🪔
🏛️ வாஸ்து தகவல் :
வீட்டின் சுவர், தாய் சுவர் என்று அழைக்கப்படும் Mother wall.
மதில் சுவர் | என்பது தந்தை சுவர் என்று அழைக்கப்படும் (Father Wall )
மதில் சுவரானது, வெளியிலிருந்து வரும் தாக்கங்களை தாங்கிக்கொண்டு, ஒரு பாதுகாப்பு அரணாக நம்மை பாதுகாக்கும் .
வீட்டில் நான்கு புறமும் சரியான அளவுகளில் காலியிடம் வீடு கட்டுவது சிறப்பு.
ஒரு வீட்டின் மதில் சுவர் மற்றொரு வீட்டில் மதில் சுவருடன் ஒட்டக் கூடாது. யாருடனும் கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. அது தந்தையை பகிர்ந்து கொள்வது போல் ஆகிவிடும்.
தாய் சுவரும், தந்தை சுவரும் எந்த இடத்திலும் தொடக்கூடாது. அதாவது, இரண்டு பக்கம் அல்லது மூன்று பக்கம் மதில் சுவர் அமைத்துவிட்டு ஒருபகுதியை தாய்சுவருடன் இணைக்க கூடாது.
மதில் சுவர் அமைப்பு சதுரம் செவ்வகம் ஆக மட்டுமே இருக்க வேண்டும்.
மதில் சுவர் என்ன உயர அளவுகளில் அமைக்க வேண்டும் என்ற சில அளவுகள் உள்ளது, அதன்படி அமைப்பது சிறப்பு.
No comments:
Post a Comment