jaga flash news

Sunday, 30 September 2012

பொருத்தம்


தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

[தொகு]கணப் பொருத்தம்

[தொகு]தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

[தொகு]மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

[தொகு]ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

[தொகு]பொருத்த விபரம்

  • பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
  • பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
  • பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)
  • பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
  • பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

[தொகு]மகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திரம் முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.

[தொகு]ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)

பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

[தொகு]யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.
  • அசுவினி - ஆண் குதிரை
  • பரணி - ஆண் யானை
  • கார்த்திகை - பெண் ஆடு
  • ரோகிணி - ஆண் நாகம்
  • மிருகசீரிஷம் - பெண் சாரை
  • திருவாதிரை - ஆண் நாய்
  • புனர்பூசம் - பெண் யானை
  • பூசம் - ஆண் ஆடு
  • ஆயில்யம் - ஆண் பூனை
  • மகம் - ஆண் எலி
  • பூரம் - பெண் எலி
  • உத்தரம் - எருது
  • அஸ்தம் - பெண் எருமை
  • சித்திரை - ஆண் புலி
  • சுவாதி - ஆண் எருமை
  • விசாகம் - பெண் புலி
  • அனுஷம் - பெண் மான்
  • கேட்டை - கலைமான்
  • மூலம் - பெண் நாய்
  • பூராடம் - ஆண் குரங்கு
  • உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
  • திருவோணம் - பெண் குரங்கு
  • அவிட்டம் - பெண் சிங்கம்
  • சதயம் - பெண் குதிரை
  • பூரட்டாதி - ஆண் சிங்கம்
  • உத்திரட்டாதி - பாற்பசு
  • ரேவதி - பெண் யானை
- இவற்றில்
  • பாம்பு x கீரி
  • யானை x சிங்கம்
  • குரங்கு x ஆடு
  • மான் x நாய்
  • எலி x பூனை
  • குதிரை x எருமை
  • பசு x புலி
-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.

[தொகு]ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
  • 6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
  • 8-வது ராசி ஆகாது.
  • 7-வது ராசியானால் சுபம்.
  • அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
  • 1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
  • பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

[தொகு]அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசிபிள்ளை ராசி
  • மேஷம்
  • தனுசு
  • துலாம்
  • கும்பம்
  • சிம்மம்
  • மிதுனம்
  • கன்னி
  • ரிஷபம்
  • மீனம்
  • கடகம்
  • மகரம்
  • விருச்சிகம்
-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.

[தொகு]ராசி அதிபதி

கிரகம்நட்புசமம்பகை
  • சூரியன்
  • சந்திரன்
  • செவ்வாய்
  • புதன்
  • குரு
  • சுக்கிரன்
  • சனி
  • ராகு, கேது
  • சந்திரன், செவ்வாய், குரு
  • சூரியன், புதன்
  • சூரியன், சந்திரன், குரு
  • சூரியன், சுக்கிரன்
  • சூரியன், சந்திரன், செவ்வாய்
  • புதன், சனி, ராகு, கேது
  • புதன், சுக்கிரன், ராகு, கேது
  • சனி, சுக்கிரன்
  • புதன்
  • செவ்வாய், குரு, சுக்கிரன், சனி
  • சுக்கிரன், சனி
  • செவ்வாய், குரு, சனி, ராகு, கேது
  1. சனி, ராகு, கேது
  2. செவ்வாய், குரு
  3. குரு
  4. புதன், குரு
  1. சுக்கிரன், சனி, ராகு, கேது
  2. ராகு, கேது
  3. புதன், ராகு, கேது
  4. சந்திரன்
  5. புதன், சுக்கிரன்
  6. சூரியன், சந்திரன்
  7. சூரியன், சந்திரன், செவ்வாய்
  8. சூரியன், சந்திரன், செவ்வாய்
  • ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
  • ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
  • ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்
  • ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
  • இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

[தொகு]வசியப் பொருத்தம்

பெண் ராசிபிள்ளை ராசி
  • மேஷம்
  • ரிஷபம்
  • மிதுனம்
  • கடகம்
  • சிம்மம்
  • கன்னி
  • துலாம்
  • விருச்சிகம்
  • தனுசு
  • மகரம்
  • கும்பம்
  • மீனம்
  • சிம்மம், விருச்சிகம்
  • கடகம், துலாம்
  • கன்னி
  • விருச்சிகம், தனுசு
  • மகரம்
  • ரிஷபம், மீனம்
  • மகரம்
  • கடகம், கன்னி
  • மீனம்
  • கும்பம்
  • மீனம்
  • மகரம்
  • வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.
==ரஜ்ஜீப் பொருத்தம்== (மிக முக்கியமானது)
ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.

[தொகு]சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

[தொகு]கண்ட ரஜ்ஜீ

  • ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்
  • திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்

[தொகு]உதார ரஜ்ஜீ

  • கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்
  • புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

[தொகு]ஊரு ரஜ்ஜீ

  • பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்
  • பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்

[தொகு]பாத ரஜ்ஜீ

  • அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்
  • ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

[தொகு]பொருத்த விபரம்

  • பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.
  • ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள் உண்டு. சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்

[தொகு]வேதைப் பொருத்தம்

  • அசுவினி - கேட்டை
  • பரணி - அனுஷம்
  • கார்த்திகை - விசாகம்
  • ரோகிணி - சுவாதி
  • திருவாதிரை - திருவோணம்
  • புனர் பூசம் - உத்ராடம்
  • பூசம் - பூராடம்
  • ஆயில்யம் - மூலம்
  • மகம் - ரேவதி
  • பூரம் - உத்ரட்டாதி
  • உத்திரம் - உத்ரட்டாதி
  • அஸ்தம் - சதயம்

[தொகு]நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

[தொகு]பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

[தொகு]மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

[தொகு]சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

[தொகு]குறிப்பு

  • ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

[தொகு]விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

[தொகு]பால் இல்லாதது

  • கார்த்திகை - அத்தி
  • ரோகிணி - நாவல்
  • பூசம் - அரசு
  • ஆயில்யம் - புன்னை
  • மகம் - ஆல்
  • பூரம் - பலா
  • உத்தரம் - அலரி
  • அஸ்தம் - வேலம்
  • கேட்டை - பிராய்
  • மூலம் - மா
  • பூராடம் - வஞ்சி
  • உத்ராடம் - பலா
  • திருவோணம் - எருக்கு
  • பூரட்டாதி - தேமா
  • ரேவதி -இலுப்பை

[தொகு]பால் உள்ளது

  • அசுவினி - எட்டி
  • பரணி - நெல்லி
  • மிருகசீரிஷம் - கருங்காலி
  • திருவாதிரை - செங்கருங்காலி
  • புனர்வசு - மூங்கில்
  • சித்திரை - வில்வம்
  • சுவாதி - மருதம்
  • விசாகம் - விளா
  • அனுஷம் - மகிழ்
  • அவிட்டம் - வன்னி
  • சதயம் - கடம்பு
  • உத்ரட்டாதி - வேம்பு

[தொகு]குறிப்பு

  • பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பார்க்கப்படும். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராயப்படும்.

[தொகு]பொருத்தம்

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ ஆகியவை இருந்தால் பொதுவாக திருமணங்கள் நிகழுகின்றன.
  • இந்த 12 பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசியாதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

பகை யோனிகள்:

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

புரட்டாசி சனிக்கிழமை விரத கதை மகத்துவம்


புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதிலே நினைத்து வழிபடுவார்கள்.
(நாமக்கட்டிக்கும் தனித்துவம் தரும் மாதம் இது) சிலர் தான் நினைக்கும் காரியம் நல்லபடியாக நிறைவேறி விட்டால் திருப்பதிக்கு வருகிறேன் என்றும், இன்னும் சிலர் திருப்பதிக்கு வந்து மொட்டை போடுகிறேன் என்றும் அவர்களால் இயன்ற வேண்டுதல்களை நினைத்து காசை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பர்.
சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கடமுடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில். ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான்.
அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார் தம் பக்தன் ஒருவனுக்கு அருள் புரிந்த கதையின் மூலமாக. மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான்.
இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான். அவை மண் மலர்களால் தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.
கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான். குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.
பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். பிரதி வாரம் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.
இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது.
இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒரு நாள் அபூர்வ கனவொன்றை கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.
தொண்டை மானும், திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான். அனுதினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன்.
உடன் பீமய்யாவை சென்று கட்டித்தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான். இதற்கிடையில் அந்த பரந்தாமன் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்து கொள்வேன் என கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டை மான், பீமய்யாவின்  பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

‘மகர சங்கராந்தி’

ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்! 
உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர். தை மாதப் பிறப்பான (15.1.12) அன்றைய தினத்தை, உத்தராயன புண்ய காலம் என்பார்கள். சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை ‘மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் ஸ்ரீசூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண் டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். 
சூரியனை ஆராதித்துப் போற்றுகிற பொங்கல் திருநாள், இந்த வருடம் ஞாயிற்ற
ுக் கிழமையன்று வருவது பெரும் பாக்கியம்.
ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம:
ஓம் பாஸ்கராய நம
எனும் மந்திரத்தைச் சொல்லி, தினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்பார்கள். நமக்குத் தேவையான உணவுகளுக் காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் உழவர் பெருமக்களுக்கு இந்த நாளில், மனதார நன்றி செலுத்துவோம்!

சிரஞ்சீவி பட்டம்

ராம நவமி நாளில் ஒரு சிறுகதை...
============================
ராவண வதம் முடிந்தது. விபீடணனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை இலங்கையில் அரசனாக்கினான் ராமன். அதோடு கூடவே அவன் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற வகையில் 'சிரஞ்சீவியாக இரு' என்று வாழ்த்தினான். அவ்வாறு ராமன் வாழ்த்தியபோது அது கேட்டு திடுக்கிட்டாள் சீதை. தயக்கத்துடன் அனுமனைப் பார்த்தாள். அனுமனோ கண்மூடி உள்ளுக்குள்ளேயே ராம ஜபன் பண்ணிக் கொண்டிருந்தான்.

சீதையின் தடுமாற்றத்தை பார்த்த ராமன் குழம்பினான். 'விபீடணன் சிரஞ்சீவி பட்டம் பெற்றதற்கு நீ ஏன் வருத்தப்படுகிறாய்?' என்று சீதையிடமே காரணம் கேட்டார். அதற்கு சீதை தணிந்த குரலில், "நீங்கள் விபீடணனுக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுத்ததில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அசோகவனத்தில் தங்கள் தூதுவனாக வந்து எனக்கு உயிரளித்த அனுமனுக்கு நான் சிரஞ்சீவி பட்டம் கொடுத்தேன். ஒருவேனை அனுமன் அதனால் வருத்தப்படலாம். 
தனக்கு சமமாக வருவதை அனுமன் விரும்புகிறானோ இல்லையோ?" என்று கூறினாள்.

ராமன் சிறிதும் தயங்காமல் அனுமனிடம் சீதையின் குழப்பத்தை தெரிவித்தான்.

அனுமன் பணிவுடன் பதிலளித்தான்,"ஐயனே, சிரஞ்சீவி என்பவர் யார்? இந்த உலகமே அழிந்தாலும் தான் அழியாதவன். ஒரு காலகட்டத்தில் இந்த பிரபஞ்சமே அழிந்த பிறகு சிரஞ்சீவியான நான் மட்டும் தனித்து இருப்பேன். யாராவது ராம நாமன் சொல்ல அதை காது குளிர, மனம் குளிர கேட்பதுதானே எனது பொழுதுபோக்கு? தனியாய் இருக்கும் எனக்கு இப்போது விபீடணன் துணை என்பதில் மிகுந்த சந்தோஷம். அவர் ராம ஜபம் சொல்ல சொல்ல நான் உள்ளம் உருக கேட்டுக் கொண்டிருப்பேன்."

அனைவரும் நெகிழ்ந்தார்கள்......!

பிதுர் சாபம்

பிதுர் சாபம் என்பது என்னை பொறுத்த வரையில் சூரியான், ஒன்பதாம் இடத்தான், மந்தி, பாதகதிபன் இணைவு போன்றவைகள் இதனை தெரிவிக்கும். இதனால் வீட்டில் அனைத்து சுப காரியங்களும் தடைபட்டு நிற்கும், அகல மரணம், பெண்கள் பதிப்பு அடைதல், சொத்து தகராறுகள், மனம் பதிப்பு அடைந்து அதனால் பணத்தை இழத்தல், போன்றவை நிகழும். 
இதற்க்கு தில ஹோமம் செய்வது உத்தமாம். கொடுமுடியில் செய்வதால் நல்ல பலன் அடையமுடியும்.

ஜாதகம் இல்லாதவர்களுக்குபரிகாரம்.

ஜாதகம் இல்லாதவர்களுக்கு துன்பங்கள் வந்தால் ஒரு பரிகாரம். நல்ல நேற்று தேங்காயை மட்டையோடு எடுத்துக் கொண்டு. மேலே சீவி அதில் ஓட்டை போட்டு அதனுள் பேரீச்சம் பழம், கரும்பு சக்கரை, முந்திரி ஆகிய மூன்றையும் அதனுள் அடைத்து அரச மரத்தின் அடியில் பதித்து விடவும். நன்மைகள் நடக்கும்.

திருமணம்


1. பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா?
பிறந்த நாள் என்பது இங்கு நட்சத்திரத்தையே குறிக்கும் சிலர் ஆங்கிலத்தேதியையும், அல்லது கிழமையையும் நாள் என்று தவகறாகப்புரிந்து கொள்கின்றனர்.
2.பிறந்த நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாமா?
மணப்பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாம். முகூர்த்தங்களுக்கு உகந்த நட்சத்திரமாய் இருப்பினும் மணமகனின் ஜன்ம, ஜன்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைக்கக்கூடாது. அதாவது பிறந்த ஜென்ம நட்சத்திரம் அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம், அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம். கீழ்வரும் பட்டியல் மூலம் அதனை எளிதில் தெரிந்தப கொள்ளலாம்.(உதாரணமாக மணமகனின் நட்சத்திரம் மகம் எனில் மூலம், அசுவனி ஆகியவை முறையே ஜென்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களாகும்)
3. திருமணத் தேதி குறித்தபின்ப வயதானவர்கள் யாராவது இறந்து விட்டால் திருமணம் வைக்கலாமா?
திருமணத்தைக் குறித்த முகூர்தத்திலேயே தாராளமாக செய்யலாம். இறப்பு நிகழ்ந்த வீட்டில் திருமணத்தைத்தவிர வேறு சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பது விதி.
4. நாட்காட்டிகளில் குறிக்கப்பட்டிருக்கும் முகூர்த்தங்களை எல்லோரும் பயன்படுத்தலாமா?
பொதுவாக இப்பொழுது எல்லா நாட்காட்டிகளிலும் முகூர்த்த நாட்கள் குறிக்கப்படாடுள்ளன, முன்கூட்டியே திருமணமண்டபத்தை பதிவு செய்வதற்கு அம்முகூர்த்தங்களையே பலர் பின்பற்று கின்றனர், மணமக்களுக்கு சந்திராஷ்டமி நாளாக அமைகிறதா, முன்பு கூறியபடி மணமகனுக்கு கற்பு நாள் என்று கூறப்படும் ஜன்ம,ஜென்மானு,திரிஜென்ம நட்சத்திரமாக அமைகின்றதா என்று ஜோதிடரிடம் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. மேலும் நாட்காட்டிக்கு முகூர்த்தங்களைக் குறித்துத்தருவோர், சில சிறப்பு விதிகளை அனுசரித்துக் குறிப்பதில்லை என்பது எல்லா ஜோதிடர்களும் ஏற்றுக்கொண்ட கருத்து. முகூர்த்த லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இருக்கக்கூடாது, 8இல் குரு இருக்கக்கூடாது, குரு, சுக்கிரர் அஸ்தமன காலத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது எனப்பல விதிகள் உள்ளன அவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே நாட்காட்டி முகூர்த்தங்களைப் பயன்படுத்தும் முன் ஜோதிடரை ஆலோசிப்பது நல்லது.
5.தவிர்க்க முடியாத காரணத்தால் சுபமுகூர்தம் இல்லாத நாளில் திருமணம் செய்யவேண்டிய நிலை வந்தால் அல்லது குறித்த முகூர்த்த லக்கினத்தில் தாராமுகூர்த்தம் செய்யமுடியாது போகும் பட்சத்தில் என்ன செய்வது?
அவ்வாறான நேரத்தில் வினாயகருக்கு பால் அபிஷேகம் செய்து காலதோசத்தால் தீயபலன்கள் வராமல் காத்து அருளவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம், குலதெய்வத்தின் கோவிலுக்குச்சென்று பூஜிப்பதும் நல்லது மேலும் சாந்திமுகூர்த்தத்தை நல்ல நாளில் வைத்துக்கொள்ளவும் வேண்டும்.
6. எந்த கிழமை திருமணத்திற்கு உகந்தது?
வியாழக்கிழமை சிறப்பானது, புதன், திங்கள்,வெள்ளி கிழமைகள் உடன் நடைமுறையில் ஞாயிற்றுக்கிழமையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, சனி, செவ்வாய்க்கிழமைகள் விலக்கப்பட்டன.
7.. 8ஆம் தேதி, 13,28 ஆம் தேதி மற்றும் கூட்டுத்தொகை 8 வரும் நாட்களில் திருமணம் செய்தால் பாதிப்பு ஏற்படும் என சில எண்கணித நிபுணர்கள் சொல்கிறார்களே?
பொதுவாக மக்களின் நம்பிக்கையை தங்கள் வியாபாரத்திற்கு பயன் படுத்துவோர் அவ்வறு கூறவார்கள் , இன்று நாம் பயன் படுத்தும் கிரிகோரியன் நாட்காட்டி விவிலியம் எனும் பைபிலை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்பட்ட நாட்காட்டி, அதற்கு முன் வழக்கில் இருந்த ஜுலியஸ்சீசரின் நாட்காட்டியில் கிரிகோரியன் எனும் போப்பாண்டவர் மாற்றங்கள் செய்து வெளியிட்ட நாட்காட்டியாகும் இன்நாட்காட்டிக்கும் நம் பாரம்பரியம் மிக்க சூரியசித்தாந்த பஞ்சாங்கத்திற்கும் தொடர்பு துளியும் இல்லை, ஆங்கிலத்தேதிக்கும் உச்சமாக இருக்கும் இன்றைய நட்சத்திரம் முதலியவற்றிற்கு எவ்விதசம்பந்தமும் இல்லை, வழக்கமாக மேனாட்டுப்பழக்கங்க வழக்கங்களை கைகொள்ளுதல் நாகரீகமாக பகட்டுக்கு ஏற்றுக்கொள்வது போல சிலர் நம் ஜோதிட சாஸ்திரத்தில் கலக்குகிறார்கள் இது மனதிற்கு ஊக்கம் தருவதற்காக என்றும் அவர்களே(வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்) என்றும் ஆங்கில எழுத்திற்கும் எண்கணிதம் என்ற பெயரில் எண்களைக்கொடுத்து அதை நம் நாட்டு சாஸ்திரத்துடன் கலந்து குழப்புகிறார்கள், பாலுடன் தேனைக்கலப்பதற்கும் மதுவைக்கலப்பதற்கும் வேறுபாடு அறியாதவர்களாக அவர்களைக்கொள்ள வேண்டி இருக்கிறது, நம் சாஸ்திரத்தை விட்டு விட்டு மேனாட்டு எண்கணித முறை என்று கூறினால் சீனவாஸ்து பெங்சூயி ஏற்றுக்கொள்வதைப்போல் வேண்டுமானால் ஏற்கலாம், ஆனால் உலகின் இளைய மொழிகளில் ஒன்றான ஆங்கில மொழிக்கும் நம் கிரககோச்சார உடுமகதசை போன்றவைகளுக்கும் தொடர்பு படுத்தி பாலில் மதுவைக்கலப்பதை ஏற்க முடியுமா?அப்படியே கூட்டுத்தொகையை கணக்கில் எடுக்க வேண்டும் எனில் ஆங்கிலத்தேதியை கவனத்தில் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை, மேலும் அன்று தமிழ் தேதி என்னவென்றும் பார்க்க வேண்டாமோ? நம் சுபமுகூர்த்தங்கள், நட்சத்திரம், லக்கினம் லக்கினத்திற்கு 3,6,7,,8,11 ஆகிய இடங்கள், மணமகனின் ஜென்மஜென்மானு,திரிஜென்ம நட்சத்திரங்களை, கவனத்தில் கொண்டு கணிக்கப்படுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆங்கிலத்தேதியை வைத்து அந்த நாள் தீயபலன் கொடுக்கும் என்ற தவறான எண்ணத்தைக் கைவிடவும்.

கடன் தீர

கடன் தீர மேற்கு நோக்கி தீபம் வீட்டில் போடலாம். செவ்வாய் கிழமை கிரிவலம் வரலாம். முக்கியமாக திருவண்ணமலையில் கிரிவலம் சிறப்பைத்தரும்.

Saturday, 29 September 2012

surya namashkaram

Surya Namaskara (IPA: [su:rjɐ nɐmɐskɐ:rɐ]; Sanskrit: सूर्य नमस्कार; IAST: Sūrya Namaskāra), known in English as Sun Salutation (lit. "salute to the sun"), is a common sequence of Hatha yoga asanas. Its origins lie in a worship of Surya, the Hindu solar deity. This sequence of movements and poses can be practised on varying levels of awareness, ranging from that of physical exercise in various styles, to a complete sadhana which incorporates asana, pranayama, mantra and chakra meditation. It is often the beginning vinyasa within a longer yoga series. Sūrya Namaskāra may also refer to other styles of "Salutations to the Sun".

காஞ்சி மகா பெரியவர்

வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டால் பொருளுக்காக எப்போதும்,அலைய வேண்டிய அவசியம் இருக்காது- காஞ்சி மகா பெரியவர்

சுக்கிரனும் கேதுவும்

சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருந்தா மனைவி ஒழுக்கமில்லன்னு ஒரு ஜோசியர் சொன்னார்..அதனால கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு சார்...என்றார் ஒர் இளைஞர்...

அதை மட்டும் வைத்து தப்பான முடிவுக்கு வரக்கூடாது...7 ஆம் அதிபதி சுபர் சாரத்தில் இருந்து,சந்திரனுக்கு 7க்குடையவன்,லக்னத்துக்கு 7க்குடையவன்,சுக்கிரன் க்கு 7க்குடையவன் மறையாமல் நல்ல நிலையில் இருந்தால் குடும்ப வாழ்க்கை சந்தோசமா இருக்கும்..உங்களுக்கு அப்படி பாதிப்பா எதுவும் இல்ல..முதல்ல கல்யாணம் பண்ணுங்க...சந்தோசமா இருங்க..என சொல்லி அனுப்பி வைத்தேன்!!

கரிநாள்

தனிய நாள்,கரிநாள் என சொல்லப்பட்டிருக்கும் நாளில் சுப காரியம் எதையும் செய்யாமல் இருப்பது உத்தமம்...!!

புரட்டாசி மாதத்தில் அசைவம்

புதன் வீடான கன்னி ராசியில் சூரியன் இருக்கும் புரட்டாசி மாதத்தில் அசைவம் உண்ணக்கூடாது..கன்னி காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு 6 வது ருண,ரோக ஸ்தானம் ஆகும்..அசைவம் உண்பதால் வயிறு உபாதைகள் உண்டாகும்..அஜீரண கோளாறுகளால் எந்த வேலையும் செய்ய முடியா
மல் அதே நினைவாக இருக்கும்..இதனால் சோம்பல்,மறதி,சலிப்பு உண்டாகும்..இது கோபத்தையும்,காமத்தையும் அதிகம் தூண்டும்.. என்பதற்காகவே முன்னோர்கள் இம்மாதத்தை பெருமாளை வணங்கும் மாதமாக அமைத்தார்கள்..கண்ணனை இம்மாதம் வழிபடுவது மிக சிறப்பு..கேட்ட வரம் கிடைக்கும்!!

ரிசபம்,கடகம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனம்

ரிசபம்,கடகம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனம், ராசிக்காரர்களுக்கு புரட்டாசி 20 .....அக்டோபர் 6 முதல் குரு வக்ரம் அடைவதால் நல்ல பலன்கள் நடக்கபோகுது!! இப்ப இருக்கும் சிக்கல்கள் எல்லாம் தீரப்போகுது..!! சுப காரியம் நடக்கப்போகுது!!!

ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?

ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு கிடையாது , பூர்வ புண்ணியம் கெட்டு விட்டது , ஜாதக
ர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றால் மட்டுமே , வாழ்க்கையில் நலம் பெற முடியும் என்றும் , தனது பூர்வீகத்தில் இருக்கும் வரை ஜாதகருக்கு நன்மையில்லை என்றும் , புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் பொதுவான கருத்து நிலவுகிறது , மேலும் பல ஜோதிடர்களின் கருத்தும் இதுவாகவே
இருக்கிறது , இதில் உண்மை என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் .

ஒருவருடைய ஜாதக அமைப்பை கணிதம் செய்யும் பொழுது லக்கினத்தில் இருந்து , ஐந்தாம் பாவகத்தில் ராகு கேது இருக்கிறதா (ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) என்பதை முதலில் உறுதி செய்துவிட்டு , ஜாதக பலன் காணுவது சரியான ஜாதக பலனை சொல்ல உதவி புரியும் , மேற்கொண்டு ஐந்தாம் பாவகத்தில் ராகுவோ கேதுவோ இருப்பின் (அதாவது ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) எந்த ராசியில் இருக்கிறார் என்பதை சரியாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்வது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் தன்மையை உறுதி செய்ய நமக்கு உதவி புரியும், ( அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்கிறதா? , கெட்டு விட்டதா ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் .

மேற்கண்ட அமைப்பில் கணிதம் செய்யும்பொழுது ஒருவருடைய ஜாதக அமைப்பில் கிழ்க்கண்ட ராசிகள்
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக வருமாயின் , இந்த ராசிகளில் ராகுவோ கேதுவோ அமரும் பொழுது ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதாகவும் , தனது பூர்வீகத்தில் இருப்பதால் எவ்வித தீமையும் ஏற்ப்படாது என்றும் , புத்திர பாக்கியத்திற்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது என்றும் உறுதியாக சொல்ல முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து , அதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் நன்மை தரும் ராசிகள் :

1 ) ரிஷபம் , துலாம் ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து ,
இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு
நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

2) மிதுனம் , கன்னி ( புதன் சூரியனுக்கு 14 பாகைக்கு மேற்பட்டு இருக்க வேண்டும் ) ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம்
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில்
சந்தேகமே இல்லை .

3 ) தனுசு , மீன ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும்,
புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

மேற்கண்ட ராசிகள் ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இந்த ராசிகளில் ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமர்ந்தால் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , பூர்வீகத்தில் ஜாதகர் குடியிருப்பதால் வாழ்க்கையில் சகல முன்னேற்றமும் ஏற்ப்படும் , குழந்தை பாக்கியத்தில் ஜாதகருக்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது , பேர்சொல்ல ஆண் வாரிசு நிச்சயம் உண்டாகும் .

எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் ராகு கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால் , புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது ஜோதிட கலையை பற்றி தெரியாத கத்துக்குட்டிகள், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் போலி ஜோதிடர்கள் சொல்லும் ஒரு வாய்ஜாலம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதே ஜோதிட தீபத்தின் ஆவல் , மேலும் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி அவைகள் ஜாதகருக்கும் , அமர்ந்த பாவகத்திர்க்கும் நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே சரியான ஜோதிட பலனாக இருக்கும் , அதுவே ஜோதிடர்களை நம்பி வருபவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும் .

திருநீறு கூறும் திருவாக்கு


எந்த ஒரு பொருளையும் தீயில் போட்டால் முதலில் அது கருப்பு நிறமாக மாறும். அதன் பின்பும் அக்னியில் புடம் போட்டால் அந்த பொருள் நீற்றுப்போகும். பிறகு சுத்த வெளுப்பு நிறமாக மாறிவிடும். அதன்பிறகு தீயில் இட்டாலும் அது மாறாது, அதுவே முடிவான நிலை.
திருநீறு அணிவதன் பலனாக பில்லி, சூனியம் நம்மிடம் அண்டாது. தீட்டுக்களை கழிக்கும் சக்தி திருநீற்றுக்கு உண்டு. ஆன்மிக ஞானத்தையும், புத்திக் கூர்மையையும் அளிப்பதுடன், நெற்றியில் திருநீற்றை பூசும்போது முகத்திற்கு பொழிவையும் கொடுக்கும். விபூதி என்பதும் ஐசுவரியம் என்பதும் ஒரே பொருளை குறிக்கும்.

விநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது எதற்காக??


எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்று தெரியுமா?
ஒரு முறை, விநாயகர் யாகம் ஒன்றை மேற்கொள்வதற்காக கையில் தேங்காய்களுடன் யாக கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வழியில் அசுரன் ஒருவன் குறுக்கிட்டு தடை ஏற்படுத்தினான். அந்த அசுரனை அழிக்க விநாயகர், தான் கையில் வைத்திருந்த தேங்காய்களை அசுரனை நோக்கி எறிந்தார்.
தேங்காய்கள் கல்லில் பட்டு சிதறுவதைப் போல, அசுரனும் பொடிப் பொடியாகிப்போனான். இதையடுத்து விநாயகருக்கு ஏற்பட்ட தடை அகன்றது. அதன் காரணமாகத்தான் எந்த காரியத்தை தொடங்கும் முன்பும், அதற்கு தடை ஏற்படாமல் இருக்க சிதறுகாய் உடைக்கப்படுகிறது

குழந்தைகளின் மேல்நிலை கல்வியை தேர்ந்தெடுப்பது


தங்கள் குழந்தைகளின் தேர்வுகள் முடிவு தெரிந்தவுடன், பெற்றோர்கள் அனைவருக்கும் அடுத்ததாக வரும் கேள்வி தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மேல்நிலை கல்வியை தேர்ந்தெடுப்பது பற்றியதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , இதில் ஒருவரது ஜாதக அமைப்பிற்கு எந்த வகையான உயர் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க வைத்தால் , அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள்.

அவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ள உயர் கல்வி எது ? வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் தரும் உயர் கல்வி எது ? படித்து முடித்தவுடன் நல்ல வேலை வாய்ப்பினை பெற்று தரும் உயர் கல்வியை ஜாதகரீதியாக தேர்ந்தெடுப்பது எப்படி ? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் !

ஒரு ஜாதகருக்கு உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் பொழுது , அவரது சுயஜாதகத்தில் நாம் கவனிக்க வேண்டிய பாவகங்கள் , உயர் கல்வி மற்றும் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடும், ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடும் மட்டுமே , சுய ஜாதகத்தில் இந்த இரண்டு வீடுகளும் மிகவும் சிறப்பாக அமைந்து , அந்த வீடுகளின் ராசி மற்றும் தத்துவம் என்னவோ அதை அறிந்து , அது சம்பந்தபட்ட மேல்நிலை கல்வியை ஜாதகர் தேர்ந்தெடுத்து படிப்பாரே ஆயின் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை .

உதாரணமாக :

ஒருவருக்கு லக்கினத்திற்கு நான்காம் வீடு அல்லது பத்தாம் வீடு மேஷ ராசியாக வருமாயின் , ஜாதகர் பெறியியல் துறை சார்ந்த கல்வியினை கற்று கொள்வாரே ஆயின் நிச்சயம் கல்வியிலும், தொழிலும் சிறந்து விளங்கும் தன்மையும் , சிறப்பான வேலை வாய்ப்பினையும் பெற முடியும் .

நான்காம் வீடு அல்லது பத்தாம் வீடு சுய ஜாதகத்தில் நன்றாக இருப்பின் ஜாதகர் கீழ்க்காணும் அமைப்பில் , உயர் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

நெருப்பு தத்துவ ராசியாக அமைந்தால் :

பெறியியல் கல்வி , கட்டுமான கல்வி , அரசு நிர்வாக கல்வி , காவல் துறை சார்ந்த படிப்புகள் , மக்கள் மேலாண்மை சம்பந்தபட்ட கல்வி , உணவு மேலாண்மை , ஹோட்டேல் மேலாண்மை , அரசியல் ஆளுமை சார்ந்த கல்வி , விரைவான வளர்ச்சியினை பெரும் துறை சார்ந்த கல்வி , மின் துறை சார்ந்த கல்வி , கணினி கல்வி ,வெளிநாடுகளில் அதிக வேலை வாய்ப்பினை தரும் கல்விகள், ஏற்றுமதி இறக்குமதி மேலாண்மை சார்ந்த கல்வி , சாலை வசதி சார்ந்த கல்வி என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

நில தத்துவ ராசியாக அமைந்தால் :

மருத்துவ கல்வி , உடல் கூறு சம்பந்தபட்ட கல்வி , கலைத்துறை சம்பந்தபட்ட கல்வி , விவசாயம் மற்றும் இயற்க்கை வாழ்வை அடிப்படையாக கொண்ட கல்வி, மோட்டார் வாகனம் சம்பந்தபட்ட கல்வி , மண் வளம் சம்பந்தபட்ட கல்வி , இயற்க்கை எரிவாயு ,வாகன எரிபொருள் சார்ந்த கல்விகள் , மருந்து கையாளும் துறை சார்ந்த கல்வி , மக்களுக்கு சேவை செய்யும் துறை சார்ந்த கல்வி , அறிவியல் தொழினுட்பம் சார்ந்த கல்வி , என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

காற்று தத்துவ ராசியாக அமைந்தால் :

வக்கீல் மற்றும் சட்ட துறை கல்வி , புல்லியல் துறை சார்ந்த கல்வி , மக்கள் மேலாண்மை கல்வி , கணித மேலாண்மை கல்வி , வானவியல் மற்றும் ஜோதிட துறை சார்ந்த கல்வி , ஆடிடிங் துறை சார்ந்த கல்வி , புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வி , புதிய அணுகுமுறை கொண்ட கல்விகள் , மக்களிடம் தொடர்பு துறை சார்ந்த கல்வி , இயற்க்கை வளங்கள் மேம்படுத்துதல் சார்ந்த கல்வி என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

நீர் தத்துவ ராசியாக அமைந்தால் :

அழகு கலை துறை சார்ந்த கல்வி , கலை துறை சார்ந்த கல்வி , இயல் இசை நாடக துறை கல்வி , ஆடை ஏற்றுமதி , ஆடை வடிவமைப்பு துறை சார்ந்த கல்வி , வங்கி மேலாண்மை , அலுவலக மேலாண்மை சார்ந்த கல்வி , உளவியல் துறை சார்ந்த கல்வி , மனநல மருத்துவம் சார்ந்த கல்வி , விளையாட்டு துறை சார்ந்த கல்வி , நீர் மற்றும் நுண் உயிரி சார்ந்த கல்வி , பொருளாதாரம் சார்ந்த கல்வி என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

மேலும் தங்களின் குழந்தையின் ஜாதகரீதியான கல்வியை தேர்ந்தெடுக்க உங்களுக்கு ஜோதிடதீபம் வழிகாட்டுகிறது , மின் அஞ்சல் அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் பெறுங்கள் .