jaga flash news
Wednesday, 30 June 2021
சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி ..
Sunday, 27 June 2021
தொழில் பிரச்சினைகள் தீரும்
துர் சக்திகள் விலகி, நல்ல சக்திகள் வந்தடையும்..!!
ஆண் ராசிகள்,பெண் ராசிகள். .
Friday, 25 June 2021
நீர்கொண்டர் பரம்பரை தலை கட்டு...
இன்பத் தமிழ்...!
Tuesday, 22 June 2021
கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.....
Monday, 21 June 2021
ஒரு நாயகமாய் - பாசுரம்
Sunday, 20 June 2021
ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் போக்கும் வழிபாடு.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே.
தகப்பனின் கண்ணீரை
கண்டோரில்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என்னுயிர் அணுவில்
வரும் உன்னுயிர் அல்லவா.
மண்ணில் வந்த நான்
உன் நகல் அல்லவா.
காலங்கள் கண்ட பின்னே
உன்னை கண்டேன்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே.
கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்.
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்.
அம்பாரியாய் ஏற்றிக்கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்.
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்.
வளர்ந்தவுமே யாவரும்
தீவாய் போகிறோம்.
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்.
நமக்கெனவே
வந்த நண்பன் தந்தை.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
கசகசா மருத்துவ குணங்கள் பயன்கள்.....
தினமும் 6 மிளகை மென்று தின்றால் வைரஸ் நோய்கள் உங்க கிட்ட நெருங்கவே நெருங்காதாம்
தினமும் 6 மிளகை மென்று தின்றால் வைரஸ் நோய்கள் உங்க கிட்ட நெருங்கவே நெருங்காதாம்!
இந்தியாவின் தனித்துவமான மசாலா பொருட்களில் மிளகுக்கு என்று தனி இடம் உள்ளது. இந்தியாவின் வரலாறுக்கும், மிளகுக்குமே சுவராஸ்யமான தொடர்பு உள்ளது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் மிளகை கொள்முதல் செய்யத்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.
அந்த அளவிற்கு அனைத்து நாட்டினரையும் ஈர்க்கும் குணம் மிளகுக்கு உள்ளது. இது கொடி வகையை சேர்ந்ததாகும். இதன் சிறுகனிகள் பூத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் அறுவடைக்கு வரும்.
இது தவிர மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை ‘கருப்புத் தங்கம்’ என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக் காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
நெஞ்சுச்சளிக்கு
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் 6 மிளகை மென்று தின்பது சிறந்தது.
தொற்று நோய்
தினமும் 6 மிளகை மென்று தின்றால் உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மலட்டு தன்மை
இன்று நாம் உண்ணும் உணவுகள் விஷத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. இவற்றை உண்பதால் சில ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்துகிறது. தினமும் 6 மிளகை மென்று தின்றால் ஆண்களின் மலட்டு தன்மையை போக்க வல்லது.
பற்கள்
தினமும் 6 மிளகை மென்று தின்றால் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக உள்ளது.
ரத்த அழுத்தம்
நாற்பது வயதை நெருங்குபவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்த உள்ளது. தினமும் 6 மிளகை மென்று தின்றால் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள முடியும்.
மிளகின் மருத்துவ குணங்கள்:
- கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன
- மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.
- மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
- உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
- இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
- உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது
Saturday, 19 June 2021
சடாரி !
Thursday, 17 June 2021
தினமும் காலையில் 2 கிராம்பு… எவ்ளோ நன்மை தெரியுமா?
ஆரோக்கிய நன்மைகள் தரும் கிராம்பு தினமும் இரண்டு சாப்பிட்டால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் இயற்கை பொருட்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எவ்வளவுதான் மருந்துகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் இயற்கை பொருட்களில் உள்ள நலன்களை பெறுவது தான் உடலுக்கு உண்மையான சக்தியை கொடுக்கும்.
அந்த வகையில், இந்திய மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் இயற்கையின் அதிக ஆரோக்கியம் நிறைந்த கிராம்பு அதிக நன்மைகளை கொடுக்கிறது. கிராம்பில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலை நோயிலிருந்து பாதுகாக்கவும், நோய்ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது. கல்லீரல் தான் உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. மேலும் கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். மேலும் கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பல்வலி உள்ளவர்கள் கிராம்பு எண்ணெய் பயனபடுத்தினால் பல்வலியை தீர்க்கும். பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தீர்க்கும்.
கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு திறன்களையும் கொண்டுள்ளது. வலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் மேலும் தலைவலி உள்ளவர்கள், கிராம்பை பயன்படுத்தாலம். பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும். கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளதால், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
காலையில் எழுந்தவுடன் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும். பற்களின் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம். நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்த்து உண்ணும்போது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன