jaga flash news

Saturday 29 April 2017

விரதம் vs கிழமை

இறைவனை விரதமிருந்து வழிபடுவது சிறப்பை தரும்.
எந்த கிழமைகளில் விரதமிருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து வழிபடுவது இன்னும் சிறப்பு.
விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று சிலர் நினைப்பது உண்டு.
நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும்.
ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது.
எந்த கிழமைகளில் விரதமிருந்தால் எந்த பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
விரத பலன்கள் ....
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்
திங்கள்கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.
செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.
புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
வியாழக்கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

3 comments:

  1. விரதம் vs என கொடுக்கிறீர்கள். இந்த vsக்கு விளக்கம் அளியுங்கள். vsக்கு விடை தெரியாம மண்டைக் குடைச்சலா இருக்கு.

    ReplyDelete
  2. Vs என்பது Conjuction word என்று தெரிந்துகொண்டேன். ஆனாலும், Vs−ன் விரிவாக்கம் என்ன?

    அய்யா! வெ.சாமி அவர்கள், ஒரு வார்த்தை புதிதாக சேர்க்கும்போது, அதற்கான பொருளை அடைப்பானுக்குள் காட்டினால், என்னைப் போன்ற மரமண்டைகள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்குமல்லவா!

    ReplyDelete