jaga flash news

Wednesday, 25 February 2015

மூட்டு வலியை தீர்க்கும் முத்ரா பயிற்சி !!!

மூட்டு வலியை தீர்க்கும் முத்ரா பயிற்சி !!!
====================================
நம் உடலில் ஏற்படும் பிரச்னைகள்
அனைத்திற்குமே மருத்துவரை சென்று அனுகுவதை விட
சில எளிய பயிற்சிகள் மேற்கொள்வதின் மூலம்
அவற்றை சுலபமாக சரிசெய்யலாம்.

40 வயதை கடந்து விட்டாலே மூட்டு வலி ஏற்படும்
என்பதெல்லாம் அந்த காலங்க. இப்போதெல்லாம்
சிறிய வயதுள்ளவர்களுக்கும்
மூட்டு வலி பிரச்னை ஏற்படுகிறது.
இதனை சில எளிய முத்ரா பயிற்சிகள் செய்வதன்
மூலம் நிவாரணம் பெறலாம்.
வாயு முத்ரா எனப்படும்
முத்ரா பயிற்சி செய்வதன் மூலம்
மூட்டு வலியை சரிசெய்யலாங்க....
செய்யும் விதம்:
--------------------------
ஆள்காட்டி விரலை நன்றாக
மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தைத்
தொடும்படி வைக்கவும். ஆட்காட்டி விரலின்
நகத்தின் மேல் உள்ள சதைப் பகுதியில்
கட்டை விரலை பதிய வையுங்கள். மற்ற
மூன்று விரலையும் நேராக
நிமிர்த்தி வையுங்கள்
இதுவே வாயு முத்திரையாகும். தினந்தோறும்
இந்த பயிற்சியை 15 நிமிடங்கள்
தொடர்ந்து செய்து வர விரைவில் குணமாகும்.
இந்த முத்ராவை செய்வதன் மூலம்
மூட்டுக்களில் ஏற்படும் பிரச்னைகள் அகலும்.
மேலும் இந்த மூத்திராவானது பக்கவாத
வியாதியை வராமல் தடுக்கும்
ஆற்றலுடையது. உணவு உண்ட பிறகு ஜீரணம்
ஆவதற்கு கடினமாக உணர்ந்தால், வஜ்ர
ஆசனா முறையில் அமர்ந்து இந்த
முத்ராவை செய்யலாம்.

ஈசான்யம்

 சனி மூலை தெரியுமா?
நான்கு திக்குகள் என்பது, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்காகும். எட்டுத் திக்கு என்பது, இவைகளோடு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு பதினாறு திக்குகள் என்பது, மேற்சொன்னவைகளோடு, 1. வடக்கு சார்ந்த வடகிழக்கு: 2. கிழக்கு சார்ந்த வடகிழக்கு: 3. கிழக்கு சார்ந்த தென்கிழக்கு: 4. தெற்கு சார்ந்த தென்கிழக்கு: 5. தெற்கு சார்ந்த தென்மேற்கு: 6, மேற்கு சார்ந்த தென்மேற்கு: 7. மேற்கு சார்ந்த வடமேற்கு: 8. வடக்கு சார்ந்த வடமேற்கு. என மொத்தம் பதினாறு திசைகளாகும். இதில் நாம் காணப் போவது, “சனிமூலை” என்று குறிப்பிடப்பட்டுள்ள, (ஈசான்யம்) வடகிழக்கு திசையைப் பற்றியதாகும்.
ஒரு வீட்ட “வாஸ்து” செய்யும் போது, இந்த ஈசான்ய மூலையை மிக கவனமாக வடிவமைக்க வேண்டும். சரியாக 90 பாகையிலோ, அல்லது சற்றுக் குறைவாகவோ இழுவை உள்ளதாக அமைத்துக் கொள்ளலாம். இந்த சனிமூலைப் பகுதி துருத்திக் கொண்டிருக்கலாம். இத்திசையில் தெருக்குத்து (முச்சந்தி) அமைந்தால், மிக நல்லது.
ஒருவர் வீட்டின் வடகிழக்குப் பகுதி சேதமடைந்து, இடிந்து போய் கிடந்தால், அவர்களின் வீட்டில் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். குழந்தை உற்பத்தியானால், ஊனமாகலாம். அல்லது மந்த சுபாவம் உள்ள குழந்தையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. குழந்தைகளின் முன்னேற்றம் பாதிக்கும். வருவாய் இழப்பும், பொருள் அழிவும் உண்டாகும். அதனால் வீட்டின் மற்றமூலைகளை உருட்டிக் கட்டுவதுபோல், சனிமூலையை உருட்டிக் கட்டாதீர்கள்.
உடல்நோய்க்கான மருந்துப் பொருட்களை சனிமூலைப் பகுதியில் வைத்து வேளாவேளைக்கு தின்ன நோயின் தீவிரம் குறையும். இப்பகுதி மற்ற பகுதிகளைக் காட்டிலும், சற்றுப் பள்ளமாக தரைப்பகுதி இருக்கலாம். கழிவு நீர் வெளியேறுவது, நிலமட்ட நீர்த் தொட்டி, கிணறு, வடிகால், ஆனால், கழிநீர் தேங்கக் கூடாது.
இந்த பகுதி புனிதமானதாக இருக்க வேண்டும். தியானம் செய்வதற்கு ஏற்ற இடம். இந்த பகுதி இதயத்தைப் போன்ற மென்மையானப்பகுதி. இதயச்சுமையோடு ஒருவன் வாழமுடியாதோ, அதேபோல் பூமியின்,அல்லது வீட்டின் இதயம் போன்ற பகுதியும் சுமையோடு இருக்கக் கூடாது. இப்பகுதியில் அல்லது கோவில் போன்ற பீடங்களையோ, அதில் விக்கிரகங்களையோ வைத்து வழிபடக் கூடாது. அதனால் கனமான மரங்களையும் வைக்கக் கூடாது.
புளிய மரத்தில் முனி குடியிருக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அப்படியிருக்கும் போது, ஒருவன் சனிமூலையான வடகிழக்கில் புளியவிதையை நடப்போனால், அந்த வீட்டிலும் பேய், பிசாசு, முனி, கருப்பு என அத்தனை துர்தேவதைகளும் குடிபுக வாய்ப்புள்ளது அல்லவா? அதனால்தான் நம் பெரியவர்கள், நட்டுவைக்கப் போகும் புளிய விதைக்கு சனிமூலை தெரியுமா? என்றனர். மேலும், புளியமரம் வெப்பத்தை அதிகம் வெளிப்படுத்தும். நாம் சுவாசிக்கும் ஆக்ஜினை அதிக அளவு எடுத்துக் கொண்டு, அதிகக்படியான ஹைட்ரஜனை வெளியிடும். அதனால், வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனாலும் கூறியுள்ளனர்.

Monday, 23 February 2015

கதவீ,ஸ்திரீ,மிருத,ஸாஷாத் வந்தியை

நான்குவிதமான மலடிகளுக்கான தோஷங்கள்.
முத்துப்பிள்ளை.
இந்த பிரபஞ்சத்தில் பரிணாமத் தோற்றத்தில் தான் உயிரினங்கள் பல்கிப் பெருகியுள்ளன. எல்லா உயிரினங்களிலும் இனக்கவர்ச்சியின் மூலமே, தங்களின் மரபணுக்களைக் ஒவ்வொரு தலைமுறைகளாக, காலங் காலமாக கடத்தி வருகின்றன. இதில் எந்த உயிரினமாக இருந்தாலும், தன் சந்ததிகளை உருவாக்க முடியாதவைகளும் உண்டு. சந்ததிகளை உருவாக்க முடியாத, எந்த உயிரினமும் வீணான உயிரினமாகக் கருதப்படும். அவைகளை, “மலடு” என்று ஒதுக்கப்படுகிறது.
இந்த “மலடை” நான்கு வகையாக, நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவைகளை, “வந்தியை” தோஷம் என்றழைக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------
1) கதவீ வந்தியா :
பெண் குழந்தைகளை மட்டும் எவள் பெற்று எடுக்கிறாளோ, அவள் “ புருஷ வந்தியை” என்றும் அழைக்கப்படுவாள்.
----------------------------------------------------------------------------------------
2) ஸ்திரீ வந்தியை;
எவள் ஆண்குழந்தையை மட்டும் பெறுபவளும், பெண்குழந்தையை பெற முடியாதவளையும், “ஸ்திரீ வந்தியை” என அழைக்கப்படுவாள்.
-----------------------------------------------------------------------------------------
3) , வந்தியை:
எவளுக்கு குழந்தைகள் பிறந்து இறந்து விடுகின்றதோ, அவளுக்கு, “மிருத வந்தியை” என்று பெயர்.
-------------------------------------------------------------------------------------------
4) ஸாஷாத் வந்தியை:
எவளொருத்தி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறாளோ, அவளே, “ஸாஷாத் வந்தியை” என்று அழைக்கப்படுகிறாள்.
வடமொழி நூல்களில் சொல்வது உண்மையான பட்சத்தில், ஆண்பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிகள் மட்டுமே, புத்திர தோஷமற்றவர்கள் என்று ஆகிறது
1). புருஷ வந்தியை எனும் காகவந்தியா தோஷம்:
இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் சனியும், சூரியனும் கூடியிருந்தாலும், அல்லது இவர்களின் சொந்த வீடுகளில் கூடியிருந்தாலும்,
இதே அமைப்பில் சந்திரனும், புதனும் கூடினாலும், அவர்களின் வீடுகளில் கூடியிருந்தாலும், ஜாதகர்க்கு ஆண் சந்ததி கிடைக்கவாய்ப்பில்லை. பெண் சந்ததியே உண்டாகும்
 மிருத வந்திய தோஷம்:
ஜாதகத்தில் சுக்கிரன், குருவுடன் செவ்வாய் கூடியிருந்தால், கர்ப்பம் அழியும், அல்லது குழந்தை இறக்கும். இந்த அமைப்புடையவர்க்கு இலக்கினத்திலோ, எட்டாமிடத்திலோ கோள்கள் இருப்பது இந்த கெட்ட நிலையை மாற்றி, நல்ல நிலையை உருவாக்கும்.
மேஷம், விருச்சிகத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்து, இலக்கினத்தில் சந்திரன் இருந்து, பாவர்களால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகரோ, ஜாதகியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள இயலாதவராக இருப்பார்.
இலக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்து, சனியால் பார்க்கப்பட்டால், கருச்சிதைவு ஏற்படும். இலக்கினத்திற்கு ஏழில் சூரியனும், இராகுவும் கூடியிருந்தாலும், இலக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்து இராகுவின் சாரம் வாங்கியிருந்தாலும், அல்லது இராகு இருந்து சூரியன் சாரம் வாங்கினாலும் கருச்சிதைவோ, குழந்தை பிறந்து இறத்தலோ ஏற்படும்.
குழந்தையைத் தரும் ஐந்தாமதிபதிக்கோ, ஐந்தாமிடத்துக்கோ, சந்திரன், சனி, செவ்வாய் இம்மூன்றுக்கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால், மிருத வந்தியா தோஷம் ஏற்படும். அதாவது கருச்சிதைவு ஏற்படும்.

Thursday, 19 February 2015

கடவுள்

கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுத்து விட முடியாது ! கடவுள் கொடுக்க முடியாததை யாராலும் கொடுத்து விட முடியாது 

Wednesday, 18 February 2015

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும். 
ஓரங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

மூன்று அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்

பஞ்ச அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.

அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்காரம்: வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

நமஸ்கார தத்துவம்:

என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்

கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?

கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.
காலத்தை கி.மு., கி.பிஎன வரலாறு பிரிக்கிறதுஅதுபோல வாழ்க்கையை .மு.,.பிஎன ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறதுஅதாவது ஏழரைச் சனிக்கு முன்ஏழரைச்சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறதுஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும்,நிதானமும் ஆச்சரியமானதுமுதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேசவைக்கிறதுஇந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்...உங்கள் ராசிக்கு முன்னும்உங்கள் ராசிக்குள்ளும்அடுத்துள்ள ராசியிலும் சனிசஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம்.சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும்வாலிப மற்றும் மத்திமவயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும்கொஞ்சம் வயதானகாலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்பிறந்ததிலிருந்துஇருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக்காணலாம்சனியின் முழுத் திறனும் தெரியும்முதல் சுற்று முடக்கி முயற்சியைதூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்... எத்தனை தடவைஅடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்... எத்தனைதடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்பதுபோலபலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும்குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ்வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல்பிரிவுசந்தேகத்தால்சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும்கணவன் - மனைவிக்குள் நேரடியாகஎந்தப் பிரச்னையும் இருக்காதுமூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னைஉருவாகும்அதிலும் முக்கியமாககுறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கியநண்பராக மாறுவோரால்தான் பிரச்னை பெரிதாகும்தேன்கூடாக இருந்த குடும்பம்தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வயது வரையுள்ளஏழரை சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள்உங்கள்குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக்கொள்வார்கள்மந்தம்மறதிதூக்கம் என்று இருப்பார்கள்கூடா நட்பினில்சிக்குவார்கள்திணறி வெளியே வருவார்கள்கண்கொத்திப் பாம்பாககண்காணிக்க வேண்டும்ஏட்டறிவுஎழுத்தறிவுசொல்லறிவு எல்லாவற்றையும்தாண்டிய அனுபவ அறிவை ஏற்றி வைப்பார்தடவித் தடவி சொன்னால் கேட்காதபிள்¬ளையை தடியெடுத்துத் திருத்தும் வாத்தியார்தான் சனி பகவான். ‘‘சாமிக்குநமஸ்காரம் பண்ணிட்டுப் போடா’’ என்று அம்மா சொன்னால், ‘‘எங்கயோ இருக்கறசாமிக்கு என் பிரேயர்தான் முக்கியமா?’’ என்பார்கள்ஆனால்சிக்கலில்தவிக்கும்போது தாயின் சொற்கள் நினைவுக்கு வரும்விபரீதங்களைப் பற்றியோசிக்காமல், ‘‘சும்மா ஜாலிக்குத்தான் அப்படி பண்ணேன்’’ என்று ஏழரையில் பலவினைகளைக் கொண்டு வருவார்கள்ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும்,அவமானங்களும்காயங்களும்வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடிஇருக்கும். ‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும்.இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்பவைப்பார்இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார்சனி பகவான்.சரிஇதற்கு என்னதான் செய்வதுகுழந்தைகளை விட்டுப் பிடியுங்கள்நீ இப்படிப்பண்ணா இதுதான் ரிசல்ட் என்று அன்பை மனதிற்குள் பூட்டிவெளியே கண்டிப்புகாட்டுங்கள்சனி நேர்மறையாக மாறுவார்சனி தர்மதேவன்அதர்மத்தில் திருப்பிவிட்டு சோதிப்பார்வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.அடுத்ததாக இரண்டாவது சுற்றுஇருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச்சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர்பறித்தல்பாதுகாத்தல்,பலமடங்காக பெருக்கித் தருதல்இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட்.உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும்செல்வத்தைஅள்ளிக் கொடுக்கும்ஆனால்கொஞ்சம் கெடுக்கும்அதனால்கொடுத்துக்கெடுப்பவர்கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘ஒண்ணுமேஇல்லாத ஓட்டாண்டியா வந்தான்இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள்.காசுபணம்பதவிகல்யாணம்சொத்துசுகம் எல்லாவற்றையும் கொடுப்பார்.ஆனால்நடுவில் பிடுங்கிக் கொள்வார்ஏன் இப்படி எடுத்துக் கொள்கிறார்?யாரிடமிருந்து பறித்துக் கொள்வார்? ‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது.எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்துசெல்வங்களையும் பறிக்கிறார்ஏனெனில்இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர்,மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார்தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள்தான்தான் பெரிய ஆள்என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள்அப்படி மாறிய அடுத்தநிமிடமேஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனிபழையநிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார்ஆகவேகவனமாக இருங்கள்.பேச்சிலோசெயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்கதயங்க மாட்டார்சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும்சக்திக்கும்அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்மகையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும்எதுவும்இல்லாதபோது இருந்த வீரமெல்லாம்எல்லாமும் வந்த பிறகு போய்விடும். ‘‘நாலுபேர் என்ன நினைப்பாங்க’’ என்றேமெல்லவும் முடியாமல் விழுங்கவும்தெரியாமல் ஓரமாக உட்கார்ந்து உள்ளுக்குள் அழ வைப்பார்ஏழரைச்சனியின்போது முடிந்தவரை கோர்ட்கேஸ் என்று போகக் கூடாதுபத்து லட்சரூபாய் பொருளுக்காக காக்கிக்கும்கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவுசெய்வீர்கள்எல்லா வி..பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள்ஆனா, ‘‘இந்தவிஷயத்தைப் போய் நாம எப்படி சொல்றதுஎன்னை தப்பா நினைச்சிட்டா...’’ என்றுதயங்குவீர்கள்பிறகு எப்படித்தான் இருக்க வேண்டும்வசதி வரும்போது எதையும்தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள்கூழ் கிடைத்தாலும் குடியுங்கள்ஸ்டார்ஹோட்டலில் இருந்தாலும் குடிசை மனோநிலையிலேயே இருங்கள்.அத்தனைக்கும் ஆசைப்பட்டுவாரி சுருட்டும்போது சனி பகவான் சும்மாயிருக்கமாட்டார்அமைதியாக இருந்தால்வேலை பார்த்த நிறுவனத்தையே விலை பேசும்நிலைக்கு உயர்த்துவார்இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம்விருத்தியாகும்அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவதுரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளதுஆனால் பாதைமாறினால்அதலபாதாளம்தான்தவறான வாய்ப்புகள் வந்தாலும்திசை மாறக்கூடாது. ‘‘சார்... நம்ம தொழிலுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்குஅதனாலடூப்ளிகேட்டையும் கலந்து விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார்.ஏனெனில்ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர்எவருமில்லைநேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக மனதில் பதித்துக்கொள்ளுங்கள்ஏழரை சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின்முக்கியஸ்தர்செல்வந்தர்இன்னொரு விஷயம்... நம்பிக்கை துரோகம்செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள்டென்ஷன் ஆகாதீர்கள்ஆரோக்கியம்பாதிக்கும்ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும்அது ஏற்கனவேநீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்அது பூர்வஜென்மத் தொடர்புஎன்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.ஜென்ம சனியின்போது பார்ட்டிகேளிக்கைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.எல்லோரும் எது எதுவோ சாப்பிடும்போதுதயிர் சாதத்தோடு அமைதியாகஇருங்கள்எல்லாவற்றிலும் எல்லை தாண்டக் கூடாதுஎல்லாவற்றையும் தானேஅனுபவிக்க வேண்டும் என்று இருக்கக் கூடாதுசனி பகவான், ‘‘நீ போய் கேளு.அவர் தர்றாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார்.பிரதிபலன் பாராமல் உதவிகள் செய்தால்பொங்கு சனி நல்ல பலன்களைக்கொடுக்கும்.அடுத்து மூன்றாவது சுற்றுகிட்டத்தட்ட ஐம்பது வயதைத் தாண்டி வரும் ஏழரைசனிஇதுதான் உங்களுக்கு கடைசிச் சனி என்று யாராவது பயமுறுத்தினால்கலங்காதீர்கள்படபடப்பையும் பயத்தையும் தரும் சுற்று இதுஉங்களை முடக்கமுயற்சி செய்யும்அதற்குள்உங்களையும் மீறி ஒரு கட்டுப்பாடு உள்ளுக்குள்வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால்அதைமூன்றாக்கிஅப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவுவேண்டும்அவ்வளவுதான்... அதீத இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்தன்னை தாழ்த்திஉயர்த்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.மருமகள் மார்க்கெட்டிற்கு போகத் தயாராக இருந்தால்பையை எடுத்துக்கொண்டுதான்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்எது நடந்தாலும் குற்றத்தைக்கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாதுஇள வட்டங்கள் ஏளனமாகப் பேசும்இந்தமூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்கபோறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது.வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம். ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் வீட்டைஅலுவலகமாக பார்க்கக் கூடாதுஆடையைத் துறந்தால் மகாத்மா ஆகலாம்.ஆசைகளைத் துறந்தால் புத்தன் ஆகலாம் என்பதை இந்த சுற்றில் மறக்காதீர்கள்.எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள்உங்களை சனிஉயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்ஏழரை சனியில் எப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதாஏழரையில்மனசாட்சிக்கு பயப்படுங்கள்மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின்பாதிப்பிற்கு ஆளாவீர்கள்உங்கள் மனசாட்சி வேறல்லசனி பகவான் வேறல்லஎன்பதை நீங்களே அறிவீர்கள்தடுக்கி விழுந்த குழந்தையை தூக்கி விடுவதைப்போலஆங்காங்கு கோயில்களில் வீற்றிருக்கும் இறைவனே மனிதர்களைத் தூக்கிநிறுத்துகிறார். ‘‘என்னைப் பார்த்து பயப்படாதீர்கள்நான் எத்தனைகருணைமிக்கவன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்கிற விதமாக சனிபகவான் பல்வேறு தலங்களில் எழுந்தருளி இருக்கிறார்அப்படித்தான்திருநள்ளாறு தலத்திலும்திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ளதிருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார்இந்த தலங்களுக்கு சென்றுவாருங்கள்பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள்வாழ்வின்ஒவ்வொரு கட்டத்திலும் வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைத் தேடி வந்தோம். ‘முட்ட முட்டப் பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய் நெஞ்சமே அஞ்சாதேநீ’ என்கிறாள் ஔவை பாட்டி. ‘‘மிகவும் கடுமையான பஞ்சமாக இருந்தாலும்,பிரச்னைகள் துரத்தினாலும்நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு ஈசனுடையதுஎன்பதை நெஞ்சமே நீ மறக்காதே’’ என்கிறாள்எனவேஎத்தனை பிரச்னைகள்வந்தாலும் இறைவனை சரணாகதி செய்வோம் பணவசதி உள்ளவர்கள் தகுந்தஹோம்மம் செய்து கொள்வதால் கடுமையை குறைககலாம்கண்னி துலராசிவிருச்சிக ராசி மேலும் மீனம் கடக ராசிக் காரர்களுகுகு பாதிப்பு அதிகமாககாணப்படுகிறது.