jaga flash news

Saturday, 31 October 2015

ராமாயணத்தில் கேயோஸ் தியரி

ராமாயணத்தில் கேயோஸ் தியரி

கேயோஸ் சித்தாந்தத்தின் படி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பு கூட ஒரு புயலுக்கு காரணமாக இருக்க முடியும் அல்லது வந்திருக்க வேண்டிய புயலை வரவிடாமல் தடுத்திருக்க முடியும் என விளக்குகிறது

ராமர் ராவணனை ஏன் கொன்றார்?

அவன் சீதாதேவியை கவர்ந்து சென்றதால் கொன்றார்.

சீதாதேவியை ராவணன் ஏன் கவர்ந்தான்?

சூர்ப்பணகையின் போதனையால் கவர்ந்தான்.

சூர்ப்பணகை ஏன் அவ்வாறு போதித்தாள்.?

ராமர் அவள் காதலை நிராகரித்ததால்.

ராமரிடம் அவள் எப்படி காதல் கொண்டாள்?

ராமரை வனத்தில் கண்டதால்.

ராமர் வனம் வர காரணம்?

கைகேயியின் வரம்.

கைகேகி ஏன் அந்த வரங்களை கேட்டாள்?

ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்ததால்.

தசரதர் ஏன் அவ்வாறு அறிவித்தார்?

தன் காதோரம் ஒரு முடி நரைத்திருந்ததை கண்டு தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்தார்.

தசரதரின் காதோரம் முடி நரைப்பதற்கும் ராவண சம்ஹாரத்திற்கும் இருக்கும் இந்த மறை முக தொடர்பு தான் கேயோஸ் சித்தாந்தம்.

இந்த மறைமுக தொடர்பை உணர்ந்ததால் தான் ராமாயணத்தை பாடிய எல்லா பெருங்கவிகளும் தசரதருக்கு முடி நரைக்கும் காட்சியை பாடியிருக்கிறார்கள்

காளிதாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று ராவணன் செய்த பாவத்தால் தசரதருக்கு முடி நரைத்தது என பாடினாராம்.

நம் இதிகாசங்களில் பொதிந்துள்ள இது போன்ற அற்புதங்களை உணராதவர்கள் சிலர் மேற்கத்திய விஞ்ஞானம் புரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் உயர்ந்ததெனவும் இந்திய ஞானம் தாழ்ந்தது எனவும் கூறி அந்நியர்களின் துதிபாடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் நகைப்புக்கு உரியவர்களே.

Friday, 30 October 2015

கட்டியணைத்தல்.........................

கட்டிப்பிடிப்பதும், முத்தமிட்டுக்கொள்வதும் ஓர் சிறந்த வைத்தியம் தான் . இந்த கட்டிப்பிடி வைத்தியமும், முத்தமிட்டுக்கொள்வதும் மன அழுத்தம், இதய நலன், தலைவலி, இரத்த அழுத்தம், உடல் எடை குறைப்பு போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

மன அமைதி

தம்பதி இருவர் கட்டியணைத்துக்கொள்ளும் போது மன இறுக்கம் குறைகிறதாம். இதனால் மனநிலை மேலோங்குகிறது. மேலும் இதனால் உடலும், மனதும் லேசாக இருப்பது போன்று உணர முடிகிறது.

அறிவியல் ரீதியாகவே கட்டிப்பிடிப்பது இதயத்திற்கு ஓர் நல்ல வைத்தியம் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் விருப்பமானவரை அமைதியான சூழலில் கட்டியணைத்துக்கொள்வதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கோளாறுகள் குறையும்.

முத்தமிட்டுக்கொள்வதும், கட்டியணைத்துக்கொள்வதும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. இதன் மூலம் இரத்தத்தில் "எப்பிநெப்பிரின் இயக்குநீர்"(epinephrine) வெளிபடுவதால், இதயத்துடிப்பு சீராகி மன அழுத்தம் சரி ஆகிவிடும்.

இரத்த அழுத்தம்

முத்தமிட்டுக்கொள்ளும் போது இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த அழுத்தம் குறையும். இது அறிவியல் பூர்வமாகவே நீருபிக்கப்பட்டுள்ளது

தலைவலியை போக்கும்

தலைவலியில் இருந்து விடுபட சிறந்த இயற்கை நிவாரணி கட்டியணைத்துக்கொள்வது தான். இதற்கு காரணம் இரத்த அழுத்தம் குறைவதும், இரத்த நாளங்கள் விரிவடைவதும் தான். இதனால், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியும் கூட குறையும்.

உடல் எடை குறையும்

ஒருமுறை முத்தமிட்டுக்கொள்வதால்  உடலில் 8-16 கலோரிகள் கரைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறையும்.

உடற்பயிற்சி

தினமும் ஐந்து நிமிடம் முத்தமிட்டுக்கொள்வது ஓர் சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது, கழுத்து, தாடை மற்றும் முக தசைகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமைகிறது.

இருவர் கட்டியணைத்துக்கொள்ளும் போது உடலில் ஆக்ஸிடோசின் உருவாகி வெளிப்படுகிறது. இந்த ஹார்மோன் ஆல்கஹால் போன்ற போதைக்கு அடிமையாகுவதை குறைக்க உதவுகிறது.

நாவல்

நாவல் பழத்தின் துவர்ப்புச்சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச்சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத்தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப்பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப்போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப்போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப்பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப்போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்பது நல்லது.

புளி

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் புளியும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் தான் அன்றாடம் நாம் சமைக்கும் சமையலில் புளியையும் சேர்த்து கொள்கிறோம். புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி சருமம் மற்றும் முடிக்கும் மிகவும் நல்லது.

புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப்பராமரிப்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொலிவான சருமம் பெற...

புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். மேலும் தொடையில் உள்ள செல்லுலைட்டை நீக்க சிறிது புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் சிறிது பேக்கிங் சோடா தூவி, பிரஷ் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் செல்லுலைட் மறையும்.

இறந்த செல்களை போக்க...

புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 2 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

ப்ளீச்

புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

முடி உதிர்தலை தடுக்க...

முடியின் மயிர்கால்களை வலிமையாக்க புளிச்சாற்றினைக்கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் 15 நிமிடம் கட்டி, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

கழுத்தில் உள்ள கருமையை நீக்க...

பலருக்கும் கழுத்தைச்சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.

சரும சுருக்கம்

புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத்தோற்றம் வருவதைத்தடுக்கும். அதற்கு புளிச்சாற்றில் தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

நெட்டி..................... இது நல்லதா? கெட்டதா?

தூங்கி எழுந்தவுடன் மிக ஆனந்தமாக கைவிரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்புகளிலும் நெட்டி முறிப்பது சிலரது வழக்கம். இன்னும் சிலர் மூளையைக்கசக்கக்கூடிய வேலைகளுக்கு இடையில் அடிக்கடி நெட்டி முறிப்பதைப்பார்த்திருப்போம். இது நல்லதா? கெட்டதா?

இதுகுறித்து அமெரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபு­ணர் ஒருவர்  கூறுகையில்,

“விரல் எலும்புகளின் மூட்டுகளுக்கு இடையில் சுற்றி வரும் ஒரு வகையான திரவமே உங்களை நெட்டி எடுக்கத்தூண்டுகிறது. டென்ஷன் அதிகமாக இருப்பவர்களும் நெட்டி முறிப்பார்கள். மன அழுத்தம் உள்ளவர்களும், மனநோய் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

எப்போதோ ஒன்றிரண்டு முறை நெட்டி முறிப்பதால் மிகப்பெரிய விளைவு எதுவும் ஏற்படாது என்றாலும் அடிக்கடி தொடர்ந்து செய்யக்கூடாது. எந்தப்பழக்கமுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்தில் தான் முடியும். இரண்டு எலும்பு மூட்டுகளின் இடையில் உள்ள தசைநார்களே மூட்டுகள் உராய்வதைத்தடுக்கின்றன. தொடர்ந்து அவ்வாறு செய்யும் போது இந்த தசைநார்கள் கிழிந்து விடும் அபாயம் உள்ளது. விரல்களை அளவுக்கு அதிகமாக மடக்கும் போது தசைநார்களின் வேலையை முடக்கிவிடும். அதுவே ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் வரக்காரணமாகிவிடும்” என்று கூறினார்.

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

தோடு‬:

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும்.

மோதிரம்‬ :

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

செயின்‬ , ‪நெக்லஸ்‬ :

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி‬ :

கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்,படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியில் இரத்த  ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

‎வளையல்‬ :

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம்‬ :

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்.


மூக்குத்தி‬ :

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சம்மந்தமான நோய்கள் குணமாகும் .

‎கொலுசு‬ :

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி‬ :

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்களை தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும் .

மூட நம்பிக்கையை பற்றி தெரிந்ததும் தெரியாததும்..!

1.உங்கள் வீட்டில் நீங்கள் தூங்கும் போது , கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.

2.சித்தப்பா, பெரிப்பா, மாமனார் வீட்டில் தூங்கும் போது தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.

3.வெளியூருக்கு செல்லும் போதும், வெளியூரில் தங்கும் போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.

4.கல்யாணம் ஆகாதவர்கள், நான்கு முழம் வேட்டி தான் கட்ட வேண்டும்.

5.திருமணம் ஆனவர்கள் தான் எட்டு முழம் வேட்டி உடுத்தவேண்டும்.

6.பிரும்மச்சாரியும், திருமணம் ஆனவர்களும் எக்காரணத்தைகொண்டும், சாயம் பூசிய, கலர் வேட்டிகள் கட்டக்கூடாது.

7.கிரிவலத்தின் போது , நாம் வெறும் காலுடன் நடந்து செல்ல வேண்டும். அப்போது தான் நமக்கு முழு பலன் கிடைக்கும்.

8.ஆலயத்தில் அங்க பிரதட்சிணம் செய்யும் போது யாரிடமும் பேசக்கூடாது. வேகவேகமாக செய்தால் பாவம் வரும்.

ஆகவே பேசாமல் மெதுவாக,நடக்க வேண்டும்.

9.பிள்ளையாருக்கு – ஒரு தடவை ,சூரியனுக்கு – இரண்டு தடவை, சிவனுக்கு – மூன்று தடவை, விஷ்ணுவிற்கு – நான்கு தடவை, அம்மனுக்கு – ஐந்து தடவை, அரச மரத்துக்கு – ஏழு தடவை சுற்றி வந்து வணங்க வேண்டும் ..

10.பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.

11.திருமணம் ஆனவர்கள், தங்கள் உடம்பில் சந்தனத்தை பூசிக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், அதாவது பிரம்மச்சாரியாக இருக்கும் போது சந்தனத்தை உடம்பில் இட்டுக்கொள்ளகூடாது

Thursday, 22 October 2015

மனைவி எப்படி இருக்க வேண்டும் ?

மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.
பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.
எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.
பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.
சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்".

கோவிலில் கூடாது

1.கோவிலில் தூங்க கூடாது ..
2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...
3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
6.குளிக்காமல் கோவில் போககூடாது ...
7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ...
10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
11.படிகளில் உட்கார கூடாது .
12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர
கூடாது .
13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .
14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .
15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில்
தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும்
செல்லக்கூடாது
22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.....

Saturday, 17 October 2015

" விளக்கு ஏற்றும் விதம் "

" விளக்கு ஏற்றும் விதம் "
தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்
வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்
புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாறு தீரும்
புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்
சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்
பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்
கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்
மகாலட்சுமிக்கு பசும் நெய்யில் விளக்கு ஏற்ற வேண்டும்
பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்
நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்
விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்
வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்
ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்
கிழக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்
வடக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்
மேற்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது. சனி தோஷம் விலகும்
அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;

Friday, 16 October 2015

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெற்றிலை வைத்து வழிபடுட வேண்டிய வழிமுறைகள்…!

மேஷம் :

வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.


ரிஷபம் :

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

மிதுனம் :

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கடகம் :

வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.

சிம்மம் :

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

கன்னி :

வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

துலாம் :

வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

விருச்சிகம் :

வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

தனுசு :

வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

மகரம் :

வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

கும்பம் :

வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

மீனம் :

வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.

Monday, 12 October 2015

திசாசந்திப்பும் ( ஏக திசை ) திருமண பொருத்தமும் !

திருமண பொருத்தம் காண வரும் பெற்றோர்கள் தற்பொழுது திசா சந்திப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டா ? இதனால் திருமணதிற்கு பிறகு தம்பதியருக்குள் பிரச்சனைகள் வருமா ? ஒரே நேரத்தில் தம்பதியர் இருவரும் ஒரு திசை நடைமுறையில் இருந்தால் திருமண வாழ்க்கையில் இன்னல்கள் வரும் என்று கூறுகின்றனர் எனவே தம்பதியரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு உள்ளத என்பதை சொல்லுங்கள் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கின்றனர், திருமண பொருத்ததில் ஏக திசை சந்திப்புக்கு முக்கியதுவம் தருவது அவசியம் என அனைத்து ஜோதிடர்களும் அறிவுறுத்துகின்றனர், அதாவது திருமணம் செய்வதற்கு முன் வது,வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஜாதக பொருத்தம் கிடையாது, திருமணம் செய்தால் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையிலும், தொடர்ந்தும் வரும் பொழுது நன்மை நடைபெறாது என்பது பல ஜோதிடர்களின் வாதமாக இருக்கிறது, சமீப காலங்களில் இது அதிக அளவில் மிகைபடுத்தபட்டு, பொதுமக்களிடம் சென்று இருக்கிறது, திசாசந்திப்பு ( ஏக திசை ) பற்றியும் அதன் உண்மை நிலையை பற்றியும் சற்று இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால் நன்மையை தாராது, இன்னல்களை தரும் என்ற வாதமே தவறானதாக கருதுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை எவ்வித பலன்களை  ( எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற அடிப்படை விஷயம் ) வழங்குகிறது என்பது தெரியாத பொழுதே இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்புண்டு அன்பர்களே !

பொருத்தம் காண வரும் ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும், ஆணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, பெண்ணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற தெளிவு பெறுவது மிக மிக அவசியமாகிறது, இருவருக்கும் நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை நடத்தினால், தம்பதியர் இருவருக்கும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளே நடைபெறும், ஒரு வேலை பாதிக்கபட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், பொதுவாக இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவது இன்னல்களையே தரும் என்று முடிவு செய்வதும், பொருத்தம் இல்லை என முடிவு செய்வதும் ஜாதக கணிதம் பற்றிய தெளிவும், ஜோதிட ஞானமும் அற்றவர்கள் செய்யும் காரியமாகவே படுகிறது.

Friday, 9 October 2015

இஞ்சி

இஞ்சி  உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப்பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சி மருத்துவ பலன்கள் பற்றி கீழே பார்ப்போம்.

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத்தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

Tuesday, 6 October 2015

சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம்.
இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.
வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். குடற்புண்களை ஆற்றும்.
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

Monday, 5 October 2015

வாஸ்து குறைகள்

வாஸ்து குறைகள் உள்ள வீட்டில் மாற்றங்கள் செய்யும் போது எந்தப்பகுதியில் மாற்றம் செய்கிறோமோ அந்த பகுதிக்கு உரிய கோவிலுக்கு சென்று வந்து மாற்றம் செய்வது நலம்.
குறைகளை நீக்க சீக்கிரம் வழி முறைகள் பிறக்கவும் சென்று வரலாம்.
கிழக்கு - சூரியன் - ராமேஸ்வரம்
தெற்கு - செவ்வாய் - பழனி
வடக்கு - புதன் - மதுரை
வடமேற்கு - சந்திரன் - திருப்பதி
தென் கிழக்கு - சுக்ரன் - ஸ்ரீரங்கம்
வடகிழக்கு - குரு - திருச்செந்தூர்
மேற்கு - சனி திருநள்ளாறு
தென்மேற்கு - ராகு - காளஹஸ்தி
பிரம்மஸ்தானம் - கேது - காளஹஸ்தி

அனுஷத்தின் மகிமை

அனுஷத்தின் மகிமை
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் அக்கறையுள்ளவர்கள். . இருப்பதுண்டு. நற்குணங்கள் நிறைந்தவர்கள். தாய்-தந்தையை மதிப்பவர்கள். முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்கள்.தங்கள் லட்சியத்தை அடையும் வரை உழைத்துக் கொண்டே இருப்பார்கள்
.
அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் வீற்றிருக்கும்போது, விண்வெளி மண்டலத்தில், லட்சுமி காந்தக் கதிர்கள் தோன்றுகின்றன. சந்திர மூர்த்தி, அனுஷத்தில் இருக்கும்போது அதாவது அனுஷ நட்சத்திர நாளில், வேதலட்சுமி கேந்த்ரக் கதிர்கள் எழுகின்றன.
அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் உலா வரும் நாளில், அதாவது அனுஷத்தில் சூரிய மூர்த்தி நிலை கொள்கையில், பாஸ்கர சக்திகள் நிறைந்த இடங்களில், சூரியக் கதிர்கள் மூல மூர்த்தியின் மேல் படுகின்ற தலங்களில், காந்த சக்திகள் நிறைந்த நாகலிங்கப் புஷ்பத்தால் சுவாமியை அர்ச்சித்து, வில்வ தளத்தால் மஹாலட்சுமியைத் தோத்தரித்துத் தாமரை இலைகளில் சர்க்கரைப் பொங்கல் தானம் அளிப்பது இல்லத்தில் பலகாலமாக இருந்து வரும் கடன் கஷ்டங்களால் உருவாகி உள்ள எழும் சோக நிலை மாறிட உதவும்.
சந்திரன் அனுஷத்தில் உறையும் அதாவது அனுஷ நட்சத்திர நாளில், சந்திர மூர்த்தியை வில்வமும் தாமரையும் கலந்த புஷ்பங்களால் அர்ச்சிப்பதும், அனுஷத்தில் சூரியன் இருக்கும்போது சூரிய மூர்த்தியை நாகலிங்கப் புஷ்பமும் துளசியும் கலந்த புஷ்பங்களால் அர்ச்சிப்பதும் பல விதமான வறுமைத் துன்பங்களைப் போக்க உதவுவதாகும் இவ்விதகாரணங்களால் அனுஷத்தில் பிறந்தவர் புண்ணியவான்களாக இருக்கலாம்

ஆயிரம் லிங்கங்கள் கொண்ட அதி அற்புத ஆறுகள்!

ஆயிரம் லிங்கங்கள் கொண்ட அதி அற்புத ஆறுகள்!

01.இந்தியா=கர்நாடகா =வடக்கு கன்னட பகுதி=சால்மலா ஆறு=சஹஸ்ரலிங்க ஷேத்திரம்.
கர்நாடக மாநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்-- மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமானஆவுடையாருடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.
இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.
இந்த சிவலிங்கப் பாறைகளின் காலம் 1500 வருடங்களுக்கு முன்பானது என்று கூறுகிறார்கள். அதை எதற்காக வடிவமைத்து உள்ளார்கள் அல்லது அதை வடிவமைத்தவர் யார் என்ற சரியான விவரமும் தெரியவில்லை. அநேகமாக அங்கு எதோ ஒரு ஆலயம் அமைக்கப்பட இருந்தது என்றும் அந்நியர்களின் படையெடுப்பினால் அவை கட்டப்படாமல் நதியில் மூழ்கிக் கிடப்பதாகவும் கருதுகிறார்கள். சஹாஸ்ர என்றால் ஆயிரம் என்றுப் பொருள். ஆனால் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவு சிவ லிங்கங்கள் காணப்படுவதினால் இந்த இடத்தின் பெயரே சஹஸ்ரலிங்க ஷேத்திரம் என அமைந்து விட்டது.
02.கம்போடியா =அங்கோர் வாட் அதிசயங்கள் - ஆயிரம் லிங்கங்கள் பதித்த ஆறு.
9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை அங்கோர் வாட்டைச் சுற்றிலும் கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமானது என்று (river of thousand lingas) சொல்லப்படும், ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப் பெற்ற ஆற்றுப் பகுதியாகும். அங்கோர்வாட்டிற்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலைப்பகுதி (kulen hills) உள்ளது. அந்தப் பகுதி மரங்கள், செடிகள் அடர்ந்த காட்டுப் பகுதி.
அம் மலைப் பகுதியிலிருந்து, சயாம்ரீப என்ற ஆற்றின் துணை ஆறான ஸ்டங் என்ற ஆறு வருகிறது. மலையில் காட்டுப் பகுதியில் இந்த ஆறு ஓடி வரும் வழியில் தண்ணீருக்கு அடியில், மணற்பாறைகளில் வரிசையாக லிங்கம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு ஒரே மாதிரி லிங்கங்கள், சில பெரிய லிங்கங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சதுரமாக ஆவுடையாரும், அதற்குள் வட்டமாக லிங்கமும் இருக்கின்றன.
மற்றும் உமா சகித சிவன், இராமர், அனுமான் மற்றும் மிருகங்கள் லட்சுமி, அனந்த சயனன், பிரம்மாவுடன் சயன நிலையில் விஷ்ணுவின் உருவம் தண்ணீர் ஓடும் வழிகளிலும், ஆற்றின் கரைகளிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இச் சிற்பங்கள் 11-12ஆம் நூற்றாண்டில் முதலாம் சூரிய வர்மன் காலத்திலிருந்து இரண்டாம் உதயாதித்ய வர்மன் காலம் வரை, அப்பகுதியில் வாழ்ந்த துறவிகளால் செதுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
"எதற்காக இப்படி ஆற்றுப் படுகையில் செதுக்கினர் தெரியுமா? கங்கையைப் போல் தண்ணீரைப் புனிதப்படுத்த" என்று எங்கள் வழிகாட்டி கூறினார். லிங்கங்கள் வழியே பாயும் ஆறு, பின்னர் ஓர் அருவியாக விழுகிறது. அதில் மக்கள் குளிக்கின்றனர். புனிதப்படுத்தப்பட்ட ஆறு, நாட்டின் வழியே பாய்ந்து, வயல்களில் நெல் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டையும் புனிதப் படுத்தி, வளப்படுத்துவதாக அம்மக்கள் நம்புகின்றனர்.

நாம் எப்படி தூங்க வேண்டும்

மனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர்.



இந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை. எனவே தான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசஸ்தலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர்.

நாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.

நாம், வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட திசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் நம் உயிர்ச் சக்தி தேவையின்றி விரையம் ஆகும். காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியாது. அவ்வாறு எழுந்தாலும், அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக இருக்காது.

அதே போல, நம் மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் காலையில் நாம் எழுந்து கண்விழிக்கும் போது, சூரியனின் ஒளிகதிர்கள் நமது கண்களில் பட்டு கூசும். எனவே, மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நாம் கிழக்கு திசை பக்கம் தலை வைத்து படுத்தால்,நாம் பூமியின் காந்த ஓட்டத்தின் குறுக்காக இருப்பதால் நமது உடல் ஒரு டைனமோ போல் திகழ்ந்து உயிர்ச் சக்தியாக்கம் பெறும். இதனால், உற்சாகம் கிடைக்கும். எனவே, கீழக்கு திசையில் தலை வைத்து படுப்பதுவே மிகவும் சிறந்தது ஆகும். 

Thursday, 1 October 2015

எந்த ராசிக்கல் எந்த விரலில் அணிவது? விரலில் பொருத்தமான இடம் எது? படத்தை பாருங்கள் புரியும்...

மனித உறவுகள் சீராக இருக்க…..

மனித உறவுகள் சீராக இருக்க….. மனிதனுக்காக எல்லா மதங்களிலும் எழுதப்பட்ட வேதத்தின் அடிப்படையிலான ஆலோசனைகள்…
A to Z
A – Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
B – Behavior
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C – Compromise
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D – Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E – Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F – Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G – Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H – Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I – Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J – Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
K – Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L – Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M – Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
N – Neutral
எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
O – Over Expectation
அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P – Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
Q – Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
R – Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S – Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T – Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U – Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V – Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.
W – Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X – Xero
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y – Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z – Zero
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்

ஆறு விசயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விசயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1. சிங்கம் எந்த ஒரு விசயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அது போல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3. களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும்.
4. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத்தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும்.
5. இரவில் மனையுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும்.
6. கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விசயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.