jaga flash news

Wednesday, 19 December 2012

இரண்டாவது திருமணம் நடைபெறுவது எதனால்?


 இரண்டாவது திருமணம் நடைபெறுவது எதனால்?


வணக்கம் நண்பர்களே இரண்டாவது திருமணம் எதனால் நடக்கிறது என்று சொல்லமுடியுமா என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார் அவரரின் சந்தேகம் மூலம் உங்களுக்கு விளக்குகிறேன்.
அவனவன் ஒரு திருமணத்தை கூட செய்யமுடியவில்லை என்று அல்லபட்டுக்கொண்டு இருக்கிறான் சில பேர் அவன் இஷ்டத்திற்க்கு இரண்டு திருமணங்களை சர்வ சாதாரணமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்க தோன்றும் அவ்வாறு இருப்பது அவர்களின் ஜாதங்களின் பலன். 
திருமணத்தை காட்டும் இடம் ஏழாவது இடம் அந்த வீடு முதலில் பாதிக்கப்படும். இது பிறந்த நேரத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆனால் அதன் தசா வராமல் இருந்து இருக்கும், இவருக்கு நல்லபடியாக திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பின்பு சிறு காலத்திற்க்கு பின்பு அந்த தசா ஆரம்பம் ஆகும் ஆரம்பம் ஆனாவுடன் இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டு பிரிவை தரும்.
இரண்டாவது திருமணத்திற்க்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாவது வீடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருக்கு இரண்டாவது வீடு கெட்டாலும் இரண்டாவது தடவை திருமணம் செய்வார். 
கோச்சார ரீதியாக வரும் சில பாவக்கிரகங்கள் இரண்டாவது திருமணத்தை கொடுத்துவிட்டு போகும். ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி போன்றவையும் இரண்டாவது திருமணததை கொடுத்துவிடும்.
பெண்களுக்கு தாலி பாக்கியத்தை காட்டும் இடம் எட்டாவது இடம் இந்த இடம் கெட்டால் இரண்டாவது தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
சில குழந்தைகள் ஜாதகங்களில் தாய் தந்தை பிரியும் சூழ்நிலையை ஆறாவது வீட்டு தசா செய்யும், சில மோசமான கிரகங்களின் தசாவில் தாய் தந்தை பிரிய வாய்ப்புள்ளது.
பெண்கள் தான் உஷாராக இருந்து வீட்டில் உள்ள அனைத்து ஜாதகத்தையும் பார்த்து வைத்துக்கொண்டு யார் யாருக்கு மோசமான கிரக நிலை வருகிறது என்று பார்த்துக்கொண்டு தக்க பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே தேவையற்ற குழப்பத்தை தவி்ர்க்கலாம்.

No comments:

Post a Comment