ஒரு கொசுவத்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம்
ஒருகொசுவத்தி சுருளின் (கொயில்) புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டொக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் துறை மற்றும் இந்திய மருந்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்திரங்கில் கலந்துகொண்ட போதே சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார். புதுடில்லி பத்ரா மருத்துவமனையைச் சேர்ந்த டொக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது காற்றினால் ஒலியினால் மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.
ஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு இலட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்
This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா .அவர்களுக்கு நமஸ்காரம்.
ReplyDeleteகொசுவர்த்தி சுருள் நாமாகவே தயாரித்து..நமது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். லிக்வடைவிட சிறந்தது.. இக்காயில் தான்.
முறையான பொருள்களை சேர்த்து தயோரிக்க வேண்டும். இது மிக மிக முக்கியம்.
கரித்தூள் − 100 கி.
மரத்தூள் − 200 கி.
வேப்பிலைத் தூள் − 100 கி.
சாம்பிராணி − 75 கி
கோதுமை மாவு − 1/2 ஆழாக்கு.
கார்பாலிக் அமிலம் − ஒரு சில துளிகள்
நைட்ரோ − 10 கி
கந்தகப் பொடி − 5 கி
செய்முறை..மிக மிக எளிது.
வே.தூள், ம.தூள், க.தூள், சாம்பிராணி இவைகளை நன்கு மசிய அரைக்கவும். கோ.மாவு, நைட்ரோவை தண்ணீர் விட்டு கரைத்து, அரைத்த மேற்கண்டவைகளுடன் சேர்க்கவும்.க.பொடி,கா.அமிலம் எல்லாவற்றையும் சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து நன்கு பிசையவும். முறுக்கு அச்சில் இக் கலவையைப் போட்டு, நீண்ட வடிவில் உலர வைக்கவும். உலர்ந்த பின் சுருள் வடிவம் ஆக்க வேண்டும். இதற்கான டையும் கடைகளில் விற்பனைக்கென உள்ளன. டையில் என்றால்..ஆரம்பத்திலேயே... சுருள் வடிவம் கொணர்ந்து... காய வைக்க வேண்டும். சிறிய டை..ரூபாய் 1500/−க்குள் அடக்கம்.
லிக்வடு தான் இதயத்தை பாதிக்கும், ஆஸ்துமா, சைனிஸ் நோய்களை உருவாக்கும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே..நெஞ்சில் பாதிப்பை ஏற்படுத்தும். காயிலில் இயற்கை மருத்துவம்தான் உள்ளன.. எவ்வித போதிப்பும் ஏற்படுத்தாது.
செய்து..பயனடையுங்களேன்..!
பாதிப்பை (போதிப்பும் அல்ல) ஏற்படுத்தாது..என வாசிக்கவும்.
ReplyDelete