jaga flash news

Thursday 6 December 2012

முழங்கை கருப்பை நீக்க சில வழிகள்…


முழங்கை கருப்பை நீக்க சில வழிகள்…

பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அதில் பெரும்பாலும் அழகுபடுத்த செல்வது முகம், கை, கால் போன்றவற்றிற்கே செல்வார்கள். ஆனால் இவர்களின் முழங்கை கருப்பாக இருக்கும்.
அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. மேலும் அந்த இடத்தில் கருப்பு ஏற்படுவதற்கு அதிக தேய்மானம், சுருக்கம் காரணமாக அழுக்குகள் படிந்துவிடுதல் மற்றும் அந்த இடத்தில் நிறமூட்டும் பொருள் அதிகமாக இருப்பதே ஆகும். இவ்வாறு முழங்கை கருப்பாக இருப்பது அழகை சற்று பாதிக்கும். ஆகவே இத்தகைய கருப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது. அவை என்னவென்று சற்று படித்துப்பாருங்கள்…

முழங்கை கருப்பை நீக்க சில வழிகள்…
1. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை அரைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 15 நிமிடம்
ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், அங்கு இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.
2. 100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனால் துடைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3. முழங்கையில் இருக்கும் கருப்பை நீக்க சிறந்த ஒரு வழி, ஒரு வாலி தண்ணீரில் சிறிது சோள மாவை கரைத்து, பின் கையை ஊற வைத்து கழுவினால், கருப்பு நீங்கிவிடும்.
4. தினமும் கடுகு எண்ணெய் வைத்து 10 நிமிடம் முழங்கையில் மசாஜ் செய்து, பின் அந்த இடத்தை காட்டனால் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது போய்விடும்.
5. ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் வினிகரை விட்டு, முழங்கையில் தடவி, தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்யலாம்.
6. எலுமிச்சை பழத்தை நறுக்கி அதில் உப்பை தடவி, முழங்கையில் 5 நிமிடம் தேய்த்து வரவும். இதனை தினமும் செய்தால் சிறிது நாட்களில் முழங்கையில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.
7. தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் மசாஜ் செய்து, பின் காட்டனால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கானது நீங்கிவிடும்.
இத்தகைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முழங்கையில் இருக்கும் அழுக்குகளை நீங்கி முழங்கையை அழகாக வைத்துக் கொள்ளலாம். மேலும் மேற்கூறிய அனைத்தையும் முழுங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment