கொன்றால் பாவம் தின்றால் போச்சு --வாரியார் சுவாமிகள்
மாமிசம் சாப்பிடுபவர்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள். எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும். இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள். லெக்பீசை வாயில் வைக்கும்போது, இதையும் கொஞ்சம் மனசுலே வச்சுக்கிடுங்க! இந்த விளக்கத்தைச் சொன்னது யார் தெரியுமா? வாரியார் சுவாமிகள்
No comments:
Post a Comment