jaga flash news

Thursday, 19 December 2024

முள்ளங்கி...



இந்த ஒரு காய்கறி போதும்..நரம்புகளில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களை அகற்றிவிடும்.!
இந்த ஒரு காய்கறி போதும்..நரம்புகளில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களை அகற்றிவிடும்.!
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்த, நீங்கள் உங்கள் உணவு முறையை மேம்படுத்த வேண்டும்.


இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உணவு முறைகள் மாறிவிட்டன, இதனால் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாப்பிடும் உணவில் அதிக எண்ணெய் மற்றும் வெளி உணவுகளை சாப்பிடுவதால், மக்களின் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்த, நீங்கள் உங்கள் உணவு முறையை மேம்படுத்த வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சில காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்தகைய காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி ஆகும்.

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உணவு முறைகள் மாறிவிட்டன, இதனால் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாப்பிடும் உணவில் அதிக எண்ணெய் மற்றும் வெளி உணவுகளை சாப்பிடுவதால், மக்களின் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்த, நீங்கள் உங்கள் உணவு முறையை மேம்படுத்த வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சில காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்தகைய காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி ஆகும்.


மற்ற பருவங்களை விட குளிர்காலத்தில் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால்தான் இந்த சீசனில் அழகுடன் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் விரும்புகிறார்கள். எனவே குளிர்காலம் நெருங்க நெருங்க பச்சைக் காய்கறிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. பச்சை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பச்சைக் காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பச்சை காய்கறிகளில், முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் காய்கறிகளில் ஒன்றாகும்.

மற்ற பருவங்களை விட குளிர்காலத்தில் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால்தான் இந்த சீசனில் அழகுடன் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் விரும்புகிறார்கள். எனவே குளிர்காலம் நெருங்க நெருங்க பச்சைக் காய்கறிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. பச்சை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பச்சைக் காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பச்சை காய்கறிகளில், முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் காய்கறிகளில் ஒன்றாகும்.


முள்ளங்கியின் ஊட்டச்சத்தைப் பற்றி பேசுகையில், இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அவை அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

முள்ளங்கியின் ஊட்டச்சத்தைப் பற்றி பேசுகையில், இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அவை அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.


 கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் முள்ளங்கி: முள்ளங்கியில் பொட்டாசியம் மற்றும் அந்தோசயனின் உள்ளது, இது BP உடன் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆனது நரம்புகளில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களை அகற்ற உதவுகிறது. இது தமனிகளை ஆரோக்கியமாக வைத்து அவற்றின் சுவர்களை ஆரோக்கியமாக்குகிறது. இது இதய நோய் வராமல் தடுக்கிறது மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து உடலை காக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் முள்ளங்கி: முள்ளங்கியில் பொட்டாசியம் மற்றும் அந்தோசயனின் உள்ளது, இது BP உடன் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆனது நரம்புகளில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களை அகற்ற உதவுகிறது. இது தமனிகளை ஆரோக்கியமாக வைத்து அவற்றின் சுவர்களை ஆரோக்கியமாக்குகிறது. இது இதய நோய் வராமல் தடுக்கிறது மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து உடலை காக்கிறது.


 இந்த பிரச்சனைகளுக்கு முள்ளங்கி நன்மை அளிக்கும்: நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது: முள்ளங்கி ஆனது ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சு மற்றும் அழுக்குகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு முள்ளங்கி நன்மை அளிக்கும்: நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது: முள்ளங்கி ஆனது ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சு மற்றும் அழுக்குகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.


 நீரிழிவு நோய்க்கு நன்மை அளிக்கிறது: முள்ளங்கியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

நீரிழிவு நோய்க்கு நன்மை அளிக்கிறது: முள்ளங்கியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.


 மலச்சிக்கலில் பயனுள்ளதாக இருக்கும்: மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபட முள்ளங்கி மிகவும் நன்மை அளிக்கிறது. இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் உள்ள நச்சுகளை குடல் வழியாக வெளியேற்ற உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

மலச்சிக்கலில் பயனுள்ளதாக இருக்கும்: மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபட முள்ளங்கி மிகவும் நன்மை அளிக்கிறது. இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் உள்ள நச்சுகளை குடல் வழியாக வெளியேற்ற உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

Tuesday, 17 December 2024

உடல்நலம் மாரடைப்பு வரப்போகிறது என்றால் 1 மாதத்திற்கு முன்பே கண்ணில் இந்த அறிகுறிகள் தெரியுமாம்

 உடல்நலம் மாரடைப்பு வரப்போகிறது என்றால் 1 மாதத்திற்கு முன்பே கண்ணில் இந்த அறிகுறிகள் தெரியுமாம்.. உஷார்..  தற்போது ஒவ்வொரு நாளும் மாரடைப்பால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு, சிலர் அந்த மாரடைப்பால் இறந்தும் வருகிறார்கள். எனவே இன்றைய காலகட்டத்தில் இதய ஆரோக்கியத்தில் ஒருவர் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொள்வது மட்டுமின்றி, இதய பிரச்சனைகளின் அறிகுறிகளை அறிந்து, அவற்றை அனுபவித்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஒருசில அறிகுறிகளை பெரும்பாலான மக்கள் சந்திப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகளை புரோட்ரோமல் அறிகுறிகள் என்று அழைப்பர். இந்த அறிகுறிகளை ஒருவர் தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம், மாரடைப்பால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம். பொதுவாக மாரடைப்பின் போது நெஞ்சு பகுதியில் விவரிக்க முடியாத வலி ஏற்படும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் இந்த அறிகுறியைத் தவிர வேறுசில அறிகுறிகளையும் நிறைய மக்கள் அனுபவித்துள்ளனர். அந்த அறிகுறிகளாவன: * நெஞ்சு பாரம் 
* படபடப்பு * சுவாசிப்பதில் சிரமம் * நெஞ்சு எரிச்சல் * உடல் சோர்வு மற்றும் பலவீனம் * தூங்குவதில் பிரச்சனை மற்றும் தூக்கமின்மை   மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் பகுதியளவு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டால், ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் இரத்தக்குழாய்களில் முழு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுமானால், அதன் எச்சரிக்கை அறிகுறிகள் ஒரு மாதம் அல்லது அதற்கும் முன்பிருந்தே தெரியக்கூடும். அதுவும் ஒருவருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருந்தால், அதன் எச்சரிக்கை அறிகுறிகள் கண்களில் தெரியும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. கண்களில் மஞ்சள் நிற திட்டுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்து, ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்றால் அதன் முதன் அறிகுறி கண்களில் மஞ்சள் நிற திட்டுகள் உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் கண்களில் திடீரென்று மஞ்சள் நிற திட்டுகள் தெரியத் தொடங்கினால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். "எகண்கள் சிவந்து போவது சில நேரங்களில் கண்கள் சிவந்து காணப்படும். அப்போது நாம் அதை மிகுந்த உடல் சோர்வு அல்லது தூக்கமின்மையால் ஏற்பட்டதாக நினைத்து சாதாரணமாக விட்டுவிடுவோம். ஆனால் ஒருவரது இரத்த அழுத்தம் அதிகமானாலும் கண்கள் சிவக்கக்கூடும். எனவே நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் ஒருவரது கண்கள் சிவந்து காணப்பட்டால், அவரது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும். கண் வீக்கம் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் காரணமின்றி திடீரென்று கண்களில் வீக்கம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி இதயத்தை சோதனை செய்து பாருங்கள். கண்களில் வலி கண்களில் விவரிக்க முடியாத வலியை அனுபவித்தால், அது தீவிரமான இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்றால் இப்படியான கண் வலியை ஒருவர் அனுபவிக்கக்கூடும். இதற்கு இதயத்தில் உள்ள பிரச்சனையால் ஏற்படும் இரத்த ஓட்ட குறைபாடு தான் காரணம். தீவிரமான தலைவலி உங்களுக்கு சமீப காலமாக அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியானால் அது இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே தலைவலியை அதிகம் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை உடனே அணுகுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இந்த அறிகுறிகள் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.

Monday, 16 December 2024

1 கிராம் தங்கத்தை அடமானம் வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

 1 கிராம் தங்கத்தை அடமானம் வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? இப்படி தான் லோன் தொகை கணக்கிடப்படுகிறத நம் நாட்டில் தங்கத்திற்கென்று தனி மதிப்பு இருக்கும். காரணம் இதை தேவைப்படும் நேரங்களில் பணமாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம். தங்க கடன் என்பது அவசரப் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் பலருக்கும் 1 கிராம் தங்க நகைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? என்ற விவரங்கள் தெரியாது. இந்தப் பதிவில் 1 கிராம் தங்கத்தை அடகு வைத்தால் எவ்வளவு தொகையை கடைக்காரர் வழங்குவார்? என்பது குறித்து தெரிந்து கொள்வோம். தங்கக் கடன்: தங்கத்தின் எடை மற்றும் அடமானம் வைக்கும் போது தங்கத்தின் விலை ஆகிய இரண்டு காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதோடு நீங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு, தங்கத்தின் தூய்மை மற்றும் லோன் டு வேல்யூ ரேஷியோ (LTV) என்ற 3 காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் லோன் டு வேல்யூ ரேஷியோ என்பது கடன் வழங்குனரால் நிர்ணயிக்கப்படும் விகிதமாகும். "வங்கிகள், NBFC-கள் கொடுக்கும் தங்க நகை கடன்.. இப்போ லேட்டஸ்ட் வட்டி எவ்வளவு தெரியுமா? " தங்க கடன் விகிதத்தை கணக்கிடும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: 
 தங்கத்தின் தூய்மை: நீங்கள் வழங்கும் தங்கத்தின் தூய்மை அதன் மதிப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் வழங்குபவர்கள் 18 கேரட் முதல் 24 கேரட் வரை தூய்மையான தங்கத்தை ஏற்றுக் கொண்டு கடன் தருகின்றனர். அதிக கேரட் அதிக கடன் தொகைக்கு வழிவகுக்கும். உதாரணமாக 24 கேரட் தங்கம் தூய்மையானது. எனவே 18 கேரட் தங்கத்தோடு ஒப்பிடுகையில் 24 கேரட் தங்கத்திற்கு அதிக கடன் கிடைக்கும். 
 தங்கத்தின் சந்தை விலை: தங்கக் கடனை மதிப்பிடுவதில் தங்கத்தின் அப்போதைய விலையும் கருத்தில் கொள்ளப்படும். பொதுவாக உலக பொருளாதார நிலைமைகள், தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்றவற்றின் காரணமாக தங்கம் நிலையில் தினசரி அடிப்படையில் மாறுதல் ஏற்படுகிறது. உதாரணமாக உங்கள் பகுதியில் 1 கிராம் ஏழாயிரம் என்றால் 7000 என்று வைத்துக் கொள்வோம். இது உங்கள் தங்க கடனுக்கான அடிப்படை விலை மட்டுமே. பொதுவாக தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வரை கடன் தொகையாக பெறலாம். எனவே அதிக சந்தை விகிதம் இருக்கும் போது நீங்கள் பெரும் கடன் தொகையும் அதிகரிக்கும். "மரண அடி வாங்கிய முகேஷ் அம்பானி, அதானி.. 100 பில்லியன் டாலர் கிளப்பில் இருந்து வெளியேற்றம்..!!" லோன் டு வேல்யூ ரேஷியோ: LTV என்பது உங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பை வைத்து எவ்வளவு கடன் வழங்கப்பட உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் விகிதமாகும். பெரும்பாலான கடன் வழங்குனர்கள் 75 சதவீதம் வரை லோன் வழங்குகின்றனர். உதாரணமாக 24 தங்கத்தின் மதிப்பு 7,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 100 கிராம் தங்கத்தை அடமானம் வைக்கிறீர்கள். அப்படியானால் உங்கள் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 7,00,000. அப்படியானால் இதில் 75% வரை நீங்கள் கடனாகப் பெறலாம். அதன்படி ரூ. 5,25,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். 

சுண்டு விரல் மோதிர விரல் அளவு


டைப்-A உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடு வரை இருந்தால், நீங்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கூட உங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லமாட்டீர்கள். நேர்மையின்மை உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் ஒருவருக்கு உண்மையாக, நேர்மையாக இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து தள்ளி, தனிமையில் இருக்கவே விரும்புவீர்கள். இதனால் பலர் உங்களை ஆணவம் பிடித்தவர்களாக தவறாக நினைக்கலாம். ஆனால் உங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும். நீங்களும் அதுவே போதும் என்று இருப்பீர்கள். மற்றவர்களிடம் உங்களை நிரூபிக்க விரும்பமாட்டீர்கள்.

டைப் - B உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடுக்கு மேல் நீளமாக இருந்தால், நீங்கள் மிகவும் உண்மையாக இருப்பீர்கள் மற்றும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். உங்களுக்கு காதலன்/காதலி இருந்தால், அவர்கள் தான் உலகம் என்று இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு தான் முன்னுரிமை அளிப்பீர்கள். அவர்களுடன் ஆழமாக இணைந்திருக்க முயற்சிப்பீர்கள்.
நீங்கள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியான நபராக வெளிக்காட்டிக் கொள்வீர்கள். வாழ்க்கையில், உங்களின் வேலை, கல்வி, குடும்பம் அல்லது நண்பர்கள் என நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அவற்றிற்கு உங்களை முழுமையாக அர்ப்பணிக்கிறீர்கள். இப்படியான எண்ணம் நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவுகிறது. மொத்தத்தில் நீங்கள் அமைதியானவர். எப்பேற்பட்ட அழுத்தமான சூழ்நிலையிலும் உங்களை கூலாக வைத்துக் கொள்வீர்கள். டைப் - C உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடு வரை இல்லாமல் குட்டையாக இருந்தால், நீங்கள் கலகலப்பான நபர் மற்றும் உங்களிடம் எந்த ஒரு எதிர்மறையும் நெருங்க முடியாது. நீங்கள் தனக்கு ஒருவர் செய்த தவறை எளிதில் மன்னிப்பதோடு, மறக்கவும் செய்வீர்கள். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றை பேசமாட்டீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். மேலும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான நபர். உங்கள் துணையுடன் அல்லது அன்புக்குரியவருடன் வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்பட்டால், முதலில் நீங்கள் போய் மன்னிப்பு கேட்டு பேசுவீர்கள். பரிச்சயம் உங்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு, உங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்


சூரியன் ஏன் உலகம் தோன்றிய காலம் முதலே கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது தெரியுமா?

சூரியன் ஏன் உலகம் தோன்றிய காலம் முதலே கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது தெரியுமா? இதுதான் காரணமாம்? 
 உலகில் அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக இருப்பது சூரியன்தான். சூரிய ஒளி மட்டுமில்லை என்றால் பூமியில் உயிரினங்கள் எப்போதே மொத்தமாக அழிந்திருக்கும். உலகில் எப்போதும் மாறாத மற்றும் மாற்றவே முடியாதவிஷயங்களில் ஒன்று சூரியன் உதிக்கும் திசை. உலகம் தோன்றிய காலம் முதலே சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைகிறது. இன்னும் பல ஆயிரமாண்டுகள் கடந்தாலும் இந்த விஷயத்தை யாராலும் மாற்ற முடியாது. பூமியில் அனைத்தும் மாற்றங்களுக்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உட்பட்டு வரும் நிலையில் பல மில்லியன் ஆண்டுகள் கழித்தும் சூரியன் உதிக்கும் திசை எப்படி மாறாமல் இருக்கிறது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? ஒருவேளை உங்கள் மனதில் இந்த கேள்வி இருந்தால் அதற்கான பதில் பூமியின் நிலையான சுழற்சியில் உள்ளது. இந்த மாற்ற முடியாத அசாதாரண நிகழ்வு பல மில்லியன் ஆண்டுகளாக துல்லியமாக நடந்து வருகிறது, அது நம் நாட்களை தீர்மானிக்கிறது, அதனை அடிப்படையாக வைத்துதான் உலகம் செயல்படுகிறது. இந்த அதிசயத்தின் பின்னால் உள்ள இயக்கவியலைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கடந்த காலங்களில் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்பதை நிரூபித்ததாக பண்டைய மக்கள் நம்பினர். நவீன வானியல் ஆராய்ச்சிகள், சூரியன் நம்மைச் சுற்றி வரவில்லை என்றும், அதற்கு பதிலாக, நமது கிரகம் அதன் அச்சில் சுழலும் போது சூரியனைச் சுற்றி வருகிறது என்பதைக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தின. இந்த இயக்கம் சூரியன் வானத்தில் நகரும் தோற்றத்தை உருவாக்குகிறது, இது நாம் நேரத்தை அளவிடுவதற்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. வான வடக்கிற்கு மேலே இருந்து பார்த்தால் பூமி எதிரெதிர் திசையில் சுற்றுவது போல் தோன்றும். இதன் விளைவாக, பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு பார்வையாளருக்கு, சூரியன் ஒரு மணி நேரத்திற்கு 15° (அல்லது நிமிடத்திற்கு 15') என்ற விகிதத்தில் மேற்கு நோக்கி நகர்வது போல் தோன்றுகிறது. வானத்தில் காணப்படும் அனைத்து வானப் பொருட்களுக்கும் இதுவே பொருந்தும். பூமி கிழக்கு நோக்கி சுழல்கிறது, அதனால்தான் சூரியன், சந்திரன், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் கிழக்கில் உதயமாகி, வானத்தின் குறுக்கே மேற்கு நோக்கி சென்று மறைகின்றன. உதாரணமாக நீங்கள் கிழக்கு நோக்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், கிரகம் உங்களை கிழக்கு நோக்கி கொண்டு செல்கிறது, அதனால் அந்த கிழக்கு அடிவானத்திற்கு அப்பால் உள்ள அனைத்தும் இறுதியில் பூமியின் கிழக்கு சுழற்சியுடன் தோன்றும். பூமியுடன் ஒப்பிடும்போது சூரியன் நிலையானது, அதே நேரத்தில் பூமி அதன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது. பூமி அதன் அச்சில் மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் சுழல்கிறது.எனவே, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போல் தோன்றுவது சூரியன் அல்ல, ஆனால் பூமி தான் சூரியனின் இயக்கத்தை அதன் சுழற்சி மூலம் வரையறுக்கிறது. இருப்பினும், இந்த அறிவியல் விதிக்கு விதிவிலக்கான இரண்டு கிரகங்கள் வீனஸ் மற்றும் யுரேனஸ். சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையுடன் ஒப்பிடும்போது வீனஸ் பின்னோக்கிச் சுழல்கிறது. மறுபுறம், யுரேனஸ் மேற்குத் திசையில் பெரும்பாலான கிரகங்களுக்கு எதிர் திசையில் சுழல்வது மட்டுமல்லாமல், அதன் அச்சு மிகவும் தீவிரமான அளவிற்கு சாய்ந்துள்ளது, அது சூரியனைச் சுற்றி அதன் பக்கத்தில் உள்ளது. ஒரு கோளாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், புளூட்டோ ஒரு பிற்போக்கு இயக்கத்தையும் கொண்டுள்ளது, அதாவது அதன் மேற்பரப்பில் நிற்கும் எவரும் மேற்கிலிருந்து சூரிய உதயத்தையும் கிழக்கில் அஸ்தமனத்தையும் பார்ப்பார்கள். பூமியானது சராசரியாக 107,200 km/h (66,600 mph) சுற்றுப்பாதை வேகத்தில் பயணிக்கிறது, இது சூரியனைச் சுற்றி 365.256 நாட்களில் ஒரு முழு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது, இது ஒரு சைட்ரியல் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும், காலெண்டரில் ஒரு கூடுதல் நாள் சேர்க்கப்படுகிறது, இது ஒரு லீப் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. மேலும் அதன் எதிரெதிர் திசையில் இயக்கம் மற்றும் அதன் அச்சு சாய்வு காரணமாக, பூமி வெவ்வேறு பருவங்களை அனுபவிக்கிறது. வட துருவம் சூரியனை நோக்கிச் செல்லும் போது, வடக்கு அரைக்கோளம் கோடைகாலத்தையும், தெற்கு அரைக்கோளம் குளிர்காலத்தையும் அனுபவிக்கிறது. தென் துருவம் சூரியனை நோக்கிச் செல்லும் போது நேர்மாறாகவும் நிகழ்கிறது. ஒவ்வொரு துருவமும் பெறும் சூரிய ஒளியின் அளவு மற்றும் உலகெங்கிலும் உள்ள வெப்பநிலை மாறுபாடுகள் அனைத்தும் சூரியனைச் சுற்றி பூமியின் செயல்பாடுகளின் விளைவுகளாகும். 

தனிஷ்டா பஞ்சமி



தனிஷ்டா பஞ்சமி சொல்லும் ரகசியம்: இந்த 13 நட்சத்திரங்களில் இறப்பு என்பது ஏன் சிக்கலானது?
ஒருவர் இறந்து போனவுடன், அவர் உறவுகள் இறந்தவர் எந்த வழியாக உயிரை விட்டார் என்று பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தையும் செய்வது உண்டு.

இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்கின்றன சித்தர் நூல்கள். ஒருவர் இறக்கும் வேளையில் எந்த நட்சத்திரம் என்பதை அறிந்து அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதில் முக்கியமானது தனிஷ்டா பஞ்சமி.
தனிஷ்டா பஞ்சமியின் நட்சத்திரங்கள் 13. அதன்படி இந்த 13 நட்சத்திரங்களில் இறந்து போனவர்கள், மேலுலகம் செல்வதற்குத் தடை ஏற்படும். இதை 'அடைப்பு' என்று பாமர மக்கள் சொல்கிறார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்துபோனவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு உண்டாகும். ரோகிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள். கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு அந்த ஆன்மா மேலுலகம் செல்ல முடியாமல் இங்கேயே இருந்து அலையும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள்
இப்படி அடைப்பு உள்ள நேரங்களில் இறந்துபோனவர்கள் மேலுலகம் செல்லாமல் அலைவதால் இறந்து போனவர் வீட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களுக்காக முறையான பரிகாரங்களைக் செய்யாவிட்டால் தனிஷ்டா என்ற துர்தேவதை இறந்தவர் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் என்றும் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் இறந்துவிட்டால் உடனடியாக நட்சத்திரம் பார்த்து அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்துவந்தார்கள். முக்கியமாக இந்த அடைப்பு காலம் முடியும்வரை வீட்டைப் பூட்டி வைத்திருப்பார்கள்.

ஒருவர் இறந்தவுடனே அவர் தங்கிய வீட்டை அடைத்துவிட்டு சுவரை இடித்து வேறுவழியாகப் பிணத்தை எடுத்துக் கொண்டு வருவது, கூரையைப் பிரித்து கொண்டுவருவது போன்ற கடுமையான பரிகாரமெல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காகக் கடைபிடித்திருக்கிறார்கள்.

ஒரு ஆன்மா எந்த நட்சத்திரத்தில் வெளியேறுகிறதோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே மேலுலகம் செல்வதாகச் சொல்லப்படுகிறது. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் தவிர மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் எந்தத் தடையும் இன்றி எளிதாக மேலுலகம் அடைகிறார்கள். அடைப்பு கொண்ட ஆன்மாக்கள் மட்டும் அமைதியின்றி அலைகின்றன என்று கருடபுராணமும் உறுதிப்படுத்துகின்றது.

மேலும் அடைப்பு காலத்தில் இறந்தவரை அன்றே சூரியன் மறைவதற்குள் தகனம் செய்துவிட வேண்டும். குளிகை காலம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அந்தப் பிணத்தைத் தகனம் செய்யும்போது தர்ப்பை அல்லது அருகம்புல்லால் ஆன 5 பொம்மைகள் செய்து கொள்ளி வைப்பவர் கையால் எரித்து விட வேண்டும். இல்லையெனில் ஒரு தேங்காயை மயானத்தில் உடைக்க வேண்டும். அசைவம் உண்பவர்கள் என்றால் கோழி அல்லது சேவலை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கட்டி கொண்டு போய் இடுகாட்டில் வேலை செய்பவரிடம் ஒப்படைப்பதுண்டு. அல்லது பிணத்துடன் புதைப்பதுண்டு.



ஆனால் தற்போதைய நவீன காலத்தில் வீட்டையெல்லாம் இடிப்பதில்லை. இறந்தவர் தங்கியிருந்த இடத்தில், அவர் அன்றாடம் உபயோகித்த பொருள்களை வைத்து, குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறார்கள்.

அடைப்பு காலம் முடிந்ததும் நதி மற்றும் கடல் தீரங்களுக்குச் சென்று ஏற்றிய விளக்கு, அவர் உபயோகித்த பொருள்களை நீரில் சேர்த்துவிட்டு சாந்தி செய்கிறார்கள். தற்போது இன்னும் எளிதாக அடைப்பு காலத்தில் ஒருவர் இறந்தால் ஒரு புதிய வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி அதை தானம் செய்து விடுகிறார்கள்.


அடைப்பு காலத்தில் இறந்தவருக்கு ஈமகாரியம் செய்பவர்களுக்கு எந்தத் தீங்கும் நேராதபடிக்கு உரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்று சித்தர் நூல்களும் கூறுகின்றன.

'இறந்து விட்டால் வீட்டை அடைக்க நாளை கேளாய்

இயல்பான அவிட்டமோடு சதயம் பின்னும்

சிறந்த உத்திரட்டாதி பூரட்டாதி

செப்பிடும் ரேவதியோடு ஐந்து நாளது

திறந்து சொல்வேன் தனிஷ்டா பஞ்சமியே யாகும்'

'வீட்டைக் குமிந்த நட்சத்திரங்கட்கு

வினைதீர மறுபக்கம் சுவர் இடித்துக்

கூடவே அவ்வழியாய் பிரேதந் தன்னைக்

கொண்டுவரில் வீடடைக்கத் தேவையில்லை.

தேடவே சாந்தி செய்யில் வீடிடிக்கத்

தேவையில்லை நேர்வழி யாயெடுக்கலாகும்'


Wednesday, 11 December 2024

வேலையில் சேர சுப நேரம் ஏன் தேவை?


புதிய வேலையில் சேர்வதற்கான நல்ல தேதி மற்றும் நேரம், பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்புதிய வேலையில் சேர்வதற்கான நல்ல தேதி மற்றும் நேரம், பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்.

 பழங்காலத்திலிருந்தே சுப நேரங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய கலாச்சாரத்தில், கருவுற்றது முதல் இறப்பு வரை பதினாறு சடங்குகளும் மங்கள நேரத்தில் செய்யப்படுகின்றன. பஞ்சாங்கம் சுத்திகரிக்கப்பட்ட பிறகு நிர்ணயிக்கப்பட்ட நேரம் "சுபகாலம்" என்று அழைக்கப்படுகிறது.

 இதனாலேயே சுபமுகூர்த்தத்தில் செய்யும் காரியம் இடையூறு இன்றி வெற்றியடையும் என்பது பொதுவாகக் காணப்படுகின்ற போதிலும், சுப திதி, நேரத்தைக் கருத்தில் கொள்ளாமல் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி இல்லை.

வேலையில் சேர சுப நேரம் ஏன் தேவை?
நீங்கள் ஒரு நல்ல நாள், நேரம் மற்றும் நட்சத்திரத்தில் உங்கள் வேலையில் சேர்ந்தால், நீங்கள் சில சிக்கல்களைத் தவிர்க்கலாம். தேதி மற்றும் நேரத்தை கருத்தில் கொள்ளாமல் பணியில் சேருபவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது அல்லது பதவி உயர்வு தாமதமாகிறது. எனவே, புதிய வேலையில் சேரும் போது, சுப நாள், நட்சத்திரம், திதி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

நல்ல தேதி, நாள் மற்றும் நட்சத்திரக் கூட்டத்தை எப்படி தேர்வு செய்வது?

மங்களகரமான தீதி 

துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, த்ரயோதசி மற்றும் பூர்ணிமா.

நாட்கள் 

திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.

சுப நட்சத்திரம் 

ரோகிணி, ஹஸ்தா, ஸ்வாதி, உத்தர பாத்ரபதா, உத்தரா பால்குனி மற்றும் உத்தராஷாதா.

சுப லகன் 

(மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் தவிர) மற்ற எல்லா ராசிக்காரர்களிலும் நீங்கள் வேலையில் சேரலாம்.

மங்களகரமான யோகம்

ப்ரீத்தி, ஆயுஷ்மான், சோபாக்யா, ஷோபன், சத்யா, த்ரிதி, சுகர்மா ஆகியோர் யோகா வேலைகளில் சேர வேண்டும்.

சுப கரன்

விஷ்டி, நாக் மற்றும் சகுனி தவிர, மற்ற கரன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு தகுதியுடையவர்கள்.

ஏற்றம் லக்னம்

லக்னம் ( மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ) தவிர , மீதமுள்ள லக்னத்தில் நீங்கள் ஒரு வேலையில் சேர வேண்டும், நீங்கள் நிலையான லக்னத்தில் சேர்ந்தால், அது நன்றாக இருக்கும். லக்னம் மற்றும் எட்டாம் வீடு லக்னத்தில் இருந்து தோஷ கிரகங்களிலிருந்து விடுபட வேண்டும்.

சந்திர சுத்திகரிப்பு 

பணியில் சேரும் போது, சந்திர சுத்திகரிப்பு பற்றி சிந்திக்க வேண்டும். இதற்கு ஜன்ம ராசியிலிருந்து 4,6,8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் இருக்கக்கூடாது.

கால் சுத்தி 

அமாவாசை, சங்கராந்தி, ஷ்ரத்தா பக்ஷா, ஹோலிகாஷ்டக் ஆகிய நாட்களில் நீங்கள் வேலைகளில் சேரக்கூடாது.

அபிஜித் முஹூர்த்தம்

இந்த முகூர்த்தம் ஒவ்வொரு நாளும் (புதன் கிழமை தவிர) கிடைக்கும். அதன் நேரம் உள்ளூர் நண்பகல் நேரத்திற்கு 24 நிமிடங்களுக்கு முன் தொடங்கி உள்ளூர் மதிய நேரத்திற்கு 24 நிமிடங்களுக்குப் பிறகு முடிவடைகிறது.

ராகு கால மற்றும் சௌகாரிய நேரம்

நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பதவி உயர்வில் சேரப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ராகு காலம் மற்றும் சாதகமற்ற சௌதியே முகூர்த்தத்தை தவிர்க்க வேண்டும். சுப சோகதியா முஹூர்த்தம் இருப்பதால் நீங்கள் புதிய வேலையில் சேரலாம்.

Tuesday, 10 December 2024

பகவானுக்கு உரிய பவள மோதிரத்தை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’

 பகவானுக்கு உரிய பவள மோதிரத்தை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’ 

’செவ்வாய் பகவானுக்கு உரிய பவள மோதிரத்தை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’ முழு விளக்கம் இதோ!



சிவப்பு நிற பவளம் ஆனது செவ்வாய் கிரகத்திற்கு உரிய ரத்தினமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கோபகாரகன், வேகமானவன், அன்புக்கு கட்டுப்பட்டவன், வார்த்தைகளில் அழுத்தமாக பேசவைக்கும் கிரகம் ஆக செவ்வாய் உள்ளார்.

சிவப்பு நிற பவளம் ஆனது செவ்வாய் கிரகத்திற்கு உரிய ரத்தினமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கோபகாரகன், வேகமானவன், அன்புக்கு கட்டுப்பட்டவன், வார்த்தைகளில் அழுத்தமாக பேசவைக்கும் கிரகம் ஆக செவ்வாய் உள்ளார்.

 
ரத்தினவியல் படி, ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை மற்றும் ராசிக்கு ஏற்ப ரத்தினத்தை அணிய வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஒவ்வொரு ரத்தினங்களை அணிவதற்கும் தனித்தனி விதிகள் உள்ளன. 












சிவப்பு நிற பவளம் ஆனது செவ்வாய் கிரகத்திற்கு உரிய ரத்தினமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கோபகாரகன், வேகமானவன், அன்புக்கு கட்டுப்பட்டவன், வார்த்தைகளில் அழுத்தமாக பேசவைக்கும் கிரகம் ஆக செவ்வாய் உள்ளார். செவ்வாய் பகவானின் அதிதேவதையாக முருக பகவானும், செவ்வாயினுடைய ஆளுமை மிக்க கடவுளாக ஆஞ்சநேயரும் போற்றப்படுகிறார். பூமி மற்றும் சகோதர காரர்கர் ஆன செவ்வாய் பகவான் ஆனவர் நமது பற்கள், ரத்தம், எலும்பு ஆகியவற்றின் அதிபதியாக உள்ளார். பொருள் காரகத்துவத்தில் வீடு, மனை, வாகனம், நிலங்கள், கனரக வாகனங்களை செவ்வாய் குறிக்கின்றது.

பவளத்தை முறையான விதிகளை பின்பற்றி அணிவதன் மூலம் செவ்வாய் பகவானின் பலம் கிடைக்கும். பவளம் அணிவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். யார் எப்போது, எந்த முறையில் பவளத்தை அணிய வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 

பவளத்தை எப்போது அணிய வேண்டும்?
பவளம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது என்பதால், செவ்வாய் கிழமையில் பவளம் அணிவது மங்களகரமான பலன்களை உண்டாக்கி தரும். அதே நேரத்தில், அதை அணிவதற்கு முன் சுத்திகரிப்பு செய்ய வேண்டியது அவசியம்.

பவளம் அணிவது எப்படி?
பவளத்தை செம்பு, தங்கம் அல்லது வெள்ளி ஆகிய உலோகங்களுடன் இணைத்து மோதிரமாக அணியலாம். செவ்வாய் கிழமைகளில் பவளத்தை நீர் மற்றும் பசும்பாலில் ஊற வைத்து மோதிர விரலில் அணிய வேண்டும். 7 முதல் 8 ராட்டிகள் கொண்ட பவளத்தை அணிவது நற்பலன்களை கொடுக்கும். 

யார் பவளம் அணிய வேண்டும்?
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் பவள மோதிரம் அணிவது வாழ்கையில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை கொடுக்கும். லக்னம் மற்றும் சிம்மம், தனுசு அல்லது மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் பவளம் அணியலாம். ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தாலும் பவளம் அணியலாம்.

பவளம் யார் அணியக்கூடாது?
அதே சமயம் மகரம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பவளம் அணிவதை தவிர்க்க வேண்டும். அதே போல் வைரத்தை பவளத்துடன் அணியக்கூடாது. அதே நேரத்தில், பவளம் அணிவதற்கு முன், உங்கள் கிரகங்களின் நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டும் மற்றும் ஜோதிடரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.


பக்குவப்பட்ட மனசு என்பது எது தெரியுமா?


பக்குவப்பட்ட மனசு என்பது எது தெரியுமா?

எந்த ஒரு செயலை செய்ய ஆரம்பித்தாலும் அதை பக்குவமாக கையாள தெரிந்திருக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் நிறைவும், நிம்மதியும் அமைதியும் அடைகிறோம் என்பதை உணர்ந்து உற்சாகமாக செயல்படும்போது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கும். அப்படி நம்பிக்கை பிறந்து விட்டால் அதுதான் பக்குவப்பட்ட மனது.

மேலும் நண்பர்களும் உறவினர்களும் இதை செய்வார்கள் அதை செய்வார்கள் என அவர்களிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பதை தவிர்த்து விட்டு, நாமாக அவர்களுக்கு உதவிகள் செய்ய தயாராகும் போது  நம்மாலும் எல்லோருக்கும் உதவ முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். அந்த தன்னம்பிக்கை தருவதுதான் பக்குவப்பட்ட மனது. 

சிலர் எப்பொழுதும் தான் பெரிய புத்திசாலி என மற்றவர்களுக்கு நிரூபிக்க முயற்சி செய்வார்கள். அல்லது அங்கீகாரம் கொடுங்கள்  என்று  ஒலி மறைவாக கேட்பார்கள். அவர்கள் நமக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை, நன்றாக மதிக்கவில்லை என்று எதிர்பார்த்து உறவினர்களுடனோ சுற்றத்தார்ளுடனோ    கோபமடைவார்கள்.

அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் கைவிடும் பொழுது நாம் அவர்களிடம் என்ன எதிர்பார்த்தோமோ அதை அவர்களுக்கே திருப்பி செய்தால் நம் மனதில்  உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி ஒரு நம்பிக்கை பிறக்கும். அதுதான் பக்குவப்பட்ட மனதிற்கு அடையாளம். 


மனம் மல்லிகையாய் இருக்கட்டும்!
இப்படி ஒவ்வொன்றையும் தளராத நம்பிக்கையுடன்  செய்து முடிப்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் தான் மனசுக்கு வேண்டியது. 

வண்ணங்கள் பூசாத சித்திரம் 

எண்ணங்கள் வெளிப்படாத  ஆசை

தோல்வி தொடாத வெற்றி   

பறித்து தொடுக்கப்படாத பூ

யுத்தத்தை சந்திக்காத தேசம்

உளியை சந்திக்காத சிற்பம்

தீயை சந்திக்காத தங்கம்

பிரசவத்தை சந்திக்காத பெண்மை

முழுமை பெற்றதாக சரித்திரம் இல்லை.

ஆக இவற்றையெல்லாம் சரியான முறையில் செதுக்கி  செப்பனிட இதையெல்லாம் நம்மால் செய்து முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையின் துணைகொண்டு அவற்றை எல்லாம் சீராக்கி  செப்பனிட்டால்தான் அவையெல்லாம் பக்குவம் அடையும். அந்த மாதிரியான பக்குவம்தான் மனசுக்கு வேண்டியது. அதைத்தான் பக்குவப்பட்ட மனசு என்பது.

 

Thursday, 5 December 2024

தயிர்சட்னி...

சமையல் தயிர் இருந்தால் போதும் இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னியை 10 நிமிசத்தில் செஞ்சுரலாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
நம் இந்திய உணவுகளில் தயிருக்கென்று எப்போதும் ஒரு தனியிடம் உள்ளது. அறுசுவை விருந்தாக இருந்தாலும் அதை தயிருடன் முடித்தால்தான் திருப்தியாக இருக்கும். தயிர் சுவையான பொருள் என்பதை விட அது ஆரோக்கியமான பொருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் தயிரை வைத்து ஒரு சட்னி செய்யலாம் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? உண்மைதான் தயிரை வைத்து சுவையான சட்னியை விரைவாக செய்யலாம். தயிர் சட்னி என்பது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சில நிமிடங்களில் செய்யக்கூடிய சைடிஷாகும். இந்த சுவையான சட்னியை செய்ய அதிகளவு பொருட்கள் தேவையில்லை, ஆனால் சுவையில் மற்ற எந்த சட்னிகளுக்கும் இது குறைந்தது அல்ல. இந்த சட்னி கொஞ்சம் காரமாக இருக்கும், எனவே தயிர் அதன் சுவையை சமன் செய்யும். இந்த சுவையான சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். "தோசை மாவு சேர்த்து செய்யப்படும் கையேந்தி பவன் சட்னி ரெசிபி..ட்ரை பண்ணுங்க..இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!" தேவையானப் பொருட்கள்: - 1 கப் தடித்த தயிர் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் மல்லி தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 பெரிய வெங்காயம் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - உப்பு தேவைக்கேற்ப - 1/2 கப் தண்ணீர் தாளிக்க: - 2 ஸ்பூன் எண்ணெய் - 1/2 ஸ்பூன் கடுகு - 1/4 ஸ்பூன் சீரகம் "தேங்காய் சட்னி அரைக்கும் போது இந்த 1 பொருளை சேர்த்த்து அரைங்க...அதுதான் சூப்பரான பாம்பே ஸ்டைல் தேங்காய் சட்னி!" செய்முறை: - தயிர் சட்னி செய்ய முதலில் தயிரில் மிளகாய் தூள் கலக்க வேண்டும். - அதன்பின் கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். - இப்போது நன்றாக கலக்கி க்ரீம் போன்ற அமைப்பைக் கொண்டு வந்து ஓரமாக வைக்கவும். - ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். - இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். - வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். - வெங்காயம் வதங்கியதும் அதில் தயிர் கலவையை சேர்க்கவும். - அதன் பிறகு சில நிமிடங்கள் மூடி வைத்து கொதிக்க வைக்கவும். திறந்து பிறகு கிளறவும் - மசாலாப் பொடிகள் பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து வேகவைக்கவும். - எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். - சட்னி சற்று கெட்டியாக இருக்க வேண்டும். இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.