jaga flash news

Tuesday, 29 October 2013

லக்னத்துக்கு இரண்டில் சனி அல்லது கேது இருந்தா .....

கடக லக்ன ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கோ
 பெரும்பாலும் சந்தேக குணம் கொண்ட துணையே அமைந்துவிடுகிறது....
எதுக்கெடுத்தாலும் சந்தேகம்...
பொண்ணுங்க பேசினாலே அன்னிக்கு சண்டைதான் என புலம்புகின்றனர் பல ஆண்கள்.
லக்னத்துக்கு இரண்டில் சனி அல்லது கேது இருந்தா அது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் சந்தேககுணம் ,
ஆராய்ச்சி,மோசமான பேச்சு வசவுகள்தான் அவர் வாயில் இருந்து வரும்.
நிம்மதியான குடும்ப வாழ்க்கை இருக்காது!!

Monday, 28 October 2013

பெண்களைப் பற்றும் மார்பக புற்று நோய்…!

இயற்கை பெண்ணுக்கு தந்த அழகு மார்பகம் ..
பெண்மையின் இலக்கணம்
பெண்ணுக்குத் தன்னம்பிக்கை 
தாய்மையின் அற்புதமான அங்கம்..
சிசுக்களின் அமுத சுரபி
ஆண்மையை எழுப்பும் மாம்மென்( mammon) கருவி
ஆனால் சமீப காலமாக அந்த அழகை அழுக வைத்து
அழவைக்கிறது இயற்கை கூறுபாடுகளில் வரும் கோளாறு பாடுகள். ..

ஆம் அது தான் பெண்களைப் பற்றும் மார்பக புற்று நோய்…!

பாட்டி மார் அம்மா மார் காலகட்டங்களில் புற்று நோய் என்றாலே அறியாமை அதிலும் மார்களில் புற்று நோய் என்பது அறியாமையிலும் அறியாமை..வரமாய் வராத ஒன்று அவர்களுக்கு

ஆனால் இன்றோ விறு விறுவென்று வக்கிரத்தோடு வருகிறது ..
உலகின் பத்து பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்று நோய் என்று சொல்கிறது ஆய்வு. .இயறகையை அழித்துக் கொண்டிருப்பதால் வரும் பாதிப்புகளுக்கு இது சான்று.

இந்த புற்று பற்றும் சாத்தியமானவர்கள் யார் யார் ?

*ஜீண் கோளாறுகள் தொடர்ச்சியாக் வரும் ரத்த பந்தங்கள் .
*12 வயதுக்குட்பட்டு பூபெய்தவர்கள்
*55 வயதுக்கு மேற்பட்டு மெனோபாஸ் அடைந்தவர்கள்
*ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும் பெண்கள்
*அடர்த்தியான எலும்பு அமைப்பைக் கொண்ட பெண்கள்
மகப் பேறு அடையாதவர்கள்
*30 வயதைக் கடந்த பின் முதல் கருத் தறித்தவர்கள்
*வேறு உபாதைகள் ரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய்க்கு நீண்ட காலம் மருந்து எடுத்துக் கொள்பவர்கள்
*மது சிகெரெட் ட்டுக்கு அடிமையானவர்கள்
*கொழுப்பு சத்து உள்ள உணவை அதிகம் உண்பவர்கள்

இன்னும் ஏகப்பட்ட காரணங்கள் இருப்பினும் இதனால் தான் என்று எந்த அறிவியலாலும் மருத்துவத்தாலும் தீவிரமாக சொல்ல முடியவில்லை .

சரி ஏதோ ஒரு காரணத்தால் அலட்சியத்தால் வந்து விட்டது..அவ்வளவு தானா வாழ்க்கை? இல்லை..கான்சருக்கு பின்னும் இருக்கு ஆனந்தமான வாழ்வு..ஆனா அதைக் கடக்க வேண்டும் துணிவு ,தீவிர சிகிச்சை ,உறவுகளின் பலம் நம்பிக்கை..

மாரில் புற்று நோய் வந்ததை எப்படிக் கண்டறியலாம்?

ஆரம்ப கட்டங்களில் எந்த மாற்றமும் தெரியாது வலியும் இருக்காது
எதாவது ஒரு இடத்தில் தடித்த சதையை உணர்ந்தாலோ அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ அலட்சியமாக இருக்காதீர்கள்..உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்
முதுகு வலி கை வலி தோள் பட்டை வலி என்று நீண்ட காலமாக எதாவது தொந்தரவு இருந்தால் சாதாரண சதைப் பிடிப்பு என்று விட்டு விடாதீர்கள்..
வரும் முன் காப்பதே நலம்.
ஆக .அவ்வப்போதும், குளிக்கும் போதும் ,படுக்கும் போது இரண்டு மார்பகங்களையும் அழுத்தி தடவி சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..எந்த வித சின்ன மாற்றம் தெரிந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்

புற்று நோய் வந்து விட்டால் அவ்வளவுதான் உயிரேப் போய்விடும் வாழ்க்கையே முடிந்தது என்று இல்லை..எத்தனையோ பெண்கள் இதை வெற்றி கரமாக வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

மருத்துவத்தை விட
மனோ பலமும்
மனித பலமும் தான்
இந்நோய் தாக்கியாவருக்கு அதி முக்கியம். !

பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் குத்து விளக்கு.
அஸ்திவாரம்..பிள்ளைகளின் அரண்..
மார்பக புற்று நோய் ஒரு பெண்ணின் வேதனை மட்டும் அல்ல
மொத்தக் குடும்பத்திற்கு வரும் சோதனை.
ஆக குடும்பமாக உறவாக அரவணைத்து அவளை ஊக்குவித்து புற்று நோய்க்கு பின்னும் ஒரு அழகிய வாழ்க்கை வரும் என்று நம்பிக்கையூட்டி வழிநடத்த வேண்டும்.

தனிமனித போராட்டம் அல்ல இது ஒட்டு மொத்த குடும்பத்தின் போராட்டம்..ஆனால் உரிய நேரத்தில் உரிய சிகிச்சையளித்து தன்னம்பிக்கையோடு அவளுடன் அனைவரும் போராடினால் வெற்றி நிச்சயம்.. வாழ்க்கை மீண்டும் நம் கையில்..

இந்த அக்டோபர் மாத மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதம்.

இந்த தினத்தில் இங்கே உள்ள அனைத்து தோழிகளுக்கும் இந்த பதிவை சமர்ப்பணம் செய்து ஆரோக்கிய வாழ்வியல் முறையை அறிவுறுத்தி ஆண்டிற்கு ஒருமுறையேனு மாம்மோகிராம் மற்றும் பொதுவான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு எந்த நோயும் வருமுன் காத்து நம்மையும், நம்மை நாடி இருப்பவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வோம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

Thursday, 24 October 2013

விஷ்ணுவின் பன்னிரு பெயர்களாவன:

விஷ்ணுவின் பன்னிரு பெயர்களாவன:
 கேசவன்,
 நாராயணன்,
 மாதவன்,
 கோவிந்தன்,
 விஷ்ணு,
 மதுசூதனன்,
 திரிவிக்ரமன்,
 வாமனன்,
 ஸ்ரீதரன், 
ருஷீகேசன் ,
பத்மநாபன்,
 தாமோதரன்.

தினமும் சொல்லவேண்டிய நவ கிரக மந்திரம்.......

தினமும் சொல்லவேண்டிய நவ கிரக மந்திரம்
சூரியனின் மந்திரம் :
ஜபா குஸீம சங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
பரணதோஸ்மி திவாகரம்

சந்திரன் மந்திரம் :
ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்

செவ்வாய் மந்திரம் :
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வத்யுத்காந்தி ஸமப்ரம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யஹம்

புதன் மந்திரம் :
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்

குருவின் மந்திரம் :
தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச
குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

சுக்கிரன் மந்திரம் :
ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

சனி மந்திரம் :
நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நவாமி சநைச்சரம்

இராகுவின் மந்திரம் :
அர்த்காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்

கேது மந்திரம் :
பலாச புஷ்ப ஸ்ங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்!

சப்த கன்னியர் யார்?

சப்த கன்னியர் யார்?

பிராமி (சரஸ்வதி), 
மகேஸ்வரி (சிவசக்தி),
கௌமாரி (குமாரசக்தி), 
வைஷ்ணவி (லட்சுமி),
வாராகி,
மாகேந்திரி (இந்திராணி),
சாமுண்டா (சாமுண்டி) என்னும் சக்திகள்

ஏழு சிரஞ்சீவிகள் ?

என்றும் சிரஞ்சீவிகள் யார் அந்த ஏழு சிரஞ்சீவிகள் ?

அனுமன். 
விபீஷணன்
மகாபலி 
மார்க்கண்டேயர்
வியாசர்
அஸ்வத்தாமன்
பரசுராமர்

சைவ சமய குரவர் ........

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர் 
ஆகிய நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சப்தரிஷிகள் எனப்படுவோர் யார் ?

சப்தரிஷிகள் எனப்படுவோர் யார் ?
கௌசிகர்
காசிபர்
பரத்வாஸர்
கௌதமர்
அகத்தியர்
அத்ரி
பிருகு

18 புராணங்கள் எவை ?

18 புராணங்கள் எவை ?

பிரம்ம புராணம்
பத்ம புராணம்
விஷ்ணு புராணம்
சிவ புராணம்
வாயு புராணம்
லிங்க புராணம்
கருட புராணம்
நாரத புராணம்
பாகவத புராணம்
அக்னி புராணம்
கந்த புராணம்
பவிசிய புராணம்
பிரம்ம வைவர்த்த புராணம்
மார்க்கண்டேய புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
மச்ச புராணம்
கூர்ம புராணம்
பிரம்மாண்ட புராணம்
புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

Tuesday, 22 October 2013

கோர்ட் சம்பந்தமான வெற்றி கிடைக்க

ராமன் ராவணன் மீது கார்த்திகை மாசத்தில் போர் தொடுத்து இருக்கிறார்..யாராவது கோர்ட் சம்பந்தமான நடவடிக்கை எடுக்க இருப்பவர்கள் கார்த்திகையில் தொடங்குங்கள் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு.
ராமர் திருமண சடங்குகள் உத்திரம் நட்சத்திர நாளில் செய்யப்பட்டது..திருமணத்துக்கு மிக உகந்த நட்சத்திரம் உத்திரம்.ராமருக்கு முடி சூட்டும் விழா நடந்த அன்று நட்சத்திரம்,பூசம்..சுப காரியங்களை செய்ய பூசம் மிக விசேசம்..!
ராமர் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம்..அவருக்கு தாராபலன் இருக்க கூடிய நட்சத்திரமான தன் நட்சத்திரம் பூசத்தில் முடி சூட்டும் விழா நிகழ்ந்துள்ளது..
அதாவது நீங்க பிறந்த நட்சத்திரத்துக்கு .2,4,6,8,9 ஆகிய நட்சத்திரம் வரும் நாளில் செய்யும் காரியம் வெற்றி தரும்!!

பெண்களின் பருவதிற்கு ஏற்ப பெயர்கள்........


Monday, 21 October 2013

ஹனிமூன் என்று பெயர்வரக் காரணம்!

புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று பெயர்வரக் காரணம்!


திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.
எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.
புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள். பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு. ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம். இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.
எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.

Sunday, 13 October 2013

Diwali - 10 Reasons to celebrate..........

Diwali - 10 Reasons to celebrate

DIWALI - 10 REASONS TO CELEBRATE
 
1.Goddess Lakshmi's Birthday: The Goddess of wealth, Lakshmi incarnated on the new moon day (amaavasyaa) of the Kartik month during the churning of the ocean (samudra-manthan), hence the association of Diwali with Lakshmi.
 
2. Vishnu Rescued Lakshmi: On this very day (Diwali day), Lord Vishnu in his fifth incarnation as Vaman-avtaara rescued Lakshmi from the prison of King Bali and this is another reason of worshipping Ma Larkshmi on Diwali.
 
3. Krishna Killed Narakaasur: On the day preceding Diwali, Lord Krishna killed the demon king Narakaasur and rescued 16,000 women from his captivity. The celebration of this freedom went on for two days including the Diwali day as a victory festival.
 
4. The Return of the Pandavas: According to the great epic 'Mahabharata', it was 'Kartik Amavashya' when the Pandavas appeared from their 12 years of banishment as a result of their defeat in the hands of the Kauravas at the game of dice (gambling). The subjects who loved the Pandavas celebrated the day by lighting the earthen lamps.
 
5. The Victory of Rama: According to the epic 'Ramayana', it was the new moon day of Kartik when Lord Ram, Ma Sita and Lakshman returned to Ayodhya after vanquishing Ravana and conquering Lanka. The citizens of Ayodhya decorated the entire city with the earthen lamps and illuminated it like never before.
 
6. Coronation of Vikramaditya: One of the greatest Hindu King Vikramaditya was coroneted on the Diwali day, hence Diwali became a historical
 
7. Special Day for the Arya Samaj: It was the new moon day of Kartik (Diwali day) when Maharshi Dayananda, one of the greatest reformers of Hinduism and the founder of Arya Samaj attained his nirvana.
 
8. Special Day for the Jains: Mahavir Tirthankar, considered to be the founder of modern Jainism also attained his nirvana on Diwali day.
 
9. Special Day for the Sikhs: The third Sikh Guru Amar Das institutionalized Diwali as a Red-Letter Day when all Sikhs would gather to receive the Gurus blessings. In 1577, the foundation stone of the Golden Temple at Amritsar was laid on Diwali. In 1619, the sixth Sikh Guru Hargobind, who was held by the Mughal Emperor Jahengir, was released from the Gwalior fort along with 52 kings.
 
10. The Pope's Diwali Speech: In 1999, Pope John Paul II performed a special Eucharist in an Indian church where the altar was decorated with Diwali lamps, the Pope had a 'tilak' marked on his forehead and his speech was bristled with references to the festival of light.

குரு பகவானின் வக்கிர சஞ்சார பலன்:

குரு பகவானின் வக்கிர சஞ்சார பலன்:
jupiter
குரு பகவான் 2013  மே மாதம் முதல்  மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். தற்போது வருகிற 7.11.13 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதே ராசியில் புனர்பூசம் (3) நட்சத்திரத்தில்  வக்கிர கதிக்குப் போகிறார். அதே வக்கிர நிலையில் ஏறத்தாழ 4 மாத காலம் அதாவது 6.3.14 வரை சஞ்சரிக்கிறார். இந்தப் பயணம் பின்னோக்கி இருக்கும் ஆனால், இந்தப் பயணம் மிதுன ராசிக்குள்ளேயே அமைந்து விடும். ஆனாலும் குருபகவானின் செயல்பாட்டில் மாறுதல் இருக்கும். இனி பலன்களைப் பார்க்கலாம். ஒரு கிரகம் வக்கிர கதிக்குப் போகும்போது, நன்மைகள் நிகழ வாய்ப்பில்லை. ஆனால், தீமைகளும் நிகழாது.மெதுவாக ஹால்ட்டாகிவிடும். ஓடிக்கொண்டிருந்த வண்டிக்கு எரிசக்தி தீர்ந்து போனதுபோலாகிவிடும். பலனடைந்துகொண்டிருந்த ராசிகளுக்கு ஒரு விதத்தில் நஷ்டமும், கெடுபலன் நடந்துகொண்டிருப்பவர்களுக்கு ஒரு நிம்மதியும் ஏற்படும் நேரம் என்றுகூடச் சொல்லலாம்.இந்த வக்கிரகதிக் காலத்தில் சில ராசிக்காரர்கள் இதுவரை பட்ட அவதியிலிருந்து  மீள்வதோடு ,  நற்பலன்களையும் அடையப் போகிறார்கள். இதுவரை நற்பலன் பெற்ற சிலர், மீண்டும் நற்பலனடைய6.3.14ல் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையும் வரை காத்திருக்க வேண்டும். சில முக்கிய நிகழ்ச்சிகளை ஒத்திப்போட்டுக்கொள்ளலாம். குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து,  அனைவரும் குரு பகவானின் நல்லருளைப் பெற வாழ்த்துகிறோம். இனி ஒவ்வொரு ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம் :
இந்த வக்கிரகதிக் காலம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழும்.இந்த வக்கிரகதிக் காலத்தில் குரு பகவான் உங்களுக்கு கெடு பலன்களைத் தர மாட்டார். உங்கள் ஆற்றல் மேம்படும். இதுவரை தடைப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் தொடர்ந்து நடக்க வழியுண்டு மனதில் துணிச்சல் பிறக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் உங்களுடைய நீண்ட கால முயற்சிகள் யாவும் வெற்றியடையும் ஆரோக்கியம் சிறக்கும் நீங்கள் எதிர்பார்த்தவை யாவும் சாதமாக நிகழ யோகமுண்டு நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி ஏற்படும் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் இந்த சமயத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசிடமிருந்து எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது நல்ல நேரம் பொறுப்பான பதவி கிடைக்கும் சிலருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்காத தொகை வந்து சேரும் யோகம் உண்டாகும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தடைகள் முறியடிக்கப்படும். தீயோர் சேர்க்கையால அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். சேமிப்பும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளினால் தொடர்ந்து பெருமை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெருவீர்.தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை தொடரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு , மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சிறப்பை அடையலாம். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். வேலையில் ஆர்வம் பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
உங்களுக்கு புதிய ஆற்றலும் துணிச்சலும் பிறக்கும். உங்களிடம் இருந்து வந்த மனக் குழப்பம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி இப்போது எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். விவசாயத்தில் தேவையான பலன் பெறலாம். மொத்ததில் இந்த வக்கிர காலம் உங்களுக்கு நற்பலன்களே இகுந்து காணப்படும்.
பரிகாரம்.
சிவாலயங்களில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் நெய்தீபம் ஏற்றி,அர்ச்சனை செய்துவந்தால் துன்பங்கள் தீரும்.
ரிஷபம்:
இந்த வக்கிரகதிக் காலத்தில் நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது குருப் பெயர்ச்சிப் ப்லன்களில் 50./.நற்பலன்களை இதுவரை அனுபவித்திருபீர்கள். இப்போது இது ஒரு இடைப்பட்ட காலம். இதுவரை அனுபவித்த பலன்களைவிட அதிகமாக எதுவும் இப்போது அடைய முடியாது. ஆனால், புதிதாக தொல்லைகளை சந்திக்க நேரும் சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படலாம் மருத்துவ செலவுகள் ஏற்படும் தேவையற்ற தொல்லைகளைச் சந்திக்க நேரும் உங்கள் முயற்சிகள் வெற்றீயடைய முடியாமல் போகும் உங்கள் குடும்பத்தில் குழப்பங்களும் சச்சரவுகளும் உண்டாவதால் குடும்ப அமைதி கெடும் திருமணப் பேச்சுவார்த்தைகளில் தடை உண்டாகும் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறையும் பிரயாணங்கள் பயனுள்ளதாக அமையாது கோர்ட் வழக்குகள் தொல்லை கொடுக்கும் வீண் செலவுகள் ஏற்பட்டு பண விரயம் ஏற்படும் .பொதுவாக இந்த வக்கிர கதிக் காலத்தில் பொருளாதார வீழ்ச்சி பெருமளவில் இருக்காது. சமாளிக்கும் கட்டுப்பாட்டு நிலையில்தான் இருக்கும். யாருடனும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரலாம். அரசு ஊழியர்களுக்கு சிற்சில ப்ரச்சினைகள் தோன்றும். எதிரிகளின் சதியை முறியடிக்கும் வல்லமையும் உங்களிடம் காணப்படும்.
பண விஷயங்களில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது அவசியம். பெரிய தொகையினைக் கையாள்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது உத்தமம். பிறருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, அந்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு அதிக முயற்சியினை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் திடீர் சிகக்ல்கள் ஏற்படும். எதிரிகள் தலை ஹூக்க முயற்சிப்பார்கள். எதையும் சற்று சிரத்தை எடுத்து முடிக்க வேண்டியிருக்கும்.
வக்கிர நிலையில் இருந்தபடி , பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-மிடம் , மனைவி அல்லது கணவரின் ஸ்தானமான 7-மிடம் மற்றும் பாக்கிய ஸ்தானமான 9-மிடம் ஆகிய இடங்களைப் பார்ப்பதால், குரு பகவான், வக்கிர கதியில் இருக்கும்போது இந்தவகைகளில் நன்மை தருவதில்லை. மீண்டும் நற்பலன் உண்டாக மார்ச் 2014 வரை காத்திருக்க வேண்டும்
பரிகாரம்:
சிவாலயங்களில், பிரதோஷங்களில் கலந்துகொண்டு தட்சிணாமூர்த்தியை வணங்கி வந்தால், வேண்டியது கிடைக்கும்.
மிதுனம்:
இந்த வக்கிரநிலை உங்களுக்கு சற்று ஆறுதல் தரும். குருப் பெயர்ச்சிக் காலத்தில் இது ஒரு நல்ல காலமாகும். குறிப்பிடும்படியாக முன்னேற்றம் எதுவும் ஏற்படாவிட்டாலும், புதிய தொல்லை எதுவும் வராது. ஏற்கெனவே இருந்து வரும் தொல்லைகளிலிருந்து வரும் மனக்கவலை மட்டுமே இருக்கும்.
தொழிலில் மாற்றங்கள் உண்டாகும். எதிலும் சரியான முடிவுகள் மேற்கொள்வதில் சற்று மனக் குழப்பங்கள் ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிரமம் இருக்கும்.பணம் வரவேண்டிய இடங்களிலிருந்து வருவதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய மனோதிடமும் உங்களுக்கு உண்டாகும். தொழிலாளர் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தாலும், அனைத்தையும் சமாளித்து, முன்னேற்றப் பாதையில் தொழிலை நடத்திச் செல்வீர்கள். லாப விகிதத்தையும் தொய்வுறாமல் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரச்சினகளுக்கிடையே ஒரு சிறப்பைக் காண்பீர்கள். வேலையில் முன்னேற்றமும் இருக்கும். வேலைப்பளு குறையவும் வாய்ப்புண்டு.
எடுத்த காரியங்களை ஒரு வைராக்கியத்துடன் முடிப்பீர்கள். தேவையான பணப் புழக்கம் இருக்கும். மதிப்பு மரியாதை இருக்கும். பொருளாதார வளம் கை கொடுக்கும் நிலை இருக்கும். அதனால் தேவையானவற்றை வாங்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கும். கணவன்-மனைவி உறவு பரிமளிக்கும். மனக் கசப்புகள் மறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். உத்தியோகத்தில் சிறப்பு காண்பர். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வேலைப்பளு குறையும். தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும்.
வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வர். வருமானம் சீராக இருக்கும். தொழிலில் லாபம் குறையாது. முன்பிருந்தபடி இருக்கும். அதிக அலைச்சல் இருக்கும். ஊர் வ்ட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். அரசின் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.
சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுற நேரும். சிலர் அடுத்தவரின் பொல்லாப்புக்கு ஆளாக நேரும். எனவே யாரிடமும் சற்று கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளினால், சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பிடிவாதங்களையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருநாலும், வாழ்க்கைத்துணையுடன் வீண் வாக்குவாதத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. கையில் பணப் புழக்கம் இருக்கும். அதனால், வாழ்க்கை வசதிக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனதில் வாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கையில் ஏறுமுகமும் இருக்கும்.
பரிகாரம்:
குலதெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து செய்து வரவும்.
கடகம்:
இந்த வக்கிர கதிக் காலம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.இந்தக் காலத்தில், குரு பகவானின் பலம் சற்று குறைந்து காணப்ப்டும். அதனால், குருவின் கெடு பலன்கள் உங்களை ஒன்றும் செய்யாது. மாறாக நன்மைகள்தான் கிடைக்கும். இதுவரை நீங்கள் இழந்தவற்றைத் திரும்பப் பெற முடியும். குறிப்பாக புதிய பதவியும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் திருப்தி காணலாம். வியாபாரம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் சிறப்பாக செய்து முடிக்கலாம். மதிப்பு ம்ரியாதை சிறப்பாக இருக்கும்.
தடைப்பட்ட திருமணங்கள் கைகூடி வரும். ஆரோக்கியம் சிறக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். திட்டங்கள் நிறைவேறும் . கனவுகள் நினைவாகும் நேரம் இது. மகிழ்ச்சியான செய்திகள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து வந்து சேரும் . வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள் உங்கள் வியாபாரம் வளரும். வருமானம் பெருகும் நீங்கள் புது வியாபாரத்தையும் தொடங்க முடியும் கூட்டுத் தொழிலும் கைகொடுக்கும் சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள் கடன்களை அடைப்பீர்கள் அரசு உதவி கிடைக்கும்.. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவிகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
வியாபாரத்தில் போதிய வருவாயைக் காணலாம். அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் உழைப்புக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறுகளை எளிதில் முறியடிக்கலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலைப் பளு குறையும். சம்பள உயர்வு , பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளீன் ஆதரவும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே அன்பு நீடிக்கும். பூசல்கள் மறையும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை தொடங்கலாம். புதிய நிலம், வீடு வாங்க அனுகூலம் பிறக்கும். சிலரது வீடுகளில் பொருள் திருட்டுப் போக வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்கவும்.
கலஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர் மாணவர்கள் முன்னேற்றம் காண்பர் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செச். இப்படியாக இந்த குரு வக்கிர கலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் கொண்டக்கடலை மாலையிட்டு, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சிம்மம்:
இந்த வக்கிரகதியில் நீங்கள் இரண்டும் கலந்த பலனை அனுபவிப்பீர்கள். 55./. பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை அனுபவித்த நற்பலன் குறைய வாய்ப்பில்லை. ஆனால் புதிதாக நற்பலன் வர வாய்ப்பில்லை. மேலும் நன்மைகள் பெற 2014 மார்ச் வரை காத்திருக்க வேண்டும்.
பண வரவுகள் வருவது தாமதமாகும். அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். பிள்ளைகளினால், சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். புது முயற்சியில் இறங்கும்போது ஆலோசனை பெறுவது அவசியம். மூத்த சகோதர்களிடம் பொறுமையுடனும் அணுசரணையுடனும் நடப்பது நல்லது.
உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். ஆனால் உங்கள் முன்னேற்றம் தடைப்படாது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிற்சில தடைகளைச் சந்திக்கலாம். ஆனாலும் பொறுமையும் தீவிர முயற்சியும் நல்ல அனுகூலத்தைக் கொடுக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களின் பதவி உயர்வுக்கு கால தாமதம் ஆகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அரசு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, தொழில் தடை ஏற்படும். சிலருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட நேரலாம். அப்படிப்பட்டவர்களுக்கு சுய தொழில் கை கொடுக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால், பாராட்டு, விருது போன்றவை கிடைக்காது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கினாலும், போட்டி, பந்தயங்கள் கை கொடுக்காது.
உங்கள் முயற்சிகளில் தடை வரும். பகைவர்களின் வகையில் தொல்ல வரும் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு செலவுக் கணக்கை சரியாக வத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர்ப் பயணம் ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுப் போகலாம். இப்படியாக இந்த வக்கிர கதிக் காலத்தில் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மீண்டும் முன்பிருந்த குருவின் சாதக பலன்களை அடைய , மார்ச் 2014 வரை காத்திருக்க வேண்டும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் சிவாலயத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
கன்னி:
இந்த வக்கிர நிலை உங்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். குருப் பெயர்ச்சியின் மொத்த காலத்திலும் இதுதான் உங்களுக்கு மிகவும் யோகமான நேரம். பெரிய ஏற்றம் இல்லையென்றாலும், தொழில் சம்பந்தமாகவோ, பண விஷயமாகவோ, புதிதாக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. இப்போது குருவின் பலம் சற்று குறைந்து காணப்படும். இதனால், அவரின் கெடு பலன்கள் உங்களை எள்ளளவும் அண்டாது. மாறாக மகிழ்ச்சிதான் உண்டாகும். இந்த வக்கிர கதிக் காலத்தில் நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல, சந்தோஷமான செய்தி வரும் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உடல் பலம் கூடும். திருமணம் கைகூடும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும் புதிய தொழில் தொடங்குவீர்கள். செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் பெருகும் நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள் உங்களுடைய பெயரும் புகழும் கூடும் கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு மலரும் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் கையில் நல்ல பணப் புழக்கம் இருக்கும் நேரம் இது. தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு மிகவும் நல்ல காலம். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். வாராக் கடன்கள் எளிதில் வசூலாகும். மகான்களின் ஆசியும் ,ஆன்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். அரசுப் பணிகளில் பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்த சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
எதிரிகள் சரணடையும் நிலை உண்டாகும். தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மதிப்பு ம்ரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டில் நிலவிய பூசல்கள் மறையும் . புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கை கூடும். உத்தியோகம் பார்ப்பவர்கள்முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு குறையும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வுக்கு தடையேதும் இல்லை.. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போலீஸ் ,ராணுவத்தில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் காண்பர். மாணவர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இப்படியாக இந்த வக்கிர கதிக்காலம் உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் பொற்காலமாக அமையும்.
பரிகாரம்:
சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு நெய் விளக்கேற்றியும், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு மஞ்சள் மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் நிம்மதி வரும்.
துலாம்:
இந்த வக்கிர கதி சமயத்தில் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை. இந்த சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் பலவித இடையூறுகள் தோன்றும். உங்கள் முயற்சிகள் தோல்வியடையும். பலவித தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற குழப்பங்கள், தராறுகள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சீர்கெடும். சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். நீங்கள் அடிக்கடி, விடுப்பில் செல்ல நேர்வதால், உங்கள் வேலையை இழக்கும் அபாயம் தோன்றும். உங்கள் வியாபாரம் மந்தமாகும். வருமானம் குறையும்.குறைந்த வருமானத்துக்கு அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். பயணங்கள் சாதகமாக இருக்காது பயணங்களில் உங்கள் பொருள்களைத் தொலைக்க நேரும். வண்டி வாகனங்களுக்கும் ,வீட்டிற்கும் ரிப்பேர் செலவை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
பண விரயம் ஏற்படலாம். பொருள் விரயமும் வீண் மனக் குழப்பமும் ஏற்படலாம். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் வருமானம் இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை. நினைத்த காரியத்தை செய்து முடிக்க சிரத்தை அவசியம். வீண் விவாதங்கள் தோல்வியைத் தரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூட சிற்சில தடை வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரம் சீராக நடக்கும். போதிய வருமானத்தைக் கொடுக்கும். எதிலும் அதிக முதலீடு செய்யவேண்டாம். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனக்கவலை ஏற்படுத்தும். கோர்ட் வழக்குகளால் தொல்லை ஏற்படும். தங்களிடம் நெருங்கிப் பழகியவர் தங்களைவிட்டுப் பிரிய நேரலாம். தகப்பனாரின் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். அவரின் போக்கில் சற்று மாற்றங்கள் தென்படும். இந்த வக்கிர கதிக் காலத்தில் நீங்கள் நற்பலன்களை அடைய வழியில்லை நற்பலன்களை மீண்டும் அடைய ,நீங்கள் 2014 மார்ச் வரை காத்திருக்கவேண்டும்
பரிகாரம்.:
சனிக்கிழமைகளில் அருகம்புல் மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, ஆனைமுகனை வழிபடவும்.
விருச்சிகம்:
இந்த வக்கிர கதியில் உங்களுக்கு நன்மைகள் நிகழ நிறைய வாய்ப்புண்டு. உங்கள் நிதி நிலைமை உயரும்.வருமனம் அதிகரிக்கும். உங்கள் வருமானம் இரு மடங்காகும். இந்த காலக் கட்டத்தில், உங்களுடைய முன்னேற்றம் ஜெட் வேகத்தில் இருக்கும். மனைவியுடனான உறவு மிகவும் இணக்கமாக இருக்கும். . இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளின் தீவிரம் குறைவது மட்டுமின்றி, உங்களுக்கு நிகழப் போகும் நன்மைகள இருமடங்காகும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். உங்களுடைய ஆரோக்கியம் சிறக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். எல்லா வழிகளிலும் நன்மைகள் நிகழும். பல திசைகளிலிருந்தும் நற்செய்திகள் வந்து சேரும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி வெற்றியடையும். நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி பரிமளிக்க முடியும். உங்களுடைய வெளிநாட்டு வியாபாரம் செழித்தோங்கும். உங்களுடைய பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். இந்த சமயத்தில் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காணும் முறையை யோசித்து செயல்படுவது நல்லது.
பிரிந்துசென்ற நணப்ர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து ஒன்று சேருவார்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மனைவியின் சொல்லுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். கணவன்/மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். கடன்களின் தாக்கம் குறையும். நணப்ர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
பரிகாரம்:’
வியாழக் கிழமைகளிலும் சனிக் கிழமைகளிலும் மாமிசம் உண்ண வேண்டாம். தட்சிணாமுர்த்தியை கொண்டக்கடலை மாலையிட்டு வியாழக் கிழமைகளைலும், சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி, சனிக்கிழமைகளிலும் வணங்கி வரவும்.
தனுசு:
இதுவரை நீங்கள் குருப் பெயற்சியின் மூலம் கிடைக்கும் 70./. பலன்களை அனுபவித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது ,இது ஒரு தடைப்பட்ட காலம். இந்த வக்கிரகதியில் நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த உயரிய நிலையில் மாற்றம் ஏற்படும் இதுவரை பெற்ற நற்பலன்களை இப்போது எதிர்பார்க்க முடியாது . ஆகவே மொத்தத்தில், மார்ச் 2014 வரை, அதாவது குரு வக்கிர நிவர்த்தி அடையும்வரை நற்பலன்கள் உண்டாக வழியில்லை முயற்சிகள் உங்களுக்கு வெற்றியளிக்காது வியாபாரம் மந்த நிலை அடையும் வருமானம் குறையும் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்வார் இதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது திருமணப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவைப்பது நல்லது
உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும். உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்பவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய ஆவணங்களைச் சரிபார்த்தபின் பயணங்களை மேற்கொள்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்களினால், சிக்கல்கள் உண்டாகும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இப்போது வெற்றியளிக்காது வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நலல்து நண்பர்களினால் உங்கள் சேமிப்பு கரையும். 2014 மார்ச்சுக்குப் பிறகு, மீண்டும் நற்பலன்கள் ஏற்படும் வாய்ப்புண்டாகும்
பரிகாரம்:
முருகனை வணங்கி, அனுமாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும். வாழ்வில் சிறக்கலாம்.
மகரம்:
இதுவரை நீங்கள் அனுபவித்து வரும் துயரங்களின் தீவிரம் மட்டுப்படும் இந்தக் காலத்தில் குருபகவானின் பலம் சற்றுக் குறைந்து காணப்படும். இதனால், அவரின் கெடுபலன்கள் உங்களை எள்ளளவும் அண்டாது. மாறாக நன்மைகள்தான் நடக்கும். அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சீயைத் தருவார். பொருளாதார வளத்தைத் தருவார். தொழில் அபிவிருத்தி அடையும். தொழிலில் புதிய நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். தங்களின் செல்வநிலை உயர்ந்து பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சிறந்து வருமானம் அதிகரிக்கும் உங்கள் இல்லறத்துணையுடன் நல்லுறவு மிளிரும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும் உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும் உங்கள் ஆரோக்கியம் சிறக்கும்
பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் கூடும். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு மரியாதை கூடும். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். விருந்து விழா என்று சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். வேலைப்பளு குறையும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அணுசரணை கிடைக்கும். விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தீயோர் சேர்க்கையும் எதிரிகளின் தொல்லையும் அவ்வப்போது தலை தூக்கும். புதிய வியாபாரம் தொடங்குவதில் தடை ஏற்படும். இருப்பதை சிறப்பாக நடத்த முயற்சி எடுங்கள். பெண்கள் விஷயத்தில் பிரச்சினை வரலாம். கலைஞர்கள் சிறப்புறுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, பாராட்டும் மதிப்பும் பெறுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இப்படியாக இந்த வக்கிரகதிக் காலம் உங்களுக்கு சிறப்பான காலமாகும். .
பரிகாரம்:
வில்வ மரத்தின் கீழ் உள்ள லிங்கத்தை வணங்கி, வில்வ பூஜை செய்து வந்தால், துன்பம் விலகும்.
கும்பம்:
இந்த வக்ரகதிக்காலம் உங்களுககு நற்பலன்களை நிகழ வாய்ப்பில்லை. சோதனைகள் உண்டாகும். தொல்லைகள் நீங்க, நீங்கள் மார்ச் 2014ல் குரு வக்ர நிவர்த்தியாகும்வரை காத்திருக்கவேண்டும்.
உடல்நலனில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு விலகும். கொடுக்கல் வாங்கலில் சற்று மந்த நிலை காணப்படும். பெரிய தொகைகள் கையாள்வதிலும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதிலும் கவனமாக இருப்பது நல்லது. புது முயற்சிகளில் சற்று தொய்வு ஏற்படும் . இந்த சமயத்தில் நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் தோன்றும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேற்றமடைய முடியாமல் போகும். அதுபற்றி, உங்களுடைய மனக் கவலைகள் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள வெற்றியடையாது. குருவின் வக்கிர நிவர்த்தி மார்ச் மாதம் ஏற்படும்போதுதான் திரும்பப் பேச்சுவார்த்தைகள முழுமையடையும். கோர்ட் கேஸ்கள் தொல்லை கொடுக்கும். உங்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். எதிரிகளின் தொல்லை எல்லை மீறும். கணவன்-மனைவி உறவில் விரிசல் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். உங்கள் நிதி நிலைமை சீராக இருக்காது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய இயலாது. வெளிநாட்டு வர்த்தகம் தொல்லை தரும். உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் உண்டாகும். முக்கியமான விஷயங்களில் அவசரம் காட்டாமல், மார்ச் மாதம் வக்கிர நிவர்த்தியாகும்வரை தள்ளிப்போடவும்.
பரிகாரம்:
ஆஞ்சநேயருக்கு வடை மாலை வெற்றிலை மாலையுடன் சாத்தி, நெய் விளக்கேற்றி தேங்காய்ப் பழம் .வெற்றிலை பாக்குடன் அர்ச்சனை செய்து வரவும்.
மீனம்:
பொதுவாக இந்த வக்ர கதி காலம் உங்களுக்கு ஒரு தீர்வைத் தந்துவிடாது. இதுவரை அனுபவித்துவந்த தொல்லைகள் குறைந்து காணப்படும். ஆனால் நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை உங்கள் வருமானத்துக்கான வழிகளை எப்படியாவது சமாளிப்பீர்கள் செலவுகளுக்கு ஈடுகொடுக்க வருமானத்துக்கான விஷயத்தில் தள்ளாட்டம் ஏற்படும் சிலர் மேற்படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்வர் இதன் மூலம் குடும்பத்தைப் பிரிய நேரும் பயணங்களில் பொருள்களை இழக்க நேரும் தாயின் உடல்நலம் பாதிக்கப்படும் மருத்துவ செலவுகள் ஏற்படும் தாயின் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் , சிலர் பழைய வணடியை வாங்கி அதற்கு ரிப்பேர் செலவு செய்தே களைத்துப் போவார்கள் உறவினர்கள் உங்கள வீட்டுக்கு வந்து செல்வார்கள் ஆனால், அதன்மூலம் செலவுகள் அதிகரிக்கும் மகிழ்ச்சி ஏறப்ட வழியில்லை சிலர் நகைகளை அடகு வைக்கவோ , அவற்றை விற்கவோ கூடும் கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்பபை எதிர்பார்கக் முடியாது பிள்ளைகளின் நடவடிக்கைகளின் மூலமும் கோர்ட் வழக்குகளை சந்திக்க நேரிடும் பிள்ளைகளின் கல்வியிலும் உயர்வைக் காண்பது சிரமம்
உடல் வலிமையும் உற்சாகமும் சற்று குறையும். முன் கோபத்தையும் பிடிவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. புத்திரர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். நீண்ட அலைச்சல்களுக்குப் பின் கொடுத்த கடன்கள் வசூலாகும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் மஞ்சள் மலர் மாலையுடன், கொண்டக் கடலையை ஊற வைத்து மாலையாக தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து வழிபட்டால் துன்பம் தீரும்.


குரு பகவான் 2013  மே மாதம் முதல்  மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். தற்போது வருகிற 7.11.13 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதே ராசியில் புனர்பூசம் (3) நட்சத்திரத்தில்  வக்கிர கதிக்குப் போகிறார். அதே வக்கிர நிலையில் ஏறத்தாழ 4 மாத காலம் அதாவது 6.3.14 வரை சஞ்சரிக்கிறார். இந்தப் பயணம் பின்னோக்கி இருக்கும் ஆனால், இந்தப் பயணம் மிதுன ராசிக்குள்ளேயே அமைந்து விடும். ஆனாலும் குருபகவானின் செயல்பாட்டில் மாறுதல் இருக்கும். இனி பலன்களைப் பார்க்கலாம். ஒரு கிரகம் வக்கிர கதிக்குப் போகும்போது, நன்மைகள் நிகழ வாய்ப்பில்லை. ஆனால், தீமைகளும் நிகழாது.மெதுவாக ஹால்ட்டாகிவிடும். ஓடிக்கொண்டிருந்த வண்டிக்கு எரிசக்தி தீர்ந்து போனதுபோலாகிவிடும். பலனடைந்துகொண்டிருந்த ராசிகளுக்கு ஒரு விதத்தில் நஷ்டமும், கெடுபலன் நடந்துகொண்டிருப்பவர்களுக்கு ஒரு நிம்மதியும் ஏற்படும் நேரம் என்றுகூடச் சொல்லலாம்.இந்த வக்கிரகதிக் காலத்தில் சில ராசிக்காரர்கள் இதுவரை பட்ட அவதியிலிருந்து  மீள்வதோடு ,  நற்பலன்களையும் அடையப் போகிறார்கள். இதுவரை நற்பலன் பெற்ற சிலர், மீண்டும் நற்பலனடைய6.3.14ல் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையும் வரை காத்திருக்க வேண்டும். சில முக்கிய நிகழ்ச்சிகளை ஒத்திப்போட்டுக்கொள்ளலாம். குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து,  அனைவரும் குரு பகவானின் நல்லருளைப் பெற வாழ்த்துகிறோம். இனி ஒவ்வொரு ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம் :
இந்த வக்கிரகதிக் காலம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழும்.இந்த வக்கிரகதிக் காலத்தில் குரு பகவான் உங்களுக்கு கெடு பலன்களைத் தர மாட்டார். உங்கள் ஆற்றல் மேம்படும். இதுவரை தடைப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் தொடர்ந்து நடக்க வழியுண்டு மனதில் துணிச்சல் பிறக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் உங்களுடைய நீண்ட கால முயற்சிகள் யாவும் வெற்றியடையும் ஆரோக்கியம் சிறக்கும் நீங்கள் எதிர்பார்த்தவை யாவும் சாதமாக நிகழ யோகமுண்டு நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி ஏற்படும் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் இந்த சமயத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசிடமிருந்து எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது நல்ல நேரம் பொறுப்பான பதவி கிடைக்கும் சிலருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்காத தொகை வந்து சேரும் யோகம் உண்டாகும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தடைகள் முறியடிக்கப்படும். தீயோர் சேர்க்கையால அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். சேமிப்பும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளினால் தொடர்ந்து பெருமை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெருவீர்.தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை தொடரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு , மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சிறப்பை அடையலாம். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். வேலையில் ஆர்வம் பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
உங்களுக்கு புதிய ஆற்றலும் துணிச்சலும் பிறக்கும். உங்களிடம் இருந்து வந்த மனக் குழப்பம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி இப்போது எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். விவசாயத்தில் தேவையான பலன் பெறலாம். மொத்ததில் இந்த வக்கிர காலம் உங்களுக்கு நற்பலன்களே இகுந்து காணப்படும்.
பரிகாரம்.
சிவாலயங்களில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் நெய்தீபம் ஏற்றி,அர்ச்சனை செய்துவந்தால் துன்பங்கள் தீரும்.
கன்னி:
இந்த வக்கிர நிலை உங்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். குருப் பெயர்ச்சியின் மொத்த காலத்திலும் இதுதான் உங்களுக்கு மிகவும் யோகமான நேரம். பெரிய ஏற்றம் இல்லையென்றாலும், தொழில் சம்பந்தமாகவோ, பண விஷயமாகவோ, புதிதாக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. இப்போது குருவின் பலம் சற்று குறைந்து காணப்படும். இதனால், அவரின் கெடு பலன்கள் உங்களை எள்ளளவும் அண்டாது. மாறாக மகிழ்ச்சிதான் உண்டாகும். இந்த வக்கிர கதிக் காலத்தில் நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல, சந்தோஷமான செய்தி வரும் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உடல் பலம் கூடும். திருமணம் கைகூடும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும் புதிய தொழில் தொடங்குவீர்கள். செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் பெருகும் நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள் உங்களுடைய பெயரும் புகழும் கூடும் கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு மலரும் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் கையில் நல்ல பணப் புழக்கம் இருக்கும் நேரம் இது. தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு மிகவும் நல்ல காலம். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். வாராக் கடன்கள் எளிதில் வசூலாகும். மகான்களின் ஆசியும் ,ஆன்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். அரசுப் பணிகளில் பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்த சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
எதிரிகள் சரணடையும் நிலை உண்டாகும். தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மதிப்பு ம்ரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டில் நிலவிய பூசல்கள் மறையும் . புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கை கூடும். உத்தியோகம் பார்ப்பவர்கள்முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு குறையும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வுக்கு தடையேதும் இல்லை.. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போலீஸ் ,ராணுவத்தில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் காண்பர். மாணவர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இப்படியாக இந்த வக்கிர கதிக்காலம் உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் பொற்காலமாக அமையும்.
பரிகாரம்:
சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு நெய் விளக்கேற்றியும், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு மஞ்சள் மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் நிம்மதி வரும்.
விருச்சிகம்:
இந்த வக்கிர கதியில் உங்களுக்கு நன்மைகள் நிகழ நிறைய வாய்ப்புண்டு. உங்கள் நிதி நிலைமை உயரும்.வருமனம் அதிகரிக்கும். உங்கள் வருமானம் இரு மடங்காகும். இந்த காலக் கட்டத்தில், உங்களுடைய முன்னேற்றம் ஜெட் வேகத்தில் இருக்கும். மனைவியுடனான உறவு மிகவும் இணக்கமாக இருக்கும். . இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளின் தீவிரம் குறைவது மட்டுமின்றி, உங்களுக்கு நிகழப் போகும் நன்மைகள இருமடங்காகும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். உங்களுடைய ஆரோக்கியம் சிறக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். எல்லா வழிகளிலும் நன்மைகள் நிகழும். பல திசைகளிலிருந்தும் நற்செய்திகள் வந்து சேரும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி வெற்றியடையும். நீங்கள் புதிய வியாபாரம் தொடங்கி பரிமளிக்க முடியும். உங்களுடைய வெளிநாட்டு வியாபாரம் செழித்தோங்கும். உங்களுடைய பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். இந்த சமயத்தில் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காணும் முறையை யோசித்து செயல்படுவது நல்லது.
பிரிந்துசென்ற நணப்ர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து ஒன்று சேருவார்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மனைவியின் சொல்லுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். கணவன்/மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். கடன்களின் தாக்கம் குறையும். நணப்ர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
பரிகாரம்:’
வியாழக் கிழமைகளிலும் சனிக் கிழமைகளிலும் மாமிசம் உண்ண வேண்டாம். தட்சிணாமுர்த்தியை கொண்டக்கடலை மாலையிட்டு வியாழக் கிழமைகளைலும், சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி, சனிக்கிழமைகளிலும் வணங்கி வரவும்.
பொதுவாக இந்த வக்ர கதி காலம் உங்களுக்கு ஒரு தீர்வைத் தந்துவிடாது. இதுவரை அனுபவித்துவந்த தொல்லைகள் குறைந்து காணப்படும். ஆனால் நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை உங்கள் வருமானத்துக்கான வழிகளை எப்படியாவது சமாளிப்பீர்கள் செலவுகளுக்கு ஈடுகொடுக்க வருமானத்துக்கான விஷயத்தில் தள்ளாட்டம் ஏற்படும் சிலர் மேற்படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்வர் இதன் மூலம் குடும்பத்தைப் பிரிய நேரும் பயணங்களில் பொருள்களை இழக்க நேரும் தாயின் உடல்நலம் பாதிக்கப்படும் மருத்துவ செலவுகள் ஏற்படும் தாயின் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் , சிலர் பழைய வணடியை வாங்கி அதற்கு ரிப்பேர் செலவு செய்தே களைத்துப் போவார்கள் உறவினர்கள் உங்கள வீட்டுக்கு வந்து செல்வார்கள் ஆனால், அதன்மூலம் செலவுகள் அதிகரிக்கும் மகிழ்ச்சி ஏறப்ட வழியில்லை சிலர் நகைகளை அடகு வைக்கவோ , அவற்றை விற்கவோ கூடும் கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்பபை எதிர்பார்கக் முடியாது பிள்ளைகளின் நடவடிக்கைகளின் மூலமும் கோர்ட் வழக்குகளை சந்திக்க நேரிடும் பிள்ளைகளின் கல்வியிலும் உயர்வைக் காண்பது சிரமம்
உடல் வலிமையும் உற்சாகமும் சற்று குறையும். முன் கோபத்தையும் பிடிவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. புத்திரர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். நீண்ட அலைச்சல்களுக்குப் பின் கொடுத்த கடன்கள் வசூலாகும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் மஞ்சள் மலர் மாலையுடன், கொண்டக் கடலையை ஊற வைத்து மாலையாக தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து வழிபட்டால் துன்பம் தீரும்.

Thursday, 10 October 2013

திருமணம் அமைவது இல்லை.

ஒரு ஜாதகத்தில் லக்னம்  என்று ஓன்று இருக்கும் இல்லையா.... அதை ஓன்று என்று வைத்து கொண்டால் அதில் இருந்து கேந்திரம் என்று சொல்ல கூடிய 4 , 7 , 10 ம் இடங்களிலோ,  அல்லது திரிகோணம் என்று சொல்ல கூடிய 5 , 9 ம் இடங்களிலோ 5 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அவர்களுக்கு திருமணம் அமைவது இல்லை. 
சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3 , 7 , 10 ம் இடத்தை பார்பார்.  அந்த வகையில்  லக்னாதிபதியாக வருகிற கிரகத்தையும், சந்திரனையும் சனி பகவான் பார்த்தால்,  அந்த அமைப்பை உடைய ஜாதகருக்கு திருமணம் நடப்பதில்லை. 

ஏன்?

பொதுவாக ஜாதகத்தில் சனி சந்திரன் தொடர்பு ஏற்பட்டாலே புனர்பூ தோசம் என்று பெயர்.   அது வாலிபத்தில் திருமணத்தை நடத்த விடாது.  நெருங்கி வந்த மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு விலகி போய்விடும். 

அடுத்து...

களத்திர பாவம் என்று சொல்லக்கூடிய 7 ம் இடத்தில் சந்திரன்,  சுக்கிரன், சனி, செவ்வாய் இணைந்து இருந்தால் மனபந்தால் ஏறும் அமைப்புக்கு மறுப்பு வந்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் 5 ம் அதிபதியாக வரக்கூடிய கிரகம்,  ராகு அல்லது கேதுவுடன்  சேர்ந்தால் திருமணம் நடப்பதில்லை,  அல்லது குழந்தைகள் பிறப்பது இல்லை. 

நான்கு கிரகங்கள் பத்தாம் பாவத்தில் இருந்தாலும்,  நாற்பது  வயதுக்கு முன் திருமணம் நடக்காது.   இப்படி பல கிரக நிலைகள் இருக்கிறது.  ஜோதிடர் சொல்லி முடித்து விட்டு சாம்பசிவத்தை ஏறிட்டு பார்த்தார். 

பிரமை பிடித்த மாதிரி இருந்த சாம்பசிவத்தை ஜோதிடரின் குரல் தான் இயல்பு  நிலைக்கு திருப்பியது. 

பிள்ளைவாள் ... இந்த பொண்ணோட ஜாதகத்திலே கிரக பாதிப்புகள் இருக்கிறது என்பது உண்மைதான். அதுக்காக கவலை பட வேண்டாம்.  காயம் சின்னதா இருக்கும் போதே மருந்து போடணும் .  நம்மில் பலர்.. காயம் புரை ஓடிய பிறகுதான் அதை பற்றியே கவலை படுறது.

போகட்டும்... நான் பரிகாரம் சொல்றேன்.  செய்யுங்கோ.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.

என்ன ஜோசியரே செய்யணும்?

பார்வதி சுயம்வர ஹோமம் செய்யணும்.  செய்தால் கல்யாணம் நடக்கும்.  உங்களுக்கு தெரிந்த ஐயரை கேட்டு,  ரொம்ப சுத்தமா, நியதிமாறாமல் ஹோமம் செய்தால் திருமணம் நடக்கும்.  செய்யுங்கோ. 

எப்போது திருமணம் செய்ய கூடாது?

எப்போது திருமணம் செய்ய கூடாது?
ஜாஜகத்தில் திருமண திசை வரணும், கோட்ச்சாரம் என்று சொல்லக்கூடிய கிரக மாறுதல் சாதகமாக இருக்கணும்.  குறிப்பாக குரு பகவான்.  இவர் நல்ல இடத்திருக்கு வரும் போதுதான் நல்லதே நடக்கும்.  அதனால் தான் குரு பலம் வியாழநோக்கம் என்றெல்லாம் ஜோதிடர் சொல்வது.  

ஒகே.... சாதகமான இடத்தில் குரு இல்லை.  அதாவது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 ம் இடங்களில் கோட்ச்சார நிலையில் இருக்கும் போது திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வது சாஸ்த்திரப்படி தவறு.  

ஜோதிடர் இப்படி சொன்னதும் ராகவன் என்ன கேட்டு இருப்பார்.  பரிகாரம் ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்.  இப்படிதானே கேட்டு இருப்பார்.  
இப்படித்தான் ராகவனும் கேட்டார்.  ஜோதிடர் திருமண தேதியை முடிவு செய்யும் முன்,  குரு பகவானுக்கு போன் பண்ணி,  ஹலோ குரு பகவான்... நான் தான் ஜோதிடர் சர்மா பேசுறேன்.  
முன்னே சொன்ன மாதிரி குரு  1 , 3 , 4 , 6 , 8 , 10 ம் இடங்களில் கோட்ச்சார நிலையில் இருக்கும் போது திருமணம் எய்ய முடியாது என்பதல்ல.  முடியும்... திருமணம் செய்ய முடியும்.  

ஆனால்... ஆனால்.... அவ்வாறு திருமணம் செய்தால் விளைவு பின் வருமாறு இருக்கும்.  

குரு 1 இல்

கணவன் மனைவி இருவருக்கும் இடையே இணக்கம் குறையும். பொதுவா  கணவன் மனைவி உறவு என்பது என்ன?  

அன்பு காட்டனும், அரவணைத்து கொல்லனும், விட்டு கொடுக்கணும், பகிர்ந்து கொல்லனும், ஆனால் இங்கேதான் முதல்ல விழும் ஆப்பு. 

உண்மையா சொல்லப்போனா ஈகோ இல்லாத உறவு என்றால் கணவன் மனைவி உறவு தான்.   நான் ரொம்ப அழகா இருக்கேன்.  நான் ரொம்ப படிச்சு இருக்கேன்.  நான் யார் தெரியுமா.. எனக்கு கொம்பு முளைச்சு இருக்கு,  இப்படி எல்லாம் சிந்திக்காத உறவு.

ஆனா...  ராசியில் குரு இருக்கும் போது திருமணம் செய்தால், யுத்த பூமி மாதிரி இருக்கும் உறவு.  அதோடு வளமான வம்ச விருத்தி இருக்காது.   பிறக்கும் குழந்தைகள் அறிவற்ற குழந்தையாக... இருக்கும்.  

குரு 3 இல் 

கோடி கொடியா செல்வம் குவிந்து இருந்தாலும் மனசுல நிம்மதி இருக்காது.  இழக்க கூடாததை இழந்த மாதிரி, நடக்க கூடாதது நடந்த மாதிரி மனசு தவிக்கும்.

அது மட்டுமா?

அன்பு கொண்ட உள்ளங்கள் குற்றம் காண்பதில்லை என்பது பொய்யாகும்.  ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொண்டிருப்பார்கள்.  கோட்டு போடாத வக்கீல் மாதிரி குறுக்கே குறுக்கே பேசிகிட்டு இருக்கும்.

குரு 4 இல்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்ற மாதிரி,  கட்டையோ நெட்டையோ, கருப்போ சிகப்போ, சின்னம் சிறிசுகள் கொஞ்சி விளையாடனும்.  அதுதான் புது மன தம்பதியர்க்கு அழகு.

ஆனால்... இங்கேதான் வில்லங்கம் வரும். சுகம் குறையும்.  இன்னும் ஒரு முறை சொல்றேன்... சுகம் குறையும்.  அதாவது கட்டில் சுகம் கசக்கும்.

குரு 6 இல்

வாரம் தோறும் வைத்தியரை பார்க்க வேண்டிய கட்டாயம் வரும்.  உடல் நலம் கெடும்.  6 இல் குரு இருக்கும் போது திருமணம் ஆகி,  அப்போது குழந்தை கருவாகி பிறந்தால்,  அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிள்ளை எதிரியாகத்தான் இருக்கும்.

செத்தால்  கொல்லி போடாத பிள்ளைன்னு சொல்வாங்களே கேள்வி பட்டதுண்டா...  அது இப்போதான் அரங்கேறும்.

குரு 8 இல்

இருவரியில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கும்.  ஆணுக்கு குரு எட்டில் இருந்தால் பெண் கட்டுபடாது.  பெண்ணுக்கு குரு எட்டில் இருந்தால் ஆண் சொல் பேச்சை கேட்கவே மாட்டார்.  இஷ்டம்னா இரு இல்லைனா உன் அப்பன் வீட்டுக்கு போய்க்கோனு சொல்லுவார்.

மொத்தத்தில் வசந்த காலம் போய், கசந்த காலம் தான் மிஞ்சும்.

குரு 10 இல்

கருத்து வேறுபாடு, வருமான குறைவு, கர்ப்ப சிதைவு, போன்றவை உருவாக காரணமாக அமைந்து விடும்.  அதனால் குரு 2 , 5 , 7 , 9 , 11 ம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் செய்யலாம்.  12 ம் இடம் கூட தவறு இல்லை.  சுப விரைய செலவு செய்யும் இடம் என்பதால் நல்லதே.  

அப்பா வீடு பிள்ளைக்கு ராசியாக அமையுமா?

அப்பா வீடு பிள்ளைக்கு ராசியாக அமையுமா?

இயற்கையோடு மனிதன் ஒத்து போகவேண்டியதின் அவசியத்தை சொல்வது தான் வாஸ்து. உதாரணமாக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் இருந்து இறங்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள்.  

பஸ் எந்த திசையை நோக்கி சொல்கிறதோ, அந்த திசையை நோக்கி சிறிது தூரம் ஓடி நம் வேகத்தை குறைக்க வேண்டும்.  

மாறாக.... எதிர் திசையில் நாம் போக முயற்சித்தால் கிழே விழ வேண்டிய கட்டாயம் வரும்.  அது போலத்தான் வாஸ்துவும்.  

வாஸ்த்துவுக்கு எதிராய் செயல்படும் போது,  எதிர் படும் விளைவுகள் வாழ்க்கை பாதையை புரட்டி போட்டு விடுகின்றன.  அதனால் தான் வாஸ்து முக்கியத்துவம் பெறுகிறது. 
சிலர் கேட்கலாம்.  பூமி என்பது பறந்து விரிந்த பகுதி.  இதில் குறுப்பிட்ட  இடத்திற்கு வாஸ்து பார் என்றால் எப்படி?

இது ஞாயமான சந்தேகம்தான்.  ஆனால் பதில் இதுதான்.

ஒரு மனை என்பது சிறியதா.... பெரியதா என்பதல்ல,  ஒரு வீடு சிறியத பெரியதா என்பதல்ல பிரச்சனை.  அந்த சிறிய அல்லது பெரிய அல்லது வீட்டிற்குள் வாஸ்த்து புருஷன் வாசம் செய்கிறான் என்று அர்த்தம்.  

உதாரணமாக.... வடக்கை விட தெற்கில் அதிக காலி இடம் இருந்தால் அது வீடாக இருந்தாலும் சரி, கொவில்லாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி.... நாளடைவில் நலிவடைந்து விடும்.  இது அனுபவ உண்மை.

அதை போல்,  வீடிற்கு தெற்கே உயரமான கட்டிடங்கள் இருந்தால் செல்வ சிறப்புக்கு வழி வகுக்காது. தலைமுறை பணக்காரர்கள் கூட,  பொருளாதார சிக்கலில் சிக்கி தடுமாறி விடுவார்கள்.   

வட  மேற்கு திசையை வாயுவியம் என்று சொல்வார்கள்.  இது குறைவதும் பாதிக்க படுவதும் நடிமுறை வாழ்க்கை பாதிக்க பட்டு, நண்பர்களே பகைவர்களாக மாறுவார்கள்.  

அதனால் தான் திசைகளும் மனையின் அளவுகளும் மிக முக்கியத்துவம் பெறுகிறது.  
சும்மாவா... சொன்னாங்க. இல்லாள் முகத்தை தெருவாசல் சொல்லி விடும் என்று. 

பொதுவாக தலை வாசல் அமைப்புக்கு ஜோதிட ரீதியாக, ஓன்று அல்லது நான்காம் இடம்,  அல்லது நான்காம் அதிபதி திசையை அவர்கள் பெரும் பலத்தை பொறுத்தே,  ஒருவர் கட்டும் வீட்டின் தலை வாசல் பகுதியை அமைக்க வேண்டும் என வலியுறுத்த  படுகிறது 

ஒரு வீடு என்பது ஒரு தனி நபர் மட்டும் வாழும் இடமல்ல.  கணவன், மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள்,  மற்றும் குழந்தைகள் என்று பலர் ஓன்று சேர்ந்து வாழும் இடம். 

ஆனால் ஒரு மனை என்பது ஒருவரின் ராசி அமைப்புக்கு அமைக்க படுகிறது.  அப்படியானால் அவருக்கு ராசியான வீடு மற்றவருக்கு ராசியாக அமையுமா? என்ற கேள்வி எழும்.  

உண்மையில் யார் பெயரால் அந்த வீடு இருக்கிறதோ, அவருக்கு ராசியான திசை மற்றும் சுற்று சூழலை அனுசரித்து வீடு கட்டினால் போதுமானது.  

மற்றவர்கள் அவரை சார்ந்து வாழ்வதால், தனி தனி வாசல் அமைப்புகளை எண்ணி குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இன்னொரு சந்தேகம்.  

அப்பா கட்டிய வீடு,  அவரின் ராசியான திசையை வைத்து கட்ட பட்டது.  அவருக்கு பின் அவரின் மகன் அந்த வீட்டில் வாழ நேரும்போது,  அவருக்கு அந்த திசை ஒத்து போகுமா?

சந்தேகம் வேண்டாம்.   அப்பா கட்டிய வீட்டில் தான்,  மகனும் பிறந்தார்.  தவழ்ந்தார், வளர்ந்தார்... இப்போது அந்த வீட்டில் வசிக்கும் மகனுக்கு வாஸ்து பாதிப்பு வராது.  

கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம்


வீடுகள் தோறும் கிரகங்கள் இருந்தால் அதற்கு கிரகமாலிகா யோகம் என்று பெயர். இனி  பலன்களை பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் ஓன்று முதல் ஒன்பதாம் இடம் வரை கிரகம் இருந்தால் மகான், ஞானி.

ஒன்றாம் வீடு  முதல் எட்டாம் வீடு வரை கிரகம் இருந்தால் கொடியவர், எதற்கும் துணிந்தவர், எந்த சட்ட திட்டங்களுக்கும் அடங்காதவர், பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற மாதிரி இருப்பார்கள்.

ஓன்று முதல் எழுவரை கிரகம் இருந்தால் உத்தமன், நல்ல நிர்வாகி, நல்லவன் என்று பெயரெடுப்பான்.

ராகு அல்லது கேது தவிர்த்து தொடர்ச்சியாக ஆறு வீடுகளில் கிரகம் இருந்தால் வணக்கத்திற்கு உரியவர். புதிய கண்டுபிப்பாளர். ஊரே மெச்சுகிற  அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும்.

ராகு அல்லது கேது தவிர்த்து தொடர்ச்சியாக ஐந்து வீடுகளில் கிரகம் இருந்தால் செல்வந்தர், ஆடம்பரபிரியர்கள்.  வாழ்க்கை சுபிச்சமாக இருக்கும்.


ராகு அல்லது கேது தவிர்த்து லக்னம் முதல் நான்கு ராசிகளில் கிரகம் தொடர்ச்சியாக இருந்தால் பிறர்மனை நோக்குவார். 

ராகு அல்லது கேது தவிர்த்து, லக்னம் முதல் மூன்று ராசிகளில் கிரகம் இருந்தால் முரட்டு குணம் உடையவர். பிறந்தது முதல் உழைத்து வாழ வேண்டிவரும். 

ராகு அல்லது கேது தவிர்த்து, லக்னம் முதல் இரண்டு ராசிகளில் கிரகம் இருந்தால் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். அதிக உழைப்பின்றி பணம் சேர்ப்பார். பலதொழில் அமையும்.

ஒன்றில் மட்டும் கிரகம் இருந்தால் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. சாதாரண நிலையில் வாழ்க்கை அமையும்.

உதடு கறுப்பு மறைய!

உதடு கறுப்பு மறைய!உதடுகள் கறுத்தும், வறண்டும் இருந்தால் கொத்துமல்லி இலை சாற்றினை இரவு படுக்கைக்கு போகும் முன் தடவிக்கொண்டு படுக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து பாருங்கள். உதடுகள் அழகாகும். 

உங்கள் உதடுகள் கருப்பு நிறமாக இருக்கிறதா... கவலை வேண்டாம். 

தேனும், எலுமிச்சை சாறும் கலந்து தடவி வந்தால் சில வாரங்களில் உதடுகள் ரோஸ் நிறமாக காட்சியளிக்கும். 

முகப்பருக்கள் நீங்க.

பருவகோலாரால் வந்த முகப்பருக்கள் மாற வேண்டுமா? பச்சை வேப்பிலைகளை 2 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து பின் ஆற விடுங்கள். 

கசப்பாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை. கண்ணை முடிக்கொண்டு குடித்து விடுங்கள். குடல் பூச்சியும் சாகும், முகப்பருவும் மறையும்.

கை மூட்டு பகுதி கருப்பாக மாறி தோல் தடித்து காணப்படுகிறதா? 

கவலையை விடுங்கள். எலும்மிச்சை பழ சாரையும், கடலை எண்ணெயையும் கலந்து தடவி வாருங்கள். கறுப்பு நிறம் மாறி தோல் மிருதுவாகி விடும். 

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!


ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? 

ஹோமம் தான். 

கோவிலுக்கு போறது, சாமி கும்பிடுறது, அர்ச்சனை செய்றது,அபிழேகம் செய்றது, மொட்டை போடுறது, அலகுகுத்திக்கிறது, தீ மிதிக்கிறது எல்லாமே பரிகாரத்தின் ஒரு வடிவமாக இருந்தாலும் ஹோமம் தான் கடைசி. 

இதுக்கு மேலே பரிகாரம் செய்யணும்னா தவம்தான் செய்யணும்.  ஒரு மலை உச்சியா பார்த்து ஏறி உட்கார்ந்து தவம் செய்தால் பரசிவன் வந்து குழந்தாய் என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்கலாம். போகட்டும்.


சரி...சொல்லுங்க. 

ஒரு ஹோமம் செய்றிங்க. ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். 

என்னென்னமோ காயி, வேரு,இல்லை, பட்டைன்னு அக்கினியில் போடுறார். அதை பற்றி கொஞ்சமாவது தெரியுமா? 

அட ... மந்திரம் தெரியுமான்னு கேட்கலை. அங்கே என்ன செய்றாங்கன்னு தெரியுமா?

தெரியாதுல்ல. 

நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு  எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க.  

அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன?

அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை இப்போ சொல்றேன். கொஞ்சமாவது அதை பற்றி தெரிஞ்சுக்கோங்க.


முதலில் கணபதி ஹோமம். 

எந்த  காரியம் செய்தாலும்  முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் வாராமல் இருக்க விநாயர் வழிபாடு.

அதிலும் ஹோமம் மாதிரி உயர்ந்த பரிகாரங்கள் செய்யும் போது, அரக்க சக்திகள் அதை தடுக்க பார்க்கும் என்கிறது புராணங்கள்.

உண்மைதான். ஹோமத்தின் வழி அந்த பலனை பெற வேண்டும் என்ற விதியமைப்பு இல்லைனா, பல தடைகள் வரும்.

நீங்களே பாருங்க. ஹோமத்திற்கு தேதி குறிச்சிருப்பாங்க. அந்த நாள் நெருங்கும் போது,வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரவது தீட்டுன்னு குண்டை தூக்கி போடும்.

வர்ற 20 ம் தேதிதான் குளிக்கிற கெடு. சனியன் இப்பவே வந்துட்டு என்பார்கள்.

ஹோமத்திற்கு நாள் குறித்திருப்பார்கள். அந்த நாள் நெருக்கும் போது நெருங்கின பங்காளி ஒருத்தர் சிவலோக பதவியை அடைஞ்சுடுவார்.

பங்காளி இறப்பு பதினாறு நாள்  சூதகம்ன்னு ஹோமத்தை ஒத்தி வைக்கிற மாதிரி வந்துடும்.

ஹோமத்திற்கு நாள் குறிச்சுருப்பங்க. அந்த நாள் நெருங்கும் போது கையிலே  பணமே இல்லாமே திண்டாட வேண்டிவரும்.


அட கடவுளே இவ்வளவு சோதனை வருமா?

எல்லாருக்கும் இல்லை ராஜா. ஒரு சிலருக்கு. சரி.. முதலில் கணபதி பூஜை. துர்தேவதைகலாலோ, துஷ்ட்ட சக்திகளாலோ எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வினைகளை வேறறுக்கும் விநாயகர் பூஜை.

அடுத்து சங்கல்ப்பம்.

கோடான கோடி மக்கள் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். சரியான முகவரி எழுதப்பட்ட தபால் எப்படி குறுப்பிட்ட நபரை சென்றடைகிறதோ, அதைபோல் செய்யகூடிய இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த இலக்கு என்பது யாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, அதாவது யாருக்காக செய்கிறோமோ அவருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்யப்படுவது.அடுத்து குலதெய்வ பூஜை. 

இது பெரும்பாலான ஹோமங்களில் செய்யபடுவதில்லை. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். உலகத்தில் எத்தனை சாமிகள் இருந்தாலும் குலதெய்வம் முக்கியமானது.

நம் முன்னோர்கள் காலத்தில் குலதெய்வ பூஜை என்பதை குறையில்லாமல் செய்தார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வேண்டினார்கள். வருடத்திற்கு ஒரு முறை விழாஎடுத்தார்கள்  .

வீட்டில் ஒரு சுபகாரியம் நடந்தாலும் முதல் பத்திரிகை சாமிக்கு வைத்தார்கள். ஆக குலதெய்வத்தோடு  அவர்களுக்கு இருந்த நெருக்கம் அதிகம்.

இது எந்திர யுகம். காரில் போகும்போது ஹாய் முருகா என்று ஒரு கை தூக்கிவிட்டு போகுற அளவிற்குத்தான் நேரம் இருக்கிறது.

என்ன செய்ய..... எப்படி இருப்பினும் , அடுத்து செய்ய வேண்டியது குலதெய்வ பூஜை.  குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் பூஜை.

ஆகமத்தில் இடம் இல்லையே என்று அலச்சியம் செய்யக்கூடாது.


அடுத்து செய்யப்படுவது பிதிர் பூஜை. 

இது ஒன்னும் அமாவாசை தர்ப்பணம் இல்லை. தெய்வமாகி போன நம் முன்னோர்களை தேடிபிடித்து வணங்குவது.

நீத்தார் உலகம் என்று சொல்லக்கூடிய இடத்தில் நம் மூன்று தலைமுறையை  சேர்ந்த முன்னோர்கள் இருப்பார்களாம்.

வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி உண்டு. அது திதி நாள். அன்று அவர்களுக்கு உரிய திதி கடமைகளை சரிவர செய்தால் மகிழ்ந்து வாழ்த்திவிட்டு செல்வார்களாம்.

ஒன்றுமே செய்யவில்லை என்றால், வந்தவர்கள் நல்ல மனது உள்ளவராக இருந்தால் மனக்குறையோடும், கெட்ட மனது உள்ளவராக இருந்தால் சபித்து விட்டும் போய்விடுவார்களாம்.

அது போன்ற குறைகள் இருந்தால் அவற்றை நீக்கி அவர்கள் ஆசியை பெறுவதற்காக செய்யப்படுவது பிதிர்பூஜை.

இதுவும் பெரும்பாலான ஹோமத்தில் தவிர்க்க படுகிறது. இது முறையல்ல.

எந்த தேவதையை குறித்து ஹோமம் செய்கிறோமோ அந்த தேவதையை கும்பத்தில் நிலைநிறுத்தல்.

கும்ப ஸ்தாபனம்


கும்பம்  என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். 

தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். 

ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம். 

என்ன ஹோமம் செய்கிறோம்? அதாவது எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறோமோ, அந்த தெய்வத்தை கும்பத்தில் நிலை நிறுத்துவதுதான் ஆஹாவனம் என்று பெயர்.

அடுத்து செய்யப்படுவது நவக்கிரக தோஷ பரிகாராம். 

ஜெனனி ஜென்ம சௌக்கியனாம்
வர்த்தினி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்ணியனாம்
லிக்கியதே ஜென்ம பத்திரிகா என்பது ஜோதிட வாக்கு.

நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள். நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் கொள்கிறோமோ  இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள்.

இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும்.

இதை ஹோம நிறைவுக்கு முன் செய்வதும் உண்டு. இனி ஹோமம் ஆரம்பம்

இந்த நடைபெறும் போதுதான் வேத பாராயணங்கள் செய்யப்படுகிறது. வேத பாராயணங்கள் என்பது இறைவனை ஆராதிப்பது என்று பொருள்.

பொதுவாக பாராயணங்கள் என்பதே இறைவனை புகழ்ந்து பாடி, அவர் அருளை பெறுவதுதான்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.

உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது.

காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது.

பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று பொருள்.

பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது. இதை பற்றி தனியே ஒரு கட்டுரை எழுதுகிறேன். இப்போதைக்கு படம் மட்டும். வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும் மந்திரம் சமகம்.


கடைசியாக பூர்ணாஹுதி 


இது ஹோமத்தின் நிறைவு பகுதி. பட்டு துணியில் வாசானாதி திரவியங்கள் சேர்த்து, எட்டு கண் விட்டெரிக்கும் அக்னி  தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாஹுதி எனப்படுவது. 

இந்த அவிர் பாகத்தை பெற்று கொள்ள தேவலோக தேவேந்திரனே வருவாராம். இதை செய்து முடித்ததும் ஹோமம் நிறைவு பெறுகிறது.

சுபம்