jaga flash news

Monday 28 April 2014

"அபர கர்மா" எனப்படும் இறுதிச்சடங்கை தவறாமல் செய்யவேண்டும்.

மனித உடலிலுள்ள
ஜீவன்
மரணத்திற்குப்பின்
வேறு இடத்திற்குச்
செல்கிறது என்பதையும்,
அந்த ஜீவன் கர்ம
வினைகளுக்கு ஒப்ப
மறு ஜென்மம்
எடுக்கிறது என்பதையும்
உலகத்தில்
அனைத்து மதத்தினரும்
ஒப்புக்கொள்கின்றார்கள்.
ஆகவேதான்
இறந்தவரின்
உடலை அடக்கம்
செய்யும் விஷயத்தில்
இந்துக்கள்,கிருத்தவர்கள்,முஹம்மதியர்கள்,சீக்கியர்கள்,ஜைனர்கள்
போன்ற
அனைத்து மதத்தினரும்
தங்களது மதத்தில்
கூறப்பட்ட
ஒவ்வொரு விதமான
முறையைப்
பின்பற்றி வருகின்றனர்.
மனிதனாகப்பிறந்த
எந்த ஒரு உடலையும்
தங்கள் மத
சம்பந்தமான
காரியத்தை செய்யாமல்
கட்டையைப்போல் யாரும்
எறித்துவிடுவதில்லை.
இந்த மதச்சடங்குகள்
அந்தமதத்தைச்சேர்ந்த
குருமார்களின்
கட்டளைப்படியும்
உபதேசப்படியும்
நடப்பதால்
இவை மதத்திற்கு மதம்
வேறுபடுகின்றன.ஆனாலும்
இச்சடங்குகளை பாபம்,புண்ணியம்,பரலோகம்
ஆகிய
தத்துவங்களை ஒப்புக்கொண்டுதான்
அனைவரும்
செய்துவருகின்றனர்.
உதாரணமாக
*கிருஸ்தவர்கள்,இறந்த
உடலை மாதாகோயிலுக்கு எடுத்துச்சென்று அங்கே இறந்தவருக்காகப்
பிரார்தனைகள்
செய்தும்
பாதிரியார்கள் மூலம்
புனிதமான பைபிள்
ஓதியும் இறந்த
உடலுக்கு நல்லகதி கிடைக்கப்
பல சடங்குகள்
நடத்தி உடலை அடக்கம்
செய்கின்றனர்

*முஸ்லீம்
மதத்து அன்பர்களும்
இறந்த
உடலை மௌல்விகள்
எனப்படும்
மதகுருமார்களின்
மூலம் குரான்
மந்திரங்களை ஓதியை அடக்கம்
செய்கின்றனர்.

*இவ்வாறே சீக்கிய,பார்சி,ஜைன,பௌத்தம்
ஆகிய
அனைத்து மதங்களிலும்
ஒவ்வொரு முறையில்
இறந்த
உடலுக்கு சம்ஸ்காரம்
(சடங்கு)செய்கிறார்கள்.
இப்படி உலகம்
முழுவதும்
பரவியுள்ள
அனைத்து மதங்களும்
இன்றும் கூட
தாங்களின் சாஸ்திர
நூல்களில்
நம்பிக்கையுடன்,அவரவர்
மத
வழக்கப்படி அபரகர்மா எனப்படும்
இறுதிச்சடங்கை முறையாகச்
செய்து வரும்போது,நாமும்
நமது இந்து மதத்தில்
நம்பிக்கையுடன்
முறைப்படி அபர
கர்மா எனப்படும்
இறுதிச்சடங்கை தவறாமல்
செய்யவேண்டும்.

No comments:

Post a Comment