jaga flash news

Wednesday, 30 September 2020

வாழைப் பழத் தோல்

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே!

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.

வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.
***சோரியாஸிஸ் பிரச்சனையா?

சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

***மருக்கள் காணாமல் போகச் செய்ய :
மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

***சரும அலர்ஜியா?
ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

***முகப்பருவை எதிர்க்கிறது:
முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

***வெண்மையான பற்கள் பெற :
மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.
***காயங்கள் ஏற்பட்டுள்ளதா?
பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.

வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள்தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள். வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள்.

மேச ராசி 2020 __2021

2020 __2021
_____________
குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு
_________________________________________கேது பெயர்ச்சி பலன்கள்
___________________________

மேச ராசி
_________

வீரமும், வேகமும் ,சுறுசுறுப்பும் ,எடுத்த காரியம் உடனே முடிக்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே,

உங்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக குரு பகவான் மேஷ ராசிக்கு ஒன்பதாமிடத்தில் ஆட்சி, மூலத்திரிகோணம் பலம்பெற்று மிக வலுவாக சஞ்சாரம் செய்து வந்ததால் கடந்த ஒரு வருட காலமாக உங்களுக்கு சாதகமான முன்னேற்றமான அனுகூலமான நல்ல பலன்களை அனுபவித்து வந்தீர்கள்.. அவர் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வேறு! பாக்கியாதிபதி பாக்கியத்தில் அதுவும் திரிகோணத்தில் ஆட்சி பலம் பெற்று சஞ்சாரம் செய்தது மிகச்சிறந்த நல்ல நிலை என்றே சொல்லலாம்.

தசா புக்தி அமைப்புகள் சரி இல்லாதபோதும் கூட இந்த கோச்சார குரு பகவானின் சஞ்சாரம் நீங்கள் இந்த கொரானா ஊரடங்கு காலத்திலும் நீங்கள் மிக சுலபமாகவே சமாளித்து விட்டீர்கள்.. இந்த சோதனையான ஊரடங்கு காலகட்டத்தில் ஒன்பதாம் இடத்து குரு பகவான் உங்களை சகல விதத்திலும் பாதுகாத்து கரை ஏற்றினார் என்றால் அது கொஞ்சம் கூட மிகை இல்லை..

அது மட்டுமல்லாமல் உங்களுக்கு கடந்த காலத்தில் ராகு பகவான் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து பல சகாயங்களை வாரி வழங்கினார்.தற்போது ராகு பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். வரக்கூடிய 20. 11. 2020 வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒன்றேகால் மணியளவில்
குரு பகவான் தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியாகி மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார்..

இது உங்கள் மேஷ ராசிக்கு 10-ஆம் இடம் என்று சொல்லக்கூடிய கர்ம ஸ்தானம் ஆகும் .தொழில் ஸ்தானமாகும் .ஜீவன ஸ்தானமாகும். ராஜ்ய ஸ்தானமாகும்.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு என்ன சொல்லுது அப்படின்னு பார்த்தோம்னா!
இந்த குருப் பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமான நல்ல பலன்களை தர காத்துக் கொண்டு இருப்பதை உணர முடிகிறது.

எப்படி?? பொதுவாக உங்கள் ராசிக்கு குரு பகவான் பாக்கியாதிபதியாக வருவார். அதாவது ஒன்பதாமிடம் என்று சொல்லக்கூடிய தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக வரக்கூடியவர் இந்த குரு பகவான்.அப்படிப்பட்ட தர்ம ஸ்தானத்துக்கு ஆதிபத்தியம் வாங்க கூடிய குரு பகவான் மகர ராசிக்கு செல்ல இருக்கிறார் அங்கு சனி பகவான் ஆட்சி பலத்தோடு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். அவரோடு குருபகவான் சேர்ந்து இணைவது தர்ம கர்மாதிபதி யோகம் என்ற மிகப்பெரிய யோகம் உங்களுக்கு அடுத்த ஒரு வருட காலம் வர இருக்கிறது.

ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் இணைந்து இருவரில் ஒருவர் ஆட்சி பலம் பெற்று அற்புதமாக சஞ்சாரம் செய்யக்கூடிய தர்மகர்மாதிபதி யோகம் ஆனது, சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தை வாரி வழங்கும். தர்மகர்மாதிபதி யோகம் உள்ளவர்கள் கோவில் பணிகளிலும், சமூக நலம் சார்ந்த பணிகளிலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். இவர்கள் மனமுவந்து  அடுத்தவர்களுக்கு உதவி  செய்வதை காணும் நவகிரகங்கள் இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல் வற்றாத செல்வத்தை வாரி வழங்குவதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். எனவே இந்த தர்ம கர்மாதிபதி யோகம் உங்களை சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவராக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்ததாக இந்த கொரொனா சுய ஊரடங்கு காலத்தில் சிலர் வேலை இழந்ததை பார்க்கிறோம்..வேலை இல்லாதவர்களுக்கு ,வேலை இழந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும்.ஏன்னா ??குரு பகவான் 10-ஆம் இடத்திற்கு செல்கிறார்.. 10-ஆம் இடத்தை சுபத்தன்மை படுத்துகிறார்.. பத்தாம் அதிபதியோடு இணைகிறார்.. பத்தாம் அதிபதியை சுபத்தன்மை படுத்துகிறார் பத்தாமிடம் ,பத்தாம் அதிபதியை குருபகவான் சுபத்தன்மை படுத்துவதால்
வேலை இல்லாதவர்களுக்கு, வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்பது உறுதி...

உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான குருபகவான் தனது 7-ம் பார்வையால் நேர் பார்வையாக 4-ஆம் இடத்தைப் பார்த்து நான்காம் இடத்தை புனிதப் படுத்துவார்.. மேஷ ராசி மேஷ லக்னம்,, மேஷ ராசி மிதுன லக்னம் ,,மேஷ ராசி கும்ப லக்கினம் இவற்றை இலக்கண ராசியாக போன்றவர்களுக்கு சொந்த வீடு எனும் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.. லக்னத்திற்கும் ராசிக்கும் நான்காம் இடத்தைப் பார்க்க கூடிய குரு பகவான் சொந்த வீட்டை தந்துவிடுவார்..

ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம், கடகம் ,கன்னி லிருந்து மேஷ ராசியாக அமைந்தவர்களுக்கு  வாகனம் வாங்க கூடிய யோகம், பிராப்தம் உண்டாகும்..
நான்காம் இடத்தையும் சுக்கிரனையும் குருபகவான் ஒருசேர பார்ப்பதால் இவர்களுக்கு வண்டி வாகனயோகம் உண்டாகிறது..சிலருக்கு வீடு மராமத்து பண்ணக் கூடிய அமைப்பும் சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து போக்கியத்திற்கும், போக்கியத்து வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கும் குடி போக கூடிய நல்ல காலம் பொறக்குது..ராசிக்கு 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தாயின் ஆதரவு  கிடைப்பதோடு தாயின் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும்.
செய்தொழில் நன்றாக இருக்கும்.

குருபகவான்தனது ஐந்தாமிட பொன்னொளி பார்வையால் மேஷ ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்த்து விடுவார். இந்த இரண்டாம் இடம் என்பது தன ஸ்தானம் ஆகும் .எனவே பண வரவுகள் மிக திருப்தியாக இருக்கும்.. குடும்ப ஒற்றுமை மிக நன்றாக இருக்கும்..படிக்கக் கூடிய மேஷ ராசி குழந்தைகள், மாணவர்கள் நன்கு படித்து தேர்ச்சி பெறுவர்..உங்கள் வார்த்தைக்கு ஒரு மதிப்பு மரியாதை இருக்கும்.. ஏனென்றால் குரு பகவான் 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். குரு பார்க்கக் கூடிய இடங்கள் எல்லாம் பெருகும். வளரும். உங்களுக்கு 2021 மிக அதிர்ஷ்டமான, யோகமான முன்னேற்றமான நல்ல ஆண்டாக அமையவிருக்கிறது..

குரு பகவான் ராசிக்கு 6ம் இடத்தை தனது 9ம் பார்வையால் பார்த்து விடுவதால் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல ஆண்டாக 2021 நிச்சயம் இருக்கப் போகிறது..சிலர் கடன்பட்டு  வீடு வாங்குவர்.. சிலர் கடன் வாங்கி கார், பைக் போன்ற வாகனங்கள் வாங்குவர். கடன் வாங்கி இடம் வாங்குவர்.. அதாவது சுபக் கடன்கள்.ராசிக்கு 6ம் இடத்தை தனது 9ம் பார்வையால் பார்க்கக் கூடிய குரு பகவான் சுப கடனை தந்தாலும் அவர் ராசிக்கு இரண்டாமிடத்தையும் பார்த்து விடுவதால் கடனை கட்ட முடியும் கடனை அடைக்க முடியும்.கடனை தரக் கூடிய குரு பகவான் அந்த கடனை அடைக்க கூடிய வழிகளையும் காட்டிவிடுவார்.  கடனை அடைக்க கூடிய அளவுக்கு வருமானமும் வந்து விடும்..ஆக மொத்தத்தில் இந்த 2021 குருபெயர்ச்சி மேஷ ராசிக்கு நிச்சயம் நல்ல பலனைத் தர காத்துகொண்டு உள்ளது.. பொதுவாக மகர ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாயின் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.. இவர்கள் ராசிக்கு யோகாதிபதிகள் மற்றும் ராசிநாதனின் நண்பர்கள் என்பதால் இவர்களின் சாரத்தில் செல்லக் கூடிய குரு பகவான் எந்த நிலையிலும் கெடுக்க மாட்டார்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
______________________________
இதுவரை உங்கள் ராசிக்கு 3,9 ம்மிடங்களில் சஞ்சாரம் செய்து வந்த ராகு கேதுக்கள் தற்போது 2,8 ம்மிடங்களுக்கு கடந்த 23 .9 .2020 அன்று பெயர்ச்சியாகி விட்டார்.. பொதுவாக ராகு கேதுக்கள் அப்பிரதட்சணமாக சுற்றி வரும் கிரகங்கள் ஆவார்கள். மற்ற கிரகங்கள் ராசி சக்கரத்தை இடமிருந்து வலமாக சுற்றி வரும் நிலையில் ராகு கேதுக்கள் மட்டும் வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணமாக )சுற்றி வருவார்கள்.

கடந்த காலத்தில் மிதுன ராசியில் ராகுவும் ,தனுசு ராசியில் கேதுவும் சஞ்சாரம் செய்து வந்த நிலையில் தற்போது ரிஷபத்திற்கு ராகுவும் விருச்சிகத்திற்கு கேதுவும் மாறி பலனை தர தொடங்கியுள்ளனர். தனம் குடும்பம் வாக்கு கல்வி கண் நேத்திரம் அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் என்று சொல்லப்படக்கூடிய இரண்டாம் இடத்திற்கு ராகு பகவான் சஞ்சாரம் செய்வது அவ்வளவு விசேஷம் ஆகாது.

ஆனாலும் அந்த ராகு பகவானுக்கு குருவின் பார்வை இருப்பதால் குருபகவான் கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி, சரியான ஆங்கிலம் 20 நவம்பர் 2020 க்கு மேல் ராகுவை பார்வையிட இருப்பதால் இரண்டாமிடத்து ராகுவால் பெரும் பிரச்சனை இருக்காது.
பெரும் பிரச்சனை எதுவும் இருக்காது என்று சுருக்கமாக முடித்து விட்டீர்களே என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஒரு கெட்ட கிரகம் கெடுதல் பண்ண முடியாத அமைப்பில் இருந்தாலே அது நமக்கு யோகம்தான்.இரண்டாம் இடம் எட்டாம் இடம் இந்த இடங்களில் ராகு கேதுக்கள் இருந்தாலே அது சர்ப்ப தோஷம் என்று வரும். கோடிக்கணக்கான தோசத்தை நிவர்த்தி செய்யும் குரு பகவான் இந்த சர்ப்ப தோஷத்தையும் நிவர்த்தி செய்கிறார்.. மற்றொன்று ரிஷப ராசியில் ராகு பகவான் நீச நிலையை பெற்று விடுவார்.
மிக பலம் குறைந்த நிலை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பில் ராகு பகவான் கெட்டுப்போய் குருபகவானின் பொன்னொளி பார்வையால் தனது விஷத்தை நீக்கி 
நல்லவராக சுபராக மாறுகிறார்.. அதுமட்டுமல்லாமல் ராகு பகவான் இருக்கக்கூடிய வீடானது  அசுர குருவான சுக்கிர பகவானின் வீடு..
அவரை தேவ குரு பார்ப்பது என்பது அதிக சுபத்துவம்ஆகும்..

பேசி பிழைக்கும்  மேசராசி வக்கீல்கள், பேச்சாளர்கள்,வர்ணனையாளர்கள், டிவியில் வேலை செய்பவர்கள் போன்ற வாயை மூலதனமாக கொண்டவர்களுக்கு 2021 பொற்காலம் ஆகும். ஆனால் எட்டாமிடமான விருச்சிகத்தில் உச்சம் பெரும் கேதுபகவான் இதற்கு நேர்மாறாக அவமானம் ,அசிங்கம், கேவலம் போன்ற பலனைத் தந்து அல்லாட வைப்பார்.. ஆனாலும் கேது நின்ற வீட்டின் அதிபதி செவ்வாய் என்பதால் ராசிநாதனின் வீட்டில் இருக்கும் கேது பகவான் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்..
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி இரண்டு நெய் விளக்கு போட்டு வருவது எட்டில் இருக்கும் கேது பகவானுக்கு பரிகாரமாகும். செவ்வாய்க் கிழமை அன்று 3__ 4.30 மணிக்கு ராகுகாலம் வரும்.. அந்த நேரத்தில் புற்று கோயிலுக்கு சென்று பால் அபிஷேகம், அர்ச்சனை செய்து கொள்ள ,2 நெய் விளக்கு போட்டு வர பரிகாரமாகும். இதை செவ்வாய்கிழமை ஏன் செய்யணும் அப்படின்னா?? நீங்கள் பிறந்ததோ மேஷ ராசி ...கேது பகவான் நிற்பதோ செவ்வாயின் வீட்டில்.. 

அடுத்து சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 2020 ஜனவரி 24 முதல் 
மகர ராசியில் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். இவர் தனித்து பத்தாமிடத்தில் ஆட்சி பலம் பெறும்போது வேலையை கெடுப்பார்.. வேலையில் பிரஷர். வேலைப்பளு. அலைச்சல் ,திருச்சல்களை இதுவரை சனிபகவான் தந்திருந்தாலும் கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதிக்கு பிறகு ,சரியான ஆங்கிலம் 20 .11. 2020-க்கு பிறகு வேலையில் இருந்த தொல்லைகள் அகலும் .விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.. ஏனென்றால் குரு பகவான் சனியை புனிதப்படுத்தி சனியை நல்லவராக மாற்றுகிறார். அதுமட்டுமல்ல பத்தாமிடம் கேந்திர ஸ்தானமாக வரும். பத்தாமிடத்தில் பாவிகள் இருக்கலாம். மகர ராசி சர ராசியாக வரும். எனவே இங்கே  இருக்கும் சனி பகவான் மிக நல்ல பலன்களையே தருவார் என்பது உறுதி. பாவ கிரகங்கள் 3 ,6, 10, 11 போன்ற உபஜெய ஸ்தானங்களில் இருக்கும்போது ,சுப  கிரகங்கள் திரிகோணங்களில் இருந்தால் என்ன மாதிரியான நல்ல பலன்களை தருவார்களோ அந்த மாதிரியான நல்ல பலன்களை உபஜெய ஸ்தானங்களில் இருக்கக்கூடிய பாவ கிரகங்கள் நிச்சயம் தருவார்கள்..அதுமட்டுமல்லாமல் சனி பகவான் 11-ஆம் இடத்திற்கு ஆதிபத்தியம் பெற்று பத்தாம் இடத்தில் இருப்பது ஒரு உப ஜெய ஸ்தானத்துக்கு அதிபதி இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருப்பது யோகம் என்ற அளவில் சனியால் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும். எனவே இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி  இந்த மூன்று பெயர்ச்சிகளும் உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால் வரக்கூடிய 2021 மிகச்சிறந்த நல்ல ஆண்டாக முன்னேற்றமான ஆண்டாக அதிர்ஷ்டமான ஆண்டாக வெற்றி வாய்ப்புள்ள ஆண்டாக இருக்கப் போகின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை



.

Tuesday, 29 September 2020

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்


நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய் 

ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். 

பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. 

இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. 

ரொம்ப காய்ச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன்
இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. 

நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. 

நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.


நட்சத்திர ஸ்தலம்...

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...

அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்

மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.

பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை

மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.

கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.

ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.

மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்

மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.

திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்

மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.

புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி

மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.

பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை

மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.

ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்

மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.

மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு

மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.

பூரம் -  முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு

மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.

உத்திரம் -  முக்கிய ஸ்தலம் - கரவீரம்

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.

ஹஸ்தம் -  முக்கிய ஸ்தலம் - கோமல்

மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.

சித்திரை -  முக்கிய ஸ்தலம் - திருவையாறு

மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு. 

சுவாதி -  முக்கிய ஸ்தலம் -  திருவிடைமருதூர்

மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

விசாகம் -  முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்

மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.

அனுஷம் -  முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்

மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.

கேட்டை -  முக்கிய ஸ்தலம் - வழுவூர் 

மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.

மூலம் -  முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை 

மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.

பூராடம் -  முக்கிய ஸ்தலம் - கடுவெளி

மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

உத்திராடம் -  முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்

மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.  

திருவோணம் -  முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.

மற்ற தலங்கள் -  ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.

அவிட்டம் -  முக்கிய ஸ்தலம் -  திருபூந்துருத்தி

மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.

சதயம் -  முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்

மற்ற தலங்கள் - கடம்பனூர்,  கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.  

பூரட்டாதி -  முக்கிய ஸ்தலம் - திருக்குவளை

மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.

உத்திரட்டாதி -  முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.

மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

ரேவதி -  முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு

மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.


Monday, 28 September 2020

பச்சை வாழைப்பழம் தரும் நன்மைகள்

பச்சை வாழைப்பழம் தரும் நன்மைகள்

வாழைப்பழங்களில், பச்சை வாழைப்பழம் பலவித நன்மைகளை வாரி வழங்குவதாக இருக்கிறது.

பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் ‘அல்சர்’ ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்துக்கு இருக்கிறது.

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இதைச் சாப்பிடலாம்.

இதய நோயாளிகளுக்கும் பச்சை வாழைப் பழம் நல்லது. சூடுபடுத்திய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இதை எடுத்துக்கொள்ளலாம்.

மஞ்சள் வாழைப்பழத்துடன் ஒப்பிடும்போது பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது.

எனவே இதயநோயாளிகள் இதைச் சாப்பிடலாம். ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்குப் பயனளிக்காது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் பி 6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல் புரிய உதவுகிறது. மேலும், ஹீமோகுளோபின் உருவாவதற்கு வைட்டமின் பி 6 அவசியமான ஒன்றாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த வைட்டமின் உதவுகிறது.

சீரான பற்களின் வளர்ச்சிக்கும் பச்சை வாழைப்பழம் அவசியம் சாப்பிட வேண்டியதாகும்.

துணையின் குணநலனை தீர்மானிக்க....

துணையின் குணநலனை தீர்மானிக்க....  
      
 இனி வரக்கூடிய பதவுகளில் சுக்கிரன் மற்றும் ஏழாம் அதிபதி இவர்களின் நட்சத்திர சார அடிப்படையில் வரக்கூடிய துணையின் குணநலன்கள்  எப்படி இருக்கும் என்பதை அறிவோம்.
நட்சத்திரங்களின் வரிசையில் முதல் நட்சத்திரமான கேதுவின் அஸ்வினியினில் சுக்கிரன் அல்லது ஏழாம் அதிபதி இருந்தால் அவர்களுக்கு வரக்கூடிய  துணையின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
அஸ்வினியின் 4 பாதங்களுமே செவ்வாயின் மேஷ வீட்டில் இருப்பதால் வரக்கூடிய துணை ஓரளவு ஆளுமை, நிர்வாகத் திறன் உடையவராகவும் இருப்பார்  தான் என்ற எண்ணம் முன்பின் யோசிக்காமல் செயல்படும் நிலை, அவசர புத்தி, விவாதங்களில் எவரிடமும் தோற்காத தன்மை போன்ற உணர்வுகளை பெற்றிருப்பார்.

கேது என்றாலே பற்றற்ற நிலையை குறிக்கும். கேதுவின் பொதுவான இயல்பு என்னவென்றால் எந்த ஒரு விஷயத்திலும் அதிக விருப்பத்தை ஏற்படுத்தி பின்பு அதே விஷயத்தில் ச்சீ, இவ்வளவு தானா?  இந்த பழம் புளிக்கும் என்ற விரக்தியான மனநிலையினை  ஏற்படுத்தி அதே விஷயத்தினை வெறுக்கவும் வைக்கும்.

எனவே சுக்கிரன் அல்லது ஏழாம் அதிபதி கேதுவின் நட்சத்திரமான அசுவினியில் நின்றால் நீங்கள் உங்கள் துணையிடம் அதிக விருப்பமும் இன்றி வெறுப்பும் இன்றி (Neutral mind) நடுநிலையாக செயல்படுவதே புத்திசாலித்தனம். முடிந்தவரை வரக்கூடிய துணையிடம் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லதாகும். ஏனெனில் யாராக இருந்தாலும் அவர்கள் விவாதத்தில் வெற்றி கொள்ளவே விரும்புவார்கள்.
விவாதங்கள் நீளும் பட்சத்தில் அது மண வாழ்வினில் கசப்புணர்வை ஏற்படுத்திவிடும்.

நீங்கள் விரும்பிச் செல்லும் போது உங்களிடம் பற்றற்ற நிலையையும், விலகிச் செல்லும்போது உங்களுடன் நெருக்கத்தையும் காட்டக்கூடிய துணையாக அவர் இருப்பார்.
அதன் காரணமாக அவரிடம் வெறுப்பான மனநிலை நீங்கள் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. 
 மாறாக எல்லா விஷயங்களிலும் அவரை அனுசரித்துச் செல்வதும் அவர்களின் நல்ல விஷயங்களுக்காக அவர்களை பாராட்டுவதும், அவர் ஏதேனும் தவறிழைத்தால் கூட  உடனடியாக கோபத்தைக் காட்டாமல் சிறிது நேரம் கழித்து நிதானமாக புரியவைப்பதுமே மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கைக்கான  வழிகளாகும்.

பரிகாரங்களை பொறுத்தவரை விநாயகர் வழிபாடு இந்த அமைப்பிற்கு வளம் தரக்கூடியதாகும்
சுய ஜாதகத்தில் கேதுவின் நிலை இன்னும் பல விஷயங்களைக் கொண்டு பலன்கள் மாறுபடலாம்.




தினமும் நடை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

தினமும் நடை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

நீங்கள் தொடர்ந்து நடை பயிற்சி செய்வதனால் கீழ்கண்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும்.

◆நீரிழிவு நோயைக் குறைக்கிறது
◆நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது
◆நுரையீரல் திறனை அதிகரிக்கிறது
◆மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
◆நடைபயிற்சி மனச்சோர்வைச் சமாளிக்க உதவுகிறது
◆உங்கள் இதயத்திற்கு ஆபத்தை குறைக்கிறது
◆உங்கள் தமனிகளை தெளிவாக வைத்திருக்கிறது
◆தசை மற்றும் மூட்டு வலிகளை எளிதாக்குகிறது
◆புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது
◆உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது
◆சோம்பேறித்தனதை முறிகிறது.
◆கருச்சிதைவு அபாயத்தை குறைக்கிறது
◆செரிமானத்தை மேம்படுத்துகிறது

நடக்க சிறந்த நேரம் எப்போது தெரியுமா?

நாளின் எந்த நேரத்திலும் சில உடற்பயிற்சிகளைப் பெறுவது நல்லது என்றாலும், சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் விதிமுறைகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த உதவும். 

நடைபயிற்சி என்று வரும்போது, ​​காலை சிறந்த நேரம். காற்றில் குறைவான மாசு உள்ளது, இது போதுமான அளவு ஆக்ஸிஜன் மற்றும் புதிய காற்றைப் பெற உங்களை அனுமதிக்கிறது. குளிர்ந்த மற்றும் புதிய காலை காற்று மேலும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் உணர உதவுகிறது.

காலை நடை பயணம் உங்கள் நாளுக்கு ஒரு அற்புதமான தொடக்கமாகும், நடை பயிற்சிக்கு செல்லும் போது ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்.

வைணவ சோதிடம்...

வைணவ சோதிடம்...

தலைப்பு ஒரு சாரரை குறிப்பது போல் இருந்தாலும், அவரவர் நம்பிக்கை பழக்கவழக்கங்கள் என்று உண்டு தானே அதனை மூலாதாரமாக வைத்தே இந்த பதிவு, சோதிடத்தில் சைவம், வைணவம், ஹிந்து, முஸ்லீம், கிருஸ்துவன் என்கிற ஜாதி, மதம் பாகுபாடு கிடையாது இதை நினைவில் கொள்க, ஆனாலும் வைணவர்கள் எனும் ஹரி பக்தர்கள் சோதிடத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை என் பார்வையில்...

வைணவர்கள் எனும் ஹரி பக்தர்களுக்கு ஆபத்பாந்தவன், அனாதை ரக்க்ஷகன், காப்பது, அழிப்பது, வழிநடத்துவது அனைத்தும் பெருமாளே, இதை ஹரி பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள், இவர்கள் சோதிடம் பார்த்தாலும் அதில் பெருமாளே முன்னிலை பெறுவார், சோதிடம் என்பது நவகிரகம் என்றும் அந்த நவகிரத்தை ஆளுவது ஈசன் என்பதும் நாம் அறிந்ததே, ஆனாலும் ஹரி பக்தர்கள் அனைத்திலும் ஸ்ரீமன் நாராயணனை காண்கிறார்கள் என்றால் மிகையாகாது, இது அவர்களின் பக்தி நெறி, ஏன் ஒருவித ஈடுபாடு என்றாலும் மிகையாகாது, இவர்களின் இந்த பக்திக்கு செவி சாய்த்தே பெருமாள் இதுவரை 9 அவதாரங்கள் எடுத்துளார் என்றாலும் பொருத்தமாகும், ஹரி பக்தர்கள் இவ்வாறு கண்மூடித்தனமாக பக்தியின் வழியே பெருமாளை நம்புவது ஒருவிதத்தில் பார்த்தால் சரியானதே ஏனெனில் காக்கும் தெய்வம் நாராயணன் தானே, ஹரி பக்தர்கள் நவகிரகங்களை ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களாக பார்க்கிறார்கள் அல்லவா அவை யாது என்பதை காண்போம் வாருங்கள்...

ஸ்ரீ ராமாவதாரம்: சூரிய குலத்தில் பிறந்த ரகு குல திலகம் ஸ்ரீ ராமன் கிரகங்களில் சூரியனை பிரதிபலிக்கிறார், ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் தாக்கம் இவரை வழிபடுவதால் எதிர்கொள்ளும் ஆற்றல் கிட்டும்...

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்: சந்திர குலத்தில் தோன்றி கோப்பிகை நந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் கிரகங்களில் சந்திரனை குறிக்கிறார், சந்திரனால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை தருகிறார் இவர்...

ஸ்ரீ நரசிம்மாவதாரம்: பக்தனின் துயர் நீக்க ஷனம் நேரத்தில் தன் உக்கிர ரூபத்தில் வெளிப்பட்டார் ஸ்ரீ நரசிம்மர் கிரகங்களில் இந்த அவதாரம் செவ்வாயை குறிக்கிறது, செவ்வாய் தாக்கம் அதிகம் உள்ளவர் வழிபட வேண்டிய கருணாமூர்த்தி, கோபத்திலும் கருணை கொண்ட அவதாரம், ஒன்பது அவதாரங்களில் பக்தனுக்காக அந்த ஹரியே விரும்பி ஏற்ற அவதாரம் ஸ்ரீ நரசிம்மாவதாரம் என்றால் மிகையாகாது, காக்கும் கடவுள் என்பதை மிக வலுவாக உணர்த்திய அவதாரம்...

வாமனாவதாரம்: குரு என்பவர் எவ்வாறு மமதை கொண்ட தன் மாணவனை சோதிப்பார், தண்டிப்பார் என்பதை உலகுக்கு உணர்த்திய அவதாரம் வாமனாவதாரம் கிரகங்களில் குருவை குறிக்கும், இதன் வழியே கருணாமூர்த்தி என்றாலும் தன் சிஷ்யன் தவறு செய்தால் அவனின் மமதையை அடக்க, தண்டிக்க தான் எப்போதும் தவறியதில்லை என்பதை உணர்த்துகிற அவதாரம் வாமனாவதாரம் என்றால் மிகையாகாது...

பரசுராமாவதாரம்: இளமையான வயதில் ஈசனின் பால் பக்தி கொண்டு, தந்தை சொல் தட்டாத பிள்ளை என்பதை நிரூபிக்க பெற்ற தாயை எதிர்த்து, இளமையில் பக்தியே சிறந்தது என்பதை நிரூபித்த அவதாரம் பரசுராமாவதாரம் கிரகங்களில் சுக்கிரனை குறிக்கிறது, எவ்வாறு சுக்கிரன் போககாரகர் ஆயிற்றே என்றால், ஆம் அந்த போகத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் பக்தியில் சிந்தனையை செலுத்தி வாழ்ந்துகாட்டினார் நாராயணன் என்றால் மிகையாகாது...

கூர்மாவதாரம்: காக்கும் கடவுளான விஷ்ணு தன்னை சார்ந்தவர்களின் நலனுக்காக செய்யும் காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதன் வழியே ராகு/கேது தோன்ற காரணமான அவதாரம் கூர்மாவதாரம் கிரகங்களில் சனியை குறிக்கும், வராகர் வடிவில் இருக்கும் நாராயணனை வேண்டினால் தன்னை சார்ந்தவர்களை காத்தது போல் தங்களையும் சனியிடம் இருந்து காத்து அமுதம் தந்து ரட்சிப்பார் என்பது ஹரி பக்தர்களின் நம்பிக்கை...

வராக அவதாரம்: பூமாதேவி எனும் பூமி தாய் அரக்கனிடம் சிக்குண்டபோது இந்த அவதாரம் தரித்து 1000 ஆண்டுகள் சண்டையிட்டு பூமியை காத்தார் ஸ்ரீமன் நாராயணன் கிரகங்களில் ராகுவை குறிக்கும் அவதாரம், எவ்வாறு அசுரனை வென்று பூமியை காத்தாரோ அவ்வாறே ராகு எனும் லௌகிக அசுரனை வெல்ல இவரை வழிபடுகிறார்கள் ஹரி பக்தர்கள்...

மச்ச அவதாரம்: உலகமே அழியும் போது வேதங்களையும், ரிஷிகளையும் காக்க பெருமாள் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம், தசாவதாரத்தில் முதல் அவதாரமாகும் கிரகங்களில் கேதுவை குறிக்கும், கேதுவால் ஏற்படும் மன சஞ்சலத்தை களைய இவரை வேண்டினால் தெளியலாம்...

பலராம அவதாரம்: ஸ்ரீ கிருஷ்ணரின் அண்ணனாக ஆதிஷேஷனின் அவதாரம் பலராம அவதாரம், இவரை வேண்டினால் குளிகனால் ஏற்படும் தாக்கம் விலகும்...

கல்கி அவதாரம்: தசாவதாரத்தில் நிகழவேண்டிய அவதாரம், தற்போது மாய எனும் ராகுவால் ஆட்கொள்ளப்பட்ட உயிரினத்தை புத்தி எனும் புதனால் தெளியவைக்க விஷ்ணு எடுக்கவிருக்கும் கடைசி அவதாரம் கல்கி அவதாரம் கிரகங்களில் புதனை குறிக்கும், இந்த அவதாரம் நிகழாததால் ஸ்ரீனிவாச பெருமாளை செவித்தால் புதனின் தாக்கத்தை எதிர்கொள்ளலாம்...

குறிப்பு: இங்கே குறிப்பிட்டுள்ள அவதாரங்கள் மற்றும் கிரகங்கள் ஒப்பீடு வரலாற்று நூல்களில் காணப்படும் கதைகளை மையமாக கொண்டதே, அதன் குணாதிசயங்கள் ஒற்றுபோவதால் கிரகங்களாக உருவகப்படுத்தி ஸ்ரீமன் நாராயணன் அவதரித்ததாக ஹரி பக்தர்களின் திடமான நம்பிக்கையே இந்த பதிவின் ஆணிவேர்.

ஓம் நமோ நாராயணாய..!

மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை



மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை

மகாபாரதம் பற்றிய சிறு குறிப்பு: நாம் அனைவரும் மகாபஹரதப் போர் பற்றி அறிந்து இருப்போம்.கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான வம்சப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு சமஸ்கிருத காவியம் ஆகும்.மேலும் பகவத்-கீதையின் உரை, ஏராளமான துணைப்பிரிவுகள் மற்றும் இறையியல், ஒழுக்கநெறிகள் ஆகியவை இதற்குள் அடங்கும்.

    

மகாபாரதம் பற்றிய சிறு குறிப்பு: நாம் அனைவரும் மகாபஹரதப் போர் பற்றி அறிந்து இருப்போம்.

கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான வம்சப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு சமஸ்கிருத காவியம் ஆகும்.

மேலும் பகவத்-கீதையின் உரை, ஏராளமான துணைப்பிரிவுகள் மற்றும் இறையியல், ஒழுக்கநெறிகள் ஆகியவை இதற்குள் அடங்கும்.


கடோர்கஜனின் மகன்

மகாபாரதத்தின் போர் இந்து புராணங்களின் மிக நீண்ட காவியமாக கருதப்படுகிறது. இந்த நினைவுச்சின்ன போரில் முக்கிய பங்களிப்பைக் கொண்ட ஏராளமான கதாபாத்திரங்கள் இக்காவியத்தில் உள்ளன.

கதையில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்த பல ஹீரோக்களும் இதில் உள்ளனர். அபரிமிதமான சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்ட அத்தகைய ஒரு போர்வீரன், விரும்பினால் குருக்ஷேத்திரத்தின் மிக நீண்ட போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க முடியும்.

மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்..

அவர்தான் பார்பரிகா அல்லது கதுஷ்யம்ஜி பாலியாதேவ் அல்லது ஷியாம் பீமாவின் பேரன் (பாண்டவ சகோதரர்களில் இரண்டாவது), மற்றும் கட்டோட்காச்சாவின் மகன்.

கட்டோட்காச்சா பீமா மற்றும் ஹிடிம்பியின் மகன். அவரது குழந்தை பருவத்திலேயே, பார்பரிகா மிகவும் தைரியமான போர்வீரனாக திகழ்ந்தார். அவர் தனது தாயிடமிருந்து போர் கலையை கற்றுக்கொண்டார்.

1 நிமிடத்தில் போர் முடியும்

மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்பு, கிருஷ்ணர் சில சிறந்த வீரர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அக்கேள்வி போர் முடிவடைய எவ்வளவு காலம் என்பதாகும்.

அதற்கு பீஷ்மர், போரை முடிக்க 20 நாட்கள் ஆகும் என்று பதிலளித்தார்.

இதேபோல், துரோணாச்சார்யா 25 நாட்களும், கர்ணன் 24 நாட்களும், அர்ஜுனன் 28 நாட்களும் என்று பதிலளித்தார்கள்.

ஆனால் போர்வீரர்களில் ஒருவரான பார்பரிகா, போரை முடிக்க தனக்கு 1 நிமிடம் மட்டுமே போதுமானது என்று கூறி அனைவரையும் ஆச்சரியபடுத்தினார் .

மகா விஷ்ணுவின் எந்த அவதாரத்திற்கு பின் தான் சரத சடங்குமுறை தோன்றியது தெரியுமா? - வாமன அவதாரமும் சடங்குகளும்
சிவபெருமானின் தீவிர பக்தன் பார்பரிகா

அவரின் பதிலில் வியப்படைந்த கிருஷ்ணர், அது எப்படி சாத்தியமாகும் என அவரிடமேயே மீண்டும் கேள்வி கேட்டார். அப்போது சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார்.

பார்பரிகா சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவார். கடுமையான தவத்தை மேற்கொண்டு சிவபெருமானிடம் இருந்து சக்திவாய்ந்த வரத்தையும் பெற்றார் .

அவ்வரம் என்ன வேனில் மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புககள் ஆகும். தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் முதல் அம்பு.

மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது, குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு, மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும்.

கிருஷ்ணர் ராதை தினமும் ராத்திரி இந்த வனத்தில் வந்து காதலிக்கிறார்களாம்... ஒளிந்திருந்து பார்த்தால் கண் குருடாகும்...
மூன்று அம்பு
தான் காப்பாற்ற நினைத்த அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும். அதன் பின் அவர் மூன்றாம் அம்பை பயன்படுத்தினால், குறியிடாத அனைத்தையும் அழிக்கும்.

புரியும் படியாக சொல்ல வேண்டுமானால், அழிக்க வேண்டிய அனைத்தும் முதல் அம்பை வைத்து குறிக்கலாம்; மூன்றாம் அம்பை வைத்து அவைகள் அனைத்தையும் ஒரே அம்பில் அழித்து விடலாம்.

இதனால் பார்பரிக்காவை 'தீன் பாந்தரி' அல்லது மூன்று அம்புகளை கொண்டவன் என்றும் அழைத்தனர்.

கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில் உள்ள முக்கிய நிகழ்வு... அது என்ன தெரியுமா?
பார்பரிகாவின் சக்தி
பார்பரிகாவின் இந்த சக்தியை அறிந்த கிருஷ்ணர் தனது தந்திரத்தை காட்ட முடிவு செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு துறவியாக மாறுவேடமிட்டு காட்டில் உள்ள அனைத்து இலைகளையும் குறிப்பதன் மூலம் பார்பரிகாவிடம் தனது சக்தியைக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறார்.

கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள இலைகளை எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது, மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார்.

அனுமன் கண்ட இன்னொரு சீதை! - ராமனின் மிக உயர்ந்த குணம் என்ன தெரியுமா?
கிருஷ்ணரை நோக்கி வந்த அம்பு
இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது, அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க, அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது. இதை பார்த்து வியந்த கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார்.

உடனே அந்த இலையின் மீதும் குறி வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது.

பார்பரிகா ஒரு நிமிடத்திற்குள் போரை முடிக்க முடியும் என்று கூறியதை இப்போது கிருஷ்ணர் ஒத்துக்கொண்டார்.

கிருஷ்ணரின் 8 மனைவிகளும், 80 குழந்தைகள் குறித்த கதை தெரியுமா? - படித்தால் பிரமிப்பு ஏற்படும்!
உயிரை தியாகம் செய்த பார்பரிகா
குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக கிருஷ்ணர் பார்பரிகாவிடம் கேட்டார். அதற்கு கண்டிப்பாக பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். அதற்கு காரணம், அவர்களே கௌரவர்களை விட பலவீனமானவர்கள்.

ஆனால்,பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால், தானாகவே அவர்கள் அணி வலுவடையும் என கிருஷ்ணர் கூறினார். அதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும். அதனால் மனித இன பொது நலுனுக்காக தன் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் . அதற்கு காரணம் தான் இருக்கும் அணி மிகவும் சக்தி வாய்ந்த அணியாக மாறிவிடும். அதனால் அவரால் தன் சக்தியை பயன்படுத்தவே முடியாது.

உலகம் அழிவை நோக்கி செல்கிறதா? - கல்கி அவதாரம் குறித்து கூறப்பட்டுள்ள குறிப்புகள்
கிருஷ்ணரின் ஆசை
அதனால் போர் நடக்கையில், இரண்டு அணிக்கும் மாறி மாறி போய் கொண்டிருக்க வேண்டி வரும். இதனால் இரண்டு அணியின் படைகளும் அழிந்து விடும். கடைசியில் அவர் ஒருவர் மட்டுமே மிஞ்சியிருப்பார். தான் ஒருவர் மட்டுமே போரில் உயிருடன் இருப்பதால், எந்த ஒரு அணிக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை. அதனால் போரில் அவர் பங்கு பெற வேண்டாம் என கிருஷணர் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணரின் ஆசையை ஏற்றுக் கொண்ட பார்பரிக்க தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு, கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை பெற்றார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை கிருஷ்ணரும் அவருக்கு அளித்தார் . அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று போட்டார் பீமன். அதனால் மகாபராத போர் முழுவதையும் பார்பரிகாவால் காண முடிந்தது.

அர்ஜுனன், அனுமனுக்கு இடையே நடந்த விபரீத போட்டி ... யார் வெற்றி பெற்றார் தெரியுமா?
மகாபாரத போர் வெற்றிக்கு காரணமானவர்
யுத்தம் முடிவடைந்த பின்னர், வெற்றி பெற்ற பாண்டவர்கள் மகாபாரதப் போரின் வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று வாதிட்டனர். அதற்கு அமைதியான சாட்சியாக இருந்த பார்பரிகாவிடம் கேட்கும்படி கிருஷ்ணர் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதற்கு பார்பரிகா கிருஷ்ணரின் சாதுரியம் மற்றும் ஆலோசனையும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பதிலளித்தார், ஏனெனில் கிருஷ்ணர் விளையாடுவதை அவரால் மட்டுமே காண முடிந்தது.

பார்பரிகாவின் தலை கிருஷ்ணரால் ரூபாவதி என்ற ஆற்றில் மூழ்கி ஏராளமான ஆசீர்வாதங்களை பெற்றது. கலியுகம் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு, பார்பரிகாவின் தலை இன்றைய ராஜஸ்தானில், சிகார் மாவட்டம், காட்டு கிராமத்தில் புதைக்கப்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தர்மம் தலை காக்கும், ஆனால் அது தலைக்கனம் ஆகக்கூடாது... பாடமெடுத்த கிருஷ்ணர்!
பார்பரிகாவின் கோயில்
காட்டுவின் மன்னரான ரூப்ஸிங் சவுகான், பார்பரிகாவின் தலைக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்று கனவு கண்டார், எனவே அவர் ஒரு கோவிலைக் கட்டி, பார்பரிகாவின் தலையை அங்கே வைத்தார்.

ராஜஸ்தானில் பார்பரிக்காவை காட்டு ஷ்யாம் ஜி-யாக வணங்குகின்றனர்.

விஷ்ணுவின் பத்து அவதாரத்துக்குள் அடங்கும் மனிதன் பிறப்பு, இறப்புக்கான தத்துவங்கள்
கடவுளின் மீது வைத்த நம்பிக்கையினாலும், தன் உயிரையே தியாகம் செய்ததாலும், கிருஷ்ணரின் பெயரை (ஷ்யாம்) அவருக்கு வைத்துள்ளனர். தூய்மையான உள்ளத்தோடு பார்பரிகாவின் பெயரை உச்சரித்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என கிருஷ்ணர் கூறியுள்ளார்.

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?... இதோட உண்மை அர்த்தம் தெரியுமா?
நேபாளத்தில், கிங் யலாம்பர் பார்பரிகாவாக சித்தரிக்கப்படுகிறார். யாலம்பர் நேபாளத்தின் கிராத் வம்சத்தின் முதல் மன்னராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை



மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை

மகாபாரதம் பற்றிய சிறு குறிப்பு: நாம் அனைவரும் மகாபஹரதப் போர் பற்றி அறிந்து இருப்போம்.கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான வம்சப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு சமஸ்கிருத காவியம் ஆகும்.மேலும் பகவத்-கீதையின் உரை, ஏராளமான துணைப்பிரிவுகள் மற்றும் இறையியல், ஒழுக்கநெறிகள் ஆகியவை இதற்குள் அடங்கும்.

    

மகாபாரதம் பற்றிய சிறு குறிப்பு: நாம் அனைவரும் மகாபஹரதப் போர் பற்றி அறிந்து இருப்போம்.

கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான வம்சப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு சமஸ்கிருத காவியம் ஆகும்.

மேலும் பகவத்-கீதையின் உரை, ஏராளமான துணைப்பிரிவுகள் மற்றும் இறையியல், ஒழுக்கநெறிகள் ஆகியவை இதற்குள் அடங்கும்.


கடோர்கஜனின் மகன்

மகாபாரதத்தின் போர் இந்து புராணங்களின் மிக நீண்ட காவியமாக கருதப்படுகிறது. இந்த நினைவுச்சின்ன போரில் முக்கிய பங்களிப்பைக் கொண்ட ஏராளமான கதாபாத்திரங்கள் இக்காவியத்தில் உள்ளன.

கதையில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்த பல ஹீரோக்களும் இதில் உள்ளனர். அபரிமிதமான சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்ட அத்தகைய ஒரு போர்வீரன், விரும்பினால் குருக்ஷேத்திரத்தின் மிக நீண்ட போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க முடியும்.

மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்..

அவர்தான் பார்பரிகா அல்லது கதுஷ்யம்ஜி பாலியாதேவ் அல்லது ஷியாம் பீமாவின் பேரன் (பாண்டவ சகோதரர்களில் இரண்டாவது), மற்றும் கட்டோட்காச்சாவின் மகன்.

கட்டோட்காச்சா பீமா மற்றும் ஹிடிம்பியின் மகன். அவரது குழந்தை பருவத்திலேயே, பார்பரிகா மிகவும் தைரியமான போர்வீரனாக திகழ்ந்தார். அவர் தனது தாயிடமிருந்து போர் கலையை கற்றுக்கொண்டார்.

1 நிமிடத்தில் போர் முடியும்

மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்பு, கிருஷ்ணர் சில சிறந்த வீரர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அக்கேள்வி போர் முடிவடைய எவ்வளவு காலம் என்பதாகும்.

அதற்கு பீஷ்மர், போரை முடிக்க 20 நாட்கள் ஆகும் என்று பதிலளித்தார்.

இதேபோல், துரோணாச்சார்யா 25 நாட்களும், கர்ணன் 24 நாட்களும், அர்ஜுனன் 28 நாட்களும் என்று பதிலளித்தார்கள்.

ஆனால் போர்வீரர்களில் ஒருவரான பார்பரிகா, போரை முடிக்க தனக்கு 1 நிமிடம் மட்டுமே போதுமானது என்று கூறி அனைவரையும் ஆச்சரியபடுத்தினார் .

மகா விஷ்ணுவின் எந்த அவதாரத்திற்கு பின் தான் சரத சடங்குமுறை தோன்றியது தெரியுமா? - வாமன அவதாரமும் சடங்குகளும்
சிவபெருமானின் தீவிர பக்தன் பார்பரிகா

அவரின் பதிலில் வியப்படைந்த கிருஷ்ணர், அது எப்படி சாத்தியமாகும் என அவரிடமேயே மீண்டும் கேள்வி கேட்டார். அப்போது சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார்.

பார்பரிகா சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவார். கடுமையான தவத்தை மேற்கொண்டு சிவபெருமானிடம் இருந்து சக்திவாய்ந்த வரத்தையும் பெற்றார் .

அவ்வரம் என்ன வேனில் மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புககள் ஆகும். தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் முதல் அம்பு.

மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது, குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு, மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும்.

கிருஷ்ணர் ராதை தினமும் ராத்திரி இந்த வனத்தில் வந்து காதலிக்கிறார்களாம்... ஒளிந்திருந்து பார்த்தால் கண் குருடாகும்...
மூன்று அம்பு
தான் காப்பாற்ற நினைத்த அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும். அதன் பின் அவர் மூன்றாம் அம்பை பயன்படுத்தினால், குறியிடாத அனைத்தையும் அழிக்கும்.

புரியும் படியாக சொல்ல வேண்டுமானால், அழிக்க வேண்டிய அனைத்தும் முதல் அம்பை வைத்து குறிக்கலாம்; மூன்றாம் அம்பை வைத்து அவைகள் அனைத்தையும் ஒரே அம்பில் அழித்து விடலாம்.

இதனால் பார்பரிக்காவை 'தீன் பாந்தரி' அல்லது மூன்று அம்புகளை கொண்டவன் என்றும் அழைத்தனர்.

கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில் உள்ள முக்கிய நிகழ்வு... அது என்ன தெரியுமா?
பார்பரிகாவின் சக்தி
பார்பரிகாவின் இந்த சக்தியை அறிந்த கிருஷ்ணர் தனது தந்திரத்தை காட்ட முடிவு செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு துறவியாக மாறுவேடமிட்டு காட்டில் உள்ள அனைத்து இலைகளையும் குறிப்பதன் மூலம் பார்பரிகாவிடம் தனது சக்தியைக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறார்.

கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள இலைகளை எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது, மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார்.

அனுமன் கண்ட இன்னொரு சீதை! - ராமனின் மிக உயர்ந்த குணம் என்ன தெரியுமா?
கிருஷ்ணரை நோக்கி வந்த அம்பு
இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது, அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க, அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது. இதை பார்த்து வியந்த கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார்.

உடனே அந்த இலையின் மீதும் குறி வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது.

பார்பரிகா ஒரு நிமிடத்திற்குள் போரை முடிக்க முடியும் என்று கூறியதை இப்போது கிருஷ்ணர் ஒத்துக்கொண்டார்.

கிருஷ்ணரின் 8 மனைவிகளும், 80 குழந்தைகள் குறித்த கதை தெரியுமா? - படித்தால் பிரமிப்பு ஏற்படும்!
உயிரை தியாகம் செய்த பார்பரிகா
குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக கிருஷ்ணர் பார்பரிகாவிடம் கேட்டார். அதற்கு கண்டிப்பாக பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். அதற்கு காரணம், அவர்களே கௌரவர்களை விட பலவீனமானவர்கள்.

ஆனால்,பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால், தானாகவே அவர்கள் அணி வலுவடையும் என கிருஷ்ணர் கூறினார். அதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும். அதனால் மனித இன பொது நலுனுக்காக தன் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் . அதற்கு காரணம் தான் இருக்கும் அணி மிகவும் சக்தி வாய்ந்த அணியாக மாறிவிடும். அதனால் அவரால் தன் சக்தியை பயன்படுத்தவே முடியாது.

உலகம் அழிவை நோக்கி செல்கிறதா? - கல்கி அவதாரம் குறித்து கூறப்பட்டுள்ள குறிப்புகள்
கிருஷ்ணரின் ஆசை
அதனால் போர் நடக்கையில், இரண்டு அணிக்கும் மாறி மாறி போய் கொண்டிருக்க வேண்டி வரும். இதனால் இரண்டு அணியின் படைகளும் அழிந்து விடும். கடைசியில் அவர் ஒருவர் மட்டுமே மிஞ்சியிருப்பார். தான் ஒருவர் மட்டுமே போரில் உயிருடன் இருப்பதால், எந்த ஒரு அணிக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை. அதனால் போரில் அவர் பங்கு பெற வேண்டாம் என கிருஷணர் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணரின் ஆசையை ஏற்றுக் கொண்ட பார்பரிக்க தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு, கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை பெற்றார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை கிருஷ்ணரும் அவருக்கு அளித்தார் . அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று போட்டார் பீமன். அதனால் மகாபராத போர் முழுவதையும் பார்பரிகாவால் காண முடிந்தது.

அர்ஜுனன், அனுமனுக்கு இடையே நடந்த விபரீத போட்டி ... யார் வெற்றி பெற்றார் தெரியுமா?
மகாபாரத போர் வெற்றிக்கு காரணமானவர்
யுத்தம் முடிவடைந்த பின்னர், வெற்றி பெற்ற பாண்டவர்கள் மகாபாரதப் போரின் வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று வாதிட்டனர். அதற்கு அமைதியான சாட்சியாக இருந்த பார்பரிகாவிடம் கேட்கும்படி கிருஷ்ணர் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதற்கு பார்பரிகா கிருஷ்ணரின் சாதுரியம் மற்றும் ஆலோசனையும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பதிலளித்தார், ஏனெனில் கிருஷ்ணர் விளையாடுவதை அவரால் மட்டுமே காண முடிந்தது.

பார்பரிகாவின் தலை கிருஷ்ணரால் ரூபாவதி என்ற ஆற்றில் மூழ்கி ஏராளமான ஆசீர்வாதங்களை பெற்றது. கலியுகம் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு, பார்பரிகாவின் தலை இன்றைய ராஜஸ்தானில், சிகார் மாவட்டம், காட்டு கிராமத்தில் புதைக்கப்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தர்மம் தலை காக்கும், ஆனால் அது தலைக்கனம் ஆகக்கூடாது... பாடமெடுத்த கிருஷ்ணர்!
பார்பரிகாவின் கோயில்
காட்டுவின் மன்னரான ரூப்ஸிங் சவுகான், பார்பரிகாவின் தலைக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்று கனவு கண்டார், எனவே அவர் ஒரு கோவிலைக் கட்டி, பார்பரிகாவின் தலையை அங்கே வைத்தார்.

ராஜஸ்தானில் பார்பரிக்காவை காட்டு ஷ்யாம் ஜி-யாக வணங்குகின்றனர்.

விஷ்ணுவின் பத்து அவதாரத்துக்குள் அடங்கும் மனிதன் பிறப்பு, இறப்புக்கான தத்துவங்கள்
கடவுளின் மீது வைத்த நம்பிக்கையினாலும், தன் உயிரையே தியாகம் செய்ததாலும், கிருஷ்ணரின் பெயரை (ஷ்யாம்) அவருக்கு வைத்துள்ளனர். தூய்மையான உள்ளத்தோடு பார்பரிகாவின் பெயரை உச்சரித்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என கிருஷ்ணர் கூறியுள்ளார்.

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?... இதோட உண்மை அர்த்தம் தெரியுமா?
நேபாளத்தில், கிங் யலாம்பர் பார்பரிகாவாக சித்தரிக்கப்படுகிறார். யாலம்பர் நேபாளத்தின் கிராத் வம்சத்தின் முதல் மன்னராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ராகு யோக காரகன்__ கேதுஞான மோட்ச காரகன்

ராகு யோக காரகன்__

கேதுஞான மோட்ச காரகன்

ராகு --விஞ்ஞான காரகன்

கேது__மெய்ஞான காரகன்

ராகு __விருப்பம்

கேது __வெறுப்பு

ராகு__சுயநலம்
கேது_பிறர் நலம்

ராகு__தந்திரம்
கேது__மந்திரம்

ராகு__சிற்றின்பம்
கேது__பேரின்பம்

ராகு_வீடு
கேது_காடு

ராகு_உடை
கேது_சடை

ராகு__இல்லறம்

கேது__துறவறம்

ராகு_சிறைவாசம்
கேது_வனவாசம்

ரா__நாத்திகன்
கே~ஆஸ்திகன்

ராகு~நித்திரை
கேது
முத்திரை

ராகு__ஒற்றுமை
கேது
__தனிமைப்படல்

ராகு_பூனை
கேது_நாய்

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். 

வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். 

இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். 

இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். 

குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம்.

உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. 

ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும்.

இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. 

வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. 

உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். 

இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். 

ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். 

சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். 

பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம். 

சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும். 

பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.

யோனிப்பகை உள்ளவர்களை இணைத்து வைத்தால் என்ன ஆகும்??

யோனிப்பகை உள்ளவர்களை இணைத்து வைத்தால் என்ன ஆகும்??யோனிப்பகை உள்ளவர்களை இணைத்து வைத்தால் என்ன ஆகும்??

பொதுவாக பத்துப் பொருத்தங்களை காட்டிலும் ஜாதக அனுகூல பொருத்தம் பார்ப்பதே சாலச்சிறந்தது.. முற்றிலுமாக பத்து பொருத்தத்தை புறம் தள்ளிவிடலாகாது.எமது மானசீக குருநாதரான ஆத்தூர் மு.மாதேஸ்வரன் ஐயா அவர்கள் பத்து பொருத்தங்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து  புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்..

எனது தகப்பனாரும் ,ஜோதிடருமான எனது தந்தையார் ஸ்திரீ ராசிக்கு புருஷன் ராசி எட்டாவது ராசியாக வந்தால் அந்த ஜாதகங்களை இணைத்து வைக்க மாட்டார்.. வேண்டவே வேண்டாம் என்று தூக்கி போட்டு விடுவார்.. எங்கள் உறவினர் ஒருவர்  தனது பெண்ணுக்கு  மாப்பிள்ளை பையன் பைனான்ஸ் பண்றார், நகரில் பஸ் ஸ்டான்டுக்கு அருகில் ஹோட்டல் ,  பங்களா மாதிரி வீடு , நல்ல வசதியான வாழ்க்கை என்று கடக ராசி பெண்ணை , கும்ப ராசி பையனுக்கு கட்டிவைக்க ,பெண் மூன்றே மாதத்தில்  மாப்பிள்ளை பையனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு என்று வாழாவெட்டியாக பிறந்த வீடு வந்து சேர்ந்தது ஒரு தனிக்கதை..

பஞ்சாங்கங்கள் இராசி பொருத்தத்தில் ஸ்திரீ ராசிக்கு புருஷன் ராசி எட்டாவது ராசியாக வந்தால் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும்.. இந்த எட்டாவது ராசி ஒன்றை ஒன்று விலக்கும்.. இதிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறது.. அதாவது அனுகூல ஷஷ்டாஷ்டமம், பிரதிஅனுகூல ஷஷ்டாஷ்டமம் என்று இரண்டு உள்ளதால் இவற்றை நன்கு ஆராய்ந்து இணைக்க வேண்டும்..

உதாரணமாக ரிஷப , துலாம் இரண்டும் ஒன்றுக்கொன்று ஷஷ்டாஷ்டமமாக வரும்.. ஆனாலும் இரண்டுக்கும் சுக்கிரனே ராசியாதிபதியாக வருவதால் விதிவிலக்கு பெற்று விடுகிறது.. அதேபோல யோனிப் பகை இல்வாழ்க்கையில் பிரச்னையை ஏற்படுத்துவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்..

ஜாதக அனுகூல பொருத்தத்தோடு இந்த மாதிரி யோனிப்பகையையும் நாம் சேர்த்தே கவனிக்க வேண்டியுள்ளது.. பிறப்பு ஜாதகத்தில் ஐந்தாமிடம்,குரு பகவான் கெட்டு போய் உள்ளவர்களுக்கு யோனிப் பகை உள்ளவர்களோடு திருமணம் நடப்பதை நாம் அனுபவத்தில் காணலாம்..

யோனிப் பகை உள்ளவர்களுக்கு , ராசி பொருத்தம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டாமல் போகிறது..நமது முன்னோர்கள் மற்றும் ஞானிகள் இந்த யோனிப் பொருத்தம் மற்றும் ராசிப்பொருத்தம் இல்லாவிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டாது என்று உறுதியாக சொல்லும் போது ஜாதக அனுகூல பொருத்தத்தோடு இதையும் சேர்த்து கவனிக்க வேண்டியது அவசியம் என்று உணர்த்துகிறது..

அஸ்வினிக்கும், சதயத்திற்கும் ஸ்வாதியும்,அஸ்தமும் யோனிப்பகையாக வரும்.. அதாவது அஸ்வினி _ ஆண் குதிரை
சதயம் __பெண் குதிரை ,,

ஸ்வாதி_ஆண்எருமை,
ஹஸ்தம் __பெண் எருமை

குதிரைக்கு எருமையும், பசுவும் பகை என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

அதேபோல பரணிக்கும், ரேவதிக்கும்   ஆண்யானை மற்றும் பெண் யானை யோனியாக  வரும்..
இந்த நட்சத்திரங்களுக்கு பூரட்டாதி மற்றும் அவிட்டத்திற்கு யோனிப் பொருத்தம் இல்லை.. ஏன் இல்லை என்றால் இவையிரண்டுக்கும் யோனி சிங்கமாக வரும் என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை.. யானைக்கும் ,சிங்கத்திற்கும்  பகை  என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

அதேபோல கார்த்திகை மற்றும் பூசம் இரண்டுக்கும் திருவோணம்,, பூராடம் இரண்டும் யோனிப் பகையாக வரும்.. ஏனென்றால் கார்த்திகை __பெண்ஆடு,, பூசம்__ ஆண்ஆடு 

திருவோணம்__பெண்குரங்கு
பூராடம்__ஆண்குரங்கு 
ஆட்டுக்கும்,குரங்குக்கும் பகை என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

ரோகிணி, மற்றும் மிருகசீரிஷம் இரண்டுக்கும் மகமும்,பூரமும் யோனிப் பகையாக வரும்.. ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் இரண்டுக்கும் ஆண்நாகம்,பெண்சாரை யோனியாக வரும் போது மகம், பூரம் இரண்டும் ஆண்எலி,பெண்எலி யோனியாக வந்து யோனிப் பகையை பெற்று விடுகிறது..

திருவாதிரைக்கு , மூலத்திற்கு அனுஷமும், கேட்டையும் யோனிப்பகையாக வரும்..

புனர்பூசத்திற்கும்,ஆயில்யத்திற்கும் ____மகம், பூரம் இரண்டும் யோனிப் பகையாக வரும்..

முடிவாக ஜாதகத்தில்  ஒருவருக்கு ஐந்தாமிடம் கெட்டு போய் இருந்து , யோனிப் பகை மற்றும் ராசிப்பொருத்தம் அமையாத போது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை..
இன்னும் சிலருக்கு கணவன் மனைவிக்கும் அன்னியோன்யம் இருப்பது இல்லை.. ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்பு வருவது இல்லை.. ஏற்கனவே சொன்னது போல சந்தான பாக்கியத்திற்கு கேடு விளைவிப்பது, ஊறு விளைவிப்பது இந்த யோனிப் பகை ஆகும்.. யோனிப் பகை இருந்தால் திருமணம் செய்ய கூடாது என்பதே ஆராய்ச்சியின் முடிவுஆகும்..


யோனிப்பகை உள்ளவர்களை இணைத்து வைத்தால் என்ன ஆகும்??

யோனிப்பகை உள்ளவர்களை இணைத்து வைத்தால் என்ன ஆகும்??

பொதுவாக பத்துப் பொருத்தங்களை காட்டிலும் ஜாதக அனுகூல பொருத்தம் பார்ப்பதே சாலச்சிறந்தது.. முற்றிலுமாக பத்து பொருத்தத்தை புறம் தள்ளிவிடலாகாது.எமது மானசீக குருநாதரான ஆத்தூர் மு.மாதேஸ்வரன் ஐயா அவர்கள் பத்து பொருத்தங்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து  புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்..

எனது தகப்பனாரும் ,ஜோதிடருமான எனது தந்தையார் ஸ்திரீ ராசிக்கு புருஷன் ராசி எட்டாவது ராசியாக வந்தால் அந்த ஜாதகங்களை இணைத்து வைக்க மாட்டார்.. வேண்டவே வேண்டாம் என்று தூக்கி போட்டு விடுவார்.. எங்கள் உறவினர் ஒருவர்  தனது பெண்ணுக்கு  மாப்பிள்ளை பையன் பைனான்ஸ் பண்றார், நகரில் பஸ் ஸ்டான்டுக்கு அருகில் ஹோட்டல் ,  பங்களா மாதிரி வீடு , நல்ல வசதியான வாழ்க்கை என்று கடக ராசி பெண்ணை , கும்ப ராசி பையனுக்கு கட்டிவைக்க ,பெண் மூன்றே மாதத்தில்  மாப்பிள்ளை பையனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு என்று வாழாவெட்டியாக பிறந்த வீடு வந்து சேர்ந்தது ஒரு தனிக்கதை..

பஞ்சாங்கங்கள் இராசி பொருத்தத்தில் ஸ்திரீ ராசிக்கு புருஷன் ராசி எட்டாவது ராசியாக வந்தால் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும்.. இந்த எட்டாவது ராசி ஒன்றை ஒன்று விலக்கும்.. இதிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறது.. அதாவது அனுகூல ஷஷ்டாஷ்டமம், பிரதிஅனுகூல ஷஷ்டாஷ்டமம் என்று இரண்டு உள்ளதால் இவற்றை நன்கு ஆராய்ந்து இணைக்க வேண்டும்..

உதாரணமாக ரிஷப , துலாம் இரண்டும் ஒன்றுக்கொன்று ஷஷ்டாஷ்டமமாக வரும்.. ஆனாலும் இரண்டுக்கும் சுக்கிரனே ராசியாதிபதியாக வருவதால் விதிவிலக்கு பெற்று விடுகிறது.. அதேபோல யோனிப் பகை இல்வாழ்க்கையில் பிரச்னையை ஏற்படுத்துவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்..

ஜாதக அனுகூல பொருத்தத்தோடு இந்த மாதிரி யோனிப்பகையையும் நாம் சேர்த்தே கவனிக்க வேண்டியுள்ளது.. பிறப்பு ஜாதகத்தில் ஐந்தாமிடம்,குரு பகவான் கெட்டு போய் உள்ளவர்களுக்கு யோனிப் பகை உள்ளவர்களோடு திருமணம் நடப்பதை நாம் அனுபவத்தில் காணலாம்..

யோனிப் பகை உள்ளவர்களுக்கு , ராசி பொருத்தம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டாமல் போகிறது..நமது முன்னோர்கள் மற்றும் ஞானிகள் இந்த யோனிப் பொருத்தம் மற்றும் ராசிப்பொருத்தம் இல்லாவிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டாது என்று உறுதியாக சொல்லும் போது ஜாதக அனுகூல பொருத்தத்தோடு இதையும் சேர்த்து கவனிக்க வேண்டியது அவசியம் என்று உணர்த்துகிறது..

அஸ்வினிக்கும், சதயத்திற்கும் ஸ்வாதியும்,அஸ்தமும் யோனிப்பகையாக வரும்.. அதாவது அஸ்வினி _ ஆண் குதிரை
சதயம் __பெண் குதிரை ,,

ஸ்வாதி_ஆண்எருமை,
ஹஸ்தம் __பெண் எருமை

குதிரைக்கு எருமையும், பசுவும் பகை என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

அதேபோல பரணிக்கும், ரேவதிக்கும்   ஆண்யானை மற்றும் பெண் யானை யோனியாக  வரும்..
இந்த நட்சத்திரங்களுக்கு பூரட்டாதி மற்றும் அவிட்டத்திற்கு யோனிப் பொருத்தம் இல்லை.. ஏன் இல்லை என்றால் இவையிரண்டுக்கும் யோனி சிங்கமாக வரும் என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை.. யானைக்கும் ,சிங்கத்திற்கும்  பகை  என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

அதேபோல கார்த்திகை மற்றும் பூசம் இரண்டுக்கும் திருவோணம்,, பூராடம் இரண்டும் யோனிப் பகையாக வரும்.. ஏனென்றால் கார்த்திகை __பெண்ஆடு,, பூசம்__ ஆண்ஆடு 

திருவோணம்__பெண்குரங்கு
பூராடம்__ஆண்குரங்கு 
ஆட்டுக்கும்,குரங்குக்கும் பகை என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

ரோகிணி, மற்றும் மிருகசீரிஷம் இரண்டுக்கும் மகமும்,பூரமும் யோனிப் பகையாக வரும்.. ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் இரண்டுக்கும் ஆண்நாகம்,பெண்சாரை யோனியாக வரும் போது மகம், பூரம் இரண்டும் ஆண்எலி,பெண்எலி யோனியாக வந்து யோனிப் பகையை பெற்று விடுகிறது..

திருவாதிரைக்கு , மூலத்திற்கு அனுஷமும், கேட்டையும் யோனிப்பகையாக வரும்..

புனர்பூசத்திற்கும்,ஆயில்யத்திற்கும் ____மகம், பூரம் இரண்டும் யோனிப் பகையாக வரும்..

முடிவாக ஜாதகத்தில்  ஒருவருக்கு ஐந்தாமிடம் கெட்டு போய் இருந்து , யோனிப் பகை மற்றும் ராசிப்பொருத்தம் அமையாத போது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை..
இன்னும் சிலருக்கு கணவன் மனைவிக்கும் அன்னியோன்யம் இருப்பது இல்லை.. ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்பு வருவது இல்லை.. ஏற்கனவே சொன்னது போல சந்தான பாக்கியத்திற்கு கேடு விளைவிப்பது, ஊறு விளைவிப்பது இந்த யோனிப் பகை ஆகும்.. யோனிப் பகை இருந்தால் திருமணம் செய்ய கூடாது .


Sunday, 27 September 2020

மகர ராசியின் அற்புத குணங்களும் அவர்களை காதலிக்க 7 காரணங்கள்

மகர ராசியின் அற்புத குணங்களும் அவர்களை காதலிக்க 7 காரணங்கள்

ராசிகளிலேயே அதிக புகழ் வெளிச்சம் இல்லாதவர்கள் பகட்டு இல்லாதது மகர ராசி தான். ஆட்டுத்தலையும் மீன் போன்ற உடலமைப்பும் கொண்ட மகரம் காதலுக்கு பெயர் போனவர்கள் அல்ல. ஆனால் மகரம் ஒரு நில ராசி, இவர்கள் இதர நில ராசிகளான ரிஷபம் மற்றும் கன்னியுடன் பொருந்திப் போவார்கள். இவர்களைப் போன்ற சூழலுக்கேற்ப பொருந்திப் போகக்கூடிய, சகிப்புத்தன்மை நிறைந்த மனிதர்களை வேறெங்கும் பார்க்க முடியாது.

    

ராசிகளிலேயே அதிக புகழ் வெளிச்சம் இல்லாதவர்கள் பகட்டு இல்லாதது மகர ராசி தான். ஆட்டுத்தலையும் மீன் போன்ற உடலமைப்பும் கொண்ட மகரம் காதலுக்கு பெயர் போனவர்கள் அல்ல. ஆனால் மகரம் ஒரு நில ராசி, இவர்கள் இதர நில ராசிகளான ரிஷபம் மற்றும் கன்னியுடன் பொருந்திப் போவார்கள். இவர்களைப் போன்ற சூழலுக்கேற்ப பொருந்திப் போகக்கூடிய, சகிப்புத்தன்மை நிறைந்த மனிதர்களை வேறெங்கும் பார்க்க முடியாது.

அர்ப்பணித்து கொள்ளக் கூடியவர்கள்

மகரம் ஒரு உறவுக்காக அதிக அளவில் தன்னை அர்ப்பணித்து கொள்ளக் கூடிய ராசியா? பதில் ஆம், என்று எதிரொலிக்கும். உறுதியாக தெரியாத போது கூட அவர்கள் உணர்ச்சிகளை பயங்கரமாக வெளிப்படுத்தக்கூடியவர்கள், என்றாலும் ஒருவரிடம் காதலிக்க அனுமதி கிடைத்துவிட்டால் மகரத்தை போல தங்கள் அன்பை தைரியமாக வெளிப்படுத்தக் கூடியவர்கள் வேறொருவர் இருக்க முடியாது.

மகர ராசிக்காரர்களின் மிக ஆழமான, உண்மையான அன்பைப் பெறும் இடத்தில் நீங்கள் இருந்தால், அவர்கள் தன் அன்பை உங்களிடம் ஆளுமையின்றி வெளிப்படுத்துவதை உணரும்போது உண்மையில் அவர்களை உங்களால் நேசிக்காமல் இருக்க முடியாது. மகர ராசிக்காரர்களைக் காதலிப்பது பரிபூரமான ஆசிர்வாதம் என்பதற்கான 7 காரணங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.




​மகர ராசிக்காரர்கள் சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள்

மகர ராசிக்காரர்கள் யாரிடமும் எதிர்த்து நிற்பதை வெறுக்கின்றனர். மகர ராசிக்காரர்கள் மற்றவர்கள் கோபப்படும் போது கூட சகிப்புத்தன்மையுடன் இருப்பார்கள். புரிதல் மிகுந்தவர்கள்.

மகரம் சூழலுக்கேற்ப மனநிலையை மாற்றிக் கொண்டு சூழலை உற்சாகமாக வைத்திருக்க முயல்பவர்கள். இருந்தாலும் அவர்களுடைய பொறுமையை நீங்கள் அளவுக்கு மீறி சோதித்தால் உங்களை விட்டு விலகவும் தயங்க மாட்டார்கள். மகர ராசிக்காரர்கள், அற்புதமானவர்கள், மென்மையானவர்கள், நாகரிகமானவர்கள். ஆனால் நேரம் வரும்போது தங்கள் உறுதியைக் காட்டுவார்கள்.




​மகர ராசிக்காரர்கள் எப்போதும் முன்கூட்டித் திட்டமிடுபவர்கள்

உங்களுக்கு A முதல் Z வரை எல்லாமே திட்டமிட்டு நடக்க வேண்டுமென்றால் மகரத்துடன் டேட்டிங் செய்யுங்கள். அவர்கள் மிகுந்த ஒழுக்கமானவர்கள், திட்டமிட்டது தோல்வியடைந்தால் என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

இவர்கள் கடின உழைப்பாளிகள், எனவே தாங்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடக்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதனால் தான் ஒரு விசேஷம் எனும் போது யாராலும் மகர ராசிக்காரர்களை தவிர்க்க முடியாது.

வக்ர நிலையிலிருந்து திரும்பும் சனி பகவான்: 5 ராசிகள் கவனம் தேவை


​மகர ராசிக்காரர்கள் அர்ப்பணிப்பு நிறைந்தவர்கள்

மகர ராசிக்காரர்கள் இரகசியமானவர்கள் அல்ல. அவர்கள் தன்னைச் சுற்றி சுவர் எழுப்பிக் கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. இருந்தாலும் அவர்கள் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மகர ராசிக்காரர்கள் யதார்த்தமானவர்கள், அவர்கள் எல்லோரைப் போலவே ஆழமாக நேசிப்பவர்கள், இருந்தாலும் ஒருவரிடம் தன் மாறாத அன்பை உடனடியாக தெரிவிக்க மாட்டார்கள்.

இருந்தாலும், காலப்போக்கில் மக ராசியினர் தங்கள் துணைக்கு அர்ப்பணிப்பானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர்களுடைய காதலுக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்று ஒருமுறை நினைத்துவிட்டால் அவர்கள் பின்வாங்க மாட்டார்கள், தங்கள் வாழ்நாள் முழுவதையும் உங்களை காதலிக்க அர்ப்பணித்து விடுவார்கள்.

இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்!
மகர ராசிக்காரர்கள் ஆதரவானவர்கள்

மகர ராசிக்காரர்களுக்கு தங்கள் குடும்பத்தை பாதுகாப்பதை விட வேறொன்றும் வேண்டாம். உங்களை தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து விட்டால், உங்களை பாதுகாப்பார்கள், உங்கள் கஷ்ட நஷ்டங்களில் எல்லாம் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மகர ராசிக்காரர்கள் நம்பகமானவர்கள், நிலையானவர்கள், மற்றும் சரிவிகிதத்தில் அன்பானவர்களும் கூட. எத்தனை வருடங்களானாலும் அவர்களுக்குள் இருக்கும் காதல் தீ அணைவதில்லை. அவர்கள் தன் முடிவில்லாத அன்பையும் ஆதரவையும் உங்கள் மீது காட்டுவார்கள்.

ஜோதிடத்தில் கோசாரம் - தசாபுத்தி என்றால் என்ன? அதை வைத்து பலன் சொல்வது எப்படி?

​மகர ராசிக்காரர்கள் இலட்சியவாதிகள்

மகர ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் தைரியமானவர்கள். அவர்களுடய ஆழ்மன விருப்பங்களை அடைய சத்தமில்லாமல் கடினமாக உழைப்பார்கள். மகரம் தங்களுடன் தன் குடும்பத்தையும் சேர்த்தே உயர்த்துவார்கள், ஏனென்றால் அவர்களுக்கு எப்பொழுதும் இலட்சியங்களும் கனவுகளும் அதிகம்.

அதே சமயம் அவர்கள் நேசிக்கும் மனிதர்களை தன் வருமானத்தால் காப்பாற்றவும் ஆதரவளிக்கவும் செய்கிறார்கள். உறவுகளுக்கு நிலைப்புத்தன்மையை பரிசளிக்கிறார்கள்.

மகர ராசியினரின் தொழில், செல்வம் உடல் நிலை எப்படி இருக்கும்?


​மகர ராசிக்காரர்கள் பொறுமையானவர்கள்

இன்றைய நாட்களில் அரிதாகிவிட்ட ஒரு பண்பு பொறுமை. ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பொறுமை உண்டு. அவர்கள் ஒன்று தேவை என்று முடிவு செய்து விட்டால் (அந்த ஒன்று நீங்களாக கூட இருக்கலாம்) தங்கள் இலட்சியத்தை அடைவதற்கு நீண்ட காலம் திட்டம் தீட்டுவார்கள்.

மகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?

மிகப் பொறுமையான நபர்களான இவர்கள், தங்களுக்கு தேவையானதை அடைவதற்கு மட்டுமல்ல, மற்றவர்களைப் புரிந்துக் கொள்வதிலும் அதே அளவு பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும் என்பதை புரிந்து வைத்திருக்கும் இவர்கள், எதையாவது அடைய மிக மிக அரிதாகவே அவசரம் காட்டுவார்கள். மகர ராசிக்காரர்கள் தன் உறவுகளிலும் பொறுமையை கடைப்பிடிப்பார்கள். கடினமான சூழலில் கூட உங்களுடன் துணை நின்று நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்.


​மகர ராசிக்காரர்கள் பகுத்தறிவாளர்கள்

மகர ராசிக்காரர்கள் புத்திசாலிகள். அவர்கள் எப்போதும் ஒரு கதையின் மறுபக்கத்தையும் கேட்டே முடிவெடுப்பார்கள். அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தாலும் பகுத்தறிவோடு சிந்தித்து ஒரு விஷயத்தைப் பற்றிய போதுமான தகவல்கள் கிடைத்த பிறகே அதற்கேற்ப செயல்படுவார்கள்.

தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?: பரிகாரம் செய்வதற்கு தெரிந்து கொள்ளவும்
நிலைப்புத்தன்மை ஆதரவு, தடையற்ற புரிதல், இதை விட ஒரு உறவில் வேறென்ன வேண்டும்? அவர்கள் அரிதாக உணர்ச்சிவசப்படுவார்கள். மாறாக அமைதியான மனநிலையில் தான் கடினமான முடிவுகளை எடுப்பார்கள். உங்களுக்கு துணைவரிடமிருந்து விசுவாசமும் அர்ப்பணிப்பும் வேண்டுமென்றால் மகர ராசிக்காரர்கள் அதை ஏராளமாக அள்ளி வழங்குவார்கள். அவர்களுடைய இந்த பண்புகள் திட்டமிடுதலில் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மகர ராசிக்காரர்கள் துணையாக வாய்க்கும் போது வீட்டை இல்லமாக்குகிறார்கள்.




புனர்ப்பு தோஷம் என்றால் என்ன ?

புனர்ப்பு தோஷம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் சனி சந்திரன் இணைவு அல்லது சேர்க்கை இதை புனர்ப்பு  தோஷம் என்கிறார்கள்.

சனியும் சந்திரனும் ஒரே இராசியில் இணைந்திருப்பது

சந்திரன் சனி இரு கிரகங்கள் நின்ற நட்சத்திர அதிபதி ஒருவராகி ஆட்சி உச்சம் பெற்று இருப்பது

சனி சந்திரன் பரிவர்த்தனை ஆவது சார பரிவர்த்தனை பெற்று இருப்பது

சனி சந்திரன் சமசப்தமமாக பார்த்துக் கொள்வது

சனி சந்திரன் ஒரே டிகிரியில் சேர்ந்திருப்பது

இவை அனைத்து தொடர்புகளையும் நாம் புனர்ப்பு தோஷம் என்கிறோம்.

இந்த தோஷத்தை கொண்ட ஜாதகர்களின் வாழ்க்கையில் கடுமையான தடை தாமதங்கள் ஏற்படுகின்றது.

 யாரிடமும் அடிமையாக வேலை செய்வதற்கு விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் சுய தொழில் செய்வதற்கு விரும்புவார்கள்

இவர்களுக்குத்தான் ஒரு திறமை இருக்கும் அந்த திறமை இவர்களுக்கு பயன்படாது மற்றவர்களுக்கு பயன்படும்

 மிகவும் குழப்பவாதிகள் ஆக இருக்கிறார்கள் முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

எப்போதும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் எதிர்மறை எண்ணங்கள் உடையவராகளும் இருக்கிறார்கள்.

இவர்களின் இணைவு சேர்க்கை எந்தெந்த பாவத்தில் இருக்கிறார்களோ அந்த பாவகத்தில் ஆதிபத்தியம் அத்தனையும் தடை தாமதம் ஏற்படுகிறது

உதாரணத்திற்கு ஐந்தாமிடத்தில் சனி சந்திரன் ஏழாம் இடத்தில் சனி சந்திரன் சேர்ந்து இருந்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படுகிறது திருமணமா வகையிலும் தடங்கல் ஏற்படுகிறது.

கடைசி நொடியில் கூட பல விஷயங்கள்  தடை ஏற்பட்டு முடிவு பெறாத சூழ்நிலையில் இந்த சனி சந்திரன் புனர்பு தோஷம் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.


டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைவர்கள்

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

Story of Bhagat Singh

பிறப்பு: ஏப்ரல் 14, 1891

இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா

பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்

இறப்பு: டிசம்பர் 6,  1956

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”

இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்

வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.

விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.

பெளத்த சமயம் மீது பற்று

தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.

அம்பேத்கரின் பொன்மொழிகள்

  • “ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
  • “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
  • “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
  • “சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
  • “வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”

இறப்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது

சனாதன தர்மம் சாஸ்திரம்..

ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று  நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது.

இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிது.

10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து  சாஸ்திரம் கூறுகிறது.

11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது.

13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது.

இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும்.

ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும்.

இவ்வாறு  12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும்.

இவ்வாறு  ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது.

உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு ஜீவன் பாவம்  செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது.

அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.

#எளிய_முறையில்
#சரணாகதி_விளக்கம்

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை

மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு

ஆனால்.....

*வண்டிக்காரன்*

உயிரில்லாத
வண்டியை....

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல
வேண்டும்...

என்பதை தீர்மானித்து,

வண்டியை
செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்
ஒன்றும் செய்ய
இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற
ஜட வண்டியை

ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

👉 *எவ்வளவு காலம்..

👉எவ்வளவு நேரம்..

👉எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது  இறைவனே*

இதுதான்

நமக்காக
இறைவன்
போட்டிருக்கும்
*டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு
தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*
*உணராதவனுக்கு*
*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே

Friday, 25 September 2020

இறந்தவர்களுக்கு சாமி கும்பிடும் முறை...

இறந்தவர் தாய் தந்தை என்றால் படம் வைத்து தினமும் ஊதுபத்தி மட்டும் ஏற்றி கும்பிட வேண்டும்... ஆனால் முதலில் சாமி படத்திற்கு விளக்கு ஏற்ற வேண்டும்... பிறகு பித்ரு படம்... தாத்தா படம் வீட்டில் இருந்து தந்தை வழிபட்டிருப்பார்... தாய் தந்தை இருவரும் இறந்த பின்பு, இருவர் படம் வைத்து விட்டு... நமக்கு நிறைய இறந்தவர் படம் இருப்பது போல் தோன்றினால் தாத்தாவின் படத்தை எடுத்து விடுவது நம் விருப்பம்...

தாய் சுமங்கலியாக இறந்தால், கண்டிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில், விளக்கேற்றி கும்பிட வேண்டும்... சாமி படத்திற்கு 6 மணிக்கு ஏற்றி 7 மணிக்கு குளிர வைத்த பின்பு இறந்தவர் படத்திற்கு ஏற்ற வேண்டும்... (ஒரே நேரத்தில் இரு (சாமி- பித்ரு) விளக்கும் ஏற்ற கூடாது)

இறந்தவர் ஆன்மா கிட்டத்தட்ட ஒரு 120-200 வருடத்திற்கு மறுபிறவி எடுக்காது.. ஆனால் தெவிசம் செய்யும் போது நம் தாத்தாவின் அப்பா, பாட்டன் பெயரையும் சொல்வோம்... ஒருவேளை அந்த பாட்டன், 200 வருடத்திற்குள் மறுபிறவி எடுத்து விட்டால்.. கொள்ளுப்பேரன் செய்யும் தர்ப்பணம் பலனை மறுபிறவி எடுத்த அவரிடம், பித்ரு அதிபதி சூரியன் சேர்ப்பார்... நமக்கேன் அந்த கவலை... அதனால் புண்ணியம் அடையப்போவது அந்த கொள்ளுப்பேரன்...

ஆகையால் இறந்தவுடன் பந்தம் அறுந்து விட்டது என்பது மிகப்பெரிய தவறு... திதி பார்த்து தெவிசம் செய்யவில்லை என்றால், அந்த ஆன்மாவின் பசி அடங்காது.... அந்த பாவத்தை இந்த ஆண் அடுத்த பிறவியில் சுமக்க வேண்டும்...

தினமும் ஒருவேளை ஊதுபத்தி ஏற்றி கும்பிடுவது, அமாவாசை அன்று முறையாக செய்வது, சுமங்கலி பித்ருவுக்கு வெள்ளிக்கிழமை மாலை விளக்கேற்றி கும்பிடுவது,
திதி பார்த்து தெவிசம் செய்வது...
அன்று பசுவுக்கு, பிராமணருக்கு, ஏழைக்கு தானம் செய்தல் நம் கடமை... இதில் எதுவும் தவறக்கூடாது...

"ஷ்ரார்தம் (தெவிசம்) செய்யாதவன், எப்பேற்பட்ட பூஜையை செய்தாலும், நான் ஒருபோதும் ஏற்பதில்லை"....

சொன்னவர் யார் தெரியுமா?
சாட்சாத் பகவான் மஹாவிஷ்ணு...

உலகிற்கு அப்படி நடந்தும் காட்டினார்...
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கோவிலில் பகவான் ஸ்ரீராமர் தன் தந்தை தசரதரருக்கும், ஜடாயு பறவைக்கும் தெவிசம் கொடுத்துள்ளார்...

குழந்தை வரம் வேண்டுவோர், பித்ரு தோஷம் நீக்குவோர் அமாவாசை அன்று தங்கி பூஜை செய்யும் கோவில் அது

Tuesday, 22 September 2020

ஸ்ரீ எல்லம்மாள் ரேணுகா தேவியின் வரலாறு

ஸ்ரீ எல்லம்மாள் ரேணுகா தேவியின் வரலாறு

ஸ்ரீ ரேணுகா தேவி ரேணுகா ராஜாவிற்கு கடவுளால் வழங்கப்பட்ட தெய்வக்குழந்தை . ஒரு சமயம் ரேணுகா ராஜா யாகம் நடத்தினார் அந்த யாகத்தை ஏற்று இறைவன் யாகத்தீயிலிருந்து ஒரு குழந்தையை வரமாக வழங்கினார் . அக்குழந்தைதான் ஸ்ரீ ரேணுகா தேவி . சிறு வயதில் அனைவரையும் கவர்ந்த செல்லக்குழந்தையாக வழர்ந்தார் .திரு அகஸ்திய முனிவர் ரேணுகா ராஜாவின் குரு ஆவார் . மேலும் ரேணுகா தேவிக்கு குருவாக திகழ்ந்தார் அகஸ்திய முனி. இவர் ரேணுகா தேவியை எதிர்காலத்தில் ஜமதக்னி என்ற முனிவருக்கு மணமுடித்து அளிக்கும் படி ரேணுகா ராஜாவுக்கு ஆலோசனை வழங்கினார் . ஜமதக்னி முனிவர் சத்தியவதி , ருச்சிக் முனியின் புதல்வன் ஆவார். இவர் நீண்ட கால யாகத்தாலும் பூஜைகளாலும் இறைவனின் அருள் பெற்றவர். இருவரும் திருமணத்திற்கு பிறகு ராம்ஷ்ராங் என்னும் மலையில் இறைப்பணியில் ஈடுபட்டு வந்தனர் . ரேணுகா தேவி ஜமதக்னியின் அனைத்து பூஜைகளிலும் , யாகங்களிலும் உடன் இருந்தார் . ரேணுகா தேவி தினமும் அதிகாலை மலப்ப்ரப்ஹா என்னும் நதியில் நீராடிவிட்டு பக்தியுடனும் கவனத்துடனும் நதிக்கரையில் உள்ள மண்ணில் பானை ஒன்றை செய்து அங்குள்ள பாம்பு ஒன்றை பிடித்து சும்மாடாகா ( தலைப்பாகை போல் ஓன்று ) வைத்து பானையை எடுத்து வருவார் . அந்த புனித நீரால் ஜமதக்னி இறை வழிபாடு செய்வார். இவர்களுக்கு ஐந்து மகன்கள் வாசு , விஷ்வ வாசு , ப்ரிஹத்யானு , ப்ருத்வாகன்வா மற்றும் ராம் பத்ரா. ராம் பத்ரா இறைவன் சிவன் பார்வதியாள் " அம்பிகாஸ்த்ரா " வாக ஆசிர்வதிக்கப்பட்டார் அதன் பின்னர் அவர் பரசுராம் என்று அழைக்கப்பட்டார். பரசுராம் ரிஷி முனிவர்களுக்கு பல இன்னல்களை அளித்து வந்த சத்த்ருயாச்களை அளித்தார் . அவ்வாறு ஒரு நாள் ரேணுகா தேவி மலப்ப்ரப்ஹா நதிக்கு சென்று தண்ணீர் எடுக்கும் பொது அந்த நீரில் தெரியும் " கந்தர்வ அன்கேல்ஸ் " என்னும் கருட பறவை ஒன்றை பார்த்தி தன கவனத்தையும் பக்தியையும் சற்று சிதற விட்டார். தவறை உணர்ந்து நீராடிவிட்டு பானை செய்ய முற்படும்போது அதை செய்ய முடியவில்லை பின்னர் பாம்பும் மறைந்து விட்டது
பின்னர் ஆசிரமம் திரும்பினார் தேவி . அவர் வெறும் கையுடன் திரும்பியதை கண்ட ஜமதக்னி முனிவர் என் கண்முன் நிற்காதே என்றும் இங்கிருந்து செல்லும் படியும் அறிவுரித்தினார் . பின்னர் ஸ்ரீ ரேணுகா தேவி காட்டிற்குள் கிழக்கு நோக்கி சென்றார் . அடர்ந்த காற்றிர்க்குள் தியானம் மேற்கொண்டார் . அவர் தியானத்தில் ரிஷி ஏக் நாத் , ஜோகி நாத் இருவரும் தோன்றினர் அவர்களை வணங்கிய ரேணுகா தேவி தன கணவரிடம் மன்னிப்பு பெறுவது எவ்வாறு என்று கேட்டார் . ரிஷிகள் ரேணுகா தேவியிடம் இதற்க்கு பரிகாரமாக நாளை முதல் மூன்று நாட்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி ரிஷிகள் அளித்த சிவா லிங்கத்தை வழிபடக்கூரினர் அத்துடன் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று மக்களிடம் அரிசியை வாங்கி அதில் பாதியை ஜாக்ர்யாக சமைத்து பக்தியுடன் உட்க்கொள்ள வேண்டும் , நான்காம் நாள் சென்றால் முழு மனதுடன் ஆசிர்வதித்து ஏற்றுக்கொள்வார் மேலும் இதன் மூலமாக நீ அனைவராலும் தெய்வமாக வணங்க படுவாய் கூறி மறைந்து விட்டனர் ரிஷிகள் . ரேணுகா தேவி மூன்று நாட்களும் அதை கடைப்பிடித்து நான்காம் நாள் கணவரிடம் சென்றார் .ரேணுகா தேவியை கண்ட ஜமதக்னி கோபம் அடைந்து தன மகன்களிடம் ரேணுகா தேவியின் தலையை வெட்டுமாறு கூறினார். முதல் நான்கு மகன்களும் மறுத்து விட்டனர். ஐந்தாம் மகனான பரசுராம் தந்தையின் ஆணைப்படி அன்னையின் தலையை வெட்டினார். தன் தந்தையிடம் நீங்கள் கூறியவாறே செய்துவிட்டேன் நீங்கள் என்ன அன்னையை திரும்பத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . அதற்க்கு ஜம்தக்னி நீ உன் அன்னையை பெற பல யாகங்களை செய்து முடிக்க வேண்டும் என்றார் . அவ்வாறே தன அன்னையை பெறவேண்டி யாகங்களை தொடங்கினார் . அந்த யாகத்தின் இறுதியில் அசிரிரி ஒலித்து உன் அன்னையை பெற யாகத்திற்கு முன்பு கண்களை மூடி அமர்ந்தால் உன் அன்னை பூமியிலிருந்து வெளிப்படுவார் என்றும் அவ்வாறு வெளிப்படும்போது பார்க்கக்கூடாது என்றும் கூறியது ஓர் ஒலி. ஆனால் பரசுராம் தன் அன்னையை காணும் அன்பினால் திரும்பி பார்க்க அப்போது பூமியிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது ஸ்ரீ ரேணுகா தேவியின் தலை மட்டுமே . அதனால் இன்றளவிலும் ஸ்ரீ எல்லம்மல் ரேணுகா தேவி அன்னையின் தலை வடிவிலும் முழு உருவ வடிவிழும் வணங்கி வருகின்றனர் .

பரசுராம அவதாரம்

பரசுராம அவதாரம்

Picture
பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.


அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.


சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.


ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.  இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.


ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.


ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார்.  பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.


ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.


மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.


பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.


கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.