jaga flash news

Friday, 24 May 2019

ஒரே வீட்டில் ஏக ராசிக்காரர்களாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

ஒரே வீட்டில் ஏக ராசிக்காரர்களாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?


ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருக்கலாமா? ஒருவேளை அப்படி இருந்தால் என்ன ஆகும்? என சந்தேகங்கள் பலருக்குத் தோன்றும். அப்படி இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்று யோசிப்பவராக இருந்தால்....படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குடும்பத்தை ஆளும் பொறுப்பு கணவன் - மனைவி இருவருக்குமே உள்ளது. இவர்கள் ஒரே ராசியாக நிச்சயம் இருக்கக் கூடாது என்பது ஜாதகம் சொல்கிறது. பெரும்பாலும் நம் பெற்றோர்கள் திருமணத்திற்கு முன்னரே ராசி பொருத்தம் உட்பட அனைத்தும் சரியாக உள்ளதா எனப் பார்த்து தான் மணம் முடிப்பார்கள். ஆனால் பெற்றோர் கையை மீறிக் காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்படும் போது சிலருக்கு ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. சரி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்காவது மாறும் என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கும் ஒரே ராசியாகவே அமைந்துவிடுகிறது. ஆக ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

அவ்வாறு ஒரே குடும்பத்தில் மூன்று, நான்கு பேருக்கு ஏக ராசியாக அமையும் பட்சத்தில், அந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வதின் மூலம் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும்.
ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள மூவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். இதனால், குடும்பத்தில் எந்த நேரமும் சண்டை, சச்சரவு, பிரிவு, பொருள் இழப்பு, விபத்து எனச் சொல்ல முடியாத அளவிற்கு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு மாறாக அந்த ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருந்து விட்டால் பிரச்னையே இல்லை. கூட கோபுரமும், மாட மாளிகையும் எனக் கோபுரத்தின் உச்சிக்கு வந்துவிடுவர்.
என்ன பரிகாரம் செய்யலாம்:
இவர்கள் சம்ஹார ஸ்தலங்களுக்கு (அதாவது கடலோரமாக உள்ள கோவில்களுக்கு) சென்று வழிபாடு நடத்தலாம் என முன்னோர்கள் பழைய நூலில் கணித்து வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று நீராடி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். மேலும், பிரதி வாரம் சனிக்கிழமைகளில் நவக்கிரத்திற்கு எள் விளக்கிட்டு 27 முறை சுற்றி வரலாம். கிரகங்களின் தாக்கம் குறையும்.
ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் நேரத்தில், குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளாக இருப்பின் உறவினர் வீடு அல்லது விடுதி ஆகிய இடங்களில் தங்கலாம். கணவன் மனைவியாக இருந்தால் கிரக நிலைகளின் தாக்கம் குறையும் வரை பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடைபெறும் காலங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஏக ராசி

பெற்றோர்கள், தங்களுடைய மகள் அல்லது மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணும்போது அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதாவது, எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்த எந்த நட்சத்திரம் திருமணத்துக்கு உகந்தது அல்ல,எந்த நட்சத்திரம் தம் பிள்ளைக்குப் பொருந்தும்? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கை.அந்த வரிசையில், அனைவருக்கும் காலம் காலமாகத் தோன்றும் சந்தேகம் ஏக நட்சத்திரம் மற்றும் ஏக ராசியில் திருமணம் செய்யலாமா என்பதுதான். ஏக நட்சத்திரம் என்றால் என்ன? அல்லது ஏக ராசி என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம், ஏகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில்
 'ஒன்று' எனப் பொருள்படும். ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை இணைக்கலாமா என்ற எண்ணம் அனைவருக்கும் தொன்றுதொட்டு  இருந்து வருகிறது. 
பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்றும் சில நட்சத்திரங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் 'காலபிரகாசிகா' என்ற ஜோதிட நூல் விளக்குகிறது. 
இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்:
பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி  ஆகிய  நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது. 
இணைக்கக்கூடிய ஒரே நட்சத்திரங்கள்:
ரோகிணி, திருவாதிரை,,மகம், அஸ்தம், விசாகம்,,திருவோணம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன்,  மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது.
மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்: அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம்  ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். ஆனால், மத்திமமான பொருத்தம்தான். மொத்தத்தில் திருமணம் செய்யலாம், பாதகம் இல்லை.
பொருத்தமுள்ள ஒரே நட்சத்திரத்தை, சேர்ந்த மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரத்தின் முந்தைய பாதம் ஆணுக்கும்  அடுத்த பாதம் பெண்ணுக்கும் இருந்தால், திருமணம் செய்யலாம். 
உதாரணமாக, ரோகிணி நட்சத்திரம் என்றால், நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஆகியவற்றில் ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும்.
பெண் நட்சத்திரப் பாதம் முதலிலும் ஆண் நட்சத்திரப் பாதம் பிந்தியதாகவும் இருந்தால், திருமணம் செய்வது சிறப்பான பலன் இல்லை. உதாரணமாக, திருவாதிரை நட்சத்திரம் என்றால், திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் பெண்ணுக்கும் இரண்டு மூன்று நான்கு பாதங்களில் ஏதாவதொரு பாதம் ஆணுக்கும் இருப்பது நற்பலன்களைக் கொடுக்காது.
27  வது நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் கணக்கிடும் போது 27 வது நட்சத்திரமாக வந்தால், பெண்ணின் நட்சத்திரம் ஆணின் நட்சத்திரமும் ஒரே ராசியில், இருந்தாலும் திருமணப் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம் உத்தம பலன்கள் உண்டாகும்.
 அப்படி அல்லாமல், இருவர் ராசியும் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதற்கு தினப்பொருத்தம் இல்லை. நற்பலனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, இருவரும்  ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ஒரே ராசியாக இருந்தாலும் சரி, மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. காரணம் என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஆயுளில் பாதகம் ஏற்படாது. பரஸ்பரம் அன்பு அதிகமாகவே இருக்கும். ஆனால், மற்ற மற்ற சௌகரியங்கள் குறையுடன் இருப்பதைக் காணலாம். 
ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரமாகவோ உள்ள தம்பதிக்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி வரும்போது இருவருக்கும் ஒன்றாகவே துன்பம் தரும். இதே போல குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே தருவார்.
ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடைபெற்றால் பரவாயில்லை, மாறாக தசா புக்தியும் பாதகமாக வந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் கேள்வி. ஆதலால், இருவரும் வேறு வேறு ராசிகளில் பிறந்திருந்தால் அவர்களை இணைத்தோமேயானால் அவர்களில் யாராவது ஒருவருக்கு ஏழரைச் சனி நடந்து  மற்றவருக்கு ஏழரைச்சனி இல்லாமல் இருந்தால் நன்மையைத் தரும்.
அதாவது ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டு இருக்கும்போது மற்றவருக்கு இன்பம் இருக்குமாயின் துன்பம் ஏற்பட்டவருக்கு உறுதுணையாக உடன் இருந்து உதவிபுரிய உதவுகிறது. 
அப்படி இல்லாமல் இருவருக்கும் துன்பம் ஏற்பட்டு இருக்குமாயின் யார் யாருக்கு உதவ முடியும். மீண்டும் சோகத்தையே அந்த தம்பதி தழுவவேண்டியதுதான். 

Monday, 20 May 2019

யோகங்கள் என்றால் என்ன?

யோகங்கள் என்றால் என்ன?
யோகம் இந்துப் பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளுள் ஒன்று. ஏனைய நான்கும் வாரம், திதி, கரணம், நட்சத்திரம் என்பவை. யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.
எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
யோகங்களில் சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் என மூன்று விதமான யோகங்கள் உள்ளன. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் பஞ்சாங்க அடிப்படையில் யோகம் எனும் பிரிவில் ருதுவாகும் பெண்களுக்கான யோக அமைப்பை கொண்டது.
முறையே இந்த யோகம் 12 ராசிகளான மேஷம் முதல் மீனத்திற்குள் கடக ராசியில் ஆரம்பமாகும்.
1. விஷ்கம்ப நாமயோகம்:- துயரமான வாழ்வு அமையும். இதற்குப் பரிகாரம் சந்தனம், தாம்பூலம், தட்சணை, புஷ்பம் தானம் செய்ய நலம் உண்டாகும்.
2. பிரீதி நாம யோகம்:- மகிழ்ச்சியாக வாழ்வாள். கணவனின் அன்பும், பக்தியும் கொண்டவளாக இருப்பாள். மாமியார், மாமனாரை, உற்றார் உறவினர்களை மதித்து நடப்பாள்.
3. ஆயுஷ்மான் நாம யோகம்:- தீர்க்காயுள், தன சம்பத்து உடையவளாக இருப்பாள். தொழில், வியாபாரம் விருத்தி உண்டாகும். ஆயுள் குறைந்த ஆண் மகன் இவளை திருமணம் புரிய தீர்க்காயுள் கிட்டும்.
4. சவுபாக்கிய நாம யோகம்:- தனம், தான்யம், குழந்தைகள் யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் வாழ்வில் வெற்றிகள் குவியும். விரைவில் திருமணம் நடந்தேறும்.
5. சோபன நாம யோகம்:- சகல சவுபாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள், வீடு, நில புலன்கள், வண்டி, வாகனங்கள் சேர்க்கை நிகழும்.
6. அதிகண்ட நாம யோகம்:- பாவத்திற்கு இருப்பிடமாக இருப்பாள். சுமங்கலிகளுக்கு தாம்பூலம், புஷ்பம், தட்சணை கொடுத்து ஆசி பெற நலம் உண்டாகும். இத்தோஷம் நீங்க சிவ வழிபாடு, சூரிய வழிபாடு நலம் தரும். இளமையில் திருமணம் கூட்டும்.
7. சுகர்ம நாம யோகம்:- சுக ஜீவனம் உடையவள். வாகனம், நில புலன்கள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தொழில் விருத்தி உண்டாகும்.
8. திருதி நாம யோகம்:- துணிவு, பராக்கிரமம் உடையவளாகத் திகழ்வாள். பெண்களுக்கு மத்தியில் தலைவி போலக் காணப்படுவாள். நற்புத்திர சந்தானங்களைப் பெற்றெடுப்பாள்.
9. சூல நாம யோகம்:- கண்டம், விபத்து போன்ற அசம்பாவிதங்கள் குடிகொள்ளும். கட்டிளம் காளை இவளைக் கண்டால் மனக்கிலேசம் உண்டாகும். பரிகாரமாக சிவனையும், தட்சிணா மூர்த்தியையும் வணங்கினால் நலம் தரும்.
10. கண்ட நாம யோகம்:- பாப காரியத்தில் துணிந்து ஈடுபடுவாள். சூரிய வழிபாடு, சிவ வழிபாடு நலம் தரும். தோஷம் விலகும்.
11. விருத்தி நாமயோகம்:- நன்மைகள் குவியும். தனம், தான்யம் சேரும். புகழ், கவுரவம், செல்வாக்கு குடும்பத்தில் உயரும். மகிழ்ச்சி பெருகிடும். இளமையில் திருமணம் நடைபெறும்.
12. துருவ நாம யோகம்:- கற்புக்கரசி எனப் பெயர் எடுப்பாள். தனம், தான்யம் சேரும். அரச வாழ்வு உண்டாகும்.
13. வியாகத நாம யோகம்:- அமங்கலையாகக் கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு பரிகாரமாக வெண்கலப் பாத்திரம் தானம் செய்ய வேண்டும். சூரியன், செவ்வாய் சம்பந்தம் இல்லையென்றால் தோஷம் குறையும். சுக்ர கிரக வழிபாடு தோஷம் போக்கும்.
14. ஹர்ஷண நாம யோகம்:- நல்ல கவுரவமும், அந்தஸ்தும் பெற்று திகழ்வாள். பட்டங்கள், பதவிகள் சேரும்.
15. வஜ்ஜிர நாம யோகம்:- அழகும், குணமும் உடையவளாகத் திகழ்வாள். நின்ற கோல பெருமாள் வழிபாடு பலன்தரும். நற்புத்திர சந்தானங்களை ஈன்றெடுப்பாள்.
16. சித்தி நாம யோகம்:- சகல விதமான போக பாக்கியமும் பெற்று திகழ்வாள். கலை ஆர்வம் காணப்படும்.
17. வியதிபாத நாம யோகம்:- துயரம் கலந்த வாழ்வு அமையும். சூரிய வழிபாடு, சிவ வழிபாடு இவைகளில் நாட்டம் இருக்கும்.
18. வரியான் நாம யோகம்:- தான தர்மம் செய்யக் கூடியவள். பக்தி சிரத்தையுள்ளவள். கணவன் மீது அன்பு செலுத்தக்கூடியவள். இளம் வயதில் திருமணம் நடைபெறும் யோகம் உண்டு.
19. பரிகம் நாம யோகம்:- உற்றார், உறவினர்களுடன் பகைமை பாராட்டக்கூடியவள். தோஷம் நீங்க திங்கள் தோறும் சிவ வழிபாடு செய்துவர நன்மை உண்டாகும்.
20. சிவ நாம யோகம்:- சாஸ்திர ஞானம் உடையவள். உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டக் கூடியவள். கலை ஆர்வம் இருக்கும்.
21. சித்த நாம யோகம்:- தன-தான்ய சம்பத்து உடையவளாகத் திகழக் கூடியவள்.
22. சாத்திய நாம யோகம்:- சுக போக பாக்கியங்களை அனுபவிப்பாள்.
23. சுப நாம யோகம்:- மன மகிழ்ச்சியுடன் வாழ்வாள்.
24. சுப்பிர நாம யோகம்:- புகழும், கவுரவமும், கீர்த்தியும் பெறுவாள். கல்வி, ஞானம் உண்டு.
25. பிரம்ம நாம யோகம்:- பாப காரியத்தில் ஈடுபாடு கொள்வாள். காய், கனி வர்க்கங்களை தானம் கொடுத்து வர நலம் உண்டாகும்.
26. மகேந்திர நாம யோகம்:- மகாராணி போன்று யோகம் அனுபவிப்பாள். சகல செல்வமும் தேடி வரும்.
27. வைதிருதி நாம யோகம்:- வாக்கிலும், போக்கிலும் கடுமையாக நடந்து கொள்வாள். பெருமாள் வழிபாடு தோஷம் போக்கும். சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம், புஷ்பம், தட்சணை தானம் நலம் தரும்.

மரண யோகம், சித்த யோகம் என்றால் என்ன?குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம், அதுபோலவே குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் வந்தால் சித்த யோகம். எல்லாமே ஒரு கணக்குத்தான்.
ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி அமாவாசை திதி என இன்று மூன்றும் சேர்ந்தால் அன்று அமிர்தயோகம். 

அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு திதி மற்றும் நட்சத்திரம் அன்று வேறு யோகம் வரும்.

ஒரு சில யோக நாட்களில் சுப காரியங்கள் செய்யலாம். மரண யோகம் போன்ற நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.
மரண யோகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அன்றைய தினம் செய்யும் எந்த காரியமும் விருத்தி அடையாது. அதனால் தான் அன்றைய தினம் சுப காரியங்களை தவிர்க்கச் சொல்கிறார்கள்.

சித்த யோகம் என்றால் சித்தியாகுமா?
அப்படி எல்லாம் இல்லை. ஒரு சிலருக்கு மரண யோகமே நன்றாக இருக்கும். அதாவது அவர்களுக்கு ஜாதகமே எதிர்மறையாக இருக்கும். அதனால் அவர்களுக்கு மரண யோகம் நல்ல பலனைக் கொடுக்கும்.

எல்லாருக்கும் பொதுவானது அல்ல பஞ்சாங்கம் அப்படித்தானே?

நிச்சயமாக. பொதுவாக பஞ்சாகத்தைப் பார்க்கக் கூடாது. இன்று சுப முகூர்த்தம் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அவனுக்கு அன்று சந்திராஷ்டமமாக இருக்கும். அவனுக்கு அன்றைய தினம் ஒத்து வராமல் போகக்கூடும்.
எல்லாமே நல்லது, எல்லாமே கெட்டது. அதில் எது யாருக்கு எது நல்லது, எது கெட்டது என்று பிரிக்க வேண்டும் அதுதான் உண்மையான ஜாதகம்.

மரணயோகம் என்றால் என்ன?

மரணயோகம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். வெள்ளைக்காரன் மொழியில் சொன்னால் Death

யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.

இரண்டு சொற்களையும் சேர்த்து மரணயோகம் என்றால் என்ன?

மரணத்தை எப்படி யோகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா?

ஜோதிடத்தில் அது உண்டு.

நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று மரண யோகம் என்று போட்டிருப்பார்கள்.

எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.

மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

செய்தால் என்ன ஆகும்?

ஊற்றிக்கொண்டு விடும்!

அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும். 

மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.

சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.

பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும்

ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

சரி, அன்று என்னதான் செய்யலாம்?

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

Thursday, 7 March 2019

ஹோமத்தின் ( #யாகம் )மகிமை

ஹோமத்தின் ( #யாகம் )மகிமை.
ஹோமங்கள் பலவகை உண்டு.
‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம்.
அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.அதாவது எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார்.
இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.
பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகை யான ஹோமங்கள் செய்யப்படுகின்றன.
ஹோம அக்னியில் மந்திரத்தினால் இறைவனை ஆவாஹனம் செய்து
இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்து அக்ன் #பகவான் ரூபத்தில் நாம் எந்த #ஹோமம்செய்கின்றோமோ அந்த தேவதையின் அருட்கடாக்ஷம் கிட்டும்

விலங்குகள்_இறைவன்_சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள்விலங்குகள்_இறைவன்_சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள் மற்றும் அதன் வரலாற்றை_காண்போம்.
🕉புலி சிவபெருமானை வழிப்ட்ட தலம்-திருப்புலிவனம்.
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் சிவபெருமான் அருள்கிறார்.
சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.
🕉பசு சிவபெருமானை வழிபட்ட தலம்-சங்கரன் கோவில்
நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன் கோவிலில் அம்பிகை தேவர்கள் சூழ்ந்திருக்க சிவனை வழிபட்டிருக்கிறார்.கோ எனும் பசு வழிபட்ட்தால் அம்பிகை கோமதி என அழைக்கப்படுகிறாள்
🕉சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவானைக்காவல்
திருச்சிராப்பள்ளியில் காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது.
இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில்,மழையில் கிடந்தது.
சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில்.மழை,மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது.
யானை தன் துதிக்கை மூலம் காவேரி ஆற்றில் நீரும்,பூவும் கொண்டுவந்து வழிபட்டது.யானை சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும்.
சிலந்தி மீண்டும் வலைபின்னி வழிபாட்டை தொடரும்.யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன.
இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன் யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார்.சிலந்தி மறுபிறவில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தது.
🐜எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவெறும்பூர்..
அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம்.🐝🐝
திருச்சி மாவட்டம்,திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் பிரசாததை எறும்புகள் எடுத்துக்கொள்கிறது.
🕉 ஈ - வடிவில் அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலம் -திரு ஈங்கோய்மலை.
திருச்சி மாவட்டம், தொட்டியம் to முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ளது திரு ஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)
🕉பாம்புக்ள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருப்பாம்புரம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேசன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.
🕉அணில்,குரங்கு,காகம் -சிவபெருமானை வழிபட்ட தலம்-குரங்கணில் மூட்டம்.
சாபத்தால் காகமாக மாறிய எமனும்,அணிலாக மாறிய இந்திரனும்,குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் மாமண்டூர் எனும் இடத்தில் உள்ளது.
🕉மயில்-சிவபெருமானை வழிபட்ட தலம்-மயிலாடுதுறை
சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை சிவனை வழிபட்ட தலம்.
🕉கழுகு சிவபெருமானை வழிபட்ட தலம்-திருக்கழுக்குன்றம்.
நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருகின்றன.
🕉வண்டு-சிவபெருமானை பூஜித்த தலம்-திருவண்டுதுறை.
திருவாரூர் மாவட்டம்,திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார்.
இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.
🕉நண்டு-சிவபெருமானை வழிபட்ட தலம்-நண்டாங்கோவில்.
சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன் இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். 
இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.
🕉சக்ரவாகப் பறவை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருச்சக்கராப் பள்ளி.
தஞ்சாவூர் மாவட்டம்,திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.
🕉யானை-சிவனை பூஜித்த தலம்-திருக்கொட்டாரம்.
துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.
🕉பசு-சிவனை வழிபட்ட தலம்-பட்டீஸ்வரம்.
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டீஸ்வரத்தில் காமதேனு என்ற பசுவின் மகளான பட்டி என்ற பசு வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
🕉ஆமை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருக்கச்சூர்
இங்குள்ள சிவனை வழிபட்டு திருமால் மந்தார தாங்குவதற்கு( கூர்மமாக)தேவையான சக்தியை பெற்றுள்ளார்.
🕉கிளி வழிபட்ட தலம்-சேலம் சுகவனேஸ்வரர்.
கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவன் சேலத்தில் சுகவனேஸ்வரராக அருள்கிறார்.
🕉சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம்-வட குரங்காடுதுறை.🌳
தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இங்குள்ள சிவன்.
அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.
🕉இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சளைத்தவை அல்ல விலங்குகள்.
அதன் காரணம் தேவர்களோ,முனிவர்களோ தான் பெற்ற சாபத்திற்க்கு விலங்காக மாறி சிவபெருமானை வழிபட்டிருக்கிறார்கள்.
இது வெறும் கதை அல்ல.உண்மையில் நடந்த சம்பவத்திற்கான வரலாறு இருக்கிறது.
சில உயிரினங்கள் தன்னை அறியாமலே இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளன.
🕉 இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் விலங்குகள் இறைவனை வழிபட்ட தலங்கள் பலவற்றை அறிய முடியும்.
ஓம்_நமசிவாய

ஆன்மீக குறிப்புகள்.

ஆன்மீக குறிப்புகள்.
1. தினசரி காலையும், மாலையும் தூய
மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள்
பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க
வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,
தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த
மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம்,
கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,
குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,
வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித
நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை
அண்டாது. தூய்மையான காற்றும்
கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக
வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை
இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள். இது இறை சக்தியைக்
குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள்
ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு
பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம்
ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால்,
அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை
சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில்
பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ
வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக
இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற
பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும்
இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி
இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது
உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது
துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில்
வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம
நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய்
தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல்
பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.
இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல்
கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும்
இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத
பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள்
வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்,
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே
குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம்
அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு
மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை
மணி முதல் ஆறு மணிக்குள் தீபம்
ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும்
நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும்
எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில்
விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய்,
இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை
ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி
பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர
சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ
ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி
வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை
ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான்
விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில்
பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி
தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப்
படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை
சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால்,
சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்
கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில்
காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது
நின்றவாரே தொழுதல் குற்றமாகும்.
அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்ப
ோது காலை, மாலை வேளைகளில்
விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த
பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய்
உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில்
குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள்
மட்டுமே விபூதியை நீரில் குழைத்து
பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும்
இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது
பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால்
மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப்
பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல்
உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல்
கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும்,
தலைகுடுமியை முடியாமலும்,
தலையிலும், தோளிலும் துணியை
போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ
வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர
உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி
உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை
வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
அவ்வாறு கேட்க முடியாத நிலையில்
மாலையில் கேட்பது அவ்வளவு
உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க
தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே
வெற்றிதான். காலையில் விழித்தவுடன்
நாராயணனையும் இரவு தூங்கு முன்
சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி
தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில்
தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில்
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம்
ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய
வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து
கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல்
இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும்
ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில்
உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால்
பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது
கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை
எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள்
அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது
தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு
பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி
வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட
துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு
நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.
மா இலை தோரணங்களுக்கு பதிலாக
பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால்
மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின்
வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு
வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது.
யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து
கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக்
கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும்
துளசியை கையில் வைத்துக் கொண்டு என்
பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின்
தொடர்ந்து செல்வேன் என பகவான்
கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில்
துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை
அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம்
செய்யும்போது வெற்றிலை மற்றும்
பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2,
4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு,
வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள்,
தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில்
நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற
பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில்
வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில்
வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல
மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள்
போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும்.
நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில்
ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில்
போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட
வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்
வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி
கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை
ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி
இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது
என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல
வழியனுப்பிய பிறகு பூஜை,
முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம்,
திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை
வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும்.
வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம்
கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம்
பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள்
ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம்
இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப்
போட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும்
வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால்
சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு
குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி,
குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து
விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு
நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு.
காலையில் எழுந்ததும் துளசியைத்
தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம்
கொடுக்கும்போது சிறிது துளசியுடன்
தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு
தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப்
படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க
வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்
கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை
எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு
வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில்
எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த
அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும்,
மத்தியில் சரவஸ்தியும், காம்பில்
மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே
வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு
வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு
வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு
இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்.
அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி
சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை
போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை
போடும் போது வாழை மரத்திலிருந்து
நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது
பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு
முன் தான தருமம் செய்வதென்றால் செய்து
விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம்
செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும்
ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல
பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து
முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால்
லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள்
உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப்
பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,
பாதமும் திறந்து நிலையில் இருக்க
வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான
வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்
படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து
இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்
திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்
கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்
தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப்
பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு,
தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து
கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது

அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது.

அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். நாயை வாகனமாகக் கொண்டு காட்சி தருபவர்.
அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி அனைத்தும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜையும் சிறப்பானது.
அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை.
எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
தேய்பிறை அஷ்டமி நாள் இன்று. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை "காலபைரவாஷ்டகம்" என்னும் பாடலை கேட்டு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். இந்த பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன், இசை வீரமணிகண்ணன், தயாரிப்பு ஸ்ருதிலயா மீடியா கார்ப்.

ஈசனும் தீ யும்:ஈசனும் தீ யும்:
தீ நெருப்பு என்பது ஈசனால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்று. தீ க்கு கனல்,தணல்,நெருப்பு என்ற பெயர்கள் உண்டு. இது ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தீ என்றால் தீவிரம்; நெருப்பு என்றால் நேர்மை; கனல் என்றால் கண்டிப்பு; தணல் என்றால்
தண்டிப்பு. இவைகள் கவித்துவமான உவமைகள் அல்ல. உண்மையில் வெப்பத்தின் தன்மையே இயல்பே இதுதான். ஐம்பூதத் தளங்களில் நெருப்புக்கான தளம் திருவண்ணாமலை யாகும். ஈசனால் உருவாக்கப் பட்ட வெப்பம் ஈசனைப் போன்றே கடமை தவறாத போர்வீரன். தீ சிறு பொறி யாக இருப்பினும் நெருப்புக் கோளமாக கதிரவனாக இருந்தாலும் தான் எடுத்துக் கொண்ட பணியை செய்து முடிப்பதில் வெப்பத்திற்கு நிகர் இல்லை.வெப்பத்தை பிரபஞ்சத்தின் இதயம் எனலாம். ஆகவே பிறப்பு முதல் இறப்பு வரை துடித்துக் கொண்டே இருக்கும் இதயத்தை உடம்பின் கதிரவன் எனலாம்.
இதைத்தான் மணிவாசகர் தனது திருவாசக சிவபுராண த்தில் 
" மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
நேசனே தேனாரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்கிறார். இதையே அவர் திருவாசக திருவார்த்தை யில் 
"மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
.............
தாதி பிரமம் வெளிப்படுத்த
அருளறி வாரெம்பி ரானாவாரே" என்கிறார்
அதாவது "ஈசன் பெண்ணின் இட பாகத்தில் இருப்பவன்; மறைகளை கூறியவன்; மலர் போன்ற இதயத்தில் ஒளி விளக்கானவன்"என்கிறார். 
இதையே திருமூலர் தனது திருமந்திரத்தில் 
"அணைதுணை அந்தனர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன்
உட்பொருள் ஆன
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை ஆயதுஓர்
தூயநெறி யாமே" 
இதன் பொருள் "அடியார்கள் வளர்க்கின்ற தீயுனுள் தீயாக
இருக்கக்கூடிய ஈசனே சிவபெருமானே உயிர்களுக்குத் உயிராகவும் துணையாகவும் இருப்பவன்" என்பதாகும். 
நெருப்பைப் போல இருப்பது 
அழிவு குணமல்ல. அது நேர்மையின் கடமையின் அடையாளம். அது ஆக்கத்து க்கான குணம்.வெப்பத்தால் ஒன்று அழிகிறது என்றால் இன்னொன்று பிறக்கிறது என்று பொருள். ஈசன் தனது 
மூன்றாவது கண்ணான நெருப்பினை வெளிப்படுத் துவது என்பது தீயனை அழித்து நன்மையை உரு வாக்கத்தான். வெப்பம் இல்லைஎனில் மழை இல்லை. உண்மைக்கு நேர்மைக்கு ஆக்கல் அழித்தல் காத்தல் அதோடு அருளுவது ஆகியவற்றின் மூலமான ஈசனின் மறு உருவம்தான் ஒளி, நெருப்பு,
கனல், தணல் ஆகும். 
எனவே கோள வடிவிலான ஆதியும் அந்தமுமில்லா
அருட்பெருஞ்ஜோதியான ஈசனை நெஞ்சுருக வேண்டி அவனருளைப் பெறுவோம். 
ஓம்நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்.