jaga flash news

Tuesday, 18 December 2012

கதவு DOOR


கதவு DOOR



ஒவ்வொரு ரூமிற்கும் வட கிழக்கு திசையில் இருப்பது சரியானது.



வடக்கு திசை:

வடக்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதிலும் குறிப்பான வடக்கு மத்திய பகுதி முதல் வடகிழக்கு இறுதி வரை உள்ள பகுதியில் கதவை அமைப்பது மிகவும் சிறப்பு. மேற் கூறிய பகுதிகளில் கதவிற் அருகில் ஜன்னலையும் அமைப்பது நல்லது. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும்.கதவு ஜன்னல் போன்றவை வடமேற்கு பகுதியில் அமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

கிழக்கு திசை:

கிழக்கு  பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதாவது கிழக்கு மத்திம பகுதி முதல் வடகிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை தெற்கு புறத்தில் அமைத்து வடக்குலிருந்து தெற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்கிழக்கு  பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

தெற்கு திசை:

தெற்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான தென்கிழக்கு பகுதியில் அதாவது தெற்கு மத்திம பகுதி முதல் தென்கிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

மேற்கு திசை:

மேற்கு பார்த்த அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடமேற்கு பகுதியில் அதாவது மேற்கு மத்திம பகுதி முதல் வடமேற்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை கதவிற்கு தெற்கு புறமாக அமைத்து, வடக்கிலிருந்து தெற்காக கதவை திறப்பது போல அமைப்பது நல்லது. தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

No comments:

Post a Comment