மார்கழி மாதம் பற்றிய தவறான எண்ணங்கள்!...
❇ மார்கழி மாதம் பீடை மாதம் என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. நமது உடலை நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம்.
❇ தட்சணாயணம் அந்த மாதத்துடன் முடிகிறது. அதாவது சூரியனுடைய தென் பகுதி இயக்கம் அந்த மாதத்துடன் முடிகிறது. அந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் அந்த மாதத்தை அப்படி ஒதுக்கி வைத்தார்கள்.
❇ மார்கழி மாதத்தை ஆன்மீக நிகழ்வுகளுக்காக என்று ஒதுக்கி வைத்தார்கள். தட்சணாயண மாதத்தில் அது முடியக்கூடிய மாதம். சூரியனுடைய தெற்கு இயக்கம் முடியக்கூடியது. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது.
❇ அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மீகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது....
Nice Information.
ReplyDeleteமார்கழி மாதம் அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்தால், நரம்பு தளர்ச்சி குணமாகும்.
This comment has been removed by the author.
ReplyDelete