history of vasthu god
வாஸ்து பகவான் உருவான வரலாறு- history of vasthu god
வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.
No comments:
Post a Comment