jaga flash news

Sunday, 28 September 2014

கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து

கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து
கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து
நாம் கட்டுகிற வீடு எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். மனைச் சிற்ப சாத்திரத்தில் இது பற்றிய தெளிவான விளக்கம் தரப்பட்டிருக்கிறது. பொதுவாக ஜோதிட ஆராய்ச்சின் அடிப்படையில் இந் த கணக்கு நிர்ணயிக்கப் படுகிறது.

வீட்டின் உரிமையாளரது ஜென்ம லக்கனத்திற்கு நான்கு பத்தில் சந்திரன் நின்று, பதினொன்றில் குரு, செவ்வாய், சனி, ஆகியர்கள் இருந்து மனைக்கு மூகூர்த்தம் செய்தால் அந்தக்கட்டிடம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். சுக்கிரன் உதயமாக 7-ல் குரு இருக்க 10-ல் சந்திரன் இருக்க கட்டிடம் 1000 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். 

லக்கினத்தில் அல்லது 10-ல் சுக்கிரன் இருக்க மூன்றில் புதன் இருக்க குரு அஸ்தமனமாக முகூர்த்தம் செய்தால் அந் த வீடு 200 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்கும். ஜென்ம லக்கினத்தில் சந் திரனும் நான்கில் புதனும் இருக்க குரு அஸ்தமனமாக முகூர்த்தம் செய்தால் அந்த வீடு 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். 

வியாழன் வெள்ளி வலமும் லக்கினம் 4,7- ல் சுக்கிரனும் 6 -ல் சூரியனும் மூன்றில் குருவும் பெரிய மண்டபங்கள், மாளிகைகள், கோபுடம் ஆகியவற்றைக் கட்டினால் ஆயிரம் ஆண்டுகளுக்கு குறையாமல் நிலைத்து நிற்கும்.

வாஸ்து பகவான்

முன்பொரு காலத்தில் அண்டகா சூரன் என்ற அரக்கன் இருந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் மமதை கொண்டு சிவபெருமானையேப் போருக்கு அழைத்தான். சிவபெருமான் அவனுடன் ஆக்ரோஷமாகப்போரிட்டார். அப்போது அவர் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதம் ஒன்று தோன்றியது.
கரிய நிறத்திலிருந்த அந்த பூதத்திற்கு அகோர பசியெடுத்தது. கண்ணில் கண்டவர்களையெல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தது. அண்டகாசூரன் மாண்ட பிறகு அவன் உடலையும் உண்டது. அப்போதும் அதன் பசி அடங்கவில்லை. எனவே தன் பசியைப்போக்கும்படி சிவனிடம் வேண்டியது. பூதம் கேட்டபடி அது விரும்பியதையெல்லாம் சாப்பிடக் கூடிய வரத்தை அளித்தார் சிவன். பூதம் பெற்ற வரத்தினால் அது மூவுலகைஇம் அழிக்கும் சக்தி பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்த தேவர்கள் ஒன்று கூடி பூதத்தை தரையில் கிடத்தி அதன் மேல் 45 கடவுளர்களை அமர்த்தினர். இதனால் பசியடங்காமல் துடித்தது.

இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றும் படி பூதம் பிரம்மாவிடம் வேண்டியது. பிரம்மா பூதத்திடம்உன்னுடைய கோரபசி தணிய வீடு கட்டும்போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால் வீட்டில் வசிப்பவரை வாட்டுஎன்று வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவரே வாஸ்து ஞஉஞஉஞஉஞஉயதிகளை உருவாக்கி அதன்படி நடப்பவர்களுக்கு நன்மையும் நடக்காதவர்களுக்கு தீமையும் அளித்து வருவதாகக் கருதப்படுகிறது.
வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷனது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். இவர் ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை கீழ்காணும் எட்டு மாதங்களில் கீழ்காணும் நாட்களில் கீழ்காணும் 3 3/4 நாழிகை (90 நிமிடங்கள்) நேரம் மட்டுமே விழித்திருப்பார். இந்த 90 நிமிடங்களில் வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம்.

இந்த 3 3/4 நாழிகையில் வாஸ்து புருஷன்

1.
பல் துலக்குகிறார்
2.
நீராடுகிறார்.
3.
பூஜை செய்கிறார்
4.
உணவு உண்கிறார்.
5.
தாம்பூலம் தரிக்கிறார்.

-
இதில் உணவு உண்ணும் காலமும் தாம்பூலம் தரிக்கும் காலமும் கொண்ட 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில் (36நிமிடம்) வாஸ்து செய்வது மிகவும் சிறப்பானது என்கிறது சோதிடம்