jaga flash news

Tuesday, 25 February 2020

அகத்தியர்

நீங்கள் அன்னையைக் கரம் பற்றி தம்பதி சமேதரராக இங்கு வருவீர்கள் என்றால், நான் அடுத்த கணமே தங்களுக்கு ஒரு பசுவை தானமென அளிக்கிறேன்" என்று பணிவுடன் அகத்தியர்  கூறினார்.
 
பெருமாளும் அகத்தியர் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
 
பின்னர் அவர் அன்னை பத்மாவதியைத் திருமணம் செய்து
கொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்குச் செல்லத் தொடங்கினார்.
 
அதற்கு முன்னர், அகத்தியரின் குடிலுக்குச் சென்று அவர் தருவதாகச் சொன்ன பசுவையும் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தார்.
 
அதற்காக அவர் அகத்தியரின் இருப்பிடம் சென்றார்.
 
ஆனால், அப்போது
அகத்தியர் அங்கே இல்லை.முனிவரின் சீடர்களே, அங்கிருந்தனர்.
 
அவர்களிடம் பெருமாள் அகத்தியர் தமக்கு ஒரு பசுவை தானமாகத் தருவதாக வாக்குப் பண்ணியிருக் கிறார்' என்பதைச் சொல்லி பசுவைப் பெற்றுச் செல்லவே தான் வந்திருப்பதாகச் சொன்னார்.
 
செய்வதறியாது திகைத்தனர் சீடர்கள்.
 
ஐயா, தங்களையும் அன்னையையும் கண்டால் வைகுண்ட வாசனான அந்தப் பரந்தாமனையும் *அன்னை 
மகாலட்சுமியையும் காண்பது போல் உள்ளது.
 
தாங்கள் கேட்டு மறுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு.
 
இந்த ஆசிரமத்தில் அனைத்தும் எங்கள் குருநாதர் அகத்தியருக்கே உரிமையானவை.
 
அவர் அனுமதியில்லாமல் நாங்கள் எதையும் தரவும் பெறவும் இயலாது.
 
நீங்கள் அவர் வரும் வரை இங்கேயே தங்கியிருந்தால் நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யக் 
காத்திருக்கிறோம்.
 
அதன் பின் குருதேவர் வந்ததும்,நீங்கள் பசுவினை அவரின் திருக்கரத்தா லேயே பெற்றுச் செல்லலாம்" என்றனர்.
 
பெருமாளும் அவர்கள் சொன்ன பதிலில் வருத்தம் கொள்ளாது, அவர்களின் குருபக்தியையும், அதிதிகளிடம், காட்டும் மரியாதையையும் கண்டு மகிழ்ந்தார்.
 
பின்பு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தன் நிரந்தர வாசஸ்தலம் நோக்கிப் புறப்பட்டார்.
 
சற்று நேரத்துக்கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றார்.
 
உலகையே காக்கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்
கழித்து விட்டதற்காக வருந்தினார்.
 
எப்படியும் பெருமாளைச் சந்தித்து தன்னிடம் உள்ளதில் ஆகச் சிறந்த பசுவினைத் தந்து விடுவது என்று முடிவு செய்து காமதேனுவைப் போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக் கொண்டு,
 
பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக் கொண்டே சென்றார்.
 
வேகமாக நடந்ததில் கொஞ்ச நேரத்திலேயே பெருமாள் முன்பாக நடந்து செல்வதை அகத்தியரும் பார்த்து விட்டார்.
 
பெருமாளை நோக்கிக் குரல் கொடுத்தார்.
 
 " சுவாமி கோவு இந்தா " என்று சத்தமிட்டார்.
 
தெலுங்கில் ` "கோவு " என்றால் பசு. `இந்தா' என்றால் எடுத்துக்
கொள் என்று பொருள்.
 
ஆனால், சுவாமிக்கு முனிவரின் குரல் கேட்கவில்லை போலும்.
 
மீண்டும் சத்தமாக சுவாமி கோவு இந்தா என்று சொன்னார்.
 
அப்போதும் அவர் திரும்பவில்லை.
மீண்டும் மீண்டும்
சுவாமி கோவு இந்தா...
சுவாமி கோவு இந்தா...
சுவாமி கோவு இந்தா"
என்று அழைத்துக் கொண்டேயிருந்தார்.
 
அதுவரை அன்னநடை போட்டுக் கொண்டிருந்த பெருமாளும் தாயாரும் விரைவாக நடக்க ஆரம்பித்து விட்டனர்.
 
அகத்தியரோ, தன் குரலை இன்னும் உயர்த்தி `கோவு இந்தா கோவு இந்தா' என்று வேகவேகமாக உச்சரிக்க அதுவே சற்று வேகமான வழக்கில் வார்த்தையில் கோவிந்தா... கோவிந்தா என்று ஆனது.
 
கோவிந்தா, கோவிந்தா என்று அவர் அழைத்தது 108 முறை ஆனதும் பெருமாள் நின்றார்.
 
திரும்பிப் பார்த்தார். அகத்தியர் மூச்சு வாங்க அவரிடம் ஓட்டமும் நடையுமாய்ப் பசுவோடு வந்தார்.
 
பெருமாள் அவரை ஆசுவாசப் படுத்தி, அந்தப் பசுவை தானமாகப் பெற்றுக் கொண்டார். பின்னர்,
 
இந்தக் கலியுகத்தில் என்னை அழைக்க
உகந்த நாமம் கோவிந்தா என்பதே.
 
நீங்கள் `கோவு - இந்தா' என்று சொன்ன தன் மூலம் கோவிந்தா என்னும் நாமத்தைச் சொல்லி என்னை மகிழ்ச்சிப் படுத்தினீர்.
 
நீர் மட்டுமல்ல, இனி யார் யார் எல்லாம்,தம் ஜீவனாகிய பசுவினை என்னிடம் சேர்ப்பிக்க விரும்புகிறார் களோ அவர்கள் எல்லாருமே கோவிந்தா என்னும் நாமத்தைச் சொன்னாலே போதும்,
 
நான் உடனடியாக அவர்களை நோக்கி விரைவாக அனுக்கிரகம் செய்வேன்" என்று சொல்லி விடை பெற்றுத் திருமலையில் ஆனந்தமாக ஆர்ப்பாட்டமின்றி குடி புகுந்தான் வேங்கட மலையான்.

சுமை

💐 நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும் - உன் பலவீனத்தில் என் பலம்!! 

பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா?

அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார்.

வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை.

அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

எனவே தாம் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறாள் அந்த பெண். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.

நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.

“கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயே… கருணை கடலுக்கு இது அடுக்குமா??” என்று கோபித்துகொள்கிறாள்.

“உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.

மேலும் சில காலம் சென்றது.

சில இடங்களில் அவளால் தூக்க முடியாத போது கிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

“போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று கிருஷ்ணர் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறாள் அந்த பெண்.

“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண் அதற்காகவே காத்திருந்த அந்த பெண் “சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.

கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்ந்து மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்க -ளுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!

“இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!”

அந்த பெண்ணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

“கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர் காலில் விழுகிறாள்.

“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவள் உருக கிருஷ்ணர் தனக்கே உரிய சிரிப்பை உதிர்க்கிறார்.

ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். அந்தஅளவு சுமை மட்டுமே கடவுள் தருவார்....
எனவே அவனை நம்புங்கள் முழுமையாக...

💐ஓம் நமோ நாராயணாய💐

*தொகுப்பு ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்*
*சர்வம் விஷ்ணு மயம்*

நிலக்கடலை

*டாக்டர்களின் எதிரி*
*நிலக்கடலை* 
*சக்கரையை கொல்லும்*
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

F(iv)e

Mathematician asks:  How to write 4 in between a 5? 

China man replied: Is this a Joke?

Japan man exclaimed: Impossible! 

American man said: The question's wrong!!

British man snorted: Rubbish !!
  
Indian man wrote:  F(IV)E

This is the reason you find Indians everywhere in the world in finance, business, medicine, engineering & arts..anything to do with optimising your brain!!

Send to all Indians all over the globe

மேஷம் அஸ்வினி நட்சத்திரத்தினர் கோடீஸ்வரர் யோகம் எப்படி பெறுவது தெரியுமா?

அனைவருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இருப்பினும் அன்றாட வாழ்வில் பொருள், பணப் பிரச்னை ஏற்படாமல் இருந்தாலே போதும் என்ற அளவிற்கு பிரச்னைகள் தொடர்ந்திருக்கும். அப்படி இருக்கும் அஸ்வினி நட்சத்தினர் எப்படி கோடீஸ்வர யோகம் பெறலாம், அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...