jaga flash news

Thursday, 30 April 2020

உங்கள் வீட்டில் குளவி, கூடு கட்டி இருக்கா?

உங்கள் வீட்டில் குளவி, கூடு கட்டி இருக்கா? அப்படின்னா நீங்க அதிர்ஷ்டசாலியா! துரதிர்ஷ்டசாலியா! குளவி நம்முடைய வீடுகளில் வந்து கூடு கட்டுவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால், எல்லோரது வீட்டிலும் குளவி கூடு கட்டி விடுமா? என்று கேட்டால் அது கொஞ்சம் சந்தேகம் தான். குளவி கூடு கட்டினால் என்ன பலன்? அந்த கூட்டை கலைக்கலாமா? கூடாதா? அந்த மண்ணில் இருக்கக்கூடிய அற்புத சக்தி என்ன? என்ன செய்தால் திரும்பவும் அந்த இடத்தில் குளவி கூடு கட்டாம இருக்கும்? என்பதைப் பற்றி விரிவான ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் குளவி கூடு கட்டலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதன் மூலம் வீட்டிற்கு நன்மை தான் நடக்கும். சில வீடுகளில் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அறிவுறுத்த குளவி கூடு கட்டும் என்று சொல்லப்படுவது. சில வீடுகளில் இருக்கும் பொருளாதார பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் கூட, குளவி அந்த வீட்டில் கூடுகட்டும் என்றும் சில குறிப்புகள் உள்ளன. ஆகவே, குளவி கட்டினால் வீட்டிற்கு நன்மை தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை
- Advertisement - Home ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் உங்கள் வீட்டில் குளவி, கூடு கட்டி இருக்கா? அப்படின்னா நீங்க அதிர்ஷ்டசாலியா! துரதிர்ஷ்டசாலியா!  குளவி நம்முடைய வீடுகளில் வந்து கூடு கட்டுவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால், எல்லோரது வீட்டிலும் குளவி கூடு கட்டி விடுமா? என்று கேட்டால் அது கொஞ்சம் சந்தேகம் தான். குளவி கூடு கட்டினால் என்ன பலன்? அந்த கூட்டை கலைக்கலாமா? கூடாதா? அந்த மண்ணில் இருக்கக்கூடிய அற்புத சக்தி என்ன? என்ன செய்தால் திரும்பவும் அந்த இடத்தில் குளவி கூடு கட்டாம இருக்கும்? என்பதைப் பற்றி விரிவான ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் குளவி கூடு கட்டலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதன் மூலம் வீட்டிற்கு நன்மை தான் நடக்கும். சில வீடுகளில் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அறிவுறுத்த குளவி கூடு கட்டும் என்று சொல்லப்படுவது. சில வீடுகளில் இருக்கும் பொருளாதார பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் கூட, குளவி அந்த வீட்டில் கூடுகட்டும் என்றும் சில குறிப்புகள் உள்ளன. ஆகவே, குளவி கட்டினால் வீட்டிற்கு நன்மை தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. - Advertisement - வீட்டில் குளவி கட்டிய கூட்டை கலைத்து விடலாமா? என்று கேட்டால், அது தவறுதான். கூட்டை கலைக்க கூடாது தான். எந்த ஒரு கூட்டையுமே நாம் கலைக்கக் கூடாது. ஏனென்றால், ஒரு ஜீவன் வாழும் வீடு அல்லவா அது. நம் வீட்டை யாராவது வந்து உடைத்தால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதேபோல் தான் மற்ற ஜீவராசிகளுக்கும். அதை கலைக்கும் போது நமக்கு பாவம் சேரத்தான் செய்யும். இருப்பினும் குளவி கொட்டினால் விஷத் தன்மை, அதாவது குழந்தைகள் தாங்க மாட்டார்கள். வீங்கி விடும். பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் வீட்டின் உள் பக்கத்தில், குழந்தைகளுக்கு கை எட்டும் இடத்தில் எதிர்பாராமல், குளவி கூடு கட்டி விட்டது. குழந்தைகள் தொடும் இடத்தில் அது இருக்கிறது. என்றால், வேறு வழியில்லாமல், குளவி அந்த கூட்டில் இல்லாத சமயம் பார்த்து, அதை கலைக்க வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு ஏற்படும். அதை கலைத்து விட்டோமே ஆனால், அந்த இடத்தில் சிறிது கோமியத்தை விட்டுவிடவேண்டும். குளவி திரும்ப அந்த இடத்திற்கு வந்து கூட கட்டாமல் இருக்க, கோமியம் ஒரு நல்ல மருந்து என்று சொல்லப்பட்டுள்ளது. - அடுத்ததாக இந்த குளவியின் மண். குளவி கூடு கட்டுவதற்கு கால் படாத இடத்தில் இருக்கும் மண்ணை தான் எடுத்துக் கொண்டு வருமாம். அந்த மண்ணிற்கு அற்புத சக்தி உள்ளதாகவும், அந்த மண்ணை சிறிது எடுத்து தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தால் பொருளாதார சூழ்நிலை மேலோங்கும் என்றும் சில குறிப்புகள் உள்ளன. அதற்காக கூட்டில் இருந்து உடைத்து மண்ணை எடுக்க வேண்டாம். சில சமயம் கூட தானாக கீழே விழுந்து விடும். அப்போது, அதிலிருந்து சிறிது மண்ணை எடுத்து விபூதியில் கலந்து கொள்ளுங்கள். இல்லை என்றால், அந்த கூட்டிற்கு வெகுநாட்களாக குளவி வராமல் இருக்கும். அப்போது அந்த மண்ணை எடுத்துக் கொள்ளலாம். அந்த விபூதியை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆக உங்கள் வீட்டில் குளவி கூடு கட்டினால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். அந்த குளவி உங்களை கொட்டாத வரையில், எதிர்பாராமல் கொட்டிவிட்டது. என்ன செய்வது? சிறிதளவு சுண்ணாம்பு எடுத்து குளவி கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் ஏறாமல் இருக்கும் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்ல விஷயம்தானே

வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
 

 
பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்.

இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை.

இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.

மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஒரு முறை அந்த ஏழை விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை.

பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.

ஆச்சரியம்!
பின்னர் மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது.

அந்த அரிந்த வெங்காயத்தில் எக்கச்சக்க பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த மருத்துவ ஆய்வாளர்கள், வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து, ஆய்வு செய்ததில், அந்த வெங்காயமானது அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை ஈர்த்து தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது.
இதனை பயன்படுத்திய சிலரும் தான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன்.

இதனால் சில நாட்களிலேயே நான் எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது நான் அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், அதனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது.

பயன்படுத்தும் முறை
நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர், பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து, உங்களது தலை மேட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் ஈர்த்து தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் இதனை காலையில் எடுத்து வெளியில் எரிந்து விட வேண்டும்.

குறிப்பு
நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு.

ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டியது அவசியம்.

அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமை ஏற்படும்.

இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீஞ்சிய வெங்காயத்தினை பாலித்தின் பைகள் அல்லது பிளாஸ்டிக் சாமான்களினுள் அடைத்து, அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

Monday, 27 April 2020

எந்த ராசிக்கு, எந்த நோய் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்? தெரிந்து கொண்டால், முன்கூட்டியே பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் அல்லவா?

12 ராசிக்காரர்களுக்கும் பலம் என்று ஒன்று இருந்தால், பலவீனம் என்ற ஒன்றும் கண்டிப்பாக இருக்கும். நீங்கள் என்ன ராசிக்காரர்! உங்களுக்கு பலவீனம் தரும் பிரச்சினை எது என்பதை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? தாராளமாக உங்களது பலவீனத்தை தெரிந்துகொண்டு ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. 

மேஷ ராசிக்கு, ராசிநாதன் செவ்வாய். இவர்களுக்கு பொதுவாகவே ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதயநோய், பைல்ஸ் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே மேஷராசிக்காரர்களுக்கு கோபம் சற்று அதிகமாக வரக்கூடும். இதனால் தலைவலி ஏற்படலாம். பல், சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு, கோபத்தைக் குறைத்துக் கொண்டால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதையும் குறைத்துக் கொள்ளலாம். தினம் தோறும் விநாயகர் மந்திரத்தை சொல்வது மிகவும் நல்லது.

ரிஷப ராசிக்கு, ராசி நாதன் சுக்கிரன். இவர்களுக்கு இயற்கையாகவே நன்றாக கேட்கும் திறன் இருக்கும். அதாவது கூர்மையான காது. பற்களின் வரிசை மிக அழகாக இருக்கும். சிலருக்கு தைராய்டு பிரச்சனை வரக்கூடும். அடிக்கடி சளி பிடிக்கும். காய்ச்சல் வரும். காது மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அவதிப்பட்டு வருவார்கள். இந்த ராசியில் உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. கருப்பை பலவீனமாக இருக்கும். பிடிவாத குணத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தினம் தோறும் முருகப் பெருமானை வழிபட்டால் பிரச்சனைகள் தீரும்.

மிதுன ராசிக்கு, ராசிநாதன் புதன் பகவான். மிதுனம் என்பது எண்ணிக்கையில் இரண்டை குறிக்கிறது. அதாவது இரண்டு கால்களில் இருக்கும் மூட்டு சம்பந்தமான பிரச்சனை, சுவாசப் பிரச்சனை அடிக்கடி ஏற்படக்கூடும். காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் இவர்கள் ஆளாவார்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு சீக்கிரமே வழுக்கை விழுந்து விடும். வயிறு கோளாறு ஏற்படும். சில பேருக்கு குழந்தை இல்லாத சூழ்நிலையும் இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் பெருமாளை வழிபடுவது மிகவும் நல்லது.
கடக ராசிக்காரர்களுக்கு, ராசிநாதன் சந்திரன். இயற்கையாகவே இவர்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்படும். இவர்கள் மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். பசி தன்மை இவர்களுக்கு எப்போதும் குறைவாகவே இருக்கும். ஆனால் இவர்கள் மிகவும் மன வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். வயிறு சம்பந்தப்பட்ட அல்சர், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மண்ணீரல், கல்லீரல் போன்ற பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கண் நோய் ஏற்படும். அதாவது பார்வைக்கோளாறு, கண்ணாடி போடும் சூழ்நிலை ஏற்படலாம். தினம்தோறும் அம்மன் வழிபாடு மிகவும் சிறந்தது. குறிப்பாக காமாட்சி அம்மனை வழிபடலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, ராசிநாதன் சூரியன். இவர்கள் எப்போதும் அதிகார குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும். இதயம் பலவீனம் அடையக்கூடும். பித்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். அதிகமாக கோபம் வரும் என்பதால், சிம்ம ராசிக்காரர்கள் இதயத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சிவனை நினைத்து 5 நிமிடம் தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு, ராசிநாதன் புதன். இவர்கள் முடிந்தவரை உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடாக இருப்பர். கூடுமானவரை இவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரச்சினை என்று வந்தால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் செரிமான பிரச்சனைகள் வரக்கூடும். மலச்சிக்கல் உண்டாகும். சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த நேரத்தில் எதை உண்ண வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் கன்னி ராசிக்காரர்கள். தினம் தோறும் முருகப் பெருமான் வழிபாடு மிகவும் நல்லது.

துலாம் ராசிக்காரர்களுக்கு, ராசி நாதன் சுக்கிரன். இவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே அதை கவனித்துவிட வேண்டும். இவர்களுக்கு சிறுநீரகம் மட்டும்தான் அதிகப்படியான பிரச்சனைகளைத் தரும். மற்றபடி சரும பிரச்சனை, வாயு தொல்லையால் பிரச்சினைகள் இருந்தால் அது சாதாரணமாக நீங்கிவிடும். இவர்கள் நடராஜரையும், நரசிம்மரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
விருச்சக ராசி காரர்களுக்கு, ராசி அதிபதி செவ்வாய். இவர்கள் எப்போதும் தங்களது வேலைகளை சுறுசுறுப்பாக செய்வார்கள். ஆனால் தனக்கு சொந்தமென்று வருவதை அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படலாம். சிறுநீரக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. தோல்நோய் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கும். உடம்பில் சுரக்கும் சுரப்பிகளால் பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. இவர்கள் முருகன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

தனுசு ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதி குரு. இவர்கள் கல்லீரல், தொடைப் பகுதிகளில் அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். முதுகெலும்பு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே தனுசு ராசிக்காரர்கள் சாப்பிடுவதில் அதிகமாக அக்கறை காட்ட மாட்டார்கள். முடிந்தவரை சத்துள்ள சாப்பாட்டை சாப்பிட்டு வந்தால் பல விதமான உடல் நலக் கோளாறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். எலும்பு உறுதியாக இருக்க, எந்த பொருட்கள் சாப்பிட்டால் அதிக சத்து கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். தினந்தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் நல்லது.

மகர ராசிக்காரர்களுக்கு, ராசி அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் நன்றாக உழைத்து வேலை செய்யும் நபராக தான் இருப்பார்கள். சற்று பிடிவாத குணம் இருக்கும். அந்த பிடிவாதமே இவர்களுடைய வாழ்க்கைக்குத் தடையாக நிற்கும். இவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். எலும்புகள், மூட்டுகள் வலுவிழந்து காணப்படும். முடிந்தவரை கால்சியம் சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டு வருவது நல்லது. தினம்தோறும் பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது.

கும்ப ராசிக்காரர்களுக்கு, ராசி அதிபதி சனி பகவான். இவர்கள் நேரம் காலம் பார்க்காமல் ஓய்வு எடுக்காமல் தங்களுடைய பணிகளை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் உடல் ஆரோக்கியமும் தேவை என்பதை இவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இவர்களுக்கு மூட்டு பிரச்சனை, இதயம் சம்பந்தமான பிரச்சனை, நரம்பு பிரச்சனை, அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சிவன் கோவில்களில் இருக்கும் பைரவரை தரிசனம் செய்தால் பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.


மீன ராசிக்குராசிக்கு, அதிபதி குரு. இவர்கள் நேர்மறையாக சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் தான். ஆனால் இவர்களின் எண்ணம் ஈடேற வில்லை என்றால், அதிகப்படியான கவலையில் ஆழ்ந்து விடுவார்கள். எதையாவது சிந்தித்து, சிந்தித்து மன அழுத்தம் ஏற்பட்டு பல பிரச்சனைகளை இவர்களே விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். இதனால் உடல்எடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வயிறு உப்புசம், வாயு தொல்லை இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதுமட்டுமல்லாமல் உணவு பழக்கவழக்கத்தை சீராக வைத்துக் கொள்ளாததால், பலவிதமான பிரச்சனைகளையும் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். இவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். இவர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்வது நன்மை தரும்.

மூங்கில் செடி

 மூங்கில் செடி 
 இந்த செடிகளை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது நேராக வளரும் படி இருக்க வேண்டும். வளரும் திசையானது செங்குத்தாக இருக்க வேண்டும். குறுக்கே வரும் பட்சத்தில் அதை செதுக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அதாவது மூங்கில் செடி ஒன்றை ஒன்று பிணைந்து குறுக்கும் நெடுக்குமாக சிக்கல் இருக்கும்படி வீட்டில் வைப்பது தவறு. குறுக்கும் நெடுக்குமாக போகும் அந்த திசை மூங்கிலை வெட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

உங்களது வேண்டுதல் இறைவனின் செவிகளுக்கு கேட்க வேண்டுமா? எருக்கன் இலை சூடம்.

எருக்கஞ்செடி என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு சிறிய பயம் வந்துவிடும். ஏனென்றால் எருக்கன் செடிகள் சுடுகாட்டில் அதிகமாக வளர்ந்து இருக்கும். அதில் தீயசக்தி இருக்கும் என்று நம் அனைவராலும் நம்பப்படுகிறது. அது உண்மைதான். எருக்கன் செடியில் நல்ல சக்தியானது இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவிற்கு கெட்ட சக்தியும் வந்து தங்கும் என்பது உண்மை. இதன்படி எருக்கன் செடி எந்த இடத்தில் இருக்கின்றதோ அதை வைத்துதான் அதில் நல்ல சக்தி இருக்கிறதா? கெட்ட சக்தி இருக்கிறதா? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். பொதுவாகவே எருக்கன் செடியில் வெள்ளை எருக்கன் செடியை தேவ மூலிகை என்று கூறுவார்கள். அதாவது புதையல், தங்கச் சிலைகள், ரத்தினங்கள், இவையெல்லாம் பதுங்கியிருக்கும் இடத்தில் இந்த வெள்ளருக்கன் செடி வளரும் என்று பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தோமேயானால் எருக்கம் செடி இருக்கும் இடத்தில் நிச்சயமாக தெய்வசக்தி இருக்கும் என்பது அர்த்தம். அதேசமயம் இந்தப் புதையலை பாதுகாக்க அந்த எருக்கன் செடி ஓரம் பாம்புகள் இருக்கும் என்றும் சிலரால் கூறப்படுகிறது.எருக்கன் பூ, பூஜைக்கு மிகவும் உகந்த பூவாக கருதப்படுகிறது.
“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”நல்லதோ! கெட்டதோ! எருக்கம் பூவை மனதார பரித்து கடவுளுக்கு படைத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் உள்ளன்போடு ஏற்றுக்கொள்வார் என்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கபிலர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.இறைவனுக்கு அவ்வளவு விருப்பமானது இந்த எருக்கன் பூ. ஆகவே இந்த சக்தியானது எருக்கன் பூ, பூக்கும் அந்த செடிக்கும், இலைகளுக்கும் நிச்சயமாக இருக்கும் என்பது நம்பிக்கை. எருக்கன் பூவை இறைவனுக்கு சூட்டி வழிபடுவது ஒருபக்கம் இருக்க, எருக்கன் இலையால் தீபமேற்றினால் நாம் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்களை, அந்த இறைவன் உடனடியாக செவி கொடுத்து கேட்பார் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்பேர்ப்பட்ட பெருமைகளை கொண்ட எருக்கன் இலையில் இறைவனை நினைத்து எப்படி கற்பூர தீபம் ஏற்றலாம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.உங்களுக்கு நிறைவேறாமல் இருக்கும் வேண்டுதலோ, நிறைவேறாமல் இருக்கும் விருப்பமோ, ஆசையோ, உங்களது குடும்பம் நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த பரிகாரம். நல்ல இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் இலையை முதலில் பறித்துக் கொள்ள வேண்டும். தெய்வ சக்தி வாய்ந்த செடி என்பதால் இலையை பறிப்பதற்கு முன்பு மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டு பறித்துக் கொள்ளுங்கள். வெள்ளருக்கு செடியின் இலை கிடைக்கவில்லை என்றால், மற்ற எருக்கன் செடியின் இலையை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த இலையை வீட்டுக்கு எடுத்து வந்த பின்பு நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சுத்தமான பின்பு, இந்த பரிகாரத்தை தொடங்கவேண்டும். நீங்கள் பறித்து வந்த எருக்கன் இலையை, ஒரு தாம்பூலத்தில் வைத்து விட்டு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அந்த நாணயத்தின் மேல் பகுதியில் ஒரு கற்பூரம் ஏற்றப்பட வேண்டும்.இந்த கற்பூர தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றப்பட்ட தீபத்தை பார்த்து உங்கள் மனதிற்குள் இருக்கும் வேண்டுதலை, குறிக்கோளை இறைவனிடம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் உங்களது நிறைவேறாத ஆசை எதுவாக இருந்தாலும் அது நிறைவேறுவதற்கான வழி உங்களுக்கு கட்டாயமாக கிடைத்துவிடும். 48 நாட்களும் ஒரே குறிக்கோள் தான் இருக்க வேண்டும் மாற்றிவிடக் கூடாது. அந்த ஒரு சூடமானது எரிந்து முடியும் வரை, உங்கள் மனதில் குறிக்கோளை திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டே இருப்பது இன்னும் சக்தியைக் கொடுக்கும்.தட்டின் மேல் எருக்கன் இலை, எருக்கன் இலையின் மேல் ஒரு ரூபாய் நாணயம், ஒரு ரூபாய் நாணயத்தின் மேல் ஒரு சிறிய கற்பூரம் இவ்வளவுதான். உங்களுக்கு கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட கேட்டுத்தான் பாருங்களேன் அதற்கு வழி கிடைக்குமா என்பதை! நம்பிக்கையோடு ஒரு விஷயத்தை தொடர்ந்து நாம் நினைத்துக் கொண்டே இருப்பது உண்மையானால், அதற்கு நல்ல நல்ல பரிகாரங்கள் ஒரு வழிகாட்டியாக நிச்சயமாக அமையும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த பரிகாரத்தை செய்து பார்ப்பதன் மூலம் எந்த ஒரு கெட்டதும் நடக்காது என்பது மட்டும் உண்மையான ஒன்று.

உங்கள் வீட்டில் மருதாணி செடி இருக்கா? கண்டிப்பா நீங்க இந்த தவறை செய்யவே கூடாது.

நம்முடைய வீட்டில் மருதாணி செடியை வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த மருதாணி செடிக்கு வேறு என்ன மருத்துவ குணநலன்கள் உள்ளது? இந்த செடியில் இருக்கும் இலை, பூ, காய், குச்சி, இவைகள் அனைத்தையும் எந்த வகையில் பயன்படுத்தினால் என்ன நன்மைகளை அடையலாம்? என்பதை பற்றியும், வீட்டில் மருதாணி செடி வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத முக்கியமான ஒரு தவறு என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. காரணம் இந்த மருதாணி செடிக்கு இருக்கும் வாசம் தான். இந்த வாசத்திற்கு துஷ்ட சக்தி மட்டுமல்ல, சில வகையான பூச்சி பொட்டுகளும் உங்கள் வீட்டின் அருகில் நெருங்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் எந்த ஒரு பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளும் நெருங்காமல் இருக்க வேண்டுமென்றாலும் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்ட வேண்டும் என்றாலும், இந்த மருதாணி விதைகளை செடியிலிருந்து எடுத்து, நன்றாக வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின்பு வெள்ளிக்கிழமைதோறும் சாம்பிராணி தூபம் போடும் போது, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சேர்த்து இந்த மருதாணி விதைகளையும் நான்கு சேர்த்து தூபம் போட்டால், அந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுபவர்களாக இருந்தாலும்கூட, தினமுமே இந்த மருதாணி காய்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக மருதாணிச் செடியில் இருக்கும் மருதாணி பூவிற்கு, மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சக்தி இருக்கிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாதவர்கள், இந்த மருதாணி செடியில் இருக்கும் பூக்களை பறித்து முடிந்தால் தலையணையாக செய்து தலைக்கு அடியில் வைத்து உறங்கலாம். முடியாதவர்கள் சிறிது பூவை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி, தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள். இந்த மருதாணி பூவில் இருந்து வரக்கூடிய நறுமணம், உங்களது கண்களை தூக்கம் தழுவுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.மருதாணி இலை. இந்த மருதாணி இலைகளை அறைத்து கைகளிலும் கால்களிலும் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இருந்தாலும் கால் நகங்களில் வரும் சேற்றுப்புண், பாத வெடிப்பு, கை நகங்களில் சொத்தை இவைகளுக்கு நல்ல மருந்தாக இந்த மருதாணி இலை விழுது இருந்துவருகிறது. வெறும் மருதாணி இலையை மட்டும் அறைக்காமல் அதில் ஒரு கொட்டைப்பாக்கு வைத்து அறைத்தால் இன்னும் அதிகப்படியான பலனை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.வாய்ப்புண் உள்ளவர்கள், மருதாணி செடியில் இருக்கும் இலைகளை பறித்து நன்றாக கழுவி, தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து அந்த கஷாயத்தை வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். வாய்ப்புண் ஆறும் வரை வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையை பின்பற்றி வரலாம்.அடுத்ததாக வீட்டில் ஒருவருக்கு எப்படி பட்ட வாஸ்த்து பிரச்சனை இருந்தாலும், அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தியும், இந்த மருதாணிக்கு செடிக்கு உள்ளது என்பது வாஸ்து நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் இருப்பார்கள் சிலருக்கு, அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராது. வாடகை வீட்டை மாற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கும். சிலபேர் சொந்த வீட்டில் இருந்தாலும், பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து வரும் விளைவுகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக மீதமிருப்பது மருதாணி குச்சு. இந்த மருதாணி குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து உங்கள் வீட்டு அலமாரியில் வைத்து வந்தால் கண்ணுக்கு தெரியாத பூச்சி தொல்லையில் இருந்து விடுபடலாம். காரணம் இதிலிருந்து வெளிப்படக்கூடிய வாசம்.மருதாணி செடியியை வீட்டில் வைத்திருந்தால், குழந்தைகள் அந்த இலைகளை பறித்து வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் துவர்ப்புத் தன்மை வயிறு கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.இறுதியாக மருதாணி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள், யாருக்கேனும் அந்த மருதாணி இலைகளை பறித்து கொடுப்பதாக இருந்தால், இலவசமாக கொடுக்கக்கூடாது. அதாவது, உங்கள் சொந்தக்காரருக்கு அந்த செடியின் இலைகளை கொடுப்பதாக இருந்தாலும், ஒரு ரூபாயை மட்டுமாவது பெற்றுக்கொண்டு அந்த இலைகளை தாருங்கள். உங்கள் வீட்டு மகாலட்சுமி அல்லவா? இலவசமாக கொடுக்க கூடாது என்பதற்காகத்தான் இது.விளக்கு வைத்தபின் மருதாணி செடியின் இலைகளை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள். காசு வாங்கிவிட்டு கூட விளக்கு வைத்த பின்பு கட்டாயமாக மருதாணி இலையை யாருக்கும் கொடுக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் பொழுது சாய்ந்த பிறகு செடியிலிருந்து இலைகளை பறிக்க மாட்டார்கள். இருந்தும், முன்பாகவே பறித்து வைத்திருந்தால் கூட விளக்கு வைத்த பின்பு வீட்டு வாசற்படியை மருதாணி செடி இலை தாண்டக் கூடாது.

Sunday, 26 April 2020

சண்டி ஹோமம்

சண்டி ஹோமம், உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.
இந்த உருப்படி இப்போது இல்லை.

துன்பங்கள் விலகி தெய்வீக பாதுகாப்பு பெறுவதற்கான ஹோமம்
Chandi Homa
அறிமுகம்
துர்கையின் அம்சமாகத் திகழும் சண்டி தேவி உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் காத்து அழிக்கும் சர்வ வல்லமை வாய்ந்த சக்தியாக விளங்குகிறாள். உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் இந்த ஹோமம் துன்பங்களை நீக்கி நம்மை பாதுகாக்கும் ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.

சண்டி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்
சமுதாய, பொருளாதார நிலை உயரவும், அனைத்து முயற்சிகளில் வெற்றி அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் செய்யப்படும் இந்த சண்டி ஹோமம், ஒரு பிரத்யேகமான ஹோமமாக விளங்குகிறது. உங்களைச் சூழ்ந்திருக்கும் தீமைகளைக் களைந்து, நம்பிக்கையை உருவாக்கி, உங்கள் திறமைகளை மேம்படுத்தி, அமைதியையும், செழிப்பையும் தரவல்லது, இது. தீய வினைகளை அகற்றி, எதிர்மறை சக்திகளைக் களைந்து, துன்பங்க நிக்கி, அன்னை துர்கா தேவியின் அருளைப் பெற்று வாழ, இந்த சண்டி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

பாரம்பரிய முறை ஹோமம்
சண்டி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. சண்டி தேவியைப் போற்றும் விதமாக, 7௦௦ க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்கள், பிரம்மாண்டமாக நடத்தப்\படும் இந்த ஹோமத்தில் ஓதப்படும். 2 முதல் 1௦ வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பலரும், இந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். ஹோமத்தில், இந்தக் குழந்தைகள் அன்னை தேவியின் வடிவமாகக் கருதப்பட்டு, வணங்கி கௌரவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆடை மற்றும் பிற பரிசுகளும் வழங்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை இந்த ஹோமத்தைதத் தவறாமல் செய்வதன் மூலம், உங்கள் ஆசைகள் நிறைவேறி, பரிபூரணமான வாழ்வை, நீங்கள் வாழ இயலும்.

பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்
சண்டி ஹோமத்தின் நற்பலன்கள்
இடையூறுகளையும், தடைகளையும் நீக்கிக் கொள்ள இயலும்

பிரச்சினைகளைத் தீர்க்க இயலும்

உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்

உங்கள் இலக்குகளை அடைய இயலும்

திருஷ்டிகளைக் களைய இயலும்

சாப விமோசனம் பெற இயலும்

நீடித்த ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும் அனுபவிக்க இயலும்

சண்டி ஹோமத்திற்கான மந்திரம்
ஐம் ஹ்ரிம் க்ளிம் சாமுண்டாயே விச்சி

திறுநீற்றுப் பச்சை



திறுநீற்றுப் பச்சையின் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி வியர்வைகளை அகற்றும் வேலைகளையும் செய்கிறது. இதன் இலை உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து சிறுநீரைப்பெருக்கும் தன்மையை கொண்டது. சித்த வைத்தியத்தில் லேகியம், தைலம் தயாரிப்பதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். காது வலி, காதில் சிழ் வடிதல் போன்ற நோய்களுக்கு இதன் இலையை பறித்து சாறு பிழந்து காதுகளில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி, சீழ் வடிதல் குணமாகும்.

தேள் கடித்துவிட்டது என்றால் திருநீற்றுபச்சையின் சாற்றை கடிவாயில் பேட்டால் வலி குணமாகும். ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும்.

இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.





திறுநீற்றுப் பச்சையின் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி வியர்வைகளை அகற்றும் வேலைகளையும் செய்கிறது. இதன் இலை உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து சிறுநீரைப்பெருக்கும் தன்மையை கொண்டது. சித்த வைத்தியத்தில் லேகியம், தைலம் தயாரிப்பதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். காது வலி, காதில் சிழ் வடிதல் போன்ற நோய்களுக்கு இதன் இலையை பறித்து சாறு பிழந்து காதுகளில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி, சீழ் வடிதல் குணமாகும்.

தேள் கடித்துவிட்டது என்றால் திருநீற்றுபச்சையின் சாற்றை கடிவாயில் பேட்டால் வலி குணமாகும். ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும்.

இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்

Friday, 24 April 2020

எந்த ராசிக்கார்கள் உங்களுக்கு துணையாக வந்தால் உங்களுக்கு பொருந்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜோதிடப்படி உங்களுக்குள் பொருத்தம் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதனால் எந்த ராசிக்கார்கள் உங்களுக்கு துணையாக வந்தால் உங்களுக்கு பொருந்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகப்பெரிய இலட்சியவாதிகளாக இருப்பார்கள். தங்கள் தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். தங்கள் மீது அதிக அன்பை செலுத்துபவர்களை புறக்கணிக்கவும் செய்வார்கள். மாற்றத்தை விரும்பும் அவர்கள் அவநம்பிக்கைக்கு அதிகமாக உள்ளாவார்கள். மேஷ ராசிக்காரர்கள் காதல் உணர்ச்சி உள்ளவர்கள் என்றாலும் கூட, நீண்ட கால உறவின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.

  • மேஷ ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம்.
  • அவர்களுக்கு பொருந்தாத ராசிகள் - கடகம், கன்னி மற்றும் மகரம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எல்லாம் நிலையாக, நம்பகமான மற்றும் பழமைவாத நபர்களாக இருப்பார்கள். குடும்ப கணக்குகளை ரிஷப ராசிக்காரர்கள் நிலையாக வைத்திட முயற்சி செய்வார்கள். ஆனால் நிதி நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் போது அவர்கள் பைத்தியம் பிடித்ததை போல் ஆவார்கள். சோதனை முயற்சிகள் அல்லது வீட்டை விட்டு தொலைவாக இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

  • ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - ரிஷபம், கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம்.
  • ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - சிம்மம், தனுசு மற்றும் கும்பம்.
மிதுனம்

துணையின் தேவைக்கேற்ப தங்களின் தேவைகளை சுலபமாக மாற்றிக் கொள்ளும் குணத்தை கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். அவர்களை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாகும். ஆளுமை அறிகுறிகளுடன் விளங்கும் மிகச்சிறந்த துணையாக அவர்கள் இருந்தாலும் ஒரு பாதையை தேர்ந்தெடுக்க இவர்களின் உதவியை நாடும் துணையுடன் இவர்கள் தோற்று போவார்கள். மிதுன ராசிக்காரர்களின் தவறை அவர்களை உணர வைக்க வேண்டுமானால், நீங்கள் அப்பட்டமாக நடந்து கொள்ள வேண்டும்.

  • மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - துலாம், மேஷம், சிம்மம் மற்றும் கும்பம்.
  • மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.
கடகம்

காதல் உணர்வுடன் கூடியவர்களான கடக ராசிக்காரர்கள் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

கடக ராசிக்காரரான உங்கள் துணை லேசாக காயமடைந்தாலும் சரி, தங்கள் வாழ்க்கையில் இருந்து உங்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். ஆனாலும் சிறிது காலம் கழித்து, பிரச்சனை சுமூகமாக முடிந்த பிறகு நிலைமை சரியாகும். அதே நேரம் அவர்கள் கடுமையாகவும், உணர்ச்சி வயப்படுகிறவராகவும் இருப்பார்கள்.

  • கடக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்.
  • கடக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - மேஷம், துலாம் மற்றும் தனுசு.
சிம்மம்

தீவிர அன்பான மற்றும் உண்மையான துணையாக விளங்குவார்கள் சிம்ம ராசிக்காரர்கள். ஆனால் அவர்களிடம் உள்ள மோசமான குணமே அவர்கள் சுயநலம் பிடித்தவர்களாக இருப்பார்கள். தங்கள் மேல் விழும் கவனத்தை விரும்புவார்கள், மிகப்பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள், வாழ்க்கையில் வெற்றியை ஈட்ட எதையும் செய்வார்கள். தாங்கள் விரும்புபவர்களை விசேஷமாக உணர வைப்பார்கள்.

  • சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு
  • சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - ரிஷபம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நம்பகமாக, வசீகரத்துடன், நடைமுறை குணத்தோடு இருப்பவர்கள். தங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருக்க உண்மையிலேயே விரும்புவார்கள். கன்னி ராசியை கொண்ட ஆண்கள் சற்று ஆண் தன்மையற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த குணங்கள் தான் அவர்கள் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

  • கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம்.
  • கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - மேஷம், தனுசு மற்றும் கும்பம்.
துலாம்

இந்த ராசி தராசை குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. துலாம் ராசிக்காரர்கள் நேர்மையுடனும், நடுநிலைமையுடனும் இருப்பார்கள். அவர்கள் தங்களை தாங்களே தியாகம் செய்பவர்கள். தங்கள் உறவுமுறைகளை அவர்கள் முடிவில்லா பொறுமையுடன் கையாளுவார்கள். கடலைப் போடுவதிலும் துலாம் ராசிக்காரர்கள் பெரியவர்கள். தங்கள் துணையுடன் விவாதத்தை வளர்ப்பதை விட, விட்டு கொடுத்து போய் விடுவார்கள்.

  • துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம்.
  • துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - கடகம், மகரம் மற்றும் மீனம்.
விருச்சிகம்

உடலுறவுக்கு பெயர் பெற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். உடலுறவின் மீது தீவிர நாட்டமுடையவர்கள் இவர்கள். ஆனாலும் இவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அதனை வெளியே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆன்மீகத்திலும் நாட்டம் உடையவராக இருப்பார்கள்.

  • விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம்.
  • விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம்.
தனுசு

மிகவும் நேர்மறையானவர்களான தனுசு ராசிக்கார்கள் வாழ்க்கையின் மீது சுதந்திரமான பார்வையை கொண்டிருப்பார்கள். தங்கள் துணையின் நல்ல விஷயங்களை மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள். சுதந்திரமாக இருக்க விரும்பும் அவர்கள், தங்களை யாரேனும் கட்டுப்படுத்துவதை விரும்ப மாட்டார்கள்.

  • தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம்.
  • தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மீனம்.
மகரம்

கடுமையான மற்றும் பிரச்சனையில்லாத துணையாக விளங்குவார்கள் மகர ராசிக்காரர்கள். அவர்கள் சுலபத்தில் யாரையும் நம்பா விட்டாலும் கூட, ஒரு முறை நம்பிக்கை வைத்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அது தொடரும். தங்களை தங்கள் துணை விரும்புவதை, தங்கள் துணை தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும் என விரும்புவார்கள்.

  • மகர ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் மீனம்.
  • மகர ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் துலாம்.
கும்பம்

தங்களுக்கும், தங்கள் துணைக்கும் உயரிய கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். தங்கள் துணையை கவர்ந்திழுக்கும் ஈர்ப்புடைய தன்மையுடன் உடையவர்கள் இவர்கள். தங்கள் துணைக்கு அதிக நம்பிக்கையுடன் திகழ்வார்கள்.

  • கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு.
  • கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் கன்னி.
மீனம்

தங்கள் உணர்ச்சிகளால் முழுமையாக ஆளப்படுபவர்கள் தான் மீன ராசிக்காரர்கள். சந்தேகமே இல்லாமல் அவர்கள் விசுவாசமாக, அன்பை அள்ளி வழங்குபவராக இருப்பார்கள். ஆனாலும் இவர்களை சுலபத்தை காயப்படுத்தி விடலாம் மற்றும் கோபப்படுத்தவும் செய்யலாம்.

  • மீன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் - ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்.
  • மீன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் - மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு.

Thursday, 23 April 2020

வெரிகோஸ்**நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன?*

*வெரிகோஸ்*

*நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன?*

பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 

முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். 

கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. 

அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா? 

இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. 

ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல.
நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரி யது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலி கூட தலை போகும் பிரச்சினையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால் ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந் தாலும் அதனைக் குணப்படுத்த முயல வேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக்கோட்பாடாகும். 

அது ஒருபுறம் இருக்கட்டும். 

*இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.*

கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின் என்றுபெயர். 

வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம். 

*வெரிகோஸ் வெயின் நோய் எதனால் வருகிறது ?*

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கிய படி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது.

மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படு கின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. 

ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப் படுகிறது. அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற் கான காரணமாகும்.

இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வு கள் இயங்க வேண்டி உள்ளது. 

அது இயலாமல் போகும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக் கியே செல்லத் தொடங்கும். இதனால், இரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத் தும் வீங்கியும் காணப்படும். 

ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

*வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?*

அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப்பின்மை, அசை வற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண் களுக்கு வரவாய்ப்பு அதிகம். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும். 

வயது முதிர்ந்தவர்களுக்கு இரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு 3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

*வெரிகோஸ் வெயின் நோய்க்கான அறிகுறிகள் என்ன?*

தோலின் உட்புறத்தில் இரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படு தல். பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில் உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாக கருதிவிடுவது உண்டு)
வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல். 

*வருமுன் தடுக்க ?*

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக் காமல் பார்த்துக்கொள்ளலாம். 
எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ,
நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும். 
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது.
தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. 
தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். 
எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். 
எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

சிகிச்சை வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரி கோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனைகளைக் குறைக்க முடியும். 

அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. 

வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன.

நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இந்த நரம்பு முடிச்சு நோயை குணப்படுத்த பல முறைகள் உள்ளது...

நல்ல அனுபவம் மிக்க சித்த மருத்துவரை அணுகி இந்த நோயை எளிதில் குணப்படுத்தலாம்...

இனிய இரவு நல்வாழ்த்துக்கள்.

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.

👏�👏�👏�👏�👏�👏 கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!...

 
கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர்.
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.
வெற்றி தான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
கை தட்டுவதே ஒரு சிகிச்சை தான். கை தட்டும் போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள்.
மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.
சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கை முறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.
99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
👏�👏�👏�👏�👏�👏

2 கைகளிலும் உப்பை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்! 21வது நாள் அதிசயம் நடக்கும்.

பொதுவாகவே கல்லுப்பில் நல்ல ஆற்றல் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். கல் உப்பில் மகாலட்சுமியின் அம்சம் இருக்கிறது என்பதை அறிந்த நீங்கள், அதே கல் உப்பிற்கு சந்திரனின் அருளைப் பெற்றுத்தரும் மகிமையும், சுக்கிரனின் அருளைப் பெற்றுத்தரும் மகிமையும் இருக்கிறது என்பதை அறிந்து உள்ளீர்களா? சந்திர கிரகத்தின் ஆற்றலையும், சுக்கிர கிரகத்தின் ஆற்றலையும் கல் உப்பின் மூலம் நாம் பெற போகின்றோம். நமது உடலானது 70 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. தண்ணீருக்கு உரிய கிரகமாக சொல்லப்படுவது சந்திரன்.
ஆகவே, கல் உப்பின் ஆற்றலை நாம் உடலில் சேர்க்கும்போது சந்திரனின் பலம் அதிகரிக்கிறது. இதற்காக கல் உப்பை சாப்பாட்டில் அதிகமாக போட்டு சாப்பிடக்கூடாது. அதனுடைய ஆற்றலை மட்டும் தான் நாம் பெறப் போகின்றோம். ஏனென்றால் மன வலிமையை அதிகரிக்கும் சக்தியை தரக்கூடியவர் சந்திர பகவான். மன வலிமையோடு நாம் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு காரியமும் கட்டாயமாக வெற்றியடையும் அல்லவா?
கல் உப்பின்னால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதால் சுக்கிர பகவானையும் சேர்த்து வேண்டிக் கொள்வது அவசியம். சந்திரனின் ஆற்றலையும், சுக்கிரனின் ஆற்றலையும் ஒருசேர பெற்று விட்டால் நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த இரண்டு கிரகங்களின் மனதையும் குளிர வைத்து, இரண்டு கிரகங்களின் ஆற்றலை பெற, கல் உப்பை வைத்து எந்த மந்திரத்தை சொன்னால் என்ன அற்புதம் நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பரிகாரத்திற்க்கு இரண்டு கைப்பிடி அளவு கல் உப்பு மட்டுமே போதும். சூரிய உதயத்திற்கு முன்பாகவே கண்விழித்து, உங்கள் இரண்டு கைகளிலும், கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து கொள்ளுங்கள். சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம். முதுகு தண்டுவடம் நேராக இருக்க வேண்டும். தியானம் செய்வதுபோல் இரண்டு கைகளையும் உங்கள் இரண்டு தொடைகளின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இரண்டு உள்ளங்கைகளும் கல்லுப்பு மூடியவாறு இருக்கவேண்டும். அதன் பின்பு முதலில் சந்திர பகவானை மனதார நினைத்து கொண்டு, சந்திர பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். நேரம் இல்லாதவர்கள் 11 முறை உச்சரிக்கலாம்.


சந்திர பகவானின் மந்திரம்:
ஓம் ஷ்ராம் ஸ்ரீம் சஹ்ரும் சஹ் சந்திராய நமஹ.
அதன் பின்பு சுக்கிர பகவானை நினைத்துக் கொண்டு, சுக்கிரனின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். முடியாதவர்கள் 11 முறை உச்சரிக்கலாம்.
சுக்கிர பகவானின் மந்திரம்:
ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ் சுக்ராய நமஹ.
இந்த இரண்டு மந்திரங்களையும் உச்சரித்த பின்பு உங்கள் மனதில் எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும், நேர்மறையோடு 5  நிமிடம் சொல்லி இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். அதாவது தொழில் சிறக்க வேண்டும் என்றாலோ, உங்களது வாழ்க்கைத் துணை உங்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றாலும், உங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றாலும், பணவரவு சீராக வர வேண்டும் என்றாலும், நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்றாலும், எந்த கோரிக்கையை வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அந்த கோரிக்கைகள் நேர்மறை எண்ணத்தோடு தான் வைக்கப்பட வேண்டும். நீங்கள் தியானம் செய்யும் 48 நாட்களும் ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கப்பட வேண்டும்.
நீங்கள் உங்களது இந்த தியானத்தை தொடங்கிய 21ஆவது நாளிலேயே உங்களது இலக்கை பாதி அடைந்துவிட்டதாக உணரமுடியும். அதாவது, கட்டாயம் உங்களது குறிக்கோள் பாதி நிறைவேறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.
பெண்களும் இந்த தியானத்தை செய்யலாம். தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் போது மாதவிடாய் நாட்களிலும் இந்த தியானத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தியானத்தின் இறுதியில் கையிலிருக்கும் உப்பினை தண்ணீரில் கரைத்து விடுங்கள். அந்தத் தண்ணீரை சாக்கடையில் ஊற்றாமல், மண்ணில் ஊற்றி விடலாம்.

‘தர்பணம்’ என்பது எதைக் குறிக்கிறது? ‘திவசம்’ என்பது எதைக் குறிக்கிறது?

நம் முன்னோர்களுக்காக கொடுக்கப்படும் தர்ப்பணமும், திவசமும் ஒன்றா? அல்லது வேறு வேறா? இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ‘தர்பணம்’ என்பது வேறு. ‘திவசம்’ என்பது வேறு. தர்பணம் என்றால் ‘திருப்தி’ செய்வதை குறிப்பதாக பொருள். இதை தினம்தோறும் செய்யலாம். அது ஒரு புண்ணிய காரியம். அதாவது சூரியன், வருணன், அக்கினி எல்லா தேவர்களும் நீர்நிலைகளில் நின்று தண்ணீரை இரண்டு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொண்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தேவர்களுக்கு நீரை சமர்ப்பணம் செய்து அதன்மூலம் ஆசீர்வாதத்தை பெறுவது.
ஆனால் அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இறந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டிய தினம் ‘அம்மாவாசை, இறந்தவர்களின் திதி அன்று’ இந்த இரண்டு தினங்கள் மட்டுமே. அதையும் கட்டாயமாக ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். இதைதான் தர்பணம் என்று சொல்லுவார்கள்.
அடுத்ததாக வருடத்திற்கு வரும் திவசம் என்பது, இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இருந்தார்களோ அந்த மாதம் அந்தத் திதியில் தான் திவசம் கொடுக்கப்படவேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது நட்சத்திரம் என்று சொல்வார்கள். அதாவது அவரவர் பிறந்தநாளை அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் கொண்டாடினால் தான் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
இதேபோல் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு திவசம் கொடுப்பது, அவரது திதியில் தான் கட்டாயம் கொடுக்கப்படவேண்டும். இறந்த தேதியை வைத்து திவசம் கொடுத்தால் அது கட்டாயம் நம் முன்னோர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. (சில பேர் பிறந்த தேதியை பார்த்து திதி கொடுக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அது தவறு) கட்டாயம் அவர்கள் இறந்த திதி அன்று தான் திவசம் கொடுக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் இறந்தவர்கள் இறந்த திதியில் தான் பூலோகத்திற்கு நம்மை தேடி வருவார்கள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் அமாவாசை அன்றும் பூலோகத்திற்கு வருகை தருவார்கள். ஆகவே, இந்த இரண்டு நாட்களை விட்டுவிட்டு அவர்கள் பூமிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு உணவளிப்பது எந்த ஒரு பயனும் இல்லை.
இறந்தவர்களுக்கு ஒரு மாதம் என்பது ஒரு நாளாக கருதப்படுகிறது. அந்த ஒரு நாள் அவர்கள் மறைந்து போன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் உணவை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்பணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
இப்படியாக இறந்தவர்களின் ஆத்மா எப்படி தன்னுடைய யாத்திரையை மேற்கொள்கிறது? அந்த சமயத்தில் இறந்தவர்களுக்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கருடபுராணம் விளக்கமாக சொல்லியுள்ளது. ஆனால் இந்த கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது. இறப்பு ஏற்பட்ட வீட்டில் மட்டுமே படிக்க வேண்டும் என்பது ஐதீகம். இறந்தவர்களது ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், தர்ப்பணத்தையும்,  திவசத்தையும் முறையாக செய்யப்படுவதே உத்தமம்.
இந்த சாஸ்திரங்களை முறையாக கடைபிடிக்காமல் விட்டால்தான் பித்ரு தோஷமும், பித்ரு சாபம் ஏற்படுகிறது. பித்ரு தோஷம் பித்ரு சாபம் என்றால் அவர்கள் நம்மை சபிப்பது கிடையாது. ஆனால், நமக்காக செய்யப்படும் காரியங்களை சரியாக செய்யவில்லையே, நமக்கான உணவு கிடைக்கவில்லையே என்று, இறந்தவர்களின் ஆத்மா ஒரு பெரு மூச்சு விட்டால்கூட அது நம்முடைய பரம்பரையே தாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

முடி கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி செழித்து வளர 10 நிமிட முத்திரை பயிற்சி போதும்.

முடி உதிர்வது என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒருவருடைய அழகை மேலும் கூட்டிக் காட்டுவது சிகை அலங்காரத்தில் தான் உள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு நூற்றில் என்பது பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய காரணமாக இருப்பது உண்ணும் உணவு மற்றும் மன அழுத்தம். பரபரப்பான உலகில் ஒரு மெஷின் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஓய்வு என்பதே குறைந்துவிட்டது. இதனால் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்து பிரச்சனையாக உருவெடுக்கிறது. முத்திரைகள் மூலம் பல பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டுவர முடியும். அதில் தலைமுடி உதிர்வது தடுக்கவும், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் செழித்து வளரவும் இந்த பயிற்சியை செய்தால் போதுமானது. அதைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இப்பதிவில் காணலாம்.
நம் கை விரல்களில் பஞ்ச பூத சக்திகள் உண்டு. அவற்றில் கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடு விரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் கொண்டுள்ளது. தியானம் மேற்கொள்பவர்கள் ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்து முத்திரை நிலைக்கு வருவார்கள். இதனால் மூளை தூண்டப்பட்டு மனம் ஒருமுகப்படும். மனதை அமைதிபடுத்த தினமும் குறைந்தது 10 நிமிடமாவது தியானம் மேற்கொள்வது சிறந்த பயிற்சியாக இருக்கும்.
உரசு முத்திரை:
தலை முடியை வளரச் செய்யும் செல்களை தூண்ட இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் குறைந்து போவதே முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரம்பத்திலேயே முடி உதிர்வதை சாதாரணமாக விட்டுவிடாமல் பிரச்சனையாக எடுத்து கொள்வதே நல்லது. தீவிரம் அடையும் போது தான் பலர் கவலைபட்டு கண்ட கண்ட எண்ணெயை வாங்கி உபயோகித்து பலன் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இரண்டு விரல்களிலும் இருக்கும் நகங்களை கீழே கொடுக்கபட்டுள்ள படத்தில் காட்டியவாறு உரச வேண்டும்.
குறைந்தது 10 நிமிடமாவது தொடர்ந்து இந்த பயிற்சியை செய்வது நல்லது. சீரான வேகத்தில் நகங்களை உரசி கொண்டிருப்பதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி இழந்த முடி வளர்ச்சியை தூண்டிவிட முடியும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு இழந்த முடியை திரும்பவும் முளைக்க செய்யும். இந்த பயிற்சியை செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் மற்றும் பின்னால் எதுவும் சாப்பிடக் கூடாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு உரசு முத்திரை என்று பெயர்.
அக்கு பிரஷர் முறை:
தலை முடி உதிர்வுக்கு அக்கு பிரஷர் முறையிலும் தீர்வு காண முடியும். அக்கு பிரஷர் முறையில் கை விரல்களில் தலையின் பாகங்களை தூண்டி விடக் கூடிய பாயிண்ட்கள் உள்ளது. பத்து விரல்களிலும் உள்ள நுனிப் பகுதியை கைகளை எடுக்காமல் 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். விரலின் நுனிப் பகுதியின் மேல் பாகத்தில் 14 முறையும், பக்கவாட்டில் 14 முறையும் இதே போல் கைகளை எடுக்காமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். பத்து விரல்களிலும் தினமும் 3 முறை இது போல் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு முறை செய்து விட்டு, பின்னர் 2 டம்ளர் தண்ணீர் குடித்து கொள்ளவும். பிறகு உங்களுக்கு நேரம் இருக்கும் போது இரண்டு முறை செய்யவும். இவ்வாறு செய்வதால் தலை முடி வேகமாக வளரும். தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து கொண்டே வந்தால் நிச்சயம் நல்ல பலன் விரவில் கண் கூடாக பார்க்கலாம் என்பது பலரும் பலன் கண்ட உண்மை. பக்க விளைவுகள் ஏதும் இல்லாத சிறந்த பயிற்சிகளை செய்து நன்மை அடையுங்கள்.

முதுகு வலியும்-இடுப்பு வலி !!!இயற்கை மருத்துவமும் (SCIATICA )

முதுகு வலியும்-இடுப்பு வலி !!!
இயற்கை மருத்துவமும் (SCIATICA )

இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.

நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.

சியாடிக்கா என்றால் என்ன?

நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

அறிகுறிகள்

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

காரணங்கள்:

• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.

• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.

• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.

• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.

வீட்டு வைத்தியம்:

• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.

• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.

ஆயுர்வேத அனுபவம்

முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.
முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.

மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.
ஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.

உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள்:

1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.

2. குப்புற படுக்கக் கூடாது.

3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.

5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.

6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.

7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.

8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.

9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.

10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.

12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.

13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.

14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.

15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.

16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.

உணவு முறை:

• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.

• பழைய உணவுகளை தவிர்க்கவும்.

• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.

• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.

• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
 
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.

• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.

• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

இனிய இரவு நல்வாழ்த்துக்கள்.

medical topic

வெற்றியையும், செல்வதையும் அடைய இதை விட சிறந்த நேரம் இல்லை என்கிறது சாஸ்திரம். அப்படி எந்த நேரம் அது?

நாம் அனைவரும் அறிந்தது நட்சத்திரங்களில் மொத்தம் 27 வகை என்பது தான். ஆனால் தொன்மை காலத்தில் முதல் நட்சத்திரமாக இருந்தது அபிஜித் என்கிற நட்சத்திரம் தான். இது பலரும் அறியாத ரகசிய உண்மை. 28 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரம் இருந்திருக்கிறது. இந்த அபிஜித் நட்சத்திரம் பிரம்ம முகூர்த்ததிற்கு இணையான சக்தியைப் பெற்றிருக்கிறது. பிரம்ம முகூர்த்தத்தில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் முழு வெற்றி கிடைக்கும். அதே போல் தான் அபிஜித் நட்சத்திரத்தில் எந்த காரியத்தை செய்தாலும் பரிபூரண வெற்றி கிடைக்கும்.ஜூலியன் காலண்டர்களில் அபிஜித் நட்சத்திரம் முகூர்த்த குறியீடுகள் மூலம் குறியிடப் பட்டிருப்பது இதனை உறுதி செய்வதாக இருந்து வருகிறது. அக்கால ரிஷிகளும், முனிகளும் இந்த நட்சத்திரத்தில் காரியங்களை தொடங்கி தங்களது வெற்றியை கண்டுள்ளனர். இந்த காலத்தில் கடவுளரை வழிபடுவதும், சுபநிகழ்ச்சிகள் செய்வதும் யோகமாக குறிப்பிடப்படுகிறது. நட்சத்திரத்தை வைத்தே முகூர்த்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முகூர்த்த நேரத்திற்கும் தோஷங்கள் நீக்கப்படுகின்றன. அவ்வகையில் அபிஜித் நட்சத்திரமும் தோஷம் இல்லாத நேரத்தை கொண்டிருக்கிறது. முகூர்த்த நேரம், நல்ல நேரம், பிரம்ம முகூர்த்தம் வரிசையில் அபிஜித் நேரமும் தோஷம் இல்லாமல் இருப்பதால் இந்த நேரத்தில் செய்யும் சுபகாரியங்கள் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறியீடு இருக்கும். இந்த அபிஜித் நட்சத்திரத்திற்கும் ஒரு குறியீடு உள்ளது. நான்கு பாதைகளை ஒன்றிணைக்கும் நாற்சந்தியை வடிவமாக பெற்றிருக்கிறது. இது நான்கு வேதங்களையும் குறிக்கிறது. வேததர்ம நெறியில் வாழ்ந்தால் வெற்றி கிட்டும் என்று பொருள் உள்ளது. வியாபாரம் செழிக்க, இழந்த பொருட்களை மீட்க, அனைத்திலும் வெற்றி பெற இந்த அபிஜித் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தலாம். அபிஜித் நேரம் கூட்டத்தோடு கூட்டமாக இருந்த போது அதற்கு அவ்வளவு சக்தி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அது தனித்து பிரிந்து போன போது போது மிகுந்த சக்திகளைப் பெற்றதாம். இதனை அறிந்த ரிஷிகளும், முனிகளும் தங்களது சக்தியை பெருக்கிக்கொள்ள அபிஜித் நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்.அபிஜித் நேரம் தினமும் வருவது தான். சூரிய உதயத்திற்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல, சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருவது தான் அபிஜித் நேரம். இதனை உச்சிவேளை என்று நாம் வழக்கத்தில் கூறி வருகிறோம். 12 மணிக்கு உச்சி வேலை ஆரம்பம் ஆகிறது அல்லவா? எனவே 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் நேரம் என்றாகிறது. சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள். ‘ஜித்’ என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும்.அபிஜித் நேரத்தில் அர்த்தநாரீஸ்வரரின் அம்சத்தில் விளங்கும் திருநங்கைகளுக்கு வயிறார ஒரு வேளை உணவு அளித்து அவர்களிடமிருந்து பத்து ரூபாய் பெற்றாலும் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. முக்கிய நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து அபிஜித் நட்சத்திரம் பிரிந்து காணப்பட்டாலும் அதற்குரிய சக்திகள் தினமும் பெருகி கொண்டே இருக்கிறது என்று வானியல் சாஸ்திரிகள் கூறியுள்ளனர். திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும். இதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த நட்சத்திரத்தை பார்த்துவிட்டால் அனைத்து காரியங்களும் வெற்றி தான்.நம்மை படைத்த இறைவனுக்கே சில புராணங்களில் அபிஜித் நேரத்தில் வெற்றி தந்ததாக வரலாறுகள் உள்ளன. ரிஷிகளும், முனிகளும் மட்டுமன்றி, தேவர்களும், தெய்வங்களும் கூட இந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். அவர்களால் படைக்கப்பட்ட மனிதர்களும் அபிஜித் நேரத்தை சரியாக பயன்படுத்தி அனைத்திலும் வெற்றி காணலாம்.

திருஷ்டி கழிப்பதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறதா! அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்றீங்களா?

குழந்தைகளுக்கு திருஷ்டி கழிப்பதற்கு பலவகையான வழிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருந்தாலும், நம் முன்னோர்கள் சொன்ன வலுவான ஒரு சில முறைகளை நாம் தவற விட்டிருக்கின்றோம். காலப்போக்கில் அவை எல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லி மறைந்தே போய்விட்டது. அதில் சிலவற்றை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் சில பேருக்கு தெரிந்து இருந்தாலும், வீட்டில் இதை செய்ய மாட்டார்கள். வீட்டில் இந்த குறிப்புகளை பயன்படுத்தி எப்படி திருஷ்டி கழிக்கலாம், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்தப் ஒரு பொருளை நாம் எல்லோரும் மறந்து இருப்போமோ என்னமோ! தெரியவில்லை! அந்த காலங்களில் எல்லாம் வீடு கூட்டுவதற்கு பூந்துடைப்பத்தை தான் பயன்படுத்துவார்கள். இப்போது வீடு கூட்டும் துடைப்பமும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிவிட்டது. அந்த பூந்துடைப்ப குச்சியை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அந்த காலங்களில்  பச்சிளம் குழந்தையும், குழந்தை பெற்ற தாய்மாறும் பட்சி தோஷம் தாக்கிவிடும் என்று மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வர மாட்டார்கள். அந்த குழந்தையின் துணி ஆறு மணிக்கு மேல் வெளியில் காய்ந்தால் கூட இந்த தோஷம் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி தோஷம் தாக்கிவிட்டால் பாடம் போடும் பழக்கம் அந்த காலங்களில் இருந்து வந்தது. அதாவது மந்திரித்து தாயத்து போடுவார்கள். இப்போது மந்திரிப்பவர்களையும் தாயத்து போடுபவர்களை தேடுவது கொஞ்சம் சிரமமாக உள்ளது.இந்த தோஷம் குழந்தைக்கு தாக்கினால், குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்கும், சலசலவென்று அழுதுகொண்டே இருக்கும். இப்படி இருக்க அந்தக் குழந்தையை, தாயின் மடியில் படுக்க வைத்து இந்த பூந்துடைப்ப குச்சியில் 8 எடுத்து, அந்த குச்சியின் கீழ் முனையை கைகளால் பிடித்து கொள்ள வேண்டும். குழந்தையின் இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி, பின் தலை முதல் கால் வரை மேலிருந்து கீழாக மூன்றுமுறை தடவி(மெதுவாக தடவ வேண்டும்), அந்த குச்சியை உங்களது வீட்டு தென்கிழக்கு மூலையில் வைத்து கொளுத்தி விட வேண்டும்.
இப்படி செய்தால், அந்த குச்சியானது எரியும் போது, உங்களது குழந்தைக்கு இருக்கும் தோஷம், கண் திருஷ்டி அனைத்தும் குழந்தையை விட்டு சென்றுவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. இது பல பேருக்கு பலன் தந்த குறிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக இன்னொரு பரிகாரத்தையும் பார்த்துவிடலாம். மயிலிறகை உங்களது வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு மயிலிறகை வாங்கி வைத்துக் கொண்டால் போதும். முருகர் கோவிலுக்கு செல்லும்போது இந்த மயிலிறகு சுலபமாக கிடைக்கும். அதை வாங்கி எப்பவும் உங்களது பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களது குழந்தை சிறிய குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் பெரிய குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை.அவர்கள் எங்காவது சென்று விளையாடும் போது எதையாவது பார்த்து பயந்திருந்தால், சில பிரச்சனைகள் வரும். அதை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடலாம். சரியாக சாப்பிட மாட்டார்கள். சோர்வாக இருப்பார்கள். முகம் களை இழந்து இருக்கும். ஆனால் மருத்துவரிடம் கூட்டிச் சென்றால் எதுவுமே இல்லை என்று சொல்வார்கள்.இப்படிப்பட்ட பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு இந்த மயில் இறகை வைத்து சுலபமாக பயத்தைப் போக்கி விடலாம். முதலில் உங்களது வீட்டு பூஜை அறையில் இருக்கும் மயிலிறகை எடுத்து சாமி படத்திற்கு முன்பாக வைத்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களது குழந்தையை கிழக்கு பக்கமாக நிற்க வைத்து உச்சி முதல் பாதம் வரை, அந்த மயிலிறகால் வருடி திருஷ்டி கழிக்க வேண்டும்.இப்படி திருஷ்டியை கழிக்கும்போது அந்த ஆண்டவனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். (இந்தக் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அது நீங்க வேண்டும் என்றவாறு வேண்டிக் கொள்ளுங்கள்.)7 முறை மேலிருந்து கீழ் பக்கமாக தடவி விட வேண்டும். அல்லது 11 முறை தடவை விடலாம். மயிலிறகு அந்தக் குழந்தையின் உடம்பில் படவேண்டும். திருஷ்டியை கழித்ததும் குழந்தையை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போக சொல்லிவிட்டு, அந்த தோகையை மூன்று முறை ஒதறி விடுங்கள்.  நீங்கள், உங்களது கை கால்களையும் கழுவிக்கொண்டு, அந்தத் தோகையை மறுபடியும் பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். சிறிய குழந்தைகள் விடாமல் அழுது கொண்டே இருந்தாலும் இந்த முறையில் திருஷ்டி கழிப்பது மிகவும் சிறந்தது.இந்த காலகட்டத்தில் பட்சி தோஷம் எல்லாம் பார்ப்பது வழக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், சில சமயங்களில் எதற்காக தான் குழந்தை அழுகிறது என்று தெரியாமல் பல பேர் குழப்பத்தில், பல பிரச்சனைகளை சந்திக்க தான் செய்கிறார்கள். மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாலும், சில பிரச்சனைகள் தீரவே தீராது. மருத்துவமனைக்கு கூட்டி செல்லக் கூடாது என்று சொல்லவில்லை. மருத்துவரை அணுகுவதோடு, நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் இந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில் தவறில்லை என்பதை தெரியப்படுத்துவதற்காக தான் இந்த பதிவு.

ஏப்ரலில் பிறந்தவர்கள் இப்படி பட்டவர்களா? இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ!!

பிறந்த மாதத்தை கொண்டு பொதுவான பலன்களை கூற முடியும். ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள். இதில் ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்? அவர்களிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? அவர்களின் நல்ல குணம் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன.? அவர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
இவர்கள் எப்போதும் தங்களின் இதயத்தை கேட்டு செயல்படுபவர்களாக இருப்பார்கள். எனினும் புத்திசாலித்தனத்துடனும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். இவர்களை பார்ப்பவர்களுக்கும் இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கும்.
பிறருக்கு அறிவுரை கூறுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் விவேகத்துடன் செயலாற்றுவார்கள். ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தைரியமானவர்களாக இருப்பார்கள். எதை கண்டும் அஞ்ச மாட்டார்கள். பின்னால் வருவதை பற்றி கவலைப்படமாட்டார்கள். அவர்களுடைய பணியை சிறந்ததாக செய்து முடிப்பதில் கவனமாக இருப்பார்கள்.
தோல்வியை கண்டு சிறிதும் கலக்கம் கொள்ள மாட்டார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். வெற்றியை நோக்கி செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் மன தைரியம் பல நல்ல வாய்ப்புகளை இவர்களுக்கு பெற்று தரும். இவர்கள் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாக இருக்கும்.
ஆளுமை திறன் அதிகமாக காணப்படும். எனினும் இவர்களிடம் தலைகணம் இருக்காது. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து சாதனை புரிபவர்களாக திகழ்வார்கள். பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு எப்போதும் இவர்கள் பயப்படுவதில்லை.
எந்த வேலை செய்தாலும் அதை மிகவும் ரசித்து ரசித்து செய்வார்கள். ரசனை மிக்கவர்களாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதும், சாதனைகள் புரிவதும் இவர்களின் குறிக்கோளாக இருக்கும். அதற்காக விடா முயற்சிகளை மேற்கொள்வார்கள். சலித்துப் போகமாட்டார்கள்.
இவர்கள் மற்றவர்களுக்கு உண்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போலவே அவர்களிடம் பழகுபவர்களும் உண்மையாக இருப்பதில் ஆர்வம் கொள்வார்கள். அப்படி இவர்களிடம் உண்மையில்லாத நபர்களை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் மேற்கொள்வார்கள்.
பணத்தைவிட அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவர் மேல் அன்பு வைத்து விட்டால் அது முழுமையான அன்பாக இருக்கும். எளிதில் அனைவரையும் கவர்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்து விடுவார்கள். மிகவும் கலகலப்பானவர்கள்.
இவர்களின் காதல் உண்மையானதாக இருக்கும். எளிதில் அனைவரையும் நம்பி விடுவார்கள். மிகவும் ரொமான்டிக் ஃபர்சனாக இருப்பார்கள். இவர்களின் அன்பும், கவர்ச்சியும் எளிதில் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். இவர்களின் காதல் தோற்கும் பட்சத்தில் துறவரம் மேற்கொள்ளும் அளவிற்கு இவர்களின் அன்பு உன்னதமானதாக இருக்கும். இவர்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சிகரமானதாகவும், ரசிக்கும் படியும் இருக்கும்.
இவர்களிடம் இருக்கும் மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் சிறிதும் பொறுமையின்றி இருப்பார்கள். பொறுமையின்மை இவர்களின் பலவீனமாக இருக்கும். பதில்களுக்கும், முடிவுகளுக்கும் காத்திருக்க மாட்டார்கள். மற்றவர்களை எடை போடுவதில் கோட்டை விட்டு விடுவார்கள்.
பெரிய பெரிய விஷயங்களில் எல்லாம் பொறுமையாக இருந்து விட்டு, சிறிய விஷயங்களுக்காக சண்டை போடுவார்கள். சிறு சிறு விஷயங்களில் இன்பத்தை தேடுபவர்கள் இவர்கள். இதனால் சிலரின் வெறுப்புகளுக்கு ஆளாகவும் நேரிடும் என்பதை புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் குறுகிய மனப்பான்மை இருக்கும். இதனால் இவர்களை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும். மற்றவர்களின் கண்களுக்கு சுயநலக்காரர்களாக தெரிவார்கள். எந்த விஷயத்திற்கு பரவசப்பட வேண்டும்? எந்த விஷயத்திற்கு அடக்கி வாசிக்க வேண்டும்? என்பதை உணர முடியாதவர்களாக இருப்பார்கள். அதுவும் இவர்களின் பலவீனமாக இருக்கும். எதிலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருப்பதனால் சிலரின் அதிருப்திக்கு ஆளாவார்கள்.
கோபத்தை குறைத்து அடுத்தவர்களின் இடத்தில் நின்று சிந்தித்து செயல்பட்டால் இவர்களுக்கு வெற்றி நிச்சயம். பலவீனத்தை பலமாக மாற்றினால் அனைத்தும் வசப்படும். வாழ்த்துக்கள்.

புற்றுநோய் தடுக்க - சித்தர்கள் அருளிய அற்புத மருந்து:-

புற்றுநோய் தடுக்க - சித்தர்கள் அருளிய அற்புத மருந்து:-

வெற்றிலையை இடித்து ஒரு லிட்டர் அளவுக்குச் சாறெடுத்து, அதில் கால் கிலோ மஞ்சளை ஊற வைத்து உலர்த்தவும். பின்னர் கீழாநெல்லியை இடித்து ஒரு லிட்டர் அளவில் சாறெடுத்து, அதில் ஏற்கெனவே உலர்த்திய மஞ்சளை மீண்டும் இந்தச் சாற்றில் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல் தான்றிக்காய் தோல் ஆகியவற்றை வகைக்கு கால் கிலோ அளவில் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள்செய்து பத்திரப்படுத்தவும். தினமும் அதிகாலையில் தண்ணீரில் கலந்து குடிக்கவும். 

மானுட குலம் மேம்பட சித்தர்கள் அருளிய அற்புத மருந்து இது. இதனை உதாசீனப்படுத்தாமல் புற்று நோய்க்கு உட்பட்டோரும், புற்று நோயைத் தடுக்க நினைப்போரும் காப்பு மருந்தாய்க் கொள்ளலாம்.

பணத்தை ஈர்க்கும் இந்தச் செடிகளை உங்கள் வீட்டில் இப்படி வைக்கக்கூடாது !! எப்படி வைக்கனும்னு தெரிஞ்சுக்கோங்க !!

பணத்தை ஈர்ப்பதற்கு என்னவெல்லாம் வழி இருக்கின்றதோ, அதை எல்லாம் நாம் தேடி தேடி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். அதை சரியாக செய்கிறோமா? என்பது தான் கேள்வி. பணம் சேரும் என்று யார் எதைக் கூறினாலும், முதலில் அதை செய்துவிடக்கூடாது, ‘இதை செய்தால் நல்லது நடக்குமா’ என்று சிந்திப்பதை விட, ‘கெட்டது நடக்காமல் இருக்குமா’ என்று சிந்தித்துப் பார்த்து விட்டு பின்பு அதனை செயல்படுத்துவது நன்மை தரும். சிலர் பணத்தை ஈர்ப்பதற்காக குறிப்பிட்ட செடிகளை எல்லாம் வீட்டில் வளர்த்தால் நன்மை என்று கூறுவார்கள். அதைக் கேட்டு நம் வீட்டில் அந்த செடிகளை எல்லாம் வாங்கி வைப்பது தவறு ஒன்றுமில்லை. ஆனால் அதை முறைப்படி வைப்பது மிகவும் அவசியம். எந்தெந்த செடிகளை எப்படியெல்லாம் வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பணத்தை ஈர்ப்பதற்காக நம்மில் பல பேர் வீட்டில் வைத்திருக்கும் செடி மணி பிளான்ட். இந்த செடியை வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. வாஸ்துப்படி இந்த செடியை வீட்டில் வைத்தால் பணம் வரும். ஆனால் இந்த செடியை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்? கட்டாயம் பூமியில் புதைத்து வைக்கும், மணி பிளானட்ற்க்கு சக்தி அதிகம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வேரானது நம் வீட்டு பூமியில் புதைந்து இருக்க வேண்டும். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள், இடம் இல்லாதவர்கள் என்ன செய்வது? தொட்டியில் அந்த செடியினை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தொட்டியானது தரையில் தான் இருக்க வேண்டுமே தவிர, ஆணியில் மாட்டி தொங்க விடக்கூடாது. அழகிற்காக தொங்க விடுவதில் தவறில்லை. ஆனால் தொங்கவிடப்பட்ட மணி பிளான்ட் மூலம் நமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது என்பதுதான் உண்மை.
அடுத்ததாக தொட்டாச்சிணுங்கி செடியை நம் வீட்டில் வைப்பது செல்வ வளத்தை தரும். இப்படிப்பட்ட பலன்தரும் செடிகளை பூமியில் இருந்து எடுக்கும்போது அப்படியே பிடுங்கி எடுக்க கூடாது. பூமியிலிருக்கும் வேரானது முழுமையாக தோண்டி எடுக்கப்பட வேண்டுமே தவிர, அரைகுறையாக பிடுங்கி எடுத்து நம் வீடுகளில் கொண்டு வந்து வைப்பது தவறு. தொட்டாச்சிணுங்கி செடியை வீட்டின் பின்பக்கமாக தான் வைக்கவேண்டும். ஏனென்றால் தனிமையை விரும்பும் செடி இது. முன்பக்கத்தில் வைப்பதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நன்மையும் ஏற்படாது. பின் பக்கத்தில் வைப்பது நன்மை தரும்.
முடிந்தவரை துளசி செடியையும் வீட்டின் பின்புறம் வைப்பது நல்லது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் வீட்டு வாசலில் இருக்கும் துளசிச் செடியை வெளி நபர்கள் அனைவரும் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது. துளசி செடிக்கு தூய்மை முக்கியம். எல்லோரும் எல்லா நேரத்திலும் தூய்மையாக தான் இருப்பார்கள் என்று கூறிவிடமுடியாது. நம் வீட்டுத் துளசி செடியை பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. முடிந்தவரை துளசிச் செடியையும் வீட்டிற்கு பின் புறத்தில் வைத்துக் கொள்வது நன்மை தரும்.

தயிர் தரும் சுக வாழ்வு

தயிர் தரும் சுக வாழ்வு.

* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.

* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.

* தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.

* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.

* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.

இனிய இரவு நல்வாழ்த்துக்கள்.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்

*சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்...!*

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

"விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி"

- அகத்தியர் குணபாடம்

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்
பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. 

தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன.

இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். 

அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர் செய்கின்றனர். 

இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.

முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். 

அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. 

இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். 

கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். 

இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். 

பார்வை மங்கலாகத் தெரியும். 

இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. 

இதை வெள்ளெழுத்து என்பார்கள். 

இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும்.

கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். 

இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். 

இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. 

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும்.

பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன.

இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். 

இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். 

இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கி விடுகின்றனர்.

இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர்.

மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. 

இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

குடம்புளி(கொடம்புளி

இக்காலத்தில் சமையலில் நாம் பயன்படுத்தும் புளி நம் பயன்பாட்டில் வந்தது கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்புதான். 
அதற்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்தியது குடம்புளி(கொடம்புளி)என்னும் பழம்புளியே.இதை தற்போது மிகுதியாக பயன்படுத்தும் கேரளத்தில் இதற்குப் பெயர் மலபார் புளி. 

இந்தோனேசியாவை தாயகமாகக் கொண்ட குடம்புளி தாய்லாந்து, மலேசியா, நம் நீலமலை மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள் ஆகிய பகுதிகளில் மிகுதியாக பயிராகிறது. 

தற்போதைய புளியை விட மருத்துவ பலன் நிறைந்த இது புளிப்புடன் துவர்ப்பும் நிறைந்தது. இப்பழத்தை நன்கு உலர்த்தி வைத்துக் கொண்டால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

உடல் எடையைக் குறைப்பதற்கான மருத்துவ வில்லைகளில் இதை சேர்ப்பதால் இதன் விலை வழக்கமான புளியை விட மும்மடங்கு விலையில் சந்தையாகிறது. 

நல்ல மணம் நிறைந்த இதில் மீன் குழம்பு செய்தால் அந்தத் தெருவே மணக்கும் சிறப்புடையது. நாட்டு மருந்து கடையில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி இப்பொழுது பரவலாக காய் கனிக் கடைகளிலும்  கிடைக்கத் தொடங்கியுள்ளது. 

நாமும் சில நலக்கேடுகளைக் கொண்ட வழக்கமான புளியிலிருந்து குடம்புளிக்கு மாறுவோம். 

நமது தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணையில் வளர்ந்து வரும் குடம்புளி மரங்கள். 
இன்னும் கூடுதலாக குடம்புளி மரங்களை வளர்க்க எண்ணியுள்ளோம். 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு உணவுக்காடு. 

        வாழ்க ஐயா நம்மாழ்வார்.

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

Wednesday, 22 April 2020

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்க

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்க:

  • சுட வைத்த நீரை குடிக்க வேண்டும்.
  • தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு மூச்சு பயற்சி, யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்.
  • சமையலில் மஞ்சள், சீரகம், மல்லி மற்றும் பூண்டு ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆயுர்வேத முறையில் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பது எப்படி?

  • சியாவன்பிராஷ் லேகியத்தை தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சக்கரையற்ற சியாவன்பிராஷை மட்டும் ஒரு தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும்.
  • தேன், நெய், பழங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே ஆயுர்வேதத்தில் சியாவன்பிராஷ் எனப்படும்.
  • மூலிகை தேநீர் அல்லது துளசி, பட்டை, மிளகு, சுக்கு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை கொண்டு செய்த கசாயத்தை ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம். தேவைப்பட்டால் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறை அதனுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து 150 மில்லிலிட்டர் சூடான பாலை நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.

எளிய ஆயூர்வேத நடைமுறைகள்

  • நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை மூக்கின் இரு நாசிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் தடவ வேண்டும்.
  • ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். பிறகு சூடான நீரை வைத்து வாயை சுத்தம் செய்து கொள்ளலாம். இது ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.

கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள்

கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.

செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.

பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்.

வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களும் நீங்கும். இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் அகலும்.

பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகலாம். கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும். கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் ஊற்றி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு தடவி வர குணம் கிடைக்கும் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

Tuesday, 21 April 2020

வீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா?

விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டம் வந்து சேரும்.
உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை பல வழிகளில் வைக்கலாம். ஒரு புகழ் பெற்ற வழி - வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு எதிராக விநாயகர் சிலையை வைப்பது. இந்த திருஷ்டி விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. விநாயகரை இப்படி வைத்தால் அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார்.

விநாயகரை முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும். ஏன் என்று தெரியுமா? ஏதேனும் அறையில்  விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. அதனால் அதனை ஈடு செய்யும்  விதமாக மற்றொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும்.

வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகர் வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்க வேண்டுமானால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க  வேண்டும்.

வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் என்றால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் செலுத்த வேண்டும். இவைகளை வீட்டில் செய்வது கடினம். அதனால் தான் இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே பார்க்க முடியும். அதனால் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக உள்ள அல்லது காற்றில் இருக்கும்  தும்பிக்கையை கொண்ட விநாயகரை வையுங்கள்.

எந்த கிழமைகளில் ருதுவானால் என்ன பலன்கள்...!

பெண்ணின் பருவத்தில் ருதுவாவது ஒரு முக்கிய கட்டமாகும், ஜனன காலத்தை வைத்து ஒருவருடைய வாழ்க்கையை கணிப்பது போல் ருதுவான கலத்தை வைத்து ஒரு பெண்ணின் நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் கூற முடியும். ஒரு பெண் ருதுவாகும் கிழமையை  வைத்தும் அவளுடைய பொது பலன்களை கூறலாம்.
ஞாயிற்றுக்கிழமை: ருதுவான பெண்கள் அழகாக இருப்பார்கள். சிறிது படபடப்பு சுபாவம் கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்கள் செய்யும்  செயல்களால் ஏதாவது தவறுகள் நேர்ந்துவிடக்கூடும். இவர்கள் கணவனின் கருத்துக்கு மாறுபாடு கொண்டவர்களாக இருப்பர். கணவனை தன்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பர். அவ்வாறே பெரும்பாலும் நிகழ்ந்துவிடுவதும் உண்டு. இவர்களுக்கு அதிக குழந்தைகள் இருக்காது.
 
திங்கட்கிழமை: ருதுவாகும் பெண்கள் பெரும்பாலும் குளிர்ந்த உடலை கொண்டவர்களாக விளங்குவர். பெரும்பாலும் கனவுலகில் மிதப்பர். இவர்களை பல நோய்கள் வாட்டி எடுக்கும். இவர்களின் பேரழகும், கணவனின் ஏகப்பட்ட பிரியமும் ஒன்று சேர்வதால் இவர்களுக்கு நிறைய  குழந்தைகள் பிறக்கும்.
 
செவ்வாய்க்கிழமை: ருதுவாகும் பெண்கள் போர்க்குணத்திடன் விளங்குவர். இவர்களிடம் வாய் கொடுத்து தப்ப முடியாது இவர்களை யாரும் அவ்வளவு சுலபத்தில் காதலிக்க முடியாது. அதிகமான உஷ்ண உடம்பை கொண்டவர்கள். அடிக்கடி நோய்வாய்படுவார்கள். கண்வனை மதிக்க  மாட்டார்கள்.
 
புதன்கிழமை: இந்த கிழமையில் ருதுவாகும் பெண்கள் அறிவாளிகளாக திகழ்வார்கள் கலைத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், மெல்லிய உடல்வாகு உடையவர்கள். ஆனால் கவர்ச்சியாக இருப்பர். இவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணம் நடக்கும் சுகபோக வாழ்கை  நடத்துவர்.
 
வியாழக்கிழமை: இந்த கிழமையில் ருதுவான பெண்கள் நற்குணம் கொண்டவர்களாக இருப்பர். அழகான இவர்களிடம் தெய்வ பக்தி மிகுந்து  இருக்கும். கணவன் சொல்படி நடப்பார்கள். இவர்கள் அதிக பிள்ளைகள் பெறுவார்கள்.
 
வெள்ளிக்கிழமை: இந்த கிழமையில் ருதுவான பெண்கள் கவர்ச்சியாக இருப்பார்கள். கலை ஆர்வம் உடையவர்கள். தெய்வபக்தி உடையவர்கள்.  இவர்களிடம் பணபுழக்கம் அதிகமாக இருக்கும். அழுக்கு துணிகளை அணிய மாட்டார்கள். தாய் வீட்டை விட, புகுந்த வீட்டில் மேலும்  செழிப்புடன் வாழ்வார்கள்.
 
சனிக்கிழமை: இந்த கிழமையில் ருதுவான பெண்கள் கருப்பு நிற்த்தில் இருப்பார்கள். இவர்களிடம் சோம்பல் குடி கொண்டு இருக்கும். குண்டாக இருப்பார்கள். அடாவடியாக இருப்பார்கள். கணவனை மதிக்க மாட்டார்கள் இவர்கள் குடும்பத்தில் பிரச்சனை இல்லாத நாட்களே  கிடையாது.