jaga flash news

Friday, 16 December 2016

சித்தர்கள் காட்டிய எட்டு ( 8 ) வடிவ நடை பயிற்சி

சித்தர்கள் காட்டிய எட்டு ( 8 ) வடிவ நடை பயிற்சி !
ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி
மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்துபாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.
பயிற்சியும் செய்முறையும்
கீழ்கண்ட படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று
வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.
நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது
மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற,இந்த பயிற்சியை இடைவிடாத குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.
மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம்.முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண
முத்திரையில் நடக்கலாம்.
இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கிஅல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 வது நிமிட முடிவில்
இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர
வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில்
மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.
பலன்கள்:
இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த
ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.
முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு
மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கரவண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன.
நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது
குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்

*சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்!*
*முதல் படி*
*பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.*
*இரண்டாம் படி*
*பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.*
*மூன்றாம் படி*
*கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்*.
*நான்காம் படி*
*பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.*
*ஐந்தாம் படி*
*நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி*.
*ஆறாம் படி*
*கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி*.
*ஏழாம் படி*
*இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.*
*எட்டாம் படி*
*எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி*.
*ஒன்பதாம் படி*
*கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி*.
*பத்தாம் படி*
*அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.*
*பதினொன்றாம் படி*
*பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது*.
*பன்னிரெண்டாம் படி*
*இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி*.
*பதிமூன்றாம் படி*
*எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.*
*பதினான்காம் படி*
*யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.*
*பதினைந்தாம் படி*
*தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி*.
*பதினாறாம் படி*
*இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி*
*பதினேழாம் படி*
*'சர்வம் பிரம்மம்" என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி*.
*பதினெட்டாம் படி*
*யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்

*சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்*
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்
(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

Wednesday, 14 December 2016

ஜலதோஷத்தை அனுபவிக்காதவர்கள் யார்?

ஜலதோஷத்தை அனுபவிக்காதவர்கள் யார்?
நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நோய் ஜலதோஷம். ஒவ்வொரு பருவ மாற்றலின் போதும் ஜலதோஷம் தாக்கும். ஜலதோஷத்தைப் பற்றி நகைச்சுவையாக “மருந்து கொடுத்தால் ஒரு வாரத்தில் குணமாகும், கொடுக்காமல் விட்டால் 7 நாட்களில் குணமாகும்!” என்பார்கள்.
ஜலதோஷம் என்றால் என்ன?
மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை (Lining) வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம். பல வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus).
உடலின் நோய் தடுக்கும் ஆற்றலை சீராக வைத்துக் கொண்டால், ஜலதோஷம் மட்டுமல்ல, வேறு நோய்களும் அண்டாது.
.ஜலதோஷம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் , தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் அதனை தொடர்ந்து தும்மல், சோம்பல், மூக்கில் நீர் வடிதல் உருவாகும். இதிலிருந்தே நமக்கு ஜலதோஷம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இவையனைத்ததும் ஜலதோஷத்தின் முதல் அறிகுறிகள்.
ஜலதோஷத்தின் முதல் அறிகுறியிலேயே முறிக்கும் சக்தி சமஹன்.
சமஹன்.....உடல் நலத்திற்கு சிறந்தது. ஜலதோசத்திற்கு நிகரற்றது.
சமஹனில் உள்ள 14 மூலிகைகளும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் உடையதாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றிணைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது
.உடல் களைப்பு, உடல் சோர்வை போக்கிடும்.
பசியின்மையை அகற்றிடும்.
.சமஹனில் இணைந்துள்ள 14 மூலிகைகள்.
1.விஷ்ணுக்கிராந்தி 2.சீரகம் 3.பற்பாடகம் 4.மரமஞ்சள் 5.இஞ்சி 6.ஆடாதொடை 7.பேரரத்தை 8.கண்டங்கத்தரி 9.திப்பிலி 10.ஓமம் 11.அதிமதுரம் 12.கொத்தமல்லி 13.மிளகு 14.சிறுதேக்கு
100% இயற்கையானது.
பக்கவிளைவற்றது
சமஹனை டீ அல்லது பால் அல்லது வெந்நீர் இவற்றுடன் சேர்த்து பருகவேண்டும்.
நீங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே உங்கள் வீட்டிற்கு அருகிலேயே '' சமஹன் " அனைத்து மருந்து

கண்ணின்_மொழி

கண்ணின்_மொழி
1. கண்கள் வலப்புறமாக பார்த்தால்
பொய் சொல்கிறது
2. கண்கள் இடப்புறமாக பார்த்தால்
உண்மை பேசுகிறது
3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை
செய்கிறது
4. கண்கள் கீழே பார்த்தால்
அடிபணிகிறது
5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிற
து,ஆசைப்படுகிறது.
6. கண்கள் சுருங்கினால்
சந்தேகப்படுகிறது.
7. கண்கள் கூர்ந்து பார்த்தால்
விரும்புகிறது
8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால்
தவிர்க்கிறது
9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி
ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10. கண்கள் படபடத்தால்
விரும்புகிறது, வெட்கப்படுகிறது
11. கண்கள் மூக்கைப்பார்த்தால்
கோபப்படுகிறது
12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை
விரும்புகிறது.
13. கண்கள் கழுத்துக்கு கீழே
பார்த்தால் காமம்
14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால்
காதல்
15. கண்கள் இடமாக கீழே பார்த்தால்
தனக்குள் பேசிக்கொள்கிறது
16. கண்கள் இடமாக மேலே பார்த்தால்
பழைய நினைவுகளை தேடுகிறது
17. கண்கள் வலமாக கீழே பார்த்தால்
விடை தெரியாமல் யோசிக்கிறது
18. கண்கள் வலமாக மேலே பார்த்தால்
பொய் சொல்ல யோசிக்கிறது
19. கண்கள் உயர்ந்தும் தலை
தாழ்ந்தும் இருந்தால் காம
வயப்படுகிறது.
20. கண்கள் ஓரப்பார்வையில்
அவ்வப்பொழுது பார்த்தால்
விரும்புகிறது.
21. கண்கள் மூடித்திறந்தால்
உள்ளுக்குள் தேடுகிறது
22. கண்களை கைகள் மறைத்தால்
எதையோ மறைக்கிறது
23. கண்களை கைகள் கசக்கினால்
தஞ்சம் கேட்கிறது.
24. கண்கள் மூடித்திறந்தால்
வெறுக்கிறது.
25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச
விரும்புகிறது
26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச
விருப்பமில்லை.
27. கண்களும் புருவங்களும்
சுருங்கியிருந்தால் கோபம

Saturday, 10 December 2016

வேப்பமரம் பிறந்த புராணக்கதை

வேப்பமரம் பிறந்த புராணக்கதை.
"ஆடி' என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த "ஆடி' என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியாவண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தபோது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ""ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது படவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும்'' என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான், ""என் தேவி இல்லாத சமயம் நீ அவûளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய்'' என்றார்.
அவள் விமோசனம் கேட்க, ""கவலை வேண்டாம். நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய்'' என்று அருளினார்.
ஆடி என்ற தேவலோகத்துப் பெண்தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.

சிவபுராணம் கூறும் வில்வ மகிமை

சிவபுராணம் கூறும் வில்வ மகிமை
வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.
அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.

”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம்.

”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம்.
எதுஒன்றிலும் புத்தி கண நேரம் நிற்காமல் எந்நேரமும் ஒன்று மாற்றியொன்றாக மாறிக் கொண்டு இருப்பதற்குப் பேர் போனது குரங்கு.
துளிக்கூடகட்டுப்பாடேஇல்லாமல் இருப்பதற்க்கு உதாரணம் அதுதான்.
இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும்எதிலும்கட்டுப்பட்டு நிலையில்லாமல் இருப்பதை ‘குரங்கு புத்தி’ என்கிறோம்.
ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம் என்று சொல்வார்கள்
பகவானே ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போடு என்கிறது
'ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்கிற வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள்
வெள்ளைக்காரர்களும் ஆங்கிலத்தில் ‘மங்கிமைண்ட்’ என்கிறார்கள்.
கட்டுப்பாடேயில்லாமல் எந்நேரமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.
இப்படிபட்ட குணத்தை தன்குலப் பெருமையாக கொண்ட ஒருவரை பற்றிய பதிவு இது
ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சைவ உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்.
'பசித்தாலும் புல் தின்னாது’ என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் !
ஒரு இடத்தில் நிலையே இல்லாத புத்தியை உடைய குரங்கினத்தில் பிறந்த நம் ஆஞ்ஜநேயஸ்வாமியின் பெருமை இதில்தான் இருக்கிறது.
சஞ்சலத் தன்மைக்கே பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும்,
மனஸைக் கொஞ்சம் கூட சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி,
சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.
இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு அதாவது ஊரைவிட்டு எங்கேயோ குஹையிலே போய் மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட வில்லை.
மனித ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் ஓடி எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் தமது இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம்.
ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. ‘அஸாத்ய ஸாதகர்’ என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார்.
ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர்.
மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்;
ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர்.
ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை.
ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே ‘இதைவிட வேகமில்லை’ என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு !
ரொம்ப வேகமாக ஓடுவது எது? ‘வாயுவேகம், மனோவேகம்’ என்பார்கள்.
காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.
‘காற்று மாதிரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே ! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதிரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை?’ என்று அர்ஜுனன் முறையிடுகிறான்.
சஞ்சலம்ஹிமந:க்ருஷ்ண…….வாயோரிவ ஸுதுஷ்கரம் (கீதை 6-34)
பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் ‘ஸ்டெடி’யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:
யதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா….. (கீதை 6-19) ‘
நிவாதம்’ என்றால் ‘காற்று இல்லாமல்’ என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். ‘
வாயுப்பிடிப்பு’ என்றும் ‘வாத ரோகம்’ என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்?
ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?
சஞ்சலத்துக்கே பேர்போன குரங்கு இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் !
வாயு குமாரர். ‘வாதாத்மஜர்’ என்றும் சொல்வார்கள். ‘வாத’ என்றாலும் வாயுதானே? ‘ஆத்மஜன்’ என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன். வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
யூதம்’ என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் ‘வாநர-யூத-முக்யர்’.
இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன?
அதிலேஎன்னசொல்லியிருக்கிறது?
வாயுவேகம், மனோவேகம்
அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது.
ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல.
சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.
"மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்"
'மனோ-ஜவம்’ – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். ‘ஜவம்’ என்றால் வேகம்.
'மாருத – துல்ய – வேகம்’ – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். ‘மாருதம்’ என்றாலும் காற்றுதான். ‘மந்த மாருதம்’ என்கிறோமல்லவா?
மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு ‘மாருதி’ என்று பெயர். ‘வீர மாருதி கம்பீர மாருதி’ என்று (பஜனையில்) பாடுவார்கள்.
ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல ‘மனோஜவர்’ : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல ‘மாருத-துல்ய-வேகர்’; அவரே வாயுவின் பிள்ளைதான்-
‘வாதாத்மஜர்’; சஞ்சல குணத்தைக்கே பேர் போன வானரகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- ‘வாநர-யூத-முக்யர்!’. இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால்,
இவரையே, ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் என்று ஸ்தோத்ரிக்கும் படியாக இருக்கிறார் !
புலன்களை வென்றவர் இவர்: ‘ஜிதேந்த்ரியர்’- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர்.
மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர்.
மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.
அதனாலேதான் புத்திமான்களுக்கு எல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி.
ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி 'புத்திமதாம்வரிஷ்ட’ராய் இருக்குறார.
'புத்திமான்’ என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி ‘புத்திமதாம் வர’ என்று சொல்லியிருப்பதால் ‘புத்திமான்களில் சிறந்தவர்’ என்று அர்த்தம் கொடுக்கும்.
அதையும்விட உசத்தி, ‘புத்தி மதாம் வரீய’ என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, ‘கம்பேரடிவ்’ – ஆக அவர் மற்றவர்களை விட உயர்வு பொருந்தியவராக இருக்கும் போது ‘வரீய’ என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படிச் சொன்னால்கூடப் போதாது !
இதையும்விட உசத்தியாக, ‘இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடு கூட கம்பேரிஸ’னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு ‘ஸூபர்லேடிவ்’; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்’ என்றே (ச்லோகத்தில்) ‘புத்திமதாம் வரிஷ்ட’ என்று சொல்லியிருக்கிறது.
'வரிஷ்ட’தான்சிறப்பின்உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக ‘கம்பேர்’ பண்ணக்கூட இன்னொன்று இல்லை.
ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.
ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, ‘பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை’ என்று இக்ர ஸ்தானம்(முதலிடம்)பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான்.
தேஹ சக்தியோடு, புத்திநுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து,
ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும்.
'ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி’ என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் | வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||
ஆஞ்சநேயர் புகழ் வாழ்க!

மந்திரம்

ஒரெழுத்து மந்திரத்தை ஓம் என்று சொல்லவும்.
ஈரெழுத்து மந்திரத்தை ராமா என்று சொல்லவும்.
மூன்றெழுத்து மந்திரத்தை முருகா என்று சொல்லவும்.
நான்கெழுத்து மந்திரத்தை நாராயணா என்று சொல்லவும்.
ஐந்தெழுத்து மந்திரத்தை நமசிவாய என்று சொல்லவும்.
ஆறெழுத்து மந்திரத்தை சரவணபவா என்று சொல்லவும்.
ஏழெழுத்து மந்திரத்தை ராமச்சந்திரா என்று சொல்லவும்.
எட்டெழுத்து மந்திரத்தை ஸ்ரீ குருவாயூரப்பா என்று சொல்லவும்.
ஒன்பதெழுத்து மந்திரத்தை ஓம் ஸ்ரீம் பராசக்தி என்று சொல்லவும்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'
இதை சொன்னவர் திருமூலர்.
சரி.. முதல் வரி தெரியும், 
மற்ற வரிகள் என்ன...?
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே...! என்கிறார் திருமூலர்.
ஒன்றே குலம் அதாவது உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என ஒன்றும் கிடையாது.... எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். நிறைய கடவுள்களெல்லாம் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டுமாம் இது நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறார். அதாவது, அப்படி எல்லோருமே எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பே கிடையாது. இதை வெட்கப் படாமல், நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை என்று சொன்னவர் உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள் அதாவது ஒன்றே குலம் என்பதன் மூலம் உடல் அளவில் எல்லோரும் ஒன்று என்றார். ஒருவனே தேவன் என்பதன் மூலம் மனதளவிலும் மனிதர்களுக்கு இடையில் எந்தப் பிரிவும் கூடாது என்றார்.
ஓம் நமச்சிவாய.
திருச்சிற்றம்பலம்.

லட்சுமி குபேர விரதம் கதை

லட்சுமி குபேர விரதம் கதை
விச்ரவசு என்ற முனிவரின் மகன் வைஸ்ரவணன். குழந்தையாக இருந்தபோதே பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். உணவு, தண்ணீர் இல்லாமல் வெறும் காற்றை மட்டும் சுவாசித்தபடி கடும் தவம் இருந்த அவனது பக்தியை மெச்சி, பிரம்மா தரிசனம் தந்தார்.
உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உங்களை தரிசிப்பதைவிட வேறே என்ன பாக்கியம் எனக்கு வேணும்? இதைவிட நான் வரமாக எதைக் கேட்பது? என்றான் குழந்தை. இப்படி செல்வங்கள் மீது பற்றற்ற பக்திமானாக அவன் இருப்பதைப் பார்த்து சிலிர்த்த பிரம்மா, அவனை அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராக்கி, எல்லா செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதி ஆக்கினார்.
அப்போதிலிருந்து வைஸ்ரவணன் என்கிற பெயர் மாறி குபேரன் என ஆனது. எல்லா செல்வங்களும் அவனிடம் சேர்ந்ததால், அவன் லட்சுமி குபேரன் ஆனான். வைஸ்ரவணன் போல கடுமையான தவமோ, விரதமோ நம்மால் இருக்க முடியாதுதான்.
ஆனால் எளிமையாக லட்சுமி குபேர விரதத்தைக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழவும், நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் போதுமான செல்வத்தை அருள்வார்கள் லட்சுமியும் குபேரனும்!
எந்த திசையில் அமர்ந்து செய்வது?....
பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி இருப்பது நல்லது. பொதுவாக மேற்கு பார்த்தபடி இருந்தால், அதன் எதிரே அமர்ந்து கிழக்கு திசையைப் பார்த்து பூஜை செய்வது வசதி. வீட்டில் இப்படிச் செய்வது வசதிப்படவில்லை என்றால், வடக்கு திசை பார்த்துகூட பூஜை செய்யலாம்.
என்ன பலன்?
நமது வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அகலவும், காரியத்தடைகள் நீங்கவும், கடன் பிரச்னைகளிலிருந்து மீளவும், இல்லத்தில் வளம் கொழிக்கவும், செல்வம் செழிக்கவும் லட்சுமி குபேரன் ஆசி தருவான்!

வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips....

 வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips....
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்!
நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!
"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! அத்தனை வகை... வைத்யமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சதுதான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. ஸொஸ்தப்படுத்தணும்"
முகத்தில் வேதனை தெரிந்தது.
" முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊறி, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவஸர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "ஸனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட ஸெரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை]
அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதி-ன்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மொளகு ரஸம், பெரண்ட தொகையல் பண்ணி ஸாப்டு..! என்ன?"
"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்"
மூணு மாஸம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர்.
வலி போய்விட்டதாம்.!
எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரஸம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன ஸிம்பிள் வைத்யம் கை மேல் பலன்!
பெரியவா திருவாக்கிலிருந்து சில health tips...
வீடுகள்ள, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......
1. நல்லெண்ணெய் - வெளக்கேத்த, ஸமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;
2. வெளக்கெண்ணெய் - வர்ஷத்ல ரெண்டு தரம், காலேல வெறும் வயத்துல குடிச்சா..... வயறு ஸெரியா இருக்கும். வயத்துவலி இருந்தா, கொஞ்சம் வெளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா ஸெரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.
3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனோமும் கை,கால், முட்டிகள்ள தடவிண்டா, முட்டி வலி வரவே வராது.
[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]
தெனோமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்ரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.
அந்த காலங்கள்ள, வெளிலேர்ந்து வந்தா... குடிசைவாஸிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிக்கிண்டுதான் வீட்டுக்குள்ளியே நொழைவா!
இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான் கெடக்கு! பின்ன...ஏன் வ்யாதி வராது?......

அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?

அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?
சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக் கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர். இன்றும் எண்ணற்றவர் உள்ளனர். வரும் காலத்திலும் இருப்பர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விரித்து, சேக்கிழார் சுவாமிகள் 12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார். 12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம். திருச்சிற்றம்பலம்.
1. தில்லைவாழ் அந்தணர்: தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் 3000 பேர்.
2. திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.
3. இயற்பகை நாயனார்: யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
4. இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் மாகேசுவர பூசை செய்து அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.
5. மெய்ப்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.
6. விறன்மிண்டர்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.
7. அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.
8. எறிபத்த நாயனார்: சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.
9. ஏனாதிநாத நாயனார்: வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்..
10. கண்ணப்பர்: சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.
11. குங்கிலியக் கலயனார்: நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.
12. மானக்கஞ்சாறன்: தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.
13. அரிவாட்டாயர்: நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்.
14. ஆனாய நாயனார்: பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
15. மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்.
16. முருக நாயனார்: தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.
17. உருத்திர பசுபதியார்: நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.
18. திருநாளைப் போவார் (நந்தனார்): பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
19. திருக்குறிப்புத் தொண்டர்: தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.
20. சண்டேசுவரர்: சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.
21. திருநாவுக்கரசு சுவாமிகள்: சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.
22. குலச்சிறை நாயனார்: கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
23. பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
24. காரைக்காலம்மையார்: சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும் சைவத்திற்கும் பங்களித்தார்.
25. அப்பூதியடிகளார்:திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்.
26. திருநீல நக்க நாயனார்: ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தியை வாயில் ஊதிய மனைவியை துறக்க முயன்றவர். திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோகிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
27. நமிநந்தியடிகள் நாயனார்: தினமும் திருவாரூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.
28. திருஞானசம்பந்தர்: பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர்.
29. ஏயர்கோன்கலிக்காமர்: சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை நீங்கப்பெற்ற வேளாளர்.
30. திருமூல நாயனார்: கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்.
31. தண்டியடிகள்: திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி தொண்டு செய்தவர்..
32. மூர்க்க நாயனார்: சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.
33. சோமாசி மாற நாயனார்:சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
34. சாக்கிய நாயனார்: புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.
35. சிறப்புலி நாயனார்:திருவைந்தெழுத்து ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.
36. சிறுதொண்டர்: சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.
37. கழறிற்றறிவார்: உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்.
38. கணநாதர்: சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.
39. கூற்றுவ நாயனார்: பஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.
40. பொய்யடிமையில்லாத புலவர்: சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.
41. புகழ்ச் சோழர்: எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.
42. நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்.
43. அதிபத்தர்: நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.
44. கலிக்கம்பர்: தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
45. கலியநாயனார்: தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.
46. சத்தி நாயனார்: சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
47. ஐயடிகள் காடவர்கோன்: ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.
48. கணம்புல்ல நாயனார்: சிவாலயத்தில் திருவிளக்கேற்றி தோத்திரம் செய்து வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.
49. காரி நாயனார்: “காரிக் கோவை” நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.
50. நின்றசீர் நெடுமாறன்: கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.
51. வாயிலார்: சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர்.
52. முனையடுவார்: கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.
53. கழற்சிங்க நாயனார்: போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.
54. இடங்கழி நாயனார்: சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.
55. செருத்துணை நாயனார்: கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.
56. புகழ்த்துணை நாயனார்: சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.
57. கோட்புலி நாயனார்: சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.
58. பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.
59. பரமனையே பாடுவார்: சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள், பிற தெய்வத்தைப் பாடாத தொகையடியார்கள்.
60. திருவாரூர்ப் பிறந்தார்: திருவாரூரில் பிறந்த அனைவரும் திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர்.
61. முப்போதும் திருமேனி தீண்டுவார்:மூன்
று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.
62. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.
63. முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.
64. அப்பாலும் அடிசார்ந்தார்: முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள சிவனடியார்கள்.
65. பூசலார் நாயனார்: மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர்.
66. மங்கையர்க்கரசியார்: நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.
67. நேச நாயனார்: சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.
68. கோச்செங்கோட் சோழ நாயனார்: திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.
69. திருநீலகண்ட யாழ்ப்பாணர்: திருஞானசம்பந்தரின் திருக்கூட்டத்தோடு இணைந்து யாழ் இசைத்துப் பாடிய பாணர்.
70. சடைய நாயனார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.
71. இசை ஞானியார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்.
72. சுந்தர மூர்த்தி நாயனார்: சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.
ஓம் நமசிவாய
சிவனடியார்களும், சிவதொண்டு புரிந்தவர்களும் சாதிபேதம் பார்க்கவில்லை. இந்த 63 நாயன்மார்கள் 9 தொகை அடியார்களும் பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்கள். நிலையில்லாத இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி ஓடும் நாம், நிலையான வீடுபேற்றையும் இன்பத்தையும் பெற சிவதொண்டு புரிவோம். சிவனருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்🙏🏻

லக்ஷ்மிகடாக்ஷம் நம் வீட்டில் என்றும் நிலைத்து இருக்க எளிய தாந்த்ரீக பரிகாரம்

லக்ஷ்மிகடாக்ஷம் நம் வீட்டில் என்றும் நிலைத்து இருக்க எளிய தாந்த்ரீக பரிகாரம்:
வளர்பிறை சனிக்கிழமை அன்று காலை அல்லது மாலை 11 மா இலைகளை வீட்டு வாசற்படியில் கட்டி விடவும்.
வாரம் தோறும் சனி கிழமையில் இலைகளை மாற்றி வரவும்
வெள்ளிக்கிழமை அன்று பஞ்சகவ்யம், கோமியம்,அல்லது மஞ்சள் கலந்த நீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை வீட்டில் தெளித்து வரவும்.
சாம்பிராணியுடன் ,நன்னாரி , லவங்கப்பட்டை , சந்தனம் வெண்குங்கிலியம் மற்றும் வெள்ளைப்போளம் வகைக்கு 100கிராம் ,வெண்கடுகு,நாய்கடுகு வகைக்கு 100 கிராம்,108 மூலிகைதூபப்பொடி 100கிராம், கிருஷ்ணதுளசிஇலை பொடி100 கிராம்,மருதாணி விதை100கிராம்(இவை அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து புகை போடவும்.
இதற்கு கால நிர்ணயம் கிடையாது,எத்தனை வாரம் முடிமோ அத்தனை வாரம் செய்யலாம்.
முதல் வாரத்தில் இருந்தே பலன் தெரியும்...
எளிய முறை நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்...
Like
Comment

அத்திரி

உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர்.
ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார்.
ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள்.
ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா. தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள்.
இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர் என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும் சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர். ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே.
சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள் தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார். பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவிலும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே.
யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது. இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர்வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும். பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர்.
மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.

புண்ணியத்தின் பலன்

புண்ணியத்தின் பலன்
====================
விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.
இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.
இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது. “ நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்? என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.
எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.
அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு. கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார். விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக்கூறினர்.
இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.
வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார் இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.
உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா? நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது என்றார் ஆதிசேஷன்.

காரியம் கைகூட வைக்கும் பரிகாரம் :

காரியம் கைகூட வைக்கும் பரிகாரம் :
ஒரு கப்புல (கொஞ்சம் பெரிசாய் இருக்கட்டும்) 101 ரூபாய்ல இருந்து 501 ரூபாய் வரை... காசாப் போடுங்க. அதாவது, ஒரே மாதிரி நாணயமாய்இருக்கணும். ஒரு ரூபாய்னா, ஒரே மாதிரி காசாய் இருக்கணும். ஒண்ணு சின்னது, ஒண்ணு பெரிசுன்னு இருக்கக்கூடாது.
நூத்தி ஒண்ணோ, ஐநூத்தி ஒண்ணோ காசைப் போட்டு, அதுமேல விளக்கை வைச்சு, தீபம் ஏத்திட்டு வாங்க. ஒரு முகமோ, ஐந்து முகமோ அது உங்க இஷ்டம். இப்படி கிழக்கு பார்த்து, தீபம் ஏத்திட்டு வாங்க. வீட்டுல, தேவைக்கு எப்பவும் தட்டுப்பாடு வராது. அது நிச்சயம்!
முக்கியமான விஷயம்; மாசக் கடைசின்னு சொல்லி, ‘கப்’புல போட்ட காசுல கை வைக்கக்கூடாது.
இன்னொரு காரியமும் செய்யலாம். காசு வைச்சிருக்கிற கப்புக்கு மேல ஒரு தட்டை வைங்க. அந்தத் தட்டு மேல, ஒரு பேப்பர்ல - உங்களோட விருப்பம் என்ன? என்ன நடக்கணும்னு நினைக்கிறீங்க? - அதையும் எழுதி, அந்தப் பேப்பரை மடிச்சு வைச்சு, அதுக்கு மேல விளக்கை வைச்சு, தீபத்தை ஏத்திட்டு வாங்க. காரியம் கைகூடும். முக்கியமான விஷயம்; அந்தப் பேப்பரோட, ஒரு வெற்றிலையையும் வைக்கணும்.
‘வெற்றிலை வாடிடுமே; அழுகிடுமே’ன்னு கவலையா? வெத்திலையை மாத்திக்கலாம். தப்பில்லை. சரியா?
இது இல்லாம, இன்னொரு விஷயமும் செய்யலாம். ஒரே மாதிரி காசாய் போட்டு, விளக்கு ஏத்தினமாதிரி, ஒரே மாதிரி காசாய் வைச்சு மாலை செய்யலாம். எப்படி? இப்பதான், ஒட்டறதுக்கு டேப் கிடைக்கறதே. அந்த டேப்ல, 101, 501னு எது முடியுமோ, அந்த காசை ஒட்டி, அம்பாளுக்கு வீட்டுலயே மாலையாய்ப் போட்டு வழிபடலாம். இதெல்லாம், நமக்கு நாமே செய்துக்கக்கூடிய - பலன் தரக் கூடிய - காரியங்கள்!
எங்களுக்கு ஸ்லோகம் சொல்லத் தெரியும்; மந்திரம் ஏதாவது சொல்லலாமான்னு கேட்கறீங்களா? உங்களுக்கானது இது:
ஸ்ரீதேவி: அம்ருதோத்
பூதாகமலா சந்திரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச
வராரோஹாச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவி
மஹாலக்ஷ்மி ச சுந்தரி
இதை தினம் காலையில விளக்கேத்தி 10 தடவை சொல்லுங்க.
வெள்ளிக்கிழமை சாயந்திரம் விளக்கேத்தி, முடிஞ்சவரை சொல்லுங்க.
108 தடவை சொல்வதற்கு முன்பாக. முடிஞ்சா, விளக்குலயே லக்ஷ்மி பூஜையும் பண்ணுங்க. சுபிட்சம் வசப்படும். வேலை கிடைக்கலைன்னு வருத்தப் படறவங்களுக்கு, கண்டிப்பா வேலை கிடைக்கும்.
மந்திரம் வேணுமா சரி;
ஓம் ஹ்ரீம் பத்மே ஸ்வாஹா (இல்லேன்னா) ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம;
இந்த ரெண்டுல எதை வேணா நம்பிக்கையோட ஜபம் பண்ணலாம்.
ஒரு முக்கியமான விஷயம்: மந்திரத்தை ஜபம் பண்ணும்போது, மனசும், புத்தியும் அதிலேயேலயிச்சு இருக்கணும். அப்பதான் பலன் கிடைக்கும்.

முருகனின் 16 வகை கோலங்கள்

முருகனின் 16 வகை கோலங்கள்
1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.
2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.
3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
5. கஜவாகனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.
6.சரவணபவர்: தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
7. கார்த்திகேயர்: இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
8. குமாரசாமி: இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
9. சண்முகர்: இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
10. தாரகாரி: `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
11. சேனானி: இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
13. வள்ளிகல்யாணசுந்தரர்: இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
14. பாலசுவாமி: இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிïர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
15. சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
16. சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்

தமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன?
ஒன்று உருவான பின். அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை
தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு. இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத
பைரவர் கோவிலில். குழந்தை தாயின்
வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கல்லில் சிற்ப்பங்களாக வடித்து
வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.
அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
இன்றும் நிறைய கோவில்களில்
சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப
எவ்ளவு துல்லியமாக Measure செய்து
ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும்.
வட சென்னையில் உள்ள
வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில்
உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்
பழமையான லிங்கம் தெரியுமா?
ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய. கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களைபற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு
முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில்
ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,
அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும்
அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம்.
பழம்கால கோவில்களில் உள்ள யாழி
சிலையின் வாயில் ஒரு உருண்டை
இருக்கும். அந்த உருண்டையை நாம்
உருட்டலாம். ஆனால் ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ
முடியாது. அது உலக அதிசயம்
கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால்
உருவ முடியாது. இந்த வித்தையை இன்று
எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை.
அழகிய கலை வேலைபாடுகளோடு
உருவாக்குவது. இதை எந்த உலக
வல்லரசாலும் செய்ய முடியாதது.
அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள
கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.
சிங்கத்தின் வாயில் ஒரு கதவு
தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.அக்கோவிலில்உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால்
வெளியே வெயில் அடித்தால் உள்ளே
குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே. கதகதப்பாக இருக்கும்.
அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள். பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்
படைவீரர்களும் பதுங்கும் வகையில்
கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.
தமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.