jaga flash news

Tuesday 25 September 2018

வளைகாப்பு ஏன் செய்கிறோம் ?


வளைகாப்பு ஏன் செய்கிறோம் ?

புதிதாக திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு போகும் ஒரு பெண் அந்த வீட்டில் தனக்குப் பரிச்சயமில்லாத சில நடவடிக்கைகளைப் பார்க்கலாம். அவற்றை வினோதமாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் நினைக்கலாம். அவ்வீட்டுச் சாப்பாடு முதல் சாமி கும்பிடுவது வரை பல விதமான பழக்கங்கள் மிகவும் புதுமையாக இருக்கும். பொதுவான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எல்லா வீடுகளிலுமே ஏதாவதொன்று இருக்கும். இதை முதன் முதலாகப் பார்க்கும் மருமகளுக்கு அவைகள் வினோதமாக இருக்கலாம். பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அவர்கள் வீட்டில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். என்றைக்காவது அந்தப் புதுப்பெண்ணை பார்க்கப்போனால் அவள் ஆரம்பத்தில் எதை வினோதமாகப் பார்த்தாளோ அந்த வாழ்க்கையோடே கலந்து போயிருப்பாள். 'என்னடீ?' என்று இழுத்தால் "இங்கே இப்படித்தான்..? என்பாள்.

ஆக ஒரு குடும்பமோ, சமூகமோ தன்னை சில காரண காரியங்களுடன் நடைமுறைகளைக் கொண்டு கட்டமைத்துக் கொள்கிறது. அதையே கலாச்சாரம், சம்பிரதாயம் என்றெல்லாம் நாம் அழைக்கிறோம. இதை வாழ்ந்து பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமே அன்றி மேலோட்டமாக பார்த்து வனோதமான மூட நம்பிக்கை என்று முடிவு கட்டி கேலி பேசிவிடுவது நமக்குத்தான் இழப்பு. அப்படி ஒரு இழப்பை அடுத்த சந்ததிகள் அடைந்து விடக்கூடாது. அதனாலேயே வீடுகளில் பெரியோர்கள் இவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் கடமையைச் செய்கிறார்கள். 

ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களோ இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தயுமே "வினோதம்" என்ற வார்த்தையால் அழைத்து அதன் மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கப் பார்க்கிறது.

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம். வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இந்த சம்பிரதாயம் ஏன் கடைபிடிக்கப் படுகிறது என்பதை கொஞ்சம் பார்ப்போம். நாம் பிறக்கும் போது முதல் நம்மை பல சம்பிரதாயங்கள் வரவேற்கின்றன. அவை ஒவ்வொன்றும் காரனகாரியத்துடனேயே செய்துவைக்கப்படுகின்றன. 

நாம் பிறக்கும் முன்பிருந்தே நம்மைப் பல சம்பிரதாயங்கள் சூழ்ந்து கொள்கின்றன. நாம் பகுத்தறிவாளனா, இவற்றின் மீது நம்பிக்கை கொண்டவனா என்பதெல்லாம் நமக்கே தெரியாத வயதில் நம்மை சமூகத்திற்கு முறையாக வரவேற்கவும் அறிமுகம் செய்யவும் கொண்டாடப்படும் சடங்குகள் அவை. அதன் பெயர் வளைகாப்பு.

கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. நான் யார்? எங்கே இருக்கிறேன்? யாருக்குள் இருக்கிறேன்? யாரோடு இருக்கிறேன்? யாரெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? என்றெல்லாம் வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு!

நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாக இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

பொதுவாக கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு ஜான் குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.

நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் முடிவையும் முத்தாய்ப்பாக நினைத்து கொண்டாடுவது வழக்கம். கருவாய் உருவாகி உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே
நமது பழக்கம். ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை. 

அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகப்பு. 

சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள். விளக்கொளி குழந்தைக்குத்தெரியுமா? தெரியும், தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் குழந்தை உணர முடியும்.

மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய இந்துக்கள் அதாவது நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!

1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.

2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.

3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.

4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.

5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது. 

6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.

7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.

ஆம் அப்படி ஒரு நுட்பமான விஷயத்தை வாழ்ந்தறிந்து கருவிலிருக்கும் குழந்தையோடு எப்படிப்பழகினார்கள் என்பதற்கு சான்று மகாபாரதத்தில் கூறப்படும் அபிமன்யுவின் கதையே சான்று. 

மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு பதினாறு வயது. அபிமன்யுவும் போரில் ஈடுபட்டான். “கௌரவர்களின் சக்கர வியூகத்தை என்னால் உடைத்துக்கொண்டு போக முடியும்“ என்று கர்ஜனை செய்தவாறு உள்ளே நுழைந்து போரிட்டான். எதிரிகளை, எல்லோரும் வியக்கும்படி சின்னா பின்னமாக்கினான். ஆனால் உள்ளே போன அவனுக்கு வெளியே வரத் தெரியவில்லை; மாண்டான்.

சக்கர வியூகப் போர் முறையை யாருமே அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை; வியூகத்தை உடைத்துப் போவதை எப்படிக் கற்றான்? வெளியே வரும் முறையை ஏன் கற்கவில்லை?

அர்ஜுனன் கருவிலிருக்கும் போதே தன் மகனுக்கு போரின் போது சக்ரவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது எப்படி என்கிற வித்தையை வெளியிலிருந்து பேசிப்பேசியே கற்றுக்கொடுத்து இருக்கிறான். சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல கற்றுக்கொடுத்த அர்ஜுனன் அதிலிருந்து மீண்டு எப்படி வெளியேற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்காமல் போய்விட்டான் என்கிறது பாரதம். ஆகவே அதை மட்டும் குழந்தையான அபிமன்யூ கற்றுக் கொண்டிருக்கிறான்! 

அதெப்படி முடியும் என்று குதர்க்க கேள்வி கேட்பவர்கள், இன்று உலகம் முழுவதும் நடந்து வரும் கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் சொல்லித் தருவது பற்றிய ஆராய்ச்சியை உற்று நோக்கினால் விடை கிடைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் நடத்தும் பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. கர்பினிப்பெண்கள் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுதே புத்திசாலியாகப் பிறந்து உலக ஓட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவலோடு இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.

இது போன்ற தற்காலச் சான்றுகளே மகாபாரத அபிமன்யூவின் சக்கர வியூகப்பயிற்சி பொய்யில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாகிறது. நமது இதிகாசங்களையும் சம்பிரதாய சடங்குகளையும் கேலிக்குரியவைகள், மூட நம்பிக்கைகள் என்று சித்தரிப்பவர்கள் அதையே வெள்ளைக்காரன் வேறு பெயரில் எடுத்துச் சொல்லும் போது கேட்டுவிட்டு மண்டையாட்டுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய நகைச்சுவை.

ஆக கருவிலிருக்கும் குழந்தை என்பது குடும்ப பட்ஜெட் போதவில்லை யென்பதால் கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல. அது ஒரு உயிர். நம்மோடு வாழ, நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்த நம் தாய்மார்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடி மகிழ்ந்ததே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு என்றால் மிகையாகாது. எனவே நமது தாய்மார்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்.

வரப்போகும் உயிர்களை குதூகலமாக வரவேற்க தயாராவோம். கருப்பை ஜீவன்களை கழுவிப்போடும் கசடாக நினைத்து கருக்கலைப்பு செய்பவர்களைக் கண்டிப்போம். கருவிலிருக்கும் உயிரையும் நம்மைப் போன்ற ஜீவனாக நினைப்போம். பாரம்பரிய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் காப்போம்.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு ஏன் வேண்டும்

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு ஏன் வேண்டும்

முன்காலங்களில் கர்ப்பம் உறுதியானதுமே நான்காம் மாதம் புக்ககத்தில் ஸ்ரீமந்தம் செய்வார்கள். அதன் பின்னரே பெண் தாய் வீட்டிற்குப் போவாள்.   மேலும் மசக்கை நேரத்தில் தாய்வீட்டில் ஓய்வில் பெண் இருக்கவும் முடியும்.  தற்காலங்களில் இது கொஞ்சம் மாறுபட்டு எட்டாம் மாதம் தான் ஸ்ரீமந்தம், வளைகாப்பு போன்ற எல்லாவற்றையும் சேர்த்துச் செய்கின்றனர். பொதுவாக ஐந்தாம் மாதம் நல்ல நாள் பார்த்து, தாய் வீட்டிற்குச் சென்று மருந்துகள் போட்டுக் காய்ச்சப்பட்ட எண்ணெயைப் பெண்ணுக்குக் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்வது உண்டு. தற்காலங்களில் அந்த வழக்கம் முற்றிலும் தடை செய்யப் பட்டிருக்கிறது. வெகு சிலரே ஐந்தாம் மாதம் தாய் வீடு செல்கின்றனர். பெரும்பாலான பெண்கள் தற்காலங்களில் வேலைக்கும் செல்வதால் பிரசவத்திற்கு முன்னரே விடுப்பு கிடைக்கும்.

ஐந்தாம் மாதம் பிறந்த வீடு செல்லும் முன்னர் நல்ல நாள் பார்த்துப் பொதுவாக மாமியார் வீடான புக்ககத்தில் பெண் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாள் என்பதைக் குறிக்கும் வண்ணம் அரும்புகளாக இருக்கும் பூக்களை வாங்கி மருமகளின் தலையில் மாமியார் சூட்டுவார். நாத்தனார் இருந்தால் அவரும் சூட்டி விடுவார். அன்றைய தினம் பெண்ணின் பிறந்தகத்தவரையும் அழைத்து இருப்பார்கள். அவர்களும் பெண்ணை மசக்கைக்குப் பிறந்தகம் அழைத்துச் செல்ல வருவார்கள். ஆகவே அதற்கு ஒத்திசைவான நாளே பார்ப்பார்கள். அநேகமாய் மொட்டுப் பூச்சுட்டல் முடிந்த அன்றே பெண்ணைப் பிறந்தகம் அழைத்துச் செல்வது உண்டு. அன்றைய தினம் விருந்து இருக்கும். ஆனால் கலந்த சாத வகைகள் இருக்காது. வளைகாப்பு முடிந்தாலே கலந்த சாத வகைகள் போடுவார்கள்.

ஆறு அல்லது ஏழாம் மாதங்களுக்குள் குழந்தைக்கும் தாய்க்கும் ரத்தப் பரிசோதனை செய்து தாயின் ரத்த வகையோடு குழந்தையின் ரத்த வகை இரண்டாலும் பாதிப்பு இல்லாமல் இருக்குமா என்பதைக் கண்டறிந்து கொள்ள வேண்டும். தாய்க்கு நெகட்டிவ் வகை ரத்தமும், குழந்தைக்கு பாசிடிவ் வகை ரத்தமும் இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே இதைக் கண்டறிய வேண்டும். ஸ்ரீமந்தம் ஆறாம் மாசமும், செய்யலாம், எட்டாம் மாசமும் செய்யலாம், அவரவர் வசதிப்படி. வளைகாப்பும் சேர்த்தே செய்கின்றனர்.
வளைகாப்பு:

வளர்பிறையில் நாள் பார்த்து அதிகாலையில் வளை அடுக்குவார்கள். வளை அடுக்குகையில் பொதுவாக முன் காலங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்துவிட்டுக் குளிப்பதற்கு முன்னர் வளை அடுக்குவார்கள். முதல் வளையல்கள் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்களுக்கும், பின்னர் நேர்ந்து கொண்ட தெய்வங்களுக்கும் எடுத்து வைப்பார்கள். அதன் பின்னர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள். ஒரு கையில் பனிரண்டு வளை அடுக்கினால் மறு கையில் பதினொன்று அல்லது பதின்மூன்று என ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். எத்தனை எண்கள் வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். கைகள் கொள்ளும்வரையில் அடுக்கிக் கொள்ளலாம். முன்னர் அரக்கு வளையைக் கங்கணமாகப் போடுவதுண்டு.

அதை வீட்டுக்கு வளைச்செட்டி வந்து வெட்டி நெருப்பில் காட்டி அரக்கை உருக்கி ஒட்டிக் கொடுப்பார். இப்போதெல்லாம் கங்கணம் என்ற ஒன்றே போடுவதில்லை. வளை அடுக்குவதில் வீட்டில் மூத்த வயது முதிர்ந்த பெண்மணியை விட்டு முதலில் போடச் சொல்லுவார்கள். பின்னர் வீட்டில் இருக்கும் மற்ற மூத்த பெண்மணிகள் எண்ணிக்கையில் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற வரிசையில் வளை அடுக்குவார்கள். கர்ப்பிணிப் பெண்ணோடு கூடவே திருமணம் ஆகி இன்னும் கர்ப்பம் அடையாத ஒரு பெண்ணிற்குத் துணைக்காப்புப் போடுவார்கள். பின்னர் இரு பெண்களையும் உட்கார வைத்து மேலே சொன்ன வரிசையில் பெண்கள் அனைவரும், கெளரி கல்யாணம் வைபோகமே என்ற வாழ்த்துப்பாடலைப் பாடிக்கொண்டு கர்ப்பிணிப் பெண்ணிற்கும், துணைக்கு வளை அடுக்கிக்கொள்ளும் பெண்ணிற்கும் எண்ணெய் தொட்டு உச்சந்தலையில் வைப்பார்கள். அதன் பின்னர் ஆரத்தி எடுத்ததும் இருவரையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பார்கள்.
குளித்து முடிந்ததும், மீண்டும் கர்ப்பிணிப்பெண்ணை மணையில் அமர வைத்துப் புதுப்புடைவை தாய் வீட்டில் எடுத்தது, (இது அநேகமாய்க் கறுப்பில் இருக்கும். சில வீடுகளில் கறுப்பு கூடாது என்பார்கள். அப்போது ஆழ்ந்த நிறமாக வேறு நிறத்தில் எடுப்பார்கள்.) வைத்துக் கொடுத்து மீண்டும் பெண் அந்தப் புடைவையைக் கட்டிக்கொண்டு வந்ததும், அனைவரும் பெண்ணின் தலையில் பூச்சூட்டுவார்கள். (இதைத் தவிர ஸ்ரீமந்தத்தின் போதும் பூச்சூட்டல் எனப் புக்ககத்தில் நடக்கும். இது தாய்வீட்டுப் பூச்சூட்டல். தற்காலங்களில் காலை வளைகாப்பு, அதன் பின்னர் ஸ்ரீமந்தம், பின்னர் உடனேயே பூச்சூட்டல் என எல்லாம் அதி அவசரமாகக் காலை பத்து மணிக்குள்ளாக முடித்துவிடுகின்றனர்.) குறைந்த பக்ஷம் பத்து முழம் மல்லிகை, முல்லை போன்ற வாசனைப்பூக்கள் கொண்ட பூச்சரத்தைப் பெண்ணின் உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து கடிகாரச்சுற்றாக ஒவ்வொருவரும் சுற்றிக்கொண்டே வந்து பின்னலின் நுனியில் முடிப்பார்கள். அதன் பின்னர் அவரவர் இஷ்டத்திற்குப் பாடல்கள் பாடப் படும். இதற்கென மசக்கைப் பாடல்கள் உண்டு. வளை அடுக்குவதன் காரணம், கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்குத் தாயின் அசைவுகள், கைகளின் வளை ஓசை கேட்கும் என்பதாலேயே. அதுவும் தாயின் கைகளின் வளையல்களின் கலகலச் சப்தம் குழந்தைக்கு நன்கு கேட்கும்.  அதன் பின்னர் ஏழு வகைக் கலந்த சாதங்கள், அல்லது ஐந்து வகைக் கலந்த சாதங்கள் சமைத்துப் பரிமாறுவார்கள். 

விருந்தினர் அனைவரும் பெண்ணை வாழ்த்தி இயன்றவர் பரிசுகள் அளித்ததும் வளைகாப்பு நிறைவுறும்.  அடுத்து ஸ்ரீமந்தம் என்றால் என்ன என்று பார்க்கலாம்

Monday 24 September 2018

வளைகாப்பு

வளைகாப்பு

வளைகாப்பு எனப்படும் சீமந்தம் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கோ,கணவனுக்காகவோ செய்யப்படுவது இல்லை..கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்காக செய்யப்படும் முக்கிய பரிகாரம்...கர்ப்பம் உறுதியாகும்,3 வது மாதத்தில் செய்வதுதான் மிக சிறப்பு..இப்போது 7 வது மாதத்தில்தான் செய்கிறார்கள்..அது தவறு இல்லை..வளர்பிறையில்,பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய்,சனி,ஞாயிறு தவிர்த்த கிழமைகளில்,செய்வது உத்தமம்..

அஷ்டமி,நவமி,அமாவாசை,பெளர்ணமி,மாத பிறப்பு நாள்,விலக்க வேண்டும்..
ரோகிணி,பூசம்,ஹஸ்தம்,புனர்பூசம்,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி,திருவோணம்,ரேவதி,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் வளைகாப்பு செய்ய உத்தமம்..
சஷ்டி,சதுர்த்தி,சதுர்தசி,திவாதசி,அஷ்டமி,நவமி,அமாவாசை திதிகள் ஆகாது...!! குழந்தையையும்,கர்ப்பிணியையும் பாதிக்கும். 
வளைகாப்புவளைகாப்பு எனப்படும் சீமந்தம் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கோ,கணவனுக்காகவோ செய்யப்படுவது இல்லை..கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்காக செய்யப்படும் முக்கிய பரிகாரம்...கர்ப்பம் உறுதியாகும்,3 வது மாதத்தில் செய்வதுதான் மிக சிறப்பு..இப்போது 7 வது மாதத்தில்தான் செய்கிறார்கள்..அது தவறு இல்லை..வளர்பிறையில்,பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய்,சனி,ஞாயிறு தவிர்த்த கிழமைகளில்,செய்வது உத்தமம்..அஷ்டமி,நவமி,அமாவாசை,பெளர்ணமி,மாத பிறப்பு நாள்,விலக்க வேண்டும்..ரோகிணி,பூசம்,ஹஸ்தம்,புனர்பூசம்,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி,திருவோணம்,ரேவதி,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் வளைகாப்பு செய்ய உத்தமம்..
சஷ்டி,சதுர்த்தி,சதுர்தசி,திவாதசி,அஷ்டமி,நவமி,அமாவாசை திதிகள் ஆகாது...!! குழந்தையையும்,கர்ப்பிணியையும் பாதிக்கும். 

வளைகாப்பு!

வேப்பிலைக் காப்பு, கண்ணாடி வளையல், அறுகரிசி படையல்... வளைகாப்பின் அறிவியல் பின்னணி!

ளைகாப்பு! கர்ப்பிணிப் பெண்களுக்குகாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். வளைகாப்பு நிகழ்வானது பெரும்பாலும் கருவுற்ற 7-வது மாதத்தில் செய்யப்படுகிறது. வளைகாப்பு நடத்தப்படுவதற்குப் பின்னால் உள்ள தேவையையும், அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.
வளைகாப்பு நடத்தப்படுவதன் நோக்கம்:
குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.
மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
வளைகாப்பு செய்யப்படும் முறை:
பெரும்பாலும் 7 அல்லது 9 ஆம் மாதத்தில், ஓர் சுபமுகூர்த்த நாளன்று வளைகாப்பு நிகழ்ச்சியானது நடைபெறும்.
கருவுற்ற பெண்ணை சிறப்பாக அலங்கரித்து, அவளுடன் அவள் கணவனையும் அழைத்து வந்து அமரச் செய்வார்கள்.
வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், நெய்புலாவ் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும்.
அடுத்தாக கருவுற்ற பெண்ணின் தாய்மாமன் தேங்காய் உடைப்பார்.
பின்னர் கருவுற்ற பெண்ணின் கணவர். அந்தப் பெண்ணுக்கு மாலை அணிவித்து , நெற்றியில் குங்குமம் வைப்பார்.
சந்தனத்தை இரு கைகளிலும், கன்னங்களிலும் பூசுவார்.
மேலும் இருகைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளிப்பார்.
அடுத்ததாக அறுகரிசி படைத்து தன் மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் வாழ்த்துவார்.
அதற்குப் பின்னர் பெண்ணின் தாய், கருவுற்ற பெண்ணுக்கு இனிப்பு பண்டங்களை ஊட்டுவார். பின்பு அவரும் அறுகரிசி இட்டு ஆசிர்வாதம் செய்வார்.
இதே போன்று உறவினர்கள், நண்பர்கள் என வந்திருக்கும் அனைவரும் சந்தனம், குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து, அறுகரிசி இட்டு ஆசிர்வதிப்பர்.
கடைசியாக பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள்.
வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வளையல் வழங்கி வருகை தந்ததற்கு மரியாதையை தெரிவிப்பர்.
வருகை புரிந்தவர்களும் தங்கள் வசதிக்கேற்ப பணத்தினை பெண்ணுக்கு வழங்கி ஆசீர்வதிப்பார்கள்.
வளைகாப்பு செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கருவுற்ற பெண்ணுக்கு பிரசவம் பற்றிய பயம் நீங்கி மன தைரியம் பிறக்கிறது.
இதனால் பிறக்கும் குழந்தையும் மன தைரியத்துடன் பிறக்கும்.
வளைகாப்பில் அணிவிக்கப்படும் வளையலானது கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு உணர்வை அளிக்கக் கூடியது.
வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
வளைகாப்பு நிகழ்வில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளானது கருவுற்ற பெண்ணுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.
வளைகாப்பு சடங்கு நடைபெறும் கோயில்கள்:
கோவில்பட்டி செண்பவல்லி அம்மன் கோயில்
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில்
உறையூர் குங்குமவல்லி அம்மன் கோயில்
நம் முன்னோர்கள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய 41 சடங்குகளைப் பட்டியலிட்டு வைத்துள்ளனர். இம்மாதிரியான சடங்குகள் நமக்கு மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தருகிறது. இப்பூமியில் புதிதாகப் பிறக்கப் போகும் குழந்தையை உற்றார், உறவினர்களோடு இணைந்து வரவேற்பதே 'வளைகாப்பு' என்னும் அற்புத நிகழ்வாகும்.

வளைகாப்பு

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா?
அதற்கான விடை தான் இந்த கட்டுரை. நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை. அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது. முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட. கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.

காரணம் #1 ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.
காரணம் #2 ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 காரணம் #3 மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர். 
காரணம் #4 மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது. ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். 
காரணம் #5 ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள். இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள் நீரிழிவு நோயா? 100% கேஷ்பேக் உடன் BeatO ஸ்மார்ட் க்ளுகோமீட்டர் 30 நாளில் 100 கிலோ டூ 64 கிலோ, எடை குறைப்பு ட்ரிக் முடி கொட்டுதல் நிபுணர் இவரது முடி வளர்ச்சியை கண்டு அதிர்ந்தார் 
காரணம் #6 சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில். இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.
 காரணம் #7 மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர். அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை. எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்.