jaga flash news

Friday, 18 January 2019

சிவபெருமானின் தலையில் எப்பொழுதும் நிலா பிறை வடிவில் இருப்பதன் சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா?

இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவர் சிவபெருமான். பொதுவாக சிவபெருமான் மிகவும் கோபப்படக்கூடிய கடவுள் என்று அனைவராலும் கூறப்படுவபவர். ஆனால் உண்மையில் அவர் கெட்டவர்களுக்கு மட்டும்தான் ருத்ர மூர்த்தி, தன் பக்தர்களுக்கு எப்போதுமே அவர் சாந்த மூர்த்திதான். தன்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்கு சிவபெருமான் அவர்கள் வேண்டும் வரங்களை வழங்கக்கூடியவராவார். பொதுவாக மற்ற கடவுள்களிடம் இருந்து சிவபெருமான் மிகவும் வித்தியாசமானவர். அதை நீங்கள் அவரின் உருவத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம். மற்ற கடவுள்கள் ஆபரணங்களில் ஜொலிக்க சிவபெருமானோ வெறும் தோல் ஆடையை உடுத்திக்கொண்டு கையில் திரிசூலத்துடன் காட்சியளிக்கிறார். அவர் அணிந்துள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமும், கதையும் உள்ளது. அந்த வகையில் அவர் தலையில் பிறை வடிவில் நிலா இருப்பதற்கும் காரணம் உள்ளது. அந்த காரணத்தையும், அதன்பின் இருக்கும் கதையையும் இந்த பதிவில் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சந்திரசேகராய நம ஓம் சிவபெருமானுக்கு சந்திரசேகர் என்று ஒரு பெயர் உள்ளது. அதற்கு காரணமே அவர் தலையில் இருக்கும் பிறைதான். சந்திரன் என்றால் நிலா என்று பொருள் சேகர் என்பதற்கு உச்சம் என்பது பொருள். உச்சத்தில் நிலவை கொண்டவனே என்பதன் அர்ததம்தான் சந்திரசேகர் எனபதாகும். ஆனால் சிவபெருமான் ஏன் தலையில் நிலவை வைத்திருக்க வேண்டும். ஆலகாலன் பாற்கடலை கடைந்த போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய பிறகு அவர் உடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. நிலவானது குளிர்ச்சியை வழங்கக்கூடும் ஆதலால் சிவபெருமான் தன் உடலின் வெப்பநிலையை குறைத்து கொள்வதற்காக நிலவை தன் தலையில் வைத்துக்கொண்டதாக புராண குறிப்புகள் கூறுகிறது. இது உணர்த்துவது என்னவெனில் கஷ்டமான காலத்தில் கூட நம்மை அமைதிப்படுத்தி கொள்வதற்கான செயல்களை நாம் செய்ய வேண்டும். மற்றொரு கதை வேறு சில புராண குறிப்புகளின் படி பிரம்மாவின் மகனான தக்ச பிரஜாபதி 27 நட்சத்திரங்களை தன் மகள்களாக கொண்டிருந்தார். அவரின் அனைத்து மகள்களும் சந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டனர். 27 மனைவிகள் இருந்தாலும் ரோகிணி மீது மட்டும் அதீத ஈர்ப்பு கொண்டிருந்தார். எனவே இதனால் மற்ற மனைவிகள் அவரின் மீது அதிக பொறாமை கொண்டனர். மனைவிகளின் புகார் ரோகிணி மீது கொண்ட பொறாமை காரணமாக மற்ற மனைவிகள் அனைவரும் அவர்களின் தந்தையிடம் சந்திரன் தங்களை சரியாக கவனிப்பதில்லை என்று புகார் செய்தனர். இதுதான் நிலா மற்றும் ரோகிணிக்கு சோதனையாக அமைந்தது. : இந்த 5 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீட்டில் ஒருபோதும் வறுமை இருக்காது என்று கிருஷ்ணர் கூறுகிறார்...! சாபம் பிரஜாபதி தன் மகள்கள் அனைவரையும் சரிசமமாக நடத்தும் படி சந்திரனிடம் கூறினார். ஆனால் சந்திரன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமுற்ற பிரஜாபதி தினமும் உனது பிரகாசத்தை இழப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவாக சந்திரன் தினம் தினம் தனது பிரகாசத்தை இழக்க தொடங்கினார்.  இயற்கை சமநிலைமையின்மை பிரஜாபதியின் சாபத்தால் சந்திரன் கடலுக்குள் தஞ்சம் புகுந்தார். நிலவு இல்லாததால் இயற்கையின் சமநிலை சீர்குலைந்தது, இயற்கையை சார்ந்திருந்த அனைத்து உயிரினங்களும் இதனால் பாதிப்படைந்தனர். எனவே தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுமப்டி வேண்டினர். சிவபெருமானின் கருணை தன்னிடம் இருந்த பாதி ஒளியை வைத்துக்கொண்டு நிலா சிவபெருமானின் தலையில் தஞ்சமடைந்தார். சிவபெருமான் பாதி ஒளி பொருந்திய நிலவை தலையில் அணிந்துகொண்ட பிறகு தன் சக்தி மூலம் அடுத்த 15 நாட்களுக்கு நிலவின் ஒளியை அதிகரிப்பதில் வெற்றிகண்டார். அடுத்த 15 நாட்களில் நிலா மீண்டும் தேயத்தொடங்கியது. நேரத்தை கடந்தவர் சிவபெருமான் மஹாகால் என்று அழைக்கப்படுகிறார். அதற்கு அர்த்தம் காலங்களை கடந்தவர் என்பதாகும். நிலா தேய்வதும், வளர்வதும் சிவபெருமானாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது, அதற்கு காரணம் சிவபெருமான்தான் நேரத்தை கட்டுப்படுத்துபவர் ஆவார். பலமுறை மக்களை காப்பாற்றிய சிவபெருமான் உயிரினங்களை காப்பாற்ற மேற்கொண்டும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.

கண்திருஷ்டியால் குடும்பம் படாதபாடு படுகிறதா? ஆஞ்சநேயருக்கு இந்த பொருளை வைத்து வழிபடுங்கள் போதும்...!

இந்தியர்களின் சமையல்களில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு பொருள் என்றால் அது தேங்காய்தான். குறிப்பாக இந்து மதத்தில் தேங்காய் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. கடவுள் வழிபாட்டிலிருந்து, இறுதி சடங்கு வரை அனைத்திலுமே தேங்காய் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. தேங்காய் பூஜைக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி தேங்காயை சரியாக பயன்படுத்துவது உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. நம்முடைய புராணங்கள் மற்றும் வேதங்களின் படி தேங்காய் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றக்கூடும் என்ற குறிப்புகள் உள்ளது. இந்த பதிவில் தேங்காய் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வெற்றிகரமான வாழ்க்கை ஒருவேளை நீங்கள் நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், வீட்டில் தேங்காயை கொண்டு ஒரு சிறிய பூஜை செய்யவும். அதன்பின் அந்த தேங்காய் மீது ஒரு சிவப்பு நிற பூவை வைக்கவும். நீங்கள் வெளியே செல்லும்போது அந்த பூவை உங்களுடன் எடுத்துசெல்லவும். நிச்சயம் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். கண்திருஷ்டி ஒருவேளை உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்காவது கண்திருஷ்டி இருந்தால் அதனை தேங்காயை கொண்டே சரிபண்ணலாம். செவ்வாய் கிழமையில் ஒரு தேங்காயை அரை மீட்டர் சிவப்பு நிற துணி கொண்டு சுற்றி கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களை சுற்றி ஏழு முறை சுற்றவும். பின்னர் அந்த தேங்காயை அனுமனின் பாதத்தின் பக்கத்தில் வைத்துவிடவும். வேலை நல்லபடியாக முடிய உங்கள் வாழ்க்கையில் அதிக தடைகளை இருப்பதை உணர்ந்தால், இரவு முழுவதும் உங்கள் முதுகிற்கு பின் புறம் ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு தூங்கவும். மறுநாள் காலை குளித்துவிட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அந்த தேங்காயுடன் வேறு சில பிரசாதங்களையும் சேர்த்து பிள்ளையாருக்கு படைத்துவிடவும். MOST READ: சிவபெருமான் தன் தலையில் பிறை வடிவில் நிலாவை வைத்திருப்பதற்கான சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா? பண நெருக்கடி ஒருவேளை உங்களுக்கு பண நெருக்கடி இருந்தால் இதனை செய்யவும். செவ்வாய் கிழமையன்று தேங்காயை எடுத்துக்கொண்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லவும். அதன்பின் தேங்காய் மீது குங்குமத்தால் ஸ்வஸ்திக் வரைந்து அதனை ஆஞ்சநேயருக்கு படைக்கவும். அதன்பின்னர் கோவிலில் அமர்ந்து அனுமன் மந்திரத்தை கூறி வழிபடவும். இதனை 8 வாரம் தொடர்ந்து செய்தால் எவ்வளவு பெரிய பண நெருக்கடியாக இருந்தாலும் சரியாகிவிடும். தொழில் நஷ்டம் ஒருவேளை உங்களுக்கு தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டால் வியாழக்கிழமையன்று அரை மீட்டர் மஞ்சள் நிற துணியில் தேங்காயை சுற்றி அதனுடன் சில மஞ்சள் நிற இனிப்புகளையும் சேர்த்து விஷ்ணு பகவானுக்கு படைத்து வழிபட்டால் விரைவில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். Get To Know Your Body Status At Home For Just Rs. 700. பெங்களூர் பிராவிடன்ட் சென்ட்ரல் பார்க்கில் 29லட்சத்தில் வீடு Vitamin Deficiency? Diabetes? Get 60 Body Test at 71% Off at Home. வாழ்க்கை பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையில் தொடர்ச்சியாக பல பிரச்சினைகள் இருந்தால் அதனை சரி செய்ய ஒரு தேங்காய், ஒரு சிவப்பு துணி, சில சிவப்பு மலர்கள் மற்றும் சில கற்பூரங்களுடன் கோவிலுக்கு சென்று துர்கை அம்மனுக்கு படைக்கவும். இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்யவும். வறுமை நீங்கள் கடுமையான வறுமையில் கஷ்டப்பட்டால் வெள்ளிக்கிழமையில் இதனை செய்ய வேண்டும். தேங்காயை கொண்டு மஹாலக்ஷ்மியை வழிபடவும், பின்னர் இந்த தேங்காயை உங்கள் லாக்கரில் வைக்கவும். உங்கள் வறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்களே உணருவீர்கள். சனிபகவான் சனிபகவானால் உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டால் சனிகிழமைகளில் ஒரு தேங்காயை புனித நீரால் கழுவி அதனை சனிபகவானுக்கு வைத்து வழிபடவும்.அவ்வாறு செய்யும்போது " ஓம் ராமதூதாய நமஹ " என்னும் இந்த மந்திரத்தை கூறவும். இதனை 7 வாரம் தொடர்ந்து செய்தால் சனிபகவான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரின் அருளும் உங்களுக்கு கிடைக்கும். கால சர்ப்ப தோஷம் கால சர்ப்ப தோஷத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தனிப்பட்டரீதியாகவும், அலுவலகரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்படும். அந்த சூழ்நிலையில் அவர்கள் ஏழைகளுக்கு உலர்ந்த தேங்காயையும், போர்வையையும் தானமாக கொடுக்க வேண்டும். இது கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும். ஏகாஷி தேங்காய் ஒருவேளை உங்களுக்கு 3 கண் உடைய தேங்காய் கிடைத்தால் அது உங்கள் அதிர்ஷ்டம் ஆகும். இந்த தேங்காய் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த தேங்காய் ஏகாஷி தேங்காய் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேங்காயை கடவுளுக்கு வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை வழங்கும். இந்த தேங்காய் லக்ஷ்மி தேவியின் அவதாரம் என்று நம்பப்படுகிறது

இந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...!

நம் வாழ்க்கையில் எழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் உபதேசங்கள் மூலம் தீர்வை மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் கூறியுள்ளார். மகாபாரதத்தை முன்னின்று நடத்திய கிருஷ்ணர் பாண்டவர்கள் தளர்ந்திருந்த போதெல்லாம் தன்னுடைய விலைமதிப்பில்லாத அறிவுரையின் மூலம் அவர்களை பலம் பெற செய்தார். மகாபாரதம் என்றாலே அதில் கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்குமான உரையாடல்கள்தான் அதிமுக்கியதுவம் வாய்ந்தவை என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். அர்ஜுனன் தவிர்த்து ஏனைய பாண்டவர்களுடனான கிருஷ்ணரின் உரையாடல்களும் நம் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியவைதான். அவரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொறுத்தக்கூடியவையாகும். அந்த வகையில் யுதிஷ்டிரனின் பதவியேற்பின் போது செல்வத்தை அடைவது எப்படி என்பது பற்றி கிருஷ்ணர் அவருக்கு வழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்த வழிகள் நமக்கும் பயன்படக்கூடியவை. இந்த பதிவில் கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு கூறிய செல்வத்தை அடையக்கூடிய வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பாண்டவர்களின் வருகை திரௌபதியை மணந்த பிறகு பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தியுடன் அஸ்தினாபுரத்திற்கு வந்தனர். நாட்டு மக்கள் அனைவரும் அவர்களை மிகவும் கோலாகலமாக வரவேற்றனர். அவர்கள் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி இல்லையென்றாலும் திருதராஷ்டிரனும், துரியோதனனும் போலி அன்புடன் அவர்களை வரவேற்றார்கள். நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாரிக்க விரும்பாத திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு பட்டாபிஷேகம் செய்ய விருப்பமின்றி சம்மதித்தான். கிருஷ்ணரின் வருகை யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகத்திற்கு குந்தியின் அழைப்பை ஏற்று கிருஷ்ணர் வந்திருந்தார். பட்டாபிஷேகம் முடிந்த பின் கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் தனிமையில் பேசினார். அப்போது அஸ்தினாபுரத்தின் எதிர்காலம் பற்றி பேசிய போது கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு சில யோசனைகளை கூறினார். அதன்படி வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் உங்கள் இல்லத்தை நோக்கி ஈர்க்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி இது நேர்மறை சக்திகளை ஈர்ப்பதுடன் உங்கள் ஆன்மாவையும் புனிதப்படுத்தும் என்று கூறினார். தண்ணீர் இந்து மதத்தின் படி தேவைப்படுபவர்களுக்கு நீர் வழங்குவது கடவுளுக்கு சேவை செய்வதற்கு இணையானதாகும். அதனால்தான் எப்பொழுதும் சூரியபகவான் முதல் அனைத்து கடவுள்களுக்கும் நீர் முதலில் வழங்கப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு வரும் அனைவருக்கும் முதலில் நீர் கொடுத்து வரவேற்க வேண்டும். இது உங்கள் வீட்டில் செல்வம் குறைவில்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். சந்தனம் கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு ஒரு கதையை நியாபகப்படுத்தினார். அதன்படி ஆயிரக்கணக்கான பாம்புகளால் கடிக்கப்பட்டாலும் சந்தன மரம் ஒருபோதும் அதன் வாசனையை இழக்காது. அதேபோல எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வீட்டில் இருக்கும் சந்தனம் அனைத்தையும் விரட்டியடிக்கும். சாஸ்திரங்களின் படி சந்தனத்தை நெற்றியில் வைப்பது கடவுளின் அருளை உங்களை நோக்கி ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இது செல்வத்தை ஈர்க்கும் காந்தமாக செயல்படும். நெய் இந்து மதத்தில் மிகவும் புனிதமான மிருகமாக மதிக்கப்படுவது பசு ஆகும். அதன்படி பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஆனது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே பூஜையறையில் சுத்தமான பசும்பலினால் செய்யப்பட்ட நெய்யை கொண்டு விளக்கேற்றி கடவுளை வழிபடுவது கடவுளை மகிழ்விக்கும் முக்கியமான செயல்களில் ஒன்றாகும்.சுத்தமான பசும்பாலினால் செய்யப்பட்ட பாலாக இருக்கவேண்டியது அவசியம். வீணை கிருஷ்ணர் கூறுகிறார் மண்ணிலிருந்து வளர்ந்த தாமரை மீது சரஸ்வதி தேவி எப்படி அமர்ந்திருக்கிறாரோ அதேபோல ஒருவர் வீட்டில் சரஸ்வதியின் சிலையோ அல்லது வீணையோ இருந்தால் அவர்கள் வீட்டில் வறுமையும், குழப்பங்களும் நிலையாக இருக்கும். தேன் கிருஷ்ணரின் அறிவுரைப்படி தேன் என்னும் இயற்கை பொருளானது நமது ஆன்மாவை மட்டும் சுத்தப்படுவதவுவதில்லை, அது நமது இல்லத்தின் ஆராவையும் சுத்தப்படுத்தக்கூடும். தேனிற்கு அப்படிப்பட்ட ஒரு அற்புத சக்தி உள்ளது. இது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும். MOST READ: இன்னைக்கு பெருமையும் புகழும் கிடைக்கப்போகிற 4 ராசிகள் இவைதான்... நிச்சயம் நடக்கும்...

மகா சனி பிரதோஷம் - விரதம் இருந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும்

சென்னை: சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாளில் சிவனுக்கு உகந்த மகா பிரதோஷமும் வருவதால் சிவன், விஷ்ணு ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளைய தினம் ஜனவரி 19 ஆம் தேதி சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல நன்மைகளை அடையலாம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. பிரதோஷ தரிசனம் காணும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். சிவ தாண்டவம் ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். புண்ணியம் சேரும் நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. பிரதோஷ வழிபாடு பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது. எப்படி வழிபடுவது சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். நன்மைகள் நடைபெறும் எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவ அருள் கிட்டும். நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வளர்பிறையில் வருகிறது. இந்த சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் சிவாலயம் சென்று இறைவன் அருள் பெறலாம்