jaga flash news

Saturday 26 January 2013

சகடயோகம்

சகடயோகம்
சகடயோகம்! சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர் சக்கரயோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் சகடயோகம் எப்போது ஏற்படும்? குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக் கொடுக்கும் Sakata yoga forms when Moon is placed in 6th, 8th or 12th from the Jupiter. என்ன பலன்? 1. ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான். Person with sakata yoga in his horoscope has to keep moving from one place to another for some work or the other. எல்லோருமே இருந்த இடத்தில் அல்லது இருக்கும்/வசிக்கும் ஊர்களில் இருந்து கொண்டே தங்கள் பணிகளைச் செய்ய ஆசைப் படுவார்கள். சகடயோகம் அதை அனுமதிக்காது.அலைய வைக்கும். உங்கள் மொழியில் சொன்னால் சுற்ற விடும்! People like to be working at the same city or town where they reside. Sakata yoga does not allow this. பலன் 2 சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடைநீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் one born in Sakata will have his fortune obstructed now and then. The native loses fortune and may regain it. The periods of misfortune will accord with the times of transits in malefic Rasis - 6th, 8th and 12th. Every time the Moon transits the 6th, 8th and 12th from the radical Jupiter, the effects of Sakata are realised. ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 8ஆம் இடம் ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில் இருப்பது நல்லதல்ல. அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின் ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது இருந்து செய்தால் என்ன ஆகும்? செய்துபாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்:-)))))) பரிகாரம் உண்டா? சகடயோக ஜாதகக்காரன், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால் தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள வேண்டும். Travelling agent, Travelling salesman, Medical representative, Railway Guards, Drivers ஆகிய இதுபோன்ற தொழில்களை சகட யோகத்தொழில்களாகக் கொள்ளலாம் இதை ஒரு உதாரணத்திற்காகக் கொடுத்துள்ளேன். எனக்கு அப்படி இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எழுதும்போது பிரம்மா தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம்:-))) சகட யோகம் ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது. அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்! சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில் இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.உங்கள் மொழியில் சொன்னால் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் கேன்சலாகிவிடும் சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும் கேன்சலாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார வேண்டாம். கேன்சலாகிவிட்டால் நல்லதுதான். இது அவயோகம். அதாவது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே? சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை ஜோதிடத்தில் சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment