jaga flash news
Friday 26 February 2021
கரணம்...
Wednesday 24 February 2021
அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:
Monday 22 February 2021
பஞ்சகட்சம் கட்டும் முறை.
வீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...
கோடை காலத்தில் ஒருவரின் வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவத
கோடை காலத்தில் ஒருவரின் வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவது...
பல்லிகளைப் பார்துத பயப்படுபவர்கள் பலர் இன்று உள்ளனர். ஆமாம், பல்லியைப் பார்த்தவுடன் மூச்சடக்கி நிற்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் பல்லியை வீட்டிலிருந்து எளிய முறையில் வீட்டை வீட்டு விரட்டுவதற்கான சில வழிகளை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
1. முட்டை ஓடு - உங்கள் வீட்டிலிருந்து பல்லியை விரட்ட விரும்பினால், முட்டை உடைக்கும் போதெல்லாம், அதை குப்பையில் எறிவதற்கு பதிலாக, பல்லிகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைக்கவும்.
2. பூண்டு - பல்லியை வீட்டை விட்டு வெளியேற்ற, ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் பூண்டின் ஒரு சில மொட்டுகளை தொங்க விடுங்கள்.
3. குளிர்ந்த நீர் - பல்லியை வீட்டிலிருந்து விரட்டியடிக்க, பல்லிகள் அதிகம் இருக்கும் பகுதியில் குளிர்ந்த நீரைத் தெளிக்கவும், இதன் பிறகு அந்த இடத்தில் மீண்டும் பல்லிகள் வராது.
4. நாப்தாலீன் பந்துகள்(பூச்சி உருண்டை) - பல்லியை வீட்டை விட்டு வெளியே விரட்ட, நாப்தலின் பந்துகளை பயன்படுத்துங்கள்.
5. காபி பவுடர் - பல்லியை வீட்டிலிருந்து அகற்ற, காபி பவுடர் மற்றும் சமையல் பட்டை ஆகியவற்றைக் கலந்து தடிமனான கரைசலை உருவாக்கவும். இப்போது இந்த கலவையை சிறு உருண்டைகளா உருவாக்கி பல்லி அதிகம் காணும் இடத்தில் வைக்க வேண்டும். பின்னர் இந்த இடத்திற்கு பல்லிகள் வராது.
Sunday 21 February 2021
பஞ்ச கச்சம் வேஷ்டி கட்டுவது எப்படி?
பஞ்ச எனில் ஐந்து. கச்சம் எனில் செருகல்.
ஆடவர் வேட்டியை ஐந்து இடங்களிற் செருகிஉடுத்தும் வகை
A mode of wearing cloth by Brahmin males mostly.
பஞ்சகச்சம் எனில் ஐந்து செருகல் கொண்ட ஆடை.
வலது இடுப்பில் ஒரு செருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து செருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது
பாரம்பரியத்துக்கும், ஆச்சாரத்துக்கும் உரிய திருமணமான ஆண்கள் அணிய வேண்டிய அவசியமான பஞ்சகச்சத்தின் பெருமையையும், முக்கியத்தையும் உணர்ந்து தெய்வீக, வைதீக நிகழ்ச்சிகளில் மற்றும் கோவிலுக்கு போகும்போது பஞ்சகச்சம் அணிந்து செல்லலாம்.
சரியாக புரிந்து கொண்டால் மிகவும் எளியது.
சந்த்யாவந்தனம் போன்ற நித்யகர்மாக்கள் , பூஜைகள் விசேஷங்கள் , பஜனை நிகழ்ச்சிகள் என பல சந்தர்பங்களில் பஞ்ச கச்சம் அணிந்து வரலாம் . பஞ்சகச்சம் கட்டிகொள்ளும்.
பஞ்ச கச்சம் உடுத்திக்கொள்ள
பஞ்சகச்சம் கட்டிகொள்ள ஒன்பது முழம் வேஷ்டியும் .
ஐந்து முழம் துண்டும்
(அங்க வஸ்த்ரம்/ உத்தரீயம்) தேவை
எட்டு முழம் வேஷ்டி அளவு கம்மியாக இருக்கும்.
இங்கு சொல்லப்படும் அளவுகள் தோராயமானவை அவரவர்கள் உயரம், உடல்பருமனுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் .
1) 9 முழ வேஷ்டியை முழுதாகப் பிரித்து இடுப்பின் பின்புறம் தொட்டுக்கொண்டிருக்கும்படி இரு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும்..
2) இடது பக்கம் உள்ள பகுதியை,வயிற்றுப்பக்கம் கொண்டுவந்து, வயிற்றுக்கு வலதுபக்கம் சுமார் ஒரு சாண் ( 9 அங்குலம் ) இருக்கும்படி பிடித்துக்கொண்டு அங்கிருந்து பாதம் வரை (சுமார் 3முழம்) தொங்கும்படி பிடித்துக்கொண்டு அதன்மேல் மீதி உள்ள ஆறு முழம்பகுதியை, வயிற்றின் மையப்பகுதி வரை கொண்டுவந்து , கொஞ்சமாக ( தேவையான அளவு ) இறுக்கி, வேஷ்டி இடுப்பிலிருந்து , நழுவாதபடி மேலிருந்து கீழாக உருட்டி விட்டுக்கொள்ளவும்.
3) இடதுபுரம் உள்ளே தொங்கும் சிறிய பகுதியை எடுத்து, உள்ளங்கையில் நாலு விரல் அளவு அகலமாக மடித்து , மடிப்புகளை நீவி ஒழுங்கு படுத்திக்கொண்டு, அதைக் கால்களின் நடுவாக பின்புரம் கொண்டு சென்று, முதுகுப்பக்கம் சொருகிக்கொள்ளவும். இப்போது இடது பக்கம் பாதம் வரை வேஷ்டி இருக்கவேண்டும்.
4) முன்புரம் தொங்கும் நீளமான 5 to 6 முழம் பகுதியை எடுத்துக்கொள்ளவும். நடு வயிற்றுப்பகுதியில் தொங்கும் , வேஷ்டியின் வர்ணமான கரை.உள்ள பாகத்தில், கீழே தொங்கும் நுனியில் ஆரம்பித்து ,நாலு விரல் அளவுக்கு ( முன்பு Step No.3-ல் உள்பக்கம் தொங்கும் பாகத்தை மடித்தது போல ) மடித்து ,வயிற்றின் நடுப்பகுதியில் சொருகிக்கொள்ளவும் .
5) பாதம் வரை கீழே தொங்கும் பகுதியை எடுத்து, , அதையும் முன்பு போல நாலு விரல் அளவு மடித்துக்கொள்ளவும். அதை வயிற்றின் நடுப்பகுதியில், தேவயான உயரம் , இறுக்கம் உள்ளபடி சொருகிக்கொண்டு, முன்புரம் தொங்கும் கரைப்பகுதியை விரல்களால் நீவி ஒழுங்கு படுத்தவும்.
6) இரு கால் பக்கங்களிலும் பாதம் வரை தொட்டுக் கொண்டிறுக்கும்படி, வெளிப்பக்கம் தெரியும் வர்ணக் கரைப் பகுதியை , லேசாக , இங்கும் அங்கும் இழுத்து சரி செய்யவும்.
7) தேவைப்பட்டால் வேஷ்டி அவிழ்ந்துவிடுமோ என்ற பயம் இருந்தால் பெல்ட் அல்லது வேறு ஒரு துண்டு, இடுப்பில் கட்டிக்கொள்ளவும்.
8) ஐந்து முழம் அங்கவஸ்த்திரத்தை, தேவையான அகலத்துக்கு ஆக மடித்துக்கொண்டு, இடது தோளின்மீது போட்டுக்கொண்டு, , பின்பக்கம் தொங்கும் பகுதியை வலதுபுறம் தோளின் கீழாக ( அக்குள் வழியாக ), இடது தோள்மேல் போட்டுக்கொள்ளவும் . இது உத்தரீயம் எனப்படும்.
9) அல்லது இடுப்பில் வட்டமாக சுற்றிக்கட்டிக்கொள்ளவும் .
அவ்வளவுதான். பஞ்சகச்சம் ரெடி ! வீடியோவிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
முகூர்த்தக்கால் நடுதல்
இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல் திருமணம் முடியும் வரை பலவிதமான சடங்குகள் செய்கிறோம். இந்த சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது முகூர்த்தக்கால் நடுதல் ஆகும். இதை பந்தக்கால் நடுதல் என்றும் கூறுவர். இந்த பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து திருமணத்திற்கு முன்பு நடைபெறும்.
இந்த சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்த பந்தக்கால் நடும் விழாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கல்யாண முருங்கை மரம் ஆகும். சில வீடுகளில் கல்யாண முருங்கைக்கு பதிலாக பால மரமும் நடுகின்றனர்.பந்தக்கால் நடும் முறை :
கல்யாண முருங்கை மரத்தில் ஒரு கிளையை வெட்டி அதில் உள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.
உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் உள்ள பெரியவர் அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து, பின் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். அதனடியில் நவதானியத்தோடு நீர் மற்றும் பால் ஊற்றி மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு மற்றும் பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பின் பந்தக்காலை நிலத்தில் ஊன்றுவர். பந்தக்கால் நட்ட பிறகு பந்தல் போடும் வேலையும் தொடர்ந்து செய்வர். பின் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் விருந்துண்டு மகிழ்வர்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இருவீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது.
பந்தக்கால் நடும் முறை வந்தது எப்படி?
முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைத்து திருமணத்திற்கும் அரசனால் செல்ல இயலாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது.