jaga flash news

Friday, 30 July 2021

செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?

செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?

 லக்னத்துக்கு 2, 4, 8, 12  ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அதனை ஒரு சிலர் செவ்வாய் தோஷ ஜாதகம் என முடிவு செய்கின்றனர்.

1.   கடக லக்னம்சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

2.   செவ்வாய் அமர்ந்துள்ள இரண்டாம் வீடு மிதுனம்கன்னி வீடுகளாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

3.   செவ்வாய் அமர்ந்துள்ள 4 ஆம் இடம் மேஷம்விருச்சிக ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

4.   செவ்வாய் இருக்கும் ஆகிய 7 – ஆம் இடம் கடகம்மகரம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

5.   செவ்வாய் இருக்கும் ஆகிய 8 ம் இடம் தனுசுமீனம் ராசியாக இருந்தால்  செவ்வாய் தோஷம் இல்லை.

 

6.   செவ்வாய் இருக்கும் ஆகிய 12 – ஆம் இடம் ரிஷபம்துலாம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

7.   சிம்மம் அல்லது கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

8.   செவ்வாய் குருவுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

9.   செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

10.  செவ்வாய் புதனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லைபுதன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

11. செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும்சூரியன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

12. செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி (கிரகம்லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 இவற்றை ஆகிய இடங்களில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

 

13. லக்னத்துக்கு 8, 12 ல் செவ்வாய் உள்ள ராசி மேஷம்சிம்மம்விருச்சிகம்மகரம் ஆகிய ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

  14.  செவ்வாய் தனது உச்ச வீடான மகரம்சொந்த வீடான மேஷம்,           விருச்சிகத்தில் இருந்தால் தோஷம் இல்லை.

15. சனிராகு – கேது இவர்களுடன் கூடியாவதுஇந்த கிரகங்களால் பார்க்கப்பட்டாவது  செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

16. செவ்வாய் தன் நண்பர்கள் வீடான சூரியன்சந்திரன்குருஇவர்கள் வீட்டில் – அதாவது சிம்மம்கடகம்தனுசுமீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

பரிகாரம்

ஆண் – பெண் இருவருக்கும்வள்ளி – தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியில் திருமணம் செய்ய வேண்டும்அல்லது திருமணம் ஆனவுடன் தம்பதியர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விட்டுதிருச்செந்தூர் அல்லது திருத்தணி சென்று முருகப் பெருமானை தரிசித்து வணங்கி வர வேண்டும்செவ்வாய் தோஷம் விலகும்.

புத்தகம் வாசித்தவன்

#ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் #மகாத்மா...

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் #ஜவஹர்லால் நேரு...

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் #பெட்ரண்ட்_ரஸல்...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் #ஆல்பர்ட்_ஐன்ஸ்டீன்...

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் #நெல்சன்_மண்டேலா...

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி #லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் #சார்லிசாப்லின்..

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் #வின்ஸ்டன்_சர்ச்சில்...

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் #மார்டின்_லூதர்கிங்...

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் #பகத்சிங்...

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
#ஆபிரகாம்_லிங்கன்...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி
– #ஜூலியஸ்_சீசர்...

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– #டெஸ்கார்டஸ்...

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– #இங்கர்சால்...

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– #பிரான்சிஸ்_பேக்கன்...

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– #லெனின்...

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– #ஆஸ்கார்_வைல்ட்...

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– #சிக்மண்ட்_ஃப்ராய்ட்...

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– #மாசேதுங்...

வாசிக்கும் பழக்கம் ஓர் #மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...

உலகில் வாழ்ந்து மறைந்த #மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் #வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்...

#புத்தகம் மடையனை #மனிதனாக்கும்
இதை நான் கூறுவது அனுபவத்தில்
உண்மையும் தான் ~

Thursday, 29 July 2021

13 தலைமுறைக்கு மேல் y குரோமோசோம்கள் வலுவிழந்து பயனற்று போய்விடும்

ஆண்டியை அரசனாக்குவதும்:- அரசனை ஆண்டி ஆக்குவதும் நம் குல தெய்வமே!!!!!...... குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் "விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? சற்று ஒரு பார்வை... குலதெய்வம்... குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். நாம் வணங்கும் தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும். குல தெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது... எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் "குலதெய்வங்கள்" என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே நம் குல தெய்வம் மகிழ்வோடு இருக்கிறாளா?இல்லையா? என்பதைக் காண்பித்து விடும். இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது? நம் முன்னோர்கள்... அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை... இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குல தெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்... இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று... அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!... விஞ்ஞான முறையில் யோசித்தால்... ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே!... ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமசோமே முடிவு செய்கிறது. தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்... இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது... வழி வழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து... இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்... பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்... பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை... ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்... அதனால் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது... பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்... புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்... திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வணங்குவது கிடையாது... அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும். இது வரை யாரும் பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல் போல் தழைத்து, அருகு போல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்... குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி அல்லது குறைந்தது வருடம் ஒரு முறையாவது செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு மனதார உதவுங்கள். குல தெய்வத்திற்கு சரியான உணவு படைக்கப் படுகிறதா? மகிழ்வூட்டும் மலர்கள் படைக்கப் படுகிறதா? அபிஷேக பொருட்கள் தூய்மையாக உள்ளதா? எத்தனை வகை அபிஷேகம் அளிக்கப் படுகிறது? குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் போற்றப் படுகிறதா? தெய்வத்தை வழிபாடு செய்யும் மனமார்ந்த அர்ச்சகர் உள்ளாரா? என்பதை கண்காணிப்பது ஒவ்வொரு பக்தனின் கடமை என்பது நினைவிருக்கட்டும். "நமக்கென்ன" என்று இருந்தீர்கள் என்றால் அதுவும் உங்களுக்கு தெய்வ குற்றமே!. நான் வெளியூரில் இருக்கிறேன் என்று தப்பவும் இயலாது. ஒரு குடும்பத்தில் தொடர்ந்து பெண் பிள்ளைகளே பிறந்து கொண்டிருந்தாள்அந்த குடும்பத்திற்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்று அர்த்தம் அதற்கு குல தெய்வத்தின் வழிபாடு பூஜை அவசியம் தேவை என்று புரிந்து கொண்டு ஆவன செய்ய வேண்டும்!!!.... இதை முழுவதும் படித்து இதை அறிந்து கொண்டு செயல்படுபவர்கள் பாக்கியவான்கள் அவர்களின் குல தெய்வம் அவர்களுக்கு விளக்காக இருந்து இருள் நீக்கும்!!...

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதன் கிடைக்கும் பலன்கள்

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதன் கிடைக்கும் பலன்கள் பற்றிய பதிவுகள் : பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால், பெரும் இடையிறுகள் நீங்கும் வாய்ப்பு வரும். கடன் தொல்லை தீரும்; கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை - 3.30 am to 6.00 am. குறிப்பிட்டு கூறினால் சூரிய உதயத்திற்கு முன் 48 நிமிடத்திற்கு முன்னால் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது. அந்த அதிகாலை நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரத்தில் எழுந்து, படித்தால், அவை மனதில் பதியும் என்பது உறுதி. அதேபோல், பிரம்ம முகூர்த்தத்தில், பெண்கள் படுக்கையை விட்டு எழுந்துவிடுவது நல்லது. இதற்கு இன்னொரு காரணமும் சொல்லுகிறார்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான், தேவர்களும் பித்ருக்களும் நம் இல்லங்களுக்கு வருவார்கள் என்பதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் நாம் தூங்கிக் கொண்டிருந்தால், வரவேற்காமல் இருக்கிறார்களே என்று அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்களாம். எனவே, தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து திருநீறு இட்டுக்கொண்டு வாசல் கதவை திறந்து இறைவனை வேண்டி வாங்கி வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர் கூற்று . பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிடுவது சிறந்தது. அடுத்து பிரம்மமுகூர்த்தத்தில். அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சிவ மந்திரம் சொல்லலாம். அப்படி சொல்லச் சொல்ல, உள்ளுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும். மேலும் வீட்டில் அதுவரை இருந்த கஷ்ட நிலையெல்லாம் மாறும். கடன் தொல்லை யெல்லாம் தீரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து வழிபடுவது மிக்க சிறப்பை தரும்.

Tuesday, 27 July 2021

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோம்

*கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!*

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும்.
தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும்.
மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும்.
வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது

2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம்.
அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.

3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது.
என தைத்தரீயோபநிஷத் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

4. அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும்.
ஆயுள் குறையும்.
எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

5. பசிக்கும் போது மட்டுமே தான் சாப்பிட வேண்டும்.

6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. 
உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. 
வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 

10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. 
படிக்கக் கூடாது. 
இடதுகையை கீழே ஊன்றக் கூடாது

14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.

16. சூர்ய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. 
பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.

24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

26. வெள்ளித் தட்டில் மற்றும் வாழை இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ; ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

30. அதே போல் முதலில் கீரையோ  வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

*வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை:*

1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 

5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.

9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 

12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.

13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. 
மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.

இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.

அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌

ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.

முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !!

ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.

Sunday, 25 July 2021

இரவு தூங்கும் முன் உப்பை இப்படி செய்து விட்டு தூங்கினால் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்

கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழத்திற்கு திருஷ்டிகளை நீக்கும் அதீத சக்தி உண்டு. அதனால் தான் இதனை பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட காரியத்திற்கு, பூஜை, புனஸ்காரங்கள் என்று நல்ல காரியத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் அனாவசியமாக போட்டுக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் நல்ல சக்திகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது என்பது தான் அர்த்தம். இது போன்ற சமயங்களில் துர் சொப்பனங்கள் வருவது, துர் சம்பவங்கள் நிகழ்வது போன்றவை ஏற்படுவது உண்டு. இதில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள இரவு தூங்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து பதிவு நோக்கி பயணிப்போம்.




செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அல்லது பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் எலுமிச்சை பழத்தை நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும் வைப்பது திருஷ்டி தோஷத்தை போக்கும் அற்புதமான ஒரு பரிகாரமாக இருந்து வருகிறது. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும் வைத்து விட வேண்டும். மறுநாள் அதனை கால் படாத இடங்கள் அல்லது செடிகளுக்கு உரமாக போட்டு விடலாம். அதை அப்படியே காய்ந்து கால்களின் மிதிபடுமாறு வைக்கக் கூடாது. இதனால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் கூட குழப்பங்கள் உருவாகும். எனவே இதில் கவனம் செலுத்துங்கள்.


வெள்ளிக் கிழமைகளில் கல் உப்பு வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும், லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் என்பார்கள். இதற்காக எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் உப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்லை! நீங்கள் உப்பு வாங்கும் பொழுது வெள்ளிக் கிழமையாக பார்த்து வாங்கினால் மட்டும் போதும். உப்பு மகாலட்சுமிக்கு இணையானது எனவே அதனை வீணாக்குவது என்பது கூட தோஷத்தை ஏற்படுத்தும்.



நீங்கள் இரவில் தூங்கும் பொழுது உங்களுடைய தலையணைக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வையுங்கள். இந்த எலுமிச்சை பழம் நீங்கள் கோவில்களில் இருந்து வாங்கி வங்கி வந்த எலுமிச்சைபழம் ஆக இருக்கலாம். கோவிலில் இருந்து வாங்கும் எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் வீணாக கூடாது. அதனை வீட்டிற்கு வந்தவுடன் ஜூஸ் போட்டு குடித்து விடலாம்.



ஒரு கண்ணாடி டம்ளரில் உங்கள் கைகளால் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். அதனை அப்படியே நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் கட்டிலுக்கு அடியில் உங்கள் தலைக்கு நேராக வையுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அந்த தண்ணீரை கொண்டு போய் வாஷ் பேசினில் கொட்டி, கண்ணாடி டம்ளரை கழுவி வைத்து விடுங்கள். அல்லது ஓடும் நீர் மற்றும் கால் படாத இடங்களில் ஊற்றி விடுங்கள். இந்த தண்ணீரை எப்பொழுதும் செடிக்கு ஊற்ற கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள தரித்திரம், பீடை, திருஷ்டிகள் அனைத்தும் விலகும் என்பது நியதி.




நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்பவராக இருந்தால் அங்குள்ள மண் மற்றும் அங்கு கொடுக்கும் எலுமிச்சை பழத்தை சேர்த்து ஒரு பொட்டலமாக கட்டி எடுத்து வந்து விடுங்கள். அதனை எப்பொழுதும் உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். மறுமுறை நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது அதனை புதியதாக புதுப்பித்துக் கொள்ளலாம். குலதெய்வ கோவிலில் இருந்து எடுத்து வந்து வைக்கப்படும் இந்த பொருட்கள் உங்கள் வீட்டிற்கு மிகச் சிறந்த பாதுகாப்பு அரணாக இருந்து செயல்படும். இதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

*மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*
                   பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

              ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் .

                *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

          மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
*S T R* அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது 😄),*

*TALK (பேச சொல்வது😲),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*

           இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

            உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

              மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

       இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

      அதாவது, *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

              அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, 

                அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

       இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

         மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 

             *பகிர்வு*

              உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

                          

64 கலைகள் இருப்பதாக நாம் அறிவோம். அவைகளை விளக்கமாக காண்போம்

64 கலைகள் இருப்பதாக நாம்  அறிவோம். அவைகளை விளக்கமாக காண்போம்

1)  எழுத்திலக்கணம்

    மொழியை வரி வடிவம் செய்தல்-
    அ, இ, உ, எ, ஒ, ஒள இதுவே உயிரின் வரி வடிவம்.

2) இயாப்பு இலக்கணம் 
     
    எழுதும் போது காற்புள்ளி,அரைபுள்ளி, கேள்விக் குறி ,ஆச்சரிய குறி இட்டு எழுதுவது.

3) கணிதம்

    கணித்தல் (கூட்டல் ,கழித்தல், பெருக்கல்....)
    மொழியை அளத்தல்(மாத்திரை)

4) மறை

  ஐந்து வகை மறைகள். உயிர், மெய், உயிர்மெய், ஆயுதம், பிரணவம்(குருவின் மூலம் அறிதல்)

5) புராணம்

    புராணம் - வரலாறு. இது பதினெட்டு வகைப் படும். அவைகள்
    சைவம்,வைணவம் ,பிரம்மம் ,பதுமம், பாகவதம், நாரதீயம்,மார்கண்டேயம் ,ஆக்னேயம் ,பவிடியம், வராகம் ,கூர்மம் ,வாவியம் காருடம், வாமணம் ,இலிங்கம், மச்சம், காந்தம், பிரம்மம் ,வர்த்தம் என்பன.

6) வியாகரணம்

    மொழி இலக்கணம் (பேசுவது)

7) சோதிடம்
    
    சூரியனை மையப்படுத்தி கோள்களை கணித்தல்

8) நீதி சாத்திரம்

    உண்மையை பேசுவது

9) இயோக சாத்திரம்

    இறைவனை சிந்திக்க கூறும் வழிபாடுகள்.

10) தர்ம சாத்திரம்

    சன் மார்க்கம் ,தாச மார்க்கம்,  சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம் என்னும் தர்மங்களை கூறுவது.

11) மந்திர சாத்திரம்

    ஒலிகளை அறிதலும், அறிவித்தலும்

12) சிற்ப சாத்திரம்

    உருவங்களை அமைக்க நீள, அகல, உயர, கணம் இவற்றின் அளவுகளை கூறுதல்.

13) உருவ சாத்திரம்

    ஓர் உருவத்தின் குணங்களை கூறுவது. இவை சாமுத்திரிகா இலட்சணம் என்பர்.

14) சகுண சாத்திரம்

    நன்மை/தீமைகளை அறிதல்

15) காவியம்

    சீவனின் எட்டு குணங்களை கூறுவது.

16) அலங்காரம்

    மொழி, யாப்பு இலக்கணம், உடை, ஆபரணம் இவற்றை அழகு பட கூறுவது.

17) மதுரம்

    இனிமை(மொழி, கவி, குரல் ) இவைப் பற்றிய கலை

18) நாடகம்

    கூத்தாடுதல் (இசைக்கு ஏற்ப ஆடும் கலை)

19) சத்தப் பிரமம்

    பல வகையான ஒலிகளை வாத்திய கருவிகளில் ஏற்படுத்தி  ஒலிக்க செய்வது.( யாழ், குழல், வீணை)

20) வீணை

    யாழிசை, நரம்பு கொண்டு இசைப்பது. யாழ்பாணன் (இலங்கேசுவரன்) ஏற்படுத்தியது.

21) நிருத்தம்

    யாழ் இசைக்கேற்ப நடனம் புறிதல்

22) தாளம்
    
    இசைக்கருவிகளின் ஒலி அளவை முறைப்படுத்துதல்.

23) வேணு

    துளைக்  கருவிகளை வாசித்தல் (புல்லாங்குழல், தாரை, நாதசுரம் போன்றவை)

24) மிருதங்கம்

    மிருகங்களின் தோலில்  செய்யும் கருவிகளை வாசித்தல்

25) இரத பரிட்சை

    தேர் ஓட்டும் கலை. (இக்காலத்தில் வாகனங்களை இயக்கும் கலை)

26) கச பரிட்சை

    யானை யின் குண நலம், அடக்கும் முறை, போருக்கு பயன்படுத்தல் போன்றவற்றை விளக்கும் கலை

27) கனக பரிட்சை

    உலோகங்களை சோதித்து தரம் நிர்ணயிக்கும் கலை.

28) அசுவ பரிட்சை

    குதிரைகளின் குணநலம், பயன்பாடுகள்  கூறும் கலை

29) இரத்தின பரிட்சை

    9 இரத்தினங்களின் தரம், குணம், ஒளித் தன்மை முதலியவற்றை கூறும் கலை

30) அத்திரம் பரிட்சை

    வில் ஏவும் கலை. ( இக்காலத்தில் துப்பாக்கி, பீரங்கி இயக்குதல்)

31) படை இலக்கணம்

    படைகளை (முப்படைகள்) வழி நடத்தும் கலை.

32) இரச வாதம்

    பாதரசத்தைக்  கொண்டு தாழ்ந்த  உலோகங்களை உயர்ந்த உலோகமாக மாற்றும் கலை.

33  பூமி பரிட்சை

    பூமியில் உள்ள வளங்களை கண்டறியும் கலை.

34)  வசீகரம்

    மற்றவர்களை தன் பால் ஈர்க்கும்  கலை.

35) மோகனம்

    ஒருவரை மற்றவர் மீது மோகம் செய்விக்கும் கலை

36) ஆக்ருனம்

     தன் குணத்தை மற்றவர்  ஏற்று கொள்ள செய்யும் கலை

37) உச்சாடனம்

    பிறரை ஓரிடத்திலிருந்து விரட்டும் கலை.

38) மதனம்

    சிற்றின்பம் நுகரும் கலை

39) மல்யுத்தம்

    ஆயுதம் இல்லாமல் யுத்தம் செய்யும் கலை

40) வித்துவேதனம்

    மற்றவர்களுக்கு நன்மை/தீமைகள் செய்தல் (நோயும் பரிகாரமும்).

41) முட்டி

    ஆயுதம் இல்லாமல் தீமைகள் தடுத்துக் கொள்ளும் கலை

42) நட்டம்

    நடனக்கலையின் தன்மைகளை கூறும் கலை.

43) காருடம்

    நஞ்சை(விடம்) முறிக்கும் கலை.

44)  கவுத்துவம்

    பிறரை ஊமையாக்கும் கலை.

45) பைபீலம்
    பறவை, மிருகம், ஊர்வன இவற்றை  மயங்க செய்யும் கலை.

46) காந்தருவம்

    பல வாத்தியக்கருவிகளை சிறப்பாக இயக்கும் கலை.

47) கமனம்

    அந்தரத்தில் நடக்கும் கலை.

48) பிரவேசம்

    வேரோர் உடம்பில் புகும் கலை.

49) ஆகாயப் பிரவேசம்

     ஆகாயத்தில் மறையும் கலை.

50) அதிரிசயம்

    தானும், மற்ற பொருள்களையும்  தோன்றி மறைக்கும் கலை.

51) இந்திர சாலம்

    காணாத பெருளை காட்டும் கலை.

52) மகேந்திர சாலம்

    வானத்தில் அதிசயம் செய்யும் கலை.

53) அக்கனி தம்பம்

    நெருப்பை வசம் செய்யும் கலை.

54) சலதம்பம்

    நீரில் நடக்கும் கலை.

55) வாயு தம்பம்

    காற்றில் மிதக்கும் கலை.

56) நிட்டி தம்பம்

    கண் மூலம் ஆயுதங்களை வலுவிழக்க செய்யும் கலை.

57) வாக்கு தம்பம்

    தன் வாக்குக்கு (சொற்களுக்கு) எதிர் வாதம் இல்லாமல் செய்யும் கலை.

58) சுக்கிலத்  தம்பம்

    விந்துவை நிறுத்தி நீண்ட கலவி செய்யும் கலை.

59) கன்னத்தம்பம்

    மறைந்தவைகளை /நடந்து முடிந்த கடந்த கால நிகழ்வை கூறும் கலை.

60) கட்க தம்பம்

    கூர் ஆயுதத்தை வலுவிழக்கச் செய்யும் கலை.

61) தாது வாதம்

    உலோகங்கள்/ தாதுக்களையும் பயன்படித்தும் கலை.

62) இதிகாசம்

    சிவ ரகசியம்(51) அச்சரத்தை இயக்கும் உன்னத கலை.

63) வைத்தியம்    (சித்த வைத்தியம் / ஆயுள் வேதம்)

    சித்த வைத்தியம் - சித்தர்கள் கூறியது
    ஆயுள் வேதம்    - இலங்கேசுவரன் கூறியது
    ஒளடதங்கள்       - உடலைக் காத்து நாதம் விந்து கலைகளை கூட்டி கல்ப தேகம் பெறிவது.

64) சாகாக்கலை

    மரணமில்லா பெரு வாழ்வு ஆதி என்னும் சோதியில் இந்த உடலைக் கலக்கச் செய்யும் கலை.

மறக்காமல் பகிருங்கள்

ஸ்ரீ ரேணுகாதேவி மீது தனிப்பாடல்

ஸ்ரீ ரேணுகாதேவி மீது தனிப்பாடல் 
 
1.       மாதல்லி ரேணுகா ராம்மா ! நீ
மகிமைன கதசெப்பி பிலிசேமு ராம்மா !
சேதல்ல புவ்லெத்தி  மொக்கி – நின்னு
சேவிஞ்ச்சு வஸ்த்திமி மாத்ல்லி ராம்மா !
வீதல்ல தோரணமு கட்டி – நேடு
விதமைன மாவலுதோ சிங்காரஞ்சேசி
நேதல்ல தீபாலு பெட்டி – நீன்னு
நியமங்க மொர்க்கேமு நுவத்ல்லி ராம்மா ! 

2.       ஆடிசுக்ரா ரமு ராம்மா – நீன்னு
ஆடிஞ்ச்சி பாடினேண்டந்துரு நிலிசி
ஜோடிஞ்ச்சி மொக்கேமு ராம்மா – நீன்னு
செய்யெத்தி, புவ்லேசி பிலிசேமு ராம்மா !
நீடிஞ்சி மாகுலம் வாரு – நிண்ட
நீ தங்க பதிகட்ல, சேரட்ல ராம்மா !
லட்டஞ்சுலுண்டாவு ராம்மா – நேண்டு
இதவைன பூஜலு சேசேமு ராம்மா ! 

3.       கோமள வல்லி நுவ் ராம்மா ! மேமு
குலவந்த்தா சேரிதா பிலிசேமு ராவே !
தாமர மொக்கலு பெட்டி – நின்னு
தாங்கர லோபெட்டி ஊஞ்ச்சேராம்மா !
சேமங்க மேம்பூஜ சேசி – நீன்னு
சேவிஞ்ச்சி மொக்கட்ல மாததல்லிராம்மா !
நேமங்க மொக்கிதிமு மேமு – நீன்னு
நீதி தோ பிலிசேமு மாதல்லி ராம்மா ! 

4.       ஆதன்ய ரேணுகா ராம்மா ! – நீன்னு
ஆடிசுக்ராரமு பிலிசேமு ராம்மா !
நீதய்ன மாதல்லி ராம்மா – நீன்னு
நியமந் தோடுய்யால ஊஞ்ச்சேமு ராம்ம்மா !
ஜோதய்ன சுந்தரீ ராம்மா ! – நீன்னு
சொம்ப்புதோ உய்யால ஊஞ்ச்சேமு ராம்மா !
மாதல்லி ரேணுகா ராம்மா ! – நிரு
மங்கள ஆரத்தி எத்தேரு ராம்மா ! 

5.       ஊரநத்தம் புட்டின தில்லி – நீன்னு
உய்யால கட்டிதா ஊஞ்ச்சேமுராம்மா !
பேரண்ட்டால் பெத்தலுதோ பெட்டி – நீன்னு
பிட்டலு மொக்கிதா பிலிசேமுராம்மா!
கோரநத்தா வரமுன்னி இச்சி – மீ
கோபுரம் பெரிகட்ல மாதல்லி ராம்மா !
ஆர்த்திலெத்தேமு ராம்மா ! – நுவவு
அல்கொட்டி ! தலனெத்தி ஆடிஞ்ச்சி ராம்மா !

Saturday, 24 July 2021

கன்னி : ஆசைகள் மெதுவாக நிறைவேறும்

கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்க மோதிரத்தை அணிந்தால், படிப்படியாக அவர்களின் ஆசைகள் நிறைவேற ஆரம்பித்து, செழிப்புடன் வாழலாம். தங்க மோதிரத்தை அணிய விருப்பமில்லை எனில் குறைந்தபட்சம் நீங்கள் ஒரு சங்கிலி அல்லது வளையலை, காப்பு அணியலாம். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, குரு ஏழாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதி, இதன் காரணமாக குருவுக்கு உரிய தங்க ஆபரணங்களை அணிந்து நல்ல பலனைத் தருகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் இந்த நகைகளை அணிவதன் மூலம் முடிவடைகின்றன


எந்த விரலில் தங்கம் மோதிரம் அணிவது நல்லது:

தங்க உலோகம் அணிவது ஜோதிட ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மிக ரீதியாகவும் நன்மை அளிக்கிறது. அதாவது நேர்மறை சக்திகள், கதிர்களை ஈர்க்கக்கூடிய வல்லமை தங்கத்திற்கு உண்டு. அதனால் தான் நேர்மறை சக்திகள், கதிர்கள் நிறைந்த கோயிலுக்கு செல்லும் போது தங்க நகை அணிந்து செல்வதால், நம் உடலும், உள்ளமும் நேர்மறையான சக்திகள் பெற்றிடலாம்.



ஜோதிடத்தின் படி, ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவது மனம் ஒருநிலைப் படும். மற்றும் ராஜ யோகத்தை அடைய உதவும். மறுபுறம், மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்களுக்கு சளி-குளிர் அல்லது சுவாச நோய் இருந்தால், தங்க நகைகளை சிறிய விரலில் அணிய வேண்டும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைவதில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருமணமான பிறகு, குழந்தை பிறக்கும் வரை வைரத்தை அணிவது திருமண வாழ்க்கைக்கு நல்லதாக கருதப்படுவதில்லை

தங்க நகை எந்த ராசிக்கு யோகம் தரும்?

தங்க நகை எந்த ராசிக்கு யோகம் தரும்?

மேஷம்

மேஷ ராசியினர் தங்க மோதிரத்தை அணிவதால் தைரியம், நேர்மறை சக்தி அதிகரிக்கிறது. ஒவ்வொரு துறையிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது. அதே நேரத்தில், அதிர்ஷ்டமும் சாதகமாகும். இதன் காரணமாக உங்கள் எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்படும். மற்றும் பெற்றோரிடமிருந்து பாசம் பெறலாம். நண்பர்களும், அன்பானவர்களும் எப்போதும் உங்களை ஆதரிப்பார்கள். தங்க மோதிரத்தை அணிவதன் மூலம், பழைய கடன்களை படிப்படியாக அகற்றுவீர்கள்

யாரெல்லாம் தங்கத்தை அணியக்கூடாது!

ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசியை சேர்ந்த நபர்கள் தங்க நகைகளை அணிவது நல்லதல்ல. மறுபுறம், துலாம் மற்றும் மகர ராசியினர் குறைந்தபட்சம் தங்கத்தை அணிய வேண்டும்.

இரும்பு மற்றும் நிலக்கரி தொடர்பான பணியை செய்பவர்கள் தங்க நகை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் சனியுடனான வணிக உறவு கொண்டது. எனவே தங்க உலோகத்தை அணிவது உங்கள் வணிகத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

Tuesday, 20 July 2021

கொள்ளு பருப்பு.


சர்க்கரை நோயை விரட்ட ஆரைக்கீரை...

சர்க்கரை நோயை விரட்ட ஆரைக்கீரை...

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவரம் . இலையே மருத்துவப்பயனுடையது,கீரைக்கட்டாக  விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல்,தாகம் தணித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது,இதை தொடர்ந்து  உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும்,செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக்கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும்.  மன உளைச்சல்,  மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும்.  முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும்.  அடிக்கடி நீர் பிரிதலைத்  தடுக்கும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்னவோ,சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.  ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.  நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத்  தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும்  அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு  ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது  பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் இரத்தம் போதல் ஆகிய  பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம்,கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால்  குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்போர்,கருவுற்றப்பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

ஆரைக்கீரை சூப் 

ஆரைக் கீரை        - 1 கைப்பிடி
கறிவேப்பிலை    - சிறிதளவு
கொத்தமல்லி இலை    - சிறிதளவு
சின்ன வெங்காயம்     - 5
பூண்டுப்பல்        - 3
மிளகு        - 5
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
இஞ்சி        - 1 சிறு துண்டு
உப்பு        - தேவையான அளவு

 இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம்  நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது.  பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத்  தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

தலைவலிக்கு உடனடியாக பலன் கொடுக்கும் சில வைத்திய முறைகள்….!

தலைவலிக்கு உடனடியாக பலன் கொடுக்கும் சில வைத்திய முறைகள்….!

தலைவலியைப் போக்க மாத்திரையை நாட வேண்டிய அவசியம் இல்லை. தலைவலியை இயற்கை முறையிலும் குணப்படுத்தலாம்.
சம அளவு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது தலைவலியைக் குறைக்கும். இஞ்சி இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கும். சுக்குப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பத்து போடலாம்.

பெப்பெர்மிண்ட் எண்ணெயின் மணம் மூளையின் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மூன்று துளி பெப்பெர்மிண்ட் எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெயோடு கலந்து தலையிலும், பின்னங்கழுத்திலும் தடவி தலைவலியில் இருந்து விடைபெறலாம்.

இலவங்கப் பட்டையைப் பொடி செய்து நீர் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும். கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும். இரு துளி கிராம்பு எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலந்து கடல் உப்பு சேர்த்து நெற்றியில் மிதமாக மசாஜ் செய்தால் தலைவலி சரியாகும்.

 
துளசி சிறந்த வலி நிவாரணி, நான்கு துளசி இலைகளை ஒரு கோப்பை கொதிக்கும் நீரில் போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் விடவும். பின்பு தேன் சேர்த்து அதனை அருந்தவும்.

தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் பாதாம் பருப்பை சாப்பிடவும். தலைவலியைப் போக்குவதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகருக்கு முக்கிய பங்கு உள்ளது.

காலையில் தலைவலியால் அவதிப்பட்டால் ஆப்பிள் துண்டுகளை உப்புடன் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும், இது தலைவலிக்கு சிறந்த மருந்து.

மக்னீசியம் குறைபாடு தலைவலியோடும், ஒற்றைத் தலைவலியோடும் நேரடித் தொடர்புள்ளது. பாதாம், எள், ஓட்ஸ், முந்திரி, முட்டை, பால், சூரியகாந்தி விதைகள், பிரேசில் நட்ஸ், பீனட் பட்டர் போன்றவை அதிக மக்னீசியம் கொண்டவை, எனவே இவற்றை உட்கொண்டால் தலைவலிக்கு உடனடியாக பலனளிக்கும்.

தேன் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது, அதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோர் தினமும் காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் தேனை மிதமான சூட்டில் உள்ள நீருடனும், 2 டேபிள்ஸ்பூன் தேனை உணவு உண்பதற்கு முன்பும் அருந்த வேண்டும்

இரத்தம் பற்றி பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள் :-

1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன.

3 ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.

4 ஹீமோகுளோபினின் பணி என்ன?
ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவர்.

5 ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு, இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில், இரும்புச் சத்து அதிகம். அவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால், ரத்த சோகை வராது.

6 ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை, 'படை வீரர்கள்' என்று அழைக்கலாம். ஏனெனில், உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்து போராடுபவை, ரத்த வெள்ளை அணுக்களே. அவை, நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

7 ரத்தத்தில் உள்ள, 'பிளேட்ெலட்' அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி, பிளேட்ெலட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, 'கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.

8 'பிளாஸ்மா' என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் இருக்கும்.

9 ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், 'பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும், ஒரு நிமிடத்திற்கு, 250 மி.லி., ரத்தம் தேவை.

10 உடலில் ரத்தம் பயணம் செய்யும் துாரம் எவ்வளவு?
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் துாரம், ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ., ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

Monday, 19 July 2021

சதகுப்பை மூலிகையின் அற்புதமான மருத்துவ பலன்கள் !!

சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இவற்றை சம அளவு  அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை,மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.  


கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.
 
இரத்த அழுத்த நோய் குறைய கருங்காலிப்பட்டை, சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட இரத்த அழுத்த நோய்  குறையும்.


 
இரத்த சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள்  மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும்.
 
சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும். மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி வடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால் முறையாக பசி ஏற்படும்.
 
ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி கொடுத்துவர வயிற்று வலி குறையும். சதகுப்பை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.
 

பச்சைப் பயிர்

கொழுப்பைக் குறைத்து இதயம் காக்கும் பருப்பு:>

பச்சைப் பயிர் என்று பலரும் எழுதுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் எழுத நினைத்தது என்னவோ, பச்சைப் பயற்றைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், தவறாகப் பச்சைப் பயிறு, பச்சை பயிரு என்றோ அது முடிந்திருக்கும்.

மேற்கு இந்தியாவின் ஈரமான தேக்குமரக் காடுகளைத் தாயகமாகக் கொண்டது பச்சைப் பயறு. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது. தெற்காசிய உணவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழக/கேரள எல்லைப் பகுதியில் வாழும் முதுவர் இனப் பழங்குடிகளின் உணவில் பச்சைப் பயறு முக்கிய இடம்பிடித்திருக்கிறது.

ஆலிவ் பச்சை நிறத்தில் சிறிய, நீள்உருளை வடிவத்தில் வழுவழுவென்று, நல்ல மணத்துடன் இருக்கும். பச்சைப் பயறு காய வைக்கப்பட்டு, தோல் நீக்கப்பட்டு, உடைக்கப்பட்டால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பயன்பாடு

முழு பச்சைப் பயறு முளைகட்டிப் பச்சை யாகவோ வேக வைக்கப்பட்டோ, முளைகட்டாமல் வேக வைக்கப்பட்டோ சுண்டலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சைப் பயற்றை வேக வைப்பதற்குக் கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும்.

முளை கட்டப்பட்ட பச்சைப் பயறு உப்பு-எலுமிச்சை சாறு கலந்தும் சாலட்டில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படுவது உண்டு. பச்சைப் பயறு மிகவும் ஆரோக்கியமான நொறுவை. ஏனென்றால், தாவரங்கள் வளர வைட்டமின், கனிமச்சத்து, அமினோ அமிலங்கள், பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை தேவைப்படும் என்பதால், முளைவிட்ட பயறு வகைகளில் புரதத்துடன் மேற்கண்ட சத்துகளும் நிரம்பியிருக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தில் பச்சைப் பயறு மாவு பெசரட்டு என்ற பெயரில் அடைதோசையாகச் சாப்பிடப்படுகிறது. சீனாவில் நிலவு கேக் மற்றும் இனிப்பு பானம், பிலிப்பைன்ஸில் இறால் வதக்கல், இந்தோனேசியாவில் இனிப்பு, ஹாங்காங்கில் ஐஸ்கிரீம் என்று பல்வேறு வகைகளில் பச்சைப் பயறு பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்து

இதில் புரதச் சத்தும் அமினோ அமிலமும் அதிகம். உடலுக்குத் தீங்கு பயக்கும் டிரான்ஸ் ஃபேட், சாச்சுரேடட் கொழுப்பு இதில் இல்லை.

உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஒன்பது அமினோ அமிலங்களில் லைசீன் என்ற அமினோ அமிலத்தை அதிகம் கொண்டது.

நீரில் கரையக்கூடிய, நீரில் கரையாத நார்ச்சத்தை அதிகம் கொண்டிருப்பதால், சரிவிகித உணவையும் உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் பராமரிக்க உதவுகிறது.

குறிப்பாக இதில் இருக்கும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது.

ரத்தத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சர்க்கரைப் பொருளை இது வெளியிடுவதால், ரத்தச் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

பச்சைப் பயற்றை மட்டுமில்லாமல் எல்லாப் பயறு வகைகளையுமே தோலை அகற்றாமல், உடைக்காமல் பயன்படுத்துவதுதான் அதிக ஊட்டம் தரக்கூடியது. ஏனென்றால், தோலில் இரும்புச்சத்து இருக்கிறது. l

காலரா, தட்டம்மை, சின்னம்மையின்போது பச்சைப் பயறு ஊற வைத்த தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு நல்லதாகக் கருதப்படுகிறது.

இது எளிதில் ஜீரணமாகக் கூடியது, மலத்தை இளக உதவுகிறது.

ptவயிற்றுப் பொருமலையோ, ‘காஸை‘யோ ஏற்படுத்தாது.

தெரியுமா?

பச்சைப் பயறு மாவு அல்லது பயத்த மாவை சருமத்தில் தேய்த்துக்கொள்வது தோலைப் பராமரித்து, நல்ல நிறத்தைத் தக்க வைப்பதற்குப் பயன்படும். சோப்புக்குப் பதிலாகக் குளியல் பொடியாக இதைப் பயன்படுத்தலாம்; குறிப்பாகக் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘நலங்கு மாவு’ எனும் மூலிகைக் கலவையில், பச்சைப் பயறு சேர்க்கப்படுகிறது.....%%%


Sunday, 18 July 2021

எதிர்காலத்தை குறிக்கும் ராகு..!



எதிர்காலத்தை குறிக்கும் ராகு..!

சோதிடத்தில் பின்னோக்கி சுழலும் போது முன்னோக்கி சிந்திக்கும் கிரகம் ராகு, ராகுவால் தான் மனிதன் உயிர் வாழ்கிறான், ராகுவே உயிர் ஆசையையும், பொருளாசையையும் தருகிறார், ராகு உங்கள் முழு எதிர்கால வாழ்வையும் கட்டுப்படுத்துகிறார் என்றால் மிகையாகாது, வாழ்க்கையில் எந்த பொருள்/சுகம்/உறவு தேவை அவசியம் என்பதை ராகுவே உணர்த்துகிறார், ராகு மட்டுமில்லை என்றால் மனிதன் எதையும் விரும்ப மாட்டான், ரசிக்கமாட்டான், இவ்விரண்டும் இல்லாத மனிதன் எதற்காக வாழவேண்டும் என்றே நினைப்பான், ஒருவர் எதிர்கால சிந்தனைகளை தான் கனவாக காண்கிறார், பிரபஞ்ச விதி நீ எதுவாக நினைக்கிறாயோ/கணவுகாண்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்கிறது, இந்த வாசகத்துக்கு காரகம் ராகுவே, வாழ்க்கையில் பலதரப்பட்ட உலகியல் இன்பங்களை கொடுத்து மனிதனை மூடனாக்குபவரும் ராகு தான்..!

என்னால் இது இது இருந்தால் தான் ஒரு விஷயத்தை செய்ய இயலும் என்று கூற வைப்பவர் ராகு, உதாரணமாக: வெளியே போக வேண்டும் என்றால் நான் வாகனத்தில் தான் போவேன், பேருந்தில் செல்லமாட்டேன் என்று சுகத்தை எதிர்பார்க்க செய்பவர் ராகுவே, பெரிய எதிர்பார்ப்புகளை ராகு தான் உருவாக்குகிறார், இந்த எதிர்பார்ப்புகளே மனிதனின் வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது என்றால் பொறுத்தமாகவே இருக்கும், நான் வாழ என்ன வேண்டும் என்றாலும்/எவரை வேண்டுமானாலும் கீழே தள்ளிவிடுவேன் என்கிற சுயநலத்தை ராகுவே கொடுக்கிறார், பொய் பேசுவது/ஏமாற்றுவது/தன் சுகமே முக்கியம் என்று எண்ணுவது போன்ற அனைத்து காரகங்களையும் ராகுவே குறிக்கிறார், பலரின் வாழ்க்கை கனவில் தான் இன்று நகர்கிறது கணவுகளே எதிர்காலத்தை எதிர்நோக்கும் வல்லமையை தருகிறது அப்படி எதிர்காலத்தை எதிர்நோக்கும் போதே நம்பிக்கை பிறக்கிறது அந்த நம்பிக்கையே வாழ்வதற்கு அடித்தளமாகிறது, சிலரை பார்க்கலாம் கையில் ஒன்றுமே இருக்காது ஆனால் நாளைக்கு வீடு வாங்குவதை போல விற்பனையாளரிடம் விலை விசாரிப்பார், இப்படி அவர் பலநாள் விசாரித்த ஒன்று ஒருநாள் நடக்கும் என்கிற நம்பிக்கையை தருகிறது, அந்த நம்பிக்கையே அதனை செயல்படுத்தும் ஊக்கத்தை கொடுக்கிறது அதுவே கனவை நனவாக்க செய்கிறது, இப்படி பல நேர்மறைகளை ராகு கொடுத்தாலும், எதிர்மறைகளில் ராகுவின் காரகங்கள் என்று எடுத்துக்கொண்டால்..!

பேராசை அந்த பேராசையால் விளையும் விளைவுகள், பலர் வாழ்வில் தவரிழைப்பது பேராசையால் தான், பேராசை பெரு நஷ்டத்தை கொடுத்தாலும் அதனை ராகு உணரவிட மாட்டார், மீண்டும் மீண்டும் பேராசையை தூண்டி வாழ்க்கையில் என்ன ஆனாலும் சரி நான் அதனை அடைந்தே தீருவேன் என்று செயல்பட வைப்பார், சிலரை பார்த்திருப்போம் தன் காரியத்தில் கண்ணாக செயல்படுவார்கள், பக்கத்து வீட்டில் இழவு விழுந்தாலும் இவர்கள் தங்கள் வீட்டில் மாவிலை, தோரணம் கட்டி, ஒலிபெருக்கி வைத்து பாட்டு போடுவார்கள் இந்த மனோநிலையை ராகுவே கொடுக்கிறார், ராகு வலுத்தவர்கள் அடுத்தவரை பேச விட மாட்டார்கள் அடைமழை போல தான் சொல்ல வந்ததை சொல்லிட்டே ஓய்வார்கள், அதுவும் இவர்கள் சத்தமாக பேசுவார்கள் அதில் இவர்களுக்கு அடுத்தவரை தான் அடக்கிவிட்டோம் என்கிற நினைப்பு (எவ்வாறு சூரியன் ராகுவின் நட்சத்திரத்தில் நீச்சமடைகிறதோ அவ்வாறு), எதையும் மற்றவருக்கு தெரிவதை போல செய்வார்கள் ராகு வலுத்தவர்கள்..!

பொதுவாக ராகு தரும் ஆசைகள் பொருளாசை/சதை பற்று, ஆம் ராகுவே உடலுறவுக்கு மறைமுக முக்கிய காரகமாகிறார், ராகு+சந்திரன், ராகு+சுக்கிரன் இணைந்த ஜாதகர்கள் தன் எதிர்பாலினத்தை கடித்து தின்று விடுவதை போல பார்ப்பார்கள், பல வக்கிர சிந்தனைகளை மேலே கூறிய இணைவு தரும், சிந்தனைகளால் ஒருவரை கற்பழிப்பார்கள் இவர்கள், இதே அமைப்பு லக்னம் அல்லது 2ல் ஏற்பட்டால் Ex ray Eyes என்று கூறலாம், எதிராளியை அப்படியே படம்பிடித்து சிந்தனையில் ரசிப்பார்கள்/ஆராய்வார்கள், அதாவது கண்களில் Camera வைத்திருப்பார்கள், இவர்களை துப்பு துலக்க பயன்படுத்தலாம், ராகு செய்யும் வக்கிர செயல்கள்  ஒருவர் நினைத்து பார்க்க இயலாத விதத்தில் இருக்கும், இவர்களின் செயலே இவர்களை வெளிச்சம் போட்டு காட்டிவிடும் அதையும் ரசிப்பார்கள், உதாரணமாக: மர்ம மரணங்கள், வக்கிரமான கொடூரமான பாலியல் மரணங்கள், யார் செய்தது என்றே தெரியாத குற்ற செயல்கள், சட்டம்/நெறிமுறைகளை உடைக்க ராகுவுக்கு மிகவும் பிடிக்கும், சிந்தனைகள் என்றால் எதிர்காலத்தை பற்றிய பயம் ராகுவே தருகிறார், ஒருவரின் மனம் சொல்லொண்ணா குழப்பம் கொள்வதும், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று திண்டாடவும் வைப்பார், புகை மூட்டம் போல சிந்தனைகள்/செயல்களை மறைவில் வைத்து  Surprise கொடுப்பார் ராகு, ராகு காரகம் கொண்டவர்கள் அடிக்கடி இவ்வாறு Surprise கொடுப்பார்கள், பரிசு கொடுப்பது ராகுவுக்கு மிகவும் பிடிக்கும், ஒருவரை திடீர் சந்தோஷத்திலும் துக்கத்திலும் தள்ளிவிடும் ராகு. 

பலாப்பழக்கொட்டையை சாப்பிடுவதால் இத்தனை நன்மை கிடைக்கும்போது ஏன் கீழே தூக்கி போடறீங்க

*🙏💱பலாப்பழக்கொட்டையை சாப்பிடுவதால் இத்தனை நன்மை கிடைக்கும்போது ஏன் கீழே தூக்கி போடறீங்க💚❤️*

உலகின் மிகப் பெரிய மர பழமான பலாப்பழத்தில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் பி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதேபோல் அதன் கொட்டைகளிலும் பல சத்துகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது.

​பலாக்கொட்டை

பலாக்கொட்டைகளில் தியாமின் மற்றும் ரைபோப்ளேவின் நிறைந்துள்ளன. இவை நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்ற உதவும். அத்தோடு பலாக்கொட்டையில் துத்தநாகம், இரும்புச் சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பலாக்கொட்டை பாரம்பரிய மருத்துவ முறையில் ஜீரண மண்டலத்தின் பிரச்சனையைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. பலாக்கொட்டையை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

​முக சுருக்கங்களை எதிர்த்துப் போராட

உங்கள் முகம் அல்லது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்க பலாக்கொட்டை உதவுகிறது. பலாக்கொட்டையை குளிர்ந்த பாலில் சிறிது நேரம் ஊற வைத்து விட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டை உங்கள் முகத்தில் பேஸ் பேக் போல் போட்டுக் கொள்ளுங்கள். இந்த பேஸ் பேக் உங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை நீக்கவும், தடுத்து நிறுத்தவும் உதவுகிறது. மேலும், உங்கள் சருமத்தின் இளமையை அதிகரிக்கவும் பலாக்கொட்டை உதவும். அதேபோல் சிறுது பால் மற்றும் தேன் சேர்த்து பலாக்கொட்டையை ஊற வைத்து அரைத்து பேஸ் பேக் போல் போட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

​மன அழுத்தம் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்த

பலாப்பழ விதைகளில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் உங்களின் மன அழுத்த அளவு மற்றும் பல தோல் நோய்களை நிர்வகிக்கவும் முடியும். சருமத்தின் ஈரப்பதம் மற்றும் உங்கள் தலைமுயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் பலாப்பழ கொட்டைகளை சாப்பிடுங்கள்.

​அனீமியாவைத் தடுக்க

பலாப்பழ கொட்டைகளை சாப்பிடுவதால் உங்களின் அன்றாட ஊட்டச்சத்துகள் உங்களுக்கு கிடைக்கும். பலாப்பழத்தின் கொட்டைகள் இரும்புச் சத்துக்கான சிறந்த மூலமாக விளங்குகிறது. இரும்புச் சத்து தான் ஹீமோகுளோபினின் அங்கமாகும். இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சோகை மற்றும் பிற இரத்தக் கோளாறுகளின் அபாயம் நீங்கும். அதோடு உங்கள் மூளையையும், இதயத்தையும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க பலாக்கொட்டை உதவும்.

​ஆரோக்கியமான முடி மற்றும் கண் பார்வைக்கு

பலாக்கொட்டைகளில் வைட்டமின் ஏ இருப்பதால் உங்களின் கண் பார்வை பராமரிக்கப்படும். வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான சத்தாகும். அதேபோல் வைட்டமின் ஏ ஆரோக்கியமான தலைமுடியை ஊக்குவிக்கவும், முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது.

​அஜீரணத்தைத் தடுக்க

பலாப்பழ கொட்டைகள் அஜீரணத்திலிருந்து உடனடி நிவாரணம் தர உதவுவதாக அறியப்பட்டுள்ளது. இதற்கு பலாக்கொட்டையை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து சேமித்துக் கொள்ளவும். இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அஜீரணம் விரைவாக நடக்கும். அதேபோல் மலச்சிக்கலைத் தீர்க்கவும் பலாக்கொட்டை உதவும்.

​தசைகளை உருவாக்க

பலாக்கொட்டைகளில் உயர் தர புரதங்கள் உள்ளன. அவை புதிய தசைகளை உருவாக்க உதவுகின்றன. இந்த புரதங்கள் அதிக கொழுப்பிலிருந்து விடுபட உதவுகின்றன. உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கி, தசைகளை உறுதியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.

குடம் புளி. ..


பெருமாளில் மட்டும் எத்தனை விதம்..?

நம் ஜாதகத்தில் எந்த இடம் பலவீனமோ அதற்கேற்ற கோயில்கள் சென்றால்தான் நாம் பலமாக முடியும்.அதற்காகவும்தான் நம் முன்னோர்கள் விதவிதமான கோயில்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்..பெருமாளில் மட்டும் எத்தனை விதம்..?

 உட்கார்ந்தவாறு,படுத்தவாறு,நின்றுகொண்டு,தனியாக ,லட்சுமியுடன் என ஏன் இப்படி அமைக்க வேண்டும் ? படுத்திருக்கும் பெருமாள் நோய்களை தீர்க்கவும் நின்ற கோல பெருமாள் தொழில்ப்சிறப்படையவும்
,லட்சுமியுடன் இருக்கும் பெருமாள் திருமண தடை நீங்கவும் வழிபடுகிறோம்...

எல்லாவற்றிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது நமக்குத்தான் தெரியவில்லை.எல்லா சாமியையும் பார்த்து கும்பிட்டு போய்கிட்டே இருக்கோம்.

ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை ஒரு குடும்பத்தில் ஐந்து அண்ணன், தம்பிகள் இருந்தால் எண்ணம்,செயல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.வழிபாடு, பழக்க வழக்கம், குணம் ,விருப்பம் போன்றவற்றில் நிறைய மாற்றம் இருக்கும்.

 ஒருவருக்கு வினாயகர் பிடிக்கும் இன்னொருத்தர்க்கு முருகனை பிடிக்கும் ..இதை எல்லாம் உணர்ந்துதான் நம் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்,கோயில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன..இந்து வெறும் மதம் அல்ல.வாழ்க்கை

Friday, 16 July 2021

ஆடி மாசம் ஏன் புதுமண தம்பதிகளை பிரிக்கிறார்கள்..?



ஆடி மாசம் ஏன் புதுமண தம்பதிகளை பிரிக்கிறார்கள்..?

ஒரு குழந்தை கருவில் உருவாகும்போது அதன் நான்காவது மாதத்தில்தான் எலும்புகள் உருவாகும்.சூரியன் எலும்புகளுக்கு அதிபதி.சூரியன் பாவருடன் சேர்ந்த ஜாதகர்களுக்கு விபத்தில் எலும்புகள் உடைவதை பார்க்கிறோம்.

ஆடி மாதம் புதுமண தம்பதிகள் ஒன்று சேர்ந்து கரு உருவாகும்போது ஐப்பசி மாதம் நான்காவது மாதமாக வரும்.ஐப்பசியில் சூரியன் நீசமாகும் .நான்காவது மாதத்தில் எலும்புகள் உருவாகும்போது அதன் அதிபதி சூரியன் கெடுவதால் வலு இல்லாது போய்விடும்.இதனால் உடல் ஊனம் ஏற்படவும் அடிக்கடி எலும்பு சம்பந்தமான பிரச்சினை வரவும் அந்த குழந்தையின் எதிர்காலத்தில் வாய்ப்புகள் நிறைய இருக்கு..இதனால் ஆடியில் கரு உருவாகாமல் இருப்பது நல்லது.

தை மாதம் திருமணம் ஆனால் சூரியன் உச்சம் ஆகக்கூடிய சித்திரை மாதம் அக்குழந்தைக்கு நான்காவது மாதமாக வரும்.வைகாசி திருமணம் ஆகும் போது சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெறக்கூடிய ஆவணி மாதம் நான்காவது மாதமாக வரும்.இவை எல்லாம் சிறப்பான திருமண மாதங்களாக புகழ் பெற இது முக்கிய காரணம்

Thursday, 15 July 2021

எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

உலகில் ஒரு மனிதனின் சராசரி... 

ஆயுட்காலம் 70 ஆண்டுகள். 

★பாலிய வயது முதல், பருவ வயது வரை: 

முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும். 

★வாழ்வின் கடைசி 20 வருடங்கள்: 

நாம் வாழ்ந்தும் பயனில்லை, 
வீட்டில் இருக்கும் 
Table, 
chair, 
போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம். 

20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள்.

★அந்த 30தில் 10 வருடங்கள்: 

குறைந்த பட்சம் தினசரி
8 மணி நேரம்
தூங்கி விடுகிறோம். 

மீதி இருப்பது: 20 வருடங்கள். 

இதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது. 

மீதி இருப்பதோ:
10 வருடங்கள். 

இதில்:

மனைவியோடு பிரச்சனைகள், 
குழந்தைகளோடு பிரச்சினைகள்,
உடல் நல குறைபாடுகள், 
என 2 வருடங்கள் போய் விடும். 

மீதி இருப்பது வெறும்: 

8 வருடங்கள். 
அதாவது 2922 நாட்கள். 

நமது மன திருப்திக்காக,
இந்த 2922 நாட்களை வேண்டுமானால் 
'round'டாக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். 

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,
வெறும் 3000 நாட்கள் மட்டும் தான். 

இந்த_3000_நாட்கள் வாழ்வதற்கு:

மனம் நிறைய…………!!!!!???

வெறுப்பு, 

கோபம், 

துரோகம், 

வன்மம், 

வன்முறை, 

வஞ்சகம், 

அகங்காரம், 

தலைக்கனம்,

ஏளனம், 

சந்தேகம்,

என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில்
இவற்றை
பின்பற்றலாமே……

அன்பு, 

கருணை, 

இரக்கம், 

பாசம், 

அமைதி, 

நட்பு,

நம்பிக்கை, 

காதல், 

இயற்கை,

உதவி, 

புன்னகை,

கனிவு, 

குழந்தை, 

பாராட்டு,

விட்டுக்கொடுத்தல், 

இறை பக்தி, 

குடும்பம், 

தன்னம்பிக்கை,

மகிழ்ச்சி,

சந்தோஷம்,

என எத்தனையோ 
positive வான விஷயங்கள் இருக்கின்றனவே.
இவற்றை பின்பற்றலாமே. 

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும். 

தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும். 

அது நெருப்பாகவே இருந்தாலும் கூட. 

ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பைஉமிழாமல், 

எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

"☂8"-ன் சிறப்பு

"☂8"-ன் சிறப்பு




*"☂எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...! 
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் 
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய 
        அன்றே மார்பு சளி
        கரைந்து வெளியேறுவதை    
        காணலாம்.
*2.* இந்த பயிற்சியைஇருவேளை
        செய்துவந்தால், உள்ளங்கை     
        கை விரல்கள்   
        சிவந்திருப்பதை காணலாம். 
        அதாவது ரத்த ஓட்டத்தை 
        சமன்படுத்துகிறது என்று
        அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் 
        (சர்க்கரை வியாதி) குறைந்து 
        முற்றிலும் குணமாகும்.
        (பின்னர் மாத்திரை, 
        மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் 
        தலைவலி, மலச்சிக்கல் 
       போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். 
       ஆரம்ப நிலை கண்ணாடி 
       அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார 
       சக்கரங்கள் சரியாக 
       செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் 
       வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக 
       கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி 
          மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் 
          உள் உருப்புக்கள் பலம் 
         பெரும்...!

*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்...!

அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...!  

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

இதை செய்ய வயது வரம்பு இல்லை,  இப்பயிற்சி 
*"வாசி யோக"த்திற்கு இணையானது,* 
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர்,  மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது..
.

Wednesday, 14 July 2021

*A. M. & P. M. ?*

*A. M.  &  P. M. ?*

All these days, we were made to believe that, the terms A.M. and P.M. stands for:

▪A.M.  =   *ante meridian*
▪P.M.  =    *post meridian*

(ante of what ?)  and  (post of what ? )  never clarified ... !!!

(what = the subject himself is missing)

Now our *ancient Sanskrit texts have blown off the ambiguity and the things are now Crystal clear*

Just take a look:-

▪A.M. =  *Aarohanam Marthandasya*

▪P.M.  =  *Pathanam Marthandasya*

Explanation:-

The *‘Sun’* who is vital to the calculation remains un-mentioned. This is unthinkable and unjustifiable. That lacuna arises because it is not realized that the letters *A.M. and P.M. are the initials of the hoary Sanskrit* expressions (आरोहणम् मार्तडस्य्) Arohanam Martandasaya *(i.e. the climbing of the sun)* and (पतनम् मार्तडस्य्) Patanam Martandasaya *(i.e. the falling of the sun).*



கர்ப்பிணிகள்- கந்த சஷ்டி கவசம்

கர்ப்பிணிகள் கவனிக்கவும்

இன்று எத்தனை ஸ்பெசலிஸ்ட் டாக்டர் இருக்காங்க..கண் காது மூக்கு நரம்பு எலும்பு என ஒவ்வொரு உறுப்புக்கும் தனி திறமை பெற்றசிறப்பு மருத்துவர் இருக்காங்க..ஒவ்வொரு உறுப்பும் மனித உடலில் மிக முக்கியம்.

இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து ஒவ்வொரு உறுப்பும் பலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் பாடல் தமிழில் உள்ளது என்றால் அது கந்த சஷ்டி கவசம்தான்.மற்ற மொழிகளில் இப்படி ஒரு சிறந்த கவச பாடல் இருக்கா என்பது சந்தேகமே.

கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தை ஒவ்வொரு உறுப்பும் நன்கு முழுமையாக வளர்வது மிக அவசியம். அதற்கு கந்த சஷ்டி கவச பாராயணமே மிக சிறப்பு.

குழந்தை ஆரோக்கியமாக,அறிவாற்றலுடன் பிறக்க தினசரி கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம் படிக்கவும்..பழங்கள் அதிகம் உண்ணவும் நம்ம ஊர் நாட்டு பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளவும்..

கர்ப்பமான பெண்கள் 2 வது மாதத்தில் இரட்டை பிள்ளையாரை வணங்கவும்..3வது மாதத்தில் சூலம் வரைந்து வணங்கவும் 4 வது மாதத்தில் நாகம் வரைந்து வணங்கவும் 5 வது மாதத்தில் பரமசிவனை பூஜிக்கவும்.6 வது மாதத்தில் ஆறுமுகனையும் 7 வது மாதத்தில் ஏழு வகை அம்மனையும் 8 வது மாதத்தில் விஷ்ணுவையும் 9 வது மாதத்தில் நவகிரகங்களையும் 10 வது மாதத்தில் இஷ்ட தெய்வத்தையும் பூஜிக்கவும் .இதனால் பிறக்கின்ற குழந்தை அறிவு ,அதிர்ஷ்டம்,கொண்டதாக இருக்கும்..!! 


பன்னிரு ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய கிருஷ்ணன்

*பன்னிரு ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய கிருஷ்ணன்*

மேஷம் - சங்கு சக்கரம் ஏந்திய கிருஷ்ணன்

ரிஷபம் - பசுவுடன் உள்ள கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன்

மிதுனம் - ராதையுடன் உள்ள கிருஷ்ணன், பலராமன் உடன் இருக்கும் கிருஷ்ணன்

கடகம் - யசோதை உடன் உள்ள கிருஷ்ணன்

சிம்மம் - மலையை தூக்கி தன் மக்களை காக்கும் கிருஷ்ணன், கிரீடம் தரித்த கிருஷ்ணன்

கன்னி - தனது மனைவியர் உடன் உள்ள கிருஷ்ணன்

துலாம் - துலாபாரம் செய்யும் விதத்தில் உள்ள கிருஷ்ணன்

விருச்சிகம் - காளிங்க நர்த்தனன்

தனுர் - தேரோட்டி கிருஷ்ணன்

மகரம் - மாடு மேய்க்கும் கிருஷ்ணன், குருவாயூர் கிருஷ்ணன் 

கும்பம் - வெண்ணை பானையுடன் உள்ள கிருஷ்ணன்

மீனம் - கீதா உபதேசம் செய்யும் கிருஷ்ணன், தசாவதார கிருஷ்ணன். 

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பணம்* 🙏

Tuesday, 13 July 2021

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

Monday, 12 July 2021

பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான கயா

பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான கயா

அசுர குலத்தில் தோன்றிய கயாசுரன் கடுமையான தவத்தை மேற் கொண்டபோது தேவலோகமே நடுங்கியது.. 

இதை கண்ட தேவர்கள் பிரம்மனை நாடினர் .பிரம்மதேவர் தேவர்களுடன் சிவபெருமானை நாடினார்கள்.

 சிவபெருமான் அனைவருடன் இணைந்து விஷ்ணுவை நாடினார்கள்.

அவர்களின் பயத்தைப் போக்க பகவான் விஷ்ணு கயா அசுரனிடம் வேண்டிய வரத்தைக் கேள் என நேரடியாகக் கேட்டார்.. 

இதைக் கேட்ட தேவர்கள் நடுங்கிப் போனார்கள்.

இருப்பினும் கயாசுரன் உடனடியாக பகவான் விஷ்ணுவிடம் தேவர்கள் ரிஷிகள் துறவிகளை  காட்டிலும் என் உடல் புனிதமாக போற்றப்பட வேண்டும். 

என்னை தொடுப்பவர்களுக்கு  புனிதம் கிட்ட வேண்டும் என வேண்டினான்.. 

விஷ்ணு பகவானும் அவன்விருப்பத்தை வரமாக அருளினார் .

இதைக் கேட்ட தேவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கயாசுரன் பின்விளைவுகளை பிற்காலத்தில் உணரத்தொடங்கினர்.

 கயாசுரன் வரத்தை அறிந்த பலர் தங்களது இறுதி காலத்தில் அவனை தரிசித்து சுலபமாக சொர்க்கத்தை அடைந்தனர். 

இதனால் நரக லோகம் முழுவதும் கலைக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் யமராஜர் பிரம்ம தேவரை நாடினார் .

நரக லோகம் கலைக்கப்பட்டால் அதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும். 

அதே சமயத்தில் நரக வேதனையை நினைத்து ஏற்படும் பயமே ஒருவனை நல்வினை பாதைக்கு தூண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என யமராஜர் வாதாடினார். 

தீய செயல்களைச் செய்தாலும் கயாசுரன் இந்த தொடர்பினால் கடைந்தேறிவிடலாம்  என்ற தைரியம் ஏற்பட்டுவிட்டதால் இயற்கையின் நீதியே குளறுபடி ஆகிவிடும் என்றும் எமராஜர் தெரிவித்தார்....

எமராஜரின் செய்தியில் உண்மை இருப்பதை உணர்ந்த பிரம்மா அவரை அழைத்துக்கொண்டு பகவான் விஷ்ணுவை நாடினார்.

 பகவான் விஷ்ணுவும் கயாசுரனிடம்  விவரத்தை ஒளிமறைவுயின்றி கூறி ...

ஒரு யாகத்தை நிகழ்த்த அவருக்கு அவனது உடலையே தானமாக கேட்டார்.. 

நல்ல காரியத்திற்கு தன் உடல் பயன்படட்டுமே . ஆனால் அதைக் காட்டிலும் வேறு மகிழ்ச்சி இல்லை என்று கூறிய கயாசுரன் உடனடியாக வேள்விக்காக தன் உடலையே அர்ப்பணித்தான் .

 பிரம்மா தலைமையில் நடைபெற்ற அந்த வேள்வியில் அனைவரும்பங்கெடுத்துக் கொண்டனர்.. 

அத்தருணத்தில் கயாசுரன் உடல் தொடர்ச்சியாக ஆடிக் கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஆட்டத்தை தடுக்க முடியவில்லை.. 

அப்போது பகவான் விஷ்ணு தனது கதை மூலமாக கயாசுரன் உடல் ஆட்டத்தை நிறுத்தினார் .

கயாசுரன் உடல் மார்பின்மீது தர்மசீலா என்ற கல்லை வைத்து தம் திருநாமத்தை  வைத்து  கல்மீது அழுத்தினார் விஷ்ணு. கயாசுரன் யாகத்திற்காக உடலை அர்ப்பணித்த இடமே கயா என்று போற்றப்படுகிறது.

 அதற்கு முன் பகவான் விஷ்ணுவிடம் கயாசுரன் எல்லா தெய்வங்களும் தன்னுடைய உடல் மீது உறைய வேண்டும் என்றும். 
இந்த க்ஷேத்திரம் கயா என்ற தன் பெயரால் அழைக்க வேண்டுமென்றும் வரம் கேட்டான்.

 இத்திருத்தலம் சிராத்தம் கொடுப்பவர்கள் பித்ருக்கள் அனைவரும் பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்றும் வரத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டான். 

இவ்வாறுதான்​ கயாசுரன் பெற்ற வரத்தினால் மூதாதையர்கள் தன் வம்சத்தில் யாராவது ஒருவர் கயாவுக்கு வந்து தம்மை கரையேற்ற  மாட்டார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள் பித்ருக்கள்...

இத்தனை பிரசித்திப்பெற்ற ஷேத்திரம் கயாவுக்கு நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்த ஒருமுறையேனும் சென்று வருவோம்...
அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜெயம்  🐘

Sunday, 11 July 2021

தேர் இழுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?

தேர் இழுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
 நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார்.
அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.
ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார். “ தேர் இழுத்தாயோ ….” என பெரியவர் வினவ ஆம் அதன்பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார்.
தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள் நோயாளிகல் மாற்றுத்திறனாளிகள் ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டு களிக்க முடியும். கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளீப்படும் ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும். தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்காத மனிதர்களாலேயே தம் பக்கம் இழுக்க முடியும் என்பதே தேரோட்டம் உணர்த்தும் உண்மை.
தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் தேர் இழுப்பதற்கும் தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். பூர்வ ஜென்ம புண்ணீயம் இருந்தால்தான் நம்மால் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள முடியும். தேர்வடத்தைத் தொட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது. அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும்போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகின்றது.
பக்தியுடன் தெய்வத்தை இழுக்கும் சக்தி தங்களுக்கு இருப்பதாக மக்கள் கருதுவதும் பக்தர்களின் பக்திப் பெருக்கைக் கண்டு தெய்வம் ஓடி வருவதும் தேர்த்திருவிழாவின் மகத்துவம் ஆகும். அந்த இடத்தில் தெய்வத்தின் சாந்நித்யம் அதிகரித்துள்ள இடத்தில் இருப்பதற்கே ஒருவரின் ஜாதகம் சரியாக அமைய வேண்டும்.
நிலக்கிழாரின் கர்மவினை அவரைத் தேர்த்திருவிழாவில் பங்கெடுக்க முடியாமல் செய்திருந்தது. ஆனால் ஒரு மஹானை தரிசித்த மாத்திரத்தில் அவரது பாப வினைகள் நீங்கியதுடன் தேர்த்திருவிழாவிலும் கலந்துகொள்ளச் செய்தது. அதனால் கடவுளின் அருள் பலம் சேர வழக்கும் அவருக்கு சாதகமானது.
தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்
1 கடவுளின் அருள் பலம் கிடைக்கும்
2 வெற்றி உண்டாகும்.
3 நோய்கள் தீரும்
4 பாபவினைகள் தீரும்.
வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அகலும்.
6 மனக்குழப்பங்கள்நீங்கி, நிம்மதி கிடைக்கும்
7 சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
இத்தனை நன்மைகளைத் தரக்கூடிய தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதும் உற்சவம் நடைபெற உதவி செய்வதும் தொண்டுகள் புரிவதும் நிறைந்த புண்ணியத்தைத் தரும். ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!
ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர,. 
ஶ்ரீமஹாபெரிவா ஶரணம்,.

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்* *என்பது வியாபாரதில் மட்டுமல்ல*, *வாழ்க்கையிலும் பல சமயம்* *நடக்கின்றது*...!

*ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்*
*என்பது வியாபாரதில் மட்டுமல்ல*,

*வாழ்க்கையிலும் பல சமயம்*
 *நடக்கின்றது*...!

*உதாரணத்திற்கு*..
*கோபத்தை* *வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்*!

*பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்*

*வெறுப்பை வாங்கினால், வேண்டாத பகை இலவசம்*!

*கவலையை வாங்கினால், கண்ணீர்  இலவசம்*

*மாறாக*....

*நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்*!

*உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்*!

*அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்*

*நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்*

*அன்பை வாங்கினால்*.....
*அனைத்து நன்மைகளும் இலவசம்*.

*இலவசமாக எது வேண்டுமென்று*
*இன்றேனும் முடிவு செய்யுங்கள்*

Saturday, 10 July 2021

செல்வ செழிப்பை அதிகரிக்கும் சூட்சுமம்

செல்வ செழிப்பை அதிகரிக்கும் சூட்சுமம் 

 செல்வம் பெருக இதனை எனக்கு என் குருநாதர் அறிவுறுத்தினார் இதனை கடைபிடித்தன் மூலம் பல அற்புத மாற்றங்களை அடைந்தேன்.நண்பர்களும் அதனை பெறவே இன்று பூசம் நட்சத்திரம் விருத்தி நட்சத்திரம்,செல்வ பெருக்கு நாள்  என்பதால் இன்று அதனை எழுதுகிறேன்.

மழை நீரில் பிரபஞ்ச சக்தி இருக்கிறது அதிகளவு பாசிடிவ் எனர்ஜி இருக்கிறது..மழை பெய்யும் போது ஒரு செம்பு பாத்திரத்தில் மழை நீரை பிடித்து வைத்துக்கொல்ள வேண்டும்....கூரையில் ஒழுகும் நீரையோ பைப்பில் ஒழுகும் நீரையோ பிடிக்க கூடாது.நேரடியாக அதை பிடிக்க வேண்டும் மொட்டை மாடியில் பாத்திரம் வைத்து பிடிக்கலாம் 

அந்த நீரை பூஜை அறையில் வைக்க வேண்டும்...திங்கள் கிழமை ,வெள்ளிக்கிழமையில் அதனை வீடு முழுக்க தெளிக்க வேண்டும்.உங்கள் வீடு முழுக்க பிரபஞ்ச சக்தி ,பாசிடிவ் எனர்ஜி ,முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆற்றல் பரவும்.உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகும்.செய்வினை பில்லி சூனியம் விலகும்.

முருங்கை_vs_கொரோனா

🌿 #முருங்கை_vs_கொரோனா

🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்புத்திறனில் முருங்கைக்கே முதலிடம்...

🌿பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் முருங்கைகீரை அல்லது முருங்கைக்காயை வாரம் மூன்று முறை உட்கொண்டால் போதும்,  
நமது நோய் எதிர்ப்புத்திறன் 
பல மடங்கு உயர்ந்துவிடும். 

🌿முருங்கையிலுள்ள வைட்டமின் 
C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட 7 மடங்கு அதிகம். 

🌿முருங்கையிலுள்ள வைட்டமின் 
A ஆனது கேரட்டில் உள்ளதைவிட 
4 மடங்கு அதிகம்.

🌿முருங்கையிலுள்ள வைட்டமின் 
B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம். 

🌿 முருங்கையிலுள்ள வைட்டமின் 
B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம்.

🌿முருங்கையிலுள்ள கால்சியம் சத்து பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிகம். 

🌿முருங்கையிலுள்ள புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதைவிட 2 மடங்கு அதிகம்.  

🌿முருங்கையிலுள்ள மெக்னீஷியம் சத்து முட்டையில் உள்ளதைவிட 
36 மடங்கு அதிகம்.

🌿முருங்கையிலுள்ள இரும்புச் சத்து மற்ற கீரைகளில் உள்ளதைவிடத் தோராயமாக 25 மடங்கு அதிகம்.

🌿முருங்கையிலுள்ள பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதைவிட 
3 மடங்கு அதிகம். 

🌿 முருங்கை உண்ட கிழவன்கூட கைத்தடி இன்றி நெஞ்சை நிமிர்த்தி வெறும் கையோடுதான் நடப்பான் என்பதை 'முருங்கையை நட்டவன் வெறுங்கையோடுதான் போவான்'  என்னும் பழமொழி உணர்த்தும். எனவே, முருங்கையை உண்டு என்றென்றும் இளமையுடன் வாழ்வோம்.

🌿  முருங்கைக்கீரையைக் கடைந்தோ, குழம்பு வைத்தோ, சூப் செய்தோ, சுண்டியோ, பொரியல் செய்தோ, சப்பாத்தி , கேழ்வரகு அடைகளில் சேர்த்தோ, முருங்கைப்பொடியைச் சோற்றில் கலந்தோ சாப்பிடலாம்.

🌿  முருங்கைக்காய்களைக் குழம்பு, சாம்பார், பொரியல், பொரித்த குழம்பு, காரக்குழம்பு வைத்துச் சாப்பிடலாம். முருங்கைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதியை  எடுத்து பருப்புடன் சேர்த்தரைத்து மசால் வடை செய்தும் சாப்படலாம்.😇

மனித முகமில்லாத தெய்வங்களை வழிபடுங்கள்..

ராகு கேது நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும் ,அசுவினி,மகம்,மூலம்,திருவாதிரை,சுவாதி,சதயம்...

ராகு கேது திசை நடந்தாலும் லக்னத்தில் ராகு கேது இருந்தாலும் நாகதோசம் இருந்தாலும் மனித முகமில்லாத தெய்வங்களை வழிபடுங்கள்..

உதாரணம் வினாயகர்,லட்சுமி நரசிம்மர்,வராகி,ஹயக்ரீவர்,
ஆஞ்சநேயர்...

Friday, 9 July 2021

உயிர்க்கொடி

 உயிர்க்கொடி என்கிறார்கள்.



எண்ணெய்கள் தொப்புளில் எண்ணெய் விட்டு பராமரிப்பது தான் உங்களுடைய தொப்புளை கவர்ச்சியாகவும் அழகாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. என்ன எண்ணெய் தடவினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

கடுகு எண்ணெய் தொப்புளிலும் அதைச் சுற்றியும் கடுகு எண்ணெய் தினமும் அப்ளை செய்து வந்தால் தொப்புளைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மாறி, மிக வழவழவென்ற உதடுகளைப் போன்றே உங்கள் தொப்புளும் மாறிவிடும்.
ஆலிவ் ஆயில் தொப்புளில் ஆலிவ் ஆயில் தடவி வந்தால் அது நரம்புகளின் வழியாகஉடல் முழுக்க பரவி, புதுப்பொலிவையும் தெம்பையும் தரும். தேங்காய் எண்ணெய் தொப்புளில் தினமும் 2 துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டுவந்தால் தலைவலி, நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்னைகள் தீரும். உடல் வீரியம் அதிகரிக்குமாம். பிறகென்ன… தினமும் தூங்கப் போறதுக்கு முன்னாடி இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டுட்டு போங்க…

ஆல்கஹால் ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து, அதை தொப்புளில் வைத்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து போகும். அதோடு, மூக்கு ஒழுகுதல், தீராத காய்ச்சல் ஆகியவையும் குணமாகும். பிராந்தி பிராந்தியை சிறு காட்டனில் நனைத்து தொப்புளின் மேல் வைத்திருந்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

பசுவின் பால் பசுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான வெண்ணெயைத் தொப்புளில் வைத்தால் தொப்புள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி மிகமிக மென்மையாக மாறும். லெமன் ஆயில் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் 2 துளிகள் லெமன் ஆயிலைத் தொப்புளில் வைப்பதன் மூலம் பூஞ்சைத் தொற்று உண்டாகாமல் தடுக்க முடியும்.

வேப்பெண்ணெய் தினமும் தொப்புளில் வேப்ப எண்ணெய் வைப்பதால் வெண்புள்ளிகள், தேமல் போன்ற தோல் சம்பந்தப்பட்ட எந்தவித நோய்த் தொற்றுகளும் உண்டாகாமல் தடுக்கலாம். பாதாம் எண்ணெய் தினமும் பாதாம் எண்ணெயை இரண்டு துளிகள் தொப்புளில் வைத்து வந்தால் தொப்புள் மட்டுமல்லாமல் உங்கள் முகமும் பளபளக்கும்.

விளக்கெண்ணெய் விளக்கெண்ணையை தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் தொப்புளிலும் கால் பெருவிரல் நகத்திலும் தடவிக் கொண்டு படுத்தால்எவ்வளவு உடல்சூடு இருந்தாலும் பஞ்சாகப் பறந்து போய்விடும். ஆனால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் சிறிது நேரம் வைத்திருந்து, பின் நன்கு கழுவிவிட்டு படுக்கவும்