ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.
அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)
- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )
- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.
===================
1 ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது மிக்க பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.
2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.
3 ஆம் வீடு - சுமார்.
6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.
=================================================
ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?
ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.
====================================
ஒவ்வொரு லக்கினத்தையும் - நெருப்பு, நிலம், காற்று , நீர் - ராசிகள் என்று கூறுவர்.
மேஷம், சிம்மம் , தனுசு - நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி , மகரம் - நிலம் ராசிகள்
மிதுனம், துலாம் , கும்பம் - காற்று ராசிகள்
கடகம் , விருச்சிகம் , மீனம் - நீர் ராசிகள்.
இதை ஈஸியா நீங்க ஞாபகம் வைக்கிறதுக்கு ஒரு ஐடியா இருக்கு,.
இங்கிலீஷ் லே - FIRE , LAND , AIR , WATER ---------- முதல் எழுத்துகளை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோங்க.. FLAW ...... (எப்பூடி....? )
===========================
லக்கினங்களை - சரம் , ஸ்திரம் , உபயம் னு மூணு வகைப் படுத்தலாம்.
மேஷம் , கடகம் , துலாம், மகரம் - சர ராசிகள்
ரிஷபம், சிம்மம் , விருச்சிகம் , கும்பம் - ஸ்திர ராசிகள்
மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் - உபய ராசிகள் .
இதனோட , அமைப்பு என்ன , ஏதுங்கிறது - பின்னாலே நாம விரிவா , அலசி ஆராயப் போறோம்.. இப்போதைக்கு , இத தெரிஞ்சுக்கோங்க...
============================================
கிரகங்களின் பார்வைகள் :
எல்லா கிரகங்களுக்கும் - பொதுவா ஏழாம் பார்வை உண்டு. அதாவது , எந்த ஒரு கிரகமும் , நேர எதிர இருக்கிற ஏழாம் வீட்டைப் பார்க்கும். ....
சரி பார்க்கட்டும்... அதுக்கு என்ன?
உங்க வீட்டுக்கு எதிரிலே நல்ல ஒரு வாத்தியார் இருக்கிறார்.. .. எப்படி இருக்கும்..? அதுவே ஒரு பேட்டை ரவுடி இருந்தா..?
சுப கிரகம் , பார்த்தா அந்த வீடு வளம் பெறும். பாவ கிரகம் பார்த்தா , நல்லது இல்லை.
எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.
இதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.
இது போக - சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு - 4 , 8 - ஆம் பார்வைகளும் உண்டு... ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.
=====================================================
இதை எல்லாம் எதுக்காக இப்போ உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்னா, நாம் அடுத்த பாடத்திலேயே , ஜாதகம் வைச்சு , ஆராயப் போறோம்.. நான் பாட்டுக்கு குரு இங்கே பார்க்கிறாரு, சனி இங்கே பார்க்கிறாரு னு சொன்னா ... டக்கு னு புரியணும் இல்லியா..?
=======================================
சரி இப்போ --- ஓரிரு வார்த்தைகளில், 12 வீடுகளைப் பத்தி பார்ப்போம்..
இது ஒன்னொன்னும் - ஒவ்வொரு கட்டுரை எழுதுற அளவுக்கு - விரிவா பார்க்க வேண்டிய விஷயம்... இப்போதைக்கு , ஷார்ட் அண்ட் ஸ்வீட் ...
லக்கினம் - முதல் வீடு - ஜாதகரைப் பத்தி சொல்லும். ஆளு பார்க்கிறதுக்கு எப்படி ...தோற்றம்? குண நலன்கள் ........ ஒவ்வொரு லக்கினத்துக்கும் , சில அடிப்படை பண்புகள் இருக்கு...
இரண்டாம் வீடு - தனம் , குடும்பம், வாக்கு , ஆரம்ப கால கல்வி
மூன்றாம் வீடு - தைரியம், வீர்யம், இளைய சகோதரம்,,,
நான்காம் வீடு - கல்வி , மாதுர் ஸ்தானம் (தாய்), வாழும் வீடு, வாகனம், சுகம் .....
ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணியம், குழந்தைகள், குல தெய்வம், முற் பிறவி
ஆறாம் வீடு - கடன், நோய், எதிரிகள்
ஏழாம் வீடு - நண்பர்கள் , கணவன் / மனைவி
எட்டாம் வீடு - ஆயுள் , (பெண்களுக்கு - மாங்கல்ய ஸ்தானம் ), திடீர் எழுச்சி , வீழ்ச்சி , வில்லங்கம், சிறை, மான பங்கம், அவமானம்
ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம் , பிதுர் (தந்தை) ஸ்தானம் ...
பத்தாம் வீடு - கர்ம ஸ்தானம்
பதினொன்றாம் ஸ்தானம் - லாபம், இரண்டாம் திருமணம் , மூத்த சகோதரம்
பன்னிரண்டாம் ஸ்தானம் - விரயம் , அயன , சயன போகம்.. அப்படினா? ஒழுங்கா தூங்குறது..... படுக்கை சுகம்...
இதெல்லாம் சில முக்கிய பலன்கள் பார்க்கிறதுக்கு ... இதை தவிர நிறைய விஷயங்கள் இருக்கு... அதை எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமா ...அப்புறம் பார்ப்போம்..
=========================
நவ கிரகங்களில் - ஒவ்வொரு வீட்டுக்கும் - ஒருவர் காரகம் பெறுகிறார்....
நாம் ஏற்கனவே கொடுத்துள்ள நவ கிரகங்களின் காரகத் துவங்களை, ஒரு தடவை திரும்ப பாருங்க...
===========================
சரி, இப்போ உதாரணத்துக்கு - ஒரு ஜாதகர் அவரோட அம்மாவை பத்தி பார்க்கணும்... னு நினைக்கிறார்...
என்ன , என்ன விஷயம் பார்க்கணும்.... சொல்லுங்க பார்ப்போம்...
First ----
ஜாதகர் - லக்கினத்தில் இருந்து - 4 ஆம் வீடு .... என்ன னு பார்க்கணும்..
அந்த வீட்டு அதிபதி யார்? அவரு எங்கே இருக்கிறார்..? நல்ல வீட்டிலே இருக்கிறாரா..? உச்சம் , ஆட்சி , நட்பு வீடு..? மறைவு வீடு இல்லாம இருக்கிறாரா? சுப கிரகசேர்க்கை இல்லை பார்வை உண்டா..?
நீசம் இல்லாம , பகை இல்லாம? அவர் கூட எதாவது பாவ கிரகம் இருக்கா...? ஏதாவது பாவ கிரகம் அவரை பார்க்குதா ?
4 ஆம் வீட்டிலே ஏதாவது - சுப கிரகம் இருக்கா..? பாவ கிரகம் இருக்கா..?
4 ஆம் வீட்டின் அதிபதி - எந்த நட்சத்திர சாரம் வாங்கி இருக்கிறார்..? அவர் நிலைமை யை யும்.. கவனிக்கணும்....
அது மட்டும் இல்லை... சந்திரன் நிலைமை என்ன னு பார்க்கணும்.. எதுக்கு சந்திரன்... ???
சந்திரன் தானே மாதுர் காரகன்,...?? மறந்துட்டீங்களா ...? மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும் , சந்திரனை வைச்சும் பார்க்கணும்... ..
இப்போ கோச்சார ரீதியா... கோள்கள் எங்கே இருக்கு... அதனோட பார்வைகள் எங்கே .. எல்லாம் பார்த்துக்கிடனும்..?
==================
சரி , அம்மாவோட ஆயுள்.. பார்க்கணும்... So , 4 ஆம் வீட்டில் இருந்து - 8 ஆம் வீடு .. பார்க்கணும்.. கரெக்டா..? அப்படினா..? லக்கினத்தில் இருந்து.. 11 ஆம் வீடு.. திரும்ப மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும்.. பாருங்க..

- 3, 6 , 8 , 12 - மறைவு வீடுகள் என்று கூறுவர். அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..

No comments:
Post a Comment