jaga flash news

Tuesday, 30 May 2023

எந்த நாளில் எந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கொட்டும்-ன்னு தெரியுமா?

ஞாயிறு ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவப்பு நிற பொருட்கள், தங்கம், கோதுமை, மருந்துகள், கத்திரிக்கோல், கண் தொடர்பான பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்நாளால் இரும்பு மற்றும் இரும்பினால் ஆன பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு மரப் பொருட்கள், வாகனத்தின் பாகங்கள் போன்வற்றையும் வாங்கக்கூடாது. திங்கள் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் அரிசி, பாத்திரங்கள், தங்கம், மருந்துகள், பால் மற்றும் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பொருட்களை வாங்கலாம். ஆனால் இந்நாளில் போனா, பென்சில், கலை தொடர்பான பொருட்கள், இசை தொடர்பான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மொபைல் போன்றவற்றை வாங்கக்கூடாது. ADVERTISEMENT செவ்வாய் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய்க்கிழமை அன்று தங்கம், சமையலறை பொருட்கள், சிவப்பு நிற பொருட்களை வாங்குவது நல்லது. சொத்துக்களை வாங்க நினைத்தால், அதை செவ்வாய் கிழமைகளில் வாங்குவது மங்களகரமானதாக இருக்கும். ஆனால் இந்நாளில் காலணிகளை வாங்காதீர்கள். அதோடு இரும்பு தொடர்பான பொருட்கள், பர்னிச்சர் மற்றும் மொபைல் போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். புதன் புதன்கிழமை விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவிக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிழமைகளில் பணம் தொடர்பான வேலைகளை செய்வது நல்லது. புதிய தொழில் மற்றும் படிப்பைத் தொடங்க சிறந்த நாள். இந்நாளில் பேனா, பென்சில், கலைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது அதிர்ஷ்டமானது. ஆனால் இந்நாளில் அரிசி, மருந்துகள், பாத்திரங்கள், மீன் தொட்டி போன்றவற்றை வாங்கக்கூடாது. மேலும் கடன் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வியாழன் வியாழக்கிழமை பகவான் விஷ்ணுவிற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது. அதேப் போல் இந்நாளில் சொத்துக்களை வாங்குவது நன்மை பயக்கும். ஆனால் இந்நாளில் கண்ணாடி, மஸ்காரா போன்றவற்றை வாங்கக்கூடாது. அதேப் போல் கூர்மையான பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நீர் தொடர்பான ஷோபீஸ்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். வெள்ளி வெள்ளிக்கிழமை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உரிய நாளாகும். இந்நாளில் பணம் வைக்கும் பைகள், பெல்ட்டுகள், காலணிகள் போன்ற தோல் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. மேலும் இந்நாளில் அலங்கார பொருட்களை வாங்குவது மங்களகரமானது. ஆனால் இந்நாளில் சமையலறை மற்றும் பூஜை பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் வாகனத்தின் பாகங்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
சனி சனிக்கிழமை சூரிய பகவானின் மகனான சனி பகவானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் வாகனங்கள், இயந்திரங்கள், ஹார்டுபேர், பர்னிச்சர், கருவிகள், கார்பெட் மற்றும் திரைசீலைகள் போன்வற்றை வாங்குவது மங்களகரமானதாகும். சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று விரும்பினால், சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெய், உப்பு மற்றும் தோல் பொருட்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அதுமடுமின்றி, இரும்பு பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், தானியங்கள், மசாலா பொருட்கள் போன்றவற்றை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

Friday, 26 May 2023

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

1. வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

வருடங்கள் மொத்தம் அறுபது அவை:

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:

1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :

1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

கிரகங்கள் ஒன்பது ஆகும்:

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். 

ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி
பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.
செவ்வாய் :சுப்ரமண்யர்
ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.
புதன் :விஷ்ணு
ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.
குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)
ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.
சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்
ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.
சனி : எமன், சாஸ்தா
உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).
ராகு: காளி, துர்கை
கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.
கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

உடலுக்கு ஒன்பது வாசல் :

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன

1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்

இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

நவரத்தினங்கள்:
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

பூதங்கள் ஐந்து வகைப்படும் :

1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
வீடு பேறுகள் பதினாறு வகைப்படும்:
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..

புராணங்கள் பதினெட்டு வகைபடும்,

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 
16.மார்க்கண்டேய புராணம் 
17.பிரம்மாண்ட புராணம் 
18.பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:

1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

Thursday, 25 May 2023

மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!



மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!

திருமண நிகழ்வு நிறைவடைந்த பின்னர் மொய் பணம் கொடுக்கும் போது 101 ரூபாய், 201 ரூபாய் என்று கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது. 

Why a 1 rupee coin added to a shagun envelope
திருமணம், கிரகபிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும் பணத்தை மொய்யாக கொடுக்கிறோம். அப்போது கூடுதலாக 1 ரூபாய் வைத்து கொடுப்போம். உதாரணமாக 51, 101, 501, 1001 என மொய் செய்வோம். அதுமட்டுமின்றி நன்கொடையாகக் கொடுக்கப்படும் பணத்தில் கூட ஏன் ஒரு ரூபாய் கூடுதலாக வைக்கப்படுகிறது என்பதற்குப் பின்னால் நம் முன்னோரின் ஆழ்ந்த சிந்தனை இருக்கிறது. இந்த பாரம்பரியத்தின் பின்னால் உள்ள காரணத்தை அறிந்து கொள்வோம்.  


Why a 1 rupee coin added to a shagun envelope
நாம் 50 அல்லது 100 ரூபாயை தசமங்களாகக் கொடுக்கும்போது, ​​இந்த எண்கள் பல இலக்கங்களால் வகுக்கப்படும். அதாவது அவை பிரிக்கப்படலாம். மேலும் 51 அல்லது 101 போன்ற 1 ரூபாய் கூடுதலாக வைக்கப்படும் போது இந்த எண் பிரிக்க முடியாததாகிவிடும். அதாவது எந்த இலக்கத்தாலும் வகுபடாது. இதன் உளவியல் அம்சம் என்னவெனில், மொய்யில் கொடுத்த காசு போல, நம் உறவு என்றும் நிலைத்திருக்கும், பிரிந்து விடக்கூடாது என்பது தான். அடடா! உறவை பிரிக்கக் கூடாது என மொய்யில் கூட இவ்வளவு நுணுக்கங்களை முன்னோர் யோசித்திருக்கிறார்களே..

Why a 1 rupee coin added to a shagun envelope
விழாக்களில் 51 அல்லது 101 ரூபாயை கொடுப்பதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. இதன்படி, 50 அல்லது 100 ரூபாயின் கடைசி இலக்கம் பூஜ்ஜியமாகும். ஆனால் அதனுடன் 1 ரூபாய் சேர்ந்தால் அது 51 மற்றும் 101 ஆக மாறும், இதன் கடைசி இலக்கமான 1 என்பது ஒற்றுமையின் சின்னமாகும். உறவுகளில் எப்போதும் ஒற்றுமை இருக்க வேண்டுமே தவிர வெறுமையாக இருக்க கூடாது என்பதே அதன் காரணம். பூஜ்ஜியம் என்பது இறுதிக் குறிகாட்டி. அதே சமயம் 1 தொடக்கக் குறிகாட்டியாகும். தொடர்ச்சியை குறிக்கவே மொய்யில் ரூ. 101 என கொடுக்கிறோம்..


Why a 1 rupee coin added to a shagun envelope
சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் மொய் பணம், ஒருவகை முதலீடு. நமக்கு தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ ஏதேனும் சுபநிகழ்ச்சிகள் வரும்போது, நமது சக்திக்கேற்ப, அவர்களுக்குப் பரிசாகவோ, பணமாகவோ வழங்குகிறோம். அதே நமது குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி வரும் போது, ​​இந்த அன்பளிப்புகளும், பணமும் நமக்கே திருப்பித் தரப்படுகிறது, அது அந்த நேரத்தில் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழியில் பார்க்கும்போது, ​​​​பரிசு வழங்குவதும் ஒரு வகையான முதலீடாகும்.  



Why a 1 rupee coin added to a shagun envelope
நாணயம் பூமியில் இருந்து உருவான உலோகம், செல்வத்தின் கடவுளான லட்சுமியின் உருவகம். எனவே, நாணயங்களை ரூபாய் நோட்டுகளுடன் கொடுக்கிறார்கள். நாம் கொடுக்கும் மொய் காசு பூஜ்ஜியமாகிவிடாமல் தடுக்கும் பொருட்டு 1 ரூபாய் சேர்த்து கொடுக்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கான விதையாக செயல்படுகிறது. அதனால் தான் இந்தியர்கள் ஒத்தப்படை எண்களில் மொய் பணம் வழங்குகிறார்கள். 


Sunday, 14 May 2023

துத்தி எனப்படும் அந்த எளிமையான மூலிகை




 

உடல் வெப்பம்..குறையும் விந்தணு உற்பத்தி..அற்புத மூலிகை இருக்க ஆண்மை குறைவு பற்றி கவலை எதற்கு
இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் விசயம் ஆண்மை குறைபாடு. விந்தணு குறைபாடு. முறையற்ற உணவு பழக்கம், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது தூங்குவது போன்றவையும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. இதனால் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. உடலை குளிர்ச்சியாக்கி விந்தணு உற்பத்தியை அதிகரிக்க அற்புதமான மூலிகை கீரை சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. துத்தி எனப்படும் அந்த எளிமையான மூலிகை எல்லா இடத்திலும் கிடைக்கும் துத்தியின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி அறிந்து கொள்வோம்.



துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது. துத்தி 2 செமீ வரை உயரமானது. தாவரம் முழுவதும் மென்மையான உரோமங்கள் உண்டு. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். துத்தி இலைகளின் அடிப்பாகம் மெழுகு பூசியது போன்று காணப்படும். சில நேரங்களில் 3 மடல்களாகப் பிரிந்திருக்கும்.


பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி,கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக வளர்கின்றது. கடற்கரை ஓரங்கள், சமவெளிகளில் அடர்ந்து காணப்படும்.




துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு. துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி பூ காமம் பெருக்கும் ஆண்மையைப் பெருக்கும். துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.



துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 50 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

வெயில் காலத்தில் வியர்க்குருவால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் பண்ணுங்க.. ஈஸியா தடுக்கலாம் வெயில் காலத்தில் வியர்க்குருவால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் பண்ணுங்க.. ஈஸியா தடுக்கலாம்
துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.


மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வு சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது. மூல நோய் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும்.


துத்தி கீரையுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும். மூல நோயால் அதிகம் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

துத்தி இலையை எடுத்து விளக்கெண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தி இலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.


எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும்.

பல் ஈறு நோய் குணமாக துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும். குடல் புண் மற்றும் சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை ரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும்.துத்தி இலையை இடித்துச் சாறு தயாரித்து இதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.

துத்தி பூ ரத்தப் போக்கை அடக்கும் காமம் பெருக்கும், இருமலைக்குறைக்கும், ஆண்மையைப் பெருக்கும், குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும். துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும்.







துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும். துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து கற்கண்டு சேர்த்துச் சில தினங்கள் சாப்பிட்டால், சூட்டினால் ஏற்பட்ட இருமல் தீரும்.


Tuesday, 9 May 2023

பெட்ரோல் பங்குகளில் இதெல்லாம் இலவசம்.. கட்டாயம் கொடுக்க வேண்டிய 6 வசதிகள்! இதை தெரிஞ்சுக்கோங்க

எந்தவொரு பெட்ரோல் பம்புக்கும் உரிமம் வழங்குவதற்கு முன்,  இலவச வசதிகளை வழங்குவதற்கான நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்.
 நாம் அனைவரும் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவதற்கு மட்டுமே பெட்ரோல் பம்ப் செல்வோம். காரில் எரிபொருள் நிரப்புவதைத் தவிர, வாகனத்தின் டயர்களில் இலவச காற்றும் நிரப்பப்படுவது வாடிக்கை. ஆனால் பெட்ரோல் பம்பில் சில இலவச வசதிகளும் கண்டிப்பாககிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வசதிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவை வழங்கப்படுகின்றன.
1/ 8
நாம் அனைவரும் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவதற்கு மட்டுமே பெட்ரோல் பம்ப் செல்வோம். காரில் எரிபொருள் நிரப்புவதைத் தவிர, வாகனத்தின் டயர்களில் இலவச காற்றும் நிரப்பப்படுவது வாடிக்கை. ஆனால் பெட்ரோல் பம்பில் சில இலவச வசதிகளும் கண்டிப்பாககிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வசதிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவை வழங்கப்படுகின்றன.

 அரசு விதிப்படி இந்த 6 இலவச வசதியை இலவசமாக கொடுத்தால்மட்டுமே பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கப்படும்.இந்த வசதிகள் பற்றிய தகவல்களை பம்ப் ஊழியரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம், மேலும் இந்த வசதிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அங்குள்ள புகார் புத்தகத்தில் உங்கள் கருத்தையும் எழுதலாம். அதன் பிறகு பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பெட்ரோல் பம்பில் நீங்கள் பெறக்கூடிய இலவச வசதிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
2/ 8
அரசு விதிப்படி இந்த 6 இலவச வசதியை இலவசமாக கொடுத்தால்மட்டுமே பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கப்படும்.இந்த வசதிகள் பற்றிய தகவல்களை பம்ப் ஊழியரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம், மேலும் இந்த வசதிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அங்குள்ள புகார் புத்தகத்தில் உங்கள் கருத்தையும் எழுதலாம். அதன் பிறகு பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பெட்ரோல் பம்பில் நீங்கள் பெறக்கூடிய இலவச வசதிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.


 இலவச காற்று: எந்த பெட்ரோல் பம்பிலும் எரிபொருளை நிரப்பினால், கட்டணம் ஏதுமின்றி உங்கள் காரின் டயர்களில் காற்றை நிரப்பும் வசதி கிடைக்கும். பம்ப் சார்பில் இந்த வசதி செய்து தருவதும், அதற்கான பணியாளரை நியமிக்க வேண்டியதும் கட்டாயம்.
3/ 8
இலவச காற்று: எந்த பெட்ரோல் பம்பிலும் எரிபொருளை நிரப்பினால், கட்டணம் ஏதுமின்றி உங்கள் காரின் டயர்களில் காற்றை நிரப்பும் வசதி கிடைக்கும். பம்ப் சார்பில் இந்த வசதி செய்து தருவதும், அதற்கான பணியாளரை நியமிக்க வேண்டியதும் கட்டாயம்.

 குடிநீர்: பெட்ரோல் பம்பில் சுத்தமான குடிநீர் அமைப்பு இருப்பதும் அவசியம். பம்பிற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சுத்தமான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்பது ரூல்.
4/ 8
குடிநீர்: பெட்ரோல் பம்பில் சுத்தமான குடிநீர் அமைப்பு இருப்பதும் அவசியம். பம்பிற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சுத்தமான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்பது ரூல்.


 கழிப்பறை வசதி: பெட்ரோல் பங்கில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது கட்டாயம். இதில் பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருக்க வேண்டும். பெட்ரோல் பம்பில் உள்ள கழிப்பறை வசதியை எரிபொருள் வாங்காமல் கூட பயன்படுத்தலாம். இந்த கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் பொறுப்பு.5/ 8
கழிப்பறை வசதி: பெட்ரோல் பங்கில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது கட்டாயம். இதில் பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருக்க வேண்டும். பெட்ரோல் பம்பில் உள்ள கழிப்பறை வசதியை எரிபொருள் வாங்காமல் கூட பயன்படுத்தலாம். இந்த கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் பொறுப்பு.

 தொலைபேசி வசதி: பெட்ரோல் பங்கில் இலவச தொலைபேசி அழைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும். உங்களுக்கு ஏதேனும் அவசரம் என்றால் அருகில் உள்ள பெட்ரோல்பங்க் சென்று அவசர உதவியை நாடலாம்.
6/ 8
தொலைபேசி வசதி: பெட்ரோல் பங்கில் இலவச தொலைபேசி அழைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும். உங்களுக்கு ஏதேனும் அவசரம் என்றால் அருகில் உள்ள பெட்ரோல்பங்க் சென்று அவசர உதவியை நாடலாம்.


 முதலுதவி பெட்டி: பெட்ரோல் பம்பில் முதலுதவி பெட்டி அவசியம். இதில் அனைத்து அடிப்படை மருந்துகளும் வைக்கப்பட வேண்டும். விபத்து ஏற்பட்டால், பெட்ரோல் பம்பிலேயே முதலுதவி வசதி கிடைக்கும்.
7/ 8
முதலுதவி பெட்டி: பெட்ரோல் பம்பில் முதலுதவி பெட்டி அவசியம். இதில் அனைத்து அடிப்படை மருந்துகளும் வைக்கப்பட வேண்டும். விபத்து ஏற்பட்டால், பெட்ரோல் பம்பிலேயே முதலுதவி வசதி கிடைக்கும்.

 தீயை அணைக்கும் கருவி: பெட்ரோல் பம்புகளில் நீங்கள் எப்போதும் தீயை அணைக்கும் கருவிகளைக் காணலாம். இவை பம்ப் தேவைக்கானது மட்டுமல்ல. பங்க் அருகில் அல்லது சாலையில் ஏதேனும் தீ விபத்து என்றாலு,ம், தீயை அணைக்க வேண்டி பெட்ரோல் பம்பிலிருந்து தீயணைப்பு கருவியை எடுக்கலாம். இதற்கு பெட்ரோல் பம்பில் யாரும் மறுக்க முடியாது. மாறாக, தீயை அணைக்கும் கருவியை இயக்குவதற்கு தங்கள் ஊழியர்களில் ஒருவரை அனுப்ப வேண்டும்.
8/ 8
தீயை அணைக்கும் கருவி: பெட்ரோல் பம்புகளில் நீங்கள் எப்போதும் தீயை அணைக்கும் கருவிகளைக் காணலாம். இவை பம்ப் தேவைக்கானது மட்டுமல்ல. பங்க் அருகில் அல்லது சாலையில் ஏதேனும் தீ விபத்து என்றாலு,ம், தீயை அணைக்க வேண்டி பெட்ரோல் பம்பிலிருந்து தீயணைப்பு கருவியை எடுக்கலாம். இதற்கு பெட்ரோல் பம்பில் யாரும் மறுக்க முடியாது. மாறாக, தீயை அணைக்கும் கருவியை இயக்குவதற்கு தங்கள் ஊழியர்களில் ஒருவரை அனுப்ப வேண்டும்


வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பத்தை இந்த இடத்தில் வைச்சுராதீங்க... இல்லனா பணம் எல்லாம் மொத்தமா போயிடும்...!

வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பத்தை இந்த இடத்தில் வைச்சுராதீங்க... இல்லனா பணம் எல்லாம் மொத்தமா போயிடும்...! வாஸ்து படி, வாழ்க்கையில் நாம் நமக்கே தெரியாமல் செய்யும் பல சின்ன சின்ன தவறுகளை சரி செய்து கொள்ளலாம். இந்த தவறுகளை நாம் தொடர்ந்து செய்கிறோம். நம் வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக முன்னேற உதவும் பல விஷயங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று வீட்டில் பயன்படுத்தப்படும் துடைப்பம்.  துடைப்பத்தை நாம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறோம். ஆனால் இது தொடர்பான சில முக்கிய உண்மைகளை வாஸ்து படி மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் துடைப்பம் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரவும் உதவும், வீட்டை விட்டு அதிர்ஷ்டத்தை வெளியேற்றவும் உதவும்.  வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பம் லட்சுமி தேவியின் சின்னம். இதனால் வீட்டின் வறுமை நீங்கும். வாஸ்து சாஸ்திரத்தில் துடைப்பம் தொடர்பாக பல விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவது கட்டாயமாகும். நீங்கள் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தால், வாழ்க்கையில் உறுதியற்ற தன்மை வரும். நீங்களும் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பராமரிக்க விரும்பினால், துடைப்பம் தொடர்பான இந்த விஷயங்களை கண்டிப்பாக மனதில் கொள்ளுங்கள்.  பாற்கடலை கடையும் போது லட்சுமி தேவி பிறந்தார் என்று புராணங்கள் கூறுகிறது. அதனால்தான் செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை ஆதிகாலம் முதலே வழிபடுகிறார்கள். மக்கள் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் செல்வத்தைப் பெற லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள். செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. லட்சுமி தேவியை இந்த நாளில் விசேஷமாக வழிபடுகிறார்கள்.  வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பம் எப்போதும் வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இதனுடன், துடைப்பத்தை தவறுதலாக கூட வடக்கு திசையில் வைக்கக்கூடாது. வடக்கு திசையில் விளக்குமாறு வைப்பதால் வாஸ்து தோஷம் ஏற்படும். துடைப்பத்தை மொட்டை மாடியிலோ அல்லது உங்கள் வீட்டின் கூரையிலோ வைக்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது திருட்டு அல்லது பிற வடிவங்களின் மூலம் பணம் வெளியேறும். 

Monday, 8 May 2023

வீட்டிற்குள் பல்லி வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா..? ஜோதிடம் கூறுவது இதுதான்




வீட்டிற்குள் பல்லி வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா..? ஜோதிடம் கூறுவது இதுதான்!

வீட்டிற்குள் பல்லி வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா..? ஜோதிடம் கூறுவது இதுதான்!
lizards in house good or bad astrology | வீட்டிற்குள் பள்ளி இருப்பதை கண்டாலே நம்மில் பலருக்கும் பிடிக்காது. அதை அடித்து வீட்டை விட்டு துரத்தினால் மட்டுமே பலரது மனம் நிம்மதியாகும். ஆனால், ஜோதிட ரீதியாக வீட்டிற்குள் பல்லி இருப்பது பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துறத்தாமல் நாம் வீட்டிற்குள் நுழைவது இல்லை. ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் என பரிதாபம் பார்த்தும் விடுவதுண்டு.
வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துறத்தாமல் நாம் வீட்டிற்குள் நுழைவது இல்லை. ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் என பரிதாபம் பார்த்தும் விடுவதுண்டு.

இவை பெரும்பாலும் ட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன. யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஜோதிடத்தில் பல்லி பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், பல்லியைப் பார்ப்பது சுபம் என்று சிலர் அசுபம் என்றுகூறுகின்றனர். பல்லியை பார்ப்பது நல்லதா கெட்டதா என இந்த தொகுப்பில் காணலாம்.
இவை பெரும்பாலும் ட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன. யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஜோதிடத்தில் பல்லி பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், பல்லியைப் பார்ப்பது சுபம் என்று சிலர் அசுபம் என்றுகூறுகின்றனர். பல்லியை பார்ப்பது நல்லதா கெட்டதா என இந்த தொகுப்பில் காணலாம்.


பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், ஜோதிட நம்பிகையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது.
பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், ஜோதிட நம்பிகையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது.

சில மாநிலங்களில் புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு. ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்ப்படுகிறது. இவ்வளவு ஏன், தமிழகத்தில் பல்லிக்கு என தனி கோயில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
சில மாநிலங்களில் புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு. ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்ப்படுகிறது. இவ்வளவு ஏன், தமிழகத்தில் பல்லிக்கு என தனி கோயில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?.


வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. தீபாவளி அன்று வீட்டில் பல்லியை இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. தீபாவளி அன்று வீட்டில் பல்லியை இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள்.

வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது6/ 8
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது


அதுமட்டும் அல்ல, பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமம் என்பது ஐதீகம். அதாவது, முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் நமக்கு கிடைக்கும். அத்தத்துடன், அன்னை லட்சுமி தேவியும் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார்.
அதுமட்டும் அல்ல, பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமம் என்பது ஐதீகம். அதாவது, முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் நமக்கு கிடைக்கும். அத்தத்துடன், அன்னை லட்சுமி தேவியும் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார்.

சில கோயில்களில் மரத்தை சுற்றி பலர் நின்று கொண்டு எதையோ கைகாட்டி பார்ப்பதை பார்த்திருப்போம். அது வேறு எதுவும் அல்ல, கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம்.
சில கோயில்களில் மரத்தை சுற்றி பலர் நின்று கொண்டு எதையோ கைகாட்டி பார்ப்பதை பார்த்திருப்போம். அது வேறு எதுவும் அல்ல, கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். ( குறிப்பு : இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட ஐதீக நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது.