jaga flash news

Wednesday, 19 December 2012

ராகு


 ராகு



1 ஆம் வீட்டில் ராகு இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும். துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம்.

2 ஆம் வீட்டில் ராகு இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும். புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

3 ஆம் வீட்டில் ராகு இருந்தால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக இருக்கும்.

4 ஆம் வீட்டில் ராகு இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

5 ஆம் வீட்டில் ராகு இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால் கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள்.

6 ஆம் வீட்டில் ராகு இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார். இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில் புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும். 
7 ஆம் வீட்டில் ராகு இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

8 ஆம் வீட்டில் ராகு இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

9 ஆம் வீட்டில் ராகு இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.

10 ஆம் வீட்டில் ராகு இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

11 ஆம் வீட்டில் ராகு இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.

12 ஆம் வீட்டில் ராகு இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment