jaga flash news

Sunday, 29 October 2023

குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி!



குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி! செவ்வாய்க்கிழமை புக் செய்வது வேலைக்காகாது
விமானத்தில் டிக்கெட் புக் செய்யும் போது குறைந்த விலையில் எப்படி புக் செய்யலாம்.. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.


இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் போட்டி, வருமானம் அதிகரிப்பு என இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.


விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைவருக்கும் குறைந்த விலையில் டிக்கெட் கிடைப்பதில்லை. ஆனால், குறைந்த விலை டிக்கெட் புக் செய்ய சில டிரிக்குகள் இருக்கவே செய்கிறது.. அது குறித்து நாம் பார்க்கலாம்.

விமான டிக்கெட்: விமான டிக்கெட் விலை எப்போதும் ஒரே ரேஞ்சில் இருக்காது. அவை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் விமானங்களை புக் செய்தால் குறைந்த செலவில் பயணிக்க முடியும் என்பார்கள். மேலும், , நள்ளிரவு நேரத்தில் குறிப்பாகத் திங்கள்கிழமை இரவு புக் செய்தால் குறைவாக இருக்கும் என்பார்கள். ஆனால், இதில் பெரும்பாலும் உண்மை இல்லை என்கிறது ஹாப்பர் நிறுவனம்.

அது சரி அப்போது ஏன் செவ்வாய்க்கிழமைகளில் விமானம் டிக்கெட் ரேட் குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள் எனத் தெரியுமா.. இப்போது விமான நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டிக்கெட்களை மெஷின் லேர்னிங் மூலமாகவே விற்பனை செய்கிறார்கள். அதாவது இத்தனை காலமாக டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த டேட்டா அடிப்படையில் விமான நிறுவனங்கள் டிக்கெட்களை விற்கிறார்கள்.


என்ன காரணம்: இந்த டேட்டா மூலம் எந்த ரூட்டில், எப்போது தேவை அதிகமாக இருக்கும் என்பதை அவர்களால் ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டறிய முடியும். மேலும், எத்தனை பேர் குறிப்பிட்ட ரூட்டில் விமான டிக்கெட்களை தேடுகிறார்கள். விமான பயணம் எப்போது என்று பல்வேறு விஷயங்களை வைத்தே இப்போது டிக்கெட் ரேட் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த மேஷின் லேர்னிங் உள்ளே வருவதற்கு முன்பு, விமான ஊழியர்கள் தான் டிக்கெட் விலையை செட் செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை டிக்கெட் ரேட்டை நிர்ணயம் செய்யும் அவர்கள், வார விடுமுறை முடிந்து திங்களன்று பணிக்குத் திரும்புவார்கள். அப்போது குறிப்பிட்ட ரூட்டில் டிக்கெட் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்றால் விலையைக் குறைப்பார்கள். அந்தக் கால செட்அப்பில் இதற்குக் கொஞ்ச நேரம் பிடிக்கும். இதன் காரணமாகவே திங்கள் நள்ளிரவு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது.


நிலைமையே வேறு: ஆனால், மெஷின் லேர்னிங் வந்த பிறகு நிலைமையே வேறு.. இதனால் கடந்த 15 ஆண்டுகளாகச் செவ்வாய்க்கிழமைகளில் குறைந்த ரேட் என்பது இல்லாமல் போய்விட்டது. மெஷின் லேர்னிங் உள்ளே வந்த பிறகு டிக்கெட் விலையில் அடிக்கடி மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஒரு ரூட்டில் இப்போது ஒரே வாரத்தில் 12க்கும் மேற்பட்ட முறை டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் செவ்வாய் அன்று புக் செய்தால் குறைந்த விலை என்பதில் உண்மையில்லை என்பது தெரிய வருகிறது. டிக்கெட் ரேட் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதே உண்மை.



அப்போ வேறு எப்படி தான் குறைந்த விலையில் டிக்கெட் புக் செய்யலாம் என கேட்கிறீர்களா.. அதற்கும் சில ஆப்ஷன் இருக்கவே செய்கிறது. செவ்வாய்க்கிழமை புக் செய்தால் குறைந்த விலை இல்லை என்றாலும், செவ்வாய்க்கிழமை நீங்கள் பயணத்தைத் திட்டமிட்டால் அப்போது குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. செவ்வாய், புதன்கிழமைகளில் பயணித்தால் டிக்கெட் விலை 8 முதல் 15% வரை குறைவாகக் கிடைக்கும்.

பிரத்தியேக தளங்கள்: விமான நிறுவனங்கள் அடிக்கடி விமான ரேட்டை மாற்றும் நிலையில், அதைத் தெரிந்து கொள்ளவும் கூட தனியாக சில சைட்கள் இருக்கிறது. கூகுள் பிளைட்ஸ் உள்ளிட்ட சில தளங்களில் நீங்கள் எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும் என்பது போன்ற தரவுகளைப் பதிவிட வேண்டும்.


பயண தேதியில் சற்று தளர்வாக இருக்கலாம். அதாவது அடுத்த மாதம் 15ஆம் தேதி பயணிக்க வேண்டும் என்று இல்லாமல், 10 முதல் 15 வரை எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று பதிவிட்டுத் தேடுங்கள். அப்போது உங்களால் மிகக் குறைந்த ரேட்டில் விமான டிக்கெட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது


Sunday, 1 October 2023

அரைஞாண் கொடி.. இடுப்பை சுற்றி சின்ன கயிறு.. இதில் இத்தனை விசயம் இருக்கா?


அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிரு அல்லது அரைஞாணம் என்பது சிறு குழந்தைகளின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கவசம் போன்றது. குழந்தைகள் பிறந்து 5மாதம் வரைக்கும் பெற்றவர்கள் வீட்டில் இருக்கும் பெண்ணை உடல் நலமடையும் வரை வைத்திருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் சத்தான ஆகாரங்களை கொடுப்பதோடு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பிறந்த குழந்தைக்கு வெள்ளிக்கொலுசும் அரைஞாண் கொடியும் சீதனமாக போட்டு அனுப்புவார்கள்.


அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தான் கருப்பு கலரில் அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். அதிலும் சிலரோ வெள்ளி அல்லது தங்கத்தில் தங்கள் குழந்தைக்கு கட்டுவார்கள். சொல்லப்போனால் இந்த அரைஞாண் கயிறு தமிழ்நாட்டில் தான் அதிகம் கட்டுவது வழக்கம். பொதுவாகவே, பலர் அரைஞாண் கயிறை கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக சிலர் காட்டுவார்கள். இன்னும் சிலரோ, வீட்டில் பெரியவர்கள் சொல்லி காட்டுவார்கள்.

வயதில் பெரியவர்கள் உள்ள இல்லங்களில், அவர்கள் இன்றைக்கும் தங்களின் பேரக்குழந்தைகளுக்கும் பேத்திகளுக்கும் வெள்ளை எருக்கம் நார் - அரைஞாண் கயிறைக் கட்டி விடுவார்கள். அதற்குக் காரணம் கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பானது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுவது எது தெரியுமா? குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு என்கிறார்கள் முன்னோர்கள். ஒரு சிலர் சாஸ்திரப்படி குழந்தை பிறந்த ஏழாம் நாளில் இடுப்பில் அரைஞாண் கயிரை அணிவிப்பார்கள்.

இடுப்புக்குஅருகில் மட்டுமே ரத்தக் குழாய்கள் மெலிதாக இருக்கும். அதேபோல் தோலின் மிக அருகில் செல்கின்றன. எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்று கூறினர் முன்னோர்கள். சிலரோ கறுப்பு பாசியை கோர்த்த கயிறு கட்டுவார்கள். சிலரோ சிவப்பு நிற கயிறுடன் பாசி கோர்த்து இடுப்பில் கட்டுவார்கள்

"அரைஞாண் கயிறு".. அதென்ன இடுப்புல கருப்பா..உங்க கிட்ட "இது" ஒன்னு மட்டும் போதும்.. அதிசயத்தை பாருங்க
இடுப்பைச் சுற்றி ஆடை அணிபவர்கள் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் என்பது விதி. பெண்கள் பாவாடை அணிய நாடாவைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த விதியைப் பின்பற்றுகிறார்கள். ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.

ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா என்பதை அரைஞாண் கயிறு வைத்துதான் பெரியவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில நேரங்களில் பாம்பு, விஷ பூச்சிகள் கடித்து விட்டால் அரைஞாண் கயிரை அறுத்து எடுத்து பாம்பு தீண்டிய இடத்தில் கட்டி விஷம் ஏறாமல் தடுப்பார்கள். தற்காப்புக்காக அரைஞாண் கயிறு பயன்படுத்தப்பட்டது.

அரைஞாண் கயிறு அணிவது பழைய காலத்து பழக்கம் என்று கருதினாலும் அதில் ஆன்மீக ரீதியாக பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறை இடுப்பில் இருந்து நீக்கவிடுகிறார்கள். அதே போல ஒருவர் இறந்த பிறகு இறுதிச் சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது.


காலில் கட்டும் கறுப்பு கயிறு..மறந்தும் கூட இந்த ராசிக்காரர்கள் கட்டக்கூடாது..எச்சரிக்கும் சாஸ்திரம்


 
காலில் கறுப்பு கயிறு கட்டுவது இன்றைக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. எந்த ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டலாம் எந்த ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டக்கூடாது என்று பார்க்கலாம்.


நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் சில அட்வைஸ்களை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அதில் முக்கியமானது மத்தியான நேரத்தில் தனியாக எங்காவது வெளியில் செல்ல நேர்ந்தால் கறுப்பு மை பொட்டு வைக்க வேண்டும். கறுப்பு கயிறு கட்டினால் காத்து கறுப்பு அண்டாது என்று சொல்வார்கள

கழுத்திலோ, கைகளிலோ கறுப்பு கயிறு கட்டுவதை விட கால்களில் கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். சிலருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கறுப்பில் கட்டி விடுவார்கள். அதெல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்திற்காக செய்யப்பட்டது. பெண்கள் கொலுசு, மெட்டி அணிவதை கட்டாயமாக்கினர் நம் முன்னோர்கள்.

குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டப்படும். குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க, அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக்கினர். கறுப்பசாமி கோவில், காளியம்மன் கோவிலுக்கு சென்று பூசாரி கையால் மந்திரித்து கறுப்பு கயிறு கட்டினார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது

இன்றைக்கு இளைஞர்களும் இளம் பெண்களும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவதை பேஷனாக செய்து வருகின்றனர். இந்த கறுப்பு கயிறு எல்லாம் கட்டலாமா? கறுப்பு கயிறு எல்லோருக்கும் நல்ல பலன்களைத் தருமா என்று பார்க்கலாம்.

பொதுவாகவே கறுப்பு கயிறு கட்டும்போது சனிபகவானை வேண்டிக்கொண்டு காலில் கருப்பு கயிறு கட்டினால் கண்திருஷ்டி படாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களின் பலன்கள் கிடைக்கும். இந்த கிரகங்கள் வலிமை குறைந்து இருந்தால் அது வலிமையடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

சனி பகவான் சன்னதியிலோ அல்லது சிவ ஆலயங்களுக்கோ சென்று சாமி கும்பிட்டு விட்டு சாமியின் பாதத்தில் கறுப்பு கயிறு வைத்து வழிபாடு செய்து இந்த கருப்பு கயிறு கட்டுவது நல்லது. சனிக்கிழமை அன்று வேண்டிக்கொண்டு கையில் கட்டினால் சனி பகவானின் ஆசிகள் கிடைக்கும்.

சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே, காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம், சனி தோஷம் நீங்கும். அத்துடன், ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாது என்பது நம்பிக்கை. கருப்பு கயிறு கட்டிய பிறகு சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

கருப்பு கயிறு கட்டுவதற்கு முன், அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம்.இந்த கருப்பு கயிறு பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கட்டிக்கொண்டால் நன்மைகள் நடைபெறும்.


கடன் பிரச்சனை உள்ளவர்கள் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி காலில் கருப்பு கயிறு கட்டினால், பணப் பிரச்சனைகள் நீங்கி பணம் வரும் என்பது ஐதீகம். அவர்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வசிக்கும் வீட்டிலும் பணப் பற்றாக்குறை இருக்காது என்று கூறப்படுகிறது.

துலாம், மகரம், கும்பம், ராசியில் பிறந்தவர்கள் கறுப்பு கயிறு அணிவது நல்லது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம். செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களும் கறுப்பு கயிறு அணிவதையோ கறுப்பு நிற உடை அணிவதையோ தவிர்ப்பது நல்லது.


உப்ப ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது?


உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது.

உப்பு தொடர்பில் பல கருத்துக்கள் பல விதமாக இருந்தாலும் எமது முன்னோர்கள் உப்பு தொடர்பில் பயன்படுத்திய சில வழிமுறைகளில் ஒழிந்திருக்கும் நம்மில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
நமது முன்னோர்கள் பொதுவாகவே உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்புகாத வகையில் வைக்க வேண்டும் மற்றும் உப்பை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதற்கு என்ன காரணம்? இது குறித்து எப்போதாவது யோசித்தது உண்டா?
உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம்... 
நமது முன்னோர்களைப் பற்றி சிந்திக்கும் போது வியப்பாக இருக்கிறது அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் அறிவியல் ரீதியாக துள்ளியமாக கணித்தவர்கள் இவர்கள் தான். உப்பை வெறுமனே சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவது கிடையாது இதில் உடலுக்கு தேவையான அயோடின் காணப்படுகின

உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது.

உப்பு தொடர்பில் பல கருத்துக்கள் பல விதமாக இருந்தாலும் எமது முன்னோர்கள் உப்பு தொடர்பில் பயன்படுத்திய சில வழிமுறைகளில் ஒழிந்திருக்கும் நம்மில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உப்ப ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது? தெரிஞ்சிக்கோங்க | Why Not Keep Salt Near The Stove

நமது முன்னோர்கள் பொதுவாகவே உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்புகாத வகையில் வைக்க வேண்டும் மற்றும் உப்பை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதற்கு என்ன காரணம்? 


உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம்... 

நமது முன்னோர்களைப் பற்றி சிந்திக்கும் போது வியப்பாக இருக்கிறது அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் அறிவியல் ரீதியாக துள்ளியமாக கணித்தவர்கள் இவர்கள் தான். உப்பை வெறுமனே சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவது கிடையாது இதில் உடலுக்கு தேவையான அயோடின் காணப்படுகின்றது.

உப்ப ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது? தெரிஞ்சிக்கோங்க | Why Not Keep Salt Near The Stove

இதற்காகவே உணவில் உப்பு அவசியமாகின்றது. இதன் சுவை காலப்போக்கில் எமக்கு இன்றியமையாததாக மாறிவிடுவதனால்

இதனை சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்செல்லாத வகையில் வைக்க காரணம் உப்பில் காணப்படும் அயோடின் ஒரு வேதிப்பொருள் இது உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியக்கூடியது எனவே இதனை வேறு உலோகத்துடன் தாக்கம் புரியாத வகையில் களஞ்சியப்படுத்த வேண்டும்

உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம் ஒளி உட்புகாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு காரணம் சூரிய வெப்பத்தில் அயோடின் அழிவடையக்கூடியது என்பதனால் தான்.


உப்பு பாத்திரத்தை அடுப்பின் அருகில் வைக்க கூடாது என குறிப்பிட்டமைக்கும் இதுவே காரணம் அயோடின் வெப்பத்தில் அழிவடையக்கூடியது உப்பில் அயோடின் அழிவடைந்த பின்னர் உணவில் சேர்ப்பது பிரையோசணம் அற்றது

சமையலின் போதும் கூட உப்பை உணவு ஆறிய பின்னரே சேர்க்க வேண்டும் என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை வெப்பம் தணிந்த பின்னர் உப்பை சேர்க்கும் போது மட்டுமே உப்பு சேர்பதன் உண்மையான பலன் கிடைக்கிறது.