jaga flash news

Saturday 26 January 2013

3. ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன? (What is the planetary position for immorality?)

3. ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன? (What is the planetary position for immorality?)
ஒழுக்கம் = தனி மனிதன் கடைப்பிடிக்கும் நெறி. உரிய முறையில் நடந்து கொள்ளுதல். High moral standard discipline, good conduct. ஒழுக்கமின்மை என்பது மேற்சொன்னவைகள் இல்லாத நிலைமை. immoral என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு என்ன பொருள்? ஒழுக்கமின்மை என்று பொருள். 1. not in conformity with accepted principles of right and wrong behaviour 2. not in conformity with the accepted standards of proper sexual behaviour; unchaste 3. wicked இதைத்தமிழில் விவரித்துச் சொன்னால்: முறை தவறி நடப்பவன். ஒழுங்கீனமானவன். தவறாக நடப்பவன். முறையற்ற புணர்ச்சியில் ஈடுபாடு கொண்டவன். உங்கள் மொழியில் சொன்னால், எல்லோருக்கும் அல்வாக் கொடுப்பவன். குறிப்பாக வலையில் சிக்கும் பெண்களுக்கு அல்வாக் கொடுப்பவன் என்று கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் சிதறிய நியாயங்களை, நியதிகளை ( Loose morals) உடையவன். Planetary combination for loose morals 1. சுக்கிரனும், புதனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு, அல்லது 8ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது. 2.செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது. 3. சந்திரனுக்குப் பத்தாம் வீட்டில் சுக்கிரனும் அல்லது சுக்கிரனுக்குப் பத்தாம் வீட்டில் சனியும் இருந்தாலும் ஆசாமி பெண்களுக்கு அல்வா கொடுப்பவன்தான். 4. ஆறாம் அதிபதி, ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை! 5. இரண்டு, ஏழு, பத்தாம் வீட்டு அதிபதிகள் ஒன்று சேர்ந்து பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலைமை! 6. ஏழாம் வீட்டதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து, வேறு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருக்கும் நிலைமை! 7.சுக்கிரன் சனியின் வீட்டில் இருப்பதுடன், சனியின் பார்வையோடு இருக்கும் நிலைமை. அல்லது சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் இருப்பதுடன், செவ்வாயின் பார்வையோடு இருக்கும் நிலைமை! 8.ஏழாம் வீட்டதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஏழிலேயே குடியிருந்தாலும் அதே நிலைப்பாடுதான் 9.ஏழாம் அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை 10.லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருக்கும் நிலைமை! 11.லக்கினாதிபதியும், ஆறாம் அதிபதியும் ஒன்றாக வேறு ஒரு தீயகிரகத்துடன் சேர்ந்திருக்கும் நிலைமை 12.தேய்பிறைச் சந்திரனும், ஒரு தீய கிரகமும் ஒன்றாக ஏழாம் வீட்டில் இருக்கும் நிலைப்பாடு 13.ஏழாம் அதிபதியும், ஒரு தீயகிரகமும் கூட்டாக ஜாதகத்தில் எங்கே இருந்தாலும் அந்த நிலைப்பாடு! 14.சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் கூட்டணி ஒரு இடத்தில் இருக்கும் நிலைமை! 15.ஏழில் புதன் இருந்து அது அதன் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாது இருக்கும் நிலைமை! 16.சுக்கிரனும், ஏழாம் வீட்டதிபனும் ஒன்றாக செவ்வாய்க்கு உரிய இடத்தில் (அதாவது மேஷம் அல்லது விருச்சிகத்தில்) இருக்கும் நிலைமை! ++++++++++++++++++++++++++++++++++++++++++++ என்ன தலையைச் சுற்றுகிறதா? இதைப் படித்தவுடன், சிலருக்கு சந்தேகம் வரலாம். இந்த அமைப்பில்லாத ஜாதகம் இருக்குமா,என்ன? 75% சதவிகித ஜாதகங்களில் இந்த அமைப்புக்களில் ஒன்றாவது இருக்கும். சைட் அடிக்காத அல்லது லுக் விடாத மனிதன் உண்டா? ஒரு அழகான பெண்ணைக் கண்டவுடன், அவளை அடைய வேண்டுமென்று ஆசைப்படாத அல்லது ஏக்கம் கொள்ளாத மனம் உண்டா? நான் அப்படியில்லை என்று ஒரு இளைஞன் சொன்னால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம் அது இயற்கை: பெண்ணின் மேல் ஆணிற்கு ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காகக் காலன் செய்து வைத்துள்ள சதி! சரி,அங்கே ஒழுக்கமின்மை எங்கே வருகிறது? ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைக்கும்போதும், அல்லது தொட்டுப்பார்க்கும் போதும், அல்லது சாய்க்கும் போதும், பிறன் மனை நோக்கா பேராண்மை தவறும்போதும் அங்கே ஒழுக்கமின்மை வந்து நின்றுவிடும். மனிதர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமானவர்கள். அதீத இச்சைகளை உடையவர்கள். சிலர் தங்கள் சாமர்த்தியத்தால், அது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். Everyone wants to sleep with other mans wife என்னும் பழமொழிகள் உலவுவதை யாரும் மறக்க வேண்டாம். அந்த இச்சைகளின் (ஒழுக்கமின்மையின்) அளவு ஆளாளுக்கு வேறுபடும். ஜாதகத்தின் மற்ற தன்மைகளை வைத்து வேறுபடும். சாரசரிக்கு கூடவோ அல்லது குறைவாகவோ பலருக்கும் இருக்கும். சிலர் 14 அல்லது 18 வயது முதல் டண்டணக்கா டணக்குணக்கா அடிக்கும் கடைசி நிமிடம் வரை ஒழுக்கம் இல்லாமல் இருந்துவிட்டுப் போய்ச் சேர்வார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு திருந்தி ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து,பெயரெடுத்துவிட்டுப் போவார்கள். அது அவரவர்கள் வாங்கி வந்த வரம் ”பெண்களுக்கும் இதே விதிகள் பொருந்துமா?” என்று கடைசிப் பெஞ்ச் கண்மணிகள் யாரேனும் பின்னூட்டம் இட வேண்டாம். பெண்களுக்குக் கால் செருப்பின் அளவு வேறுபடுவதைப்போல - உங்கள் மொழியில் சொன்னால் உடலில் வளைவு நெளிவுகள் வேறு படுவதைப்போல பல விதிகள் வேறுபடும். அவை ஏன்? எதனால் என்பதைப் பற்றி பெண்களுக்கான விஷேச ஜாதக அமைப்புக்கள் என்கின்ற பாடத்தை நடத்தும் போது விவரிக்கிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment