கேது : இவர் மூல நட்சத்திர எனும் சுய சாரத்தில் செல்வதால், அதிக கெடுதிகளை செய்வார். மூலம் அழிவுக்குரிய நட்சத்திரம் ஆகும்.
ராகு : ராகு ஆகஸ்ட் 19 முதல் ஏப்ரல் 27 வரை ( திருக்கணிதப்படி செப்டம்பர் 14 - மே 22) தனது சுய நட்சத்திரமான திருவாதிரையில் செல்வார். திருவாதிரை என்பது ராகுவின் சொந்த நட்சத்திரம். இந்த திருவாதிரை நட்சத்திரம் என்பதின் மறுபெயர் கண்ணீர் துளி. அதாவது மற்றவர்களின் கண்களில் கண்ணீர் பெருகும் அளவிற்கு துன்பம் தருவார் என்று அர்த்தம் ஆகிறது. வேகமான நட்சத்திரம் மற்றவரை துன்பத்தில் ஆழ்த்துவது, அழிப்பதையே குறிக்கோளாக கொண்டது. இவர் போகும் இடமெல்லாம் அழிவையும், நாசத்தையும் செய்வார். மனஉளைச்சலைச் தரும் இந்த நட்சத்திரத்தின் தெய்வம் ருத்ரன்.
ஆக இந்த குணம் கொண்ட நட்சத்திரத்தின் இதே அழிவு குணம் கொண்ட ராகு செல்லும்போது உலகையே அழித்து நாசம் செய்கிறார்.
உடனே உங்களுக்கு ஒரு கோபம் வரும். இதை முன்னேயே சொல்வதற்கென்ன?
ஜோதிடர்களில் பெரும்பாலோர், ஆட்சி பெற்ற குரு பார்வை, ராகுவிற்கு உள்ளது. அதனால் நல்லதே நடக்கும் என தீர்மானமாக நம்பிவிட்டோம். ஆனால் ராகு, மிக பலமாகி விட்டார் போலும். குருவை கண்டுகொள்ளவேயில்லை.
அனேகமாக இந்த கரோனா கடந்த 2019 ஆகஸ்ட் 19ஆம் தேதியே தொடங்கியிருக்கும். ஒருவருவரும் வெளிப்படுத்தவில்லை. ஒரு வழியாக ராகு, வைகாசி 9 மே 22 அன்று மிருகசீரிடம் 4ம் பாதத்திற்கு மாறுவார். அதன் பிறகு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவரை இடர்பாடாக இருக்கும்.
மேலும் சூரியன் ஆடி 1ஆம் தேதி ஜூலை 16ஆம் தேதி கடகத்திற்கு மாறுவார். அப்போது உலகமே கால ஸர்ப தோஷ பிடியிலிருந்து விடுபட்டுவிடும்.
ஆக மே 4ஆம் தேதி முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு சீராகும். மே 22க்கு பிறகு சகஜ நிலை வந்துவிடும். ஜூலை 16ஆம் தேதி பழைய நிலைக்கு உலக வாழ்க்கை நடக்க ஆரம்பிக்கும். அதுவரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.
ருத்ரனையும், துர்க்கையையும் வணங்குதல் சிறப்பு. காஞ்சி பெரியவர், சீரடி சாய்பாபா, இராகவேந்திரர் மற்றும் நீங்கள் ஈடுபாடு கொண்ட சித்தர்கள்தான், இவ்வுலகை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவி செய்வர். சித்தர் வழிபாடு சீரான வாழ்வோட்டம் தரும்
No comments:
Post a Comment