jaga flash news

Sunday, 31 January 2016

மனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி....

மனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி....

மனைவி வீட்டிற்க்குப்போனாலே சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என்று

 புலம்பும் ஆண்களுக்கு கொஞ்சம் டிப்ஸ்

1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு 'உனக்கு பாதுஷா புடிக்குமே இன்னைக்கு

வாங்கிக்கிட்டு வரவா?'ன்னு ஒரு கேள்வி கேளுங்க.

2. மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை

ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை

வாங்கி கொடுத்து அசத்துவது..
3. மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து

இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி

 அடுக்கி வைத்து விடுங்கள்.
4. புதிய ஆடைகளை அணிந்து வரும்போது வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. நீ இந்த

ட்ரஸ்ல சூப்பரா இருகக என்று பாராட்டு தெரிவிக்கவேண்டும். எப்பவும் முகத்தை

கோபமாக வத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும்

போதாவது சிரித்து வையுங்கள்.
5. விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகை சமைத்து அசத்துங்கள்.

வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

6. சமயலறை சாமான்கள் நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி,

காபித்தூள் போன்ற சாமன்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே

அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!

7. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருநாளாவது ஓட்டல், சினிமா போன்ற

பார்க், பீச் என்று அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

8. எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு

மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.
9. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம்

இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

10. மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேட்டஸ்ட்

ட்ரெஸ் போட்டுப் பழகணும்.
11. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கொஞ்ச

நேரம் கழித்து 'இப்ப என்ன சொன்னே'ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

12. பூவுக்கு மயங்காத பெண்கள் இருக்க முடியாது. எனவே பூவை வாங்கி கொடுத்து

அசத்துங்க!
13. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? உனக்கு

 பிடிச்சிருக்கா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.

14.அவங்களுக்குப் பிடித்த tv channel programme பார்க்க விடுங்க..

நைவேத்தியம்

நைவேத்தியம்
சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?
கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல்,
அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.
அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..
“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்
“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார்,
‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.

இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும்

உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும்

நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான்

சிஷ்யன்

Saturday, 30 January 2016

சகுனி வரலாறு:-


காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன் சகுனி.
துரியோதனனின் தாய் காந்தாரியின் தம்பி ஆவார் சகுனி..
காந்தாரியின் முதல் கணவருக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு
 மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதால், நுணுக்கமாய் அன்றைய சோதிடப்படி 
பார்த்தால் காந்தாரி ஒரு விதவை..

பீஷ்மரின் உத்தரவில் ஆட்டுக்கிடாய் விவாகாரம் மறைக்கப்பட்டு திருதராஷ்டிரரை மணம் முடிக்கிறார் 
காந்தாரி ..பிறகு விவரம் அறிந்த பிதாமகர் என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா? 
என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே,சுவலன் 
குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்” என்று சுவலனையும அவன் 
மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார் பிதாமகர் பீஷ்மர்..
ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் 
உண்ணக்கொடுத்தார்.”நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது,சகோதரர்களுக்குள்
 உணவுக்காக சண்டை வந்தது,சுவலன் ஒரு யோசனை சொன்னான் “நம்மில் யாராவது 
புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த
 பீஷ்மரை 
பழிவாங்கட்டும்” இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்…

வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான்.
குடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் 
சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், “இனி நீ நடக்கும் போதெல்லாம் 
நொண்டுவாய், ஒவ்வோரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், 
அவர்களை மன்னிக்காதே” என்றார்.

சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் 
மகனிடம் “நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில்
 என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய 
படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்” என்றார்.
சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்து போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து
 கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான்.
கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல 
பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டு நிறைவேற்றினான்..

இறுதியில் சகாதேவனால் குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார். சகுனியின் மகன் உல்லூகன் 
அபிமன்யுவால் கொல்லப்பட்டான்…

“கொடுமை” செய்பவனுக்கு இறையருள் கிடையாது

“கொடுமை” செய்பவனுக்கு இறையருள் கிடையாது
அறியாமை உள்ள மனிதன்தான், நல்ல்ல்லா... ஆடு, கோழி போன்ற “வலியுள்ள” உயிரினத்தை கொன்று

உணவாக உட்கொண்டு, எதாவது கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்துவிட்டால், கடவுள் அருள்

பெற்றுவிடலாம் என்று கற்பனை செய்வார்கள்.
இன்னும் சில பேர் நாற்பது நாள் மட்டும் சைவம் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள், ஏனென்றால் அந்த

கடவுள் அப்படி இருந்தால்தான் அருள் செய்யுமாம். நாற்பதுநாள் மட்டும்- தானும் தன் குடும்பமும்

நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்தான் இதை செய்யவேண்டும்.
இதுபோன்ற அறியாமைக்கு காரணம் நாம் முன்பு பல பிறவிகளில் செய்த பாவமே..! சைவத்திற்கு ஒரு

கடவுள், அசைவத்திற்கு ஒரு கடவுள் என்றெல்லாம் கிடையாது. அப்படி நீங்கள் இருந்தால் உங்களுக்கு

“கடவுள்” என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை என்றுதான் பொருள்.
“மரணத்தை வென்று” கடவுள் என்று பெயரெடுத்த ஆசான் திருவள்ளுவர், இதையே தனது “புலால்

மறுத்தல்” என்ற அதிகாரத்தில் சொல்லியது-
தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எனில்


எங்ஙனம் ஆளும் அருள்?
உலகத்தையும், அதில் உயிரினத்தையும் படைத்த அந்த ஆதி சக்தி, நாம் உணவு உட்கொண்டு,

அதன்மூலமாக “சத்து- அசத்து” பிரித்து வாழவேண்டும் என்ற ஒரு இயக்கம் வைத்துள்ளது.

அது(இயற்கை அன்னை) நேராக வந்து நமக்கு உணவளிக்க முடியாது என்பதால், உண்பதற்காக

வலியற்ற தாவரங்களைப் படைத்துள்ளது.
அப்படி “அசைவம்” சாப்பிட்டுக்கொண்டே நாங்கள் நல்லபடியாகத்தான் இருக்கின்றோம் என்ற நினைப்பு

இருந்தால் அதுவும் உங்கள் அறியாமைதான். அது முன் செய்த ஏதோ ஒரு வகையான புண்ணியம்

மிச்சம் இருந்து நம்மை காக்கிறது என்று பொருள். அது தீர்ந்ததும் வாழ்கை “பிடித்தது சனியன்”

என்றாகிவிடும்.
“ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி”

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப்பகுதிகளில்

நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில்

பலவீனமாகிவிடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான

மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால்,திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில்

அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 

140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின்

கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான

இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயிலைப்பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு,

திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம்

கருத்தில்கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று

நாம் அறிந்துகொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில்

இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது

முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள்

மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்துவிடுகிறது.

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்.!

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்.!

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த

பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது –

அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச்

சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி –

கொடுமையாக தண்டிக்கிறார்.

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க

படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து 

சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த

 அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச்

செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை 

நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில்

இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து

வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன்

கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்

எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை

முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு

ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு

இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு

உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை

புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை

நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது , மிக நல்லது.

அவனைச் சரணடைந்தால் போதும்

மகாபாரத யுத்தத்தின் போது,

ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என

சபதம் செய்தான் அர்ஜுனன்.

அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.

துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்். அர்ஜுனனால் அவனை 

நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.

" என்ன கிருஷ்ணா...சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...


ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"


என்றான் அர்ஜுனன்.


சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் 


குதூகலித்தான்.

்"சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை 


வெளியே நீட்டினான்.

உடன் அர்ஜுனனைப் பார்த்து,



" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது

ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள 


விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர். ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் 

விருத்தட்சரன்.

தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார்.அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி

ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க 

கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." 

என்றது.இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்

"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி


வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான். இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி

" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள

அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.


அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம்


செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.

பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது,அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே 


தள்ளினார்.அது பூமியில் விழுந்தது.தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி 

வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.

நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம்


 செய்வதும்,நடத்திவைப்பதும் பகவான் தான்.அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம்

ஒப்புவித்துவிட்டு,"பகவானே.!

உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் 


காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்....

செல்வம் பெருக சில குறிப்புகள்

செல்வம் பெருக சில குறிப்புகள்
-------------------------------------------------------
1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.

2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்


4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித 

ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.


5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். 

இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை 

காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு


வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு


அதிகரிக்கும்.

9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது


குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.

10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால்

பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.

11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்

கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்

.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, 

பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.

14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் 

வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.

16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக 

பணம் வரும்.

17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் 

அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.

18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் 
விலகும்.

19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.

20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி 

ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் 


இல்லாதவர் 

கூட லட்சாதிபதி ஆகலாம்.

21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு 
ஆகாது.


22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் 

லஷ்மிகடாட்சம் ஏற்படும்.

23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி 

நித்தமும் வாசம்செய்வாள்.

24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து 
உண்டாகும்.

25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு 
அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.

26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் 
சேர்ந்துகொண்டே இருக்கும்.

27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை 
பெறலாம்.

28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.

29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை 

மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.

30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை 
அணிவித்திடபணம் குவியும்.

31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் 
குவியும்.

32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.

34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் 
ஆகர்ஷணம் ஆகும்.

35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி 
தெளித்திடசெல்வம் சேரும்.

36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் 
சேரும்.

38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.

39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட 

லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.

40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க 

ஐஸ்வர்யம் பெருகும்.

41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.

42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் 

கிடைக்கும்.

43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.

44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் 
முன்னேற்றம்ஏற்படும்.

45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.

46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் 
ஏற்படும்.

47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.

48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண 
லாபம்கிட்டும்.

50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி 
வளம்பெருகும்.

51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து 

மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து 

மடங்குநம்மிடம் வந்து சேரும்.

54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை 

தினமும்அணிந்து வர பணம் வரும்.

55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் 

கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.

56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் 

ஆகும்.

57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி 

கடாடசம்நிரந்தரமாகும்.

58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் 

நீங்கிதனலாபம் பெறலாம்.

59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.

60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து 
வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.

62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து 

வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட 

ஐஸ்வர்யங்களும்வசமாகும்.

64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை 

வழிபாட்டால்பணம் கிடைக்கும்.

65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.

66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.

67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.

68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 

33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.

70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் 

செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.

73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.

74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.

76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி 

இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.

77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.

78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.

79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.

80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.



பூர்வ புண்ணியம் என்றால் என்ன





ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம் வர்த்தனி குல சம்பிரதாம் பதவீ பூர்வ புண்ணியானாம்

லிக்யதே ஜென்ம பத்ரிகா.!’

🌼 இரண்டு நபர்கள் இருப்பார்கள். இரண்டு நபர்களுக்கும் ஒரே கல்வி இருக்கும். ஒரே

குடும்ப சூழ்நிலை இருக்கும்.

🌼வேலைகளில் ஒரே திறமை இருக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தால்

அந்த இரண்டு நபர்களில் ஒருவன் மட்டும் தன் வாழ்க்கையில் சுகமான நிலைக்கு 

வந்திருப்பான்.


🌼யாரும் எட்ட முடியாத வெற்றி சிகரத்தை எட்டி இருப்பான்.ஆனால் அதே திறமையும்

தகுதியும் கொண்ட அந்த இன்னொரு நபர் மட்டும் அப்படியேதான் இருப்பான். அவன்

வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்ற நிலையும் வந்திருக்காது. அதற்கான நல்ல

சந்தர்ப்பங்களும் அமைந்திருக்காது.

🌼
இந்த வேற்றுமைக்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது அதற்கு ஜோதிட

சாஸ்திரம் சொல்கிற பதில்,

🌼“பூர்வ புண்ணிய யோகம்”.

🌼வாழ்க்கையின் சுகமான வாழ்க்கைக்கும், படிபடியான முன்னேற்றத்துக்கும், எந்த

பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவதற்கும், ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய

ஸ்தானம் வலுப் பெற்று இருக்க வேண்டும். நேற்றுவரை அடுத்தவேளை சோற்றுக்கு

தாளம் போட்டவன், இன்று லட்சாதிபதியாக-கோடிஸ்வரனாக ஆவதற்கு காரணம்

அவை, பூர்வ புண்ணிய ஸ்தானம் செய்யும் வினோதங்களே.

🌼இந்த பூர்வ புண்ணிய யோகத்தை எவ்வாறு அறிவது?

🌼 பல வருடங்களுக்கு முன்புவரை பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத தங்கள் குடும்ப

ஜோதிடரை அணுகி ஜாதகம் எழுத கேட்பார்கள். அந்த குழந்தையின் பிறந்த நேரம்

எதுவானாலும், அந்த குழந்தையின் தலையெழுத்தை சொல்கிற அந்த ஜாதகத்தை

எழுதுகிற நேரம் மிக முக்கியமானது என்று ஜோதிடரும் தொழில் பக்தியுடன் நல்ல

நேரம் பார்த்து ஜாதகம் கணித்து தர சில நாட்களை எடுத்துக் கொள்வார்

.🌼 அதன் பிறகு வந்த காலத்தில், பிறந்த குழந்தை ஏதோ நாளைக்கே படித்து முடித்து,

நாளை மறுநாள் ஒரு வேலைக்கு சென்று சம்பாதித்து, அதற்கு அடுத்த நாள்

திருமணத்தை முடிப்பது போல அவசரப்பட்டு, உடனே அன்றே ஜாதகம் எழுதி தர

வேண்டும் என்று ஜோதிடரை அவசரப்படுத்தி ஜாதகம் எழுதி கொண்டு சென்றார்கள்.

🌼இதன் காரணமாக கணிப்பில் தவறுகள் நேரும் நிலை வந்தது. இப்போது கணினி யுகம்.

பிறந்த தேதியும் நேரமும், பிறந்த இடமும் சரியாக தந்துவிட்டால் போதும். சிறிதும்

கணிப்பில் தவறு இல்லாமல் சரியான இராசி-லக்கினம்-நட்சத்திரம்-கிரகங்கள்

போன்றவற்றை மென்பொருள் கணித்து தந்துவிடும்

🌼. இது ஒரு விதத்தில் சௌகர்யமானது ஆனால் சாஸ்திர ரீதியானதல்ல.

🌼ஆனால் இன்று, பிறந்த குழந்தையின் ஜாதகத்தை பஞ்சாங்கம் பார்த்து கணித்து

எழுதுகிற பொறுமை ஜோதிடர்களுக்கே இல்லை என்பதால் சாஸ்திரத்தை கொஞ்சம்

தள்ளி வைத்து விஞ்ஞான மென்பொருளை ஏற்கலாம்.

🌼ஜோதிடர்கள் ஒரு குழந்தைக்கு முதன்முதலில் ஜாதகம் கணித்து எழுதுகிற போது,

நாம் பூர்வ புண்ணியத்தின் அவசியம் உணரும் விதமாக ஒரு ஸ்லோகம் எழுதுவார்கள்.

அது -

🌼 ‘ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம் வர்த்தனி குல சம்பிரதாம் பதவீ பூர்வ

புண்ணியானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.!’ சௌபாக்கியமான

🌼இந்த

குழந்தையின் ஜென்ம பத்ரிகா என்கிற ஜாதகம், இந்த குழந்தையின் பூர்வ புண்ணியப்படி

வாழ்க்கையை நடத்தி செல்ல இருக்கிறது. பூர்வ புண்ணியம்படி என்றால் முன்

ஜென்மவினைப்படி என்று பொருள்.

🌼பதவி என்றால், நீதிபதி பதவி, வக்கீல் பதவி, மருத்துவர் பதவி, எம்.எல்.ஏ. பதவி,

அமைச்சர் பதவி என்று மட்டுமல்ல. ஒருவர் அடுத்தடுத்து முன்னேறி செல்கிற

நிலைக்கும் “பதவி” என்றுதான் அர்த்தம். நோயற்ற வாழ்க்கையும் பதவிதான்.

🌼இதுவரை ஏதோ சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு திருமணம் நடந்து ஒரு பெண்ணுக்கு
கணவன் ஆவதும் பதவிதான்.

🌼 கணவன் ஆனவன், ஒரு குழந்தைக்கு தந்தையாவதும் பதவிதான். அதே போல ஒரு

பெண் மனைவியாவதும், தாயாவதும், மாமியார் ஆவதும், பேரன்-பேத்திகளுக்கு பாட்டி

ஆவதும் பதவிதான். இப்படி எந்த ஒரு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு

பெயரும் பதவிதான்

🌼 எந்த பதவிகளும் தடையின்றி கிடைக்க ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்

வலுப் பெற்று இருக்க வேண்டும். இந்த பூர்வ புண்ணியத்தை அறியும் இடம் ஜாதகத்தில்

லக்கினத்திற்கு 5-ம் இடம். இந்த 5-ம் இடம் வலுத்திருந்தால் பள்ளத்தில் இருப்பவனும்

பல்லக்கில் அமருவான்.

🌼இந்த 5-ம் இடம் சிறப்பு வலிமை இல்லாவிட்டால், வாழ்க்கை முழுவதும்

எதிர்நீச்சல்தான். கரை சேர முடியாது. பொதுவாக மீன லக்கினத்திற்கு 5-ம் இடம் கடகம்.

அந்த வீட்டுக்கு உரிய சந்திரன், திரிகோணம் அதாவது 9-ல் அமைந்தால், அந்த ஜாதகர்

பல கோடிகளுக்கு அதிபதி. ரிஷப லக்கினத்திற்கு 5-ல் புதன் அமர்ந்தால்,

அஷ்டலஷ்மியும் அவனை தேடி வருவார்கள். கடக லக்கினத்திற்கு 5.-க்குரிய செவ்வாய்

உச்சம் பெற்று இருந்தால் அல்லது ஆட்சி பெற்று இருந்தால், நிறைய சொத்துகளுக்கு

அதிபதி.

🌼ஒருவனுக்கு நல்ல மனைவி, மகன், மகள் மருமகன், மருமகள், சொத்து சுகம்

கிடைத்தால் அவர்களை பார்த்து அடுத்தவர் கூறுவது, “அவர் பூர்வ புண்ணியம்

செய்தவர்” என்பதுதான். எவர் ஒருவர் முன் ஜென்மத்தில் புண்ணியங்களை செய்தாரோ

அவர்களின் இந்த பிறவியின் ஜாதகத்தில் நிச்சயமாக 5-ம் இடம் மிக பிரமாதமாக

அமைந்து இருக்கும்.

🌼 லக்கினத்திற்கு 5-ம் இடத்து அதிபதி, 6,8,12-ல் அமரக் கூடாது. நீச்சம் பெறக்கூடாது.

ராகு, கேது உடன் சேரக் கூடாது. அந்த 5-க்குரிய கிரகம், 2-க்கு 9-க்கு 4.க்கு. 11க்கு உரிய

கிரகத்துடன் இணைந்து அமைந்திருந்தால், ஏ.டி.எம். மிஷனே அவன் வீட்டில் இருப்பது

போலதான். பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

இந்த ஜாதகரிடம் Any Time Money தான்.

🌼என்னுடைய அனுபவத்தில் ரிஷப லக்கின ஜாதகர். அவருக்கு 9-ல் புதன்.

வாழ்க்கையின் முற்பகுதி வாழ்க்கை நாய் பட்டபாடு. ஆனால் பிற்கால வாழ்க்கையில்

அமோகமாக இருக்கிறார்.

🌼ரஜினி ஜாதகத்தில் சிம்ம லக்கினம். 5-ல் புதன்-சுக்கிரன். அவரின் முற்பகுதி வாழ்க்கை

போராட்டம் நிறைந்தது. பிற்பகுதியில் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

🌼இன்னொரு ஜாதகர். அந்த நபர் தனுசு லக்கினம். 5-க்குரிய செவ்வாய், 8-ல் நீச்சம்

அடைந்து இருந்தது. அந்த ஜாதகர் பல தொழில் செய்து பார்த்தவர். ஆனால் எதிலும்

முன்னேற்றம் இல்லை. ஆகவே எவருடைய ஜாதகத்திலும் 5-ம் இடம் சிறப்பாக இருக்க

வேண்டும். நிறைய புண்ணியங்களை செய்வது, நேர்மையாக நடந்துக் கொள்வது,

🌼இறைவனின் மீது நம்பிக்கையுடன் நல்ல செயல்களை மட்டும் செய்வது போன்றவை,

“பூர்வ புண்ணிய யோகம்” அமைய காரணமாக இருக்கிறது.

🌼 ஆகவே நல்லதையே செய்வோம். எல்லா பிறவிகளிலும் ஆமோக வாழ்க்கை

அமைந்து இறைவனின் அருள் பெறுவோம்