வீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து
வாஸ்து
வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் .
முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவடையக்கூடாது . அது போல முன் பாகம் விரிந்து பின் பாகம் குறுகி இருக்ககூடாது .
· வீட்டிற்கு 4 பக்கமும் இடம் விடு இருக்க வேண்டும்.
· வடக்கு , வட கிழக்குப் பகுதியில் இடம் அதிகமாக விட வேண்டும் .
· தெற்கு , தென் மேற்கு பகுதியில் காலி இடம் இருக்க கூடாது .
· கிணறு , போர் வெல் வடகிழக்கு பகுதியில் அமைக்க வேண்டும் .
· சமையல் அறை தென் கிழக்கு பகுதியில் நலம்
முடியாத பட்சத்தில் வட மேற்குப் பகுதியில் ( திசையில் ) சமையல் அறை அமைக்கலாம் .
· வீட்டின் பால்கனி வடக்கு , கிழக்குப் பகுதியில் அமைப்பது உத்தமம் . முடியாத பட்சத்தில் வடகிழக்கு திசை அமைக்கலாம் .
· வட கிழக்கு பகுதிகளில் கதவுகள் நிறைய வைப்பது .வென்டி லேட்டர் குறைவாக உத்தமம் .
· மேற்கு திசையில் ஜன்னல் , வென்டி லேட்டர் குறைவாக வைப்பது நன்மை தரும் .
தெற்கு , மேற்கு பகுதியில் அகலமாக அமைப்பது உத்தம பலனை உண்டாக்கும்
· வடக்கு , வட கிழக்கு திசையில் கதவுள்ள வீடுகள் அமோகமாக இருப்பதை பார்க்கலாம் .
· மேற்கு திசையில் படுக்கை அறை அமைக்கலாம் .
· குளிக்கும் அறை வடக்கு திசையிலோ , தென் கிழக்கு ( அ ) வட மேற்கு திசையிலோ அமைப்பது கூட உத்தம பலனை ஏற்படுத்தும் .
· வட மேற்கு வாயு மூலை அறை அமைக்கலாம் . அதை படுக்கை அறையாகவும் பயன்படுத்தலாம்.
பொருட்கள் வைத்து பூட்டும் செயல் படுத்தவும் .
· பூஜை அறையை வட கிழக்கில் அமைக்க வேண்டும் . கிழக்கு பார்த்து சாமி விக்ரங்களை பூஜிக்க வேண்டும் .
· வீட்டிற்கு தண்ணீர்த் தொட்டி தெற்கு , தென் மேற்கு திசையில் உத்தம பலன் கொடுக்கும் .
No comments:
Post a Comment