1. 55-வது வயது ஆரம்பம் – பீம சாந்தி.
2. 60-வது வயது ஆரம்பம் – உக்ர ரத சாந்தி.
3. 61-வது வயது ஆரம்பம் – சஷ்டி அப்த பூர்த்தி.
4. 70-வது வயது ஆரம்பம் – பீம ரத சாந்தி.
5. 72-வது வயது ஆரம்பம் – ரத சாந்தி.
6. 78-வது வயது ஆரம்பம் – விஜயசாந்தி.
7. 80-வருஷம் 8 மாதம் முடிந்து, உத்திராயண சுக்ல பட்சம் நல்ல நாள் – சதாபிஷேகம்.
8. பிரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்தரனுக்கு புத்திரன் பிறந்தால், அதாவது கொள்ளுப் பேரன் பிறந்தால் செய்து கொள்ள வேண்டியது.
9. 85-வயது முதல் 90-க்குள் – மிருத்யஞ்சய சாந்தி.
10. நூறாவது வயதில் சுபதினத்தில் – பூர்ணாபிஷேகம்.இவையெல்லாம் இறையருள் பெற பல்வேறு மங்களகரமான மந்திரங்களை ஜெபித்து இயற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள் ஆகும். இதில் பல்வேறு தேவதைகளுக்கான மந்திரங்கள் உள்ளன. மனித வாழ்வில் வரும் இது போன்ற நல்வாய்ப்புகளை விரிவான வழிபாட்டிற்கும், இறையடியார் சேர்க்கைக்கும், தான தர்மங்கள் செய்வதற்கும், உரிய ஒரு வாய்ப்பாக கருத வேண்டுமே தவிர, நம் செல்வம், வசதி, பதவி, ஆடம்பரம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி விடக்கூடாது
அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அருமையான பதிவு அய்யா.
ReplyDelete