jaga flash news

Sunday 23 December 2012

வாய்துர்நாற்றத்தை போக்கும் மங்குஸ்தான் பழம்.!


வாய்துர்நாற்றத்தை போக்கும் மங்குஸ்தான் பழம்.!


பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . எண்கள் உடம்புக்கும் நல்லது. சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள் பெரியோர். பழங்களில் இதுவும் ஒரு ருசியான பழம் தான் மங்குஸ்தான் பழம். இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிப்பாக  இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பழத்திலும் பல நன்மைகள் உண்டு. பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது .
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும், வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன.
இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கணனியில்  வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.
இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு  நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும்,  தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்

No comments:

Post a Comment