jaga flash news

Sunday, 16 December 2012

what is called "TAKING REFUGE?


 what is called "TAKING REFUGE" -- SARANAGATHI -- சரணாகதி ?

பிறப்பு - இறப்பு இந்த சுழலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் , நம்முடைய பாவ புண்ணியங்கள் அனைத்தையும் தீர்க்க வேண்டும்.

எப்படி பாவமும் புண்ணியமும் சேருகிறது.

எந்த ஒரு செயலையும் விருப்பத்துடன் அதாவது பற்று வைத்து செய்யும் போது அந்த செயலின் பலனை நாம் ஏற்கிறோம். அந்த செயல் நல்ல செயலாக இருந்தால் புண்ணியம் வந்து சேரும். பாவ செயலை செய்தால் பாவம் வந்து சேரும்.

ஆனால் எந்த ஒரு செயலையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் , இந்த செயல் இயற்கையால் நிகழ்த்தபடுகிறது என்பதை உணர்ந்து அதை ஒரு கடமையாக செய்யும் போது அது கொலையாக இருந்தாலும் பாவம் சேராது.

ஒரு ராணுவ வீரன் யுத்தத்தில் ஈடுபடுவதை ஒரு கடமையாக நினைத்தால் அது பாவத்தை அவனுக்கு சேர்க்காது. அகங்காரத்தால் அதை செய்தால் அந்த செயல் அவனுக்கு பாவத்தை சேர்க்கும்.

அதாவது எந்த செயலை செய்யும் போதும் நாம் அதை நான் செய்யவில்லை. அனைத்தும் இயற்கையால் நிகழ்த்தபடுகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நாமாகவும் ஒரு செயலை செய்யவும் விருப்பம் கொள்ள கூடாது.

எந்த ஒரு செயலும் நடக்க 

உடல்

செயலை செய்யவேண்டும் என்ற விருப்பம்

இயற்கை

மனம்

தெய்வம் 


இவை அனைத்துமே காரணமாக இருக்கிறது.

இது இப்படி இருக்க , நானே காரணம் என்று நினைக்கும் போது அவன் பாவ புண்ணியத்துக்கு ஆளாகிறான்.

இவ்வாறு பாவமும் புண்ணியமும் சேர்க்கிறது.


இந்த நிலையில் இப்படி பட்ட இன்பம் துன்பம் நிறைந்த உலகில் இருந்து விடுபட நினைத்தால் அவன் உண்மையை புரிந்து கொண்டு சமநிலையில் இருந்து கொண்டு அகங்காரம் கோவம் காமம் இவை அனைத்தையும் விட்டு இறைவனை அடையும் வழியை தேட வேண்டும். அங்கே தான் நிரந்தர இன்பம் இருக்கும். 

அதற்கு இறைவனிடம் தஞ்சம் கொள்ள வேண்டும். 

இறைவா நான் உன் மகன் நீ தான் என் தந்தை , என்னை காட்பாயாக !!!! 

இந்த பாவ புண்ணியத்தில் இருந்து என்னை மீட்டு கரையேற்று என்று வணங்க வேண்டும்.

இறைவனிடம் தஞ்சம் கொள்வதே சரணாகதி ஆகும்.

No comments:

Post a Comment