jaga flash news

Friday, 31 July 2020

வெண்டைக்காயின் மகத்தான மருத்துவ பயன்கள்!


 


வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல் 33 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் 7.45 கிராம்
கொழுப்பு 0.19 கிராம்
புரதம் 2 கிராம்
வைட்டமின் ஏ 36 மியூஜி
வைட்டமின் சி 23 மி.கி.
வைட்டமின் இ 0.27 மி.கி.
வைட்டமின் கே 31.3 மியூஜி
கால்சியம் 82 மி.கி.
இரும்பு 0.62 மி.கி.
ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சி யையும் தவிர்க்கக் கூடியவை.

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.

வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும். வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.’’

எப்படி வாங்குவது?

வெண்டைக்காயின் நுனிகளை உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும். அதுதான் ஃப்ரெஷ்ஷானது என்பதற்கான அடையாளம். உடைக்க முடியாமலோ, உள்ளே உள்ள முத்துக்கள் புடைத்துக் கொண்டு வெளியே தெரிந்தாலோ, அதை வாங்க வேண்டாம். முற்றிய வெண்டைக்காய் ருசியாக இருக்காது.

எப்படிச் சமைப்பது?

ஆர்கானிக் வெண்டைக்காய் கிடைத்தால் மிகவும் நல்லது. வெண்டைக்காயில் பூச்சிகள் இருக்கும். ஆப்பிள் சிடர் வினிகரும் உப்பும் கலந்த தண்ணீரில் வெண்டைக்காய்களை முழுசாக அப்படியே சிறிது நேரம் போட்டு வைத்திருந்து விட்டு, பிறகு நன்கு அலசி சமைப்பதே சிறந்தது.

வெண்டைக்காயை அலசிய பிறகே நறுக்க வேண்டும். நறுக்கிவிட்டு அலசினால் கொழகொழப்புத் தன்மையைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருக்கும். கூடியவரையில் இதை அரைவேக்காடாக சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.


 

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நமது நாட்டில் பல வகையானா காய்கறிகள் விளைகின்றன. இவற்றில் ஒரு சில காய்கறிகளை மட்டுமே நாம் அனைவரும் அன்றாட உணவுகளில் பயன்படுத்துகிறோம். அதிகம் மக்களால் அதிகம் உண்ணப்படாத ஒரு சில காய்கறி வகைகளில் கொத்தவரங்காய் ஒன்று இந்த கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


kothavarangai

கொத்தவரங்காய் பயன்கள்
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய் கொண்டுள்ளது.


உடல் எடை

கொத்தவரங்காய் உணவின் அளவை குறிப்பிடும் கலோரி அளவு குறைவாக இருந்தாலும், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக கொண்டிருக்கும் உணவாக இருக்கிறது. உடல் எடையை வெகு விரைவில் குறைக்க விரும்புபவர்கள் உணவில் கொத்தவரங்காய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரத்தச் சோகை

உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வருகிறது.

நார்ச்சத்து

நாம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது மிகவும் அவசியம். நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் கொத்தவரங்காய் அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.


kothavarangai

நோய் எதிர்ப்பு திறன்
அன்றாடம் நாம் வெளியில் செல்லும் போது பல வகையான நோய் கிருமிகளின் தாக்குதல்களை நாம் எதிர்கொள்கிறோம். இத்தகைய கிருமிகளால் நமக்கு நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு திறனாகும். கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சரும நலம்

நமது சருமம் எனப்படும் வெளிப்புற தோல் நமது உடலை பாதுகாப்பதோடு, நமக்கு அழகிய தோற்றத்தையும் தருகிறது. கொத்தவரங்காய் சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன. அதோடு முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.


kothavarangai

மலச்சிக்கல்

ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் கொத்தவரங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

பற்கள், எலும்புகள்


உடலுக்கு கால்சியம் சக்தி அவசியமாகிறது. இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கொத்தவரங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.


kothavarangai

இதய நோய்கள்

இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். கொத்தவரங்காய் இதயத்திற்கு நன்மையளிக்கிறது. கொத்தவரங்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.

மன அழுத்தம்

பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத்தன்மை அதிகமிருப்பதால் சிலருக்கு பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கொத்தவரங்காயில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே கொத்தவரங்காய் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்

மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA:

மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA:

பெயர் காரணம் :

பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் (Strength) உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா(Samba Groom) என்று பெயர் இட பெற்றது.

தனித்துவம் (Specialty):

இந்தியாவில் தொன்றுதொட்டு பயிரிடப்படும் பாரம்பரிய (Traditional)நெல் வகைகள் மிகவும் மருத்துவக் குணம்(Medicinal Value) வாய்ந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை  உடையது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி((Immunity Power). இதில் புரதம்(Protein), நார்சத்து (Fibre) மற்றும் உப்பு (Salt) சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது.

மாப்பிள்ளை சம்பா  உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):

  • நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetes) நன்மை தரும்.
  • உடலுக்கு வலுவைத் (Body strength) தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.
  • அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் (Nerves) பலப்படும்.
  • உடல் வலுவாகும்(Body Strength).
  • உடலை பலபடுத்தும், ஆண்மை(Masculinity) கூடும்

Thursday, 30 July 2020

கோபம் பிடிவாதம் அதிக ஆத்திரம் கொண்டவர்களை அடக்க....

கோபம் பிடிவாதம் அதிக ஆத்திரம் கொண்டவர்களை அடக்கவும்,சாமியாடுபவர்கள் ,பேய் பிடித்து ஆடுபவர்கள் இவர்களை பலவீனமாக்க ,வேகத்தை குறைக்க வைக்க ஒரு வழி இருக்கிறது

புளி கலந்த நாட்டு சர்க்கரை, ஏலம் ,எலுமிச்சை சாறு கலந்து புது பானையில் வைத்து கொடுக்க கோபம் அடங்கும். பிடிவாதம் நீங்கும் .
கோபம் அதிகம் இருக்கும் நேரம் ஒரு லெமன் ஜூஸ் குடிக்கலாம் ..
புளித்தண்ணீரில் நாட்டுச்சர்க்கரை கலந்து பானகம் எனும் பெயரில் கொடுப்பர் இது குளிர்ச்சியை கொடுத்து மனதை லேசாக்க வல்லவை.

புளிசாதம் ,எலுமிச்சை சாதம் கட்டிக்கிட்டு அக்காலத்தில் கோயிலுக்கு போவாங்க..புளி,எலுமிச்சை காமம்,கோபம்,ஆத்திரத்தை அடக்கிவிடும் ஆற்றல் கொண்டது.

Wednesday, 29 July 2020

கணிகர் சொன்ன நரிக் கதை

பாண்டு புத்திரர்களின் வளர்ச்சி திருதராஷ்டிரனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. துரியோதனன் பிதாவாகிய திருதராஷ்டிரனை பாண்டவர்களைத் துரத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து நச்சரித்து வந்தான். ராஜநீதி சாஸ்திரங்களை நன்றாகத் தெரிந்த கணிகர் என்பவரைக் கூட்டிவரச் சொன்னான். நீதி கேட்டால் தனக்கு எதாவது உபாயம் தோன்றும் என்று எண்ணினான்.

கணிகர் சகுனியின் மந்திரி. திருதராஷ்டிரன் கணிகரை அழைத்தது தனது மாமா சகுனி மூலம் தெரிந்துகொண்ட துரியோதனன், கர்ணன், துச்சாஸனன், சகுனி ஆகியோர் கணிகரைப் பின் தொடர்ந்து திருதராஷ்டிரன் இல்லம் அடைந்தார்கள்.
எல்லோரும் அங்கே அமர்ந்துகொண்டு கணிகருக்கு ஆசனம் கொடுத்து ராஜநீதி கேட்க ஆரம்பித்தார்கள்.
“கணிகரே! பாண்டவர்கள் நாங்கள் பயப்படத்தக்கவர்களாக இருக்கிறார்கள். வீரதீரபராக்கிரமங்கள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எங்களுக்கு க்ஷேமம் உண்டாக்குவதையும் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைப் பற்றியும் நீதி போதனை எதுவும் இருந்தால் எங்களுக்கு எடுத்துரையுங்கள். அதன்படி செய்கிறோம்”
திருதராஷ்டிரன் துரியோதனனின் வெறுப்பு நிறைந்த கரகரக் குரலைக் கேட்டு ஒரு கணம் பயந்துபோனான். துரியோதனனின் பொறாமை ஆறாக அங்கே ஓட ஆரம்பித்தது.
கணிகர் ராஜ நீதியை சொல்ல ஆரம்பித்தார்.
“ராஜா என்பவன் எப்போதும் தண்டிப்பதையே வழக்கமாகக் கொள்ளவேண்டும். எப்போதும் தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்து அந்த மன்னனிடம் மக்கள் அச்சப்படுவார்கள். அதனால் தண்டம் என்பதே சிறந்த மார்க்கம். தன்னுடைய குற்றத்தை பிறர் அறியா வண்ணம் செய்ய வேண்டும். ஆமை தனது அங்கங்களை வைத்திருப்பது போல ராஜாங்க விஷயங்களை ரஹஸ்யமாக வைத்திருக்கவேண்டும். பிராம்மணர்களைக் காக்கவும் துஷ்டர்களை அடக்கவும் மன்னன் படைக்கப்பட்டிருக்கிறான். துஷ்டநிக்ரஹமும் சிஷ்ட பரிபாலனமும் தர்மத்தை விருத்தியடைச் செய்கின்றன”
கணிகரின் தர்மோபதேசம் தெளிவாக இருந்தது. துரியோதனன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டான். திருதராஷ்டிரன் அவர் சொல்வதில் எவையெல்லாம் தமது புத்திரர்களுக்கு நன்மை பயக்கும் என்று மனதில் எழுதிக்கொண்டிருந்தான். இப்படியொரு உபகாரம் தனது மருமக்களுக்குச் செய்கிறோம் என்று சகுனி சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தான்.
“குற்றவாளியை மன்னித்து விடும் அரசனுக்கு இந்த லோகத்தில் அவமானமும் பரலோகத்தில் நரகத்தை அடைவான். ராஜாவினிடத்தில் செல்வத்தை அடைந்து அவனுக்கே தீங்கு செய்யும் அதமனைப் பிடித்து கொல்ல வேண்டும். அவனிடமிருந்தப் பொருட்களைக் கைப்பற்றி ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். ராஜாங்க கார்யங்களை நிர்வஹிக்க நியமிக்கப்பட்டவர்கள் ராஜாவிடமிருந்த கட்டுப்பாட்டை இழந்து சென்றால் தர்மசாஸ்திரம் அர்த்தசாஸ்திரம் தெரிந்தவர்களை மன்னன் நியமித்து அவர்களும் நெறிதவறாமல் இருக்கிறார்களா என்று மாறுவேடம் அணிந்த பிரத்யேக காவலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.”
துரியோதனன் கணிகரின் இந்த உபதேசங்களைக் கேட்டு முகம் மலர்ந்தான். இதில் எதாவது ஒரு வழியை தலைச்சொல்லாக எடுத்துக்கொண்டு பாண்டவர்களை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது கணிகர் அவனின் உள்ளப்போக்குக்கு தகுந்தவாறு மேலும் சில நீதிகளை அளிக்கத் தொடங்கினார்.
“காலில் தைத்த முள்ளை பிசகாக எடுத்தால் மீதம் மாட்டிக்கொண்டு பெரிய சீழ் வைத்த புண்ணை தந்துவிடும். அதுபோல தீங்கு செய்யும் பகைவர்களைக் கொல்லுதலே சிறந்த செயல். சிறிய நெருப்புப் பொறி ஆதாரமாக இருந்து பெரும் வனத்தை சாம்பலாக்குவது போல எதிரி பலஹீனனாக இருந்தாலும் அவனைத் தப்பவிடக்கூடாது.”
“சபாஷ்! மாமா கணிகரின் ராஜநீதிகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன” என்று தொடையைத் தட்டி ஆர்ப்பரித்து மாமன் சகுனியைப் பார்த்து சத்தமாகச் சிரித்தான் துரியோதனன். அதை ஆமோதிப்பது போல சேர்ந்துகொண்டனர் கர்ணனும் துச்சாஸனனும். மாமன் மௌனமாக விஷமுள்ள சிரிப்பை உதிர்த்தான்.
”ஒரு மன்னன் குருடனாக இருக்கும் நேரத்தில் குருடனாகவும் செவிடனாக இருக்கும் காலத்தில் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவனாகவும் இருக்க வேண்டும். மான் எப்படி எச்சரிக்கையா படுத்துக்கொள்ளுமோ அதுபோல நித்திரையின் போது கூட எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வில்லைப் புல்லைப் போல பிரயோகிக்கவேண்டும்.”
”மாமா! சத்ருக்களை எப்படிக் கொல்ல வேண்டும் என்று கணிகர் இன்னும் சொல்லவில்லையே!” என்று அவசரப்பட்டான் துரியோதனன்.
“துரியோதனா! பொறுமை அவசியம். காத்திரு. கணிகர் தொடரட்டும்”
“சத்ருவையும் முன்னால் அபகாரம் செய்தவனையும் அவனால் நம்பப்பட்ட சமையற்காரனுக்கு லஞ்சம் கொடுத்துக் கொல்ல வேண்டும். எதிரி பக்ஷத்திலுள்ள ராஜா, மந்திரி, மித்ரன், கோசாதிபதி, சேனாதிபதி, தேசரக்ஷகர், துர்க்கரக்ஷகர் என்ற எழுவரையும் கொல்ல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஐவர். அதுவும் முடியாவிட்டால் மூவர்.”
:”சபாஷ்!” துரியோதனன் தொடை தட்டி உத்தரீயத்தை சரி செய்துகொண்டான்.
“தனக்கு அனுகூலகாலம் வருகிற வரை சத்ருவை தோளில் சுமக்கலாம். பின்னர் பானையைப் போட்டு உடைப்பது போல கொன்றுவிட வேண்டும். பகைவனுக்கு தயைக் காட்டக்கூடாது. அவனது இரக்கமான சொல்லில் மயங்கக்கூடாது. தீங்கு செய்தவர்களைக் கொன்றுவிட வேண்டும். விரோதியை சாம தான பேத தணடம் என்னும் எதாவது ஒரு உபாயத்திலாவது கொன்றுவிட வேண்டும்”
வெகுநேரத்திற்குப் பிறகு திருதராஷ்டிரன் முழித்துக்கொண்டான்.
“கணிகரே! சாமதானபேததண்டங்களினால் சத்ருவை எப்படி கொல்வது? எனக்கு அதை தெளிவாகச் சொல்லவேண்டும்”
“மஹாராஜரே! அதற்கு தர்மசாஸ்திரங்கள் தெரிந்த நரி ஒன்றின் கதையைச் சொல்கிறேன்”
கணிகர் இவ்வாறு சொன்னவுடன் அனைவரும் ஒருமுகமாக கணிகரிடம் கதை கேட்கத் தயாராகினர்.
“தேர்ந்த புத்தியுள்ளதும் தனது காரியத்தை ஸ்வயமாகச் சாதித்துக்கொள்ளும் திறமை படைத்த நரி ஒன்று இருந்தது. புலி, எலி, செந்நாய், கீரிப்பிள்ளை என்ற நான்கும் அதன் ஸ்நேகிதர்கள். அந்தக் காட்டில் வலிமை வாய்ந்த மான்கூட்டம் ஒன்று வசித்தது. கிழப்புலியாகிவிட்டதால் அந்த மான்களை பிடிக்கமுடியவில்லை. நரி அந்த மானை ருசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. அதற்கு ஒரு திட்டம் தீட்டியது”
கணிகர் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததால் நீர் அருந்தலாம் என்று சற்று நிறுத்தினார். துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் அந்த கண நேரம் கூட பொறுக்கமுடியவில்லை. முகத்தில் பரபரப்பு அடங்காமல் கணிகர் தொண்டையில் நீர் இறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“புலியே! உனக்கு வயதாகிவிட்டது. உன்னால் அந்த மானைப் பிடிக்கமுடியவில்லை. நம் நண்பனாகிய எலியை அதன் காலைக் கடித்துவிடச் சொல்கிறேன். அந்த மானால் வேகமாக ஓடமுடியாது. நீ சுலபமாக அடித்துக் கொன்றுவிடலாம். பின்னர் நாம் ஐவரும் அதைப் பங்குபோட்டு தின்னலாம்” என்றது. எல்லோரும் இதை ஒத்துக்கொண்டார்கள். திட்டம் போட்டபடி எலி மானின் காலைக் கடித்தது. விந்திவிந்தி ஓடிய மானை இலகுவாக அடித்தது புலி. மான் செத்துக்கிடந்ததும் நரி தனது நண்பர்களிடம் ”எல்லோரும் ஸ்நானம் செய்துவிட்டு வாருங்கள். இதை நான் காவல் காக்கிறேன். பின்னர் நானும் சென்று ஸ்நானம் செய்துவிட்டு வந்தவுடன் எல்லோரும் தின்னலாம்” என்று சொன்னது.
ஸ்நானம் செய்துவிட்டு முதலில் வந்தது புலி. நரி புலியைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தது
“ஏன் இப்படி கிண்டலாகச் சிரிக்கிறாய்” என்று கேட்டது புலி.
“இல்லை. எலி சொன்னதை நினைத்துப்பார்த்தேன். சிரிப்பு வந்தது” என்றது நரி.
“எலி என்ன சொன்னது? சொல்” என்று காலை அடிப்பது போல தூக்கியது புலி.
“அது கடித்ததால்தான் வலிமையான உன்னாலேயே மானைப் பிடிக்க முடிந்ததாம். அதன் உதவி இல்லாமல் உன்னால் உன்னுடைய உணவை சம்பாதிக்கமுடியாதாம். அதான் சிரிப்பாக வந்தது” என்றது நரி.
புலிக்கு ரோஷம் வந்துவிட்டது.
“அப்படியொன்றும் எனக்கு இந்த மான்கறி வேண்டாம். நானே அடித்து ஒரு மானைச் சாப்பிடுகிறேன்” என்று கிளம்பியது.
பின்னர் எலி வந்தது.
“எலியாரே! கீரிப்பிள்ளைக்கு மான் மாமிசம் விஷமாம். ஆகையால் அது உன்னைதான் புசிக்கப்போகிறேன் என்று என்னிடம் சொல்லிவிட்டு ஸ்நானம் செய்யக்கிளம்பிப் போயிற்று. உனக்கு நண்பன் என்ற முறையில் சொன்னேன்” என்றது
எலி பயந்து போய் பக்கத்திலிருந்த வளைக்குள் புகுந்து கொண்டது.
அடுத்தது செந்நாய் குளித்துவிட்டு வந்தது.
“புலி உன் மேல் பயங்கர கோபத்தில் உள்ளது. தனது மனைவியுடன் திரும்பி வருவதாகவும் அதன் மனைவிக்கு செந்நாய்க்கறி மிகவும் பிடிக்கும் என்று சொல்லிச் சென்றது. பார்த்துக்கொள்ளப்பா” என்று சொன்னது நரி.
உடம்பை சுருக்கிக்கொண்டு செந்நாய் ஓடிவிட்டது. கடைசியாக கீரிப்பிள்ளை வந்தது.
நரி தனது காலை மடக்கி புஜபலம் காட்டுவது போலக் காட்டியது. கீரிப்பிள்ளை சிரித்தது.
“யே! இப்போதுதான் புலி, செந்நாய் எல்லோருடனும் சண்டைப் போட்டு விரட்டியிருக்கிறேன். நீயும் வா. வந்து என்னுடம் மோது. ஒரு கைப் பார்த்துவிடலாம். பின்னர் நீயாவது நானாவது இந்த மானை புசிக்கலாம்” என்று நரி கீரிப்பிள்ளையை சண்டைக்கு அழைத்தது.
“ஐயய்யோ! புலி செந்நாயையே நீ ஜெயித்துவிட்டாய். நீதான் வீரன். எனக்கு இந்த மான் வேண்டாம்” என்று கீரிப்பிள்ளையும் பயந்து ஓடியது.
கடைசியில் அந்த மான்கறியை நரி இஷ்டம் போல தின்றது.
திருதராஷ்டிரன் கதை முடிந்ததை புரிந்துகொண்டான். கணிகரின் கதையில் குதூகலமடைந்தான் துரியோதனன். கர்ணனும் துச்சாதனனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். சகுனி இதில் என்ன திட்டம் போட்டால் பாண்டவர்கள் அழிவார்கள் என்று மனக்கணக்கில் இறங்கினான்.
மதிய வேளையில் அங்கே வரவழைக்கப்பட்ட கணிகர் அந்தி சாயும் நேரமாகியும் இந்த ராஜ நீதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த ஐவரும் உன்னிப்பாக கணிகர் நீதியைக் கேட்டு அதில் எதாவது உபாயம் பாண்டவர்களை அழிக்க தேறுமா என்று ஆர்வத்துடன் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்

துரியோதனாதிகள் யார்?

துரியோதனாதிகள் யார்?


கெளரவர்கள்- துரியோதனின் உடன் பிறந்தவர்கள் பெயர்கள்!!!

ஜனமேஜயன், "திருதராஷ்டிரரின் மகன்கள் பெயர்களை அவர்களின் பிறப்பு வரிசையில் சொல்லுங்கள்." என்றான்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா, பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள்,

{1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவின்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23} சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் ஆவர்.


கவனிக்கவும், இவை பிறப்பின் வரிசையின் அடிப்படையில் உள்ள பெயர்களாகும் என வைசம்பாயனர் சொல்கிறார். வைசியப் பெண்மணிக்குப் பிறந்த யுயுத்சு இரண்டாவது பிள்ளையாக சேர்க்கப்பட்டிருப்பதால் கௌரவர்கள் 101 எண்ணிக்கை வருகிறது என நினைக்கிறேன்.


இந்த நூறு மகன்கள் போக, துச்சலை என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தாள். அனைவரும் வீரர்களும் அதிரதர்களாகவும், போர்க்கலை நிபுணர்களாகவும் இருந்தார்கள். அனைவரும் வேத கல்வியும், அனைத்து ஆயுதங்களில் பயிற்சியும் பெற்றனர். ஓ ஏகாதிபதியே, மன்னன் திருதராஷ்டிரன், சரியான நேரத்தில், சரியான சடங்குகளுடன் துச்சலையை ஜெயத்ரதனுக்கு (சிந்து மன்னனுக்கு) அளித்தான்.

கௌரவர்கள் 100 பேர்

கௌரவர்கள் 100 பேர்

துரியோதனன்
துச்சாதனன்
துஸ்ஸகன்
துச்சலன்
துர்முகன்
விவிம்சதி
விகர்ணன்
 ஜலசந்தன் 
சுலோசனன்
விந்தன்
அனுவிந்தன்
 துர்தர்ஷன்
சுபாகு 
துஷ்ப்ரதர்ஷ்ணன்
துர்மர்ஷணன்
பிரமாதி 
துஷ்கர்ணன் 
கர்ணன்
சித்ரன்
உபசித்ரன்
சித்ராஷன் 
சாருசித்ராங்கதன் 
துர்மன் 
துஷ்ப்பிரகர்ஷன்     
விவித்சு
விகடன்
சமன்
ஊர்ணநாபன்
பத்பநாபன்
நந்தன்
உபநந்தன்
சேனாபதி
சுஷேணன்
குண்டோதரன்
மகோதரன்
சித்ரபாகு
சித்திரவர்மா
சுவர்மா
துர்விரோசனன்
அயோபாகு
மகாபாகு
சித்ரசாபன்
சுகுண்டலன்
பீமவேகன் 
பீமபலன்
பாலாகி 
பீமவிக்ரமன்
உக்ராயுதன் 
பிரமதன்
சேனானி
பீமசரன்
கனகாயு
திருடாயுதன்
திருடவர்மா
திருடஷத்ரன் 
சோமகீர்த்தி
அணரதன்
சராசந்தன் 
திருடசந்தன் 
சத்யசந்தன்
சக்ஸரவாக் 
உக்ரசிரவஸ் 
உக்கிரசேனன் 
சேஷம மூர்த்தி 
அபராஜிதன்
பண்டிதகன் 
விசாலாஷன் 
துராதனன்  
திருடகஸ்தன்
சுகஸ்தன்
வாதவேகன் 
சுவர்சஸ் 
ஆதித்யகேது 
பகவாசி 
நாகதத்தன்
அனுயாயி
தண்டி
நிஷங்கி
கவசி
தண்டதாரன்
தனுர்கிரகன்
உக்கிரன்
பீமதரன்
வீரன்
வீரபாகு
அலோலுபன் 
அபயன் 
ரௌத்ரகர்மா 
திருடரதன் 
அனாத்ருஷ்யன்
குண்டபேதி 
விராவி 
தீர்க்கலோசனன்    
தீர்க்கபாகு
தீர்க்கரோமன்
வியூடோரு 
கனகாங்கதன் 
குண்டஜன் 
சித்ரகன்
துஷ்பராஜன்

திருஷ்டத்யும்னன்

திருட்டத்துயும்னன் (திருஷ்டத்யும்னன்) மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். மகாபாரதத்தின்படி இவன், துருபதனின் மகனும், திரௌபதிசிகண்டி ஆகியோரின் உடன்பிறந்தோனும் ஆவான். குருச்சேத்திரப் போரின்போது பாண்டவர்களுடைய தலைமைப் படைத்தலைவனாகப் பணிபுரிந்த திருஷ்டத்யும்னன், துரோணர் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தான்.

பாஞ்சால நாட்டின் மன்னனான துருபதனுக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்ததால், தேவர்கள் அருள் பெற்றுப் பிள்ளைகளைப் பெறுவதற்காக, புத்திரகாமி யாகம் எனப்படும் வேள்வியைச் செய்தான். துருபதனுக்குத் துரோணருடன் பகை இருந்தது. துரோணர், துருபதனைத் தோற்கடித்து அவனது நாட்டில் பாதியையும் எடுத்துக் கொண்டிருந்தார். தனது இளம் வயது நண்பனான துரோணருடன் தனது நாட்டைப் பகிர்ந்துகொள்வதாக வாக்குறுதி அளித்துப் பின் அதனை மீறியவன் துருபதன். ஆனாலும் துரோணர் தன்னை அவமானப்படுத்தியதாக அவன் கடும் சினம் கொண்டிருந்தான். தனது மகன், துரோணரைக் கொல்லும் வலிமை பெற்றவனாக இருக்க வேண்டுமெனத் துருபதன் விரும்பினான்.

வேள்வியின் முடிவில், வேள்வித் தீயிலிருந்து முழுமையாக வளர்ச்சி பெற்ற, வலிமை மிக்க இளைஞன் ஒருவன் ஆயுதங்களுடன் தோன்றினான். அவனே திருட்டத்துயும்னன். அவன் தோன்றும்போதே, நிறைந்த சமய அறிவும், போர்த்திறனும் கொண்டிருந்ததாக மகாபாரதம் கூறுகிறது.

துரோணரைக் கொல்வதற்காகவே அவன் பிறந்தவனாக இருந்தும், போர்க் கலையில் மேலும் தேர்ச்சி பெறுவதற்காகத் துரோணரிடமே சேர்ந்துகொண்டான்

Monday, 27 July 2020

கண்டங்கத்திரி

உடலை நோயின்றி பாதுகாக்க சித்தர்கள் கண்ட வழிமுறைதான் காயகற்பம்.  அதாவது கற்பமென்பது உடம்பினை நோயுறாதபடி நன்னிலையில் வைத்திருந்து நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு நீக்கி பாதுகாப்பது.

இந்த வகையான கற்ப மூலிகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி பற்றி தெரிந்து கொள்வோம்.

கண்டங்கத்திரி, செடி வகையைச் சார்ந்தது.  எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகுதியாக காணப்படுகிறது.

இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்

வீசுசுரஞ் சன்னி விளைதோடம் – ஆகறுங்கால்

இத்தரையு ணிற்கா எரிகாரஞ் சேர்க்கண்டங்

கத்திரியுண் டாமாகிற் காண்

(அகத்தியர் குணபாடம்)

பாடல் விளக்கம் – கண்டங்கத்திரி காசம், சுவாசம், அக்கினிமந்தம், தீச்சுரம், சன்னி வாதம், ஏழுவகைத் தோடங்கள், வாத நோய் ஆகியவற்றைத் தீர்க்கும்.

காச சுவாசம் குணமாக

இன்றைய நவீன யுகத்தில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளது.  மேலும் உணவுப் பழக்கங்களாலும் மனித உடல் நோய் எதிர்ப்பு சக்தி குன்றி காணப்படுகிறது.  இதனால் முதலில் மனிதன் பாதிக்கப்படுவது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால்தான்.

உடலில் ஒவ்வாமை உண்டாகி அது நுரையீரலை அடைந்து இரத்தத்தில் கலந்து மூக்கில் நீரேற்றம், நீர் வடிதல், தலைவலி, சைனஸ் போன்றவற்றை உண்டு பண்ணுகிறது.  நாளடைவில் காச சுவாச நோயாக மாறிவிடுகிறது.

கண்டங்கத்திரி சமூலத்தை (இலை, பூ, காய், பழம், விதை, வேர்) நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து அதனுடன் தேன் கலந்து காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் காச சுவாசத்தின்  பாதிப்பு குறைந்து நாளடைவில் குணமாகும்.  அல்லது இதன் பொடியை கஷாயமாக்கி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வரலாம்.  இதனால் தலைவலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும்.  சைனஸ் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட இது சிறந்த மருந்தாகும்.

சளியைப் போக்க

இருமல், ஈளை, சளி, தொண்டைக்கட்டு நீங்கவும், உடலில் உள்ள சளியைக் குறைக்கவும் கண்டங்கத்திரி கஷாயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.  இந்திய மருத்துவ முறைகளில் இதன் பயன்பாடு அதிகம். இரத்தத்தில் உள்ள சளியை மாற்றும் தன்மை கொண்டது.  ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இருதயக் குழாய்களில் ஓடும் ரத்தத்தின் ஒட்டும் தன்மையை மாற்றி அடைப்புகளை  நீக்கும்.

ஈளை இழுப்பு இருமல் சுவாசகாசம்
மாறும்தானும் கண்டங்கத்திரியாலே..

என்று அகத்தியர் வர்ம காண்டத்தில் கூறியுள்ளார்.  மேலும் காயகற்பமான வாசாதி லேகியம் என்ற திருமேனி லேகியத்தில் கண்டங்கத்திரி முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. ஆஸ்துமா மற்றும் ரத்த அழுத்தத்தையும், நுரையீரல் சளியையும், சுவாசக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளையும் நீக்கும் தன்மை கண்டங் கத்திரிக்கு உள்ளதால்  வாசாதி லேகியத்தில்   சேர்க்கப்படுகிறது.  இதனால் தான்  சித்தர்கள் கண்டங்கத்திரியை காயகற்ப மூலிகை  என்று  அழைக்கின்றனர்.

பசியைத் தூண்ட

மலச்சிக்கலும், அஜீரணக் கோளாறும் நீங்கினாலே மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். இவை நீங்கினால்தான் உடல் புத்துணர்வு பெறும்.

நன்கு பசியெடுக்க குடலில் செரிமான சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.  கண்டங்கத்திரி, செரிமான சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது.   கண்டங்கத்திரியின் பழத்தை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் நல்ல செரிமான சக்தி கிடைக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

பல் வலி நீங்க

பல் வலி, பல் ஈறுகளில் வீக்கம், பூச்சிப்பல், இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்க கண்டங்கத்திரி வேரை நிழலில் உலர்த்தி அதனுடன் காயவைத்த புதினா இலைகளைச் சேர்த்து நன்கு பொடியாக்கி அதைக்கொண்டு தினமும் பல் துலக்கினால், அல்லது பல் துலக்கிய பின் இந்த பொடியை பற்களிலும் ,ஈறுகளிலும்  நன்கு தேய்த்து வந்தால் பல்வலி, பல் ஈறு நோய்கள் நீங்கும்.

கண்டங்கத்திரி சமூலத்தை பொடித்து வைத்து அதை கஷாயமாக்கி அருந்தி வந்தால் கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் மூட்டுகளில் உள்ள வலிகளைப் போக்கி , அதன் இறுக்கத் தன்மையைக் குறைக்கும்.

வியர்வை நாற்றம் நீங்க

கண்டங்கத்திரி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்த பின் வடிகட்டி ஆறவைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உடலெங்கும் பூசி வந்தால், வெயில் காலங்களில் உண்டாகும் வியர்வை நாற்றம் நீங்கும்.

வெண்புள்ளிகள் மறைய

கண்டங்கத்திரியின் பழத்தை குழைய வேக வைத்து  நன்றாக கடைந்து வடிகட்டி எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி  உடலில் உள்ள வெண்மை நிறப் புள்ளிகள் மீது தடவி வந்தால், வெண்புள்ளிகள் மறையும்.  இது சித்த மருத்துவத்தில் வெண்குஷ்ட நோய்க்கு மருந்தாகச் சேர்க்கப்படுகிறது.

கண்டங்கத்திரி வேரை காயவைத்து பொடித்து, கஷாயம் செய்து அதில் திப்பிலி பொடியும், தேனும் கலந்து அருந்திவந்தால் நீரின் மூலமாக உண்டாகும் தொற்று நோய்கள் விரைவில் குணமாகும்.

கண்டங்கத்திரியை முள் செடி என்று ஓரங்கட்டி விடாமல், அதன் பயனறிந்து தேவைக்கு உபயோகித்து சிறந்த பலனை அடைந்து ஆரோக்கியம் பெறலாம்.

Sunday, 26 July 2020

காெய்யா

உலகின் மிக ஆராேக்கியமான அதிக ஊட்ட சத்துகளை காெண்ட பழம் எது தொியுமா...??

என்று அனைவாிடமும் கேட்டால் அனைவரும் பதிலளிப்பது ஆப்பிள், ஆரஞ்சு என்று பதிலளிப்பாா்கள்.

ஆனால் உண்மையில் அதை விட ஆரேக்கியமான பழம் எது என்பதற்கு விடை இருக்கிறது. ஓர் ஆய்வில் நமது தமிழ்நாட்டில் விளையும் நாட்டு காெய்யாதான் உலகின் அதிக சத்துக்களை உடைய பழம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

நாட்டு காெய்யா இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று சிகப்பு காெய்யா, மற்றொன்று வெள்ளை, கிட்ட தட்ட இரண்டுமே ஒரே சத்துக்களை உள்ளடக்கியது.

ஆனால் ஏனோ தொியவில்லை இக்காலத்தில் அது ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் மட்டுமே வாங்கி உண்ணும் பழமாகப் பாவிக்கப்படுகிறது.

ஆனால் அது அவ்வாறு இல்லை ஆராேக்கியம் பற்றிக் கவலைப்படும் ஓவ்வருவாேரும் வாங்கி உண்ண வேண்டும்.

சாியாகச் சொல்லப்பாேனால் ஆப்பிளை விட காெய்யா விலை மிக மிகக் குறைவு. சத்துக்களாே ஆப்பிளை விட மிக அதிகம்.

ஆப்பிளைப் பாேன்று இதில் மெழுகுப் பூச்சு பூச படுவதில்லை. நேரடியாக நமது உழவா்களிடம் இருந்து சந்தைக்கு வருகிறது. நமது சீதாேசண நிலைக்கு மிகவும் ஏற்ற பழம்....!!!!

முள்ளங்கி ஜூஸ்

மாதத்திற்கு ஒருமுறை மட்டும் முள்ளங்கி ஜூஸைக் குடித்தால் இவ்வளவு நன்மைகள் வாழ்க்கை முழுவதும் கிடைக்கும்...

முள்ளங்கி ஜூஸில் உள்ள சத்துக்கள்

முள்ளங்கி ஜூஸில் வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அமிலம், காப்பம், ஜிங்க், மாங்கனீசு போன்றவை வளமாக உள்ளது.

**  முள்ளங்கி ஜூஸ் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள், வைரஸ்கள் போன்றவற்றை வெளியேற்ற உதவும்.

** கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் நொதிகளின் வெளியீட்டிற்கு உதவும்.

** முள்ளங்கி ஜூஸ் பித்த நீரின் அளவை சீராக்கி, பிலிரூபின் உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

** கல்லீரலில் உள்ள அதிகப்படியான அளவில் இருக்கும் பிலிரூபினை வெளியேற்றி, மஞ்சள் காமாலையில் இருந்து முள்ளங்கி ஜூஸ் விடுவிக்கும்.

** முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது.

** முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. ஆய்வுகளிலும், முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

** முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

பூரான் கடித்தால் என்ன செய்வது?

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்…
விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் – நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.
வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.
உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.
பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.
பூரான் கடியை தீர்க்க மருந்து
குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.
மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெயில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.
ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் – கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.




சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சந்திர பிரபா வடி என்ற ஆயுர்வேத மாத்திரையை வாங்கி சாப்பிவும் 1 நாள் மருந்தில் எரிச்சல் குறையும் 15 நாள் சாப்பிட்டால் போதுமானது

கரும்புஜூஸ்

#கரும்புஜூஸ் 
  

நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? நீங்களே பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும். உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது. அதே போன்று விட்டமின் சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது. மேலும் கரும்பு சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.

அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.

சிலருக்கு பருக்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.

பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது. நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாருகள் சுரக்கவும் இது உதவுகிறது. பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது. சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்து பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.

சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். மேலும் கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.

எனவே உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கருப்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது. எனவே கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

நல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்கள்!!!

நல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்கள்!!!

வாடிக்கையாளர்களுக்கு நல்லெண்ணெய் எடுத்து கொடுக்க செக்கு எண்ணெய் கடைகாரர்கள் பயன்படுத்திய பித்தளை பாத்திரம்

நமது பாட்டனும், பூட்டனும் என்னத்த சாதிச்சாங்க...என்று நாம் அவ்வப்போது சலிப்பதுண்டு. ஆனால் அவர்கள் செய்து வைத்த ஒவ்வொரு விடயத்திலும் ஏதோ ஒரு தத்துவம் அடங்கித்தான் கிடக்கிறது என்பதற்கு இதோ இந்த நல்லெண்ணெயும் ஒரு உதாரணம்.

எங்கும் இல்லாத சில விடயங்கள் மதுரைக்கு மட்டுமே உண்டு. கடலில் கலக்காத வைகை, மனதை மயக்கும் மல்லிகைப்பூக்கள், இதே மல்லிகை போன்ற இட்லியும், கொத்துமல்லி சட்னியும்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போல் மதுரையில் ஒரு விடயம் நீண்ட நாட்களாக இருந்தது. அது மரச்செக்கில் பிழிந்து எடுத்த கமகமக்கும் நல்லெண்ணெய். மதுரை சிம்மக்கல் அருகில் இருக்கிறது செல்லத்தம்மன் கோவில்.

இந்த பகுதியில் வாணிப செட்டி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நல்லெண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களது கடையில் நல்லெண்ணெய் வாங்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இப்படி வருபவர்கள் கைகளில் எல்லாம் சில்வரால் ஆன ஒரு குடுவை இருக்கும். இந்த குடுவையோடு வந்து வரிசையில் நிற்பார்கள். தங்கள் முறை வந்தவுடன் கடையில் அளந்து கொடுக்கும் நல்லெண்ணெயை வாங்கிச் செல்வார்கள்.

அப்படி என்ன தான் இவர்கள் விற்கும் இந்த நல்லெண்ணெயில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு தடவை புகைப்படக்காரருடன் சேர்ந்து அங்கே போனோம். கடைக்காரர் எப்போதும் போல் விற்பனையில் படு மும்முராக இருந்தார். நாங்கள் இந்த எண்ணெயின் ரகசியங்களை தெரிந்து கொள்ள வந்திருப்பதாக சொன்னவுடன் ஆர்வத்துடன் பேச தொடங்கினார். தனது நல்லெண்ணெய் பற்றி இன்னும் பல மக்களுக்கு தெரியட்டுமே என்று தான் ஆர்வமாக பேட்டி கொடுப்பதாக நினைத்தேன்.

அவரும் சொல்லத் தொடங்கினார். 'அதாவது தேங்காய் எண்ணெயில் இருந்து எண்ணெய் எடுத்து அதற்கு தேங்காய் எண்ணெய், கடலையில் இருந்து எண்ணெய் எடுத்து கடலை எண்ணெய் என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். ஆனால் எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்து விட்டு, அதற்கு மட்டும் நல்லெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ஏன் இப்படி?

அதற்கு எள் எண்ணெய் என்று தானே பெயர் வைத்திருக்க வேண்டும்? அனால் வைக்க வில்லை. இந்த எண்ணெயின் எல்லையில்லாத நன்மைகளை பார்த்து விட்டு, நல்லதை செய்யக்கூடிய நல்லெண்ணெய் என்பதை அதன் பெயரிலேயே சுட்டிக்காட்டிவிட்டார்கள்.

இன்றைக்கும் கடைகளில் நல்லெண்ணெய் பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் அவர்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நல்லெண்ணெய் என்பது, பெரிய இயந்திரங்கள் மூலம் எள்ளை அரைத்து பெறப்படும் எண்ணெய். ஆனால் நாங்கள் கடந்த 120 ஆண்டுகளாக மரச்செக்குகளில் தான் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுக்கிறோம். அதாவது எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும்.

இப்படி மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்போம். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரம் என்பது எங்களுக்காகவே பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த பித்தளை பாத்திரத்தின் உட்புறத்தில் ஈயம் பூசப்பட்டிருக்கும். இதை வைத்து தான் செக்கிலிருந்து வரும் எண்ணெயை எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமிப்போம். இதே போல எங்களின் வாடிக்கையாளர்கள் எங்களிடம் எண்ணெய் வாங்க வரும் போது சில்வர் பாத்திரத்தை தான் கொண்டு வரச்சொல்லி அதில் தான் எண்ணெயை ஊற்றி கொடுப்போம்.

இதன் அறிவியல் தத்துவம் எங்களுக்கு முன்னோர்களுக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து ஆட்டப்பட்ட எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணையை, பித்தளையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தின் மூலம் செக்கிலிருந்து எடுத்து ஊற்றி சில்வர் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு சில அபாரமான குணங்கள் இருப்பதை நடைமுறையில் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும்.

எங்களுக்கு பெரிய அளவுக்கு இந்த தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், நாங்கள் 4 வது தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதனை விடவும் மனதில்லை' என்றார். நாங்கள் இவரை பார்த்து பேசியது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு. தற்போது இந்த இடத்தில் மரச்செக்கு எண்ணெய் விற்கப்படுவதில்லை. இங்கு இந்த விடயத்தை பதிவிட காரணம் இப்படி எத்தனையே பாரம்பரியமான தயாரிப்பு முறைகள் மறைந்து போய்க் கொண்டே இருக்கின்றன. இதில் தமிழர்களின் வாழ்வோடு இடம் பிடித்த செக்கு நல்லெண்ணெயும் காணாமல் போனது வருத்தியது.

பொதுவாக பெண் குழந்தைகள் பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள். தற்போது இந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. இத்துடன் இந்த செக்கு நல்லெண்ணெயும் தான். செக்கு நல்லெண்ணெய்க்கும், தற்பேர்து பாக்கெட்டுகளில் அடைத்து வரும் நல்லெண்ணெய்க்கும் என்ன அப்படி வித்தியாசம் இருக்கும் என்று எனது நண்பர் ஒருவர் இப்படி சொன்னார்....

" அதாவது பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெயை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணசாங்கள் குறைந்து போய்விடும்.

ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே" என்றார்.

நம்முடைய நல்லெண்ணை , கடலை எண்ணை,  தேங்காய் எண்ணை , வேப்ப எண்ணை , விளக்கெண்ணை போன்ற அனைத்தையும் மர செக்கில் தயாரித்ததை பயன்படுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்.

ஆக...படிப்பு குறைவாக இருந்தாலும் நமது முன்னோர்கள் இன்றைய விஞ்ஞானிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எப்படியெல்லாம் நிருபித்திருக்கிறார்கள் பாருங்கள்.


Hormonal Imbalance

சமநிலையற்ற ஹோர்மோன் (Hormonal Imbalance)
இன்று ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் ஹோர்மோன் சீரற்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணம் நம்முள் ஊடுருவியுள்ள தவறான உணவு பழக்கங்கள், சீரற்ற தூக்கம், மன அழுத்தம், உடல் பருமன், உடல் பயிற்சி இல்லாத வாழ்வியல் போன்றனவாகும்.

இதனால் கருப்பப்பை கட்டிகள், மாதவிடாய் சீர்கேடுகள், தைரொய்ட், முடி கொட்டுதல், நினைவுதிறன்  குறைதல், குழந்தையின்மை, மலட்டு தன்மை, மனநிலை மாற்றம், தலைவலி, எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.

முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. மைதா, தோல் நீக்கிய வெள்ளை அரிசிகள்
2. Sunflower, Canola போன்ற இறக்குமதி எண்ணெய்கள்
3. பிரெட், பிஸ்கட் உட்பட அனைத்து கடை உணவுகள்
4. கடையில் விற்கும் பால் மற்றும் பால் உணவுகள்
5. தூள் உப்பு
6. வெள்ளை சீனி
7. குளிர்பானங்கள்
8. போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர்.
9. குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடாக்கி உண்ணும் பழைய உணவுகள்.

இதனோடு ஷாம்பு, சோப்பு, முக பூச்சுக்கள் போன்றனவும் ஹோர்மோன் சமநிலையற்று போக காரணமாக உள்ளன. இவற்றை தவிர்ப்பது மிக நல்லது.

அத்தோடு சலவை செய்யும் பொழுதும், பாத்திரங்கள் கழுவும் பொழுதும் கையுறை அணிந்து கொள்வது மூலமும் பாதிப்புக்களை குறைக்கலாம்.

கீழே குறிப்பிட்டுள்ள யோகா ஆசனங்களை காலையும், மாலையும் தவறாது செய்து வருதல் மூலம் ஹோர்மோன் பாதிப்புக்களை சீர் செய்ய முடியும்.

சேதுபந்த ஆசனம் (Bridge Pose) - தரையில் மேல் நோக்கி படுத்து கால்களை இடுப்பு வரை மடித்திக் கொள்ள வேண்டும். கைகள் பக்க வாட்டில் இருக்க வேண்டும். பின் மெதுவாக வயிற்று பகுதியை மேல் உயர்த்த வேண்டும். இந்நிலையில் முடிந்தளவு எண்ணிக்கையில் சீராக மூச்சை இழுத்து வெளி விட வேண்டும்

புஜங்காசனம் (Cobra Pose) - விரிப்பில் குப்புற படுக்க விடும். கால்கள் இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். கைகள் நெஞ்சுப்பகுதிக்கு அருகில் பக்க வாட்டில் இருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை இழுத்தவாறு தலையையும்,  நெஞ்சு பகுதியையும் சேர்த்து  பாம்பை போல் மேல் நோக்கி  எழும்ப வேண்டும். கைகள் மற்றும் கால்கள் பூமியோடு இருக்க வேண்டும்.கண்கள் வானத்தை பார்க்க வேண்டும். இந்நிலையில் சீராக மூச்சை இழுத்து மூச்சை வெளிவிட்டவாறே முடிந்தளவு இருக்க வேண்டும்.

சசாங்காசனம் (Rabbit Pose) - காலை மடித்து உட்கார வேண்டும் கைகளை மேலே மூச்சோடு உயர்த்தி மூச்சை விட்டவாறே தலையை கைகளோடு சேர்த்து நிலத்தை நோக்கி கொண்டு வர வேண்டும். பின் கைகளை பக்க வாட்டில் வைத்து அப்படியே சீராக மூச்சை இழுத்து மூச்சை விட்டவாறே முடிந்தளவு இருக்க வேண்டும்.

உஷ்டிராசனம் (Camel Pose) - கால்களை மடித்து, முழங்காலில் நிற்க வேண்டும். பின் மெதுவாக பின் வளைத்து இடது கையால் இடது காலை பிடிக்க வேண்டும். பின் வலது கையால் வலது காலை பிடிக்க வேண்டும். இந்நிலையில் சீராக மூச்சை இழுத்து, மூச்சை விட்டவாறே முடிந்தளவு இருக்க வேண்டும்.


 


பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்ட #அவுரி.*

*பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்ட #அவுரி.*

 இதன் இலையைக் குடிநீரில் போட்டுக் குடித்துவந்தால், வாதத்தால் ஏற்படும் காய்ச்சல், காமாலை, மாந்தம், மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள் நீங்கும்.

அவுரி இலை குடிநீரைத் தொடர்ந்து குடித்துவந்தாலோ, இலையை வேகவைத்து வதக்கிச் சாப்பிட்டுவந்தாலோ, உடல் பொன்னிறமாகும். வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழியும்.

அவுரிக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உள்ளதால், மலச்சிக்கல் போக்க சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அவுரி குடிநீர் அருந்தி வந்தால், மாலைக்கண் நோய் நீங்கும். 

பாம்புக்கடிக்கு முதலுதவியாக அவுரி இலையைப் பச்சையாக அரைத்து, கொட்டை பாக்கு அளவுக்கு பாம்பு கடிபட்ட நபரை உட்கொள்ளச் செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகை நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு உருண்டைசெய்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நாள்தோறும் காலை, மாலை ஓர் உருண்டை சாப்பிட்டு, உப்பில்லா பத்தியத்தைக் கடைப்பிடித்தால்,  நரம்புச் சிலந்தி நோய் குணமாகும். இதனுடன், இந்த மருந்து உருண்டையை  நரம்பு சிலந்தி நோய் இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுப்போட்டாலும் குணம் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி அவுரி இலையை எடுத்து, சிறிது மிளகுப் பொடி சேர்த்து, 400 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து 200 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி, தினமும் இருவேளை என ஒரு வாரம் குடித்துவர, ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.

அவுரி இலையை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவுக்கு எடுத்து அதனைச் சுமார் 200 மி.லி காய்ச்சிய வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் மூன்று நாட்கள் குடித்துவர, மஞ்சள்காமாலை குணமாகும்.

அவுரி வேரையும் யானை நெருஞ்சில் இலைகளையும் சம எடை எடுத்து, அரைத்து எலுமிச்சைப் பழம் அளவுக்கு மோரில் கலந்து காலைதோறும் 10 நாட்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

Saturday, 25 July 2020

40வகை_கீரைகளும்_அதன்_முக்கிய_பயன்களும்

#40வகை_கீரைகளும்_அதன்_முக்கிய_பயன்களும்:

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். 

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். 

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். 

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். 

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். 

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். 

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். 

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும். 

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும். 

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும். 

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும். 

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும். 

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும். 

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும். 

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும். 

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும். 

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும். 

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். 

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். 

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும். 

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். 

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும். 

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். 

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். 

தவசிக்கீரை- இருமலை போக்கும். 

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும். 

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும். 

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும். 

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும். 

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். 

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும். 

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

நாவிற்கினிய நாவல் பழம்.

நாவிற்கினிய
நாவல் பழம்.

இந்த நாவல் பழத்தில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன.
ஏராளமான நார்சத்துகளும் ஆரோக்ய வாழ்விற்கு அடித்தளமாக நிறைய சத்துகள் உள்ளன.
இந்த பழம் ஆடி மாதத்தில் அதிகமாக கிடைக்கும்

நன்மைகள்
1, இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கிறது.
2. அதிக அளவு நார்சத்து உள்ளது
3. இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
4 வைட்டமின் சி நிறைந்துள்ளது
5 எழும்புகளுக்கு வலிமை சேர்க்க கூடியது.
6. இரத்த சோகை வராமல் பாதுகாக்கும்
7 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
8 புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்

இப்படி பல்வேறு நன்மைகள் கொண்ட நாவல் பழத்தை நாமும் சாப்பிடுவோம்
இதனுடன் சிறிது உப்பு கலந்து ஊற வைத்து சாப்பிட்டால் சுவை கூடும்
நாவல் பழத்தை நாடுவோம்.

சரும_துளைகளை_நீக்க

#சரும_துளைகளை_நீக்க...

 #வீட்டு_வைத்திய_பொருட்கள்

#தக்காளி_ஃபேஸ்_பேக்

சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது. ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும். வீட்டு உபயோகப்பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி சரும நலனை பாதுகாக்கும் வழிமுறைகளை காண்போம்.

பெண்களில் சிலருடைய முகத்தில் சரும துளைகள் வழக்கத்தை விட பெரிதாக காணப்படும். ஆழமான புள்ளிகள் போன்றோ, தடிப்புகள் போன்றோ காட்சியளிக்கும். அதனால் அவர்களுடைய முகம் மிருதுவாக அல்லாமல் முரட்டுத்தனமாக தோன்றும். சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது. ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும். அவை சரும அடுக்குகளுக்குள் எளிதாக ஊடுருவி பருக்கள், கொப்பளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சரும துளைகளை சரியாக பாராமரிக்க விட்டால் மேலும் பல சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சருமத்தை பாதுகாப்பதில் சருமத்தில் சுரக்கும் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. அது சருமம் ஈரப்பதமாக இருப்பதற்கு வழிவகை செய்யும். சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும். ஆனால் சருமத்தில் பெரிய துளைகள் இருந்தால் சரும எண்ணெய்யின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். வீட்டு உபயோகப்பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி சரும நலனை பாதுகாக்கும் வழிமுறைகளை காண்போம்.

#தயிர்: 

இது சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. கொரிய நாட்டு சரும அறிவியல் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தயிரை கொண்டு ‘பேஸ் மாஸ்க்’ தயாரித்து முகத்தில் பூசிவருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தயிரில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்ற உதவும். மேலும் சரும துளை களை இறுக்கமடைய செய்யவும் துணைபுரியும். முகப்பரு பிரச்சினையில் இருந்தும் நிவாரணம் பெற்றுத்தரும்.

#தக்காளி: 

இது உடலில் ரத்தத்தை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டது. தக்காளியை சாறு எடுத்து தினமும் முகத்தில் பூசுவதன் மூலம் முகப்பரு பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் செய்யும். சரும துளைகளை குறைக்கவும் உதவும். தக்காளியை நன்றாக மிக்சியில் அடித்து அதன் சாறை முகத்தில் நன்றாக தேய்த்துவிட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

#ஆப்பிள்_சிடேர்_வினிகர்: 

இது முகப்பருக்களை போக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதில் கந்தகம் இருப்பதால் சருமத்தை இறுக்கமடைய செய்து சுருக்கங்களை குறைக்க உதவும். மேலும் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் துணைபுரியும். சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை சுத்தம் செய்து அடைப்பட்ட துளைகளை திறக்கவும் வைத்துவிடும். அரை கப் ஆப்பிள் சிடேர் வினிகரை நான்கு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும். அதில் பஞ்சை முக்கி சருமத்தில் தடவி மசாஜ் செய்துவரவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் சரும அழகு மேம்படுவதை காணலாம்.

துளசியின் மருத்துவ பயன்கள்

துளசியின் மருத்துவ பயன்கள்

காய்ச்சல்

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.

தொண்டைப்புண்

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலை வலி

உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

கண் பிரச்சனைகள்

கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.

வாய் பிரச்சனைகள்

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.

இதய நோய்

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சளி, இருமல்

இருமல் கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

சிறுநீரக கற்கள்
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.


Thursday, 23 July 2020

பீமனின் மனைவி இடும்பி கதை...

இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பர்பரிகன் இவரது பேரன்.

இந்து மதம் புராணங்களில் வீமன் பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்தவர். வீமனின்ன் வலிமையை சித்தரிக்கும் பல நிகழ்வுகளை மகாபாரதம் விவரிக்கிறது. குருசேத்ரா போரில் நூறு கௌரவ சகோதரர்களைக் கொன்றதற்கு வீமன் பொறுப்பாவார். ஏறக்குறைய 10,000 யானைகளின் உடல் வலிமை அவருக்கு இருப்பதாக கருதப்பட்டது.

உபபாண்டவர்கள்...

திரௌபதைக்கும் பிறந்தவர்கள் உபபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் பீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும், சுருதகர்மா சகாதேவனுக்கும் மகனாய்ப் பிறந்தவர்கள். இவர்கள் ஐவரின் தாய் திரௌபதி ஆவாள். [1][2] குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் இரவில் துரோணரின் மகன் அசுவத்தாமன் இவர்கள் ஐவரையும் கொன்றுவிட்டார்