்தில் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் சுவாமி கோயில் உள்ளது. நம் நாட்டில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு பல ஊர்களிலும் கோயில்கள் உண்டு. புதுச்சேரி அருகே பஞ்சவடி எனும் ஊரில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. ஐந்து முகங்கள் தவிர பத்து முகங்களை கொண்ட தசமுக ஆஞ்சனேயரும் உண்டு. சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும். அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். அஞ்சநேயருக்கு வடை மாலை ஏன் தெரியுமா? பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது. வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணெய் காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது. இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப் பறித்து சீதை மாலையாக அணிவித்தார். பஞ்சமுக ஆஞ்சநேயர் நோக்கிய திசைகளும் பலன்களும் 1. கிழக்கு திசையை நோக்கி உள்ள அனுமன் முகம் சகல கிரக தோஷங்களையும் போக்குவதுடன் மனதையும் தூய்மைப்படுத்தும். 2. தெற்கு திசையை நோக்கியுள்ள ஸ்ரீ நரசிம்மர் முகம் தீமையை போக்கும். நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தை போக்குவதுடன் நம்மை வெற்றி பெறவும் வைக்கும். 3. மேற்கு திசை நோக்கிய கருட முகம் தீய சக்திகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் தீய விளைவுகளை போக்குவதுடன், விஷக்கடியால் ஏற்படும் விஷத்தையும் முறிக்கும். பிணி தீர்க்கும் கருட முகம். 4. வடக்கு திசை நோக்கிய வராக முகம் சாந்தியும் நிம்மதியும் தருவதுடன் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும். 5. மேலோக்கி உள்ள ஹயக்ரீவ முகமானது நமக்கு கல்வியும் ஞானத்தையும் தருவதுடன் எடுத்த காரியங்களில் வெற்றியையும், புத்திர பாக்கியத்தையும் அளிக்க வல்லது. மேலும் ஹயக்ரீவஸ்வாமி அறிவையும், மகிழ்ச்சியையும், நல்ல வாழ்க்கைத் துணையையும், சந்ததியையும் அருளுகிறார். திருப்பதியில் உள்ள மலைகளும் அதன் சிறப்புகளும்..! ஆஞ்சநேயர் வழிபாடும் கிடைக்கும் பலன்களும் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் வெண்ணெய் மாலைகளை அர்ப்பணம் செய்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவார்கள். ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் உரிய பலனை பெறலாம். இது நவக்கிரக வழிபாட்டுக்கு நிகரானது.. "ஸ்ரீ ராமஜெய" மந்திரம் "ஸ்ரீ ராமஜெய" மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும் மேலும், "ஸ்ரீராமஜெயம்" என்ற மந்திரத்தை 108 முறை காகிதத்தில் எழுதி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்கின்றனர்