jaga flash news

Wednesday, 19 December 2012

திருமண பிரச்சினை : லக்கனத்தில் சனி


 திருமண பிரச்சினை : லக்கனத்தில் சனி


வணக்கம் நண்பர்களே இப்பதிவில் திருமணத்தில் வரும் சிக்கல் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
லக்கனத்தில் சனி இருந்தால் அதனால் வரும் பிரச்சினைகளைப் பற்றி பார்க்கலாம் உடனே எனக்கு லக்கனத்தில் சனி இருக்கிறது அதனால் இந்த பிரச்சினைகள் வருமா என்று பயந்துவிடாதீர்கள். சனி இருக்கும் வீட்டைப்பொருத்து அது நடைபெறும் நான் எழுதுவது பொதுப்பலன்.
லக்கனத்தில் சனி இருந்தால் அது மூன்றாவது பார்வையாக தைரியஸ்தானத்தையும் அதாவது மூன்றாவது வீட்டையும் ,ஏழாம் பார்வையாக திருமண வீட்டையும், பத்தாவது பார்வையாக கர்ம வீட்டையும் பார்க்கும்.
பார்வையை செலுத்துவதால் அந்த இடத்திற்க்கு பிரச்சினை ஏற்பட செய்யும். முதலில் மூன்றாவது வீட்டை எடுத்துக்கொள்வோம் உங்களுக்கு நல்ல தைரியம் இருக்கும் எதற்கும் அஞ்சமாட்டீர்கள். உங்களுக்கு காதில் பிரச்சினை ஏற்பட செய்யும், பக்கத்துவீட்டுகாரருடன் சண்டை ஏற்படும்.
இந்த மூன்றாவது வீடு என்பது உங்கள் துணைவரின் பாக்கியத்தை காட்டும் இடம். ஏழாவது வீட்டுக்கு ஒன்பதாவது வீடு மூன்றாவது வீடு அல்லவா.பாக்கியத்தை காட்டும் இடம். சனியின் தீயபார்வை உங்கள் துணைவரின் பாக்கிய வீட்டுக்கு கிடைக்கிறது பாக்கியம் குறைவு என்று சொல்லலாமா.
ஏழாவது பார்வையாக ஏழாவது வீட்டைப்பார்ப்பதால் களத்திர பாவம் பிரச்சினை ஏற்படும். உங்களுக்கு வரும் துணைவரால் உங்கள் திருமண வாழ்வு பிரச்சினையை சந்திக்க உள்ளது.வரும் துணைவர் நல்லவராக இருக்க வாய்ப்பு இல்லை.இளம் வயதில் திருமண நடைபெற்றால் நீங்கள் பிரிவை சந்திக்க வேண்டிவரும்.
பத்தாவது பார்வையாக பத்தாவது வீட்டைப்பார்ப்பதால் உங்களுக்கு நல்ல தொழில் அமையும். ஏழாவது வீட்டிற்க்கு நான்காவது வீடு பத்தாவது வீடாக வருகிறது உங்கள் துணைவரின் சுகத்தை காட்டும் இடம் அதனால் சுகமான வாழ்க்கை அமையாது. நீங்கள் ஆண்களாக இருந்தால் உங்கள் துணைவரின் குணங்களை காட்டும் இடம் உங்கள் மனைவிக்கு நல்ல குணங்கள் இருக்காது.
மறுபடியும் சொல்லுகிறேன் மேலை தந்தது அனைத்தும் பொதுபலன். யாரும் கவலைபட்டுக்கொண்டு இருக்கவேண்டாம். கொஞ்சம் வயதானவர்களாக பார்த்து திருமணம் செய்துக்கொண்டால் பிரச்சினை இருக்காது. 

1 comment:

  1. வணக்கம் நண்பரே என்னுடைய பதிவுகளை உங்களின் பதிவுகளில் உபயோகப்படுத்துள்ளீர்கள். அதனை நீக்கிவிடுங்கள். நன்றி

    ReplyDelete