jaga flash news

Monday, 30 November 2015

தோசம் என்றால் சமஸ்கிருத மொழியில் குறைபாடு அல்லது இழப்பு என்று பெயர்.

கால சர்ப்ப தோசம்
==================
தோசம் என்றால் சமஸ்கிருத மொழியில் குறைபாடு அல்லது இழப்பு என்று பெயர். ஆதாவது ஜெனன கால சக்கரத்தில் அனைத்து கிரகங்களும், ராகு மற்றும் கேது என்ற இரண்டு சர்பங்களின் பிடியில் மாட்டி கொள்வது கால சர்ப்ப தோசம் என்று ஜோதிடம் கூறுகிறது.
இதன் சூட்சுமம் என்னவென்றால், ராகு மற்றும் கேது என்பது நம் முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை குறிக்கும் ஒரு குறியீடு என்பதே . ராகு என்பது அதிவேகமாக பரவி செல்வது அல்லது கட்டுபாடில்லா வேகம் என்றே சமஸ்கிருதத்தில் பொருள். அடக்கமுடியாத போகத்தின் உருவாக வரும் ராகு நம் முன்னோர்களின் ஆதாவது தந்தை வழி தந்தை செய்த இயற்கைக்கு புறம்பான பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த இயற்கைக்கு புறம்பான பாவங்களையும் காட்டுகிறது.
இதில் இன்னொரு சூட்சுமம், கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம்.
அறிவியல் விளக்கம்
====================
தற்கால அறிவியல் படி கூறவேண்டுமென்றால், மனித ஜீனில் அடிப்படைகளாக இருக்கும் 46 குரோமோசோம்கள் ராகு கேது கலவைகள் ஆகும். குரோமோசோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி இதுபோன்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது.
ஆதாவது 23 குரோமோசோம்கள் தந்தை வழி குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழி குறிப்பவை (கேது). இதில் இருந்து நம் ஜோதிட ரிஷிகள் எந்த அளவு அறிவியல் திறன் பெற்றவர்கள் என அறியலாம்.
ராகுவும் கேதுவும் வட மற்றும் தென் துருவங்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இரண்டும் ஒன்றுகொன்று எதிரெதிர் குணங்களை கொண்டவைகள். அவ்வாறு இரண்டு வெவ்வேறு குணாதிசயம் பெற்ற இரு உருவமற்ற சாயா கிரகங்களிடையே மாட்டும் மற்ற கிரகங்களின் நிலைமை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ராகு கருநாக பாம்பாகவும், கேது செம்பாம்பாகவும் ஜோதிடம் கூறுகிறது. சுருங்க கூறினால் மனதின் (சந்திரன்) ஆசைகளை களையும் நிழல் கேது. பரமாத்மாவை (சூரியனை) கெடுக்கும் நிழல் ராகு.
இவ்வாறு, மனித உடலில் இருக்கும் ஜீன்களின் நம் பரம்பரை தன்மை குறிப்பவை ராகு மற்றும் கேது ஆகும். பாவங்களை சுமக்கும் ராகு கேது என்னும் இரு சர்பங்கள் மத்தியில் மாட்டும் அனைத்து கிரகங்களும் பலம் இழக்கிறது. அதனால், இவ்வளவு பெரிய யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த யோகம் தரும் கிரகங்களின் திசை புத்திகள் ஜாதகரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுப்பதில்லை.
தோச கால அளவு
=================
ஒரு ராசியில் 1.5 ஆண்டுகள் இருந்து, 12 ராசிகளை கடக்க (12 X 1.5 = 18) அவை 18 ஆண்டுகள். அவ்வாறு ராகு 18 ஆண்டுகள் மற்றும் கேது 18 ஆண்டுகள். ஜாதக கால சக்கரத்தை கடக்க 36 ஆண்டுகள் எடுத்து கொண்டு முழுமையாக தன் சுற்றை முடித்து தோஷ நிவர்த்தி தருகிறது.
36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை தருகிறது. திருமண தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிஷ்டம் இன்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர்களுடன் ஒற்றுமை இன்மை என பல மன நிமைதியை இழக்கும் நிகழ்வுகளை தருகிறது.
எனவே ஜாதக பலன்களை தகுந்த நேரத்தில் தாராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரபடுவதால், இது கால சர்ப்ப தோஷம் என்று பெயர் பெற்றது.
ஆதாவது முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு என்னும் பாம்பின் வாயின் பிடியில் சிக்கி வேதனை பட்டு 36 ஆண்டுகள் கழித்து, கேது என்னும் பாம்பின் பல அனுபவங்கள் பெற்று வால் பகுதியில் தோஷ நிவர்த்தி கிடைக்கிறது.
தோச நிவர்த்திக்கு யோசனைகள்
==============================
உண்மையில் கால சர்ப்ப தோசம் என்பது பாம்புகளால் உருவாக்கவில்லை. ஜோதிடத்தில் அனைத்தும் ஒரு வகை குறியீடுகளே ராகு கேது என்பது கொடிய பலன்களை தரும் கிரகங்கள் என்பதால் அவை சர்ப்பன்களுக்கு ஒப்பிடு செய்யபடுகின்றன. இவை உங்கள் மூதாதையர் செய்த பாவங்களே. அவற்றை போக்க இறை வழிபடு, யோக சித்தி அடைந்த சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதி வழிபாடு,தான தர்மங்கள், குல தெய்வ வழிபாடு, நம் குழு முநூர்களின் காலில் விழுந்து ஆசி பெறுதல் இவை எல்லாம் ராகு கேதுவால் உருவாகும் கெடு பலன்களை தாங்கும் சக்தியை நம் உடலுக்கு மனதுக்கும் அளிக்கிறது.
முடிவாக, ராகுவும் கேதுவும் தரும் அனைத்து தோஷங்களும் முன்னோர்கள் வழி வந்தவை என்பதை மனதில் கொள்க. அதனை முறையாக இறைவழிபாடு மூலமும், சித்தர்கள் அருள் பெற்றும் தோச நிவர்த்தி அடையலாம். நிகழ காலத்தில் செய்யும் நல்ல செயல்கள், தோச நிவர்த்திக்கு செய்யும் பிராத்தனைக்கு உறுதுணையாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. கால சர்ப்ப தோசம் கூறும் விடயம் என்னவெனில், தற்காலத்தில் நாம் செய்யும் பாவம், நம் சந்ததிகளை ராகு மற்றும் கேது உருவில் பாதிக்கும் என்பதே.

காரஹோபாவநாஸ்தி

காரஹோபாவநாஸ்தி
----------------------------------
எமது பாரம்பரிய வேத ஜோதிடத்தில் ஒரு முக்கிய அம்சம் காரஹோபாவநாஸ்தி ஆகும். குறித்த காரகன் ,காரக வீட்டில் இருப்பது அதனை கெடுக்கும் "காரஹோபாவநாஸ்தி" என்ற அமைப்பு என எல்லோராலும் அறியப்படுகிறது. காரகன் தனது காரக பாவத்தில் இருக்க, அந்த பாவத்திற்கு உரிய மனித உறவுக்கு மட்டுமே பாதிப்பைத் தருமேயன்றி மற்ற காரகங்களுக்கு அல்ல என்பதை நாம் நினைவில் கோள்ள வேண்டும். உதாரணமாக 5 ஆம் பாவத்துக்குக் காரகரான குரு 5 இல் அமர குழந்தைப் பிறப்புக்கு பாதிப்புத் தருமேயன்றி மற்ற 5ம் பாவகாரகங்களுக்கு அல்ல. அதனால் தான் 2ல் குரு அமர காரஹோபாவநாஸ்தி இல்லை, 4ல் புதன் அமர காரஹோபாவநாஸ்தி இல்லை, 8ல் சனிபகவான் அமர காரஹோபாவநாஸ்தி இல்லை, 10ல் சனிபகவான் அமர காரஹோபாவநாஸ்தி இல்லை .

கடும் சோதனைகள்  வருவது ஏன் ...?

கடும் சோதனைகள்
வருவது ஏன் ...?
🌼கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...?
.
🌼சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
🌼கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.
🌼நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.
மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள்,
🌼அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !
எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?
🌼வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது. நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.
🌼ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.
கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.
🌼விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்
சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை.
🌼சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.
எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.
🌼உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.
🌼கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்...
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்....
வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்....
கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்...
🌼பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...
சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.
🌼உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.
கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்..

என்ன தானம் கொடுத்தால் என்ன நன்மை நிகழும்

என்ன தானம் கொடுத்தால் என்ன நன்மை நிகழும்.? புராணங்கள் சொல்லும் விதிமுறைகள்.?
நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...
1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
2. வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.
3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
4. கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
5. தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.
6. நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.
7. தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
8. வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.
9. தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.
10. நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.
11. அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.
12. பால் தானம் - துக்கம் நீங்கும்.
13. தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.
14. தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.
15. பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்

Saturday, 28 November 2015

"காக்கும் தெய்வம் கால பைரவர்"

"காக்கும் தெய்வம் கால பைரவர்"
அறுபத்து நான்குயோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்டபைரவ யோகினிகள் யார்,
யார் என்பதைக் காண்போம்.
அசிதாகபைரவர்-ஸ்ரீபிராம்ஹி,
குருபைரவர் - ஸ்ரீமாகேஸ்வரி,
சண்டபைரவர் - ஸ்ரீகெளமாரி,
குரோதன பைரவர் - வைஷ்ணகி,
உன்மத்த பைரவர் - வாராஸ்ரீ
, கபால பைரவர் - இந்திராணி,
பீஷண பைரவர் - சாமுண்டி,
சம்ஹார பைரவர் - சண்டிகாதேவி
ஆகியோர் ஆவர்.

ஐயப்பனின் 108 சரண கோஷங்கள்

ஐயப்பனின் 108 சரண கோஷங்கள்
ஒரு நண்பர் நான் சபரி மலை செல்கிறேன் வருகிறாயா என கேட்க என்னதான் அங்கே இருக்கு பார்த்து வருவோம் என கிளம்பினேன்
நூற்றி எட்டு சரணகோஷம் உள்ளது என சொன்னார்
நான் மலை ஏறும்போது அதிகம் பேர் சொன்ன சரண கோசம்
ஏத்தி விடய்யா தூக்கி விடய்யா தான் காரணம் அவ்வளவு மிக பெரிய ஏற்றம் அது
அது போல்தான் வாழ்க்கையும் சில சமயம் மாட்டி கொள்வோம்
அந்த சமயமும் இதை சொல்லலாம்
சரி அந்த 108 சரண கோசம் கீழே
1. சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா
11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. அன்ன தான பிரபுவே சரணம் ஐயப்பா
15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா
18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஆனந்த ஜோதியே சரணம் ஐயப்பா
25. ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
28. இன்னலை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
30. இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா
40. எருமேலி வாழும் கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
53. கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
54. கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
55. சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
56. சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஷாம்புகுமாரனே சரணம் ஐயப்பா
61. சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
77. மகர ஜோதியே சரணம் ஐயப்பா
78. வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. கானக வாசனே சரணம் ஐயப்பா
80. குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
93. பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
94. பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
97. பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா
98. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா
100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
105. சச்சிதானந்த சொரூபியே சரணம் ஐயப்பா
106. சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
107. சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

புனர்பூ தோசம்

சனி, சந்திரன் சேர்க்கை அல்லது பரிவர்த்தனை அல்லது ஒன்றையொன்று பார்த்துக்கொண்டால் அது புனர்பூ தோசம் ஆகும்.
இவ்வமைப்பு பெற்றவர்கள் மனம் ஏதாவது ஒரு வகையில் சஞ்சலத்துடன் இருக்கும்.
சந்திரன் அதிவேகமாக ஒரு ராசியை கடப்பவர். சனி பகவான் ஒரு ராசியை மெதுவாக கடப்பவர். இவ்விரு கிரகங்களும் சம்பந்தம் பெறும் போது செய்யும் செயல்களில் பரபரப்புடன் செயல்பட்டாலும் முடிவுகள் எடுப்பதில் மனதை திணறடிக்கச் செய்யும். தடுமாற்றத்தை உண்டாக்கும். இதில் சூரியன் சம்பந்தம் உண்டானால் புனர்பூ தோசம் நீங்கிவிடும்

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்
மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன .அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது .
சக்கரம் என்பது சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும் .பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்..கலியுகத்தில்மனிதன் , பிறவிப்பெருங்கடல் சுழலில் சிக்கி, சிறு துரும்பு கிடைக்காதா கரை சேர, என ஏங்கித்தவிக்கும் வேளையில், நான் இருக்கிறேன் உனக்கு , நீ நினைக்கும் துரும்பாக இல்லை, ஆழ்கடலில் நிம்மதியாக வழிநடத்தி உன்னைக் கரை தேற்றும் ஞானக்கப்பலாக, என கலியுக மாந்தர் அனைவரையும், அரவணைத்துக் கடைத் தேற்றும் அற்புத காக்கும் தெய்வம் தான் ஸ்ரீ சக்கராத்தாழ்வார்
சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள் .சுதர்சனம் மங்களமானது .
"ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம " என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும் .
இவருக்கு உகந்த நாள் ----வியாழன் ,சனி .
கொடிய முதலையிடம் மாட்டிக் கொண்டு போரிட முடியாமல் ஆதிமூலமே !என்று அலறிய
கஜேந்திரன் என்னும் யானையை காப்பாற்ற முன் வந்ததும் இந்த சக்கரமே .
சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு அவன் செய்யும் 100 பிழைகளை பொறுத்து கொள்வதாக வாக்களித்தார் கிருஷ்ணன்.சிசுபாலன் 101 வது பிழைகளை புரிய ,கிருஷ்ணனின் ஆணைப்படி ,சீறி எழுந்து அழித்ததும் இந்த சக்கரம் தான் .
விஷ்ணு எப்போதெல்லாம் வைகுண்டத்தை விட்டு மண்ணுலகில் அவதாரம் செய்கின்றாரோ அப்போதெல்லாம் இந்த சக்கராயுதமும் ஓர் அவதார புருஷராகப் பிறவியை எடுப்பது குறிப்பிடத்தக்கது. வராக அவதாரத்தின்போது ஹிரண்யாட்சன் என்னும் அசுரனை அழிக்க வராகத்தின் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார்.
ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். மகாவிஷ்ணு, ராமஅவதாரம் எடுத்தபோது அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார்
பரசுராமர் அவதாரத்தின்போது அவரது ஏர்க்கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார். கிருஷ்ண அவதாரத்தின்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து நீதி நிலைக்கப்பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர்..
சக்கரத்தாழ்வார் மகிமை சொல்லில் அடங்காத ஒன்றாகும். இவர் மந்திரங்களால் ஆன மூர்த்தி ஆவார். மந்திரங்களால் அதிகமாகத் துதிக்கப்படும் மூர்த்தி என்றும் சொல்லலாம்..
தீயவர்களை அழிக்கவே ,விஷ்ணு கையில் இருக்கும் சக்கரத்தாழ்வார் எனும் ஸ்ரீ சக்கரம்
செயல்படுகிறது .சக்கரத்தாழ்வாரை தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் கீழ்வரும் பலன்கள் கிடைக்கும். கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர். இவரை எவரும் எதிர்க்க மாட்டார்கள். அனைவரும் இவர்கள் மேல் அன்பைப் பொழிவார்கள்..எங்கெல்லாம் அநியாயமும், அட்டகாசமும், அயோக்கியத்தனமும் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் உதவிக்கு வரக்கூடிய மூர்த்தி யார் என்றால் இந்தச் சக்கரத்தாழ்வார்தான்.திருமோகூர் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதியில் உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ஶ்ரீ சக்கரத்தாழ்வாரை சரணாகதி அடைந்து அவர் தம் தாழ் பணிந்தால், நம் பாவ வினைகளைப் போக்கி, நல் வாழ்வு அமைத்துக்கொடுத்து , நற்கதி அளிப்பார்.
சக்கரத்தாழ்வார்
(எதிரிகளை வெல்ல)
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

சப்தரிஷிஸ்வரர்

சப்தரிஷிஸ்வரர் " கோயில்
திருச்சிராப்பள்ளி-திருதவத்துறை(லால்குடில்) சப்தரிஷிஸ்வரர் கோயில்
சப்தரிஷிகள்(ஏழு முனிவர்கள்)
அத்திரி,பிறகு,புலஸ்தியர்,வசிட்டர்,கெளதமர்,ஆங்கீரசர்,மரிசீ
மரிசீனுடைய பேரன் சூரியன்
சூரியனுடைய மகன் சனி
அத்திரினுடைய மகன் சந்திரன்
சந்திரனுடைய மகன் புதன்
ஆங்கிரசருடைய மகன் வியாழன்(குரு பிரகஸ்பதி)
வசிஸ்டரின் பரம்பரையிலிருந்து வந்தவர் செவ்வாய்
ஒருகாலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டிச் சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ் செய்து குழந்தையாகத் தோன்றினார். ரிஷி பத்தினிகள் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குழந்தைக்கு பால் கொடுத்தனர். இச்செய்தியை ஏழு முனிவர்கள் கேட்டு மனைவிமார்களை சபித்து விரட்டி விட்டார்கள். இது காரணமாக முருகனும் ஏழு முனிவர்களை சபிக்க அவர்கள் சாபம் நீங்கும் பொருட்டு திருவையாற்க்குச் சென்று தங்கி அங்கிருந்து இத்தலத்துக்கு வந்து தவம் செய்து தங்கள் சாபம் நீங்கப் பெற்று சிவபெருமான் திருவருளை பெற்றனர். சப்தரிஷிகள் தவம் செய்த தலம் ஆதலால் திருதவத்துறை என்றும், சப்தரிஷிகளுக்கு அருள் புரிந்தமையால் சப்தரிஷிஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றது.

கோவில்களுக்கு போனால் ஏன் மனம் அமைதி பெறுகிறது

கோவில்களுக்கு போனால் ஏன் மனம் அமைதி பெறுகிறது
நான் சொல்கிற ஆன்மிகம் கண் மூடி மந்திரம் சொல்வதோ
அல்லது மற்றவர் சொல்வதை டப்பா அடிப்பதோ அல்ல
அறிவியல் பூர்வமான ஆன்மீகத்தை சொல்ல விரும்புகிறேன்
ஏன் கோவில் செல்வதால் மனம் அமைதி அடைகிறது என்பது தெரியுமா
கடவுள் சக்தி வடிவம் ஆனவர்
அவர் மிக பெரிய சக்திகளில் ஐக்கியம் ஆகி உள்ளார்
நம் பழைய முன்னோர்கள் அதில் மிக பெரிய தில்லாலங்கடி
இன்று ஸ்கேன் பண்ணி பார்ப்பதை மன வலிமையால்
பார்த்தவர்கள்
கோவில் என்பது ஏதோ ஒரு கல்லில் செய்யப்பட்டது அல்ல
இதன் ஓரு ரகசிய செய்தி
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
உடனே நரசிம்மர் கதை தெரியும் என்று சொல்லி விடாதீர்கள்
எங்கு சக்திகள் இறங்கி உள்ளதோ அந்த கற்களில் இருந்து கட்டப்பட்டவை சில கோவில்கள்
இதை எவ்வாறு கண்டு பிடிப்பது
பாலகுமாரன் சொல்வார்
நிறைய அதிர்வலைகள் இருக்கும் என்று
சாதரணமாய் உங்கள் மனதில் பெரும் குழப்பம் இருக்கும் ஆனால் சில கோவில் போய் வந்தால் முற்றிலும் மாறும்
நான் அதிகமாய் நாடுவது மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில்
அங்கு உள்ள கற்களில் மிக பெரிய தெய்வ சக்தி அடங்கி உள்ளது
அங்கு ஒரு ஒரு மணி நேரம் போய் உட்கார்ந்து விட்டு வந்தால் சில விசயங்கள் எனக்கு அமைதி பெற்று விடும்
எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி கோவில் உள்ளது
திருச்சி மலை கோட்டை சென்று வந்த போது இது நடந்தது
மதுரை மீனாக்ஷி கோவிலில் அம்மன் பிரகாரம் சென்று வந்தால் இந்த அமைதி கிடைக்கும்
சாமியை தரிசனம் செய்ய வேண்டியது இல்லை அங்கு உள்ள தூண்களின் அருகே இருந்தால் போதும் அதில் உள்ள ஒரு வகையான காந்த சக்தி உங்கள் மனதை
ஒரு முகப்படுத்தும்
குறிப்பாய் நமது அறுபத்து மூன்று நாயன் மார்களும் இதனை அறிந்தவர்கள்
நமது கோவில்களில் கற்கள் அமையப் பெற காரணம் இதுதான்
எல்லா கற்களிலும் தூண்களிலும் இறை சக்தி உள்ளது
இது பல விசயங்களை சரி செய்யும்
ஏழரை சனி இருக்கும் மனிதர்களுக்கு
மன அழுத்தம் அதிகரிக்கும் காரணம் வாழ்க்கையில்
ஒரு சுற்றிற்கு இருபத்தைந்து வருடம்
ஏழரை ஆண்டுகள் உங்களை வலிமைப்படுத்த
மன அழுத்தம் சனி பகவானால் கொடுக்கப்படும்
இதனை தாண்டி செல்ல இறை அருள் முக்கியம்
அதனை நமது கோவில்கள் சரிபடுத்தும்
எனவே கோவில் என்பது மிக பெரிய சக்தி பீடம்
அதனை முறைப்படி சென்று வணங்கி வாருங்கள்
சில வீடுகளில் கணவன் மனைவி பொருத்தம் இல்லாமல் இருப்பார்கள்
அவர்கள் மாதம் ஒரு முறை இருவரும் சேர்ந்து
அதிக அதிர்வு உள்ள கோவில்கள் சென்று வந்தால் மனம் ஒருமைபட்டு ஒன்று சேர்வார்கள்
மிக பழைய கோவில்கள் அனைத்தும் மிக சரியான கற்களில் கட்டப்பட்டவை
எனவே கோவில் சென்று அந்த தூண்களில் அருகே உட்கார்ந்து பாருங்கள்
இருநூறு ரூபாய் கொடுத்து அருகே சென்று இறைவனை பார்பதை விட
இது அதிக அமைதி கொடுக்கும்
இதே போல் பழமையான மசூதி பழமையான தேவர் ஆலயம் அதிலும் உண்டு
அன்னை வேளாங்கண்ணி யில் இந்த அதிசயம் நடக்கும்
நாகூர் தர்காவில் இந்த அமைதி கிடைக்கும்
இறைவன் சக்தி வடிவம் ஆனவர்
அவர் எங்கும் வியாபித்து உள்ளார்

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு..

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு..எந்த டெக்னாலஜியும் இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க?? அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . . கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ. மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் . சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? cow கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் . அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

சிவன் சொத்து குல நாசம்

சிவன் சொத்து குல நாசம்
குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம் மூலம் ராவணன் வானில் பவனி வந்து கொண்டிருந்தான்.
இடையில் கயிலாய மலை குறுக்கிட்டது.
அதைச் சுற்றிச் செல்ல ராவணனுக்கு கவுரவக் குறைச்சலாக இருந்தது.
சிவனிடம் பெற்ற வரத்தின் பலனால், சகல உலகங்களையும் அவன் அடிமைப்படுத்தி வைத்திருந்தான்.
நவக்கிரகங்கள் கூட அவனுக்கு அடிமைப்பட்டிருந்தன.
அவன் சிம்மாசனம் ஏறும் போது ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு கிரகநாயகரும் வந்து படுத்துக் கொள்வார்கள்.
அவர்களின் முதுகின் மேல் அவன் ஏறிச்செல்வான்.
சிவபக்தர்கள், நவக்கிரகங்களைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்பது இதன் தாத்பர்யம்.
அவனது தந்தை விச்வரஸும் சிறந்த சிவபக்தர்.
வழிவழியாக சிவ பக்தர்களாக இருந்ததால், வலிமை மிக்கவர்களாக அவர்கள் விளங்கினர்.
வரம் தந்த சிவனின் இருப்பிடத்தையே அலட்சியப்படுத்தினான் அவன்.
அப்போது, கயிலாயத்தின் காவலரான நந்தீஸ்வரர், ராவணனிடம், ராவணா!
நீ சிறந்த சிவபக்தன் என்பதை நான் அறிவேன்.
இவ்வழியாக வருபவர்கள் கயிலாய மலையைச் சுற்றிச் செல்வதே வழக்கம்.
நீயும் அப்படியே செல்.
அதுதான் முறை, என்றார் பவ்வியமாக.
ராவணனுக்கு கோபம் வந்து விட்டது.
காளை முகம் கொண்ட நந்தியை, குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, எனக்கே புத்தி சொல்கிறாயா! போடா குரங்கே!
என கடுமையான வார்த்தைகளால் திட்டினான்.
ஒருவர் அழகில்லாமலோ, உடல் குறையுடனோ இருந்தால் அவர்களின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவது பெரும் பாவத்தைக் கொண்டு வரும்.
ராவணன் தேவையில்லாமல் நந்திஸ்வரரைத் திட்டியதால் அவனது தவவலிமை குறைந்தது.
நந்தீஸ்வரர் பெரும் வயிற்றெரிச்சலுடன், ஏ ராவணா!
என்னைக் குரங்கென்று பரிகாசம் செய்த நீயும், உன் தேசமும் அதே குரங்குகளால் அழிந்து போவீர்கள்! என்று சாபமிட்டார்.
நாம் ஒருவரைப் பழித்தால், என்ன சொல்லி பழிக்கிறோமோ, அதே பழி நம்மையே திரும்பத் தாக்கும்.
அதன்படி இலங்கை ஆஞ்சநேயர் உள்ளிட்ட வானரங்களால் அழிந்தது பின்னால் நடந்த கதை.
ராவணன் நந்தீஸ்வரரை மீறி கயிலாய மலையைக் கையால் தூக்கினான்.
அப்போது, சிவ பெருமான் தன் பெருவிரலால் மலையை அழுத்த, இடுக்கில் கை சிக்கிக் கொண்டது.
மாட்டிக் கொண்டவன் அலறினான்.
ராவணன் கதறிக் கொண்டிருந்தான்.
சிவபெருமானே! ஆணவத்தால் அழிந்தேன்!
தாங்கள் குடிகொண்டிருக்கும் கயிலாய மலையின் பாரம் தாங்காமல் ஆற்றல் இழந்தேன்.
என் கைகள் மலையிடுக்கில் சிக்கி நைந்து போய்விட்டதே!
நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளியேறுகிறதே!
கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் கரைந்து விடும் போல் இருக்கிறதே!
என்னை விடுவியுங்கள்!
தாங்களே உயர்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டேன்.
நந்தீஸ்வரன் மீது கொண்ட கோபத்தால், உங்கள் இருப்பிடத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றேன்.
தவறு தான். மன்னியுங்கள்.
என்னை விட்டு விடுங்கள்...
பக்தனின் அவலக்குரல் சிவபெருமானின் காதுகளில் விழுந்தது.
ஆனால், சிவன் சொத்து குலநாசமாயிற்றே!
சிவனின் இருப்பிடத்தில் யார் கை வைக்கிறார்களோ, அவர்களின் குடும்பம் நன்றாக இருக்காது.
குறிப்பாக, சாகும் நேரத்தில் கடுமையான வேதனைகளைச் சந்திக்க நேரிடும்.
வழி வழியாக இது தொடரும்.
தனக்கு நேர்ந்த இந்த அவலம், தன்னை மட்டுமின்றி தன் பிள்ளையான இந்திரஜித் போன்றவர்களையும் தாக்குமோ என்ற கவலை வேறு அவனுக்குபிறகு தனது நரம்பை கம்பியாக்கி, ஒரு கையை மீட்டும் தண்டாக்கி சாமகானம் இசைத்து இறைவனை மகிழ்வித்தான்.
இசைக்கு வசமான சிவனும் அவனை விடுவித்தார்

Friday, 27 November 2015

பகவத்கீதை

பகவத்கீதை மொத்தம் 18 அத்தியாயம் உடையது
முதல் 6 அத்தியாயம் பிரம்மசாரிக்கு சொல்வது
இரண்டாம் 6 அத்தியாயம் குடும்பஸ்தனுக்கு
மூன்றாம் 6 அத்தியாயம் சந்யாசம் ஏற்பவனுக்கு

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம் அறிவோமா?!...
பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.
உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்...
அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.
சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக தலங்களில் , ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி,திருச்செந்தூர்,திரு குற்றாலம், திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை போன்ற) தென் மேற்குப் பகுதியில் சூரியக் கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.
அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவ தானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவ தானியங்களையும் அந்த மரக் கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும்.
அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.
கர்மவினைகளை வெற்றி கொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்...

குந்தி

மஹாபாரதப் பாத்திரங்களின் பெயர்க்காரணங்கள்
குந்தி {Kunti} = குந்திபோஜனின் (வளர்ப்பு) மகள்
இயற்பெயர் : பிருதை {Pritha}
பெற்ற தந்தை : சூரன் {சூரசேனன்}
வளர்ப்புத் தந்தை : குந்திபோஜன்
கணவர் : பாண்டு
பிள்ளைகள் : கர்ணன், யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்
குறிப்பு:
யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாக சூரன் {சூரசேனன்} இருந்தார். சூரசேனருக்கு பிருதை {Pritha} என்ற மகளும், *வசுதேவர் என்ற மகனும் பிறந்தனர்.
சூரசேனன், தான் முன்பே வாக்கு கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும் மைத்துனனுமான {தந்தையின் சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளை {பிருதையை} சுவீகாரமாகக் கொடுத்தான். {பிருதை {Pritha} குந்திபோஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்றே அழைக்கப்பட்டாள்}
*வசுதேவர் : வசுதேவரின் பிள்ளைகளே கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகியோர். குந்தியின் மகன் அர்ஜுனனே சுபத்திரையின் கணவன் என்பதனையும் அறிக

இந்து மதத்தில் அற்புதங்கள்

இந்து மதத்தில் அற்புதங்கள்
நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.
திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.
வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.
திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.
ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.
கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.
கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.
முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.
திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.
காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
திருப்பத்தூர் - தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.
வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.
அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,
மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்
பெறுகிறார்கள்.

வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? 

வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்?


''விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?''''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்'னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க'ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?'னு கேட்டாங்க.'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்'னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

நவபாஷாணம் என்றால் என்ன?

பாஷாணங்கள்

நவபாஷாணம் என்றால் என்ன?

சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான் பாஷாணங்கள். ஆனால் பாஷாணம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பழநியில் அருள்பாலிக்கும் மூலவரான தண்டாயுதபாணியும், அவரை உருவாக்கிய சித்த புருஷரான போகரும்தான். ஒன்பது வகையான பாஷாணங்களை பிசைந்து பழனியில் உள்ள மூலவரை போகர் உருவாக்கியதாக கூறுவர். இந்த பதிவின் நோக்கம் நவபாஷாண சிலை பற்றியதன்று. இத்தனை சிறப்பானதாக கூறப் படும் பாஷாணங்களைப் பற்றியதே....

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என அறியப் படும் இவற்றை சித்தர்கள், தங்களின் மருத்துவ முறையில், அடிப்படை மூலகங்களில் ஒன்றாக பயன் படுத்தினர். இரசவாதத்திலும் பாஷாணங்கள் பயனாகிறது. இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். பாஷாணம் என்பது பொதுப் பெயரே, இவற்றில் நிறைய வகைகள் இருக்கிறது.

இந்த பாஷாணங்கள் விஷத் தன்மையுடையவை ஆதலால், நேரடியாய் உட்கொண்டால் மரணம் விளையும், ஆனால் அன்றைக்கே சித்தர்கள் அவற்றை பக்குவப் படுத்தி விஷத்தையே மருந்தாக்கி பயன்படுத்தினர். இன்றைய நவீன அலோபதி மருத்துவ முறை, பெரும் செலவிலான ஆராய்ச்சிகளின் முடிவில் பாம்பின் விஷத்தை மருந்துகளாக மாற்றி பயன்படுத்துவது உங்கள் நினைவுக்கு வரலாம். சித்தர் பெருமக்கள் நமக்குத் தரும் ஏராளமான ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.

பாடாணங்கள் குறித்து மிகைப் படுத்தப் பட்ட செய்திகளே ஊடகத்தில் உலவுகின்றன. இந்த செய்திகள் எங்கிருந்து பெறப்படுகின்றது என்பதில் நிறைய கேள்விகளும், ஐயங்களும் இருக்கிறது. ”போகர் 12000” என்ற நூலில் போகர் பாடாணங்கள் குறித்து விளக்கமாய் கூறியிருக்கிறார். போகரின் கூற்றுப் படி பாஷாணங்கள் அடிப்படையில் இரு வகையாக பிரித்துக் கூறுகிறார். அவை “பிறவிப் பாஷாணங்கள்”,”வைப்புப் பாஷாணங்கள்” ஆகும்.

பிறவிப் பாஷாணங்கள் என்பவை இயற்கையாக கிடைக்கக் கூடியவை. வைப்புப் பாஷாணங்கள் என்பவை பல மூலகங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப் படுவது. இந்த இரு பிரிவுகளின் கீழ் பல வகையான பாஷாணங்கள் உள்ள்ளன

அரசு வேம்பு திருமணம்

அரசு வேம்பு திருமணம்
வேப்பமரமானது ஊருக்கு காவல் தேவதையாகவும், உந்து சக்தியாகவும் விளங்குவதால், கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் ஆலயங்களில் வேப்பமரம் போற்றி வணங்கப்படுகிறது. காடுகள் மற்றும் வெட்டவெளிப் பகுதிகளிலுள்ள அரசு முதலான மரங்களில் பிரம்மராட்சதர் போன்ற தீய தேவதைகள் இருக்குமென்பதால், அகால நேரங்களில் அங்கு போகக்கூடாது என்றும் தொடக்கூடாது என்றும் சொல்லிவைத்தனர். அவ்வாறு போகும் அவசியம் நேரிட்டால் வேப்பிலையுடன் செல்வார்கள். பாதுகாப்பு கருதி அம்மரங்களுடன் வேம்பையும் இணைத்துவைப்பர். எனவேதான் இந்த வேப்ப மரத்தை சர்வசக்தி மயமாகவும், நாராயணரின் சக்தியான நாராயணியாகக் கருதி தனித்தும், அரசு முதலான மரங்களுடன் சேர்த்துவைத்தும் வழிபட்டனர்.
இறையருளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு நம் முன்னோர் காட்டிய உயர்வான வழி இது. வேப்பமரக் கட்டையில் சூரியதேவனின் வடிவத்தை செய்து வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று சாத்திரங்கள் உரைக்கின்றன. தீயவர்களை விரட்ட செய்யப்படும் வேள்விக்கு ஏற்ற சமித்தாக வேம்பு விளங்குகிறது.
அரச மரத்தை மரங்களின் அரசன் என்று ஆண் பாலாகவும், வேப்ப மரத்தை அரசி என்று பெண் பாலாகவும் சிறப்பித்துக் கூறுவர். இவ்விரண்டையும் தனித்தனியாக ஆலயங்களில் வழிபடுகின்றனர். இரண்டையும் ஓரிடத்தில் ஒன்றாக நட்டு வளர்த்து, அவற்றுக்குத் திருமண வைபவம் நடத்திவைத்து, பின்பு தெய்வத் தம்பதிகளாக வழிபடுவதும் சிறந்த வழிபாட்டு நெறியாகும். நாராயணராகவும் நாராயணியாகவும் எண்ணி வழிபடுவதால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஈடேறும். நற்பிள்ளைப்பேறும் வாய்க்கும். எல்லாவித தோஷங்களும் நீங்கும்.
அரசு, வேம்பு திருமணச் சடங்கென்பது மிகவும் புனிதம் வாய்ந்தவொன்று. முறையாக செய்துவைக்கப்படும் திருமணத்தால் முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். பிறந்தகால ஜாதகத்திலுள்ள வாழ்க்கைத்துணை தோஷம், பிள்ளைச்செல்வ தோஷம், நாக தோஷங்கள் விலகும். விதிமுறைப்படி செய்யப்படும் பூஜை, திருமணம், 108 முறை வலம்வருதல் ஆகியவற்றால் விரும்பிய எப்பயனையும் பெறலாம். கோடி கன்னிகா தானம் செய்வதால் கிட்டும் புண்ணியத்தை ஒரு அரசு- வேம்பு திருமணத்தால் பெறலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா..?
========================================================
மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி,
மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை,
மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது.
மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார்,
மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பெயர் பொற்றாமரைக் குளம்,
மீனாட்சி அம்மன் கோயில் விமானத்தின் பெயர் இந்திர விமானம்.
பஞ்ச சபைகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சபையின் பெயர் வெள்ளியம்பல சபை.
மீனாட்சி அம்மன் கோயிலில் கால் மாறி நடனமாடியவர் நடராஜர்.
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மிகப்பெரிய விநாயகர் பெயர் முக்குறுணி விநாயகர்.
மதுரையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்த நாயன்மார் மூர்த்தி நாயனார்,
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறியவர் நக்கீரர்.
மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள கோபுரங்கள் எத்தனை..?
14 கோபுரங்கள்.
மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமானது தெற்கு கோபுரம்.
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புகழ்பெற்ற மண்டபம் எது..?
ஆயிரங்கால் மண்டபம் நவகிரக ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோயில் புதன் ஸ்தலமாகும்.
மீனாட்சி குங்குமத்தில் காந்தம்:
மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.
இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.
அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள்.
அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது.
இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.
உடனே, அதை பரிசோதனை செய்தார்.
அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார்.
இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார்.
இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார்.
சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார்.
அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார்.
இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.
நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம்.
அன்னையின் அருட்கடாட்சம் என்றும் நிலைத்திருக்கச் செய்வோம்.

பதினான்கு உலகங்கள் எவை?

புராணங்களின் படி உலகம் தோன்றியது எப்படி?
ஸ்ரீ குருவாயுரப்பனை வணங்கி இதை நான் சொல்கிறேன். முன்னர் மஹாப்ரளயம் உண்டானபோது ஸத்வ, ரஜோ, தமஸ் குணங்கள் சமமாக இருந்தன. அப்போது மாயையும் இறைவனிடம் ஒடுங்கியே இருந்தது. அச்சமயம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் காணப்பட்டது. இந்தப் ப்ரபஞ்சமே இல்லை. அப்போது பிறப்பும், இறப்பும், பகலும், இரவும் ஆகிய எதுவும் இல்லை. இறைவன் மட்டுமே சச்சிதானந்தத் திருமேனியுடன் தனியாக இருந்தார்.
ப்ரளயத்திற்கு முன்னால்இறைவன் அவனது உன்னதமான ஆனந்தமான லீலையில் இருந்தார். அப்போது மூன்று குணங்கள், காலம், கர்மங்கள், அனைத்து உயிர்கள், காரியமான ப்ரபஞ்சம் ஆகிய அனைத்துமே மறைவாக இருந்தன. அவை அனைத்தும் இருந்ததாக வேதங்களும் கூறுகின்றன. அப்படி அவை இருந்ததால் தான் ஆகாய மலர் போன்று மீண்டும் அது தோன்றியது. (ஆகாய மலர் - கற்பனையான பொருள்).
மேலே கூறிய சச்சிதானந்த நிலையானது இரண்டு பரார்த்தம் வரை நீடித்தது (இரு பரார்த்த காலம் - ப்ரம்மனின் ஆயுள்) அந்தக் காலம் முடிந்த பின்னர் அவர் ஸ்ருஷ்டி செய்ய விரும்பினார் (இது வேதங்களில் - தத்ஜக்ஷத பஹுஸ்யாம் - நான் பலவாக மாறுவேன் என்று உள்ளது). அதற்கான அவன் பார்வையைக் கண்டு மாயை கலங்கியது. அந்த மாயையில் இருந்து காலம் என்னும் சக்தியும், கர்மங்களும், கர்மங்களுக்கு ஏற்ற சுபாவங்களும் தோன்றி அவை மாயைக்கு உதவியாக இருந்தன.
பகவான் மாயைக்கு அருகாமையில் இருந்தாலும், அதனுடன் கலவாத ரூபத்துடன் இருந்ததால் அவரை பலரும் ஸாக்ஷீ (பார்க்கக் கூடியவன்) என்று கூறுகின்றனர். அந்த மாயையின் பிரதிபிம்பமாக, ஆனால் வேறுபட்டதாகத் தோன்றும் ஜீவனும் அவனே ஆகிறான். காலம், கர்மம், சுபாவம் என்று பலவாக அவனால் ஏவப்பட்ட அந்த மாயையே விளங்குகின்றது. அது புத்தி தத்துவம் எனப்படும் மஹத் தத்துவத்தை உண்டாக்கியது
.
மஹத் தத்துவம் என்பது மூன்று குணங்கள் சேர்ந்ததாக இருந்தாலும், அது ஸத்வ குணத்தையும் அதிகமாக உருவெடுக்கச் செய்து மனிதர்களிடத்தில் (மனித தோன்றலுக்கு பின்) நான் என்ற அறிவை உண்டாக்குகிறது. மேலும் அதே மஹத் தத்துவம், தமோ குணத்தை அதிகரித்து மனிதனிடம் நான் பெரியவன். போன்ற மமதையை (அஹங்காரம்) வளர்க்கின்றது.
மேலே கூறிய அஹங்காரம் என்பது மூன்று குணங்களாக உருவெடுத்தது. அவை - ஸத்வம், ராஜஸம் மற்றும் தாமஸம் ஆகும். இவற்றுள் முதலாவதாக உள்ள ஸத்வ குணத்தில் இருந்து திசைகள், வாயு, சூரியன், வருணன், அச்வினிகள், அக்னிதேவன், இந்திரன், விஷ்ணுமித்ரன், ப்ரஜாபதி, சந்திரன், ப்ரும்மா, ருத்ரன், க்ஷேத்ரக்ஞன் ஆகிய தேவதைகள் தோன்றினர்.
பகவானது ஆணைக்கு இணங்க ஸாத்விக அஹங்காரம் என்பது மனம், புத்தி, அஹங்காரம் என்பவை இணைந்த சித்தம் ஸத்வ குணத்திலிருந்து தோன்றியது. ராஜஸ அஹங்காரம் என்பது பத்து இந்த்ரியங்களை உண்டாக்கியது. எஞ்சியுள்ள தாமஸ அஹங்காரம் என்பது ஆகாயத்தின் சூட்சுமமாக உள்ள சப்தத்தை உண்டாக்கியது. அந்த சப்தமே "ஓம்".
இந்த, ஓசையில் இருந்து ஆகாயமும், ஆகாயத்தில் இருந்து ஸபர்ஸ (தொடு) உணர்ச்சியும், ஸ்பர்ஸத்தில் இருந்து வாயுவும், வாயுவில் இருந்து ரூபமும், ரூபத்தில் இருந்து அக்னியும் உண்டானது. அக்னியில் இருந்து ரஸ்மும், ரஸத்தில் இருந்து நீரும், நீரில் இருந்து மணமும், மணத்தில் இருந்து பூமியும் உண்டானது. இப்படியாக வரிசையாக பஞ்ச பூதங்களை இறைவன் தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோற்றுவித்தான்.
இப்படித் தோன்றிய பஞ்ச பூதங்கள் ஐந்தும், பஞ்ச இந்தியங்களும் தனித்தனியாக இருந்தன. ஆகவே அவற்றால் எந்த ஸ்ருஷ்டியையும் செய்ய இயலவில்லை. அப்போது தேவர்கள் மற்றும் தேவதைகள் பலவிதமான ஸ்தோத்திரங்கள் மூலம் இறைவனையும், அவன் திருக்கல்யாண குணங்களையும் துதித்தனர் . உடனே இறைவன் மஹத்தத்துவங்களில் புகுந்து கிரியா (உண்டாக்கும்) சக்தியை அளித்தார். அதன் மூலம் பொன் போன்ற ப்ரம்மாண்டம் உருவானது.
இப்படி உருவான அண்டமானது, இறைவனால் ஏற்கனவே உருவாக்கிய நீரில் ஆயிரம் வருடம் இருந்தது. பின்னர், இறைவன் அதனைப் பிளந்தார். அப்போது பதினான்கு லோகங்களின் ரூபம் கொண்டு விராட் புருஷன் என்ற உருவத்தை அவர் தரித்தார். பல ஆயிரக்கணக்கான கைகள், கால்கள் தலைகள் போன்றவற்றுடன் அனைத்து உயிர்களுமாக இறைவன் தோற்றமளித்தான். அதனால் தான் அனைத்து உயிர்களுமே இறை அம்சம் பொருந்தியதாக சொல்கிறது இந்து தர்மம். இறைவனில் இருந்து பிரிந்து பின்னர் இறைவனிடமே சேருகிறது. அதுவே மோக்ஷம்.
இந்த பதினான்கு உலகங்கள் எவை என்பதை பார்ப்போம், உலகங்களாக உருவெடுத்த இறைவனின்,
உள்ளங் கால்கள் பாதாள லோகம்,
காலடியின் மேல் பாகம் ரசாதலம்,
கணுக் கால்கள் மகாதலம்,
முழங்கால்கள் தலாதலம்,
முட்டுகள் சுதலம்,
தொடைகளின் கீழ், மேல் பாகங்கள் விதலம் மற்றும் அதலம் என்று இரண்டாகவும்,
இடுப்பு பூலோகம்,
நாபி ஆகாசம்,
மார்பு சுவர்க்க லோகம் (இந்திர லோகம்),
கழுத்து மஹர் லோகம்,
முகம் ஜனர் லோகம்,
நெற்றி தபோ லோகம்,
தலை சத்ய லோகம்.
இவ்விதம் பதினான்கு உலகங்களையும் சரீரமாக உடையவன் பகவான். ஆகவே அவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த ஈரெழு பதினான்கு , உலகங்களையும் பார்த்தால், நாம் இருப்பது பூலோகம், இதற்க்கு கீழே எழும், மேலே ஆறும் உள்ளது. இதை தான் இன்று விஞ்ஞானிகளும், நாம் இருக்கும் பால்வெளி மண்டலம் போல் இன்னும் பல உள்ளன என்று தெரிய தொடங்கியுள்ளனர்.

ஆதிவிநாயகர்

பார்வதிதேவியின் புத்திரனாக அவதரித்த விநாயகர் ஆரம்பத்தில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் மனித உருவத்துடன் தான் இருந்தார். பிரம்மன் உயிர்களைப் படைக்கும் பணியை மேற்பார்வையிட சென்றார். அந்நேரத்தில், தொழிலில் சற்று கவனமில்லாமல், தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டார் பிரம்மன். கொட்டாவி சோம்பலின் அறிகுறி. சோம்பல் வந்து விட்டால், துன்பம் பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்து விடும். அந்த கொட்டாவியில் இருந்து ஒரு அரக்கன் பிறந்தான். இவன் தன்னைப் படைத்த பிரம்மனை வணங்கினான். ஐயனே! நீங்கள் உபயோகிக்கும் மண் உள்ளிட்ட எந்தஉபகரணத்தில் இருந்தும் நான் பிறக்கவில்லை. வாயில் இருந்து பிறந்துள்ளேன். தாயில்லா பிள்ளையான நான் தங்களின் பிள்ளையாக இருக்க விரும்புகிறேன், என்றான். பிரம்மா இதற்கு சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட அவன், அப்படியானால், நான் கேட்கும் வரத்தையாவது தாருங்கள், என்றான். பிரம்மா சம்மதிக்க, நான் யாரைக் கட்டித் தழுவுகிறேனோ அவர்கள் சாம்பலாக வேண்டும், என்றான். பிரம்மா சம்மதித்து விட்டார். அவ்வளவு தான். தன்னை மகனாக ஏற்காத பிரம்மனையே கட்டிப்பிடிக்க முயன்றான் அவன். பிரம்மா ஓடிவிட்டார். இதைப் பார்த்த விநாயகர் தந்தையிடம் சென்று நடந்த சம்பவத்தை சொன்னார். பிரம்மா இல்லாததால் உயிர்களின் பிறப்பு நின்றது.கொட்டாவியில் இருந்து பிறந்த சிவந்த நிறமுடைய அந்த அரக்கன் சிந்தூரன் என தனக்கு பெயர் சூட்டிக் கொண்டான். தேவலோகத் தெருவில் போவோர், வருவோரை எல்லாம் கட்டிப்பிடித்து பஸ்பமாக்கினான். அவனைக் கண்டு நடுங்கிய தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை நோக்கினார். தந்தையின்பார்வையை குறிப்பால் உணர்ந்த கணபதி சிந்தூரனைக் கொல்ல முடிவெடுத்தார். இந்நிலையில் மகேஸ்வரன் என்ற குரு (பிரகஸ்பதி)பக்தன், அவரை தினமும் கோயிலில் சென்று வணங்குவான். குரு அவன் பக்திக்கு மகிழ்ந்து, என்னை வணங்கிய உன் சிரம் இந்த உலகத்தாரால் வணங்கப்படுவதாக,என வரமளித்தார். அதற்கான நாளை எதிர்பார்த்திருந்தான் மகேஸ்வரன். ஒருநாள் அவன் தன் பரிவராங்களுடன் வீதியுலா சென்ற போது, அவ்வூருக்கு நாரதர் வந்தார். மன்னன் அவரைக் கவனிக்காமல் சென்றான். கோபமடைந்த நாரதர் அவனை அசுரனாகும்படியும், யானத்தலையுடன் திரியும்படியும், சிவனால் அத்தலை அறும்படியும் சபித்தார்.இதன்பிறகு மகேஸ்வரன் அட்டூழியம் செய்து திரிந்தான். சிவபெருமான் அவன் சிரத்தை அறுத்தார். பிரகஸ்பதியிடம் ஓடோடிச் சென்ற விநாயகர், உங்கள் விருப்பப்படி உங்களால் வரம் தரப்பட்ட மகேஸ்வரனின் தலையை நான் பொருத்திக் கொள்வேன். அவன் தலையுடன் கூடிய என்னை எல்லாரும்பணிவர், என்றார். பின் அந்த தலையை தன் திருமேனியில் தாங்கி காட்சி கொடுத்தார். அன்று முதல் விநாயகருக்கு கஜானனர் என்ற பெயர் ஏற்பட்டது. ஒருநாள் சிந்தூரன் விநாயகரை எதிர்க்க வந்தான். சர்வசக்தியுள்ள அந்தக்கடவுள் சிந்தூரனை அப்படியே தூக்கி தன் மத்தகத்தில் சாந்தாக பூசிக்கொண்டார். தேவர்கள் மகிழ்ந்தனர். வடமாநிலங்களில், விநாயகர் உடல் முழுவதுமே செந்தூரம் பூசுவதன் காரணம் இதுவே....

மூன்று முகங்கள்

திலோத்தமையால் சிவனுக்கு வந்த மூன்று முகங்கள்
அசுரச் சகோதரர்களுக்கு {சுந்தனுக்கும் உபசுந்தனுக்கும்} அழிவை ஏற்படுத்த ஒரு தீர்மானம் செய்து, விஸ்வகர்மனை {Viswakarman-தேவலோக தச்சன்} அழைத்தார். விஸ்வகர்மனைத் தன் முன் கண்ட பெரும் ஆன்மத் தகுதி கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்} அவனிடம் {விஸ்வகர்மனிடம்}, "அனைத்து இதயங்களையும் கொள்ளை கொள்ளும் தகுதி கொண்ட ஒரு மங்கையைப் படை {உற்பத்தி செய்}. பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி அவரது உத்தரவை மரியாதையுடன் பெற்றுக் கொண்டு, அண்டத்தின் பெரும் தச்சன் {விஸ்வகர்மா} மிகுந்த கவனத்துடன் ஒரு மங்கையைப் படைத்தான். விஸ்வகிரீத் {Viswakrit} முதலில் அனைத்து அழகு குணங்களையும் தொகுத்து அந்த மங்கையின் மேனியில் சேர்த்து படைத்தான். நிச்சயமாக, அந்த தெய்வீக மங்கை, பெரும் ரத்தினக் குவியல்களால் படைக்கப்பட்டாள். விஸ்வகர்மனால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த மங்கை, மூவுலகில் உள்ள பெண்களிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதிருந்தாள். பார்வையாளர்கள் பார்த்து ஸ்தம்பிக்காத ஒரு சிறு பகுதியேனும் அவளது உடலில் இல்லாதிருந்தது. இயல்புக்கு மிக்க தனது அழகால், தெய்வீக ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருந்து அனைத்து உயிர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டாள். அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால், பெருந்தகப்பன் அவளுக்கு திலோத்தமை {Tilottama} என்ற பெயரைக் கொடுத்தார். அதற்கு உயிர் கொடுத்து, அதன் வாழ்க்கை துவங்கிய போது, அந்த மங்கை {திலோத்தமை} பிரம்மனிடம் தலை வணங்கி, கரங்கள் கூப்பி, "படைக்கப்பட்ட அனைத்து பொருளுக்கும் தலைவா {பிரம்மா}, நான் என்ன பணியைச் சாதிக்க வேண்டும். நான் எதற்காகப் படைக்கப் பட்டேன்?" என்று கேட்டாள். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "ஓ திலோத்தமா, அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தனிடம் செல். ஓ இனிமையானவளே, உனது கொள்ளை கொள்ளும் அழகால் அவர்களை மயக்கு. ஓ மங்கையே, அங்கே சென்று, அந்த அசுரச் சகோதரர்களின் {சுந்தன் உபசுந்தனின்} பார்வை உன் மீது பட்டவுடன், உனது அழகு என்ற செல்வத்தை அடைய எண்ணம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும்படி நீ நடந்து கொள்" என்றார் {பிரம்மன்}.
நாரதர் தொடர்ந்தார், "அந்த மங்கை {திலோத்தமை}, பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தேவர்கள் சூழ்ந்த அந்தச் சபையைச் சுற்றி நடந்தாள். அந்த சிறப்பு மிகுந்த பிரம்மன் அப்போது தனது முகத்தை கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார். மகாதேவனும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருந்தான். மற்ற தேவர்கள் அனைவரும் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார்கள். மற்ற முனிவர்கள் அனைவரும் எல்லா திசைகளையும் பார்த்து அமர்ந்திருந்தார்கள். தேவர்கள் அமர்ந்திருந்த அந்த சபையை வலம் வந்த அந்த திலோத்தமையை, இந்திரனும் அந்தச் சிறப்புமிக்க ஸ்தானுவும் (மகாதேவனும் {சிவனும்}) மட்டும்தான் தங்கள் மன அமைதியை இழக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த மங்கை{திலோத்தமை} தனது அருகில் வந்தபோது மிகுந்த ஆசைக்குள்ளான மகாதேவனின் {சிவனின்} உடலில் (திலோத்தமைக் கண்டு) தென்புறத்தில் முழுவதும் மலர்ந்த தாமரையைப் போல ஒரு முகம் தோன்றியது. அவள் {திலோத்தமை} அவனுக்குப் {சிவனுக்குப்} பின்புறம் சென்றதும் மேற்கில் ஒரு முகம் தோன்றியது. அந்த மங்கை அந்தப் பெரும் தேவனுக்கு {சிவனுக்கு} வடக்கு புறத்தில் சென்றதும், நான்காவதாக அவனது உடலில் வடக்கு பக்கம் ஒரு முகம் தோன்றியது.
(அந்த மங்கையைக் காண ஆவலுடன் இருந்த) தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} ஒவ்வொன்றும் அகலமாகவும், சிவந்தும் முன்பும் பின்பும், இடுப்பிலுமாக ஆயிரம் கண்கள் தோன்றியன. இப்படியே பெரும் தேவன் ஸ்தானுவுக்கு {சிவனுக்கு} நான்கு முகங்களும், பலனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} ஆயிரம் கண்களும் உண்டாயிற்று. இதன் நிமித்தமாக அனைத்து தேவர்களும் முனிவர்களும், தங்களை வலம் வந்த திலோத்தமை சென்ற திசைகளில் எல்லாம் தங்கள் முகத்தைத் திருப்பினர். தெய்வீகமான பெரும்பாட்டனை {பிரம்மனைத} தவிர அங்கிருந்த சிறப்பு வாய்ந்த அனைவரின் பார்வையும் {திருஷ்டியும்} திலோத்தமையின் உடல் மீது விழுந்தது. திலோத்தமை (அசுரர் நகரத்திற்குக்) கிளம்பியதும், அவளது அழகின் செல்வத்தின் மீது இருந்த மதிப்பால் அனைவரும் அந்தப் பணி முடிந்ததாகவே நினைத்தனர். அப்படி அந்த திலோத்தமை சென்றதும், அண்டத்தின் முதல் காரணமான அந்தப் பெரும் தலைவன் {பிரம்மன்} தேவர்களையும் முனிவர்களையும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

காசி நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?

காசி நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.
சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.
இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.
அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம்.
இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.
ஓம் நமசிவாய!

கருவறையில் ஏன் பெண்கள் செல்வதில்லை

கல்லிருக்கும் கருவறையில் என்னதான் இருக்கு..ஏன் பெண்கள் அதுவும் தீட்டானோர் செல்வதில்லை..நல்ல கேள்வி..சிலைக்கு சக்தி உண்டா?..என்ன சக்தி அங்கே இருக்கு.,யாருக்கு தெரியும்.?..தெரியல அநேகருக்கு...சித்தர்கள் காலத்துல சித்தர் சமாதியின் மேல் கோயில் எழுப்பப்பட்டன..சித்தர்கள் லம்பிகா யோகா என்ற முறையில் யோக பயிற்சி செய்து உலக மக்கள் உய்வதற்கு ஜீவசமாதி ஆனார்கள்.அவர்கள் சமாதி உள்ள கோவில்களில் வலப்புறமாக(clockwise) அவர்களின் சக்தி சுழலும்..சாதாரண நிலையில் மனிதனுக்கும் ஜீவ காந்தம் வலப்புறமாகவே சுழலும்..பெண்கள் மாதவிடாய் காலங்களில் அவர்களின் ஜீவ காந்தம் இடப்புறமாக சுழலும்..சித்தர்கள் சமாதியான கோவில்களுக்கு செல்லும் போது அங்குள்ள வலச்சுழல் அலை இடப்புற சுழல் அலை மோதும் போது இன்னும் சக்தியை இழக்க நேரிடுவதால் பெண்கள் கோவிலுக்குள் செல்வதில்லை..ஆனால் சாதாரண கோவில்களில் சிலைக்கு அடியே தாமிர தகட்டில் உரு ஏற்றி கோடி அர்ச்சனை செய்யும் போது தாமிர தகட்டுக்கு சக்தி ஏற்படுகிறது..அதில் இருந்து வெளிப்படும் சக்தி அலையும் வலப்புறமாகவே சுழலும்..இங்கும் தீட்டு பெண்கள் செல்லும் போது வலப்புற இடப்புற சுழல் விளைவால் தாமிரத்கடு சக்தி இழக்கிறது..ஆகவே தீட்டுபெண்களை உள்ளே விடுவதில்லை..இதில் உள்ள விஞ்ஞானத்தை விளக்க ஞானியர் தவறியதால் பெரியார்கள் உருவானார்கள்..

" தத்தாத்ரேயர் "

"மும்மூர்த்திகளின்" அம்சமாக உருவான " தத்தாத்ரேயர் "
அத்திரி மகரிஷியின் பத்தினி அனுசூயாவின் பதிவிரதை சோதிக்க நினைத்த மூன்று தேவிகளும் மும்மூர்த்திகளிடம் முறையிட்டார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா இம்மூவரும் துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.
அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.துறவிகள் தங்களுக்கு பசிப்பதாகக் கூறினர். உள்ளே உணவெடுக்கச் சென்ற அனுசூயாவிடம், தாயே… எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. எங்களுக்கு யார் உணவிட்டாலும், திகம்பர (நிர்வாணம்) நிலையிலேயே வாங்குவது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே உணவு பெறுவோம்… என்றனர். அனுசூயா நல்லறிவு மிக்கவள். சாதாரண மனிதர்கள் இப்படி கேட்க மாட்டார்கள். இது ஏதோ தெய்வ சங்கல்பம் என நினைத்தவள், சற்றும் பதட்டமின்றி, அதற்கென்ன… அவ்வாறே உங்கள் பசியை தீர்த்து விடுகிறேன்… என்றவள் வீட்டுக்குள் சென்றாள். கணவரின் பாத தீர்த்தத்தை எடுத்து வந்து,இறைவா… நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையென்றால், இந்த துறவிகளை குழந்தைகளாக மாற்று… என்று கூறி அவர்கள் மேல் தெளித்தாள்.
அந்த பத்தினி தெய்வத்தின் பக்தியால், மூவரும் குழந்தைகளாகி விட்டனர். அவர்கள் விரும்பியபடியே அவர்களுக்கு பாலூட்டி, பசி தீர்த்தாள். அத்திரி முனிவரும் வந்தார். நடந்ததைக் கேட்டார். தன் ஞான திருஷ்டியால், வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களை அன்புடன் அணைத்தார். அந்த குழந்தைகள் மூன்று தலையும், ஆறு கைகள் மற்றும் ஓருடலும் கொண்டதாக மாறின. இந்த தகவல் நாரதர் மூலம், மூன்று தேவியருக்கும் தெரிய வரவே, அவர்கள் அனுசூயையிடம் வந்து, தங்கள் கணவன்மாரை திருப்பித்தர வேண்டினர்.தேவியரே… இந்தக் குழந்தை எங்களிடமே வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றி வைத்தால் உங்கள் கணவன்மாரைத் திருப்பித் தருவேன்… என்றாள். மூன்று தேவியரும் அதற்கு ஒத்துக் கொள்ளவே, அனுசூயை மும்மூர்த்திகளை மானசீகமாக வேண்டினாள். அப்போது மூன்று தெய்வங்களும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை ஒரு முனிவராக விளங்குவான்… என்று கூறி ஆசியளித்து, குழந்தைக்கு, தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டினர். தத்தாத்ரேயன் என்றால், மும்மூர்த்திகளுக்கு சமமானவர் என்று பொருள்.

எச்சில் இலை எடுத்த இறைவன்

எச்சில் இலை எடுத்த இறைவன்
பாண்டவர்கள் ஒரு முறை "இராஜ சூய யாகம்' செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்தனர்.
"சபையில் முதலில் பூஜிக்கத் தகுந்தவர் யார்?' என்ற வினா எழுந்தது.
பல்கலைகளில் தேர்ந்தவனான சகாதேவன் எழுந்து, ""ஆன்றோர்களே! அரசர்களே! இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூஜை பெறத் தகுதியுடையவன்! அத்தகை யோரில் நம்மிடையே கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அதனால் அவருக்கே பூஜை செய்வோம். அப்படிச் செய்தாலே எல்லா உயிர் களுக்கும் செய்ததற்கு ஒப்பாகும்'' என்றான்.
அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் எதிராக சிசுபாலன் மட்டும் இதனை எதிர்த்தான்.
அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர். நிலைமை மோசமடைந்தது.
இதனை அறிந்த கண்ணன்... பிறரின் பழிக்கு ஆளாகாமல் சிசுபாலனை தானே அழித்தார்.
பின்னர் சகாதேவன் சொன்னபடி கண்ணனுக்கு முதல் பூஜை செய்தனர்.
கண்ணன் ஓர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து அருங்காட்சி அளித்தான்.
இராஜசூய வேள்வி தொடர்ந்து நடைபெற்றது.
ஒரு பக்கம் பல்லாயிரம் பேருக்கு விருந்து படைக்கப் பட்டது.
இந்நிலையில், ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணனைக் காணவில்லை. எல்லாரும் தேடினர். நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.
இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் காணப்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பால் கொட்டும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தான்.
"முதற்பூஜை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா...!' என எல்லாரும் வியந்தனர்.
""கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் இருக்க, நீர் இக்காரியம் செய்யலாமா? முதற்பூஜை பெற்ற நீ எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா...? உடனே நிறுத்து... எச்சில் பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு சிம்மாசனத்தில் இருந்து காட்சி தா'' என வேண்டி நின்றனர்.
""எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா? ஏவலர் எடுக்கும்போது அக்கறை இல்லாமல் இங்கும் அங்கும் ஒழுகவிட்டுத் தரையை சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்வது மறு பந்தியில் அமருவோர்க்கு இடையூறாய் இருக்காதா...? ஆதலால் எச்சில் இலையை எவ்வாறு சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று செய்து காட்டினேன். சொல்லிக் காட்டுவதை விட செய்து காட்டுவது மிகப் பயன்தானே...?
அதுமட்டுமா...? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா...? முதல் பூஜை பெறுவதும் ஒரு தொழில்தான். எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில்தான். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூஜை பெற்ற நான் எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதினால் நான் பெற்ற முதல் பூஜை தகுதிக்காக பெற்றதாகுமா? பகட்டுக்காகத்தானே பெற்றதாக ஆகும்'' என்றான் கண்ணன்!

அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமா இறக்கவில்லை.
அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நட த்திய வேட்டை குரூரமாக இருந்தது.
‘அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ…’
அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலை கள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண் ட அஸ்வத்தாமா காற்றி னும் கடிதாய் விரைந்தான்.
“துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலை களைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித் தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசி யில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!”
பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற் றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட் டுகின்றன. இறுதிப் புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புல ன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக் கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திர ங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய் விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடு ங்குகிறான்.
துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழு த்து வருகின்றது.
“மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்க ளின் தலையைக் கொண்டு வந்திருக்கிறா யே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்று வருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட் டாயே!”
வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல் லை.
அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். ‘பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?’ மடங்கி அழத்தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ண ன்.
“அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன் னும் ஏன் வஞ்சத்தோடு திரி கிறாய்! நீ பிராம ணன்… கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும்பார்… மகா பாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிரா சையும், தனிமையும், துரோகமும் பீடிக் கப்பட்டோர்! அதோ பார்! ஏக லைவனை… உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கு ம் பித்தனாய் த்திரிந்து கொண்டிருப்பதை… இன்னும்… இன்னும் துக்கத்தாலும், துரோ கத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனை பே ர்… அம்பை தொடங்கி, சிகண்டியும், அரவா னும், கர்ணனும்… இதோ உத்தரை முடிய… வேண்டாம் அஸ்வத்தா மா… உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கி வைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்து விடும்.”
அஸ்வத்தாமா கைகூப்பினான். ” இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத் தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ் வத்தாமா இறந்தான் என்று பொய் யுரைத்து குருத் துரோகத்தின் மூலம் என் தந்தையைக் கொன்றா ர்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமக னான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபா ணியான கர்ணனைக் கொ ன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரிய னை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்… இன்னும் பாரதயுத்த மெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சி செய்து வந்தி ருக்கின்றது.
கிருஷ்ணா! இனி நீயிருக்கும் வரை பாண்டவ ர்களைக் கொல்ல முடி யாது என்று எனக்குத் தெரியும். நான் போ கிறேன் கிருஷ்ணா!
இன்னும் சொல்கிறே ன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன் ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அத ன் சுழலில் சிக்குபவர் எப் போதும் இறப்பதி ல்லை. அவர் கண்கள் என் றும் மூடுவதில்லை. துரோ கிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமி யெங்கும் நிரம்பியிருக்கின் றது.
அதன் ஒலியி ல் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத் துக்கும் கதவ டைத்துப் போட ட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்”
அஸ்வத்தாமா காற்றோடு கரைந்து போனான். யுகாந்திரங்களைத் தாண் டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ் சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன் னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கி றான்.
அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவி ல்லை!
ஒரே நேரத்தில் இரு பிரம்மாஸ்திரங்கள் மோதிக் கொண்டால் பூமி அழிவைச் சந்திக்கும் என்பதை உணர்ந்த வேத ஞானி வியாசர் தன் ஞான சக்தியின் மூலம் இரு பிரம்மாஸ்திரங்களையும் தடுக்கிறார்.அர்ஜீணனையும் அஸ்வத்தாமனையும் பிரம்மாஸ்திரங்களை திரும்பப்பெறச் சொல்கிறார்.அர்ஜீணன் பிரம்மாஸ்திரத்தை திரும்பச்செய்ய, அஸ்வந்தாமனோ மறுக்கிறார். உயிர்களின் நலன் கருதி யாராவது ஒரு உயிரை தானமாக தர முன் வருகிறான் தருமன், ஆனால் அஸ்வத்தாமனோ அபிமன்யுவின் மனைவி உத்திரையின் கருவை நோக்கி செழுத்துகிறார்.அவள் கருவை அழித்து உறைவிடம் செல்கிறது பிரம்மாஸ்திரம்.அத்தோடு பாண்டவர் மற்றும் பாஞ்சால தேசத்தின் அனைத்து வாரிசுகளும் அழிந்து போகிறார்கள்.(சிகண்டி மற்றும் திருஷ்டதுய்மணன், அவர்கள் மகன்கள்,திரொளபதியின் மகன்கள் என அனைவரையும் முதல் நாள் இரவே கொன்றுவிட்டார்).காவியங்களில் முதல் கருவருத்தல் என்ற நிகழ்ச்சிக்கு வித்திட்டவர் அஸ்வத்தாமன்.
இவ்வளவு அரும்பாடுபட்டு போரை வென்று ஒரு உபயோகமும் இல்லை என்று எண்ணி பாண்டவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.அஸ்வத்தாமனின் செயல் கண்டு வெகுண்டு எழுகிறார் ஸ்ரீகிருஷ்ணர், அஸ்வத்தாமனை அழிக்க தன் சுதர்சண சக்கரத்தை ஏவுகிறார், ஆனால் அஸ்வத்தாமன் நெற்றியில் இருக்கும் சாமந்தாகமணி அவரை காப்பாற்றுகிறது.அவருடைய சாமந்தாகமணியை பறிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்."கருவில் இருக்கும் குழந்தையைகூட கொன்ற மகாபாதகனான நீ பூமி அழியும்வரை உயிரோடு இருந்தாலும் உனக்கு உறவென்று யாரும் இருக்கமாட்டார்கள், உன் சாமந்தாகமணி உன்னிடம் இல்லாததால் இனி உன்னை எந்த நோயும் தீண்டும், உன் முன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும் நிற்காமல் வடியும், உனக்கு பசியோ, தாகமோ,தூக்கமோ எதுவும் இருக்காது, மனித நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நீ நுழையக்கூடாது" என்று சாபம் இடுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். உடனே "பகவானே, நான் செய்தது குற்றமென்றால் நீங்களும் பாண்டவர்களும் செய்தது எந்த விதத்திலும் தர்மம் இல்லை, நீங்கள் இட்ட சாபம் என்னை கேட்குமாயேன் அதன் முழுகாரணகர்த்தா தாங்களே, அதனால் என் தேகத்தில் இருந்து வடியும் உதிரத்தை காலம் உள்ளவரை அருந்திக் குடிக்கும் புழுவாக தாங்கள் ஜனனம் எடுக்கவேண்டும்" என்று சாபம் தருகிறார்.கடவுளால் சாபம் பெற்ற ஒரே மனிதனும், கடவுளுக்கே சாபம் தந்த ஒரே மனிதனும் அஸ்வத்தாமனே.
தருமன் அஸ்தினாபுர அரியணை ஏறியதும் காட்டுக்குள் சென்று வேத முனிவர் வியாசரின் ஆசிரமத்தில் சேர்ந்து வேதங்களை போதிக்கிறார் அஸ்வத்தாமன்.மனவந்திரங்களையும், அதர்வண வேதத்தையும் திருத்தி எழுதுகிறார்.வியாசரின் அறிவுரைப்படி அன்னை யோகமாயாவை நோக்கி தவம் புரிந்து ஸ்ரீகிருஷ்ணரின் சாபத்தில் இருந்து விடுபடுகிறார்."துவாபர யுகம் முடிந்து கலி யுகத்தில் கி.பி 4044ம் வருடம் நான் கல்கி அவதாரம் எடுக்கும் சமயத்தில் நீயும் நானும் சந்திப்போம், அப்போதுதான் உனக்கு முக்தி கிடைக்கும், அதுவே மனித குலத்தின் அழிவும் ஆகும், அதுவரை மனித இனத்திற்காக நீ வாழவேண்டும்" என்று வரமளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.36 ஆண்டுகள் கழித்து பரிக்ஷித்து மகாராஜன் அரியணை ஏற்றதும் தம் வாழ்நாளை முடித்துக் கொள்ள இமயம் புறப்பட்ட பாண்டவர்கள் அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும், அதன் பிறகு அவர் மனித சமுதாயத்தின் கண்ணில் படவில்லை என்றும் புராணங்கள் சொல்கின்றன.
இன்றும் குஜராத் மாநிலத்தின் ஆசிர்கார் மாவட்டத்தில் உள்ள மலைக்காடுகளில் அவர் சுற்றி வருவதாகவும், பலர் அவரை நேரில் கண்டதாகவும் வதந்திகள் உண்டு.அவர் நெற்றியில் பெரிய காயமும் அதில் இருந்து உதிரம் வடிந்துகொண்டே இருக்கும் என்றும், அவர் சுமார் 10அடி உயரம் இருப்பார் என்றும் மக்களிடையே ஒரு பேச்சு. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.அந்த மலையில் உள்ள மிகப்பழமையான சிவன் கோவிலுக்கு தினமும் அதிகாலையில் வந்து அவர் பூஜித்து செல்வதாகவும், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்காத மலர்களும், இமயத்தின் சாரல்களில் மட்டுமே வளரும் அதிசயமான மலர்களைக் கொண்டு அர்ச்சணை செய்வதாகவும் அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரும் என்ன ஆனார்கள்?

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரும் என்ன ஆனார்கள்?
காந்தாரியின் சாபத்தை ஏற்ற கிருஷ்ணர் மகாபாரத போர் முடிந்தவுடன், தன் மகன்கள் இறந்த சோகத்தால், யாதவர்களும் இதேப்போன்ற சாவை சந்திப்பார்கள் என காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணரை சபித்தாள். இந்த சாபத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார்.
குறும்பு செய்த கிருஷ்ணரின் மகன்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் மகன்கள் சில ரிஷிகளிடம் குறும்பு செய்து விளையாடியதால் சாபத்தை பெற்றனர். கர்ப்பிணி பெண்ணை போல் வேடமணிந்து கொண்ட சம்பா பிற யாதவர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கிருந்த சில ரிஷிகளிடம் சென்று, தன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கூறும்படி கேட்டனர். அதில் கோபமடைந்த ஒரு ரிஷி, அவள் ஒரு இரும்பு துண்டை பெற்றெடுப்பாள் என்றும், அது அவனின் வம்சத்தையே அழித்து விடும் என்றும் சாபமளித்தார்.
பிரபாசாவிற்கு புனித பயணம் தீய சக்திகளும், பாவ நடவடிக்கைகளும் துவாரகையில் அதிகரித்தது. மற்றவர்களை பிரபாசாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.
ஒருவருக்கொருவர் கொன்று இறந்த யாதவர்கள் பிரபாசாவில் யாதவர்கள் மது அருந்தி போதையில் மதி மயங்கினார்கள். அவர்களுக்குள் மூண்ட சண்டையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் கொன்று இறந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர், தரூகா, வப்ரூ மற்றும் பலராமன் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால் பின்னர் வப்ரூவும், பலராமனும் கூட இந்த உலகை விட்டு பிரிந்தனர்.
அவதாரத்தை முடித்த அர்ஜுனன் அர்ஜுனனிடம் தகவலை கூறி உதவி கேட்க தரூகாவை அனுப்பி வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த சமயத்தில், ஒரு வேடன் செலுத்திய அம்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் தவறுதலாக பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். வேடனை தேற்றிய ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு பகவானின் ஓவியத்தோடு ஒன்றிப்போனார். அதோடு இந்த அவதாரத்தை முடித்துக் கொண்டு உலகத்தை விட்டும் பிரிந்து சென்றார்.
கிருஷ்ணரின் மனைவிகளை காக்க முடியாமல் தோற்ற அர்ஜுனன் அதன் பின் அங்கே வந்து சேர்ந்தான் அர்ஜுனன். ஸ்ரீ கிருஷ்ணரின் விதவை ராணிகளை காக்க முயற்சி செய்தான். ஆனால் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போட்ட சண்டையில் தோல்வி அடைந்தான். பாண்டவர்களின் வாழ்க்கைக்கான நோக்கம் முடிந்து விட்டது என வேதவியாசர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்.
இமயமலை பயணத்தை மேற்கொண்ட பாண்டவர்கள் பரிக்ஷித்திற்கு யுதிஷ்டர் முடிசூட்டிய பின்பு 5 பாண்டவர்களும் திரௌபதியுடன் இமயமலை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். மலையின் மீது செல்லும் போது ஒரு நாய் அவர்களை பின்பற்றி சென்றது.
கீழே விழுந்த பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி மலையை ஏறும் வழியில் திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்ஜுனன் மற்றும் பீமன், அதே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து இறந்தனர்.
யுதிஷ்டரை வரவேற்ற இந்திரன் யுதிஷ்டர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவரை வரவேற்க சொர்க்கத்திற்கு தன் ரதத்தில் வந்து சேர்ந்தான் இந்திரன். அந்த நாயை அப்படியே விட்டு விட்டு, அந்த ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்கு செல்லுமாறு யுதிஷ்டரிடம் இந்திரன் கூறினார்.
சோதனையில் வென்ற யுதிஷ்டர் அந்த நாய் தனக்கு நண்பனாகி விட்டதால், தன்னுடன் நாய் வராத வரை தான் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டேன் என மறுத்தார் யுதிஷ்டர். உடனே அந்த நாய் எமனாக உரு மாறியது. தன் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டதாக யுதிஷ்டரிடம் எமன் கூறினார். அதன் பின் யுதிஷ்டர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.
பாற்கடலுக்குள் மூழ்கிய துவாரகை இப்படி பல விதமான நிகழ்வுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரும் பாண்டவர்களும் இந்த உலகை விட்டு சென்றனர். துவாரகை நகரம் பாற்கடலுக்குள் மூழ்கியது. மெதுவாக தற்போதுள்ள கலியுகமும் தொடங்கியது.

Thursday, 26 November 2015

சபரிமலை விரதம்

சபரிமலை விரதம்
ஏன் சபரிமலை போன்ற கோவில்களுக்கு விரதம் இருந்து செல்கிறோம்
இறை பக்தி என்றாலும் அதன் பின் புலம் வேறு
சின்ன பிள்ளைகளிடம் ஏமாற்றி சோறு ஊட்டுவது போல் விரதம் இரு கடவுள் பலன் தருவார் என்று கூறி உள்ளார்கள்
வருடத்தில் ஒரு மாதம் கஷ்டம் அனுபவித்தால் நீங்கள் உணருவீர்கள்
எது கஷ்டம் என்று
பணக்காரர் என்றாலும் பச்சை தண்ணீரில்தான் குளிக்க வேண்டும்
தலையணை கூடாது செருப்பு போடாமல் நடக்க வேண்டும்
இதை நீங்கள் செய்ய காரணம்
மக்கள் எவ்வாறு கஷ்டம் அனுபவிக்கிறார்கள் என்பது தெரிந்தால் பணம் படைத்தவர்கள் உதவலாம் என்பதற்காகத்தான்
மேலும் ஒரு மாதம் கோபம், போதை தவிர்த்து விட்டால் அதே பழக்கம் வருடம் முழுக்க தொடரலாம் என்பதுதான் அது
மனிதன் என்பவன் ஒரு முப்பது நாட்களாவது கஷ்டம் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் விரதத்தின் நோக்கம்
காரணம் கஷ்டம் என்பது அனுபவித்து விட்டால் வாழ்க்கை என்பது எளிதாகி விடும்
எல்லா மதங்களிலும் இது உண்டு

மழை

ழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்
இரும்பு வியாபாரி--- கனமா பெய்யுது 
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது.... 
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க 
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது. 
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது. 
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது. 
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது. 
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது. 
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது 
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது 
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது 
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது, 
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது.

மஹா பாரதம் ராமாயணம் இரண்டும் என்ன சொல்கிறது தெரியுமா?

மஹா பாரதம்
ராமாயணம்
இரண்டும் என்ன சொல்கிறது தெரியுமா
ஒரு பெண்ணை மதியுங்கள் என்பதை கூறி கொண்டு இருக்கிறது
அவளை சந்தேகப் படாதே என்று ராமாயணம் கூறுகிறது
மக பாரதம் பெண்ணை போகப் பொருளாக வைக்காதே
என்று கூறுகிறது
பெண் பந்தயம் வைக்க கூடிய பொருள் அல்ல
பெண் உலகின் தெய்வம்
பெண்ணை மதியுங்கள்
அவள் மனசு வலிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்
காரணம் இந்த உலகம் தோன்றியதில் இருந்து நாம் பெண்களைத்தான்
அடிமை படுத்தி உள்ளோம்
இன்னும் பெண்கள்தான் காலை ஐந்து மணிக்கு எழுந்து இரவு பதினொரு மணி வரை வேலை பார்க்கிறார்கள்
பெண்ணை மதிப்பது என்றால் என்ன
பெண் வேலைகள் என்று எதுவும் இல்லை
பகிர்ந்து கொள்ளுங்கள்
அம்மாவுக்கு உதவி செய்யுங்கள்
மனைவிக்கு உதவி செய்யுங்கள்
சகோதரிக்கு உதவி செய்யுங்கள்
இந்த உலகின் ஜீவநதி பெண்
அவள் மனசு வலிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் எனபதுதான்
ராமாயணம்
மகாபாரதம்
சொல்லி விட்டு சென்று இருக்கிறது

கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் என்ன
கொஞ்சம் அறிவியல் பூர்வமாய்
பார்ப்போம்
சுஜாதா அவர்கள் சில கருத்துக்களை கூறினார்
இந்த பூமி தோன்ற முதல் காரணம் 
பிங் பாங் என்கிற வெடிப்பு அந்த வெடிப்பு தோன்றிய பின்புதான்
இயற்கை வளர்ந்தது
மழை பெய்து பாசி உற்பத்தி ஆகி பாசி அமீபா ஆகி உயிர் கிளம்பியது அதன் பின் படி படியாக உயிர் இனம் வளர்ந்து மனிதர் ஆனது
கடவுள் இல்லை என மறுப்பவர்கள் எல்லாவற்றிற்கும் விடை தந்து விட்டனர்
அவர்கள் விடை சொல்ல முடியாத ஒரே விசயம்
பிங் பாங் என்கிற வெடிப்பு எவ்வாறு தோன்றியது என்பதற்கு பதில் இல்லை
இந்த பிங் பாங் வெடிப்புதான் கடவுள் இருக்கிறது என்பதை அறிவியல் ஒத்து கொள்கிறது
அடுத்து இதயம் சிறுநீரகம் தசைகள் இவைகள் எவ்வாறு மிக சரியாய் செயல்படுகிறது என்பதை பார்க்கும்போது கடவுள் இருக்கிறார் என்பதை அறியலாம்
சரி கடவுள் எப்படி இருப்பார்
சிலை அல்லது ஒளி அல்லது ஒலி
எது இறைவன்
கொஞ்சம் குழப்பமான விசயம்
சத்குரு கூறுவது என்ன என்றால் சில இடங்களில் சக்தி வடிவமாக இறைவன் இருக்கிறார்
பெரிய மலைகள் பெரிய நதி இவைகளில் இருக்கிறார்
மிக பெரிய மலை குன்றுகளை சுற்றி சக்தி இருக்கும் என்பது சித்தர்களின் கூற்று
அது இமய மலை என்றாலும்
அல்லது திருப்பரங்குன்றம் என்றாலும்
நம் தமிழ் கடவுள் முருகன் மலை குன்றில் இருப்பார்
தமிழ் முதல் மொழி என்பதால் தமிழுக்கு தெரியும்
அப்படியானால் மலை குன்றுகள் அருகில்
சக்தி வடிவம் உள்ளது
முருகனின் ஆறு படை வீடுகளும் இதை குறிக்கும்
திருவண்ணாமலை மிக பெரிய சக்தி இடம்
ஏன் மலை குன்று சக்தி இடமாக இருக்கும்
இறைவன் எதிர் கால ஞானி\
குன்றில் வைத்து விட்டால் அனைவருக்கும் அந்த சக்தி பரவும் என்பதால்
மிக சிறந்த ஊர்களில் எல்லாம் கண்டிப்பாய் குன்று இருக்கும்
மதுரை திருச்சி தமிழன் மிக பெரிய ஆன்மீக அறிவு பெற்றவன் என்பதற்கு இது ஆதராம்
எனவே பௌர்ணமி களில் குன்று சுற்றி பாருங்கள்
ஒரு சின்ன மாற்றம் கிடைக்கும்
குறிப்பாய் கணவன் மனைவி என இணைந்து சுற்றினால் மிக பெரிய நன்மை கிரி வலத்தில் உண்டு
இன்னும் வரும் ...............

ஸ்ரீகிருஷ்ண மகிமை!

ஒருவன் மரணப் படுக்கையில் கிடந்தான். எதிரில் அவன் கண்ணுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த மான் குட்டியைப் பார்த்தான். 'அடடா... இந்த மான்குட்டி எவ்வளவு அழகு’ என்று பிரமித்தான். 'சிறு வயதில் இருந்தே இந்தக் குட்டியை நாம்தானே வளர்த்து வருகிறோம்’ என்று நினைத்து மகிழ்ந்தான். 'சரி... என் மறைவுக்குப் பிறகு, இந்த மானுக்கு யார் தண்ணீர் தருவார்கள்; உணவு கொடுப்பார்கள்?' என மானைப் பற்றிய நினைப்பிலேயே இருந்தவன்... இறந்து போனான். இதனால் அவன் அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தான்! ஆக, பக்தியுடன் திகழும் ஒருவர், தன் இறுதிக் காலத்தில் பகவானை நினைத்தால்தான் பகவானை அடையமுடியும்.
ஆனால் சரணாகதி அடைகிற சிந்தனையுடன் திகழ்பவனுக்கு அதெல்லாம் இல்லை. 'உன்னைத் தவிர வேறு கதியே இல்லை எனக்கு. நீதான் என்னை வழிநடத்தணும்; நீதான் என்னைக் காபந்து செய்யணும்; நீதான் என்னை ஆட்கொள்ளணும்’ என்று இறைவனிடம் எவனொருவன் சரணாகதி அடைகிறானோ, அவன் தன் இறுதிக் காலத்தில், கடவுள் பற்றி நினைக்கத் தேவையே இல்லை. 'என்னிடம் சரணாகதி அடைய நினைப்பவர், மரண வேளையில் என்னை நினைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் நினைவு தப்பியபடி மரணத்தைத் தழுவினாலும் நான் நினைவில் வைத்திருந்து, அவனை ஆட்கொள்வேன்; என் திருவடியில் அவனைச் சேர்த்துக் கொள்வேன்’ என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அதுதான் ஸ்ரீகிருஷ்ண மகிமை!

விதுரனின் வீட்டுக்குச் சென்றார் ஸ்ரீகிருஷ்ணர்

எவர் அழைத்தும் போகாமல், விதுரனின் வீட்டுக்குச் சென்றார் ஸ்ரீகிருஷ்ணர். 'நம்ம வீட்டுக்காவது, கிருஷ்ண பரமாத்மாவாவது, வருவதாவது’ என நினைத்திருந்த விதுரன், அவரின் வருகையைக் கண்டு நிலை தடுமாறினான். இங்கும் அங்குமாக அலைந்தான். என்ன செய்வது என்று பரபரத்தான். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே... என்று நினைத்துக் கொண்டே, அடுப்படிக்கு ஓடினான். 'அடடா... ஒண்ணுமே இல்லையே...' என்று அல்லாடினான். கண்ணில், வாழைப்பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு, கிருஷ்ணரிடம் வந்து, 'கிருஷ்ணா... இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே! மறுக்காமல் சாப்பிட்டு, உன் பசியை ஆற்றிக் கொள்வாயாக!' என்று கெஞ்சினான். அந்தப் பழத்தை வாங்க மறுத்துவிட்டார் கண்ண பரமாத்மா!
'கண்ணன் எப்பேர்ப்பட்டவன். அவன் நம் வீட்டு வாசலை மிதித்ததே மிகப் பெரிய புண்ணியம். நம் வீட்டிலெல்லாம் சாப்பிடுவானா?' என்று யோசித்தபடியே... 'பசியாயிருக்குமே கண்ணா... அதான்... இந்தப் பழங்களை...' என்று தயங்கித் தயங்கிச் சொன்னான்.
உடனே ஸ்ரீகிருஷ்ணர், ''உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது விதுரா'' என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதேநேரம், 'ச்சே... வீட்டுக்கு வந்தவரை, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது?' என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன்... ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து, அமரச் சொன்னான். முன்னதாக, அந்த ஆசனத்தைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
'என்னடா இது? நம் வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்டால், அவரை நாற்காலி அல்லது சோபாவில் உட்காரச் சொல்லி விடுவோம். ஆனாலும் இந்த விதுரன் ஏன் இப்படி அந்த ஆசனத்தை இவ்வளவு நேரம் தடவித் தடவிப் பார்த்தபடி இருக்கிறான்?' என்று குழப்பம் வருகிறதுதானே, நமக்கு?!
'நான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறவன். அவன்தான் எனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கண்ணன் தூது வந்தபோது, மிகப்பெரிய பள்ளம் தோண்டி, அதன் மேல் கம்பளம் விரித்து, அந்தக் கம்பளத்தின் மீது ஆசனமிட்டு கண்ணனை உட்காரச் செய்தான் துரியோதனன். ஸ்ரீகிருஷ்ணரின் பாரம் தாங்காமல், அந்த இருக்கை முறியவே... அவன் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தான். அங்கிருந்த வீரர்கள் அவனைச் சிறைப்பிடிப்பதற்காக நின்றிருக்க... அப்போது கண்ணபிரானின் திருவடியானது பூமியைத் தொட்டபடி இருக்க, அவன் திருமுடியோ... அந்த ஆகாயத்தைத் தொட்டபடி விஸ்வரூபமெடுத்து நிற்க, அந்த வீரர்கள் திகைத்துப் போனார்கள். திண்டாடினார்கள். தலைதெறிக்க அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்’ என்று மிக அழகாக விவரிக்கிறார் வேதவியாசர்.
சரி... அந்த ஆசனத்தை ஏன் தடவித் தடவிப் பார்த்தபடியே இருந்தான் விதுரன்?!
துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம், அவனைப் போலவே சிந்தனை கொண்டு, சுயநினைவின்றி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ... அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து, இம்சிக்கச் செய்திருக்கிறோமோ... துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு, அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ... எனப் பதைபதைத்தானாம் விதுரன்.
'விதுரா... கவலை எதற்கு? என் பசியை ஆற்றிவிட்டாய் நீ. நான் வந்ததும் என்ன செய்வது, என்ன தருவது என்று தெரியாமல் கலங்கித் தவித்தாயே... அந்த உன் கலக்கமே என் பசியைப் போக்கிவிட்டது. அதனால்தான் நீ பழம் தந்ததும் வேண்டாம், பசியாறிவிட்டேன் என்று சொன்னேன்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
எவ்வளவு பெரிய ஞானி விதுரன்! ஆனால் அந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்தான் கண்ணபிரான்.
ஞானிகளிடம் தெளிவு இருப்பதை பகவான் விரும்புவதே இல்லை. எவனொருவன், ஒரு விஷயத்தைக் கண்டு கலங்கித் தவிக்கிறானோ அவனே ஞானி. அப்படி ஞானியாகத் திகழ்பவரையே மதிக்கிறான்; அருள்கிறான்; அரவணைக்கிறான்; ஆட்கொள்கிறான் ஸ்ரீகண்ண பரமாத்மா என அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.
உலக விஷயங்களில் தெளிவாக இருங்கள்; பகவத் காரியத்தில் கொஞ்சம் கலங்கி, குழம்பியபடியே இருங்கள். குழப்பங்களுக்குத்தான் விடை கிடைக்கும்; கலங்கியபடி இருப்பவர்களுக்குத்தான் கடவுளின் பேரருள் கிடைக்கும்!

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்
ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச
வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா
செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்
பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று
எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட
வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய
வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்
கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம்
சொல்லி விட்டுச் சொல்ல
வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய
பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்
கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

கருணையுள்ள கண்ணன்

கருணையுள்ள கண்ணன்🌼
🌼அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார்.
🌼உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.
🌼அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
🌼அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் சொல்ல, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்...
🌼அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர்.
🌼கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
🌼என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.
🌼கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனை வரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி.
🌼என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்🌼.