ஜோதிடம் பார்க்க வருகிறவர்களில், பெரும்பாலோனோர் கேள்வி கேட்பது - திருமண வாழ்க்கை சம்பந்தமாக....
நாம் இன்று பார்க்க விருப்பது , அது சம்பந்தமான சில அடிப்படை விதிகளைப் பற்றி.....
ஒருவருக்கு திருமணம் எப்போது நடக்கும்? யார் யாரது இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் ? யாருக்கு சோபிப்பதில்லை?
நீங்க இதைத் தெரிஞ்சுக்கிட - மூணு விஷயங்கள் பார்க்கணும்.
முதலாவதாக - லக்கினத்துக்கு - ஏழாம் இடம். இதை களத்திர ஸ்தானம் னு சொல்லி இருந்தோம்.. ஞாபகம் இருக்கா?
இந்த வீடு எப்படி இருக்குதுன்னு பாருங்க . சுப கிரகம் இருக்கா? சுப கிரக பார்வை இருக்கா? அந்த வீட்டு அதிபதி எந்த வீட்டுலே இருக்கிறார்? அவரது நிலைமை எப்படி? ஆட்சி, உச்சம், வலிவு.. அவரோட சேர்ந்து இருக்கிற கிரகங்கள், அவரைப் பார்க்கும் கிரகங்கள்..
இதே விதியை , சுக்கிரனுக்கும் பொருத்திப் பார்த்து - கண்டுபிடிக்கணும்.
மூன்றவதா - இரண்டாம் வீடு, இரண்டாம் வீடு அதிபர். இது குடும்ப ஸ்தானம்.
பெண்களுக்கு - எட்டாம் இடமும் பார்க்கணும் . இது மாங்கல்ய ஸ்தானம்.
செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், திருமணப் பொருத்தம் பார்க்கிறது எல்லாம் - இனி வர விருக்கும் பதிவுகளில் , விளக்கமா பார்க்கலாம்.
இப்போதைக்கு, சில basic விதிகள் மட்டும்,
ஏழாம் வீட்டு அதிபர் கூட எத்தனை கிரகம் இருக்கோ, சுக்கிரன் கூட எத்தனை கிரகம் இருக்கோ - அத்தனை பெண்களிடம் அவருக்கு தொடர்பு ஏற்படும் னு சாஸ்திரங்கள் சொல்லுது. இதில் குரு பார்வை இருந்தா , தப்பிக்கலாம். இல்லைனா இது நடந்து விடுகிறது.
இதே போலே - ஏழாம் அதிபரோ, சுக்கிரனோ - ஆட்சி என்றால் - மூன்று மடங்கு பலம், உச்சம் னா - ஐந்து மடங்கு பலம். அப்படினா? அத்தனை மனைவிகள் அல்லது மனைவி மாதிரி..தொடர்பு ஏற்படுகிறது.
இந்த விதி வந்து - பொதுவான விதி. இது எல்லா ஸ்தானங்களுக்கும் பொருந்தும். பன்னிரண்டு வீடுகள் பத்தி , நாம ஏற்கனவே சொல்லி இருந்தோம் பாருங்க. .. எந்த பலன் க்கு எந்த வீடு னு நோட் பண்ணிக்கோங்க. அந்த வீடு, அந்த அதிபர் நிலை எல்லாம் பாருங்க..
உங்க ஜாதகம் எடுத்துக்கோங்க... அதில் இருக்கிற நிலைமைய முதல்ல புரிஞ்சுக்கோங்க.. உங்களுக்கு ஏற்கனவே நடந்த விஷயங்களை compare பண்ணுங்க.. ஓரளவுக்கு உங்களுக்கு விஷயம் பிடிபடும்.
திருமண யோகம் ஒருவருக்கு எப்போ கிடைக்கிறது..?
குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.
ஜெனன கால குருவை, கோச்சார குரு பார்க்கிறப்போவும் - திருமணம் நடக்கிறது.
சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும் திருமண யோகம் உண்டு.
தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண வாழ்வு!
சில விதி முறைகள்.
1. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
2. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்!
3. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் ( Arranged / love marriage ) என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை
பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக்
கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும்.
மகிழ்வுடையதாக இருக்கும்!
5. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது ( நீசம் அடையாமல் இருக்க வேண்டும் )
7. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் , லக்கின அதிபதி,
ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு பிற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
10 செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19. பெண்களுக்குப் பாக்கியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும். இதையும், பின்னால் பார்க்கலாம். ..
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8 . ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12 . ஏழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் சேர்ந்து எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!
13 . இன்னொரு ஆச்சரியத்தக்க விதி இருக்கிறது. ஏழாம் வீட்டில் - குரு தனித்து இருந்தால், அது எந்த நிலைமை ஆனாலும் சரி, அவருக்கு - திருமணம் நடப்பது அபூர்வம் . குரு பரிவர்த்தனை ஆகியிருந்தால், இலக்கின அதிபதி பார்வை இருந்தால் - திருமணம் நடக்கிறது. ஆனால், ஒரு வித்தியாசமான திருமண அனுபவம் , அந்த ஜாதகர்களுக்கு ஏற்படுகிறது.
ஆனால் , இவர்கள் அனைவருக்கும், திருமணத்திற்குப் பிறகு தான், வாழ்க்கை நல்லவிதமாக இருக்கும்.
பரிவர்த்தனை யோகம் னா என்ன தெரியுமா?
ஒரு கிரகத்தின் வீட்டில், இன்னொரு கிரகம் இருந்து - அவரோட வீட்டில் முதல் கிரகம் இருப்பது. உதாரணத்திற்கு , மேஷம் செவ்வாய் வீடு. ரிஷபம் - சுக்கிரன் வீடு. மேஷத்தில் சுக்கிரனும், ரிஷபத்தில் செவ்வாயும் இருந்தால் - ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை ஆகி இருக்கிறார் என்று அர்த்தம். புரிகிறதா?
இந்த இரண்டு கிரகங்களுமே - ஆட்சியில் இருந்தால் என்ன பலனோ, அந்த பலன்களை கொடுப்பார்கள்..
உதாரணத்திற்கு - ஏழாம் வீட்டு அதிபதி , ஆட்சியோ , உச்சமோ இருக்கிற பெண்ணை ஒருத்தர் மனம் முடிக்கிறார்னு வைச்சுப்போம், அவருக்கு திருமணத்திற்கு பிறகு , ஓகோ னு வாழ்க்கை இருக்கும்..
சரி, இன்றைக்கு இவ்வளவு போதும்.. இப்போ நீங்க உங்க ஜாதகம் பார்த்து , சுய பரிசோதனை முயற்சிகள் ல இறங்குங்க..
உங்களைப் பத்தி , உங்களுக்கு நல்லாவே தெரியும் இல்லையா..? ஜாதகமும் அதையே சொல்லுதானு பாருங்க... ரொம்ப ஆச்சரியப் படுவீங்க.. பாருங்களேன்..!
நமது , வாசகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். யாராவது , ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதில் வேணும்னு எதிர் பார்த்தால் , E -mail பண்ணுங்க. பின்னூட்டத்தில் கேட்டால், உங்களுக்கு , அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை. ..
திரு தாமரைக் கண்ணன் - பிரம்ம ஹத்தி தோஷ நிவாரணம் பற்றி ஒரு கேள்வி அனுப்பி இருந்தார். குடும்பத்துடன் செல்லலாமா ? எந்த நாளில் செல்ல வேண்டும் என்று..?
குடும்பத்துடன் தாராளமாக சென்று வரலாம்.அமாவாசை அல்லது பஞ்சமி தினங்களில் சென்று வருதல் நலம்.
No comments:
Post a Comment