jaga flash news

Sunday 18 April 2021

ஹஸ்த ரேகைகள்

ஹஸ்த ரேகைகள்.
.....................................

ஹஸ்தம் என்றால் கை என்று அர்த்தமாகும்,
ஹஸ்தரேகைகள் என்றால் கைரேகைகள் ஆகும்,
ஹஸ்தம் என்கிற பெயர் கன்னிராசியில் ஒரு நக்ஷத்ரத்திற்கும் உண்டு,

ஹஸ்தரேகைகள் தெய்வம் மனுஷ்யன்மார்களுக்கு தருகின்ற முன்அறிவிப்புகள் ஆகும்,

மனுஷ்யன்மார் நல்லகாலத்திலும், கஷ்டகாலம் வேட்டையாடும்போதும் கைகளில் புதுபுது ரேகைகள் குறிகள், குழிகள், மருக்கள் தோன்றுவதை கண்கூடாக காணலாம்,

நித்யமும் காலையில படுக்கையிலிருந்து எழுந்ததும் இரண்டுகைகளையும் தேய்த்து, தொழுது  ப்ரார்த்தித்து அதன்பிறகு கண்களை தொற்றி வந்தபின்னர்தான் எழவேண்டும் என்கிறது பாரதீய சம்ஸ்காரதத, சனாதான ஸாஸ்த்ரம்,

கீழே கொடுத்துள்ள,
(01.வலை அடையாளங்கள்)
(02.தாழே வருகின்ற ரேகை)
(03.முறிவு ரேகைகள், )

(04. தீவு ரேகை, )

(05.ரேகையின் மேற்பகுதியில் காணப்படுகின்ற நக்ஷத்ர குறியீடு)

(06.சங்கிலிபோல் காணப்படும் ரேகை)

(07.பிளவுபட்ட குறி)

இவைகளெல்லாம் மனுஷ்யன்மார்கள் தெஸாகாலங்கள்  , மோசமாக வரும்போது கஷ்டமான சூழ்நிலைகள் வாழ்க்கையை வேட்டையாடும் என்று முன்பே உணர்த்துவதுபோல் கைகளில் தோன்றும்,

ஹஸ்தரேகையில் ஒருவரின் கையை பரிசோதிக்கும்போது முதலில் அவரின் ஆயுள்ரேகையை பரிசோதித்து கொள்ளவேண்டும்,
காரணம், ஆயுள்பலம் இல்லாதவருக்கு, பாக்கியரேகை, இருந்தாலன்னே! இல்லாமல் போனால் என்ன?

ஆகையால்தான் முதலில் பிரதமாக கார்யமாக ஆயுள்பலம் ரேகையை பார்த்துதான் மற்றவைகள் தீர்மானிக்கப்படவேண்டும்,

அதன்பிறகு பாக்கியரேகை, இதயரேகை, புத்திரேகை, போன்றவைகள் பரிசோதனை செய்யவேண்டும்,

நம்முடைய எதிர்காலம் நம்முடைய கைகளில் தான் உண்டு.

ஜோதிஷஸாஸ்த்ரத்தை போலவே ஹஸ்தரேகை ஸாஸ்த்ரமும் பிரசித்தி பெற்றதாகும்.

No comments:

Post a Comment