jaga flash news

Wednesday, 30 March 2016

பற்றற்று வாழ்வதென்றால், அது எப்படி வாழ்வது?

பற்றற்று வாழ்வதென்றால்,
அது எப்படி வாழ்வது?
பற்றற்ற வாழ்க்கையென்றால்
எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
இருப்பது போதும்,
வருவது வரட்டும்..
போவது போகட்டும்,
மிஞ்சுவது மிஞ்சட்டும்...
என்று நம் வாழ்வில் எந்தவித சலனங்களுக்கும் ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும் என்பதை தான் நம் இந்து மதம் நமக்கு போதிக்கிறது.
என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.
பத்து லட்சம் வைத்திருப்பவர் பற்றற்ற வாழ்க்கை கொண்டவரா என்று கேட்டார். ஆமாம். ஆனால் அதில் ஒரு நிபந்தனை. அதில் ஏற்படும் அதிகரிப்பு அவரை மகிழ்ச்சியடைய செய்யகூடாது. அதில் ஏற்படும் குறைவு அவரை கவலையடைய செய்யாதிருக்க வேண்டுமென்றேன். ஆக, செல்வம்
இல்லை என்பதல்ல பற்றற்ற வாழ்க்கை. அந்தச் செல்வம் அவரது உள்ளத்தின் கவலையாக இருக்கக்கூடாது என்பதுதான் பற்றற்ற வாழ்க்கையாகும்.

அனுமனின"் "சுந்தரகாண்டம"் நூல் பாராயணம்

அனுமனின"்
"சுந்தரகாண்டம"்
நூல் பாராயணம் 🌼
🌼1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன்
பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட
விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன்
கூறியுள்ளார்.
🌼2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான்
மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும்
அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும்
சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர்
பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய்
விட்டது.
🌼3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும்
மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக
பெரியவர்கள் கூறியுள்ளனர்.
🌼4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த
அளவுக்கு படிக்கிறோமோ அந்த
அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
🌼5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால்
வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
🌼6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும்.
கஷ்டங்கள் தொலைந்து போகும்.
🌼7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால்,
வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
🌼8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான
திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய்
விடும்.
🌼9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால்
அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை,
துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு,
வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
🌼10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும்.
முடியாத செயல்கள் முடிந்து விடும்.
🌼11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம்
ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம்
உண்டாகும்.
🌼12. ராம நவமியன்று விரதம்
இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம்
படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
🌼13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற
நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான்.
எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க
வேண்டும் என்கிறார்கள்.
🌼14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள்
தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில்
இருந்து விடுபடலாம்.
🌼15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத்
தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு "ஜெய பஞ்சகம்''
என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம்
பெருகும்.
🌼16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக
வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய
ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.
🌼17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம்
செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும்
அகலும்.
🌼18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம்
தரும் சொர்க்கம் என்பார்கள்.
🌼19. பெண்கள் வேதத்தை சொல்லக் கூடாது என்பது விதி.
எனவே சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய
புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
🌼20. ராமாயணத்தில் மொத்தம்
24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள்
சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
🌼21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ,
அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல்
கிடைக்கும்.
🌼22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும்
நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.
🌼23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம்
படித்தால் மனம் லேசாகி விடும்.
🌼24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில்
33-வது ஸ்லோகம் முதல்
37-வது ஸ்லோகம் வரை உள்ள
ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால்
உடனே திருமணம் கைகூடும்.
🌼25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய
சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.
🌼26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள்
தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் ஆண்
குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
🌼27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில்
இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும்
குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
🌼28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன்
முழு பலனும் கிடைக்கும்.
🌼29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது.
அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
🌼30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ
உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ
உணவு தயாரிக்கக் கூடாது.
🌼31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற
சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
🌼32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில்
ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன்
பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
🌼33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த
அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும்
நல்லது.
🌼34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும்
படிக்கலாம்.
🌼35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட
இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
🌼36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில்
சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
🌼37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும்
ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக
எளிதாக பலன் பெறலாம்.
🌼38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும்
ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால்
அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
🌼39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும்
நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த
நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
🌼40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள்
வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம்
செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

யாருக்கு எதைத் தர வேண்டும்?

யாருக்கு எதைத் தர வேண்டும்?
எப்படித் தர வேண்டும்? என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
காசியபர் எனும் அந்தணர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். என்ன காரணத்தாலோ அவருக்கு பார்வை குறை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது. இதனால், பார்வை திரும்ப கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப்பெருமானை சரணடைந்தார்.
அதிகாலையில் எழுந்து, கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடுவதும், அவன் நாமத்தை பாராயணம் செய்வதுமாக திருச்செந்தூரான் சன்னிதியே கதியென்று கிடந்தார்.
பிரார்த்தனையின் பலனாக, திடீரென்று ஒரு நாள், அவருக்கு மங்கலாகப் பார்வை தெரியத் துவங்கியது. மகிழ்ச்சியில் கூத்தாடினாலும், 'திருச்செந்தூரா... உன் அருளால், என் பார்வை முழுமையாகத் தெரியாதா...' என வேண்டி, கண்ணீர் விட்டார்.
அப்போது, கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அருளாடி, 'காசியபா... என் பக்தனும், இந்நாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருகிறான். அந்த உத்தம பக்தனின் கை, உன் மீது பட்டதும், உனக்குப் பார்வை முழுமையாகத் தெரியும்...' என்றார்.
அதைக் கேட்டதும், அளவு கடந்த
மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதேசமயம் கலக்கமாகவும் இருந்தது. காரணம், பார்வையற்றவர்களை அரசர் பார்க்க கூடாது என்பது அக்கால சம்பிரதாயம்.
இந்த மனப் போராட்டத்தில் காசியபர் அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில், கோவிலுக்கு வந்தார் அரசர் ஜகவீரன்.
அவரிடம் அருள் வாக்கு பற்றிய தகவல் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், அரசரோ, 'நான் அரசன் என்பதால், அதிகாரம் வேண்டுமானால் என்னிடம் இருக்கலாமே தவிர, அற்புதம் செய்யக் கூடிய அளவிற்கெல்லாம் என்னிடம் சக்தி கிடையாது...' என்று சொல்லி, சுவாமி தரிசனம் செய்வதில் முனைப்பாக இருந்தார்.
அன்றிரவு, அரசர் ஜகவீரன், கோவிலிலேயே தங்க வேண்டி இருந்ததால், சண்முக விலாச மண்டபத்தில் வந்து அமர்ந்தார். திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ, அந்த பார்வையற்றவரை அழைத்து வாருங்கள்...' என்றார்.
அரசு பணியாளர்கள், சம்பிரதாயத்தை எடுத்துச் சொல்லி மறுத்த போதும், பிடிவாதமாக அவரை அழைத்து வரச் சொன்னார் அரசர்.
காசியபரைப் பார்த்ததும், மனம் கசிந்த அரசர்,
நீங்கள் நாளைக் காலை நீராடி, முருகன் சன்னிதிக்கு வாருங்கள்.அவன் திருவருள்படி நடக்கட்டும்... என்றார்.
மறுநாள் காலையில், 'முருகா... உன் சொற்படி இவருக்குப் பார்வை வராவிட்டால், நான், என் தலையை அறுத்துக் கொண்டு இறப்பேன்...' என்று கூறி, விபூதியை எடுத்து காசியபரின் கண்களில் ஊதி, அவர் கண்களை, தன் கைகளால் மெல்ல வருடினார் அரசர்.
அடுத்த வினாடி, காசியபருக்கு பார்வை திரும்பியது. அனைவரும் அரசரை வாழ்த்த, அவரோ, முருகன் எனக்களித்த உயிர்ப்பிச்சை இது. ஆறுமுகனின் அருள் இதை விடப் பெரியது.. எனக் கூறி, அமைதியாக வெளியேறினார்.
அரசரின் கரங்களால், காசியபரின் துயர் தீர்த்த ஆறுமுகன் நம் துயரையும், எவர் மூலமாகவாவது களைவார் என்று வள்ளி முருகன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அந்த ஜகவீரன் யார் தெரியுமா? வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை தான் அந்த ஜகவீரன் என்பது பலருக்கும் தெரிந்திராத உண்மை.
பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!
சேரா நிருதர் குல கலகா!
சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
தேவா ! தேவர் சிறைமீட்ட
செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
வா, வா, என்று உன்னைப் போற்றப்
பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
வாராது இருக்க வழக்கு உண்டோ !
வடிவேல் முருகா ! வருகவே !
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளி கணவா !

ந்திரச் சொற்களை உச்சரிக்கும் போது (vibrations)அதிர்வுகள் ஏற்படுகின்றன.

மந்திரச் சொற்களை உச்சரிக்கும் போது (vibrations)அதிர்வுகள் ஏற்படுகின்றன.
வாயால் சப்தாமாக மந்திரம் உச்சரிப்பதை ‘வைகரி’ என்றும்
உதட்டு அசைவினால் மந்திரம் உச்சரிப்பதை ‘உபான்சு’ என்றும்
மனத்தால் மட்டும் மந்திரங்கள் உச்சரிப்பதை ‘மானசீகம்’ என்றும்
மந்திர நூல்கள் கூறுகின்றன.
மானசீகமாக உதடு கூட அசையாமல் உச்சரிப்பதால் அம்மந்திரங்கள் மிகவும் பெரும் பலன்களை தருகின்றன.
மானசீகமாக உச்சரிக்கும் போது, மனதில் அதிர்வுகள் ஏற்பட்டு, அவை உள்மனதில் பரவி, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் உத்வேகம் அடைகின்றன.

துளசி,சந்தன மரம்,அத்திமரம்,மாமரம்,அரசமரம்,ஆலமரம்,மருதாணிமரம்

துளசி
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.
சந்தன மரம்
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
மாமரம்
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.
அரசமரம்
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
ஆலமரம்
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
மருதாணிமரம்
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.
ருத்ராஷ மரம்
ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
ஷர்ப்பகந்தி
இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.
வில்வமரம்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.
வேப்பமரம்
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
கருவேல மரம்
கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.
காட்டுமரம்
காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.
அசோக மரம்
அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
புளிய மரம்
புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.
மாதுளம் மரம்
மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்.

எது சொர்க்கம்? எது நரகம்?

எது சொர்க்கம்? எது நரகம்?
ஒருவன் ஒரு ரிஷியிடம் ஐயா எனக்கு சொர்க்கம், நரகம் இரண்டையும் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது, உங்களால் அவற்றை எனக்கு காட்ட முடியுமா என்று கேட்க, அந்த ரிஷியும் அவனை முதலில் நரகத்திற்கு அழைத்து சென்றார். அது சாப்பாட்டு நேரம். அங்கிருந்தவர்கள் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். சாப்பாடும் பரிமாறப் பட்டது. நரகத்தில் இருந்தவர் களுக்கு தரப்பட்ட தண்டனை என்ன வெனில் அவர்களால் கையை மடக்க முடியாது. சாப்பாட்டைக் கையில் எடுத்தார்களே ஒழிய அதைச் சாப்பிட முடியவில்லை. ஏன் எனில் அவர்களால் கையை மடக்க முடியாது. கடைசி வரை போராடிவிட்டு சாப்பிடாமலே எழுந்து போனார்கள்.
பிறகு ரிஷி அவனை சொர்க்கத்திற்கு அழைத்துப் போனார். அங்கும் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்களாலும் கையை மடக்க முடியாது. ஆனால் சாப்பாட்டைக் கையில் எடுத்து ஒருவர் எதிரே இருந்தவருக்கு ஊட்டினான், எதிரே இருந்தவர் இவருக்கு ஊட்டினார். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாக எழுந்து போனார்கள்.
ஆகவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. அடுத்தவருக்கு கொடுக்க மனமில்லாமல் தானே சாப்பிட நினைப்பது நரகம். அடுத்தவருக்குக் கொடுத்துத் தானும் சாப்பிடுவது தான் சொர்க்கம் என்பதாகும் என்ற உண்மையை உணர்ந்து நாமும் இச்சமூகத்தில் பரஸ்பரம் பகிர்ந்து சாப்பிடுவோம்.

காரணம் சொல்லாதே !

காரணம் சொல்லாதே !
|| ராதேக்ருஷ்ணா ||
பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !
உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !
நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள்
வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள் !
நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !
தகப்பன் கொடுமைக்காரனா ?
ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !
தாயால் கெட்ட பெயரா ?
பரதனைப் போல் பக்தி செய் !
அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ?
தியாகராஜரைப் போல் பக்தி செய் !
குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா ?
குசேலரைப் போல் பக்தி செய் !
மனைவி அடங்காப் பிடாரியா ?
சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !
கணவன் கொலைகாரப் பாவியா ?
மீராவைப் போல் பக்தி செய் !
புகுந்த வீட்டில் கொடுமையா ?
சக்குபாயைப் போல் பக்தி செய் !
பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ?
பூந்தானத்தைப் போல் பக்தி செய் !
பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா ?
நாரதரைப் போல் பக்தி செய் !
நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ?
விதுரரைப் போல் பக்தி செய் !
நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ?
கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !
உடலில் வியாதியால் வேதனையா ?
நாராயண பட்டத்ரியைப் போல் பக்தி செய் !
யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
ஜயதேவரைப் போல் பக்தி செய் !
இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ?
குந்திதேவியைப் போல் பக்தி செய் !
மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ?
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !
சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ?
பாண்டவர்களைப் போல் பக்தி செய் !
உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய் !
பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?
கைகேயியைப் போல் பக்தி செய் !
உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
வால்மீகியைப் போல் பக்தி செய் !
கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ?
பீஷ்மரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் கஞ்சனா ?
புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !
வியாபாரத்தில் நஷ்டமா ?
சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் நாஸ்திகனா ?
மண்டோதரியைப் போல் பக்தி செய் !
உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ?
விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !
கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ?
சுநீதியைப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ?
ஜடபரதரைப் போல் பக்தி செய் !
நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
அக்ரூரரைப் போல் பக்தி செய் !
ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ?
சோகாமேளரைப் போல் பக்தி செய் !
சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ?
ரந்திதேவரைப் போல் பக்தி செய் !
உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?
யசோதையைப் போல் பக்தி செய் !
பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
தேவகியைப் போல் பக்தி செய் !
அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ?
கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !
பிறவிக் குருடனா ?
சூர்தாஸரைப் போல் பக்தி செய் !
உடல் ஊனமுற்றவரா ?
கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !
நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ?
சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !
நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ?
பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !
உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ?
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !
வாழ்க்கையே பிரச்சனையா ?
மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப்
போல் பக்தி செய் !
இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு
என்றும் ஒரே ஆதாரம் !
அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும்
உனக்கு சமாதானம் இல்லை !
இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை
நீ தொலைத்தது போதாதோ ?
இனிமேல் காரணம் சொல்லாதே !
க்ரிஷ்ணன்னிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!

நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்

நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்
----------------------------------------------------------------
இறைவனின் நாமத்தை சொன்னாலே போதும் பலன் தானாகவே வந்துசேரும். யஜுர் வேதத்தை எடுத்துப் பிழிந்தால், நமசிவாய என்ற நாமம் சாரமாக வரும் என்பார்கள். ஆகவே நமசிவாய என்று உச்சரித்தால் யஜுர் வேதத்தையே ஓதிய பலன் உண்டு என்பது அர்த்தமாகிறது.
ஒரு நல்ல வார்த்தை திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொழுது அது நம் எண்ணத்தை தூய்மைப்படுத்துகிறது. அதற்கேற்ப செயலை வடிவமைக்கிறது. ராம என்ற வார்த்தை மாருதியை சொல்லின் செல்வன் ஆக்கியது. மரா என்று உச்சரிக்கப்பட்ட வார்த்தை கூட ராம என்று மாறி ஒரு கொள்கையனின் மனதிற்கு வெள்ளை அடித்து ஒரு வால்மீகியை வெளிக்கொண்டு வந்தது.
குரங்குகள் நம்மை நெருங்கும் பொழுது ராமா என்று சொல். அவை தொந்தரவு செய்யாது என்பார்கள். உண்மை! ராமா என்று சொல்லி வந்தால் நம் மனக்குரங்கு நம்மை கடிக்காது என்பதுதான். நமக்குப் பிடித்தவர்களின் பெயரைக் கேட்டதும் மனதில் மகிழ்ச்சி உணர்வும், பிடிக்காதவர்களின் பெயரைக் கேட்டதும் கசப்புணர்வும் வருகிறது. சத்தம் மனதை எவ்வளவு தூரம் ஆளுமை செய்கிறது.
இறைவனின் நாமம் தொன்று தொட்டு உச்சரிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. கங்கைப் பிராவாகம் போன்று அதில் ஓர் அருள் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் நாமத்தைச் சொல்லி, அந்த அருள் வெள்ளத்தில் நம்மை இணைக்க வேண்டும். நல்ல நினைவு இருக்கும் பொழுதே இறைவனின் நாமத்தை நிரந்தர வைப்பு நிதியைப் போல் மனதில் நிலைப்படுத்த வேண்டும்.
தற்கால சேமிப்பு பிற்காலத்தில் உதவுவது போல் நாம் சொன்ன பலன் காலன் வரும் வேளையில் கை கொடுக்கும்; பேரின்பக் கரை சேர்க்கும் என்பது உறுதி.

முக்தியடைய முதலுதவி செய்வது எது?

முக்தியடைய முதலுதவி
செய்வது எது?
முக்தி என்பது வீடுபேறு. சிப்பிக்குள் விழுந்த
நீர் இறுகி முத்தாவது போல உடலுக்குள் விழுந்த உயிர் முத்தாகி ஒளிர்வது முக்தி. எனவே, வேகவைத்த நெல் எப்போதுமே விதைப்பதற்கு உதவாது என்பதை போல, இறை பக்தி இல்லாத மனிதனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அவையனைத்தும் பயனற்றவைகளாகவே திகழும். ஆகவே உள்ளன்புடன் கூடிய சிவ பக்தி ஒன்றே ஒருவரை வாழ்க்கையில் நல்வழிப்படுத்தி முக்தி அடைய வைக்கும் முதலுதவியாகும்.

Tuesday, 29 March 2016

நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்

நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்
----------------------------------------------------------------
இறைவனின் நாமத்தை சொன்னாலே போதும் பலன் தானாகவே வந்துசேரும். யஜுர் வேதத்தை எடுத்துப் பிழிந்தால், நமசிவாய என்ற நாமம் சாரமாக வரும் என்பார்கள். ஆகவே நமசிவாய என்று உச்சரித்தால் யஜுர் வேதத்தையே ஓதிய பலன் உண்டு என்பது அர்த்தமாகிறது.
ஒரு நல்ல வார்த்தை திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொழுது அது நம் எண்ணத்தை தூய்மைப்படுத்துகிறது. அதற்கேற்ப செயலை வடிவமைக்கிறது. ராம என்ற வார்த்தை மாருதியை சொல்லின் செல்வன் ஆக்கியது. மரா என்று உச்சரிக்கப்பட்ட வார்த்தை கூட ராம என்று மாறி ஒரு கொள்கையனின் மனதிற்கு வெள்ளை அடித்து ஒரு வால்மீகியை வெளிக்கொண்டு வந்தது.
குரங்குகள் நம்மை நெருங்கும் பொழுது ராமா என்று சொல். அவை தொந்தரவு செய்யாது என்பார்கள். உண்மை! ராமா என்று சொல்லி வந்தால் நம் மனக்குரங்கு நம்மை கடிக்காது என்பதுதான். நமக்குப் பிடித்தவர்களின் பெயரைக் கேட்டதும் மனதில் மகிழ்ச்சி உணர்வும், பிடிக்காதவர்களின் பெயரைக் கேட்டதும் கசப்புணர்வும் வருகிறது. சத்தம் மனதை எவ்வளவு தூரம் ஆளுமை செய்கிறது.
இறைவனின் நாமம் தொன்று தொட்டு உச்சரிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. கங்கைப் பிராவாகம் போன்று அதில் ஓர் அருள் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் நாமத்தைச் சொல்லி, அந்த அருள் வெள்ளத்தில் நம்மை இணைக்க வேண்டும். நல்ல நினைவு இருக்கும் பொழுதே இறைவனின் நாமத்தை நிரந்தர வைப்பு நிதியைப் போல் மனதில் நிலைப்படுத்த வேண்டும்.
தற்கால சேமிப்பு பிற்காலத்தில் உதவுவது போல் நாம் சொன்ன பலன் காலன் வரும் வேளையில் கை கொடுக்கும்; பேரின்பக் கரை சேர்க்கும் என்பது உறுதி.

மஹாலட்சுமி வசிக்கிறாள்.

நெல்லி மரத்தில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
வில்வ மரத்தில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
பெண்களின் தலைமுடியின் முன் வகிட்டில் வசிக்கிறாள்.அதனால்தான் பெண்கள் வகிட்டில் குங்குமம் இடவேண்டும்.
...
துளசி மணி மாலையில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
பசுவின் பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம், பசுவின் பின் புறம் இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
மா,வாழை,எலுமிச்சை,வெற்றிலை,தாமரை,செவ்வந்தி இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
கருந் துளசியில் விஷ்னுவும் மஹாலட்சுமியும் வசிக்கிறார்கள். இதனால்தான் வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குகிறோம்.
...
தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எண்ணெய் ஸ்நானம் செய்வது சிறப்பு.ஏனென்றால் அன்று மட்டுமே எண்ணெய்யில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
கஸ்தூரி மஞ்சள், சந்தணம்,இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள். அதனால்தான் மஞ்சள், சந்தனம் இல்லாத சுப காரியங்களே இல்லை.
...
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐝🐝🐝🐝🐝🐝
: நம் சந்ததியருக்கு
எதைச் சேர்த்து வைக்கவேண்டும் ..?
புண்ணியங்களையா ..?
பாவங்களையா ..........?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !
நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.
நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க ...
என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.
ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!
நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :
பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ..........................................6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!

பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றால் என்ன ..

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றால் என்ன ..
நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் நன்மை, தீமைகளைச் செய்கிறோம். நல்லன செய்தால் புண்ணியமும், தீயன செய்தால் பாவமும் கிடைக்கிறது. இவை வங்கியில் செய்யப்படும் முதலீடு போன்றது. வினைப்பயனால் உண்டாகும் இன்ப, துன்பங்களை அனுபவித்து முடிக்கும்வரை பிறவி தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் "போன ஜன்மத்துப் புண்ணியம், அவர் வசதியாக இருக்கிறார்' என்கிறோம். ஒருவர் துன்பப்பட்டால் "போன ஜன்மத்துப் பாவம், பாடாய் படுகிறார்' என்கிறோம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்கிறது புறநானூறு கூறுகிறது. இந்த உண்மையை உணர்ந்து இனியாவது நல்லதைச் செய்வோம்.
நமக்குப் பல பிறவிகள் உண்டு. உயிர் என்றும் அழியாதது. நாம் ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வருவது போல நாமும் இப்பூமியில் பிறந்து, பிறந்து இறக்கிறோம். இதைத் தான் "புனரபி' என்கிறார் சங்கரர். புனரபி என்பதற்கு "மீண்டும் 'என்பது பொருளாகும். பூமியில் இருந்து எடுக்கப்படும் தங்கம் தீயில் இடப்பட்டு மாற்று அடிக்கப்பட்ட பிறகே பொன்னிறம் பெற்று ஜொலிக்கும். அதுபோல, உயிர்களையும் கடவுள் பலமுறை பூமியில் பிறப்பெடுக்கச் செய்து இன்பதுன்பம் என்னும் தீயிலிட்டு பக்குவப்படுத்துகிறார். இறுதியில் மோட்சத்தைத் தந்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்.

Monday, 28 March 2016

மனதை ஒருமுகப்படுத்தும் மாபெரும் ரகசியம்…

மனதை ஒருமுகப்படுத்தும் மாபெரும் ரகசியம்…
சிலர் தங்களுடைய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை..என்று அல்லல்படுவதை காணலாம்..மனதை கட்டுபடுத்தும் சக்தி என்பது உண்மையில் நம்மிடம்தான் உள்ளது..வெளியில் எங்கும் இல்லை.. எண்ணத்தின் மதிப்பை உணராதவரை மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வருவது கடினம்.. உங்கள் மதிப்பை உணராத மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை..அதாவது உங்கள் மனம் உங்களையே மதிக்கவில்லை.. அதனால்தான் உங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.யாரவது மதிப்பிற்குரியவர் வந்தால் அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம் அல்லவா.. ஆனால்,உங்களின் மனமே உங்களை மதிக்காத பொழுது மற்றவர்களிடம் எப்படி உங்களுக்கு மதிப்பு கிடைக்கும்..உதாரணமாக உங்கள் கைகளுக்கு சொம்பில் தண்ணீர் எடுக்க உத்தரவு இடுகின்றீர்கள்..அந்த கை அதற்க்கு கீழ் படிந்து எடுப்பதால் அந்த நீரை அருந்தி மகிழ்கின்றீர்கள், ஏனென்றால் நீரின் மதிப்பு தெரிந்திருக்கின்றது அதனால் கை உதவுகின்றது..அதை போல நல்ல எண்ணங்களின் மதிப்பை உணராதவரை மனம் நாலாபுறமும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.இந்த அலைபாயும் மனதில் வீண் எண்ணங்களும்..தீய எண்ணங்களும் கட்டுக் கடங்காமல் வரும்.. இதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்மையில் நம்மிடம்தான் இருக்கின்றது..ஒரு பச்சைமிளகாயை வாயின் அருகில் கொண்டு செல்லும்பொழுது மனம் உடனே ப்ரேக் போடுகின்றது..ஏனென்றால் காரம்..மனம் கட்டுப்படவில்லை என்பவர்களுக்கு இது மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் வருகின்றது..ஆச்சரியம்.. உதாரணமாக ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்..பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்ட பிறகு பணத்தை கொடுக்க முற்பட்ட பொழுது பணத்தை காணவில்லை என்றால்..அவர் வீட்டிலிருந்து வந்த வழியே திரும்ப சென்று தேடிக்கொண்டிருப்பார்..பலர் இடையில் அவரிடம் பேசினாலும் அவருடைய மனம் பணத்திலிருந்து கொஞ்சமும் அசையாது.. அப்பொழுது மனதில் பணத்தின் படம் மட்டுமே தென்பட்டு கொண்டிருக்கும்.. ஏனென்றால் பணத்தின் மதிப்பை அவர் உணர்ந்து இருக்கின்றார்..அதனால் அவருடைய மனம் அதிலிருந்து விடுபட மறுக்கின்றது.. இப்பொழுது மனம் எப்படி கட்டுப்பாட்டில் வந்ததுஆச்சரியமாக உள்ளது அல்லவா?! சரி அது போகட்டும்.. புதிதாக ஒரு நெக்லஸ் உங்கள் மனைவிக்கு வாங்கி வந்துள்ளீர்கள்.. அதை வீட்டின் வாசலில் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது உங்கள் நண்பர் அவசரமாக செல்லவேண்டும் உடனே வாருங்கள் உங்களிடம் முக்கிய விஷயம் ஒன்று சொல்லவேண்டும் என்று அழைக்கின்றார்.. வேறு வழியில்லாமல் அந்த நெக்லசை உங்கள் வீட்டு வாசற்படியில் வைத்துவிட்டு உங்கள் நண்பரை பார்க்கசெல்கின்றீர்கள்.. அப்பொழுது உங்கள் நண்பரிடம் நீங்கள் பேசிக்கொண்டு இருந்தாலும் உங்கள் மனம் நகை மீதுதானே இருக்கும்..மனதை இப்படி,அப்படி அசைய சொல்லுங்கள் பார்க்கலாம் கண்டிப்பாக அசையாது.. ஏனென்றால் தங்கத்தின் மதிப்பை மனம் அறிந்திருக்கின்றது..அதனால் அது அசைவதில்லை..மதிப்புள்ள ஒரு பொருளை மனம் அறிந்தால் மனம் அதற்க்கு கட்டுப் படுகின்றது எனவே நல்ல எண்ணங்களின் மதிப்பையும்..சுபமான எண்ணங்களின் மதிப்பையும் மனம் அறிந்திருக்கவேண்டும்.. அப்படி இலாத மனம் கடிவாளம் இல்லாத குதிரைபோல ஆகிவிடும்..கடவுளை நீங்கள் நினைக்க வேண்டுமானாலும் கடவுளின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் அவரிடத்தில் ஈடுபடாது..உங்களின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் உங்களுக்கு கட்டுப்படாது..ஒரு பணியாரக் கல்லை புதிதாக வாங்குபவரே அதை பணியாரம் சுடுவதற்கு பழக்கவேண்டும் என்று சொன்னால்..உங்கள் மனதை எப்படி பழக்கவேண்டும் என்று யோசித்துபாருங்கள்..மதிப்பை உணர்ந்தவரே மகான் ஆகின்றார்..எனவே உங்கள் ஆத்மாவின் மதிப்பை உணருங்கள்..உங்கள் ஆத்மாவின் தந்தை சிவபரமாத்மாவின் மதிப்பை உணருங்கள்..இந்த நேரத்தின் மதிப்பை உணருங்கள்..உங்களையும்..உங்கள் எதிர்காலத்தையும் மதிப்புள்ளதாக இப்பொழுதே மாற்றிக்கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள்..உங்கள் மனதிற்கு மதிப்பை உணர்த்த அருகில் உள்ள "பிரம்மாகுமாரிகள்" நிலையத்தை அணுகி இலவச ராஜயோக தியானத்தை கற்று மகிழ்வீர்..வாழ்த்துக்கள்..

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’
இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்

யாருக்கு ஆண் வாரிசு அமைவது இல்லை.?

யாருக்கு ஆண் வாரிசு அமைவது இல்லை.?
-----------------------------------------------------------------
5-ம் இடம் , 5-க்கு 5-ம் இடமாகிய 9-ம் இடம் இந்த பாவங்களில் பாவிகள் நிற்பதோ, பாவிகள் பார்ப்பதோ,
5-ம், 9-ம் அதிபதிகள் பாவிகளுடன் சேர்வதாலோ 
ஆண் வாரிசு தடைபடும் .
5-ம், 9-ம் அதிபதிகள் மறைவிடமான 6-8-12-ல் மறைவதனாலும் ஆண் வாரிசு தடைபடும் .
10 ம் பாவத்தையும் ஆய்வுக்கு எடுதுக்கொள்ள வேண்டும்

திருமண பொருத்தம் பார்க்கும் போது

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...இருவரும் காதலித்தால் ஜாதகம் எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போக வேண்டாம்..பொருத்தம் பார்க்க வேண்டாம்..இவையெல்லாம் மனப்பொருத்தம் அடிப்படையில் ராசி வசியம் அடிப்படையில் ராசிப்பொருத்தம் என வந்துவிடும். அதற்கு பொருத்தம் பார்க்க வேண்டாம்...

அந்நியத்தில் பார்த்தால் மட்டும் திருமண பொருத்தம் பார்த்தால் போதுமானது...ரோகிணி ,திருவாதிரை,பூசம்,மகம்,அஸ்தம்,திருவோணம்,இவை ஆறும் ஆண்,பெண்களுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம்....திருவாதிரை ஆணும் ரோகிணி பெண்ணும் வந்தால் பொருத்தம் வருமா என கேட்டால் வராது ..இருவரும் ரோகிணியாக இருந்தால் செய்யலாம்..

இருவரின் பிறந்த நட்சத்திரத்துக்குண்டான மிருகங்களை பாருங்கள் ..ரோகிணி நட்சத்திரம் ஆண்நாகம்..மகம் ஆண் எலி...எலியும் பாம்பும் பகை...எலியும், பாம்பும் ஒரு வீட்டில் இருக்க முடியுமா..? பாம்புக்கு எலி கட்டுப்பட்டது...

பொருத்தம் பார்க்கும்போது சந்திரனுக்கு 8ஆம் அதிபதி கெடக்கூடாது லக்னத்துக்கு 7ஆம் அதிபதி கெடக்கூடாது..இதுபோல சுக்கிரனுக்கும்,குருவுக்கும் பார்க்கலாம்..இருவரது ராசியும்,லக்னமும் ஒன்றுக்கொன்று மறையக்கூடாது...மறையாமல் இருந்தால் ஒற்றுமை,அன்பு நிலைத்திருக்கும்..ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கெடக்கூடாது..கெட்டால் குழந்தை பாக்ய பிரச்சினை உண்டாகும் பெண் ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்க வேண்டாம் இருவருக்கும் கெட்டிருந்தால் பிரச்சினை இல்லை..ஒருவருக்கு நன்றாக இருந்து ஒருவருக்கு கெட்டிருந்தால் அங்கு சந்தோசம் இருக்காது..

7ஆம் இடம் தாம்பத்யம்..12ஆம் இடம் இரவில் உண்டாகும் சந்தோசம்..12 கெட்டுப்போனால் இரவும் இல்லை உறவும் இல்லை...ஆணுக்கு 3ஆம் இடம் கெட்டுப்போனால் வீரியம் இல்லை..3ஆம் இடம் வலுத்த பெண்ணுக்கு 3 கெட்ட பையனை திருமணம் செய்து வைத்தால் தப்பாகிவிடும்...உறவு மாறிவிடும்..7ஆம் இடத்தில் இருக்கும் கிரகம்,7ஆம் இடத்தை பார்த்த கிரகம்,7ஆம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் எல்லாம் கணித்து திருமண பொருத்தம் பார்க்கும் முறை கடினமானது ஆனால் நம்பகமானது...வெறுமனே நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து 8 பொருத்தம் இருக்கு ஆஹா...அருமை என கிணற்றில் தள்ளிவிடாதீர்கள்..

ஒரு பையனை தேர்ந்தெடுக்கும்போது அவன் ஜாதகம் கொண்டு மனைவி ஸ்தானம் எப்படி,மாமனார் ஸ்தானம் எப்படி,மாமியார் ஸ்தானம் ,நங்கை ஸ்தானம் எல்லாம் கணிக்க ஜாதகத்தில் கிரக அமைப்புகள் ,கணக்குகள் உண்டு...ஏழரை சனி நடக்கும் பெண்ணையும் அஷ்டம சனி நடக்கும் பையனையும் கட்டி வைத்தால் ,இருவரும் ஒரே வண்டியில் சென்று விபத்தை சந்திப்பர்.

ஒரே திசை நடந்தால் அது இருவருக்கும் யோகமாக இருந்தால் பரவாயில்லை...அப்படி அமைவது கடினம்..இருவருக்கும் ஒரே திசை இல்லை என்று மட்டும் பார்க்காமல் அந்ததிசை என்ன காரகத்துவம் யார் யாருக்கு பாதிப்பு உண்டாக்கும்..யாருக்கு நன்மை தரும்..மனைவிக்கு யோகம் தருமா என ஆராய்வது சிறப்பு.

27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள்

27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள்
-----------------------------------------
1.அசுபதி - புரவி
2.பரணி - அடுப்பு
3.கார்த்திகை = ஆரல்
4.ரோகிணி = சகடு
5.மிருகசீரிடம்=மான்றலை
6.திருவாதிரை=மூதிரை
7.புனர்பூசம் =கழை
8.பூசம் =கொடிறு
9.ஆயில்யம் =அரவு
10.மகம் =கொடுநுகம்
11.பூரம் =கணை
12.உத்திரம் =உத்தரம்
13.அஸ்தம் =கை
14.சித்திரை =அனுபை
15.சுவாதி =விளக்கு
16.விசாகம் =முறம்
17.அனுஷம்=பனை
18.கேட்டை=துலங்கொலி
19.மூலம் =குருகு
20.பூராடம் =முற்குலம்
21.உத்திராடம்=கடைக்குலம்
22.திருவோணம்=முக்கோல்
23.அவிட்டம் =காக்கை
24.சதயம் =செக்கு
25.பூரட்டாதி =நாழி
26.உத்திரட்டாதி=முரசு
27.ரேவதி =தோணி
**************************************
1.சித்திரை =மேழம்
2.வைகாசி =விடை
3.ஆனி =ஆடவை
4.ஆடி =கடகம்
5.ஆவணி =மடங்கல்
6.புரட்டாசி =கன்னி
7.ஐப்பசி =துலை
8.கார்த்திகை =நளி
9.மார்கழி =சிலை
10.தை =சுறவம்
11.மாசி =கும்பம்
12.பங்குனி =மீனம்

தானங்களும் - அதன் பலன்களும்

ஜோதிட ரீதியில் பரிகாரங்களில் தானமும் ஒன்றாகும்.
தானங்களும் - அதன் பலன்களும்
1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் - இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் - சவுபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்

யாருக்கு செவ்வாய் தோசம் பாதிக்கும் ?

யாருக்கு செவ்வாய் தோசம் பாதிக்கும் ?
-------------------------------------------------------------------
செவ்வாய் இலக்கனத்திற்கு. ராசிக்கு , சுக்கிரனுக்கு 2-4-7-8-12-ல் இருந்தால் செவ்வாய் தோசம் ஆகும். இது பொதுவாக சொல்லுவது தான்.
மேலும்....
1) செவ்வாய்க்கு கேந்திரங்களில் ராகு\கேது இருந்தாலும்,
2) செவ்வாய்க்கு கேந்திரங்களில் சூரியன் இருந்தாலும் ,
3) செவ்வாய்க்கு கேந்திரங்களில் தேய்பிறை சந்திரன் இருந்தாலும்,
4) இலக்கனத்திற்கு பாதக ஸ்தானதில் செவ்வாய் அமர்ந்து இருந்தாலும்,
குறிப்பு ; எங்கள் கிராமங்களில் ஜோதிட பெரியவர்கள்
செவ்வாய் தோசம் யாருக்கு உள்ளதோ அதன் மறு பாலினத்திற்கு பதிப்பு ஏற்படும் என கூறுவார்கள் .
அதாவது ஆணுக்கு இருந்தால் ஆணின் உறவு முறை பெண் வர்க்கங்கள் பாதிக்கபடும்.- do-
இது அனுபவத்தில் கண்ட உண்மை .
ஜெகந்திராபாத் ஜோதிட மேதை ஏ.வி. சுந்தரம் ஐயா அவர்கள் செவ்வாய் தோசத்தை 7-ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் அடுத்த வீட்டு காரனை குறிக்கும்.என கூறுவார்.
ஆகவே 7-லில் செவ்வாய் உள்ளவர்களையே சேர்த்து வைக்க வெண்டும் என கூறுவார்.

Sunday, 27 March 2016

குழந்தைகள்!!!!!!!!!!!!!!!!!!!!!

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.
குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.

கர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் !!!!!!!!!!!

கர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் என்ற நான்கு ஆன்மீக பத்தியங்களுக்கான நான்கு அணுகுமுறைகளை ஆராய்வோம்
நவீன இந்து எழுத்துப்படிவங்களில் இந்து ஆன்மீகப் பயிற்சிகளின் சுருக்கமாக நான்கு யோகங்கள் சுட்டப்படுகின்றன: கர்மம், பக்தி, இராஜம் மற்றும் ஞானம். முதலில் ஒவ்வொன்றையும் சிறிது விளக்கியப் பின்னர் “எந்த யோகம் அல்லது யோகங்களை நான் இந்த நேரத்தில் செய்வது?” என்ற கேள்வியைக் கவனிப்போம்.
கர்ம யோகம் செயல்களின் பாதையாகும். இது என்ன செய்யக் கூடாது என்பதில் ஆரம்பிக்கின்றது. பிறகு நாம் தனக்கு மட்டுமே நன்மைச் சேர்க்கும், சுயநல ஆசைகளால் உந்தப்படும் செயல்களைத் துறக்கின்றோம். அடுத்ததாக, வாழ்க்கையில் நமக்கான கடமைகளை மனசாட்சியுடன் செய்வது நிகழ்கின்றது. கர்ம யோகத்தின் முக்கிய அம்சம், சுயநலமின்றி மற்றவர்களுக்கு நன்மை ஏற்பட செயல்படுவதாகும்.இதில் நாம் வெற்றிகாணும்பட்சத்தில், நமது வேலை வழிபாடாக உருமாற்றம் காண்கின்றது. என் பரமகுரு, ஶ்ரீலங்காவின் யோகசுவாமிகள் இந்த உத்தமத்தின் கருப்பொருளைச் சுட்டி இவ்வாறு சொன்னார், “எல்லா வேலைகளும் கடவுளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செய்யப்பட வேண்டும்.”
பக்தி யோகம் கடவுளிடத்து உறவு பூண்டிருப்பதும், கடவுளிடத்து அன்பு செலுத்துவதும் ஆகும். கடவுளைப் பற்றியக் கதைகளைக் கேட்பது, பக்தி பாடல்கள் பாடுவது, யாத்திரை, மந்திர உச்சரிப்பு, கோயில் மற்றும் வீட்டு பூஜை அறையில் வழிபடுவது போன்ற பயிற்சிகள் அடங்கியுள்ளன. பக்தி யோகத்தின் பலனாக மென்மேலும் நெருங்கிய உறவு கடவுளிடம் தோன்றிக்கொண்டே வருவதும், இந்த உறவு ஏற்படத் தேவையான குணங்களாகிய அன்பு, தன்னலமின்மை, தூய்மை ஆகியவற்றை வளர்த்தெடுத்தும், இறுதியில் ப்ராபதி எனப்படும் ஜீவபோதம் நசுங்கி கடவுளிடம் சரணாகதி ஆவதான ப்ராபதி எய்தப்படுகின்றது. எனது குரு, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் கீழ்கண்ட உள்நோக்கு மிக்க விளக்கத்தை அளித்தார்: “கடவுளே அன்பு, கடவுளிடம் அன்பு செலுத்துவது ஆகமங்களில் [வெளிப்படுத்தப்பட்ட மறைகளில் ஒரு வகை] கூறப்பட்டுள்ள தூய பாதையாகும். உண்மையாகவே, கடவுளின் குரலான இந்நூட்கள் மறுபிறவியில் உழலும் சம்சாரிக்கு நிலையில்லாததை விரும்புவதை விடுத்து, மரணம்பிறப்பு இல்லாத பொருளை வழுத்தும்படி அறிவுறுத்துகின்றன. எவ்வாறு தெய்வத்தை நேசிப்பது, எங்கு, எப்படி, எந்த மந்திரங்கள் மற்றும் உருவகம் மற்றும் எந்த சுப காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டும் என யாவும் ஆகமங்களில் காக்கப்பட்டுள்ளன.
இராஜ யோகம் தியான வழியாகும். எட்டு நிலை வளர்ச்சிக்கிரம பயிற்சி முறை இதுவாகும். நன்னெறிக் கட்டுப்பாடுகள், சமயப் பயிற்சிகள், ஆசனம், பிராணாயமம், உள்வாங்கல், ஒருமை, தியானம் மற்றும் பேரானந்தம், அல்லது சமாதி. மனதின் விருத்திகளைக் கட்டுப்படுத்தி, ஆதலால் நமது உணர்வுநிலை தனது சுய கருநிலையில் அமிழ்ந்திருக்கச் செய்வதாகும். இந்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவது பயிற்சியினாலும், துறவினாலும் அடையப்படுகின்றது. எனது குரு மனதின் விருத்திகளைக் குறிப்பதற்காக உணர்வுநிலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்: “சாட்சியம் தான் காணும் உணர்வுநிலையுடம் ஒட்டியும் ஒன்றியும் போகும் பட்சத்தில், உணர்வுநிலையும் சாட்சியமும் ஒரே பொருளாகி விடுகின்றன. இவை இரண்டையும் பிரிக்கச் செய்வதே கலைநயமிக்க யோக மார்க்கம்.”
ஞான யோகம் அறிவுப்பாதையாகும். இது தத்துவப் படிப்பு மற்றும் உண்மை-உண்மையில்லாதது என பாகுபடுத்திப் பார்க்கும் முறையாகும். ஞானம் என்பது வெறும் ஞா என்ற உச்சரிப்பு மூலத்தைக் கொண்டிருப்பினும், இது அறிதல் எனும் பொருள்பட்டாலும் இதற்கு இன்னும் உயர்ந்த உட்பொருள் உள்ளது. இது வெறும் படிப்பறிவு மட்டுமன்றி, அனுபூதி ஆகும். இது பட்டறிவில் ஆரம்பித்து, அனுபூதி உள்அறிவில் சங்கமிக்கின்றது. மூன்று வளர்ச்சியூட்டும் பயிற்சிகளினால் ஆனது ஞான யோகம்: சிராவணம் (மறைநூட்களைப் படிப்பது); மனனம் (அதையே எண்ணுவதும் பிரதிபலித்துப் பார்ப்பதும்); நிதித்யாசனம் (ஆழமான விடாத் தியானம்). உபநிஷதங்களில் காணப்படும் நான்கு மகா வாக்கியங்கள் அடிக்கடி சுய பிரதிபலிப்புக்கு உள்ளாகின்றன: “பிரம்மம் உணர்வுநிலை”; “அதுவே நீ”; “தான் பிரம்மம்”; “நானே பிரம்மம்”. சின்மயா மிக்ஷன் ஸ்தாபகராகிய சுவாமி சின்மயானந்தா போதித்தது, “ஞான யோகத்தின் குறிக்கோள் என்னவெனில், பகுத்தறிவின் மூலமாக, உண்மையையும் உண்மையில்லாததையும் வேறுபடுத்திக் கண்டு, இறுதியில் தானே உச்ச உண்மையாக இருப்பதை இனம் காண்பதே ஆகும்.”
நான்கு அடிப்படை யோகங்களையும் சுருக்கமாக கண்ட நாம், இப்போது எவ்வாறு அவை பல தரிசனங்களில் கையாளப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். தற்போது நீ அடைந்திருக்கும் ஆன்மீக வளர்ச்சி நிலைக்கு ஒத்தவாறு, தேவையான யோகம் அல்லது யோகங்களைத் தேர்ந்தெடுக்க இது ஒருவேளை உதவலாம்.
முதலாவதும், மிகப் பரவலாகவும் பயன்படும் அணுகுமுறை உனது மனப்பாங்கை ஒத்தியது. தென் கலிபோர்னிய வேதாந்தக் கழகம் இந்த அனுகுமுறையைத் தனது இணைய தளத்தில் வழங்குகின்றது. “ஆன்மீக ஆர்வலர்கள் பொதுவில் நான்கு விதமாக இருக்கின்றனர். அதிக உணர்ச்சிவயம், அதிக சிந்தனா ஆற்றல், அதிக உடலாற்றல், மற்றும் தியானாற்றல் மிகுதி என்ற மனப்பாங்குகள் அவை. ஒவ்வொரு விதத்திற்கும் ஏற்றவாறு நான்கு அடிப்படை யோகங்கள் உருவகம் பெற்றுள்ளன. உணர்ச்சிவயமிக்கவர்களுக்கு பக்தி யோகம், சிந்தனா ஆற்றலுள்ளவர்களுக்கு ஞான யோகம், தேகபலமிக்கவர்களுக்கு கர்மயோகம் மற்றும் தியான ஆற்றலுள்ளவர்களுக்கு இராஜ யோகம்“.
இருப்பினும், சில வேளைகளில், சிந்தனா ஆற்றல் மிக்கவர்கள் ஞான யோகத்திலிருந்து ஒதுங்கியிருக்க அறிவுறுத்தபடுகின்றனர். அறிவிலிகளுக்கு இந்துமதம் என்ற தனது நூலில், லிண்டா ஜான்சன் இவ்வாறு விவரிக்கின்றார். “நீ அறிவுப்பூர்வி என நினைக்கின்றாயா? ஆச்சரியப்படுமாறாக, இந்து குருமார்கள் அறிவாலிகளை பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்துகின்றனர், ஞான யோகம் அல்ல. ஏனென்றால், மிக அறிவாலிகள் தத்தம் இதயத்தைத் திறப்பதிலிருந்தே இன்னும் கூடுதலான நன்மைப் பெறுகின்றனர். ஞான யோகம் உறுதியான மறைபுலன் வளர்ந்து, கடவுளை அனுபவத்தால் அறிய வேண்டும் என்ற வேட்கை நிறைந்த மக்களுக்காக அன்றி, அறிவுப்பூர்விகளுக்கு அல்ல.”
இரண்டாவது அணுகுமுறை யாதெனின், உனது குணாதிசயத்துக்கு ஏற்ற ஒரு யோகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாம் பட்சமாக மற்ற மூன்று யோகங்களையும் சேர்ந்தே பயிற்சி செய்து வருவதாகும். தெய்வீக வாழ்க்கை மன்றத்தின் ஸ்தாபகராகிய சுவாமி சிவானந்தா நிலைநாட்டுவது என்னவென்றால், உண்மையான ஞானம் பெற வேண்டின், இயற்கையில் ஒரே ஒரு பாதைக்கு மட்டும் ஆர்வலர் ஒருவர் ஈர்க்கப்பட்டாலும், எல்லா பாதைகளிலும் இருக்கும் பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகின்றது. அவரது அமைப்பின் சுலோகம் “சேவை, அன்பு, தியானம், அறி” என கர்ம, பக்தி, ராஜ, ஞான யோகங்களை முறையே குறிக்கின்றது.
மூன்றாவது அணுகுமுறை நான்கு யோகங்களில் ஏதாவது ஒன்றே மிக உயர்ந்தது ஆகையால் அனைவராலும் பின்பற்றப் படவேண்டும் என வலியுறுத்துகின்றது. வைணவ அமைப்புக்களில் பக்தி யோகம் எல்லா பின்பற்றிகளுக்கும் உரிய பாதையாக வழங்கப்படுகின்றது. இதில், வைணவம் தன்னலம் கடந்த அன்பையும் சரணாகதியையும் முக்திக்கான முதன்மையான வழியாக குறிப்பதைக் காணலாம். மேலும் பக்தி யோகத்திற்கு தயாராகும் நோக்கில் கர்ம யோகத்தின் மூலம் ஒருவன் தன்னை தூய்மைச் செய்வது அறிவுறுத்தப்படுகின்றது. தியானத்துக்கு, அல்லது சதா ஆழ் தெய்வீக சிந்தனா மனோநிலைக்குத் தயாராகும் பொருட்டு ஒருவன் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என ஶ்ரீஇராமானுஜர் சொல்லியுள்ளார்.
சில வேதாந்த மரபுகள் ஞான யோகத்தை எல்லாருக்குமான பாதையாக காட்டுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, ஆதி சங்கரரின் ஸ்மார்த்த மரபில், ஆரம்பக்கட்ட சாதனையாக கர்மயோகத்தைச் செய்து, தத்துவ பகுத்தறிவு ஆதாரத்தில் தியானிப்பது என விளக்கப்படும் ஞானயோகத்துக்கு ஒருவன் இட்டுச் செல்லப்படுகின்றான். சங்கரரின் விவேகச் சூடாமணியில் இந்தக் கருத்துக் காணப்படுகின்றது: “மனதைத் தூய்மைப்படுத்தவே காரியங்கள், உண்மையைக் கண்டுகொள்ள அல்ல. உண்மையை அறிவது பகுத்தறிவினால் மட்டும் ஒழிய கிஞ்சிற்றும் கோடிக்கணக்காண காரியங்களால் அல்ல.”
நான்காவது அனுகுமுறை கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்ற பயிற்சிகள் யாவும் கடவுளிடம் ஒன்றிணைந்து இருப்பதை அறிவதற்கு அல்லது ஞானயோகத்திற்கான அத்தியாவசிய தேவைகள் எனக் கொள்கின்றது. நியூயோர்க் விஸ்வ தர்ம மண்டலத்தின் சுவாமி இராமகிருஷ்ணானந்தா எழுதியுள்ளார்: “ஞான யோகத்துள் நுழையும் முன், ஒரு மாணவன் சேவை அல்லது கர்மயோகம், கடவுளிடம் அன்பு அல்லது பக்தி யோகம், தியானம் அல்லது இராஜயோகம் ஆகியவற்றில் திளைத்தும் வளர்ந்தும் இருத்தல் முக்கியமாகின்றது. காரணம், முன்னேற்பாடுகள் இன்றித் தத்துவங்களைப் படிப்பதால் ஒருவன் தன்னை ‘உதட்டளவு வேதாந்தி’ அதாவது தனக்கு உண்மையிலேயே தெரியாத ஒன்றைப் பற்றி பேசும் ஒருவனாக உருமாற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கின்றது.”
சிவானந்த யோக வேதாந்த நிலையத்தின் சுவாமி விஷ்ணுதேவனந்தா ஒத்த கருத்தை எடுத்துக் கூறியுள்ளார்: “ஞான யோகத்தை பயிற்சிக்கும் முன்னர், மற்ற யோக மார்க்கங்களின் பாடங்களை ஒருவன் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தன்னலமின்மையும் கடவுளிடம் அன்பும் இல்லாமல், உடல் மற்றும் மனவலிமை இல்லாமல், தன்னை அறியும் தேடல் வெறும் சோம்பேறிக் கற்பனையாக மாறிவிடும் சாத்தியமுண்டு.”
சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் நான்காவது அணுகுமுறையில் காணப்படும் ஞானத்தைக் கண்டார். அவர் பகர்ந்தது, “கர்ம யோகமும் பக்தி யோகமும் உயர் தத்துவங்களுக்கும் பயிற்சிகளுக்கும் தேவையான தேவை.” அவர் இந்த யோகங்கள் அல்லது பாதைகள் யாவும் திரண்டு வளரும் தளங்கள் என போதித்துள்ளார். மேலும் ஒருவன் முன்னேறிச் செல்லும் போது, எது ஒன்றும் ஒதுக்கித்தள்ளப்படக் கூடாது. பக்தியைப் பற்றி, அவர் கூறியது, “நாம் ஒருபோதும் கோயில் வழிபாட்டை விஞ்சியதில்லை. அது மேன்மேலும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆகின்றது, நாம் இந்நான்கு ஆன்மீகப் படிகளில் முன்னேறிச் செல்லும்போது. சரியை பாதையில் [கர்ம யோகம்] தன்னலமற்ற காரியமாற்றும் நிலையில், நாம் கோயிலுக்குச் செல்வதற்கான காரணம், நாம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம், இது நம்மிடம் எதிர்பார்க்கப் படுகின்றது. கிரியைப் [பக்தி] பாதையில் வழிபாடு மிக்க சாதனை நிலையில், நாமே வேண்டி அங்கு செல்கின்றோம்; கடவுளிடம் இருக்கும் காதலே உந்துதலாக இருக்கின்றது. யோகப் பாதையில் நாம் கடவுளை உள்ளாராக வழிபடுகின்றோம், இதய கமலத்தில்; இருப்பினும் மனதின் அதிஉயர் உணர்வுநிலைகளில் மூழ்கியிருக்கும் யோகி கூட கோயிலை விஞ்சிவிடுவதில்லை. மண்ணுலகில் இருக்கும் கடவுளின் வீடாகிய அது -அங்கே இருக்கின்றது- யோகி மீண்டும் சாதாரண உணர்வுநிலைகளுக்கு வரும்போது. ஞானப்பாதையில் முழுதும் பயணித்தவர்களின் கோயில் வழிபாடானது மிகவும் உன்னதமானதால், அவர்களே வழிபாட்டுக்கு உரிய பொருளாகின்றனர்- வாழும், நடமாடும் கோயில்கள்.”
எந்த ஒரு யோகம் அல்லது யோகங்களைத் தேர்ந்தெடுப்பது என குழப்பமா? உனக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் இது ஒரு சிறப்பான கலந்துரையாடலாக இருக்கும். அப்படி இல்லை என்றால், பாதுகாப்பான ஓர் அணுகுமுறை கர்ம மற்றும் பக்தி யோகங்களில் தேறுவதாகும். இந்த யோகங்கள் நமது ஆணவத்துடன் மிக சீக்கிரத்தில் வேலைச் செய்து, ஆழமான அனுபவங்களுக்கு குறுக்கே இருக்கும் முக்கியமான தடைகளை நீக்குகின்றன, பெரும்பாலான நேரங்களில் இத்தடைகளைப் பலர் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை. இப்பழக்கத்தினால் மெதுவான மனச் சுத்தியும், அதிக தன்னடக்கமும், தன்னலமின்மையும், வளர்தெழும் பக்தியும் விளைந்து, நமது எல்லாக் காரியங்களும் சீராக நம்மைக் கடவுளிடம் இட்டுச் செல்கின்றதென்ற உறுதியும் நம்முள் ஏற்படுகின்றது

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்..!
1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.

குழந்தைகள் குறித்து இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா .............................

இவ்வுலகில் ஒவ்வொரு நொடியிலும் ஏராளமான குழந்தைகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன. தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை ஒவ்வொரு தாயாலும் சொல்லி மாளாது. இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்? புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சில அரிய உண்மைகளைப் பற்றி ஒரு பெற்றோராக நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். பிறந்த குழந்தைகள் குறித்து இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்று நம் கண்கள் தானாக விரியும்! அப்படிப்பட்ட சில ஆச்சரியமான சில உண்மைகள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம். இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்.
1. 'வெயிட்'டான மே குழந்தைகள்! பிற மாதங்களில் பிறந்த குழந்தைகளை விட, மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்குமாம்.
2.தாயின் வாசனை! பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்குமாம்! அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளுமாம்.
3. நோ முழங்கால் சில்லு! நம் முழங்கால்களில் சாதாரணமாக இருக்கும் கெட்டியான சில்லுகள், பிறந்த குழந்தையிடம் இருக்காதாம்.
4. கருவில் கேட்கும் திறன்! தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியுமாம்! நல்ல விஷயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விஷயங்களாகும்.
5. உப்புச் சப்பில்லாமல்...! பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாதாம்! இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம்.
6. அகச் செவி மட்டுமே! பிறந்த குழந்தையிடம் உள்ள உணர்வுள்ள உறுப்புக்களில், அகச் செவி என்று அழைக்கப்படும் உள்புறக் காது மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்குமாம்.
7. பு(பொ)ன்னகை! இவ்வுலகில், பிறந்ததும் தன் பெற்றோரைப் பார்த்துப் புன்னகை புரியக் கூடிய ஒரே உயிரினம் என்றால் அது மனிதர்களாகிய நாம் தான்.
8. ஒரே நேரத்தில் மூச்சு விடு, விழுங்கு! பிறந்து ஏழு ஆண்டுகள் ஆகும் வரை, ஒரு குழந்தையால் ஒரே நேரத்தில் மூச்சு விடவும் விழுங்கவும் முடியுமாம்.
9. இயற்கை நீச்சல் வீரர்கள்! பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம்! தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்கி 'தம்' கட்ட முடியுமாம்! சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது! வயதாக ஆக இத்திறமைகள் வேகமாக மறைந்து விடுகின்றன, புதிதாகக் கற்றுக் கொள்ளும் வரை.
10. 316 எலும்புகள்! ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் 300 எலும்புகள் இருக்குமாம்! சாதாரணமாக, வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் மட்டுமே இருக்கும். வயதாக ஆக சில எலும்புகள் இணைந்து 300 ஆக இருந்தது 206 ஆகி விடுகிறது.

மைல்கல் கலர்

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல...
இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...
* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை
* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை
* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை
* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

Thursday, 24 March 2016

பஞ்சாங்கம் ஏன் படிக்க வேண்டும் ...........

பஞ்சாங்கம் ஏன் படிக்க வேண்டும் ...........


பஞ்சாங்கம் ஏன் படிக்க வேண்டும் 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு மாதிரி அமைவதுண்டு. ஒரு ஆண்டு முடிந்து இன்னொரு புத்தாண்டு பிறக்கும் சமயத்தில், இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்குமோ என்று மனதில் சஞ்சலமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதுண்டு. சென்றவருடம், செழிப்பாய் இருந்தேன். இந்த வருடமும் அதேபோல் இருக்க வேண்டுமே என்று புத்தாண்டை இனிய முகத்தோடு வரவேற்பவர்களுமுண்டு. சென்ற ஆண்டு பட்டதே போதுமடா சாமி, இந்த ஆண்டாவது நிம்மதியாய் இருக்க ஆண்டவனே எனக்கு அருள்புரிவாய் என்று அழுது புலம்புபவர்களும் உண்டு. ஆங்கிலப் புத்தாண்டை ஆவலோடு அமோகமாகக் கொண்டாடும் நம் தமிழர்களுக்கு, தமிழ்ப்புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ ஏற்படுவதில்லை. அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களையும் முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? கேரளத்தில் விஷுவுக்கு, ஆந்திராவில் யுகாதிக்கும் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து வைத்திருப்பவர்கள் கூட ஒருசிலர் மட்டுமே.
ஒவ்வொரு நாட்டிற்கும், அவரவர்கள் மொழி கலாச்சார வழக்கப்படி காலம் - நேரம் போன்றவற்றை கணக்கிடுகையில், ஆண்டுகள், வரிசைப்படி வருவதுண்டு மோதுவதுண்டு. தமிழ் கலாச்சாரப்படியும்,சம்பிரதாயப்படியும் சித்திரை முதல் தேதி தமிழ் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகக் கலாச்சாரப்படி தமிழ் வருடப்பிறப்பை எப்படி யெல்லாம் கொண்டாடவேண்டுமென்று நமது பெரியோர்களும், தமிழ் அறிஞர்களும் சில வதிமுறைகளையும், வழிமுறைகளையும் வகுத்துவிட்டுப் 
போய் இருக்கிறார்கள். இதில் முக்கியமானது பஞ்சாங்கப் படனம் என்பது. மனிதனின் வாழ்வை அவனது ஜாதகம் எப்படி கணிக்கிறதோ, அதுபோல ஒருவருடத்தின் பாலபலன்கள், நன்மை தீமைகளை விவாஹ சக்ர, திதிநேத்ர, ஜீவமூர்த்தி, கிரஹ மூர்த்திகளை வழிபட்டு, வரவேற்று, எல்லோருக்கும் தெரிந்து கொள்ளும்படியாக அந்த பஞ்சாங்கத்தை இறைவன் முன்பு வைத்துப் படிப்பதே பஞ்சாங்கப் படனம் என்று அழைக்கப்படுகிறது.
ஓருநாட்டின் காலநேரம், வறுமை, செழுமை என எத்தனையோ விஷயங்கள் நமக்கு விஞ்ஞான ரீதியாகத் தெரிந்திருந்தாலும், அவைகளை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கம் சொல்லிவிடுகிறது. எனவே, இந்தப் பஞ்சாங்கத்தை ஒரு கோயிலில் அதிகாலை வேளையிலே தூய்மையுடன் இறைவன் முன்பு வைத்து பூஜித்துவிட்டு படிக்க வேண்டும். தெய்வீகக் காரியங்களில் ஈடுபட்டுள்ள ஸத்சங்க நிர்வாகிகளோ, இறைபக்தியில் ஈடுபாடு கொண்ட பெரியோரோ, மரியாதைக் குரியவர்களோ இந்தப் பஞ்சாங்கத்தை ஊர்மக்கள் முன்னிலையில் படித்து, அந்த ஆண்டின் முக்கிய பண்டிகைகள் வரும் நாள், நல்ல காரியம் தொடங்க நல்ல நாள், முகூர்த்த வேளை போன்ற விவரங்களை விளக்கமாகக் கூற வேண்டும். திதியைப் போற்றினால் ஐஸ்வரியம் கிட்டும். வாரம், நான் போன்றவற்றை ஆராதனை செய்தால், தீர்க்கமான ஆயுள் நிறைந்திருக்கும். நட்சத்திர பூஜை செய்தால், கர்மவினைகள், நோய்கள் நீங்குகின்றன. கரணதேவதையைப் பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் நீராடி, புத்தாடை அணிந்து, தூய உள்ளத்துடன் தூய்மையாக அந்த ஆண்டின் அதிதேவதை முன்பு ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்து, அக்கண்ணாடிக்குப் பொன்னால் அலங்காரம் செய்து பொட்டிட்டு, பூவிட்டு, பழவகைகளை வைத்து, விளக்கேற்றி அக்கண்ணாடியில் இவைகளைக் கண்டுகளித்து அந்த வீட்டின் மூத்த தம்பதியர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும். இப்படிச் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால் நாட்டில் நல்ல மழை பெய்யும். செல்வம் செழிக்கும். தர்மம் என்பதும் நிலைத்திருக்கும்.

கலசத்தை பூஜிப்பது ஏன் ................

கலசத்தை பூஜிப்பது ஏன் ................

கலசம் என்பது என்ன? 

மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது
மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.


பூஜிப்பது ஏன்? 

உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான - எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். 

அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள்,
தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள்,வாயால் பேசிய பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.