jaga flash news

Saturday, 29 April 2017

உள்ளங்கை ரகசியம்

உள்ளங்கை ரகசியம்
தினசரி காலை எழுந்த உடன் அவரவர் இரு கரங்களையும் சேர்த்து உள்ளங்கையை காணவும்.
உள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்.
உள்ளங்கையில் சக்தி, சரஸ்வதி, லட்சுமி, என மூன்று அன்னையரும் வந்து தங்கும் மையமாகும்.
இவர்களை நினைத்து உள்ளங்கையை பார்த்தால் கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் நமக்கு கிடைக்கும்.
உள்ளங்கையை குளிக்கும்போதும், தலையில் எண்ணெய் தேய்க்கும் போதும் தவிர்த்து மற்ற நேரங்களிலும், எந்த காரணம் கொண்டும் தலையில் கையை வைக்க கூடாது .
நாம் பெற்றுள்ள கர்ம வினை பாவங்கள் பெருகிவிடும். அந்த வினை நம்மை வீழ்ச்சி அடைய வைக்கும்.
எனவே உள்ளங்கையை தலையில் படும்படி சூரிய நமஸ்கார வேளை, குளியல் வேளை, எண்ணெய் தேய்க்கும் போது தவிர மற்ற வேளையில் படவே கூடாது .
ஆண்களுக்கு வெள்ளிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது.
பெண்களுக்கு சனிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது .
செவ்வாய்கிழமை யாருக்குமே சூரிய நமஸ்கார வேளைக்கு பிறகு படக்கூடாது. அதற்கு முன் படலாம்.
பொதுவாக உள்ளங்கை சூரிய உதயத்திற்கு முன் தலையில் பட்டால் தோஷமில்லை.
உதயத்திற்கு பின் அவசியம் காரணமின்றி படாமல் பார்த்துக் கொள்ளவும்.
இரவில் உறங்கும்போது கூட தலையில் கை வைக்காம் தூங்குவதே சிறந்தது.
தலையில், கன்னத்தில் காதில் உள்ளங்கை வைத்து படுத்துறங்கினால் எந்நிலையில் உள்ளவராயினும் தரித்திரம் பிடிக்கும்.
எனவே கவனம் உள்ளங்கையை காலை எழுந்ததும் பார்த்து கண்களில் வணக்கத்துடன் ஒற்றிக்கொள்ளலாம்.

ஓம் நமோ நாராயணாய

ஓம் நமோ நாராயணாய
இந்து சமயத்தில் கர்மம் அல்லது வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்
ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
என்கிறது யசூர் வேதத்தில் காணப்படும், பிரகதாரண்யக உபநிடதம் 4.4.5
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன். இந்த வினைப்பயன், சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்), பிராரப்த் கர்மம் (செயல்படுகின்ற வினைப்ப்யன்) மற்றும் ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்) என மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது.

பித்ரு காரியம்

பித்ரு காரியம் செய்யும் போது பூணூலை வலது தோளில் போடுவது ஏன்!ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய அருமையான விளக்கம்:
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிராத்தம்.
தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, பக்தியோடு செய்ய வேண்டும்.
பித்ரு காரியங்களைச் செய்யும்போது சிகையை முடியாமல், யக்ஞோபவீதம் (பூணூல்)வலது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் (பூணூல்)இரண்டும் இருக்கின்றன.
சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள்.
நேராகவே கடவுளிடம் போகிற பிற மதத்தவர்களுக்குசிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ண வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு.
தெற்கு பித்ருக்கள் இருக்கும் பக்கம். 'தென்புலத்தார்' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா?
தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்.
' உத்தராயணம்' என்பதில் மூன்று சுழி
------------
'ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் '
------------
என்னும்போது இரண்டு சுழி 'ன' போட்டும் சொல்ல வேண்டும்.
'அயனம்' என்றால் மார்க்கம், வழி என்றும் அர்த்தம். 'உத்தர' என்பதில் வருகிற 'ர' காரத்தினால் 'ன' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது...
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்.
நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான்.
அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம்(பூணூல்) அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
"பிரதக்ஷணம் பண்ணுவது" என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கிப் போவது என்றுதான் அர்த்தம்.
முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:

மனைவி கணவனுக்கு எழுதி
வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:
*நான் எங்க அம்மா வீட்டுக்கு
குழந்தைகளோட போறேன்.*
திரும்பி வர
10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து
நாலு பாட்டிலும் சிகரெட்
பாக்கெட்டும் எடுத்தேன்.
--------------------------
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல
பக்கத்து வீட்டுக்கு
பேப்பர் போட்டாச்சான்னு daily
அவங்ககிட்ட வழிய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன் வேற.
-------------------------
சமையல் கட்டு
பக்கம்
போக
வேணாம்
ஸிங்க்கு
காவி கலருக்கு
மாத்தினீங்கன்னா
சும்மா இருக்க
மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு
விளக்கேத்துங்க
ரெண்டு ஸ்லோகம்
சொன்னா நாக்கு
வெந்துடாது
------------------------
வாக்கிங் போறப்போ
டீ ஷர்ட்
போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம்
ஜிப்பா கலர்ல
Free size சுடிதார்
டாப்ஸ் இருக்கு
அனிதா அன்னிக்கு
சிரிச்சா
---------------------
Food coupon
க்ரெடிட் கார்டு
எங்கிட்ட இருக்கு...
பீரோவ
உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும்
நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன்
நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க
*வேண்டாம்னுட்டு*
--------------------
பால் ஒரு வாரத்துக்கு
வேண்டாம்னுட்டேன்
அங்க ஸீன் க்ரியேட்
பண்ணாம
வெளில போய்
சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது
இடது புறமும் இருக்கு.
மாத்தி போட்டுட்டு
Uncomfortable லா
இருந்ததுனு ஆஃபீசுல இருந்து
புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு
அவுத்து போடறத
தண்ணில நனச்சு
காயப்போடுங்க.
வளத்தவங்கள
சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த
உடனே பால்கனில
நின்னுகிட்டு
பல் தேய்காதீங்க..
A.M. மா... P.M. மா...
Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க
medical report
பர்ஃபெக்ட்டா இருக்கு.
அந்த
லேடி டாக்டரை
பாக்கவேண்டிய
அவசியமில்லை.
-----------------
என் தங்கையின்
பிறந்தநாள்
போன மாசமே
நாம அட்டண்ட்
பண்ணியாச்சு.
முடிஞ்சிடிச்சி.
நடு ராத்திரில
விஷ் பண்றேன்
பேர்வழின்னு
வழிய வேணாம்
---------------
பத்து நாள்
wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
------------------
அப்றம்
என் தோழிகள்
எல்லாமே
Out of station. .
------------------
கட்டக் கடேசியா
ஒண்ணு.
ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம. !!!

வயாகரா ஜுஸ்

Image may contain: text

தாம்பூலம் தரும் முறைகள்:

தாம்பூலம் தரும் முறைகள்:
தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால் வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமமாவது தர வேண்டும். வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான் நிச்சயதாம்பூலம் அன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும். எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம்.
அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, புடவை அல்லது ரவிக்கைத்துணி.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை பாக்கு கொடுப்பதன் அர்த்தத்தை பார்த்தோம்.
மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு கணவனின் ஆயுளை விருத்தி செய்கிறது.
வளையல் மனம் அமைதி பெற.
கண்ணாடி கணவனின் ஆரோக்கியம் காக்க.
தேங்காய் பாவம் நீங்க, (மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது. )
பழம் அன்னதானப் பலன் கிடைக்க.
பூ மகிழ்ச்சி பெருக.
மருதாணி நோய் வராதிருக்க.
கண்மை திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க.
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப்பலன் அடைய வழங்குகிறோம்.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை
*1. மச்ச அவதாரம்*🐟
தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
*2. கூர்ம அவதாரம்*🐢
மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
*3. வராக அவதாரம்*🐗
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
*4. நரசிம்ம அவதாரம்*🦁
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .
*5. வாமண அவதாரம்*☂
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
*6.பரசுராம அவதாரம்*😡
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
*7. ராம அவதாரம்*🏹
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
*8. பலராம அவதாரம்*⛏
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
*9.கிருஷ்ணஅவதாரம்*💞
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
*10. கல்கி அவதாரம்*🏇
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும்
அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

"அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்"

"அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்"
ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.
கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
*********************************************************************************
ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை காண்கிறோம்.
ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்
4. வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
5. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
6. வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7. விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்
8. சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9. சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்
10. வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்
11. வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்
12. சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோய்யின் வீரியம் குறையும்.

நட்சத்திரப் பட்சி

ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-
வல்லூறு
அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை
திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்
காகம்
உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்
கோழி
அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்
மயில்
திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி
இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை
அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்
அரசு - 100% பலம்
ஊண் - 80% “
நடை - 50% “
துயில் - 25% “
சாவு - 0% “
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
வளர்பிறை - படுபட்சி நாட்கள்
வல்லூறு - வியாழன், சனி
ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
காகம் - திங்கள்
கோழி - செவ்வாய்
மயில் - புதன்
தேய்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு -செவ்வாய்
ஆந்தை -திங்கள்
காகம் -ஞாயிறு
கோழி -வியாழன், சனி
மயில் -புதன், வெள்ளி
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-
வளர்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன், திங்கள்
காகம் - வியாழன்
கோழி - வெள்ளி
மயில் - சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - வெள்ளி
ஆந்தை -ஞாயிறு
காகம் -ஞாயிறு, செவ்வாய்
கோழி - திங்கள், புதன்
மயில் -வியாழன்
தேய்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -வெள்ளி
ஆந்தை - வியாழன்
காகம் -புதன்
கோழி - ஞாயிறு, செவ்வாய்
மயில் - திங், சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன்
காகம் - வியாழன்
கோழி - திங்கள், சனி
மயில் -வெள்ளி
இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.
அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.
இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.
அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.
தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.
படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.
நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.
பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.
அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
வல்லூறு - வளர்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி
வல்லூறு - தேய் பிறை
நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி
ஆந்தை - வளர்பிறை
நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி
ஆந்தை - தேய்பிறை
நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்
காகம் - வளர்பிறை
நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்
காகம் - தேய்பிறை
நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி
கோழி - வளர்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு
கோழி - தேய்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு
மயில் - வளர்பிறை
நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
மயில் - தேய்பிறை
நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.
நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.
“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.
பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.
நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.
பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.
ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.
பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.
1) உடலிலிருந்து நோய் நீக்குதல்
2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல்லுதல்
9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்..

அகல் விளக்கு

அகல் விளக்கு, எப்படி நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது என்பதை, நாம் இருளில் இருக்கும்போதுதான் உணரமுடியும். அதுபோல், தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார் என்பதை, அவர்கள் இல்லாதபோதுதான் உணரமுடியும். அதனால், தாய்மையை எப்போதும் போற்றுங்கள்.
* உன்னை, மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சி அடையாதே..! அது போல், உன்னை மற்றவர்கள் தூற்றும்போது மனம் வருந்தாதே..!
* ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால், மாறாக நாம் மற்றவரின் மேல் செலுத்தும் 'அன்பு' அவர்களை வளர்க்கும் குணம் கொண்டது. எனவே, நீங்கள் எப்போதுமே மற்றவர்களை வளர்க்கும் குணம் உடையவர்களாக இருங்கள். தேவையற்ற ஆசைகளால் துன்பம் வருமே தவிர, நன்மை விளையாது.
* நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான விஷயங்களையும் பழகக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மை தயார்ப்படுத்திக்கொள்வது நல்லது.
* தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தைப் பயிற்றுவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுணுக்கங்களை மேலும் கூறி, புரியவைக்கலாம். ஆனால், இது நல்லது, இது கெட்டது என்று பகுத்து உணராதவனை... அந்த ஆண்டவனாலும் திருத்தமுடியாது.
* குடும்பம் என்பது பசுமையான மரத்தைப் போன்றது. அதில் மனைவி என்பவர் 'வேர்'. கணவன் என்பவர் ' அடிமரத்தண்டு'. பிள்ளைகள் என்பவர்கள் 'இலைகளும் மலர்களும்'. அந்த மரத்தில் விளையும் சுவைமிகுந்த பழங்கள்தான் 'அறச்செயல்கள்'. மரமானது பல்வேறு விதமான ஜீவராசிகளுக்கும் பயன் அளிப்பதுபோல், நமது குடும்பம் என்னும் மரம் மற்றவர்களுக்குப் பயன் தரவேண்டும்.
* பாலுக்குள் இருக்கும், நெய் நம் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. அவ்வாறே, உண்மையான, பக்தியானால் மட்டுமே இறைச் சக்தியை உணரமுடியும்.
கிருபானந்த வாரியார்
* நெருப்பு எரியும் இடத்தில்தான், புகை கிளம்பிக் கொண்டு இருக்கும். நெருப்பினால், நமக்குத் தேவையானவற்றை சூடுபடுத்திக்கொள்ளலாம். மற்றதேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், புகையினால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை.
* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்கு பயிர்களை திருப்பித் தருகின்றன. அதைப்போலவே, ஒருவர் செய்யும் நன்மையும் தீமையும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவகையில் பல மடங்காகப் பெருகி, அவரிடமே திரும்ப வந்துசேரும்.
* சிலர் எதற்காகப் பேசுகிறோம், சிலர் எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம் என்று வரைமுறையில்லாமல் பேசி விடுகிறார்கள். இதனால் எந்த ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை. ஆகவே, முடிந்தவரை அமைதியாக இருங்கள்.
* நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் செப்புப் பாத்திரத்தித்தில் களிம்பு ஒட்டியிருந்தால், அதை நாம் நன்றாகத் துலக்கிப் பயன்படுத்த வேண்டும். இதுவே நெல்லாக இருந்தால், உமியை விலக்கி, சமைக்கப் பழகவேண்டும். அதுபோல், மனிதர்களாகிய நாம் தீமைகளை விலக்கி, நன்மைகளைச் சிந்தித்து வாழவேண்டும்.
* பறவைகளுக்கு இரு சிறகுகள், புகைவண்டிக்கு தண்டவாளங்கள், மனிதனுக்கு இரு கால்கள் மற்றும் இரு கண்கள் இருப்பது போல், மாணவர்களுக்கு இரு குணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும். ஒன்று அடக்கம், இன்னொன்று குருபக்தி. இந்த இருகுணங்களும் உள்ள மாணவன்தான் முன்னேற்றம் அடைவான்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஜுவாலை மேல்நோக்கி எரிந்து கொண்டிருப்பதுபோல், உயர்ந்த குணத்தை உடையவர்களைக் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையேல், மனதை உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் அற நூல்களைப் படியுங்கள். அதுவே நம்மை நல்வழிப்படுத்தும்.
* பிறருடைய குற்றங்களை அலசி, ஆராயக்கூடாது. நாம் செய்த குற்றங்களை மூடிமறைக்கவும் கூடாது.
* பணிவு என்பது மனித வாழ்க்கையின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்த நிலையை அடைகிறது.

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?அறிவியல் பூர்வமான விளக்கம்.

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?அறிவியல் பூர்வமான விளக்கம்.
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.
அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

விரதம் vs கிழமை

இறைவனை விரதமிருந்து வழிபடுவது சிறப்பை தரும்.
எந்த கிழமைகளில் விரதமிருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து வழிபடுவது இன்னும் சிறப்பு.
விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று சிலர் நினைப்பது உண்டு.
நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும்.
ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது.
எந்த கிழமைகளில் விரதமிருந்தால் எந்த பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
விரத பலன்கள் ....
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்
திங்கள்கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.
செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.
புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
வியாழக்கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

காஞ்சிப் பெரியவர் கண்ணதாசன்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு
படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது
மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா
தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால்
கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த
நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும்
கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து
வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன
மாத்திரத்தில்
‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர்
கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும்
வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல்
மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக்
கூறினார்.
தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி,
கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய்,
அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு,
மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’
என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர,
தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும்
துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின்
கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப்
பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன்
நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின்
சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில்
நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம்
அது.
விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர
மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில்
படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப்
பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை
எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத்
தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர்,
தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல்
கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை
மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான்.
அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?
கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல்
திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.
வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா.
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர்
கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார்.
இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி
விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.
நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில்
விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு,
மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு
திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன்
நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ
என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின்
படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது
கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார்.
தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி
படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக்
கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.
நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர்
தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட
கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப்
பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர்,
தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம்
செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின்
விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.
திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது
கண்ணதாசனின் வார்த்தைகள் –
‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை?
போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப்
புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும்
சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவ
மனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச்
செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த
அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து
அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும்,
பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில்
ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.
அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை
நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார்,
கண்ணதாசன். அக்கவிதை இதோ :
——
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம், கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம்,
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
—–
கவிதை வரிகளைக் கண்ட பெரியவர்,
கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி
அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ,
அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா
இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி,
‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை
எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள,
அக்கணமே
கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்”
அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து
மணம் வீசியது.

கிட்னியில் கல்

 தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது
  பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.
பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று. இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் சமயத்தில் பதிவிட்டிருந்தேன்.

ஜீவ காருண்யம்

நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு,
🌼மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;
🌼பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன?
🌼 என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.
🌼நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,
🌼இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
🌼வளர்பிறை தேய்பிறை
அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.
🌼தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:
🌼1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
🌼2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
🌼3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
🌼4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
🌼5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
🌼6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்
🌼7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
🌼8.சிதம்பரம்
🌼9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
🌼10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
🌼11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
🌼12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
🌼13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
🌼14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் ?ருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
🌼15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
🌼16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)
🌼18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
🌼19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
🌼20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
🌼21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
🌼22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
🌼23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
🌼24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
🌼25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

🌼 26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
🌼27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

🌼28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
🌼29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
🌼30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
🌼31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
🌼32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.
🌼33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்.
🌼34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்)
🌼35.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்=உற்சவராக!!! அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)
🌼36.சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும்
புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று!!!
🌼37.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகம்,பெருமா நல்லூர் சாலை,மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்,மேட்டுப்பாளையம்,திருப்பூர்.
🌼38.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
🌼39.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை