அர்த்த திரிகோணம்
திரிகோண ஸ்தானங்களில் நான்கு வகைகள் உள்ளன அவற்றில் 15 9 என்ற தர்ம திரிகோணம் பற்றி ஏற்கனவே பார்த்தது விட்டோம் இப்பொழுது பார்க்க இருப்பது அர்த்த திரிகோணம் என்னும் 2 6 10 ம் இடங்களை பற்றி தான்
இதில் 2 ம் இடம் என்பது தனத்தை குறிக்கும் 6 ம் இடம் என்பது வேலையை குறிக்கும் 10 ம் இடம் என்பது சுய தொழில் செய்யும் நிலையை பற்றி குறிப்பிடுவது
அப்போ இதன் அதிபதிகள் வலுவாக இருந்தால் சுயமாக ஒருவர் சம்பாதித்து முன்னேற முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்ல வேண்டும்
வலுவாக இருப்பது என்பது ஆட்சி உச்சம் நட்பு போன்ற நிலையிலும் அந்த குறிப்பிட்ட ஸ்தானதின் அதிபதி அவருடைய வீட்டுக்கு மறையாமல் இருப்பதும் சிறப்பு
தவிர இவர்களின் திசை சரியான வயதில் வந்தால் நிச்சயம் வெற்றி பெற்று உச்சத்தை தொட வைக்கும்
இதில் 2 ம் அதிபதி தனத்தை குறிப்பது ஆனால் 6 ம் இடமும் 10 ம் இடமும் வேலை தொழில் பற்றி குறிப்பிடுவது இவர்களில் யார் ஒருவர் வலுவாக இருக்கிறாரோ அதன்படியே வாழ்க்கை அமையும் இப்போ 6 ம் அதிபதி 10 விட வலுவாக இருந்தால் வேலை அமையும் அதுவே 6 ஐ விட 10 வலுவாக இருந்தால் தொழில் நல்ல படியாக அமையும்
ஒரு உதாரணம் பார்ப்போம் மிதுன லக்னம் செவ்வாய் ஆட்சி குரு பகவான் வலு இல்லை அல்லது 9 ல் உள்ளார் என்று கூட வைத்து கொள்ளுங்கள் இப்போது இவர் வேலைக்கு சென்று பொருள் தேடுவார் இதுவே குரு வலுவாக இருந்து செவ்வாய் பலம் இல்லாமல் இருந்தால் அவர் சுய தொழில் செய்யுவார் வேலைக்கான அமைப்பு இருக்காது
ஒருவேளை இருவரும் பலமாக இருந்துவிட்டால் கொஞ்சநாள் வேலைக்கு சென்று கற்றுக்கொண்டு பின்பு அவர் சுய தொழிலை நோக்கி வந்துவிடுவார் அதில் நல்ல முன்னேற்றம் அடைவார்
No comments:
Post a Comment