jaga flash news

Monday, 10 December 2012

பூஜையில் தேங்காய் உடைக்கும்போது, அதுஅழுகலாக இருந்தால் அபசகுனமா?


பூஜையில் தேங்காய் உடைக்கும்போது, அதுஅழுகலாக இருந்தால் அபசகுனமா?

பூஜையில் தேங்காய் உடைக்கும்போதுஅதுஅழுகலாக இருந்தால்அபசகுனமா?

நல்லோருக்கு அவ்வப்போது ஏற்படப்போகும் துன்பங்களை தெய்வம் உணர்த்தி எச்சரிக்கை செய்கிறது. அதையே நிமித்தம் என்று கூறுவார்கள். எந்த ஒரு செயலையும் செய்யும் முன்னர், முதன்முதலில் விநாயகருக்குத் தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டுத் தொடங்குகிறோம். அப்போது, உடைக்கப்படும் தேங்காய் இரண்டாக மட்டுமே உடைய வேண்டும். நல்ல முறையில் சரிபாதியாக - இரண்டு பகுதிகளாக உடைய வேண்டும்.

ஆரம்பிக்கப் போகும் செயல்கள் எந்தவொரு தடங்கலும் இன்றி, நிறைவேறும் என்பதற்கான அறிகுறி இது.

இதற்கு மாறாக உடைக்கப்படும் தேங்காய், இரண்டுக்கும் அதிகமான பகுதிகளாக உடைபட்டாலோ, தேங்காய் அழுகலாக இருந்தாலோ அது துர்நிமித்தம் எனப்படும். இதற்குப் பரிகாரமாக வேறு நல்ல தேங்காயாகத் தேர்ந்தெடுத்து இரண்டு தேங்காயாக உடைத்து கணபதிக்கு நிவேதனம் செய்யலாம். அல்லது 2 தேங்காயை சிதறுகாயாகப் போடலாம். ஸ்ரீ கணபதியின் அருள்கிட்டும்.

No comments:

Post a Comment